Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devan Thantha Veenai...
Devan Thantha Veenai...
Devan Thantha Veenai...
Ebook258 pages2 hours

Devan Thantha Veenai...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580102603030
Devan Thantha Veenai...

Read more from Lakshmi Praba

Related to Devan Thantha Veenai...

Related ebooks

Reviews for Devan Thantha Veenai...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devan Thantha Veenai... - Lakshmi Praba

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேவன் தந்த வீணை...

    Devan Thantha Veenai...

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    மழையைப் பூமிக்கு அனுப்பி, மண்வாசனையை எழுப்பிப் பூக்களின் நலம் விசாரிக்க ஆரம்பித்தது வானம்!

    மழையின் தூறலையே விழுதுகளாய்ப் பிடித்து ஏறி வானத்தைத் தொட்டுவிட வேண்டும் என்ற பரவசம் வீணாவுக்குள் ஜனித்தது.

    மழையைப் பார்த்தாலே, வீணாவின் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.

    இனம் புரியாத சந்தோஷத்தில் அப்படியே லயித்துப் போய் விடுவாள்.

    ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீணா, கலீர் என்ற சிரிப்புச் சப்தத்தால் கலைந்து, திரும்பிப் பார்த்தாள்.

    கடைசி எக்ஸாம் முடிந்து விட்டதால்… இன்று அவரவர் ஊர்களுக்குச் செல்லப் போகிறோம் என்ற குதூகலத்தில் அவள் வயதை ஒத்த இளம் பெண்கள் கும்மாளமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, வீணாவின் அழகிய முகம் அனிச்ச மலராய்ச் சட்டென்று வாடிப் போனது.

    ஹாஸ்டலை விட்டுப் போகப் போவதை நினைத்தால், உள்ளூரக் கவலை மனதை அரித்தது.

    ஏதோவொரு சிறையிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டாற் போன்று மற்ற இளம் பெண்கள் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருப்பதைக் காணும்போது, வீணாவின் மனதில் ஒரு ஏக்கம் மெல்ல முளை விட்டது.

    ‘கடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏனிந்த நிலைமை? இந்த உலகில் யாருமற்ற அநாதையாய் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

    சிறு வயதிலேயே விபத்தில் பெற்றவர்கள் மாண்டு போய் விட்டார்கள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. சொல்லிக் கொள்ளும்படியாக உறவுத் தலைகளும் இல்லை.

    பெரியவர் கருணாகரன்… உண்மையிலேயே கருணா மூர்த்திதான்!

    அதனால்தான் என்னைத் தனது மாளிகையிலே தங்க வைத்து, வளர்த்து ஆளாக்கினார். மதுரையில் - இதோ இந்தக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்து முடித்து விட்டேன்.

    அவ்வப்போது விடுமுறை வரும் சமயங்களில் எல்லாம். பெரியவரின் உத்தரவின் பேரில் கண்டமனூரில் இருக்கும் அவரது மாளிகைக்குச் சென்று விடுமுறையைக் கழித்து விட்டு வர நேர்ந்தது.

    ஒவ்வொரு முறையும் அங்கு போவதற்கே எனக்குப் பிடிக்கவில்லையே!

    இதுவே… அது என் பிறந்த வீடாக இருந்தால், பெற்றவர்கள் முகம் மலரப் பாசத்துடன் எனக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தால்…!

    ஹாஸ்டலில் இருப்புக் கொள்ளாமல், விடுமுறை நாட்கள் எப்போது வரும் என்று ஏங்கித் தவித்து… இறக்கை கட்டிக் கொண்டு… இவர்களைப் போல நானும் ஆர்வமாய் என் வீட்டை நோக்கிப் பறந்து சென்றிருப்பேனே!

    அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்காமலே போய் விட்டதே!

    கண்டமனூர் மாளிகைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே! அதில் என் பெற்றவர்களும் வசிக்கவில்லை.

    பெரியவர் கருணாகரன் என் மீது பரிவு கொண்டு வளர்த்து ஆளாக்கி, மதுரையில் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்துப் புண்ணியத்தைத் தேடிக் கொண்டார்.

