Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oonjaladum Ullangal
Oonjaladum Ullangal
Oonjaladum Ullangal
Ebook311 pages5 hours

Oonjaladum Ullangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவன் மனைவி பிரிவுக்கு சிலசமயங்களில் பிடித்தமின்மை மட்டுமே காரணமாக அமைவதில்லை. அதிகப்படியான அன்பும் பிரிவிற்கு வழிவகுத்துவிடுகிறது.மேலும் பிரிவிற்கு பெரிய காரணங்களோ காரியங்களோ தேவையில்லை. சிறுசிறு விஷயங்களும், சின்ன புரிதலின்மையும் இங்கே ஒரு இளம்ஜோடியை எப்படியெல்லாம் பிரித்துவைத்து வேடிக்கை பார்க்கிறது என்பதை “ஊஞ்சலாடும் உள்ளங்கள்” என்ற இந்த கதையில் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள் வாசர்களே!

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580133705473
Oonjaladum Ullangal

Read more from Rajeshwari Sivakumar

Related to Oonjaladum Ullangal

Related ebooks

Reviews for Oonjaladum Ullangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oonjaladum Ullangal - Rajeshwari Sivakumar

    http://www.pustaka.co.in

    ஊஞ்சலாடும் உள்ளங்கள்

    Oonjaladum Ullangal

    Author:

    ராஜேஸ்வரி சிவகுமார்

    Rajeshwari Sivakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajeshwari-sivakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆட்டம் 1

    ஆட்டம் 2

    ஆட்டம் 3

    ஆட்டம் 4

    ஆட்டம் 5

    ஆட்டம் 6

    ஆட்டம் 7

    ஆட்டம் 8

    ஆட்டம் 9

    ஆட்டம் 10

    ஆட்டம் 11

    ஆட்டம் 12

    ஆட்டம் 13

    ஆட்டம் 14

    ஆட்டம் 15

    ஆட்டம் 16

    ஆட்டம் 17

    ஆட்டம் 18

    ஆட்டம் 19

    ஆட்டம் 20

    ஆட்டம் 1

    குறையொன்றும் இல்லை!

    மறைமூர்த்தி கண்ணா…

    குறை ஒன்றும் இல்லை கண்ணா!

    குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...

    என்ற பாடல் அந்த அலுவலக அறையை நிறைத்துக் கொண்டிருக்கும் போது,குட் மார்னிங் மணி-ண்ணா! எனபடி அறையினுள் நுழைந்தான் ஷ்யாம் சுந்தர்.

    குட் மார்னிங் தம்பி என்றார் அந்த அலுவலகத்தின் ஆல்இன்ஆல் அலுவலர் மணிகண்டன்.

    மணி-ண்ணா... உங்களுக்கு கடவுள் கிட்ட தேவைன்னு கேட்கறதுக்கு ஒன்னுமே இல்லையா? ஒரே…. ஒரு குறை கூடவா…. இல்லை!? என்று தன்னுடைய வழக்கமான, கலாய்க்கும் பணியை, காலையிலேயே தன்னிடம் வசமாய் மாட்டிய பச்சைமண் மணியிடம் ஆரம்பித்தான் ஷ்யாம்.

    என்ன தம்பி... இப்படி கேட்டுடீங்க! எனக்கு ஒரு குறையும் இல்லைன்னு சொல்ற மனுசங்களை நீங்க பார்த்திருக்கீங்களா? அவங்க..அவங்க வசதி வாய்ப்புக்கு ஏற்ப,அவங்கவங்களுக்கு தேவையும்,குறையும் இருக்கத்தானே செய்யும்! என்று ஷ்யாமின் உள்குத்து தெரியாமல், தன் வாயைக் கொடுத்து அவன் விரித்த வலையில் வசதியாய் விழுந்தார் மணி.

    அப்போ... இது வேணும், அது வேணும்ன்னு எதையாவது கேட்டுட்டே இருக்கறதை விட்டுட்டு,நீங்க குறை இல்லை, குறை இல்லைன்னு ஒரே பாட்டை எதுக்கு தினமும் போடறீங்க?டெய்லி இதை கேட்கிற உங்க கண்ணன், உண்மையிலேயே உங்களுக்கு குறை ஒன்னும் இல்லைன்னு நினைச்சி, உங்களை டீல்ல விட்டுட்டா என்ன-ண்ணா பண்ணுவீங்க? என்று மேஜையின் மேல் இருக்கும் பைல்களை கையில் எடுத்துக்கொண்டே மணியிடம் கேட்டு அவரின் வயிற்றில் கலவரத்தை உருவாக்கினான் ஷ்யாம்.

