Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha Sila Vinaadigal
Antha Sila Vinaadigal
Antha Sila Vinaadigal
Ebook119 pages1 hour

Antha Sila Vinaadigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466275
Antha Sila Vinaadigal

Read more from Indhumathi

Related to Antha Sila Vinaadigal

Related ebooks

Reviews for Antha Sila Vinaadigal

Rating: 5 out of 5 stars
5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha Sila Vinaadigal - Indhumathi

    9

    1

    சமையலறை வாசலில் மீண்டும் நிழலாடிற்று. திரும்பிப் பார்த்தாள் சரண்யா. மனம் நிறைய எதிர்பார்ப்பும், ஆர்வமுமாக ஸ்ரீராம் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. இவளுக்குள் ஒரு சலிப்பும், வெறுப்பும் படர்ந்தது. ஆனாலும் அதை முகத்தில் காட்டாமல் கேட்டாள்.

    என்ன வேணும்...?

    எனக்கு என்ன வேணும்கிறது நிஜமாவே உனக்குத் தெரியலையா சரண்? அவன் குரல் கொஞ்சிற்று. கூடவே கெஞ்சலும் வெளிப்பட்டது. அவள் பேசாமல் நின்றிருக்க... அருகில் வந்து தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, முகத்தை நிமிர்த்தி கண்களுக்குள் பார்த்தான்.

    ம்... என்ன சரண், பதிலே இல்ல...?

    அதற்கும் அவளிடம் பதில் வராமல் போகவே. ‘கல்யாணமாகி ஆறு மாதங்களாகியும் வெட்கம் அவளைவிட்டு இன்னமும் அகலவில்லை!’ என்று நினைத்துக்கொண்டு அதை ரசித்தவனாகக் குனிந்து முன்நெற்றியில் முத்தமிட்டான்.

    எப்போ வருவ சரண்?

    எங்கே...?

    வேற எங்கே... ‘பெட்ரூம்’க்குத்தான்!

    சற்று தயங்கி... தணிந்த குரலில் பதில் வெளிப்பட்டது.

    இன்னும் கொஞ்சம் வேலை இருக்கே...!

    என்ன வேலை?

    நாலைந்து பாத்திரங்கள் இருக்கு. கழுவி கவிழ்த்து வச்சிட்டு, சமையல்கட்டைத் துடைச்சிட்டு வரணும்.

    அதைக் காலையில் பார்த்துக்கக் கூடாதா சரண்யா? நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே...! எனக்கு ஆபீஸ் கிடையாது. மெதுவாக எழுந்து செய்துக்கலாமே?

    இல்லே... இதோ பத்தே நிமிஷத்துல முடிச்சிட்டு, பாலைக் காய்ச்சி எடுத்துக்கிட்டு வர்றேன்.

    சரி! அதுவரைக்கும் நான் காத்துட்டு இருக்கணுமில்லே? அதற்காக ஒண்ணு கொடு...

    நான்தான் வர்றேன்னு சொல்றேனே...?

    இது ‘அட்வான்ஸ்’! அதை முதல்ல தர்றதுதானே வழக்கம்?

    அவன் விடவில்லை. மீண்டும் அவளது முகம் நிமிர்த்தப்பட்டது. உதடுகள் அழுத்தப்பட்டன. உடல்... அவனது உடலோடு சேர்ந்து இறுக்கப்பட்டது. அவள் அப்படியே பேசாமல் நின்றிருக்க... இன்னமும் தூண்டப்பட்டவனாகச் சொன்னான்.

    சீக்கிரம் வா சரண்... என்ன?

    சரி...

    எப்போ வருவே?

    நீங்க எத்தனை சீக்கிரம் இந்த இடத்தை விட்டுப் போறீங்களோ... அத்தனை சீக்கிரம் வேலை முடியும். உடனே வந்துடுவேன்.

    என்னை விரட்டுறதிலேயே குறியா இரு. செல்லமாகத்தான் அவன் சொல்லிவிட்டுப் போனான்.

    ஆனால், அவளுக்குள் அம்பு மாதிரி தைத்தது. வலியும், வேதனையும் ஏற்பட்டது. அவனது அணைப்பில் இருக்கிற ஒவ்வொரு விநாடியும்... விடுதலையை மனம் எதிர்பார்ப்பது - விலகத் தவிப்பது நிஜம்.

