Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavennai Kalavaduthey...!
Kanavennai Kalavaduthey...!
Kanavennai Kalavaduthey...!
Ebook345 pages2 hours

Kanavennai Kalavaduthey...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்... இப்படி யாரோ ஒருவரின் மீதான நேசம்தான் நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

அப்படியொரு வேளையில் தன்னுடைய காதலை மனதிற்குள் புதைத்து கொண்டு காதலியின் குடும்ப பிரச்சனைக்காக போராடுகிறான் கதாநாயகன்

அவனுடைய காதலை கதாநாயகி ஏற்றுக்கொண்டாளா? இல்லையா? என்பதை நாவலில் இறுதியில் படித்து தெரிந்து கொள்ளலாமா...

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580129508154
Kanavennai Kalavaduthey...!

Read more from Daisy Maran

Related to Kanavennai Kalavaduthey...!

Related ebooks

Reviews for Kanavennai Kalavaduthey...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavennai Kalavaduthey...! - Daisy Maran

    https://www.pustaka.co.in

    கனவென்னை களவாடுதே...!

    Kanavennai Kalavaduthey...!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https: //www. pustaka. co. in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்–16

    அத்தியாயம்-17

    அத்தியாயம்-18

    அத்தியாயம்-19

    அத்தியாயம்-20

    அத்தியாயம்-21

    அத்தியாயம்-22

    அத்தியாயம்-23

    அத்தியாயம்-24

    அத்தியாயம்-25

    அத்தியாயம்-1

    காலை வேளை...

    வானம் நிறமிழந்து மங்கி காணப்பட்டது. பாகுபாடின்றி முதல் நாள் பெய்த மழையின் சுவடு வீட்டின் உள்பக்கம் வரை ஊடுருவி மழையின் ஈர வாசனையை வீடெங்கிலும் படர விட்டிருந்தது.

    ஆனந்தகீதன் தூக்கத்திலிருந்து விழிக்க மனமின்றி போர்வையை இழுத்துப் போர்த்திகொண்டு திரும்பவும் தூங்கத்தை தொடர முயற்சித்துக் கொண்டிருந்தான்.

    வீட்டின் நடு ஹாலில் அமர்ந்திருந்த அவனுடைய அப்பா, அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது அவன் காதுகளில் சன்னமாக ஒலித்தது. ஆனாலும் இது தினமும் நடப்பதுதானே என்ற ஒரு அலட்சிய போக்கோடு கண்களை இறுக்க மூடி படுத்துக்கொண்டான்.

    ஏண்டி... துரைக்கு இன்னமும் தூக்கம் கலையிலேயோ!... மணி எட்டாகப்போகுது இன்ன எந்திரிக்கலே... அப்பா வேத நாயகத்தின் குரல் வீதி வரை கேட்டது.

    மணி எட்டு தானே ஆகுது... அவன் இவ்வளவு சீக்கிரம் எழுந்திருச்சி என்ன பண்ண போறான்? புள்ள இன்னும் கொஞ்ச நேரந்தான் தூங்கட்டுமேங்க... அம்மா அமுதவல்லி மெல்லிய குரலில் கூறினாள்.

    நேத்து எத்தனை மணிக்கு வந்து படுத்தான்...? அப்பாவின் குரல் முன்பைவிட சற்று உயர்ந்திருந்தது.

    பன்னெண்டு மணி இருக்கும்னு நினைக்கிறேன்... ஏன் கேக்குறீங்க? நான் சரியா மணிய பாக்கல... ஃப்ரெண்டோட பர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு, வர லேட்டாகும்னு உங்ககிட்ட சொல்லிட்டு தானே போனா... அம்மா 12 மணி என்று சொன்னது பொய்!! இவன் லேட்டாக வந்து படுத்த போது சாப்டியா? இல்லன்னா டேபிள் மேல சாப்பாடு இருக்கு எடுத்து போட்டு சாப்பிடு. மணி ஒன்றரை ஆகுது இவ்வளவு லேட்டா வரலாமா?? என்று அக்கறையோடு கேட்டு விட்டுப் போனதை அப்பாவிடம் இருந்து மறைப்பது நன்றாவே புரிந்தது.