    ஷ்யாமின் நையாண்டியை உண்மை என்று எண்ணிய மணி, ஐயையோ! என்ன தம்பி இப்படி பயமுறுத்தறீங்க! என அலறி,இனி, இந்த பாட்டை நான் டெய்லியும் போடலை.மாசத்துக்கு ஒரே ஒரு தரம் வேணும்ன்னா.... போடட்டா...? என மிகவும் சிரத்தையாக அவனிடம் அபிப்ராயம் கேட்டார்.

    அன்று, தான் பார்க்கவேண்டிய வேலைகளை வரிசைப் படுத்திக்கொண்டிருந்த ஷ்யாம், மணியின் இந்த கேள்வியைக் கேட்டவுடன்,

    நாம சொல்றதை, நாம பெத்து வச்சிருக்கிற நாலு வயசு வாண்டு கூட உடனே ஒத்துக்காது! கிராஸ் கேள்விக் கேட்டே நம்மல தெரிக்க விடும்! இவர் என்னடான்னா, அப்பீலே இல்லாம, அந்த செகண்ட்லயே அக்செப்ட் பண்ணிகிட்டாரே! டேய்… ஷ்யாமு...! நீ பெரிய ஆள்தான் போல! உன்னை மதிக்க இவரை போல நாலு ஆளுங்க இந்த ஒலகத்துல இருக்கற வரைக்கும் நீ யாரைப்பத்தியும் கவலைப்படாம உன்னோட பொதுசேவையை தொடரலாம்டா! என்று தன் மனதினுள் நினைத்துக்கொண்டே, இனி வரும் காலத்தில் தன்னுடைய சேவைக்கு வளமான எதிர்காலம் இருப்பதை அகக்கண்ணில் கண்டு களித்துக் கொண்டிருக்கும் போது,

    அப்படியே நீங்களே தினமும் காலைல வேற என்ன பாட்டைப்போட்டா, கடவுள் என்னோட குறைகளை கேட்பாருன்னும் சொல்லுங்க தம்பிஎன்று ஷ்யாமிடம் ஆலோசனையும் கேட்டார் மணி.

    ஆஹா...இந்தண்ணா, என்னை மலை போல நம்பி அட்வைஸ் கேட்கிறாரே! இவருக்கு எப்படியாவது நல்ல வழி காட்டியே ஆகனும் என்று தன் மனதில் சபதமெடுத்து கொண்ட ஷ்யாம் மிகவும் சிரத்தையாக, அவரை விழியோடு விழி நோக்கி, ஏதோ கான்சர்க்கு வைத்தியம் சொல்பவனை போல,

    அண்ணா...இப்ப இருக்கற ட்ரெண்டுக்கு, பாராதியார்போல, காணி நிலம் வேண்டும் பராசக்தி,ன்னு ஓல்ட் ஸ்டைல்ல கேட்டா.... நல்லாயிருக்காது, அதனால...வைரமுத்து போல,

    புத்தம் புது பூமி வேண்டும்…

    நித்தம் ஒரு வானம் வேண்டும்…

    தங்கமழைப் பெய்ய வேண்டும்...

    தமிழில் குயில் பாடவேண்டும்!

    இப்படி... ஒரு ஆயிரத்தெட்டு வேண்டுங்களை,வேண்டினாத் தானே..... அதில் ஒரு எட்டையாவது மிஸ்டர்.ரோமியோ! அதான்... உங்க கோபியர் கண்ணன், சாங்க்ஷன் பண்ணுவார்! அதனால அந்த பாட்டையே நாளைல இருந்து, காலைல நீங்க பூஜை பண்ணும் போது போடுங்க. என்று படு சீரியஸ்ஸாக சொன்னான்.

