Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கனவு காணும் வாழ்க்கை
கனவு காணும் வாழ்க்கை
கனவு காணும் வாழ்க்கை
Ebook99 pages36 minutes

கனவு காணும் வாழ்க்கை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மெல்லிய இழைகளாக வாசலில் கோலமிட்டாள் யாமினி. அவள் விரல் அசைவில் அழகான தாமரை மலர் மலர்ந்து சிரித்தது.
ஆட்டோ வந்து நிற்க இறங்கினாள் வர்ஷினி.
பேக்கை. கையில் எடுத்தவள், பணத்தை ஆட்டோக்காரனிடம் கொடுக்க, ஆட்டோ கிளம்பி செல்ல,
கோலப்பொடியை இடது கைக்கு மாற்றியவள், வர்ஷியிடமிருந்த பேக்கை வாங்கினாள்.
‘‘வாக்கா... அத்தான்... அத்தை, மாமா நல்லாயிருக்காங்களா?’’
‘‘ம்...ம்...’’
கதவைத் திறந்து உள்ளே போக,
பின் தொடர்ந்தாள் யாமினி.
“வாம்மா... வர்ஷினி... நல்லாயிருக்கியா?’’
முகத்தை துண்டால் துடைத்தபடி வந்தார் சத்யன்.
‘‘எப்படிப்பா... நல்லாயிருக்கிறது. என்னை தான் கல்யாணங்கிற பேரில் பாழும் கிணற்றில் தள்ளிட்டிங்களே... வீடாப்பா அது நரகம். புறப்பட்டு வந்துட்டேன்.”
எரிச்சலுடன் கல்யாணமாகி ஆறு மாதங்களே ஆன மகள் பேசும் பேச்சில் மெளனமாக நின்றார். அவளே திரும்பவும் பேசத் தொடங்கினாள்.
‘‘எதை செய்தாலும் குற்றம், குறை தான். வீட்டில் அத்தை, மாமா ராஜ்யம் தான் நடக்குது. இவர் எதையும் கண்டுக்கிறதில்லை. அப்படியே நான் ஏதாவது சொன்னாலும், பெரியவங்க கொஞ்சம் முன்னே, பின்னேதான் இருப்பாங்க. நம்ப நல்லதுக்கு தான் சொல்றாங்கன்னு எடுத்துக்கணும் வர்ஷினி.எனக்கு தான் உபதேசம் பன்றாரு.
“சரி, உனக்கு மனசு சரியில்லன்னா ஒரு வாரம் தங்கையோடு இருந்துட்டு வான்னு சொன்னாரு. புறப்பட்டு வந்துட்டேன்.”
இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். கல்யாணமான இந்த ஆறு மாதத்தில் இதை போல நான்கு முறை வந்து விட்டாள்.
ஒரு வாரம் இதம்பதமாக பேசி, அக்காவின் மனதை மாற்றி, மாப்பிள்ளை ரகுவிடம்.
‘‘மகளை கொஞ்சம் செல்லமாக வளர்த்துட்டேன். மாப்பிள்ளை நாளானால் மனுஷங்களை புரிஞ்சுப்பா. நீங்கதான் கொஞ்சம் அனுசரிச்சு போகணும்” பவ்யமாக சொல்லி அனுப்பி வைப்பார்.
‘‘அப்பா, உங்க கையால டிகாஷன் காபி சூடாக கொடுங்கப்பா ராத்திரி பஸ்ஸில் வந்தது. சரியான தூக்கமில்லை. தலை வலிக்குது.” அப்பா திரும்ப,