    என்னதான் அவர் பரிவு காட்டினாலும், என்னால் அந்த மாளிகையில் இயல்பாய்த் தங்கியிருக்க முடியவில்லையே! முள்ளின் மீது நிற்பதைப் போன்ற அவஸ்தையாக இருக்கிறதே!

    சிறு வயதில் இந்த உணர்வு ஏற்படவில்லையே! பூப்படைந்து வளர்ந்து ஆளாகி நின்றபின்… நாளுக்கு நாள் ‘நான் ஒரு அநாதை. நான் ஒரு அகதியைப் போல் அடைக்கலமாய் இங்கு தங்கியிருக்கிறேன்!’ என்ற நினைப்புதானே மனதிற்குள் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது!

    அது மட்டும்தான் காரணமா? இனம் புரியாத பயமும் கூடவே என் மனதை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறதே!

    கண்டமனூர் மாளிகையைப் போன்ற ஒரு பிரமாண்டமான மாளிகையைச் சுற்று வட்டாரத்தில் யாருமே பார்த்திருக்க முடியாதே!

    அவ்வளவு பெரிய மாளிகையில் சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், எடுபிடி ஆட்கள், வேலைக்காரிகள் என்று நிறையப் பேர் இருக்கிறார்கள்.

    இது போக, வெளியிலிருந்து தேவைப்பட்ட சாமான்களை வாங்கிக் கொண்டு இறக்கவும், பெரியவரின் கூப்பிட்ட குரலுக்கு ஏவல் செய்யவும் ஏராளமாய் ஆட்படை இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ஆனால், அத்தனை பேருமே பெரியவரின் பெயரைக் கேட்டாலே குலை நடுங்குகிறார்கள். அவரை நேரில் பார்க்கும் சமயங்களில், பயந்து சாகிறார்கள்.

    அவர்கள் பயந்து சாவதைப் பார்த்து, எனக்கு விவரம் வந்த பின்பு நானும் மழையில் நனைந்த புறாக் குஞ்சாய் நடுங்க ஆரம்பித்து விட்டேனே!

    பயத்திற்கு என்ன காரணம்? இதுவரை என் அறிவிற்கு எட்டவில்லையே!

    அடைக்கலம் தந்து, படிக்கவும் வைத்த பெரியவரின் மீது இனம் புரியாத பயம் வருவதற்கான காரணம் இன்னமும் விளங்கவில்லைதான்!

    அந்த மாளிகையில் அவரைப் பார்த்தால் மட்டும் பயந்து சாகிறேனா? அவரது மனைவி காந்தாமணியைக் கண்டாலே உள்ளூர உதறல் எடுத்து விடுகிறதே!

    முகத்தில் அதிகாரமும் ஆணவமும் தாண்டவமாடிக் கொண்டிருக்கும்… என்னை ஏற இறங்க இளக்காரமாகப் பார்த்துவிட்டு, அசட்டையாக நகர்ந்து விடுவாரே!

    அந்தம்மாவைப் பொறுத்த மட்டில், நான் அந்த மாளிகையில் தங்கி வேலை பார்க்கும் பணிப் பெண்களில் ஒருத்தி!

    ஏதோவொரு அநாதையைத் தனது கணவர் தான தர்மமாகத் தங்க வைத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்றதொரு அலட்சியப் போக்கு!

    அதே சமயத்தில், ‘இவ்வளவு பெரிய ஜமீன் மாளிகையில் அடைக்கலமாய்த் தங்க வந்தவள் இவள்! என் இரு மகன்களில் ஒருவனை மயக்கித் தன் வலையில் விழ வைத்து, இந்த ஜமீன் மாளிகைக்கே எஜமானி ஆகிவிடுவாளோ?’ என்ற சந்தேகத்தில், குரூரமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவ்வப்போது எரிந்து விழுகிறார் அந்தக் காந்தாமணி.

    அந்தப் பார்வையின் பொருளைச் சின்னக் குழந்தை கூடப் புரிந்து கொள்ளுமே! எனக்கா இது புரியாது? ஏன் இந்தச் சந்தேகம்?

