Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mangai Enthan Nenjukkul!
Mangai Enthan Nenjukkul!
Mangai Enthan Nenjukkul!
Ebook164 pages45 minutes

Mangai Enthan Nenjukkul!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெங்களூருவில் ஸாப்ட்வேர் எஞ்சினீயராக இருக்கும் இளைஞன், தன் பாட்டியக் காண கிராமத்திற்குச் செல்கிறான். மரணப் படுக்கையில் இருந்த பாட்டி, படிக்காத கிராமத்துப் பெண்ணான அவனது முறைப் பெண்ணின் கைகளைப் பற்றி அவன் கையோடு இணைத்து வைத்து விட்டு மரணிக்கிறாள். கிராமத்து உறவுக்காரர்கள் அந்த ஜோடிகளுக்கு திருமணம் முடித்தே ஆக வேண்டும் எனத் தீவிரம் காட்டுகிறார்கள்.

இந்தப் பிரச்சினையை அவன் பெங்களூரிலுள்ள தன் காதலிக்குத் தெரிவிக்க, அவள் சக நண்பர்களோடு கிராமத்திற்கு வருகிறாள்.

பல பிரச்சினைகளைச் சந்தித்து, இறுதியில் அவர்கள் இருவரும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதைக் கூறும் கதை.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு திருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் விதத்தில் கதையோட்டம் முழு வேகத்தோடு செல்வது, நிச்சயம் வாசகர்களைக் கவரும்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130004784
Mangai Enthan Nenjukkul!

Read more from Mukil Dinakaran

Related to Mangai Enthan Nenjukkul!

Related ebooks

Reviews for Mangai Enthan Nenjukkul!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mangai Enthan Nenjukkul! - Mukil Dinakaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மங்கை எந்தன் நெஞ்சுக்குள்!

    Mangai Enthan Nenjukkul!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 1

    பெங்களூரு.

    இதமான குளிர் காற்றில் இளைப்பாறிக் கொண்டிருந்தது.

    குளோபல் ஸாப்ட்வேர் நிறுவனத்தின் பிரம்மாண்ட கட்டிடம் முழுக்க முழுக்க கண்ணாடிகளாலேயே போர்த்தப்பட்டிருந்ததால், அந்தக் காலை வெயிலில் ‘தகதக’வென ஜொலித்துக் கொண்டு நின்றது.

    காம்பௌண்டிற்கு வெளியே இருந்த பிரதான சாலையில் டிராபிக் பிதுங்கிக் கொண்டிருந்ததால், டிராபிக் கான்ஸ்டபிளும் விழி பிதுங்கிக் கொண்டிருந்தார்.

    கட்டிடத்தின் கீழே இருந்த கார் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டுக் கார்களும், ‘பளிச்’சென்ற யூனிஃபார்மில், படு கம்பீரமாய் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டிகளும் அந்த இடத்தை ஒரு காஸ்ட்லி தேசமாய்க் காட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் எவர்க்கும், எவண்டா சொன்னது இந்தியாவை ஏழை நாடென்று...? வாடா... வந்து பாருடா... எங்களோடு செல்வச் செழிப்பை! என்று நிச்சயமாய்க் கூவத் தோன்றும்.

    மூன்றாவது தளத்தில் தன் சீனியருடன் அமர்ந்து புது ப்ராஜெக்ட் பற்றிய சீரியஸ் டிஸ்கஷனில் ஈடுபட்டிருந்தான் பிரசாத். சிவந்த மேனி, ஒல்லியான... ஆனால்... கட்டான தேகம். முகத்தின் இன்னும் குழந்தைத்தனம். அவன் அணிந்திருந்த மெல்லிய கண் கண்ணாடியும், முகத்தில் ஒட்டியிருந்த அரும்பு மீசையும் அவன் ஐ.டி ஊழியன் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையில் பதிந்திருந்த போட்டோவில் இன்னும் பால் மணம் மாறாத முகத்துடன் இருந்தான் அவன்.

    டிஸ்கஷனைத் தொந்தரவு செய்யும் விதமாய் அவன் மொபைல் வைப்ரேஷனில் அதிர, டென்ஷனாகி அவசரமாய் எடுத்துப் பார்த்தான். பார்த்த உடனேயே ‘ப்ச்’ என்றபடி அதைக் கட் செய்தான்.

    தொடர்ந்து டிஸ்கஷனை ஆரம்பிக்கையில் அது மறுபடியும் அதிர,

    மிஸ்டர் பிரசாத்... நான் வேணா வெய்ட் பண்றேன்...! நீங்க அதை எடுத்துப் பேசி முடிச்சிடுங்க! என்றார் சீனியர் சிவா. அவர் முகத்தில் சற்றும் கோபமில்லை. தெளிந்த மனிதராயிருந்தார்.

    இல்ல சார்... பரவாயில்லை! என்றபடியே மொபைலில் அழைப்பவர் பெயரைப் பார்த்து விட்டு பிரசாத் அதைக் கட் செய்யப் போக,

    நோ... நோ... கட் பண்ணாதே...! யாரு லைன்ல? சீனியர் சிவா கேட்டார்.