‘‘நீங்க இருங்கப்பா, நான் போய் காபி கலந்து எடுத்துட்டு வர்றேன்.” யாமினி சொல்ல,
‘‘பரவாயில்லம்மா... நானே கொண்டு வர்றேன். அக்காவோடு பேசிட்டு இரு.’’
‘‘என்னக்கா... நீ...எதுக்காக அப்பா மனசு கஷ்டப்படற மாதிரி பேசற. ராஜா மாதிரி மாப்பிள்ளை பார்த்து தானே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு...”
ரகு அத்தானும்... பாங்கில் வேலைபார்க்கிறார். கை நிறைய சம்பாத்தியம். சொந்த வீடுன்னு வசதிகளோடு இருக்காரு.
நீ கொஞ்சம் குடும்பத்தை அனுசரிச்சு போகக் கூடாதா... பாழும் கிணற்றில் தள்ளிட்டிங்கன்னு. அவர் மனசு புண்படும்படி பேசற.
அக்காவை கடிந்து கொள்கிறாள் யாமினி. எரிச்சலை அடக்கியபடி,
‘‘உனக்கென்னடி தெரியும். அங்கே வந்து பாரு. அப்பதான் நான் படற பாடு புரியும்.சமையலை முதலில் முடி. ரகு கிம்பிட்டான் இட்லி அடுப்பை பற்றவை. வெள்ளிக் கிழமை குளிச்சுட்டு வா... ராத்திரியே டிகாஷன் போட்டு வை...
எல்லாம் அதிகாரம் தான்.,
அம்மா இருந்தாலும் அவள் மடியில் படுத்து ஒரு குறை அழலாம். நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே...
அப்பாவுக்கு நம்ப மனசு எப்படி தெரியும்?
ஆம்பிளை இல்லையா... என்னை தான் சமாதானம் பண்ணி அனுப்பி வைக்கிறாரு.
அம்மா இருந்தா... என் மகளை எப்படி வேலைக்காரி போல நடத்தலாம்னு அவங்க கிட்டே சண்டைக்கு போயிருப்பாங்க. எல்லாம் விதி. இப்படி அனாதையாக வளரணும்னு தலையில் எழுதியிருக்கு...
பெத்தவ முகத்தை பார்க்க கூட கொடுத்து வைக்காத பாவிதானே நாம். அம்மா இறந்த கையோடு வீட்டில் நடந்த தீ விபத்தில்... எல்லா பொருட்களும் கரியாகி போச்சு...
“அவங்க நினைவாக ஒரு போட்டோ கூட இல்லை. எப்படிப்பட்ட பாவம் பண்ணியிருக்கோம்.’’
நீட்டி முழக்கி பேசும் அக்காவை பார்க்கிறாள் யாமினி.
‘‘அம்மா இல்லாத குறை தெரியாம வளர்த்தவர் நம் அப்பா. இப்படி பேசறதை முதலில் நிறுத்து. இல்லாத அம்மாவுக்காக உருகாம இருக்கிற அப்பாவின் மனசு குளிரும்படி நடந்துக்க. மனுஷங்களை புரிஞ்சுக்க முயற்சி செய்க்கா.
அம்மா அம்மான்னு உருகுறியே... உன் அத்தை கிட்டே அம்மாவை பார்க்கப் பழகு. இப்படி குறை சொல்ல மாட்டே.’’
மனக்குமுறலை மறைத்தபடி வேகமாக எழுந்து போகிறாள் யாமினி