    அவன் எங்கிட்ட சொன்னாந்தான்.... இருந்தாலும் நேரா நேரத்துக்கு வந்து படுக்கனும்னு தெரிய வேணாமா...? கண்ட கண்ட நேரத்துல வந்து தூங்கினா... உடம்பு என்னத்துக்கு ஆகுறது? கேட்டா நீ வக்காலத்துப் வாங்குறே... நேத்து அவன் எத்தனை மணிக்கு வந்தான்னு உனக்கு தெரியுமா....? நைட் 1: 30 (ஒன்ரை) மணிக்கு வந்தான். கார் சத்தம் கேட்டு நான்தான் லைட்டை போட்டு கதவை திறந்து விட்டேன்...

    வயசு புள்ள அப்படி இப்படித்தான் இருக்கும். நேரா நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லத்தான் முடியும் வெளியில் போறவனுக்கு என்ன சூழ்நிலையோ.... என்னமோ.... கொஞ்சம் லேட்டா வந்துட்டான்... உடனே வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறீங்க... இப்போ அம்மாவோட குரல் சற்று உயர்ந்திருந்தது.

    மனைவி அமுதவல்லியை கோபத்தோடு முறைத்துப் பார்த்தார் வேதநாயகம்.

    வேதநாயகம், அமுதவல்லி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் முதல் பெண் சங்கரி திருமணமாகி கோயம்புத்தூரில் செட்டிலாகி விட்டாள்.

    சங்கரிக்கும் ஆனந்தக்கீத்தனுக்கும் பத்து வயது வித்தியாசம் சங்கரி பிறந்து பத்து வருடம் கழித்து தான் ஆனந்தகீதன் பிறந்தான்.

    சங்கரியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சங்கரி படிப்பில் கெட்டிக்காரி. எல்லா வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுப்பாள். கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வெளிநாட்டில் வேலை கிடைக்க, மகளைப் பிரிய மனமில்லாத பெற்றோர்கள் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டு, கோயமுத்தூரில் டாக்டராக இருக்கும் சொந்தக்கார பையன் ஒருவரைப் பார்த்து மகளுக்கு மணமுடித்து வைத்தார்கள். இப்போ சுந்தரிக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

    இரண்டாவது பையன் ஆனந்தகீதனை இன்ஜினியரிங் படிக்க வைத்து ʻஐடிʼ கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்து விட்டார் வேதநாயகம். மகன் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கினாலும் அந்த காசில் ஒரு பைசா கூட எடுக்காமல் தன்னுடைய வருமானத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்ந்துகொண்டு இருப்பவர் வேதநாயகம்.

    ஏய்... அமுதவல்லி, மச... மசன்னு.... நிக்காம போய் உம் பிள்ளையை எழுப்பு... இன்னைக்கு அவனுடைய தாத்தாவை பார்க்க போறதா சொன்னான். போறானா.... இல்லையான்னு... கேட்கணும் போய் எழுப்பு போ... அவர் கத்தி சொன்னது இவனுக்கு கேட்டது.

    இம்... இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை... என்று தாவங்கட்டையை தன் வலதுபுற தோள்பட்டையில் இடித்தபடி நகர்ந்தாள் கனகவல்லி.

    மகன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்து ஆனந்த்!! என்று குரல் கொடுத்த அடுத்த நிமிடம் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் ஆனந்தகீதன். கண்கள் இரண்டும் மூடி இருக்க, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி சோம்பல் முறித்தான்.

    என்னம்மா அப்பா கூப்பிட்டாரா...? ரகசிய குரலில் கேட்டான்.

    ʻஆமா... உன்கிட்ட ஏதோ உங்க அப்பா கேட்கணுமா உன்னை கூப்பிடுறாரு... நீயே வந்து உங்க அப்பாகிட்டே பேசிக்க... நீயாச்சு உங்க அப்பா வாச்சு... சீக்கிரம் எழுந்திருச்சு வா

    நான் தான் அப்பாகிட்ட நேத்தே சொல்லிட்டேனே? இன்னைக்கு ஈவினிங் தாத்தாவை பாக்க ஊருக்கு போறதா... திரும்பத்திரும்ப ரெண்டு பேரும் எதுக்கு தேவையில்லா விஷயத்துக்கு சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க? இன்னைக்கு ஈவினிங் கிளம்பினா விடிய விடிய ஊருக்கு போய் சேர்ந்திடுவேன். தாத்தாவை பார்த்துவிட்டு உடனே ரிட்டர்ன் ஆனேன்னா நைட்டுக்குள்ள சென்னைக்கு வந்துடலாம்... அம்மாவை தாண்டி அப்பாவுக்கும் கேட்கும் விதத்தில் சற்று சத்தமாகவே கூறினான் ஆனந்தகீதன்.