    வந்து... அம்மா சார்! என்றான் பிரசாத் தர்ம சங்கடமாய்.

    த பாருங்க பிரசாத்... காதலியோட அழைப்பைக் கட் பண்ணலாம்...! பொண்டாட்டியோட அழைப்பைக் கூடக் கட் பண்ணலாம்...! ஆனா... எந்தக் காரணத்தைக் கொண்டும் அம்மாவோட அழைப்பை மட்டும் கட் பண்ணவே கூடாது...! ஏன்னா... அவங்க வயசானவங்க...! நீ கட் பண்றதை வெச்சு... மகனுக்கு என்னாச்சோ...? ஏதாச்சோ?னு விபரீதமா கற்பனை பண்ணிக்கிட்டு மனசொடிஞ்சு போயிடுவாங்க...! அதனால... மொதல்ல அவங்ககிட்டப் பேசுங்க...! அப்புறம் கூட நாம் இந்தப் ப்ராஜக்ட் பத்திப் பேசலாம்... அவசரமில்லை!

    தலையாட்டியபடி, சன்னக் குரலில் பேச ஆரம்பித்தான் பிரசாத். ம்ம்... சொல்லும்மா!

    டேய் பிரசாத்... ஊர்ல பாட்டிக்கு ரொம்ப முடியாமப் போயிடுச்சாம்டா...! ‘எப்ப வேணா... என்ன வேணா ஆகலாம்!’ன்னு இப்பத்தான் போன் வந்திச்சு...! உடனே போகணும்டா! எதிர்முனையில் அவன் தாய் கற்பகம் கரகரத்த குரலில் சொன்னாள்.

    சரிம்மா... போயிட்டு வாம்மா! நசுங்கிய குரலில், நாசூக்காய்ப் பேசினான் பிரசாத்.

    அடேய்... நான் மட்டும் போனா பத்தாதுடா...! நீயும் என் கூட வரணும்டா...! உன் மாமன்காரன் போன் பண்ணிப் புலம்பறான்... அந்த உசுரு போகாம இன்னும் இழுத்துக்கிட்டுக் கிடக்கறதே நம்ம ரெண்டு பேரையும் பார்த்திட்டுப் போகத்தானாம்...! அதனால உடனே ரெண்டு பேரும் கிளம்பி வாங்கன்னு கண்டிப்பாய்ச் சொல்லிட்டான் பெரிய மாமன் வீரண்ணன்.

    கடுப்பாயிருந்தது பிரசாத்திற்கு. ‘பெரிய மாமன்னா என்ன ஜனாதிபதியா...? சொன்னவுடன் போய் நிக்கறதுக்கு?’ என் மனசுக்குள் நினைத்துக் கொண்டவன்,

    ப்ச்...! அம்மா... என்னோட வேலைக்கு அப்படியெல்லாம் ‘திடுதிப்’ன்னு லீவு போட முடியாதும்மா...! இப்பத்தாம்மா ப்ராஜெக்டே ஆரம்பிக்குது...! இப்பவே நான் பாட்டிக்கு உடம்பு சரியில்லை... பாட்டனுக்கு வயிறு சரியில்லைன்னு லீவு போட ஆரம்பிச்சேன்னா... என்னை இந்தப் ப்ராஜெக்டுல இருந்தே கழட்டி விட்டுடுவாங்க!

    அப்படிச் சொல்லாதடா...! பாவம்... திவ்யமா வாழ்ந்து திருப்தியா போக வேண்டிய ஜீவன்டா அது...! நம்மால அது அனர்த்தமாய்ப் போயிடக் கூடாதுடா!

    அய்யோ... அம்மா...! ப்ளீஸ் புரிஞ்சுக்கம்மா...! இது பள்ளிக் கூடமில்லைம்மா... வேலை பார்க்கற இடம்...! திடீர்ன்னு லீவு கேட்டா தரமாட்டாங்கம்மா! கோபத்தில் பிரசாத் தன்னையும் மறந்து உரக்கப் பேசி விட,

    தலையைத் தூக்கி அவனை கோபப் பார்வை பார்த்த சீனியர் சிவா, அவன் லீவுக்கு ஒப்புதல் தரும் விதமாய் தலையாட்டினார்.

    அதைப் புரிந்து கொண்ட போதிலும், உடனே தன் தாயிடம் தன் சம்மதத்தைச் சொல்லாமல், கொஞ்சம் டைம் குடும்மா...! நான் கம்பெனில கேட்டுப் பார்த்திட்டு... அப்புறமா உன்னைக் கூப்பிடறேன்! என்றான் பிரசாத்.

