Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalveri Kolluthadi
Kalveri Kolluthadi
Kalveri Kolluthadi
Ebook243 pages2 hours

Kalveri Kolluthadi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466428
Kalveri Kolluthadi

Read more from Indhumathi

Related to Kalveri Kolluthadi

Related ebooks

Related categories

Reviews for Kalveri Kolluthadi

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalveri Kolluthadi - Indhumathi

    24

    1

    மிக மிகச் சோம்பேறித்தனமான ஒரு மழை நாள். ஞாயிற்றுக் கிழமையின் காலை நேரம், வெளி வராந்தாவில் கூடை நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளைப் புரட்டின்போது, அந்த விளம்பரம் கண்ணில் பட்டது. மேட்ரிமோனியல் பகுதியின் நடுவில் பெரிதாய்க் கட்டம் கட்டிக் கொட்டை எழுத்துக்களில் சட்டென்று கண்களில் படும்படி வந்திருந்தது.

    வித்தியாசமான அந்த விளம்பரத்தின் வரிகளுக்கிடையே ஒரு கதை தெரிந்தது. ஒரு நாவலுக்கான விஷயமிருப்பது தெரிய மீண்டும் விளம்பரத்தைப் படித்தேன்.

    விதியின் கொடுமையால் உடன்பிறவாச் சகோதரனாகப் பழகியவனுக்கு மாலையிட வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிப் பின் விவாகரத்துப் பெற்ற அழகும், புத்திசாலித்தனமும் நிறைந்த 23 வயதுக் கன்னிப் பெண்ணிற்கு மாப்பிள்ளை தேவை. புரிந்து கொள்கிற தன்மையும், நிஜத்தை நம்பக்கூடிய விசாலமான இதயமும், கல்யாணத்தில் ஆர்வமும் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் நேரில் வந்து சந்திக்க வேண்டிய நபர் -

    ஆர்.சந்திரன்,

    28, 19ஆவது குறுக்குத் தெரு,

    ஜெயமகால் எக்ஸ்டென்ஷன்,

    பெங்களூர்.

    நிறையச் செலவு செய்து கொடுத்திருந்த விளம்பரம். பக்கத்தின் மத்தியில் பெட்டி கட்டிக் கொட்டை எழுத்துக்களில் வார்த்தைகளைத் தேடித் தேடிப் பொறுக்கிப் போட்டுக் கொடுக்கப் பட்டிருந்ததிலிருந்து - விளம்பரப்படுத்திய மனதின் ஆதங்கமும், பொறுப்பும், அக்கறையும், இவை எல்லாவற்றையும் விட வார்த்தைக்கு வார்த்தை தொக்கி நின்ற சோகமும் வெளிப்பட - எனக்குள்ளிருந்த இலக்கியவாதியின் ஆர்வம் அதிகமாயிற்று. நிறையக் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாய் வரிசையாய் எழுந்தன.

    இப்படி விளம்பரப்படுத்தியது யாராக இருக்கும்...? ஒருவேளை அந்தச் சந்திரனாகவே இருக்கலாமோ...? சந்திரன் என்பது யார்? பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு என்ன உறவு? விளம்பரப்படுத்திய வரிகளின் தொனியில் இளமை தெரிந்தது. ஆகவே அந்தச் சந்திரனும் இளைஞனாகத்தான் இருக்க வேண்டும். இளைஞன் என்றால் என்ன வயது இருக்கும்? முப்பதிற்குள்? அல்லது முப்பது...? இல்லாவிட்டால் முப்பத்திரண்டு...? யார் அவன்? அப்பெண்ணிற்கும் அவனுக்கும், என்ன சம்பந்தம்?

