Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urangaatha Pookkal
Urangaatha Pookkal
Urangaatha Pookkal
Ebook109 pages1 hour

Urangaatha Pookkal

By Usha

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466282
Urangaatha Pookkal

Read more from Usha

Related to Urangaatha Pookkal

Related ebooks

Related categories

Reviews for Urangaatha Pookkal

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urangaatha Pookkal - Usha

    26

    1

    திடீரென்று சிலுசிலுப்பான காற்று, முகத்தில் செல்லமாக வருடிச் சென்றது. மதிமலர், விழிகளைத் திறந்தாள்.

    ஜன்னலின் மேற்பகுதிக் கதவு, காற்றின் வேகத்தில் தானாகத் திறந்திருந்தது.

    இன்னும் இருளைவிட்டுத் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை, பூமி. இப்போது பிரிந்தால், அடுத்ததாய் சந்திக்க இன்னொரு நாள் முழுதாகத் தேவைப்படுமே என்ற ஏக்கத்தில் இரவும் நிலவும் இணைந்தே இருந்தன.

    அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது.

    இதென்ன சிந்தனை, புதுவகை சிந்தனை? இயற்கை இது! விஞ்ஞானம் இது!!

    பூமி சுற்றுகிற சுழற்சிக்கும் வேகத்திற்கும் தக்கபடி, சூரியன் தன்னைக் காட்டிக் கொள்கிறது, அவ்வளவுதான்! இதில், எங்கிருந்து வருகிறது இரவுக்கும், பூமிக்கும், வெளிச் சத்திற்குமான பந்தம்?

    அப்பாவின் நிதானமான குரல் அடுப்படியிலிருந்து கேட்டது.

    ‘முகில் வெண்மதி சூடும் முடியுடை

    வீரன் மேவிய வேற்காடு

    வாரமாய் வழிபாடு செய்பவர்

    சேர்வர் செய்கபூல் திண்ணமே’

    பலகீனமான தொண்டைதான். ஆனால், பிரயத்தனப்பட்டு பெரிய குரலெடுத்து அவர் பாடிக் கொண்டிருந்தார்.

    சரிதான். திருவேற்காடுக்குப் போக வேண்டும் என்று தோன்றிவிட்டது, அப்பாவிற்கு. கிளம்பியே தீருவார், இன்றைக்கு மழை வரும் போல சொல்லிக்கொண்டிருக்கிறது, வானிலை. அவர் அதைப் பொருட்படுத்தமாட்டார்.

    நினைத்தால், செய்து விடவேண்டும். அன்றே, அப்பொழுதே.

    பிடிவாதம்தான். அது ஒரு நல்ல குணம் அல்ல. ஆனால், அப்பாவிடம் ஏகப்பட்ட நல்ல அம்சங்கள் இருக்கின்றன. மென்மையான உணர்வுகள், ஈரமான மனசு, நல்லதை எண்ணும் இதயம் என்று வாழ்கிற அபூர்வமான ஆத்மா. அதனால், சிலநேரம் அவர் காட்டுகிற பிடிவாதம், பரவாயில்லை என்று விட்டுவிடக்கூடியதுதான்.

    மதிமலர் எழுந்தாள். குளித்து முடித்து அப்பாவிடம் விரைந்தாள்.

    இன்னிக்கு என்னவோ அவ்வளவு சுவையா வரலேம்மா என்றபடி அவர் நீட்டிய காப்பியை வாங்கிக்கொண்டாள்.

    மெல்ல உறிஞ்சினாள்.

    இதழ்களில் ஒரு மெல்லிய முறுவல் படர்ந்தது.

    முழுவதையும் அவள் அருந்தி முடிக்கும்வரை காத்திருந்து விட்டு அப்பா, என்னம்மா மலர், நீயா சிரிச்சுக்கிறே? என்றார், மெல்ல.

    இல்லப்பா... தெனம் அற்புதமா காப்பி போடுறீங்க. ஆனா, நல்லா வரலேன்னும் சொல்றீங்க. ஏம்ப்பா அப்படி?

    தெனமுமா சொல்றேன்? என்றார், வியப்புடன். குடிச்சுப் பார்த்தா ஏதோ ஒரு குறை இருக்கிற மாதிரியே தோணுதும்மா... முழு திருப்தி வரலே.

    நல்ல கலைஞர்களின் அடையாளம்ப்பா, அது. தங்களோட படைப்புல முழுமையை காணவே முடியாது, அவங்களால். அப்படியொரு முழுமையை அடைஞ்சதா நினைச்சுட்டாங்கன்னா அதுக்குமேல வளரமுடியாது, அவங்களால. சரியாப்பா?

    மலர் சொன்னா மறுப்பு ஏதும்மா?

    அப்படின்னா இன்னொண்ணு சொல்லவா?