    இதெல்லாம் எங்கிட்ட ஏன் சொல்ற... உங்க அப்பா கிட்ட போய் சொல்லு.... அவருதான் உன்னை கூப்பிட்டுட்டு வர சொன்னாரு...

    நேத்தே தான் விளக்கமா சொன்னேனே, ஏம்மா... ஒரு தடவை சொன்னா அவருக்கு புரியாதா? காலங்காத்தால எழுந்து காட்டு கத்தலா கத்துகிட்டு இருக்காரு...?? இப்போ குரலை தாழ்த்தி சொன்னான் ஆனந்தகீதன்.

    கொஞ்சம் மெதுவாப் பேசு.... டா அப்பா காதுல கீதுல விழப்போகுது... அமுதவல்லி தன் கணவர் அமர்ந்திருந்த பக்கம் பார்த்தபடி கூறினாள்.

    மெதுவா தானே சொல்றேன் நீயே கத்தி காமிச்சு கொடுத்துடுவே போல இருக்கே... ரகசிய குரலில் கூறினான் ஆனந்தகீதன்.

    நான் எங்கடா கத்துறே... நான் மெதுவா தானே பேசுறேன். சரி ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு நான் முழிக்க வேண்டியதா இருக்கு சீக்கிரம் வா..."

    ஆமாம்மா... என்னால நீயும் சேர்ந்து திட்டுவாங்குறே... ஆனாலும் நீ ரொம்ப பாவம்மா‌.. இந்த மனுசன கட்டிக்கிட்டு வந்ததுல இருந்து எந்த சுகத்தையும் அனுபவிக்கலை, மாடா உழைச்ச ஓடா தேயிறே!! கட்டின பொண்டாட்டி மாதிரியா அந்த மனுஷன் உன்னை நடத்துறாரு வேலைக்காரியை விட கேவலமா இல்ல நடத்துறாரு... அப்படித்தானேம்மா... நான் சொல்றது கரெக்ட் தானே? ʻ

    ஆமான்டா... ஆனந்து ஏதோ... உனக்காவது என் கஷ்டம் புரியுதே....!! தொண்டை கரகரப்பை சரிசெய்தபடி பேசிய அம்மாவை பார்க்க ஆனந்தகீதனுக்கு சிரிப்பு வந்தது.

    இந்தப் பாட்டத்தானே டெய்லி பாடுறே... பின்ன புரியாம இருக்குமா...?

    சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டான்.

    டேய்... கி... கிண்டல் தானே பண்றே?? உதை வாங்குவே‌... முதல்ல எழுந்திருச்சு பல்லை வெளக்கிட்டு ஹாலுக்கு வா... உனக்கு போய் சப்போர்ட் பண்ணினே பாரு என்ன சொல்லணும்... நல்ல அப்பா நல்ல புள்ளை எனக்குன்னு வந்து வாச்சிருக்குதுங்க பாரு...

    ஹா ஹா ஹா ஹா...

    அம்மாவின் புலம்பலை கேட்ட ஆனந்தகீதன் சிரிப்பை அடக்க முடியாமல் உரக்க சிரித்தான். இடது கையை இடுப்பில் வைத்து, வலது கை ஆட்காட்டி விரலை உயர்த்தி ஜாக்ரதை என்று மிரட்டிவிட்டு அறையில் இருந்து வெளியேறினாள் அமுதவல்லி.

    என்னடி... அங்க சத்தம்? சீக்கிரம் வந்து டிபனை எடுத்து வை... சாப்புட்டு பேங்க் பக்கம் போயிட்டு வரணும்...

    அம்மா.... அம்மா... அறையிலிருந்து வெளியே போன அம்மாவை வேகவேகமாக கூப்பிட்டான்.

    என்ன சொல்லு எனக்கு சமையல் ரூம்ல நிறைய வேலை இருக்கும்...

    ஏம்மா... உன் புருஷனுக்கு சுத்தமா மூளையே இல்லையா? இன்னைக்கு சண்டேம்மா... பேங்க் லீவுன்னு போயி அவருகிட்ட சொல்லு போ...

    ஏய்... அமுதவல்லி...

    இதோ வரேங்க... என்றவள்,

    கூப்பிட்டீங்களா...? என்றாள்.

    உள்ளார ஒரே சிரிப்பு சத்தமாக கேட்டிச்சி... அதான் என்னன்னு கேட்டேன்...? அவர் பார்வை ஆனந்தகீதன் இன் அறையை நோக்கி இருந்தது.