    அப்பா...? ம்ஹும். அப்பா மாதிரித் தெரியவில்லை. விளம்பரப் படுத்தியவன் அவனாக இருக்கிற பட்சத்தில் நிச்சயம் அப்பா இல்லை. அந்த எழுத்தில் முதுமை தெரியவில்லை. சோகமும், வருத்தமும் நிழலாடிய அளவிற்குச் சலிப்பும், குற்றம் சாட்டுகிற கூர்மையும் இல்லை. பொறுப்பைத் தட்டிக்கழிக்கிற - அல்லது தன்னை விட்டு உதறி விடுகிற ஆர்வமில்லை. ஆகவே நிச்சயம் பெண்ணிற்கு அப்பாவாக இருக்க முடியாது. பின் யார்...? அண்ணன், அல்லது தம்பி... இல்லாவிட்டால்... கூடப் பிறந்த சகோதரனாகப் பழகியவனுக்கு மாலையிட வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளான என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த நபர்...? சட்டென்று அவனாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று. அப்படிப்பட்ட துர்பாக்கிய நிலைமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

    மற்றவர்களின் ரகசியங்களைத் தெரிந்து கொள்கிற சாதாரணமான பெண் மனத்தின் ஆசையில்லை இது. இதயங்களைப் புரிந்து கொள்கிற சிநேகமான எண்ணத்தின் தவிப்பு. முரண்பாடுகளோடு கைகுலுக்க நினைக்கிற நினைப்பு. காயம்பட்ட மனங்களை வருடிக் கொடுத்து இதப்படுத்துகிற ஆர்வம். கடைசியாய்... கடைசியாய்... அவர்களின் அனுமதி பெற்று அந்த முரண்பாட்டை எழுத்தில் வடித்து எடுத்துச் சொல்ல நினைக்கிற சுயநலம்... இவை அத்தனையும் ஒன்று சேர்ந்து தாக்கிப் பலமான பாதிப்பை ஏற்படுத்தியதன் விளைவு -

    உடனே போய் அந்தச் சந்திரனைப் பார்த்துப் பேச வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. எப்படிப் போவது? சென்னை விலாசமாக இருந்தால், அன்றே முடிந்தால் அப்பொழுதே கூடப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம். காரை எடுத்துக் கொண்டு போனால் நிதானமாய்ப் பேசி விட்டுத் திரும்பலாம். விவரமாய்க் கேட்டுக் கொண்டு வரலாம். வந்து அனுதாபப் படுவதோடும், ஆதங்கத்துடனும் நின்று விடாமல், என்னால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.

    ஆனால், உள்ளூர் விலாசமில்லை. பெங்களூர் விலாசம். ஜெயமகால் எக்ஸ்டென்ஷன் என்றால் கன்ட்டோன்மெண்ட்டில்தான் வீடு. எங்கள் குடும்பச் சிநேகிதரான ஜெயலக்ஷ்மி அம்மாளின் வீட்டிற்கு அருகில்தான் அந்தச் சந்திரனின் வீடும் இருக்க வேண்டும். சட்டென்று அந்த அம்மாள் அடிக்கடி தொலைபேசியிலும் நேரில் வரும் போதும் பெங்களூர் வந்து தன்னோடு தங்கச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. போனால் அந்த அம்மாவோடு தங்கின நிறைவும் இருக்கும். அப்படியே இந்தச் சந்திரனைப் பார்த்துப் பேசிவிட்டும் வரலாம்.

    எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், கணவரின் அனுமதி கிடைக்குமா என்கிற சந்தேகம் வந்தது. எப்படியாவது அனுமதி பெற்று விடுகிற முடிவில் விளம்பரத்தைக் கத்தரித்துத் தனியாய் எடுத்துக் கொண்டு உள்ளே வந்து கணவரிடம் காட்டி அனுமதி கேட்டேன்.

    அதைப் படித்துப் பார்த்த அவர் சிறிது யோசித்து விட்டுக் கேட்டார்:

    இப்பவே போகணுமா...? இது அவ்வளவு முக்கியமா..?

