Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிந்தனையே என் சித்தமே!
சிந்தனையே என் சித்தமே!
சிந்தனையே என் சித்தமே!
Ebook211 pages54 minutes

சிந்தனையே என் சித்தமே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசுதேவன் வசந்தாவின் அறையினுள் நுழைந்தார். வசந்தாவின் அருகே சென்று அன்புடன் அவளுடைய நெற்றியில் கையைப் பதித்து 'வசந்தா' என எழுப்ப முயன்றவர், கண்களில் நீர் கசிய விழித்தபடியிருந்த மனைவியைப் பார்த்து துணுக்குற்றார்.
 "வசந்தா... என்ன செய்யுது? ஏன் அழறே?" என்றார். வசந்தா கணவரைப் பார்த்ததும் இன்னும் விம்மினாள். அவரின் கையை அன்போடு பற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.
 "நீங்க எனக்கு கணவரா கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ?" சொல்லிவிட்டு மறுபடியும் விசும்பினாள்.
 "வசந்தா என்னம்மாயிது? என்னமோ என்னை பெரிய தியாகி மாதிரி நினைக்கறே?"
 "தியாகம் இல்லாம பின்ன என்ன? எனக்காக வேலையை விட்டுட்டு வீட்டோடயிருந்து என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கறீங்களே! மீரா எம்.ஏ. படிச்சது போதும், அம்மாவை பார்த்துக்கறேன்னு சொன்னதுக்கு பிடிவாதமா அவளை சட்டக் கல்லூரியில சேர்த்திங்க. சின்னவ சொல்ற மாதிரி என்னை கவனிச்சுக்க ஒரு நர்ஸை ஏற்பாடு செய்தா போதாதா? நீங்க இப்படி வீட்டோடயிருக்கணுமா? வேலை பார்க்கறதுதானே ஆணுக்கு அழகு."
 "பொண்டாட்டியை கவனிச்சுக்கறதுதான் அதைவிட அழகு."
 செல்லமாக அவளுடைய கன்னத்தை தட்டினார்.
 வசந்தாவுக்கு மனசு சிலிர்த்ததுஆனாலும் ஒரு புறம் குற்ற உணர்வு உண்டானது.
 "எனக்கு குற்ற உணர்வாயிருக்குங்க. என்னாலதானே நீங்க இப்படி இருக்க வேண்டியதாப் போச்சு."
 வசந்தாவின் கூந்தலை அன்புடன் வருடினார்.
 "வசந்தா! நீ என் மனைவி. என் சுகம், துக்கம் இரண்டிலும் பங்கெடுத்துக்க வந்தவள். உன்னைப் பார்த்து யாரும் அருவெறுப்படையவோ முகம் சுளிக்கவோ கூடாது. அதை என்னால தாங்கிக்க முடியாது. படுக்கையிலேயே உனக்கு எல்லாமும் செய்ய வேண்டியிருக்கு. பணத்துக்காக ஒரு ஆளைப் போட்டா உண்மையான பாசத்தோட எல்லாத்தையும் செய்வாளா? உள்ளன்போட கவனிச்சுக்க என்னை விட்டா உனக்கு யார் செய்ய முடியும்?"
 "ஏங்க இப்படி சொல்றீங்க? மீராதான் என்னை கவனிச்சுக்கறேன்னு சொன்னாளே. நீங்கதான் கேட்க மாட்டேன்னுட்டிங்க."
 "வசந்தா, நம்மோட சுயநலத்துக்காக குழந்தைகளை முடக்கிப் போடக் கூடாதும்மா. நிறைய பெற்றோர்கள் அப்படி செய்ததாலதான் பெண்கள் பலபேர் கல்வி இல்லாம, வேலை இல்லாம கஷ்டப்படறாங்க. சின்ன வயசுலேர்ந்தே என் பொண்ணுங்களை பெரிய வேலைக்கு அனுப்பணும்னு என் மனசுல லட்சியம் வச்சுக்கிட்டிருக்கேன். எந்த சூழ்நிலையிலேயும் அவங்களோட பிரகாசம் மங்கிடக் கூடாது. குழந்தைங்க ரெண்டு பேரையும் படிக்க வைக்கற அளவுக்கு சாமர்த்தியமா ரெண்டு பேருமே கஷ்டப்பட்டு சம்பாதிச்சு சேர்த்து வச்சுட்டோம். தவிர வீட்ல சும்மாயிருக்கற நேரத்துல டியூஷன் எடுத்துக்கிட்டிருக்கேன். எனக்கு வேலையை விட்ட மாதிரியே தெரியலை." என்றார் சிரித்தபடி.
 "ஆனா, மனசு கேட்க மாட்டேங்குதே! உங்களை இப்படி முடக்கிப் போட்டுட்டேனேன்னு மனசு கிடந்து தவிக்குது."
 "நீ சீக்கிரமே குணமாயிடுவே. எழுந்து நடப்பே. அப்பறம் எனக்கென்ன வேலை? நான் மட்டும் இல்லை. நீ கூட வேலைக்குப் போகலாம்."
 வசந்தா விரக்தியாக சிரித்தாள்சற்றுமுன் கவிதா சொன்னது மீண்டும் காதில் ஒலித்தது.
 வேதனைக்கீற்று நெஞ்சில் ஓடினாலும் 'உண்மையைத்தானே சொன்னாள்' என்று உள்ளம் தன்னைத்தானே தேற்றிக் கொண்டது.
 "என்ன திடீர்னு மௌனமாயிட்டே?" என்றவாறே அவளை தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்தார்.
 "நான் மறுபடி எழுந்து நடப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை."
 வேதனையாக முனகினாள்.
 ஆறுதலாக அவளை தன் உடலுடன் சாய்த்துக் கொண்டார்.
 "வசந்தா, நம்பிக்கைங்கற சக்தி புயல் காத்துல துவண்டு விழற மென்மையான மலர் கிடையாது. இமயத்தை மாதிரி வலிமையானதுன்னு சொல்லுவாங்க. நாம வைக்கிற நம்பிக்கையை இமயம் மாதிரி வலுவா ஆக்கிக்கிட்டா நினைக்கறது கண்டிப்பா நடக்கும்."
 அவருடைய ஆறுதலுக்கும் ஊக்கத்திற்கும் பதிலாக அவளிடமிருந்து பெருமூச்சுத்தான் வெளிப்பட்டது.
 "வா... பாத்ரூமுக்கு." அவளை குளியலறையை நோக்கி அழைத்துச் சென்றார்.
 அவளை காலைக் கடமைகளை முடிக்க வைத்து குளிக்க வைத்து புடவை மாற்றி அழைத்து வந்தார்.
 அழகாக தலைவாரி கொண்டையிட்டு பூ சூட்டி நெற்றியில் குங்குமம் இட்டு மங்களகரமாக மாற்றினார்.
 அதற்குள் அவர் செய்து வைத்திருந்த இட்லி, சாம்பார் வகைகளை சாப்பாட்டு மேஜைக்கு கொண்டு வந்து வைத்திருந்தாள் மீரா.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223463825
சிந்தனையே என் சித்தமே!