    தம்பி...! நீங்க சொன்னதுல மொதபாட்டு...,பாரதியார் பராசக்திகிட்ட தனக்கு என்னென்ன வேணும்ன்னு வேண்டி கேட்டது,அது எனக்கு தெரியும்.ஆனா... ரெண்டாவது பாட்டு..... எந்த சாமிகிட்ட கேட்டதுன்னு எனக்கு தெரியலையே...! உங்களுக்கு தெரியுமா? என மணி, தன்னுடைய அரிய சந்தேகத்தை ஷ்யாமிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த ஷ்யாமின் பாதி,

    பூஜைக்கு,சாமி பாட்டை போட வேணாம்ன்னு சொல்லிட்டு சினிமா பாட்டை போட சொல்ற உங்ககிட்ட போய் ஒருத்தர் அட்வைஸ் கேட்கறார் பார்! அவரை..., என்று சொல்லி கொண்டே அவனை முறைத்து, அங்கிருந்த மணியிடம் திரும்பி,

    அண்ணா... இவர் சொல்றதையெல்லாம் உண்மைன்னு நம்பாதீங்கன்னு உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? எங்க குட்டியே இவர் பேச்சை நம்பாது! நீங்க எதுக்கு காலையிலேயே இவர்கிட்ட ஆலோசனை கேட்டுகிட்டு இருக்கீங்க? இவர் பேசறதைக் கேட்டு,தலைதெறிக்க ஓடிப் போனவங்களைத்தானே நாம பாத்திருக்கோம்!உருப்பட்டவங்களை பாத்திருக்கோமா? என்று தன்னுடைய வழக்கமான,அதான்... ஷ்யாமை சேதாரப்படுத்தும் வேலையை செவ்வனே செய்தாள் ஷ்யாமின் சாது என்கிற சாதனா.

    சாதனாவின் பேச்சை கேட்டதினால் வந்த சிரிப்பை கையால் மறைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் மணி.

    உனக்கு தான் என்னோட அருமை,பெருமையெல்லாம் தெரியல, அதை புரிந்து, என்னை தேடி வரவங்களையும் எதுக்கு நீ டைவர்ட் பண்ற சாது? அவர் கிட்ட நான் சொன்னதுல என்ன குறையை கண்டே நீ! வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும்! குறையில்லைன்னு சொல்றதுக்கு பதிலா, உங்க தேவைய சொல்லுங்கன்னு சொன்னேன்.இது ஒரு குத்தமா? என ஷ்யாம் அங்கலாய்க்க,

    அதைக்கேட்ட சாதனா,மணி சென்றுவிட்டாரா... என்பதை பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு, டேய்..... எருமை! பாட்டை முழுசா கேட்டு, அதனோட அர்த்தத்தை புரிஞ்சிக்காம நீ குட்டிசுவரா போறதுப் போதாதுன்னு மத்தவங்களையும் கெடுக்கறியா? என அர்ச்சித்தாள்.

    ம்க்கும்..., நான் என்ன பண்ணாலும் அதுல ஒரு நொட்டு சொல்றது தானே இவ வேலை! இவளுக்குத்தான் எல்லாம் தெரியும்ன்னு நினைப்பு.இந்த மேடம்க்கு அவ குட்டியோட ஸ்கூல் ரைம்ஸ்க்கே அர்த்தம் தெரியாது.ஆனா... பாட்டை சொல்லி அதை அப்படியே பார்ட்,பார்டா... பிரிச்சி அர்த்தம் சொல்லும், தேச.மங்கையர்க்கரசி போல பில்டப் பண்ணிக்கறதுல ஒன்னும் குறைச்சல் இல்ல!என்று மனதினுள் நினைத்ததை வெளியே சொல்லமுடியாமல் மெளனமாக நின்றான் ஷ்யாம்.

    என்னத்துக்கு இப்படி முட்டக்கண்ணப் போட்டு முழிச்சிக்கிட்டு இருக்க...? மனசுல என்னை இப்போ திட்டிட்டு தானே இருக்க! ஒழுங்கா உண்மைய ஒத்துக்கோ..எனக்கு எல்லாம் தெரியும் என்றாள் ஷ்யாமை அறிந்த அவனின் சாது.

    அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தால் வம்பு வரும் என அறிந்த ஷ்யாம் என்னோட முழியே அப்படித்தான்னு ஒரு நாளைக்கு, ஒரு பத்து தடவையாவது என்னை சொல்ல வைப்பதில், உனக்கு என்ன அப்படி... ஒரு சந்தோசம் சாது? என்று கேட்டு பேச்சை மாற்றினான் ஷ்யாம்.