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 12, 2024
கனவு காணும் வாழ்க்கை

Read more from பரிமளா ராஜேந்திரன்

Related to கனவு காணும் வாழ்க்கை

Related ebooks

Reviews for கனவு காணும் வாழ்க்கை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கனவு காணும் வாழ்க்கை - பரிமளா ராஜேந்திரன்

    1

    மாலை நேர சென்னை.

    சூரியன் தன் கரங்களை சுருக்கி உக்கிரத்தைக் குறைக்க, கடற்காற்று ஈரப்பதத்துடன் வீசத் தொடங்கியது.

    எங்கும் மக்கள் கூட்டம்.

    பேருந்துகள் நிரம்பி வழிந்தன.

    அன்றைய வேலைகள் முடிந்து வீடு திரும்பும் மனிதர்கள்.

    வீட்டில் காத்திருக்கும் பிரச்சினைகளின் அமைதல், ஐம்பது வயதை கடந்தவர் முகங்களில் அப்பட்டமாக தெரிந்தது.

    கல்யாண வயதில் இருக்கும் பெண்களை கரைசேர்க்க வேண்டுமே என்ற கவலையுடன் சில முகங்கள்.

    மகனின் படிப்புக்கான கடனை எங்கே வாங்குவது என்ற சிந்தனை படிந்த சில முகங்கள்.

    இன்னும் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வருமோ என்ற பயத்துடன் சில முகங்கள்.

    நாளை என்று இருப்பதை பற்றி கவலைப்படாமல், இன்றே வாழ்ந்துவிடத் துடிக்கும் இளமை பூரிப்புடன் கண்களில் பட்டாம் பூச்சிகள் படபடக்க, சிரிப்பு கடலில் மூழ்கியபடி இளம் பெண்கள்.

    தங்கள் ஒவ்வொருவரையும் ஹீரோவாக கற்பனை செய்து சிம்மாசனத்தில் ஏற போவதாக கனவு காணும் இளைஞர்கள்.

    இவர்களுக்கிடையே தங்கள் பொறுப்புகளை உணர்ந்தவர்களாக, வாழ்வின் நிஜங்களை புரிந்து கொண்டு வாழும் இளம் பெண்கள், இளைஞர்கள்.

    அவர்களில் ஒருவராக அந்த கூட்டத்தில் நடந்தாள் யாமினி.

    இருபத்து நான்கு வயதை தொடுபவள். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ப்ரோக்ராமர் வேலை.

    உயர்த்தி சீவி கிரீப் செய்யப்பட்ட கூந்தல். திராட்சை கொத்து போல அங்குமிங்கும் ஆடியது. புருவ மத்தியில் சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு. முக அழகை கூட்டிக் காண்பித்தது.

    வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தில் காட்டன் சேலை, அவள் உடலை தழுவியிருந்தது.

    எடுப்பான உயரம், கோதுமை நிறம். இவள் அழகி தான் என்பதை அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெருமிதத்துடன் சொல்லியது.

    தெருவில் நுழைய, வாசலில் அப்பா தெரிந்தார். இவர்தான் யாமினியின் அப்பா என்றால், யாரும் நம்ப மாட்டார்கள்.

    கருப்பு என்று சொல்ல முடியாத பழுப்பு நிறம், அம்மை தழும்புகள், மேடும் பள்ளமுமாக முகத்தை மாற்ற, இடுங்கிய கண்கள்... நெடுநெடுவென்ற உயரம்... இதுதான் சத்யன்.

    ஆனால், யாமினியை பொறுத்தவரை, அவள் அப்பா ஒரு அழகன். அழகும், வசீகரமும் அவர் அன்பில் தெரிந்தது. பாசத்தை தேக்கி வைத்திருக்கும் விழிகள். தங்களுக்காகவே வாழும் அப்பாவை... பார்க்கும்போது... அவர் முக அழகை தாண்டி மன அழகு தான் அவள் மனதில் நிறையும்.

    "என்னப்பா... நான் வரமாட்டேனா... எதுக்காக வாசலில் திரியறீங்க...?’’

    ‘‘உள்ளே மட்டும் தனியா என்ன செய்யப் போறேன். வாம்மா.’’

    அவர் அழைப்பில் அன்பு தெரிந்தது. முகம் கழுவி, நைட்டியில் வந்தாள்.

    ஆவி பறக்க, இரண்டு கப் டீயும், ஒரு ப்ளேட்டில் வெங்காய பகோடாவும் தயாராக இருந்தது.

    பகோடாவை வாயில் போட்டாள்.

    ‘‘எதுக்குப்பா... தினம் இப்படி ஒரு டிபன் செய்யணுமா... டீ மட்டும் போதாதா...?’’