    ‘பிளீஸ்... என்னை விட்டுவிடுங்களேன்’ என்று கெஞ்ச நினைப்பதும், எப்போது முடியும்?’ என்று எதிர்பார்ப்பதும் நிஜம். ‘எனக்குத் தூக்கம் வருது... படுத்துக்கட்டுமா?’ என்ற கேள்விக்குப் பின் தள்ளிப் படுக்கிறபோது ஏற்படுகிற அமைதி... அதற்குப் பின்னால் குமுறிக் குமுறி வருகிற அழுகை, அழ முடியாத காரணத்தால் உள்ளுக்குள் அடக்க நினைக்கிற போராட்டம். சில நேரங்களில் அந்தப் போராட்டத்தில் தோற்றுப் போய் சப்தம் வராமல் கண்ணோரங்களில் கோடு கோடாய் பெருகித் தலைகாணியை நனைத்து... எல்லாமே நிஜங்கள்... அப்பட்டமான நிஜங்கள்! அவளால் விலக்க முடியாத... விலகிப் போக முடியாத நிஜங்கள்.

    இந்த ஆறு மாதங்களாக - காவேரிக் கரையில் கல்யாணம் முடிந்து, பெங்களூருக்கு வந்து குடும்பம் நடத்துகிற நூற்று எண்பத்து நாலு நாட்களும் அவள் வரை முகமூடி அணிந்து கொண்டவைதான். ‘மனைவி’ என்கிற வேடத்தை... அதுவும், ‘நீ ஸ்ரீராமன் மனைவி’ என்கிற வேடத்தை இவளுக்கு வலுக்கட்டாயமாகக் கொடுத்து அதற்கேற்ற ஒப்பனைகளை எல்லாம் சீராகச் செய்து, ரெயிலேற்றி அனுப்பிவிட்டார்கள்.

    ‘இதோ பாரு... இனிமே நீ பழைய சரண்யா இல்ல. புது சரண்யா. அதனால பழசையெல்லாம் மறந்துட்டு சமர்த்தா நடந்துக்கோ... என்ன?’ - அம்மா கெஞ்சலாகச் சொன்னாள்.

    ‘இனிமேலத்தான் நீ என் பொண்ணுங்கறதை நிரூபிக்கணும். இதே ரத்தம்தான் உன் உடம்புலேயும் ஓடுதுன்னு காட்டணும். தெரியுதா?’ - அதிகாரமாய் அப்பா

    அண்ணன் அவன் சுபாவப்படி அதட்டலும், கட்டளையுமாகச் சொன்னான்: ‘போயிட்டு வா! போய் ஒழுங்கா நடந்துக்கோ... பழைய விவகாரம் எதையாவது நினைச்சிக்கிட்டு அழுது அசட்டுத்தனமா ஏதாவது செய்தேன்னு புகார் வந்தது... உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன். வேற என்ன செய்வேங்கிறது உனக்கே தெரியும். நான் சொல்ல வேணாம். இதை மறக்காம ஞாபகம் வச்சிக்கோ. நம்ம அப்பா - தாத்தா பேரு, தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் இருந்து வர்ற குடும்பப் பேரு, இன்னார் குடும்பம் என்கிற கவுரவம் எல்லாத்தையும் ஒழுங்கா காப்பாத்து, புரிஞ்சுதா...?’

    கோபமாகக் கத்தாமல், கண்களை உருட்டாமல்... சொன்னதை அப்படியே செய்து காட்டுகிற அந்தக் குரலின் உறுதிக்கும், கண்டிப்புக்கும், கட்டளைக்கும் பயந்து, கீழ்ப்படிந்து தலையாட்டினதன் காரணமாகத்தானே...

    இப்போது ஒவ்வொரு நாளும் சாகாமல் செத்துக்கொண்டிருக்க நேரிடுகிறது. படுக்கையில் மரக்கட்டை மாதிரி எந்தவித உணர்ச்சியுமற்று கிடக்க நேரிடுகிறது. ஆர்வமும், ஆசையும் இளமைத் துடிப்பும், புதுக் கல்யாண வேகமுமாகக் கணவன் தன்னை நெருங்குகிற போதெல்லாம் சிரிக்கிற - அணைக்கிற பாவனையில், காதலில் இருக்கிற பாவனையில்...