    ம்ம்ம்... புருஷனை உண்மை சொல்ல வைப்பதை விட வேற பெரிய சந்தோசம் ஏதாவது இருக்குமா பொண்டாட்டிக்கு! என்று அவனுக்கு கவுன்ட்டர் கொடுத்தாள்.

    இதற்குமேல் அவளை பேசவிட்டு இன்னும் தன்னைத்தானே டேமேஜ் பண்ணிக்கொள்ள விரும்பாத ஷ்யாம்,ஹேய்... என்ன நீ உன்னோட பொட்டிக் போகாம இங்க நின்னுட்டு கதையடிச்சிட்டு இருக்க? எனக்கேட்டு அவளை திசை திருப்பினான்.

    இத்தனை நாளா உன்கிட்ட சொல்லி ஒன்னும் வேலைக்கு ஆகலை. அதனால, சிவாவ பார்த்து, அவன்கிட்ட அந்த ஸ்கூல்க்கு எப்ப போகப்போறீங்கன்னு கேட்கலாம்ன்னு வந்தேன்-டா என்று தான் வந்த காரியத்தில் கண்ணானாள் சாதனா.

    அதை வீட்டில இருந்து கிளம்பும்போதே நீ சொல்லியிருந்தா, நான், சிவா இன்னைக்கு லேட்டா தான் வருவான்னு அப்போதே சொல்லி இருப்பேனே சாது.

    நாம கிளம்பும்போது எனக்கு இந்த ப்ளான் இல்ல இப்போதான் திடீர்ன்னு தோணுச்சு.அதான் வந்தேன். ஏன்… இப்ப நான் இங்க வந்ததுல உனக்கு என்ன கஷ்டம்? ம்ம்ம்ம்…. வேற யாரையாவது முக்கியமானவங்கள வர சொல்லியிருக்கியா என்ன? இல்லையே… அப்படி முக்கியமானவங்க கூட பேசற அளவுக்கு நீ முக்கியமானவன் இல்லையே! அதெல்லாம் சிவாதானே செய்வான். என்னடா என்ன விஷயம்? என்கிட்டே எதையாவது மறைக்கிறியா...? என, கேள்வி மேல் கேள்வி கேட்டு எதிரில் இருப்பவரை திண்டாட வைக்கும் ஷ்யாமையே தெறிக்கவிட்டாள் சாதனா.

    அம்மா தாயே… அவன் இன்னைக்கு கொளத்தூர் சைட்க்கு போய் ஒரு விசிட் அடிச்சிட்டு தான் வருவான். இந்த மார்னிங் ட்ராபிக்ல அவன் வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கும். அதுவரைக்கும் நீ உன்னோட பெட்டிக்கடைக்கு [பொட்டிக்கை தான் இவன் இவ்வளவு அழகா சொல்றான். இதுக்கு என்ன பாட்டு வாங்கபோறானோ...] போகாம காத்துட்டு இருக்கனுமேன்ற அக்கறையில் சொன்ன என்னை போய் இப்படி சந்தேகபட்டுடியே.. சாது! என்று ஓவராக நடித்தான் ஷ்யாம்.

    ஹேய்… நீ ஒழுங்கா பேசினாலே நான் உன்னை நம்பமாட்டேன். இதுல ஓவரா வேற பேசறியா? ச்சீபே! என்னோட பொட்டிக் உனக்கு பெட்டிக்கடையா? மூஞ்சிய பாரு! மூஞ்சுறு மாதிரியே இருக்கு. என வாய்க்கு வந்த வார்த்தைகளால் அவனை வாட்டி எடுத்தாள் சாதனா.

    அப்பா! நல்லவேளை.இவ திட்டறதை கேட்க இங்க யாரும் இல்லாததால நம்ம மானம் காப்பாத்தபட்டது-டா சாமி!வெளிய போன மணி அண்ணா வரதுக்குள்ள இவளை எப்படி இங்க இருந்து கிளப்பறது? என யோசிச்ச ஷ்யாம்.சாது! சிவா வர இன்னும் எப்படியும் அரைமணி நேரத்துக்கு மேல ஆகுமே. அதுவரைக்கும் நீ உன்னோட கடைய திறக்கலைன்னா பரவாயில்லையா என்றான்.

