Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Viluntha Saththam
Poo Viluntha Saththam
Poo Viluntha Saththam
Ebook175 pages2 hours

Poo Viluntha Saththam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465674
Poo Viluntha Saththam

Read more from V.Usha

Related to Poo Viluntha Saththam

Related ebooks

Reviews for Poo Viluntha Saththam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Viluntha Saththam - V.Usha

    24

    1

    பெண்ணுக்கென்றே வடிவமைக்கப்பட்ட அந்த இரண்டு சக்கர வாகனத்தை ஒவ்வொரு தடவை ஓட்டும் பொழுதும் நிவேதா பெருமிதமாக உணர்வாள்.

    இலகுவான ஸ்டார்ட். மென்மையான ஹாண்டில்பார். சீரான எடை. திருப்புவதிலும் வளைப்பதிலும் உடனுக்குடன் உதவுகிற சக்திவாய்ந்த என்ஜின். உண்மையிலேயே அற்புதத் தயாரிப்பு.

    இப்போதும் அவள் அதே இதமான உணர்வுடன் வண்டியைக் கிளப்பி சீரான வேகத்தில் பள்ளியை விட்டு வெளியில் வந்த போது எதிர்ப்பட்ட சீருடைச் சிறுமிகள் குட் ஈவினிங் டீச்சர், வெரி ப்யூட்டிஃபுல் டீச்சர் என்று பெருமை பொங்க சிரித்தபடி கைகாட்டினார்கள்.

    மை டியர் கேர்ள்ஸ், குட் ஈவினிங்... என்று அவளும் சிரித்துக் கொண்டே கையசைத்து விட்டு, வண்டியை நளினமாகத் திருப்பியபடி மெயின் வீதிக்கு வந்தாள்.

    வழக்கம்போல வாகனங்கள் தெருவை அடைத்துக் கொண்டிருந்தன. ஏகப்பட்ட இரைச்சல்கள். ஹார்ன் ஒலிகள். கரும்புகையை தானமாக விநியோகித்துக் கொண்டு விரையும் பெரிய லாரி ஒன்று. குழந்தைகளும் டிபன் கூடைகளும் ஒன்றோடு ஒன்று கலந்துகட்டி உட்கார்ந்திருக்க சர்க்கஸ்காரரைப் போல இழுத்துச் செல்லும் ரிக்ஷாக்காரர். பாதிக்கு மேல் ‘நோ ரைட் டர்ன்!’ மீதி பாதிக்கு ‘டேக் டைவர்ஷன்!’ என்ன வினோத கட்டமைப்பு என்று அவள் நினைத்துக் கொண்டாள். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான் பாரதி. உழவை விட்டு விட்டோம். தொழிலை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முழு மூச்சாக வாகனத் தயாரிப்பில் இறங்கி விட்டோம். உள்நாட்டு, வெளிநாட்டு வாகனங்களை தெருவில் இறக்கி விட்டு, அவை வெளிப்படுத்தும் கரியமில வாயுவைக் கண்டு அஞ்சி மாசுக்கட்டுப்பாடு என்று ஆரம்பித்து கண்காணித்து, லைசென்ஸ் உரிமம் ஆர்.டி.ஓ. என்று விழிபிதுங்கி, நாமே விரித்த வலையில் நாமே சிக்கிக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.

    வீடு வந்து சேர்ந்த போது, நல்லவேளையாக விளக்கெரிந்து கொண்டிருந்தது. தாத்தா வீட்டில் இருந்தார். இந்த எழுபத்தெட்டு வயதில் சாயங்காலமானால் வாக்கிங் கிளம்பி விடுகிறார். சீறிப்பாயும் வாகனங்களுக்கு நடுவில் இவர் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு நல்லபடியாக வீடு வந்து சேர வேண்டுமே என்று ஒவ்வொரு மாலையிலும் இவளுக்கு கவலைதான்.

    ஆசையாக வைத்திருக்கிறாரே ஒரு தோட்டம், அதை பார்த்துக் கொண்டிருந்தால் போதாதா, அதை விட பிரமாத உடற்பயிற்சி என்ன இருக்கிறது என்று எவ்வளவு தடவைகள் அவள் கேட்டிருக்கிறாள்? தாத்தா நல்லவர்தான். நல்லவர்களுக்கேயுரிய பிடிவாத குணம் அவருக்கும் உண்டு. நடந்தால்தான் நிம்மதி.

    வண்டியை அதன் இடத்தில் நிறுத்தி, பூட்டி விட்டு உள்ளே போனாள்.

    பசி வயிற்றை வேகமாக ஆக்கிரமித்தது.

    பள்ளிக் கூடத்தில் இன்று வேலை அதிகம்தான்.

    நூலக பொறுப்பாளர் ஜானகி விடுப்பில் போயிருந்ததால், இவள் கவனிப்பில் புதிய புத்தகங்களை வாங்கி அடுக்க வேண்டியிருந்தது. முதுகும் கழுத்தும் வலித்துக் கொண்டிருந்தன. ஏகாம்பரத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவள் நிம்மதியாக நாற்காலியில் உட்கார்ந்து கண்காணித்திருக்கலாம் தான். ஆனால் எதையும் ஏனோதானோவென்று செய்யும் ரகமல்லவே அவள்? செய்வன திருந்தச் செய்கிறவள். அதுதான் முதுகுவலிக்குக் காரணம்.

    பட், நோ ரிக்ரெட்ஸ்! கேவலம், உடல் உபாதைக்காக கொள்கையை விட்டுத்தர முடியாது.