    ஒன்னும் இல்லைங்க... ஆமாம்... இன்னிக்கு பேங்க் லீவாச்சே!!... பேங்குக்கு போறேன்னு சொல்றீங்க? இன்னைக்கு சண்டேங்க மறந்துட்டீங்களா...? பெருசா எதையோ கண்டு பிடித்துவிட்ட மனநிறைவோடு கேட்டாள் கனகவல்லி.

    யாரு... உம் புள்ள சொல்ல சொன்னானா...? வேத நாயகம் ஆராய்ச்சி பார்வையோடு மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

    ஆ... ஆமா... இல்ல... இல்ல

    தலையை மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் மாத்தி மாத்தி ஆட்டினாள் கனகவல்லி.

    அதானே பார்த்தேன் உன் அப்பனை போல உனக்கும் மூளை கம்மியாச்சே.... நீ எப்படி கண்டுபிடிச்சேன்னு பார்த்தேன்...? அவர் குரலில் கேலி இழையோடியது.

    ஆமா... இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல, என் அப்பாவை பத்தி பேசலன்னா உங்களுக்கு தூக்கமே வராதே... இவ்வளவு அறிவா இருக்கீங்களே... இன்னைக்கு சண்டே பேங்க் இல்லேங்கிறது மட்டும் ஏன் தெரியல...?

    என்று சொல்லிவிட்டு அவரின் அடுத்த வார்த்தை தாக்குதலை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.

    ஆனால் அவரோ பதில் ஏதும் சொல்லாமல் புன்முறுவல் பூத்தார்.

    என்னாச்சு என்பது போல் அழுதவல்லி தன் கணவன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க,

    பேங்க் பக்கம் போயிட்டு வரேன்னே தானே சொன்னேன். பேங்குக்கு உள்ளார போறேன்னா சொன்னேன்? பேங்க் வாசல்ல பழக்கடை வச்சுருக்கானே நம்ம குமாரு அவன் கிட்ட ஊருக்கு கொடுத்து அனுப்பனும் பழங்கள் ரெண்டு பாக்ஸ் எடுத்து வைன்னு சொல்லிட்டு வந்தேன். உடம்பு சரியில்லாத மனுஷனை பார்க்க போறான் வெறுங் கையோட போனா நல்லா இருக்குமா?? அதுக்கு தான் ஒரு பாக்ஸ் ஆப்பிளும், ஒரு பாக்ஸ் ஆரஞ்சும் எடுத்து வையின்னு நேத்து கோர்ட்ல இருந்து வரும்போது அவனைப் பார்த்து சொல்லிட்டு வந்தேன். போய் பழத்தை வாங்கிட்டு வரலாமுன்னு கிளம்புனா... நீயும் உன் பிள்ளையும் உங்கள ரொம்ப அறிவாளிங்க மாதிரி நெனச்சுக்கிட்டு என்ன முட்டாளாக்க பாக்குறீங்க... அப்படித்தானே...?? புருவத்தை சுருக்கியபடி மனைவியை பார்த்து கேட்டார் வேதநாயகம்.

    முகத்தை டவலால் துடைத்தபடி பெட்ரூமிலிருந்து வெளியில் வந்த ஆனந்த் தர்மசங்கடத்தோடு நெளிந்து கொண்டிருந்த தன் அம்மாவைப் துருதுருவென பார்க்க, இதற்கெல்லாம் காரணம் ʻநீ தானேடா... ʻஎன்பதுப்போல் மகனை கோபத்தோடு முறைத்தாள் அமுதவல்லி.

    அப்பா... கடைக்கு போகணுமாப்பா...? டிபன் சாப்பிட்டுகிட்டே இருங்க நான் ஒரு டென் மினிட்ஸ்ல... குளிச்சிட்டு வந்திடறேன்!!... நம்ம கார்லேயே போயிட்டு வந்துடலாம்பா...

    அதெல்லாம் ஒன்னும் வேணாம் பா... நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு நான் டூவீலரில் போயிட்டு வந்துடறேன்... மகனைப் பார்த்துக் பாசத்தோடு கூறினார் வேதநாயகம்.

    எதுக்கு டூ வீலர்ல போறீங்க‌...? நான் கூட்டிட்டு போறேன். நான் ப்ரீயா தானே இருக்கேன்‌... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வந்துடறேன்... என்றவன் சமையலறை பக்கம் பார்த்து குளிச்சிட்டு வந்து... காபி குடிக்கிறேம்மா" என்று குரல் கொடுத்தபடி அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

    சரி... சரி... குளிச்சிட்டு வா... சாப்பிட்ட பிறகு ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்... என்றவர் மனைவியின் பக்கம் திரும்பி,

    எனக்கு டிபனை எடுத்து வை.. சாப்பிட்டு மாத்திரை போடணும்... என்றார்.