    ஷ்யாமின் முயற்சிக்கு பலனாய் அப்படியா….அவன் வர இன்னும் லேட்டாகுமா...? அவனை பார்த்தே ரொம்ப நாள் ஆகுது. நேர்ல பார்க்கும் போது தான் ஆர்மி ஆபிசர் போல அட்டென்ஷன்ல பேசறான்னு பார்த்தா... சார், போன்ல பேசும் போது கூட,கால்சென்ட்டர்ல வர ரெக்கார்ட்டட் டயலாக்ஸ் போலவே தான் ஓவர் பார்மலா பேசறான்.அவன் ஏன்டா இங்க வந்ததுல இருந்து எப்போ பார்த்தாலும் முசுடாவே முகத்தை வச்சிகிட்டு திரியறான்? என தன் நீண்ட நாள் சந்தேகத்தை தன் கணவனிடம் கேட்டாள் சாதனா.

    நான் தான் அவனைப்பத்தி உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேனே சாது. அவன்... எப்பவுமே கொஞ்சம் ரிசர்வ் டைப் தான். படிக்கும் போது ஹாஸ்டல்ல இருக்கறப்ப கூட அவன்,என்னைத் தவிர யார்கிட்டயும் ஃப்ரியா பேசமாட்டான். எல்லார்கிட்டயும் லிமிட்டாதான் பழகுவான். நாங்க ஒரே ரூம்மேட்ன்றதால என்கிட்ட கொஞ்சம் க்ளோஸா இருப்பான். நான் தான் அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்கேன்... நம்மோட காதலைப் பத்தி கூட.ஆனா.. அவன் எப்போவுமே, அவனோட பர்சனல் பத்தி,அவன் குடும்பத்தைப்பத்தி பேசினதில்லை.சாது..! என்று சாதானவின் விசாரணைக்கு விளக்கமாக விடையளித்தான் ஷ்யாம்.

    அப்போ... அவனுக்கு அப்பா, அம்மா இல்லை... அவனோட சித்தப்பா தான் அவனோட கார்டியன்னு நீ சொன்னது எல்லாம்... என ஷ்யாமை சந்தேகமாய் பார்த்துக்கொண்டே சாதனா கேட்க,

    அது அப்பட்டமான உண்மைதான்! நான் எதை சொன்னாலும் அதை சந்தேகமா பார்க்கறதே உனக்கு வேலையா போச்சு சாது! நாம படிக்கும் போது,அங்க ஹாஸ்டலில் இருந்த போது அவனை பத்தி, அவன் சொன்ன ஒரே... விஷயம் இது தான். அவனைப்பத்தி வேற எதுவும் எனக்கு தெரியாது. அவன், அவனைப்பற்றிய பெர்சனலான விஷயங்கள் எதையும் சொல்லமாட்டானேத் தவிர என்னைப்பத்தி, நம்மைப்பத்தி நான் சொல்றதை கேட்டு எனக்கு சப்போர்ட்டா ஏதாவது சொல்லுவான். என விளக்கினான் ஷ்யாம்.

    நம்ம கல்யாணத்துக்கு முன்பு, நான் உன்னை மீட் பண்ண வரும் போது சில சமயம் உன்கூட அவனையும் பார்த்திருக்கேன்.அப்பல்லாம் உன்னைப்போல லொடலொடன்னு அவன் பேசலைன்னாலும் நல்லாத்தான் பேசுவான். ஆனா... இப்போ இங்க வந்த பிறகுதான் ஒரு மாதிரி இறுக்கமாவே இருக்காப்போல இருக்கான்! ஏன்னு உனக்கு ஏதாவது தெரியுமா? என சாதனா கேட்க,

    நானும் கவனிச்சேன். இப்ப இந்த மூனு வருஷமாத்தான் ரொம்ப சலிப்பா... வாழ்க்கைய வெறுத்தவனாட்டம்,எப்போப்பாத்தாலும் வெறுமையா ஏதாவது பேசிட்டு இருக்கான். என்னக் காரணம்ன்னு எனக்கு தெரியாது.அவனோட சித்தப்பா பாமிலிக்கூட ஏதாவது தகராறா இருக்கும் போலன்னு நானே நினச்சிகிட்டேன். இடையில நம்மக்கிட்ட காண்டாக்ட் இல்லாத போது தான் அவன் லைப்ல சம்திங் நடந்திருக்கனும். அது என்னன்னு தான் தெரியலை.