    இருக்கும் இடம் தெரியாமல், அடக்க ஒடுக்கமாய், கண்ணியமாய், குனிந்த தலை நிமிராமல் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கிறேனே! என்னைப் பார்த்து எதற்கு இப்படிச் சந்தேகப்பட வேண்டும்? என்னை மோசமான பெண் என்று நினைத்து விட்டாரோ?

    இல்லை… அப்படியெல்லாம் இருக்காது. அப்படிப்பட்ட தப்பான அபிப்பிராயம் இருந்தால், கணவரிடம் சண்டை பிடித்தோ அல்லது கெஞ்சிக் கூத்தாடியோ என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டுத்தானே மறுவேலை பார்ப்பார்? சந்தேகத்தை விட இனம் புரியாத பயம் அவரை ஆட்டிப் படைக்கிறது போலும்!

    சிறு வயதிலேயே பெற்றவர்களை இழந்து தவிக்கும் அபாக்கியவதிதான் நான். துரதிர்ஷ்டசாலிதான். பெற்றவர்களின் பாச மழையில் நனையக் கொடுத்து வைக்காதவள்தான்.

    ஆனால், கடவுள் இந்த இழப்புக்கு ஈடு செய்வது போல் அறிவை வாரிக் கொடுத்து விட்டாரே!

    வகுப்பில் எப்போதும் நம்பர் ஒன்தான். படிப்பிலும் ஸ்போர்ட்ஸிலும் கோல்ட் மெடல் வாங்கும் அளவுக்குத் திறமையையும் அறிவையும் அள்ளிக் கொடுத்த கடவுள், அதற்கு நிகராகப் பேரழகோடு என்னைப் படைத்து விட்டாரே!

    இந்தப் பேரழகையும் நிறத்தையும் பார்த்து விட்டுத்தான் காந்தாமணி அம்மாவுக்கு, என் மீது இனம் புரியாத பயம் ஏற்பட்டிருக்கிறது போலும்! தனது இரு மகன்களில் ஒருவன், இந்தப் பேரழகில் மயங்கி, மனதைப் பறிகொடுத்து விடுவானோ என்று பயந்துதான், என் மீது குரூரப் பார்வை வீசிச் செல்கிறார்.

    இதைப் புரிந்து கொண்ட நான், ஜமீன் மாளிகையில் ராஜதுரை, பாண்டித்துரையின் நடமாட்டம் தெரிந்தால், கூடுமானவரை எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையிலேயே முடங்கிக் கிடக்கிறேனே!

    ராஜதுரை, காந்தாமணி - கருணாகரன் தம்பதியினரின் மூத்த மகன். கன்னங்கரேலென்ற நிறத்துடன், பெரிய விழிகளுடன், ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நடமாடுபவன்.

    அவனைக் கண்டாலும் உள்ளூரப் பயம்தான். தப்பித் தவறி ஏதோ வில்லனைப் பார்த்துவிட்டாற் போன்ற நடுக்கம்தானே ஏற்படுகிறது!

    கண்டமனூர், கூடலூர், கம்பம், கம்பம் மெட்டு, தேவாரம், மூணாறு, சுருளி போன்ற இடங்களிலுள்ள எஸ்டேட்களையும், தேனியில் உள்ள நிறுவனங்களையும் இவர்தானே கவனித்து வருகிறார்.

    இவரைத் தினமும் மாளிகையில் நேருக்கு நேர் சந்திக்காமல் இருக்க முடியாது. அப்படி அவர் எதிர்ப்படும் தருணங்களில், பேயைக் கண்டுவிட்டாற் போல் முகம் வெளிறி, ஓடிப்போய் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே!

    இளைய மகன் பாண்டித்துரை, வெளிநாட்டில் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி! பாண்டித்துரை எப்போவாவதுதான் மாளிகைக்கு வருவது வழக்கம்.

    நல்ல நிறத்துடன், பார்ப்பதற்கு நாகரிகமாய், நாசூக்காய், பரம சாதுவாய் வளைய வருபவன் அவன்.

