Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மலருக்குத் தென்றல் பகையானால்...
மலருக்குத் தென்றல் பகையானால்...
மலருக்குத் தென்றல் பகையானால்...
Ebook121 pages41 minutes

மலருக்குத் தென்றல் பகையானால்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுதாகரும், குமாரும் ஒருவர்மேல் ஒருவர் கையைப் போட்டுக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பிணைப்பை பாசம் என்று கூறமுடியாது. தூக்கத்தில் ஒருவரை ஒருவர் தலையணை எனத் தவறாக நினைத்துக்கொண்டதுதான்.
அவர்கள் படுத்திருந்த கோலத்தைப் பார்க்க முழுமதிக்குச் சிரிப்பு வந்தது. சிறுவர்களைப் போல் உறங்கும் அவர்களைத் தட்டி எழுப்பினாள்.
“சுதாகர்... எழுந்திரு... எழுந்திரு. குமார்... ஏய்...”
இருவரையும் உலுக்க இருவரும் எழுந்தனர்.
கண்மலர்ந்த அவர்கள், ஏதோ புது உலகத்திற்கு வந்ததைப் போல் திருதிருவென விழித்தனர்.
சுதாகர், அவசரமாக லுங்கியைச் சரிசெய்து கொண்டு எழுந்தான்.
“மணி என்ன?”
“ஆறரை.”
“இன்னைக்கு இன்டர்வியூவுக்குப் போகணும். சீக்கிரம் எழுப்புன்னு ராத்திரியே சொல்லிட்டுத்தானே படுத்தேன்.”
“மறந்துட்டேன்” - முழுமதி மன்னிப்புக் கேட்டாள்.
“ஆமா. உனக்கென்ன? பொழுது விடிஞ்சதுமேவா இன்டர்வியூ நடத்தறாங்க” - கேட்ட தம்பியை முறைத்தான்.
“பொழுது விடிஞ்சதுமே திமிர் பேச்சு பேசாதே. நான் சில விஷயங்களை தயார் பண்ணனும்.”
“ஆமா! அப்படியே தயார் பண்ணிக்கிட்டு போய் எல்லாக் கேள்விக்கும் டாண் டாண்னு பதில் சொல்லி வேலையை வாங்கிட்டு வந்திடுவே பாரு...பெரிதாகச் சிரித்தான், குமார்.
“அடுத்தவங்களைக் கிண்டல் பண்ணுவதை விட்டுட்டு ஆகவேண்டியதைக் கவனி. கல்லூரியில் ஆறு, ஏழு பாடங்களை ‘பாஸ்’ ஆகாமல் வைச்சுக்கிட்டு பேச்சைப் பாரு” எரிச்சலாகத் திட்டிவிட்டு வெளியே சென்றான், சுதாகர்.
“என்ன கூழ் வைச்சிட்டியா?” என்றான் குமார்.
“வைச்சிருக்கேன். கொண்டுவரட்டா?”
“இப்ப வேண்டாம். பிறகு குடிக்கிறேன்” என எழுந்தான்.
முழுமதி வெளியே வந்தாள்.
கனிமொழிக்குப் பால் ஆற்றிக் கொடுத்துவிட்டு சீதாவின் அறைக்கு அனுப்பினாள். முகம் கழுவிக்கொண்டு துண்டால் துடைத்தபடியே வந்த சுதாகருக்குக் காபி கொடுத்தாள்.
“இதென்ன... காபியில் சர்க்கரையே இல்லை...” கத்தினான் சுதாகர்.
“சர்க்கரை பத்தலைன்னா ஏன்டா இப்படி கத்துறே? கொஞ்சம் இரு. போடுறேன்.”
“கத்துறேனா? இந்த ஒரு தம்ளர் காபியில்தான் இன்றைய உற்சாகமே அடங்கியிருக்கு, தெரிஞ்சுக்க. காலையில் எழுந்ததும் முதன்முதலா குடிக்கிற காபியினால் உண்டாகிற உற்சாகம், திருப்திதான் பொழுது சாயிறவரை சாதிக்க வைக்கும். இப்படி சப்புன்னு ஒரு காபியைக் குடிச்சா, காலையிலேயே எல்லா வேலையுமே பாழ்தான்” சலித்துக்கொண்டான்.
“அப்படின்னா இந்த ஒரு தம்ளர் காபியில்தான் உன் எதிர்காலமே அடங்கியிருக்கா?” -’க்ளுக்’கென சிரித்துவிட்டாள், முழுமதி.
“எதையும் ஒழுங்கா செய்யத் தெரியலை. சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு?” சுள்ளென அவன் எரிந்து விழ, ஏனோ துடித்துப் போனாள், முழுமதி.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
மலருக்குத் தென்றல் பகையானால்...