    இப்ப போகவேணாம்னால் உங்ககிட்டே கேட்டே இருக்க மாட்டேன், இல்லையா...?

    அப்படின்னு நினைச்சால் போயிட்டு வா...

    ஓ... தாங்க்யு... தாங்க்யுட் ஸோ மச்...

    இட்ஸ் ஆல்ரைட். உன் வேகம் எனக்குப் புரியறது. இப்ப உனக்கு ஒரு கதை வேணும். அது இதுல கிடைச்சிருக்கு, இல்லையா...?

    கதையா எழுதறது எனக்கு இரண்டாம் பட்சம். முதல் பட்சம் மனுஷ அபிமானமும், சிநேகமும்தான். கஷ்டப்படற மனசைப் பார்க்கிற போதெல்லாம் அந்த கஷ்டத்தைப் பகிர்ந்துக்கணும்னு தோண்றது. ஆதரவா, ஆறுதலா நாலு வார்த்தை பேசணும்னு படறது. காயத்தைப் பஞ்சால் ஒத்தி எடுக்கிற மாதிரி வார்த்தைகளால் வருடிக் கொடுக்கணும்னு நினைக்கிறது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்னு வள்ளலார் சொன்ன மாதிரித்தான்.

    அதுசரி, ஆனால் இதெல்லாம் நிஜம்னு நீ எப்படி நம்பறே...?

    நான் நம்பறேன். இதெல்லாம் நிஜம்னு என்னால் சொல்ல முடியும். அந்த எழுத்துல வார்த்தைக்கு வார்த்தை உண்மை தெரியறது. வருத்தம், சோகம், வாழ்க்கைல பட்ட அடி எல்லாமே தொனிக்கிறது.

    அப்படின்னால் கிளம்பிப் போயிட்டு வா...

    நான் தனியாகத்தான் போனேன். பெங்களூர் கன்ட்டோன்மெண்ட் ஸ்டேஷனுக்கு ஜெயலக்ஷ்மி அம்மாள் கார் அனுப்பியிருந்தார். அன்று சாயந்திரமே கத்தரித்த விலாசத்தை எடுத்துக் கொண்டு சந்திரனைப் பார்க்கக் கிளம்பினேன். விலாசம் கண்டுபிடித்து, டிரைவரை வாசலில் இருக்கச் சொல்லிப் படியேறினேன். சின்னதாய், கச்சிதமாய், இரு பக்கங்களிலும் மஞ்சளும், சிவப்புமாய் ரோஜாப் பூக்கள் பூத்துக் குலுங்கும் அந்த அழகான வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன்.

    சில விநாடிகளுக்கெல்லாம் வந்து கதவைத் திறந்த சந்திரனைக் கண்டதும், அதிர்ச்சி பலமாய்த் தாக்கிற்று. கண் லேசாய் அகன்று குரல் தயங்கி வெளிப்பட்டது.

    சந்திரன். நீங்களா...!

    அந்த அதிர்ச்சி சந்திரனுக்கும் இருந்தது. முகத்தில் மண்டிக் கிடந்த அத்தனை சோகத்திற்கிடையிலும் அந்த அதிர்ச்சி பெரிதாய்ப் பளிச்சிட்டது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு புன்னகைக்க முயன்று தோற்றுப் போய்...

    வாங்க... நீங்க எங்க பெங்களூர்ப் பக்கம்... அதுவும் என் வீட்டு விலாசம் எப்படிக் கிடைச்சது...? என்று வரவேற்க -

    இப்படித்தான்... என்று கையிலிருந்த விளம்பரத்தைக் காட்டியதும், சந்திரனின் முகம் ஒரு விநாடி சிணுங்கிற்று.

    ஓ... இதைப் பார்த்துட்டுத்தான் வந்தீங்களா...? அப்படின்னால் என்னை எதிர்பார்க்கலை?

    நிச்சயமா இல்லை.