    அவனைக் கண்டால் அப்படியொரு பயம் தோன்றாமல் இருந்தாலும், காந்தாமணியை நினைத்து, ‘எதற்கு வீண் வம்பு?’ என்று கூடுமானவரை வெளியில் தலைகாட்டாமல் இருக்க வேண்டியதிருக்கிறதே!

    அதையும் மீறி, ஒருசில சந்தர்ப்பங்களில் அவனை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால், என்னைப் பார்த்து முகம் மலர சிநேகப் பார்வையுடன் ஆர்வமாய்ப் பேசுவதற்கு நெருங்கி வருவதைப் புரிந்து கொண்டு, பாம்பை மிதித்து விட்டாற்போல் பயந்து விலகி ஓட வேண்டியிருக்கிறதே!

    பகவானே…! எனக்கு ஏன் இந்த நிலைமை? இன்னமும் எத்தனை காலத்திற்கு நான் அந்த மாளிகையில் அடைக்கலமாய்த் தங்குவதாம்? முள்ளின் மீது இருப்பதைப் போன்ற அவஸ்தையுடன் நான் அங்கே தங்கியிருக்கிறேனே!

    படித்து முடித்து விட்டேன். படிப்புக்கேற்ற வேலையை நான் தேடிக்கொண்டால் என்ன? கருணாகரன் ஐயாவிடம் இதைப் பற்றிப் பேசி அனுமதி வாங்கினால் என்ன?

    அவர் அனுமதிப்பாரா? அனுமதி வாங்கிக் கொண்டு, வேலைக்குச் செல்ல வேண்டும். அப்படி வேலைக்குச் சென்றால், தனியாக நல்லதொரு மகளிர் விடுதியாகப் பார்த்து, அங்கே தங்கிக் கொண்டால் என்ன?

    ஆம்! அப்படித்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் எனக்கு நிம்மதியும் ஒரு சுதந்திர உணர்வும் கிடைக்கும்.

    கலையழகுடன் கூடிய மர வேலைப்பாடுகளுடன் ஏராளமான அறைகளைக் கொண்ட மிகப் பிரமாண்டமான மாளிகைதான்! ஆனால், அங்கு எனக்கு மூச்சுத் திணறுவது போன்ற இறுக்கமான உணர்வுதானே ஏற்படுகிறது?

    வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்ததற்கு நூறு கும்பிடு போட்டுவிட்டு, வேலைக்குச் செல்ல வேண்டியதுதான். சொந்தக் காலில் சுயமாய் நின்று சம்பாதித்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம். அதுதான் சரி!

    அதற்குப் பெரியவர் அனுமதிப்பாரா என்று தெரியவில்லையே?

    தூரத்து உறவு என்று சொல்லிக்கொண்டு, மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என்னைப் பார்க்க வரும் பர்வதம் அத்தையை, அவ்வளவு சுலபத்தில் மாளிகைக்குள் நுழைய அனுமதித்ததே இல்லையே! வெகு நேரம் காக்க வைத்து, கணக்குப் பிள்ளை சாம்பசிவம் பெரியவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு வந்து அழைத்துச் செல்வார்.

    அதுவும் பரந்த ஹாலில் வைத்துத்தானே பேச அனுமதி வழங்கப்படுகிறது. கூடவே நிழலாய்த் தொடர்ந்து, கண் கொத்திப் பாம்பாய் இவர்களை நோட்டமிட்டு, சம்பாஷணையை முழுவதுமாகச் செவிமடுத்த வண்ணம் சாம்பசிவம் நின்று கொண்டிருப்பாரே!

    அத்தை பர்வதம், நான்கைந்து முறை தனது மகன் திவாகரனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தாரே…! அத்தைக்கும் சரி, அத்தான் திவாகரனுக்கும் சரி… என்னுடன் மனம் விட்டுப் பேசுவதற்குக் கட்டுக் கொள்ளாத ஆர்வம்தான். ஆனால், அந்த மாளிகையில் அது நடக்கிற காரியமா?

    நல்லாயிருக்கியா வீணா? என்பார் அத்தை.

    எப்படி இருக்கே வீணா? என்று மெல்லக் கேட்பார் திவாகரன்.