Read more from ஆர்.சுமதி

Related to மலருக்குத் தென்றல் பகையானால்...

Related ebooks

Reviews for மலருக்குத் தென்றல் பகையானால்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மலருக்குத் தென்றல் பகையானால்... - ஆர்.சுமதி

    1

    சூரியன் இந்த பூலோக நிலவை எழுப்பினான். ஆம்! முழுமதி எழுந்தாள். கலைந்துகிடந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். உட்கார்ந்த நிலையிலேயே கட்டில் பக்கமிருந்த ஜன்னல் வழியே பார்வையை ஓட்டினாள்.

    அருமையான நாவலின் அழகான தொடக்கம் போல், இனிமையான காலைப்பொழுது புலரத்தொடங்கியிருந்தது. அந்த ரம்மியமான அத்தியாயத்தை வேப்பமரத்திலிருந்த பறவைகள் வாய்விட்டு வாசித்தன. அதைக்கேட்டு தோட்டத்து ரோஜாக்கள் ரசித்தன. தலையசைத்துச் சிரித்தன. அப்போது பனிமுத்துகள் அவற்றின் இதழ்களிலிருந்து தெறித்தன.

    முழுமதி, தலையைத் திருப்பி தன் அருகில் படுத்திருந்த கனிமொழியைப் பார்த்தாள்.

    சின்னஞ்சிறு கைகளை ஒன்றுடன் ஒன்றுசேர்த்து எதையோ ஒளித்து வைத்துக்கொண்டிருப்பதைப் போல் கன்னத்திற்கு கீழே வைத்துக்கொண்டு கால்களை சுருக்கிக்கொண்டு படுத்திருந்தாள், கனிமொழி. அதிகாலை உறக்கம், தனி அழகை அள்ளிக் கொடுத்திருந்தது. முன்நெற்றியில் கலைந்து விழுந்த கேசத்தைப் பாசத்துடன் ஒதுக்கித் தள்ளி மென்மையாக நெற்றியில் முத்தமிட்டாள், முழுமதி.

    அம்மாவின் முத்தம் பாச அசைவை ஏற்படுத்தியது. ம்... ம்... எனச் சிணுங்கிக்கொண்டே புரண்டு படுத்தாள். முழுமதி, எழுந்து கட்டிலைவிட்டு நகர்ந்தாள்.

    இரவு விளக்கை அணைத்தாள். இரவு வெகுநேரம் கழித்துப் படுத்ததால் கண்களிரண்டும் எரிந்தன. முதல் நாளின் வேலைப் பளுவினால் மூட்டுக்கு மூட்டு வலி. இன்னும் சிறிது ஓய்வு கேட்டது.

    ஓய்வு- அவளுடைய வாழ்க்கையில் அதிசய வார்த்தை. இயந்திரமாய் உழைப்பது அவளுக்கு விதிக்கப்பட்ட நியதி. கன்னிப் பெண் என்ற தகுதியை இயற்கை, என்றைக்கு அவளுக்குத் தந்ததோ அன்றைக்கே சிறகுகள் ஒடிக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுவிட்டாள். திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டாள். இன்னும் சிறைவாசம்தான். கொத்தடிமை வாழ்க்கைதான்.