    இங்க வந்த போது கூட,இங்கேயே செட்டில் ஆகப்போறேன்னும்,வேலை தேடிட்டு இருக்கேன்னும் தான் சொன்னானே தவிர வேற எதையும் அவன் சொல்லலை.கோவைல இருந்த நல்ல வேலைய விட்டு இங்க வந்து எதுக்குடா செட்டில் ஆகப்போறே?ன்னுகேட்டதுக்கு,சும்மாதான்!னு சொன்னான். நானும் அதுக்கு மேல ஒன்னும் கேட்கலை... கேட்டாலும் பலனில்லைன்னு தெரிந்த பிறகு எதுக்கு கேட்பது? என்றான் ஷ்யாம்.

    ம்ம்ம்... இவனுக்கு அங்க ஏதாவது லவ் பெயிலியரா இருக்குமோ...? இல்ல... ஒன் சைடு லவ்...ன்னு ஏதாவது இருக்குமோ! என விதவிதமாய் கற்பனையை இவள் பறக்கவிட,

    ம்ஹும்... அப்படி எல்லாம் நிச்சயமா இருக்காது சாது. லவ் பண்றதுக்கெல்லாம் இவன் செட்டாக மாட்டான்.படிக்கும் போது பொண்ணுங்க இவன்கிட்ட ஏதாவது கேட்க வந்தாலே, மெட்ராஸ் ஐ வந்தவங்களைப் பார்க்க பயப்படறவங்களைப்போல முகத்தைப் பார்க்காம, பதிலை சொல்லிட்டு ஓடி வரவன் இவன்! இவனாவது லவ் பண்றதாவது! இவனைப்போய்...! நீ இருக்கியே..., அது இதுன்னு எதையாவது எக்குதப்பா கற்பனைப் பண்ணிகறதே உனக்கு வேலையா போச்சு! எனக் கூறி அவள் பறக்க விட்டதை அறுத்து விட்டான் இவன்.

    தான் பறக்கவிட்ட கற்பனைக் காற்றாடியை ஷ்யாம் அறுத்துவிட்ட கோபத்தில்,ஆமா... வேலைவெட்டி இல்லாம, கற்பனையில மிதந்துட்டு இருக்கறது தானே என்னோட முழுநேரவேலை! கண்டுபுடிச்சிட்டார் சி.ஐ.டி.சங்கர்! அப்படியே அறிவுகொழுந்து தான் நீ! உன்னைப்போல ஓட்டை ஜொள்ளு டாங்க்கை கூட நம்பிடலாம். ஆனா சிவாவைபோல ஓவர் கன்ட்ரோல்ல இருக்கறவங்களை தான் நம்மமுடியாது. எனக்கு என்னமோ... பையன் எங்கையோ லாக் ஆகிட்டானோன்னு ஒரு டவுட்டு! என சிவாவை பற்றிய தன்னுடைய எண்ணத்தை சொல்லும்போதும் ஷ்யாமை கழுவி ஊற்ற மறக்கவில்லை சாதனா.

    அப்போதும் திருப்தியடையாது, எல்லாரையும் வளச்சி, வளைச்சி... கேள்விக் கேட்டு உயிரை எடுப்பியே, இதைப்பத்தி அவன்கிட்ட நீ ஏதாச்சும் கேட்டுதான் பாரேன்! என்ன... உன்னோட பப்பு அவன்கிட்ட வேகாதுன்னு யோசிக்கிறியா...? என கேட்டு,அவனை குப்புற தள்ளினாள் சாதனா.

    வேக கொஞ்சம் டைம் எடுத்துக்கும் கெணத்து தண்ணி பேபி அவன். கேட்கலாம் பொறுமையா கேட்கலாம்! பையன் எங்க போய்டப் போறான்? நம்மகிட்ட சிக்கினவனை,அவ்வளவு சீக்கிரமா விட்டுடுவோமா? என்னைக்கியிருந்தாலும் அவன் நம்மகிட்ட சொல்லித்தானே ஆகனும்! எனக் கூறி, மீசையில் ஒட்டியிருந்த மண்ணை அசால்டாய் தட்டிவிட்டான் ஷ்யாம்.