    எல்லாமே வெறும் பாவனைகள் என்பது அவனுக்குத் தெரியாது. தேர்ச்சி பெற்ற நடிகை, திரைக் கதாநாயகனைக் கட்டியணைக்கிற மாதிரி... தப்பு... தப்பு... அப்படிக்கூடச் சொல்ல முடியாது. நடிகைக்காகவாது ‘நடிப்பு’ என்கிற உணர்வோடு கூடிய இணக்கம் இருக்கும். அதுகூட அற்று இன்னமும் போலியாக - பொய்யாக... ஏமாற்றுவது தெரியாத அளவுக்கு ஏமாற்றி...

    இது பாவம்... மகா பாவம்! இதற்கும், அவனுக்கும் சம்பந்தமில்லை. அவனுக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்திருக்கிறபட்சத்தில் தன்னைக் கல்யாணமே பண்ணிக்கொண்டிருக்க மாட்டான். இவன் மட்டுமில்லை... யாருமே பண்ணிக்கொண்டிருக்க மாட்டார்கள். இது அவனது தவறில்லை. இதற்கெல்லாம் அவன் காரணமில்லை. எய்தவர்கள் எங்கோ இருக்க... அம்பை நோவதில் பயனில்லை!

    ஆனால், அம்புதானே குத்துகிறது. வலியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. ரத்தத்துக்குப் பதிலாகக் கண்ணீராக இங்கே வடிய வைக்கிறது. அதுவும் வெளிப்படையாக அழத் திராணியற்ற ரகசியக் கண்ணீர். அவன் அலுவலகத்துக்குப் புறப்பட்டுப் போனதும்... நெஞ்சில் இருப்பதெல்லாம் அடித்துக் கொண்டு போகிற அளவுக்கு வெளிப்படுகிற கண்ணீர். வாய்விட்டுப் புலம்புகிற புலம்பல்... தெருக்கோடியில் கார் சத்தம் கேட்கிறபோது சட்டென்று யாரோ குழாயை மூடின மாதிரி நின்று போகிற அல்லது நிற்க வைத்துக்கொள்கிற சாமர்த்தியம்...

    சாமர்த்தியமா அது...? இயலாமை, கோழைத்தனம், முக்கால்வாசி இந்தியப் பெண்களிடம் இருக்கிற பயம். பாதுகாப்பு தேடல். அந்தப் பயமும், பாதுகாப்பு உணர்வும் ‘நான் இப்படித்தான்!’ என்று அழுத்தமாகச் சொல்லவிடாமல் வாயைப் பொத்தித் தடுத்துவிடுகிறது. அப்பா - அம்மாவை விட்டு அல்லது அண்ணன் - தம்பியை விட்டு, கல்யாணம் ஆனவளானால் கணவனைவிட்டு வெளியேற்றப்பட்டால் - வெளியில் அனுப்பப்பட்டுவிட்டால்... பின் யார் துணை? யார் பாதுகாப்பு? எந்த நிழல் கை கொடுக்கும்? எப்படி வாழ்வது? எங்கே போவது? - என்கிற கேள்விகளின் பயமுறுத்தல்களினாலேயே ஒடுங்கி, உள்ளடங்கிப் போய், தன் பிம்பத்தை மாற்றிக்கொண்டு மனைவி’ என்கிற புதிய வேஷத்தை மிகச் சீராக அணிந்து, சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாக இயங்கி... ஓ... இது எப்படிப்பட்ட, துர்பாக்கியமான - கோழைத்தனமான நிலைமை!

    அந்த நிலைமைக்குத் தானும் தள்ளப்பட்ட வேதனையில் எப்போதும் போல் அப்போதும்... அழுகை என்கிற இயலாமையில் தன்னைக் கரைத்துக் கொள்ளத் தவித்து கண்ணோரம் துளிர்த்ததை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றபோது...

    Enjoying the preview?
    Page 1 of 1