    அதுவும் எங்கே? தாய்வீட்டிலேயே! அறையைவிட்டு வெளியே வந்தவள், கூடத்தைத் தாண்டி வந்தாள்.

    சீதாவின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சீதா, ஜன்னலோரம் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். அவள் இப்படித்தான். சதா சர்வ காலமும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பாள். நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு.

    இவளுக்கு மட்டும் என்ன? எத்தனை கனவுகள்? எவ்வளவு லட்சியங்கள்? எத்தகைய ஆசைகள்?

    எல்லாம் காற்றாகி கரைந்துபோயின. ‘எல்லோருமா லட்சியங்களை எட்டிப் பிடிக்கிறார்கள்? வாய்ப்புகளும், வசதிகளும் எல்லோருக்குமா கிடைக்கின்றன? ம்...’

    பெருமூச்செறிந்தாள்.

    சீதாவைப் பார்க்கும்போதெல்லாம் இனம்புரியாத ஒரு ஏக்கம், பொறாமை அவளுக்குள் துளிர்விடுவது உண்மைதான். தான் சாதிக்க நினைத்ததையெல்லாம் கண்ணெதிரே சாதித்து நிற்கிறாள். வானத்திற்கு எல்லையே இல்லை என்பதைப் போல் படிப்பிற்கு எல்லையே இல்லை என்று படித்துக்கொண்டே இருக்கிறாள்.

    அவள் தைரியசாலி என்பதால் நினைத்ததெல்லாம் சாத்தியமாயினவா? நான் கோழையாக இருந்துவிட்டேன். கோழைத்தனம்தான் என்னை ஏழையாக்கிவிட்டது.

    ‘ஒரே வயிற்றில் பிறந்த இருவரில் ஒருத்திக்கு மட்டும் எப்படி தைரியம் வந்தது? என்னுடைய கோழைத்தனம், எனக்கு ஏற்பட்ட அடக்குமுறை இதெல்லாம்தான் அவளுக்குத் தைரியத்தைக் கொடுத்துவிட்டது என்பதுதான் உண்மை!’ -நினைத்தவள், வாசல் கதவைத் திறந்தாள்.

    தோட்டம், பளிச்செனச் சிரித்தது. வாசல் பக்கத்தில் வைத்திருந்த வாழைகள், குலைதள்ளி, கல்யாண வீட்டு முகப்பைப் போலிருந்தன.

    தோட்டத்துக் குழாயில் நீர் பிடித்து வாசல் தெளித்தாள். குனிந்து பெருக்க முடியவில்லை. இடுப்பைச் சுற்றி வலி. பெயருக்கு நாலு கோடுகள் இழுத்து கோலமாக்கிவிட்டு உள்ளே வந்தாள்.

    அடுக்களைக்குள் நுழைந்து, பாத்திரங்களைப் பின்பக்கம் பொறுக்கிப் போட்டதும் அனிச்சையாக அவளையும் மீறிச் சுறுசுறுப்பு வந்துவிட்டது. பரபரவென பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவி முடித்துவிட்டு நிமிர்ந்தபோது முதுகுத்தண்டில் சுரீரென மீண்டும் வலி தாக்கியது.

    சமையலறைக்கு வந்து காபி தயாரித்தபோது, கனிமொழி எழுந்து கண்களைக் கசக்கியபடியே சிணுங்கிக்கொண்டு வந்து நின்றாள்.

    அம்மா...

    எழுந்துட்டியா? போய் முகம் கழுவி, பல் விளக்கிட்டு, புத்தகத்தைக் கையில் எடு.

    ம்... சிணுங்கிக்கொண்டே தூரிகையில் பற்பசையைப் பிதுக்கிக்கொண்டு அவள் நகர்ந்தாள்.

    கனிமொழி, இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். மிகவும் சுட்டி. முழுமதியைப் போலவே அவளுக்குள்ளும் இந்த வயதிலேயே நிறைய கவலைகள்.

    காபியை எடுத்துக்கொண்டு முழுமதி முதலில் சீதாவின் அறைக்குள் நுழைந்தாள்.