    "இருக்கட்டுமா... வேலைக்கு போய்ட்டு வர பொண்ணுக்கு. பிடிச்சதா செய்து வைக்கிறதில் என்ன இருக்கு?’’

    "மதியம் ஒரு வாய் சாதம் எடுத்துட்டு போற... முகம் வாடி... வர்றே... சாப்பிடும்மா.’’

    ஒரு கப் டீயை கையில் எடுத்தார் சத்யன்.

    ‘‘ரொம்ப நல்லாயிருக்குப்பா... உங்க கை பக்குவம் யாருக்கும் வராது.’’

    இனிப்பும், காரமுமாக தொண்டையில் இறங்க அப்பாவை பார்த்து புன்னகைக்கிறாள் யாமினி.

    "ராத்திரி சப்பாத்தி, குருமா செய்யட்டுமா?’’

    "நீங்க செய்ய வேண்டாம். நான் செய்து தரேன்பா.’’

    "இல்லம்மா... என் மகளுக்கு நானே செய்து தரேன். உங்கம்மா போன பிறகு.’’

    இரண்டு வயசில் உன்னையும், நாலு வயதில் உன் அக்கா வர்ஷினியையும் கையில் பிடிச்சுக்கிட்டு, தனி ஆளாக நின்னேனே.

    உங்களுக்கு இனி அப்பா மட்டுமில்லை. அம்மாவும் நான்தான்னு உணர்ந்தேனே... அந்த நிமிஷம்... அதை இன்னும் நான் மறக்கலை யாமினி.

    "உங்க அக்காவுக்கு கல்யாணம் பண்ணி என் கடமையை முடிச்சுட்டேன். இனி உனக்கும், ஒரு வாழ்க்கையை தேடிக் கொடுத்தா என் கடமை முடிஞ்சுடும். - திருப்தியா அந்த கடவுள்கிட்டே போய் சேர்ந்துடுவேன்.’’

    "அவ்வளவு சீக்கிரம், உங்களை விடமாட்டேன்பா. இந்த யாமினி கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழறதை நீங்க பார்க்க வேண்டாமா...’’

    ‘‘பேரன், பேத்தியெல்லாம் உங்க நிழலில் தான் வளரணும்பா. அப்பதான் அவங்களுக்கு பாசம்னா... என்னன்னு புரியும்.

    உங்ககிட்டே இருக்கிற நல்ல விஷயங்களையெல்லாம் என் பிள்ளைகளுக்கு நீங்க தான் சொல்லித்தரணும்.’’

    இந்த யாமினி, எப்பவுமே... இந்த அப்பாவை பிரியமாட்டாள்.

    பேசும் மகளை அன்பு ததும்ப பார்க்கிறார் சத்யன்.

    சத்யன் சொன்னது போல, யாமினிக்கு அம்மாவும் அவர்தான். இரண்டு பெண்களையும் அரவணைத்து வளர்த்தவர். அவர்களின் பசி அறிபவர். ருசி தருபவர்.

    ஆறுதல் என அன்பான வார்த்தைகள். பருவ வயது வந்து இயற்கை தந்த வலியைக் கூட, தாயின் இதமோடு, விளக்கியவர்.

    அவர் மடிதான், அவர்கள் களைப்பாறும் தொட்டில்...

    அவர் செய்யும் எந்த வேலையிலும், ஒரு நேர்த்தியும், ஒழுக்கமும் இருக்கும்.

    அவர் அலமாரியில் துணிகள் ஒழுங்காக அடுக்கப்பட்டு, அதில் ஒரு அழகு தெரியும். - சமைத்ததை ஒழுங்குபடுத்தி, பரிமாறும் விதம். ஒரு பெண்ணால் கூட இந்த அளவு பொறுமையாக, ஈடுபாட்டுடன் செய்ய முடியுமா என்பது தெரியாது.

    யாமினியை பொறுத்தவரை அப்பா, அம்மா, ரோல் மாடல், ஹீரோ அழகன் எல்லாமே

    Enjoying the preview?
    Page 1 of 1