    உட்காருங்க. என்ன சாப்பிடறீங்க...? காப்பியா, டீயா...?

    நீங்களே போய்த் தயாரிக்கணுமா...?

    இல்லை, சொல்லிட்டு வந்துடறேன்...

    அப்ப காப்பி

    சந்திரன் எழுந்து உள்ளே போனதும். எனக்குள் இருந்த அதிர்ச்சி மாறிச் சந்தேகங்களும் குழப்பங்களும் நிறைந்தன. எப்படி இருந்த சந்திரன் எப்படி மாறிப் போய் விட்டார் என்கிற வருத்தம் ஏற்பட்டது. சென்னையில் முதல் முதலாகச் சந்திரனைச் சந்தித்தது ஞாபகத்திற்கு வந்தது. பிரபலப் பத்திரிகை ஒன்றிற்குத் தொடர்கதை எழுத ஆரம்பித்தபோது, அதன் ஆசிரியர் கதைக்கு யாரைப் படம் போடச் சொல்வது என்று அபிப்பிராயம் கேட்டதும், உடனே சந்திரனின் பெயரைத்தான் சொன்னேன்.

    அப்போதுதான் சந்திரனின் பெயர் பத்திரிகை உலகினுள் மெதுவாக நுழைய ஆரம்பித்திருந்தது. நாலைந்து சிறுகதைகளுக்குப் போட்டிருந்த படங்கள் வாசகர்களின் கவனத்தை மட்டுமின்றி, என்னைப் போன்ற எழுத்தாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. வரைய எடுத்துக் கொண்ட கோணம், முகபாவங்கள், வெறும் கோடுகளில் காட்டியிருந்த லாவகம் எல்லாமே - வித்தியாசமாய்த் தெரிய -

    சந்திரன் கவனிக்கப்படக் கூடிய ஓவியர்களின் வரிசையில் சேரத் தொடங்கி இருந்த நேரம், இன்னமும் தொடர்கதைகளுக்குப் படம் போடுகிற நிலையில் நுழையாதிருந்த நேரம், முதல் முதலாக என்னுடைய நாவலுக்குப் படம் போட ஆரம்பித்துப் பின்னர் சந்திரனின் படமற்ற ஒரு தொடராவது இல்லாத பத்திரிகையே கிடையாது என்கிற உச்சியை எட்டிப் பிடித்தது இன்னொரு நேரம். ‘காட்டில் காய்ந்த நிலா’ என்கிற என் தொடர் விறுவிறுப்பாக அத்தனை கல்லூரி மாணவ மாணவிகளாலும் படிக்கப்பட்டு பிரமாதமான வரவேற்புக்கு உட்பட்டதற்குக் காரணமே சந்திரனின் படங்கள்தான்.

    ஒரு தரமோ, இரண்டு தரமோ சந்திரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். கதையின் எந்தக் கட்டத்திற்குப் படம் வரைவது என்பதை விவாதித்திருக்கிறார். அதன்பின் ஒரு கல்லூரி விழாவில் சந்திரனும், நானும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டது நினைவிருக்கிறது.

    அப்போதெல்லாம் கூடச் சந்திரன் கலகலப்பாகப் பேசியதில்லை. தேவையற்றுப் புன்சிரிப்பாகக் கூடச் சிரித்ததில்லை. நிறுத்தி நிறுத்துப் பேசுகிற பேச்சும், தயங்கித் தயங்கிச் சிரித்த சிரிப்பும்... சகஜமாகப் பழகக் கூடிய மனிதரில்லை என்கிற அபிப்பிராயத்தை உருவாக்கிற்றே தவிர, முகத்தில் இப்படிப்பட்ட சோகமில்லை. விரக்தி டன்டன்னாகக் குவிந்து கிடந்ததில்லை. தாடி மீசையுமாகக் காணப்பட்டதில்லை. என்ன ஆயிற்று இவருக்கு...? இத்தனை சின்ன வயதில் பெயரும், புகழும் போட்டி போட்டுக் கொண்டு தேடி வந்து தங்கிவிட்ட மாதிரிப் பிரச்சினைகளும் தேடிவந்து சொந்தம் கொண்டாடி நின்று விட்டனவோ...?