Read more from R.Sumathi

Related to சிந்தனையே என் சித்தமே!

Related ebooks

Related categories

Reviews for சிந்தனையே என் சித்தமே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிந்தனையே என் சித்தமே! - R.Sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    வாசுதேவனுக்கு விழிப்பு வந்தபோது சமையலறையிலிருந்து பாத்திரங்களின் சத்தம் காதில் விழுந்தது.

    அந்த சத்தம் அவரை அவசரமாகவும் ஒருவித பரபரப்புடனும் எழ வைத்தது.

    ‘மீரா வேலை செய்கிறாளா? ச்சே! எப்படி தூங்கினேன்? சீக்கிரம் எழுப்பிவிட சொன்னாளே? இன்னைக்கு ஏதோ டெஸ்ட் இருப்பதாக வேறு சொன்னாளே? இப்படி தூங்கியிருக்கிறேனே!’ தன்னையே நொந்து கொண்டவராக சமையலறைக்குள் நுழைந்தார். மீரா இழுத்து சொருகிய புடவையுடன் அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த பாலை இறக்கிக் கொண்டிருந்தாள். சமையலறை ஜன்னல் வழியே உள்ளே புகுந்த காலை வெயில் அவளுடைய முகத்திலும் தோளிலும் பட்டு அவளுக்கு ஒரு பிரகாசத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

    என்னம்மாயிது! என்னை எழுப்ப வேண்டியதுதானே. நீ எதுக்கு காபியெல்லாம் போட்டுக்கிட்டு? சீக்கிரம் எழுப்பிவிடச் சொன்னே. ஸாரிடா! அப்பா அசந்து தூங்கிட்டேன். மீரா கனிவாக சிரித்தாள்.

    இருக்கட்டும்ப்பா! ராத்திரி தலை வலிக்குதுன்னு நீங்க மாத்திரை போட்டுக்கிட்டு படுத்தீங்களே! அதான் உங்களை தொந்தரவு பண்ணலை.

    டெஸ்ட் ஏதோயிருக்கு. சீக்கிரம் எழுப்பி விடுங்கப்பான்னு சொன்னே. அதையும் மறந்துட்டேன்.

    நான் நாலு மணிக்கே எழுந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டேன்.