    இந்த வாய் தான்டா உன்ன வாழவைக்குது! என இவள் சொல்ல,

    அப்படியா... அப்போ இவ்வளவு நாளா,நீ தான் என்னை வாழவைக்கும் தெய்வம்ன்னு தப்பாவா நினைச்சிகிட்டு இருந்திருக்கேன்! என ஷ்யாம் அநியாயத்திற்கு ஆச்சரியத்தை காண்பித்தான்.

    கொஞ்சம் விட்டா தலைக்கு மேல ஏறிடுவியே! இன்னைக்கு நீ வீட்டுக்கு வந்த பிறகு தெரியும் செல்லம்... நீ நினைச்சிட்டுயிருந்தது தப்பா சரியான்னு! என கேட்டு அவனை ஆஃப் பண்ணும் வேலையை அவனின் சாது ஆரம்பிக்க,

    அதைக்கேட்டு அலார்ட் ஆன ஷ்யாம், என்னங்க மேடம்! இன்னும் உங்களுக்கு உங்க கடைக்கு போற எண்ணமில்லையா! இங்கயே....என் கூடவே இருக்கனும்ன்னு ஆசையா இருந்தாலும் இருங்க மேடம். எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்ல என்று வழிந்தான் ஷ்யாம்.

    ஐய்ய்ய... மூஞ்சிய பாரு! ஏற்கனவே அழகு! இதுல இந்தமாதிரி வழிஞ்சிக்கிட்டு நின்னா.. இன்னும் கொடுமையா இருக்குது. எனக்கூறி அவனின் ஜொள்ளு வழிந்த முகத்தில் அசடை வழிய விட்ட திருப்தியில் அடுத்து,

    டேய்...! எங்க அம்மா, எப்ப தான் உங்க வீட்டுக்காரர் அந்த ஸ்கூல்க்கு போவார்ன்னு, கேட்டுக்கிட்டே இருக்காங்கன்னு நானும் சொல்லிட்டே இருக்கேன். நீ அதை காதுல வாங்காம, வெட்டியா பேசிட்டுயிருக்க என கடந்த ஒரு வாரமாக பாடிக்கொண்டிருக்கும் தன் வழக்கமான வசவை பாட ஆரம்பித்தாள் சாது.

    ஆஹா..... ஷ்யாம் உனக்கு மரியாதை குறைய ஆரம்பிச்சாச்சு. இன்னும் அது குறைந்து 500,1000 ரூபாய் நோட்ட போல செல்லாது போறதுக்குள்ள இவளை இப்ப இங்க இருந்து கிளப்பியே ஆகனும்!என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே,இன்னைக்கு கண்டிப்பா போய்டுவோம் சாது! சிவா வந்தவுடனே கிளம்ப வேண்டியது தான், என்றான்.

    அப்போ சரிடா, நான் கிளம்பறேன்.சிவா வந்தா, அந்த ஸ்கூல்க்கு எப்போ போகப்போறீங்கன்னு நான் கேட்டதா சொல்லு.நான் மேல வந்ததே... அதை அவன்கிட்ட கேட்கத்தான். இல்லன்னா, அப்படியே என்னோட கடைக்கு போயிருப்பேன். என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து கிளம்பிய சாதனா,

    ஆனா... நான் அப்படியே போகாம, மேல வந்ததும் ஒரு வகையில நல்லதா போச்சு! அதனால தானே உன்கிட்ட இருந்து ஒரு அப்பாவிய காப்பாத்தி காலையிலேயே என்னோட அக்கௌண்ட்ல புண்ணியத்தை வரவு வைக்க முடிந்தது,என்று சாது போல சொல்லிச் சென்றாள்.

    இது தான் சாதனா.படிக்கும் போதே ஷ்யாமின் மேல் காதல் கொண்டு மணந்தவள். அவன் மேல் காதல் வந்ததற்கு, ஆயிரம் ஹான்சம் பாய்ஸ் காலேஜ்ல இருந்தாலும்,உன்னை எனக்கு பிடிச்சதுக்கு காரணம்.... உனக்கு வாழ்க்கைக் கொடுக்கும் பொறுப்பை கடவுள் என்கிட்ட ஒப்படைத்ததால் தான்! என்று ஷ்யாமிடம் சொல்லி அவனை கடுப்பேற்றினாலும், அவனை முழுதாக அறிந்தவள்.

    எது நடந்ததோ அது நன்றாகவே

    Enjoying the preview?
    Page 1 of 1