    யோசித்து முடிப்பதற்குள், சந்திரன் திரும்பி வந்தார். எதிர் சோபாவில் உட்கார்ந்து ஒரு விநாடி அமைதியாக இருந்தார். பேச்சை எவ்வாறு ஆரம்பிக்கலாம் என்று தயங்கின நான், பின்பு சடாரென்று தொடங்கி விட்டேன்.

    என்ன சந்திரன் இதெல்லாம்...? எதற்காக இப்படி ஒரு விளம்பரம் கொடுத்தீர்கள்...?

    ஒரு ஆழமான பெருமூச்சிற்குப் பின்பு கரகரத்த குரலில் வெளிப்பட்ட பதிலில் எல்லையற்ற விரக்தி தொனித்தது.

    அதுதான் விளம்பரத்திலேயே சொல்லியிருக்கேனே... விதியின் கொடுமையால் உடன் பிறவாத சகோதரனாகப் பழகியவனுக்கு மாலையிட வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானவள் என்று...

    அந்த உடன் பிறவாத சகோதரனாகப் பழகிய மனிதர் நீங்கள்தானே...?

    ‘ஆமாம்’ என்று தலையாட்டப்பட்டது.

    அப்படிப்பட்ட துர்பாக்கிய நிலைமைக்கு ஆளான அந்தப் பெண் யார் என்பதையும் நான் தெரிந்து கொள்ளலாமா...?

    சந்திரன் திரும்பி உள்பக்கம் பார்த்து, நந்தினி! என்று கூப்பிட்டார். ‘இதோ வந்துட்டேன்...’ என்று மென்மையாய், மிக மென்மையாய்க் குரல் கொடுத்தவாறு ஒரு தட்டில் காப்பி டம்ளர் டபராக்களை வைத்து எடுத்துக் கொண்டு வெளிப்பட்ட அந்தப் பெண்ணைப் பார்த்து அசந்து போனேன். ‘இப்படிக்கூட ஒரு அழகா!’ என்று தோன்றிற்று. ஆனால், கள்ளமற்ற அழகு, குழந்தைத்தனம் சிறிதுகூட மாறாத அழகு. பொய், வஞ்சகம் எதுவும் எட்டிப் பார்க்காத - பார்க்க முடியாத தெளிவான அழகு.

    இந்தப் பெண்ணிற்கா இப்படிப்பட்ட கஷ்டங்கள் நேர்ந்திருக்கின்றன? சற்று அழுத்தி வார்த்தைகளை உச்சரித்தால் கூட அழுது விடுவாள் போலிருக்கிற மென்மைக்கா...? எப்படித் தாங்கிக் கொண்டிருக்கிறாள்...? இவளுக்குப் போய் ஏன் இதெல்லாம் நேர் வேண்டும்...?

    காப்பியை உறிஞ்சிக் கொண்டே மெதுவாகக் கேட்டேன்:

    ஏன் சந்திரன்... என்ன நேர்ந்தது...? அண்ணன் தங்கையாகப் பழகினவங்களைக் கல்யாணம் செய்து கொள்கிற கொடுமைக்கு எது விரட்டிற்று...? இதற்கெல்லாம் யார் காரணம்...? அல்லது எது காரணம் சந்திரன்..?

    சொல்றேங்க... என்ற வார்த்தையில் உடைந்து போனார் சந்திரன். உதடுகள் அசங்கித் துடித்தன. வெள்ளை வெளேரென்ற முகம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ரத்தமாய்ச் சிவந்து போயிற்று. கண்ணாடிக்குள்ளிருந்து பார்க்கும் கண்களின் கம்பீரமும், கூர்மையும் மங்கிக் கலங்கிக் கிடக்க, குரல் கரகரவென்று வந்தது.