    சீதா, இப்பொழுது எழுதுவதை நிறுத்திவிட்டு தடிமனான - புத்தகம் ஒன்றை எடுத்து படித்துக்கொண்டிருந்தாள்.

    சீதா...

    என்னக்கா?

    காபி... அவளுடைய மேசை மீது வைத்தாள்.

    நன்றிக்கா காபியை வாங்கி மென்மையாக உதடுபதித்து உறிஞ்சிய சீதாவைக் கண்கொட்டாமல் பார்த்தாள், முழுமதி.

    சீதாவின் அழகு, முழுமதியை ஒரு கணம் விழி அகலாமல் பார்க்க வைத்தது. எந்தவித அலங்காரமும் இல்லாத காலைப்பொழுதில் கலைந்த கேசமும் கழுவிய முகமும், வர்ணம் தீட்டாமல் ஆனால், வரையறுத்து வரைந்த ஓவியம் போல் அவளைக் காட்டின.

    அவள் முன்னே விரித்து வைக்கப்பட்டிருந்த ஆங்கிலப் புத்தகத்தை வெறுமனே பார்க்கும்போதே பிரமிப்பாக இருந்தது. அவளுடைய முதுகிற்குப் பின்னேயிருந்த அலமாரியில் சாய்த்து வைக்கப்பட்ட எண்ணற்ற புத்தகங்கள், அதிலிருக்கும் அத்தனையும் இவளுடைய மூளையில் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    ஆங்கிலப் புத்தகங்களைத் தவிர நிறைய தமிழ்ப் புத்தகங்களும் அதில் இருந்தன. இந்த அறைக்குள் நுழையும்போதெல்லாம் பத்து நிமிடமாவது இங்கே அமர்ந்து ஏதாவது ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழும். ஆனால், அதைச் செயல்படுத்தத்தான் நேரமில்லை.

    இப்பொழுதும் கண்கள், அந்தப் புத்தகங்களைத்தான் மேய்ந்துகொண்டிருந்தன. புத்தகங்களின் தலைப்பை வாசித்தன. வெறும் தலைப்பை மட்டும் படித்து என்ன பயன்?

    அரசு உயர்நிலைப் பள்ளியில் சீதா, ஆங்கில ஆசிரியை. முதுகலைப் பட்டம் பெற்றவள். தற்போது இளம் முனைவர் பட்டத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கிறாள்.

    சீதா அதிருஷ்டக்காரி. படிப்பு, அழகு, வேலை... என்ன இல்லை இவளிடம்? -பெருமூச்செறிந்தாள்.

    காபியைப் பாதி காலி செய்துவிட்டிருந்த நிலையில் சீதா அழைத்தாள். அக்கா...

    சிந்தனை கலைந்து என்ன சீதா? என்றாள் முழுமதி.

    கனிமொழி எழுந்துட்டாளா?

    ம்... எழுந்துட்டா.

    பாலைக் கொடுத்து இங்கே அனுப்பு. ஏதோ பரிட்சைன்னு சொன்னாள். எல்லாம் படிச்சிட்டாளான்னு பார்க்கிறேன்.

    ம்...

    சுதாகர் எழுந்திட்டானா?

    இல்லை.

    அவனுக்கு இன்னைக்கு ஒரு இன்டர்வியூ இருக்குன்னான். எழுப்பு.

    அட ஆமாம். ராத்திரி படுக்கைக்குப் போகும்போது சொல்லிவிட்டுத்தான் போனான். நான்தான் மறந்துட்டேன்

    தன் தலையில் தட்டிக்கொண்டாள்.

    நீ என்ன செய்வே? வீட்டு வேலையில் எல்லாத்தையும் மறந்திடுறே? இந்தா தம்ளர்.

    தங்கை நீட்டிய தம்ளரை வாங்கிக்கொண்டு தம்பி சுதாகரை எழுப்ப அவனுடைய அறைக்கு ஓடும்போதே மனம்,

    Enjoying the preview?
    Page 1 of 1