    அவன் போனைத் துண்டித்ததும், என்ன பிரசாத்...? ஏதாவது முக்கியமான மேட்டரா? சிவா கேட்க,

    இல்ல சார்... கிராமத்துல என்னோட பாட்டி... சீரியஸ் ஸ்டேஜ்ல இருக்காங்களாம்...! கடைசியா போய் அவங்களைப் பார்த்தே ஆகணும்னு அம்மா துடிக்கறாங்க! கையைப் பிசைந்தபடி பிரசாத் சொன்னான்.

    பாட்டின்னா?

    அம்மாவோட மதர் சார்!

    அடடே... அப்ப நீங்க நிச்சயம் போய்த்தான் ஆகணும் பிரசாத்...! ம்ம்ம்... ப்ராஜெக்டை நான் மேனேஜ் பண்ணிக்கறேன்...! நீங்க லீவு போட்டுட்டுக் கிளம்புங்க பிரசாத்...! மரணப் படுக்கையில் கிடக்கற எந்த ஜீவனையும் காக்க வைக்கக் கூடாது!

    இல்ல சார்...! அது... வந்து... என்று தயக்கத்துடன் இழுத்தான் பிரசாத்.

    இங்க பாருங்க பிரசாத்...! நமக்கு நம்ம ஜாப் எவ்வளவு முக்கியமோ...? அதே அளவுக்கு நம்ம ஃபேமிலியும்... சொந்தக்காரங்களும் முக்கியம்...! இதுக்காக அதை இழந்திட முடியாது...! அதுக்காக இதையும் இழந்திடவும் கூடாது...! ரெண்டுமே முக்கியம்... ரெண்டையும் நாமதான் சரிவிகிதத்துல பேலன்ஸ் பண்ணிக்கனும்...! ஸோ... நீங்க ஹெச்.ஆர். டிபார்ட்மெண்டுல சொல்லிட்டுக் கிளம்புங்க! சீனியர் சிவா மிகவும் பொறுப்பாய்ப் பேச,

    அவர் உண்மையிலேயே தன் இரக்கப்பட்டுத்தான் சொல்கிறாரா...? இல்லை இவனை வைத்துக் கொண்டு வேலையைத் துவங்கினா அடிக்கடி லீவு போட்டுட்டுப் போயிடுவான்... அதனால இவன்கிட்ட நாசூக்கா பேசி லீவு குடுத்து அனுப்பிட்டு ப்ராஜெக்ட்டுக்கு வேற ஆளைப் போட்டுக்கலாம்! என்கிற எண்ணத்துல சொல்றாரா? என்று புரியாத பிரசாத், ஒரு குழப்பத்திற்குப் பிறகு, ஓ.கே சார்...! தேங்க் யூ சார்! என்று சொல்லி விட்டு ஹெச்.ஆர் டிபார்ட்மெண்ட் நோக்கிச் சென்றான்.

    ***

    கம்பெனியை விட்டு வெளியே வந்த பிரசாத்திற்கு வெயிலின் சூடு மிகவும் இம்சையாக இருக்க, ஹூம்... எப்பவும் ஏ.சியிலேயே வொர்க் பண்ணிட்டிருந்தா இப்படித்தான்... ஆகும்! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, நேரே ஆம்னி பஸ்ஸ்டாண்டை நோக்கிச் சென்றான். அன்று இரவு பஸ்ஸுக்கான டிக்கெட் இலகுவாக கிடைத்து விட, நல்லவேளை டிக்கெட் ஈஸியாக் கிடைச்சிடுச்சு... இல்லேன்னா நம்ம பாடு பெரும்பாடாயிருக்கும்...! அம்மா அதையும் புரிஞ்சுக்காம என்னமோ நான் வேணுமின்னே பண்றேன்னு நெனச்சுப் புலம்பியே என்னைக் கொன்னுடுவாங்க!

    அங்கிருந்து கிளம்பியவன் நேரே அறைக்கு வந்து, தொலைக்காட்சியை ஆன் செய்து பாடலை ஓடவிட்டு, துணிமணிகளை பேக் செய்ய ஆரம்பித்தான்.

    "உன் பேர் சொல்ல ஆசைதான்...

    உள்ளம் உருக ஆசைதான்...!

    உயிரில் கரைய ஆசைதான்...

    ஆசைதான்... உன் மேல் ஆசைதான்!"

    தொலைக்காட்சியில் ஒலித்த அந்தப் பாடல் பிரசாத்திற்கு தன் காதலி திவ்யாவின் நினைவுகளைக் கொண்டு வந்தது. அவள் வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் அது. ‘அடடே... ஊருக்குப் போனா திரும்பி வர எப்படியும் ரெண்டு மூணு நாளாயிடும்...! திவ்யாகிட்ட சொல்லிட்டே போயிடலாம்...! இல்லேன்னா... அவ என்னைத் தேடிக்கிட்டு... என்னோட ஆபீஸுக்கே போயிடுவா!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, மொபைலை எடுத்து திவ்யாவை அழைத்தான்.

    எதிர்முனையில் அதே பாடல் காலர் டியூனாக ஒலிக்க,

    "சொல்லுப்பா... என்ன இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1