    ஆதியோட அந்தமா என்னைப் பற்றின அத்தனை விவரத்தையும் சொல்றேங்க... இத்தனை அக்கறையும் பரிவுமாக ஓடிவந்திருக்கிற உங்ககிட்ட எதையும் மறைக்காமல் சொல்லணும்னு தோண்றது. நெஞ்சுக்குள் குமுறிட்டிருக்கிற அத்தனையையும் கொட்டணும் போலிருக்கு. ஒரு நிமிஷமா சொல்லி முடிச்சுடற விஷயமில்லீங்க... உங்களுக்குக் கேட்கிற பொறுமையும், நேரமும் இருக்கும்னால் சொல்றேங்க...

    கேட்கணும்னுதானே அத்தனை மைல் தூரத்துலேருந்து எல்லா வேலையும் விட்டுட்டு ஓடி வந்திருக்கேன்.

    அப்போ சொல்றேங்க...

    2

    அற்புதமாய் வந்திருந்தது ஓவியம். நான்கு வர்ணங்களில் அழகாய்ப் பிரிந்திருந்தது. மலைத்தொடரடி காடு நிஜமாய்க் கண்ணெதிரில் விரிந்து கிடந்தது. நடுவில் நீரோடை ஒன்று ஓடிற்று. ஓடையின் கரையோரம் வெள்ளை மாருதி நிறுத்தப் பட்டிருந்தது. சற்று தள்ளி பெட்ஷீட் விரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது பிக்னிக் வந்ததன் அடையாளமாய்ச் சாப்பாடு நிறைந்த மூங்கில் கூடை, பிளாஸ்க், டேப்ரிகார்டர், பக்கத்தில் கழற்றி வெகு அலட்சியமாய், அல்லது அவசரமாய்ப் போடப்பட்ட சஃபாரி சூட், வெளிநாட்டு நைலான் புடவை, உள் பாவாடை, பிரா... அவற்றின் சொந்தக்கார இளைஞனும், யுவதியும் ஓடையினுள் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தனர். அந்த மாடர்ன் காதலன் அவளின் ‘டூ-பீஸ்’ நீச்சல் உடையின் ஜட்டி விளிம்பை விரலைக் கொக்கியாக்கி மாட்டி இழுக்க...

    அவள் பாதிவெட்கமும், சந்தோஷமும், கொஞ்சம் பொய்க் கோபமும் தெரிகிற முகபாவனையில் அவன் கையைத் தட்டி விடுகிறாள். அப்படித் தட்டுகிறபோது தெறிக்கிற ஷாம்பூ நுரையின் ஒரு துளிக்கு அடியில் வழக்கமான தன் கையெழுத்தான ‘சந்த்’ என்று போட்டு இரு புள்ளிகள் வைத்து முடித்திருந்தான் சந்திரன்.

    கதைக்கான படம் வரைய வேண்டிய இடமாய் இதைத்தான் குறித்து அனுப்பியிருந்தார்கள் அவசரமாய்க் கேட்டிருந்தார்கள்.

    கலர் ஃபாரம் ஓடணும் சார். இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள படம் வேணும்... என்று தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருந்தார் பத்திரிகையின் துணை ஆசிரியர்.

    அப்போதே சிறிது தயங்கினான் சந்திரன். அன்று மாலை அவனது ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடாகி இருந்தது. நண்பன் சம்பத் அவனது ஓவியங்களை எடுத்துக் கொண்டு போயிருக்கிறான். இவன் குறித்துக் கொடுத்த இடங்களில் மாட்டப்போகிறான். கிட்டத்தட்ட எழுபத்து மூன்று படங்கள்.

    எல்லாவற்றிற்குமே வித்தியாசமாய்த் தலைப்புகள் கொடுத்திருந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1