    சரி. நீ போய் படி. நான் காபி கலந்து எடுத்துட்டு வர்றேன்.

    வேண்டாம்ப்பா. நானே காபி கலக்கறேன். நீங்க போய் முகம் கழுவிக்கிட்டு வாங்க. அம்மாவையும் எழுப்புங்க.

    சொன்னா கேளு. நீ போய் படி!

    நான் படிச்சு முடிச்சுட்டேம்ப்பா!

    இருக்கட்டும். இன்னொரு முறை படிச்சதை புரட்டிப்பாரு. ஈஸியா ஞாபகத்துக்கு வரும். காலம் பொன் போன்றது. காபி போடறது, டீ போடறதுக்கெல்லாம் அதை விரயமாக்கக் கூடாது.

    போங்கப்பா! எப்பவும் நீங்க இப்படித்தான். இன்னைக்கு ஒரு நாளாவது என் கையால உங்களுக்கு காபி தரணும்னு ஆசைப்பட்டேன். ம்... முடியாமப் போய்ட்டு.

    உண்மையான வருத்தம் மேலிட சொன்னாள் மீரா. வாசுதேவன் அன்பாக அவளுடைய தாடையை பற்றினார்.

    காபி குடிக்கிறதா பெரிய விஷயம்? அப்பாவோட லட்சியத்தை நிறைவேற்று. அப்பறம் காபி என்ன அப்பாவுக்கு விருந்தே சமைச்சு போடு. சாப்பிடறேன்.

    அப்படி இப்படி அடுப்புக்கிட்டே வேலை செய்தாத்தானே சமையல் கத்துக்க முடியும். திடீர்னு விருந்து சமைக்க முடியுமா?

    அப்பா சிரித்தார். மண்டு. உங்கம்மா என்னை காபி குடிச்ச டம்ளரைக்கூட கழுவ விட்டதில்லை. அப்படியிருந்த நான்தான் இப்போ அடுப்படியே கதியா கிடக்கிறேன். விதவிதமா சமைக்கிறேன். எல்லாம் அனுபவம்தான்.

    வாசுதேவன் இப்படி சொன்னதும் சட்டென்று அவருடைய கையைப் பற்றிக் கொண்ட மீரா நெகிழ்ச்சியான குரலில் பேசினாள்.

    அப்பா... இது தேவையா உங்களுக்கு? எல்லா பொறுப்பையும் நான் ஏத்துக்க தயாராயிருந்தேன். ஆனா... நீங்க வேலையை விட்டுட்டு இப்படி வீட்டோட கிடக்கணுமா? காலையில எழுந்து நீங்க வேலைக்குப் போற அழகே தனி. உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா.

    மீராவின் கண்கள் கலங்கின.

    டேய்... என்னடாயிது? ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது இதை சொல்லி கண் கலங்கணும்னு ஏதாவது வேண்டுதலா? போ... போய் வேலையைப் பாரு. இந்த கவிதா கழுதை எழுந்தாளா இல்லையா? எழுந்திரிச்சிருக்க மாட்டாளே. அவளை நினைச்சாத்தான் கவலையாயிருக்கு. தூங்கறதுதான் தன்னோட வேலைன்னு நினைப்பு. படிக்கணும்கற எண்ணமே கிடையாது.

    நான் எழும் போதே அவளையும் எழுப்பினேம்ப்பா. அவ எழுந்திரிக்காம இழுத்துப் போர்த்திக்கிட்டு அப்படி தூங்கறா.

    முதுகுல நாலு கொடுத்து எழுப்பு போ... அப்பா அதட்டலாக சொல்லவும் மீரா கவிதாவின் அறைக்குள் வந்தாள்.

    கவிதா ஒரு குழந்தையைப் போல் கால் கைகளை சுருட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

    கலைந்த கூந்தல், விலகிய ஆடை, குழந்தைத்தனமான முகம் - கவிதாவின் அழகை ஒரு கணம் ரசித்தவள் மறுகணம் அவளுடைய தொடையில் தட்டி எழுப்பினாள்.

    கவிதா, ஏய் கவிதா... எழுந்திரிடி.

    மீராவின் உசுப்பலில் புரண்டு படுத்த கவிதா சிணுங்கினாள்.

    மீரா... ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதே. கொஞ்ச நாழி கழிச்சு எழுந்திரிக்கறேன்.

    கொஞ்ச நாழியா? மணி ஏழாகப் போகுது.

    போ! இன்னைக்கு ஒரு நாள் காலேஜுக்கு லீவு போடப் போறேன்.

    என்னது லீவா? அப்பா தோலை உரிச்சுடுவார். அப்பாவைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே. அவருக்கு எல்லா விஷயத்திலேயும் கரெக்டாயிருக்கணும்.