    சொல்லேன்.

    காப்பி உண்மையிலே அற்புதம்ப்பா... மனசார சொல்றேன்... வெளியில் எங்கேயும் காப்பி குடிக்கவே பிடிக்கிறதில்லே... நம்ம வீட்டு காப்பி மாதிரி கிடைக்கிறதும் இல்லே.

    முகம் மலர தலையசைத்து, அந்தப் பாராட்டை அவர் ஏற்றுக்கொண்டபோது, அவள் முகமும் மலர்ந்தது.

    மற்றவர்களை ஆனந்தப்படுத்திப் பார்க்கும்போது நமக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி! அடடா! கணக்கிட முடியுமா என்ன அதன் அளவை! எந்தப் பல்கலைக்கழகத்தாலும் கற்றுக் கொடுக்க முடியாத அற்புத உணர்வு, அது!

    ஒரு விண்ணப்பம்ப்பா... அவள் தம்ளரை கழுவியபடியே சொன்னாள். இன்னிக்காவது நான் சமைக்கிறேன்... நீங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக்குங்களேன்.

    ஏம்மா? எனக்கென்ன குறைவுன்னு நினைக்கிறே?

    அப்படியில்லேப்பா... ஆசைதான் எனக்கு. என் கையால் சமைச்சுப் போடணும்னு. இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டுமாவது...

    அப்பா சிரித்தபடி தலையாட்டினார். தினசரியை விரித்து வைத்துக்கொண்டே மெல்ல முணு முணுத்தபடி பேசினார்.

    ஒண்ணா ரெண்டா, வண்டியளவு வேலை செய்யறவ நீ... நாலு கம்பெனிகளோட தோட்ட நிர்வாகம், ரெண்டு பள்ளிக்கூடங்களில் கதை சொல்ற வேலை, காடு, ஏரி, ஆறு, கடல்னு சுற்றுச்சூழல் ஆர்வலர் மையத்துல பொறுப்பான பதவின்னு காலில் சக்கரம் கட்டிகிட்டு பறக்கிற பெண் நீ... வீட்டு வேலையாவது உன் தோளில் ஏறாம இருக்கட்டுமேன்னு ஒரு தவிப்புதான், எனக்கு. வேறென்னம்மா?

    தொலைபேசி அழைத்தது.

    ஒரு நிமிடம்ப்பா... என்று விரைந்துபோய் எடுத்தாள்...

    மதிமலர் மேடமா?

    ஆமாம்.

    ஆடம்ஸ் இன்போ கம்பெனியில் இருந்து பேசுறோம்.

    சொல்லுங்க.

    தோட்டக்கலை பண்ணுற மேடம் மதிமலர் நீங்க தானே?

    ஆமா.

    நந்தம்பாக்கத்துல புதுசா ஒரு கட்டுமான வேலை முடிகிற நிலையில் இருக்கு. எங்களுக்கு நாப்பது ஏக்கர் உண்டு. முன்பக்கம் முழுசா தோட்டம் போடணும்னு எம்.டி. சொல்லிட்டார். உங்களால் செய்ய முடியுமா மேடம்?

    முடியும் சார் என்றாள், அவள் மகிழ்ச்சியுடன்.

    2

    "அம்மா... நேரமாச்சு. கிளம்பணும். ஆதியின் உரத்த குரல் அடுப்படியிலிருந்த கனகவல்லி காதுகளில் விழுந்தது.

    இதோப்பா... தோசை தயாராயிடுச்சு. சட்னிக்கு மட்டும் தாளிச்சுடுறேன் என்றவள், வேகமாக கரண்டியை அடுப்பில் வைத்து, அது காய்ந்ததும் எண்ணையில் கடுகு, வெங்காயம், உளுந்து தாளித்துக் கொட்டினாள்.

    ‘டை’யை சரிசெய்து கொண்டான்.

    வெளிநாட்டு நறுமண தைலத்தை பீய்ச்சிக் கொண்டான். வேகமாக வந்து சமையல் அறையை ஒட்டியிருந்த மேசை முன் உட்கார்ந்தான்.

    அப்பப்பா... இந்த சமையல் வேலை முடிக்கிறதுக்குள் உன்னைப் பிடி என்னைப் பிடின்னு ஆயிடுது.

    பெருமூச்சும் வியர்வையுமாக அவள் பரிமாறினாள்.

    தோசைகள் ஆறியிருந்தன.

    சட்னியில் உப்பே இல்லை.

    பக்கத்துல இருக்கிற மெஸ்சில் சொல்லிடலாம்மா... வேளாவேளைக்கு டிபனும் சாப்பாடும் வந்துடும். நீ ராணி மாதிரி இருக்கலாம்னு சொன்னா கேட்கவே மாட்டேங்கிறேம்மா என்றான், அவன் வேறு வழியில்லாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1