    கிணற்றிலிருந்து குரல் வருவது போல், மிக மெல்லிய குரலில் நானும், நல்லாயிருக்கேன்! என்றுதானே பதில் கூற வேண்டியதிருக்கிறது.

    ஆரம்பத்தில் அத்தை ஸ்வீட், பலகாரம் என்று பை நிறைய வாங்கிக் கொண்டுதானே வந்தார்! அதற்கும் தடைவிதித்து விட்டார்களே!

    ஒருமுறை கவிதைப் புத்தகம் வாங்கிக் கொண்டு வந்து அத்தான் திவாகரன் எனக்குப் பரிசளித்தபோது, மாடிப் படிகளிலிருந்து நிதானமாக இறங்கி வந்து கொண்டிருந்த பெரியவர் கருணாகரன், அதைப் பார்த்துவிட்டு வெகுவாய் வெகுண்டு போனாரே!

    யாரும் இவளுக்கு எந்தப் பரிசும் குடுக்கத்தேவையில்ல… இவளுக்கு இங்கே ஒரு குறையும் இல்ல. இந்த மாளிகையிலே பெரிய லைப்ரரியையே என்னால உருவாக்கித் தர முடியும். தவிர, வார - மாதப் பத்திரிகைகள் முதற்கொண்டு எல்லாப் புத்தகங்களும் தவறாம இங்க வந்துட்டுத்தான் இருக்கு…

    வேணுங்கிறதை வாங்கித் தர்றதுக்கு இங்க ஆட்படையே இருக்காங்க. ‘இதுவே கடைசித் தடவையா இருக்கட்டும். என் வார்த்தையை மீறினா என்ன நடக்கும், தெரியுமில்லையா? மூணு நாலு மாசத்துக்கு ஒருவாட்டி இங்க எட்டிப் பார்த்துட்டுப் போறீங்களே… அதுக்கு ஒரேயடியா முற்றுப்புள்ளி வெச்சுடுவேன். ஜாக்கிரதை! என்று உறுமியதும், அத்தையும் திவாகரும் அப்படியே திகைத்துப் போய் விட்டார்களே!

    மன்னிக்கணும் ஐயா! இனிமே நான் வீணாவுக்கு எந்தப் பரிசும் தரமாட்டேன்! என்று தழைந்த குரலில் திவாகர் மன்னிப்புக் கேட்டாரே!

    அத்தையும் திவாகரும் பரிதாபமாய் விழிப்பதைப் பார்க்கும்போது, எனக்குத் தர்மசங்கடமாக இருக்கிறதே!

    இது மட்டுமா?

    உங்க குடும்பத்துக்கு நாங்க ரொம்ப வேண்டப்பட்டவங்க வீணா… என்று சொல்லிக்கொண்டு எப்போதாவது தலைகாட்டும் வக்கீல் வாசுதேவன் மாமாவும், முனியன் தாத்தாவும் என்னைப் பார்த்துப் பரிதாபப் பார்வையை வீசிவிட்டுத் தயங்கித் தயங்கித் திரும்பிப் பார்த்தபடி மாளிகையை விட்டுச் செல்கிறார்களே… அவர்களும் என்னிடம் மனம் விட்டுப் பேசியதில்லையே!

    பேச முடியவில்லை என்பதுதான் உண்மை.

    ஏதோவொரு முக்கியமான விஷயத்தை என்னிடம் சொல்வதற்கு அவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள் என்று உள் மனம் கூறுகிறது.

    ‘அது என்னவாக இருக்கும்?’ என்று தலைக்குள் வண்டு தினமும் குடைந்து கொண்டே இருப்பதுதான் மிச்சம்!

    இந்த மாளிகையில் தங்கியிருக்கும் வரை, யாரும் என்னிடம் வெளிப்படையாகப் பேசப் போவதில்லை.

    வெகு சீக்கிரமாய் வேலையைத் தேடிக்கொண்டு, இந்த மாளிகையை விட்டு வெளியேறிவிட வேண்டும். வெளியேறுவதற்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லையே!

    பெரியவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவரது அனுமதியுடன்தான் நான் வேலைக்குச் செல்ல வேண்டும். அவரை

    Enjoying the preview?
    Page 1 of 1