    வந்துட்டியாம்மா...? நானும் இப்பத்தான் வந்தேன் - வாக்கிங் முடிஞ்சு... என்றபடி தாத்தா கொல்லைப் பக்கத்திலிருந்து உள்ளே வந்தார்.

    சரியான ட்ராஃபிக் தாத்தா... ரொம்ப கவனமா ஓட்ட வேண்டியிருக்கு... - என்றபடி அவள் குளியலறைக்குள் விரைந்தாள்.

    சுத்தம் செய்து கொண்டு வந்த போது பசி ஒரு அரக்கனைப் போல அவளை ஆக்கிரமித்திருந்தது.

    டேபிள் மேலிருந்த பிஸ்கட் பொட்டலம் கண்ணில் பட, அவள் அதை வேகமாக எடுத்தாள். பிரித்தாள்.

    தாத்தா விரைந்து வந்து அவள் கையிலிருந்த பொட்டலத்தைப் பிடுங்காத குறையாக வாங்கி தள்ளி வைத்து விட்டு அதே வேகத்தில், தட்டில் நறுக்கி வைத்திருந்த கொய்யாப் பழங்களை நீட்டினார்.

    பிஸ்கட் வேணாம்மா நிவேதா... பழங்களை சாப்பிடு... - பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

    என்ன தாத்தா நீங்க? - என்று அலுத்துக் கொண்டாள் பேத்தி. ரெண்டு பிஸ்கட் சாப்பிட்டு ஒரு கப் டீ குடிச்சா கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு பாத்தா இப்படி சப்புனு பழத்தைக் கொண்டு வந்து வெக்கறீங்க?

    அம்மாடி... இந்த பிஸ்கட் பத்தி சொல்றேன் கேளு, மொதல்ல என்ன செய்யறான், சுத்தம் செய்ய மைதா மாவை மொதல்ல ப்ளீச் பண்றான். சாஃப்ட்டன் பண்றதுக்கு, கலரிங் பண்றதுக்கு, என்ரிச் செய்யறதுக்குன்னு சின்தடிக் கெமிக்கல்ஸ் சேக்கறான். அவ்வளவும் உடம்புக்கு கெடுதல் தெரியுமா? இந்த பழம் ஆனா அருமையானது. இயற்கை உரத்தைப் போட்டு, பஞ்ச பூதங்களால தயார் ஆனது. அமிர்தம் மாதிரி... சாப்பிடு... என்று சிறுமிக்கு விளக்கம் சொல்வது போல பேசிக் கொண்டே போன தாத்தாவை பெருமூச்சுடன் பார்த்தபடி அவள் புன்னகைத்தாள்.

    இதுதான் தாத்தா. மனமார நம்புவதைத்தான் அவர் பேசுகிறார். நடைமுறைக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ... அவர் சொல்வது உண்மை. வியாபாரிகள் யாருக்கு மக்கள் நலனில் அக்கறை இருக்கிறது?

    என்னம்மா நிவேதா அப்படி பாக்கறே?

    கொய்யாப்பழம் நிஜமாவே சுவையா இருக்கு தாத்தா. உலகம் வினோதமானதுதான் இல்லே? இதை பயிர் பண்ற விவசாயியை விட, பிஸ்கட் தயாரிக்கிற வியாபாரி நூறு மடங்கு சம்பாதிக்கிறான். யார் தப்பு தாத்தா இது? மக்களோட அறியாமை அவன் கல்லாப் பெட்டியை நிரப்புதா? அப்படின்னா மக்களோட அறியாமைக்கு யார் தாத்தா பொறுப்பு?

    ஒரு வரில பதில் சொல்ல முடியாது கண்ணு. எல்லார் பங்கும் இதுல இருக்கு. இங்கிலீஷ்காரன் காலத்துல இருந்து உள்ளாட்சி தேர்தல் காலம் வரை... சரிம்மா, ராத்திரிக்கு தோசை செஞ்சுக்கலாம். கொஞ்சம் நீ ரெஸ்ட் எடு. என்றபடி தாத்தா எழ, அவள் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டாள்.

    அதுதான் ஓய்வு அவளுக்கு.

    2

    அலாரம் தன் கடமையைச் செய்தது.

    ரமணன் விழித்துக் கொண்டான்.

    அலாரத்தை அமைதி பெறச் செய்துவிட்டு எழுந்தான்.

    பக்கத்து ஜன்னல் ஒரு புத்தம் புது வெயில் கிரணத்தை அறைக்குள் அனுப்பியிருந்தது. நீண்ட நீண்ட மஞ்சள் கோடுகள் தரையில் புதுவித கோலத்தை வரைந்திருந்தன. அந்த மாடி ஜன்னலின் கம்பி வரைக்கும் வந்து விட்டு கீழ்வீட்டு மல்லிகைக்கொடி அறையின் உள்ளே வருவதற்கான நொடிக்காக ஆர்வத்துடன் காத்திருந்தது.

    எழுந்து குளியலறைக்குப் போனான்.

    பல் துலக்கி முகம் கழுவி உள்ளே வர, காலை தினசரி கதவருகில் வந்து விழுந்தது.

    எடுத்துக் கொண்டான்.

    குடத்திலிருந்து ஒரு குவளை நீர் மொண்டு எடுத்துக் கொண்டு பேப்பருடன் உட்கார்ந்து வாசித்து முடித்தான்.

    ‘பிரபல ரவுடி சுட்டுக் கொலை’

    ‘பள்ளி விடுதியில்

    Enjoying the preview?
    Page 1 of 1