    ம்க்கும். ரொம்ப கரெக்ட்டுத்தான். ஆனா இவர் மட்டும் வேலைக்குப் போக மாட்டார். பார்த்துக்கிட்டிருந்த நல்ல வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கார்.

    ஏய்... என்ன பேசற நீ? அப்பா காதுல விழுந்தா வருத்தப்படுவார். அம்மாவுக்கு இப்படி ஆனதால்தானே அவர் வேலையைக் கூட விட்டுட்டு வீட்ல இருக்கார். இன்னும் சொல்லப்போனா அம்மாவை கவனிச்சுக்க வேண்டியது நம்ம கடமை. அதைத் தான் ஏத்துக்கிட்டு அப்பா நம்மோட எதிர்காலம் வீணாகக் கூடாதுன்னு நம்மை படிக்க அனுப்பிட்டு அம்மாவை கவனிச்சுக்கறார்.

    போர்வையை உதறிவிட்டு எழுந்த கவிதா அதை மடித்தவாறே அலட்சியமாக சொன்னாள்.

    ஆமா! எதுக்கு வேலையை விட்டுட்டு அம்மாவை கவனிச்சுக்கணும்? பக்கவாதத்துல ரெண்டு காலும் செயல்படாம போனது நாம நினைச்சு பார்க்காததுதான். அதுக்காக இவர் எதுக்கு வேலையை விடணும்? ஒரு நர்ஸை போட்டா, அவ பார்த்துக்கறா. நல்ல வேலையை விட்டுட்டு யாராவது இப்படி வீடே கதியா கிடப்பாங்களா?

    கவிதா! நீ என்ன பேசறே? சும்மா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதே. அம்மா காதுல விழுந்தா மனசு வருத்தப்படுவாங்க. வேலையையே விட்டுட்டு அப்பா அம்மாவுக்கு சேவை பண்றார்ன்னா அப்பாவோட மனசுல அம்மா மேல எவ்வளவு பாசம் இருக்கும்! ‘படிச்சது போதும் - நான் வீட்டோடயிருக்கேன்’னு சொன்னேன். அதுக்கும் அப்பா ஒத்துக்கலை. தன்னோட வேலையை விட்டுட்டு அம்மாவை கவனிச்சுக்கறார்.

    ஆமா! இவர் வேலையை விட்டுட்டு விழுந்து விழுந்து கவனிச்சுக்கறதால அம்மா நாளைக்கே எழுந்து நடக்கப் போறாங்களா?

    கவிதாவின் வாயைப் பொத்தினாள் மீரா.

    நீ... என்ன பேசறே? அப்பா வேலையை உதறிட்டு அம்மாவே கதின்னு கிடக்கறதுக்குக் காரணமே அம்மா எழுந்து நடப்பாங்கங்கற ஒரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையிலதான் அப்பா எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யறார். நீ இப்படியெல்லாம் பேசாதே!

    மீரா தங்கையைக் கடிந்து கொண்டது பக்கத்து அறையில் படுக்கையில் இருந்த வசந்தாவின் காதில் விழுந்தது. அவளுடைய கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.

    2

    வாசுதேவன் வசந்தாவின் அறையினுள் நுழைந்தார். வசந்தாவின் அருகே சென்று அன்புடன் அவளுடைய நெற்றியில் கையைப் பதித்து ‘வசந்தா’ என எழுப்ப முயன்றவர், கண்களில் நீர் கசிய விழித்தபடியிருந்த மனைவியைப் பார்த்து துணுக்குற்றார்.

    வசந்தா... என்ன செய்யுது? ஏன் அழறே? என்றார். வசந்தா கணவரைப் பார்த்ததும் இன்னும் விம்மினாள். அவரின் கையை அன்போடு பற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.

    நீங்க எனக்கு கணவரா கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ? சொல்லிவிட்டு மறுபடியும் விசும்பினாள்.

    வசந்தா என்னம்மாயிது? என்னமோ என்னை பெரிய தியாகி மாதிரி நினைக்கறே?

    "தியாகம் இல்லாம பின்ன என்ன? எனக்காக வேலையை விட்டுட்டு வீட்டோடயிருந்து என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கறீங்களே! மீரா எம்.ஏ. படிச்சது போதும், அம்மாவை பார்த்துக்கறேன்னு சொன்னதுக்கு பிடிவாதமா அவளை சட்டக் கல்லூரியில சேர்த்திங்க. சின்னவ சொல்ற மாதிரி என்னை கவனிச்சுக்க ஒரு நர்ஸை ஏற்பாடு செய்தா போதாதா? நீங்க இப்படி வீட்டோடயிருக்கணுமா?

    Enjoying the preview?
    Page 1 of 1