    எல்லாம் டேபிள்ள எடுத்து வச்சிருக்கேன் போய் சாப்பிடுங்க... அமுதவல்லியின் குரலில் கோபம் இன்னும் மிச்சம் இருப்பதை உணர்ந்தார் வேதநாயகம்.

    ஆனந்து... மெடிக்கல் ஷாப்புக்கு போயிட்டு அப்புறம் கடைக்கு போகணும் கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்...

    ஓகேப்பா... ஒரு டென் மினிட்ஸ் வந்துடறேன்.

    ஆனந்த்... ஆனந்து... அறை கதவை திறந்துகொண்டு வெளியில் வந்தவன்,

    "சொல்லுங்கப்பா...? என்றான்.

    "தாத்தாவை பார்க... ஊருக்கு எத்தனை மணிக்கு கிளம்புற‌...?

    இன்னைக்கு ஈவினிங் கிளம்புறதா இருக்கேன் பா‌.... அஞ்சு மணி நேரம் தானேப்பா நைட்டு அங்க போயிட்டாக்கூட... தாத்தாவை பாத்துட்டு நாளைக்கு காலையில கிளம்பினா நாளைக்கு நைட்டுக்குள்ள ரிட்டர்ன் சென்னைக்கு வந்துடலாம். ஆபீஸ்ல மண்டே ஒரு நாள் மட்டும் தான் லீவ் கேட்டிருக்கேன் அதான்... அங்கிருந்து உடனே கிளம்பினால் தான் நைட்டு இங்க வந்து ரெஸ்ட் எடுத்துட்டு காலைல ஆபீஸ் போக முடியும்...

    நைட்... ட்ராவல் இல்லாம பகல்ல போனேனா நல்லா இருக்கும்னு பார்த்தேன். ஓகே ஓகே உன்னுடைய விருப்பம். ஆனா கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடு ஏன்னா நம்ம கிராமத்துக்கு போற ரோடு முன்ன மாதிரி இல்ல... போனமாசம் பெய்த மழையில ரொம்ப மோசமா மாறிடுச்சாம் கொஞ்சம்... இல்ல.., ரொம்பவே மோசமா இருக்காம். அதனால ரொம்ப அண்ட் டைம்ல போவதைவிட கொஞ்சம் சீக்கிரம் போனேனா நல்லா இருக்கும்...

    ஓகே பா... ஒரு ʻ5’ o clockʼ மாதிரி கிளம்புறேன் சரிங்களா...?

    ம்ம்... இன்னொரு விஷயம் உங்க அக்காவுக்கு நாளைக்கு பர்த்டே ஊருக்கு போற அவசரத்துல அதை மறந்துடாதே... காலைல போன் பண்ணி அவளுக்கு விஷ் பண்ணிடு சரியா...

    ஞாபகம் இருக்குப்பா நான் பாத்துக்குறேன்...

    இவ்வளவு நேரம் அவனை காட்டு கத்தலா கத்திட்டு புள்ளைய நேர்ல பார்த்தவுடனே பொட்டிப் பாம்பாய் அடங்கிப் போயிட்டாரே!! மனுஷன் நல்லாவே நடிக்க கத்து வச்சிருக்கிறார்...!!

    என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி சமையலறை பக்கம் போனாள் அழுதவல்லி.

    ஒருமணி நேரத்திற்குப் பிறகு...

    அப்பா பிள்ளை இருவரும் கிளம்பி வெளியில் சென்றவுடன், மதிய சமையலையும் மாமனாருக்கு பிடித்த பால்கோவாவையும் செய்து முடித்தாள் அமுதவல்லி.

    பழ பெட்டிகளோடு வீட்டிற்கு வந்தவர்களுக்கு மதிய உணவை எடுத்து டேபிளில் வைத்தவள்.

    ஏமா... சங்கர் வந்தானா வீட்டுக்கு வர்றேன்னு சொன்னான்... கால் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது... அதான் நான் வெளியில போன பிறகு வந்தானான்னு கேட்டேன்...?

    இல்லையப்பா... அவ அம்மா நம்பர் இருந்தா போனை போடு... உன்கிட்ட இருக்கா இல்ல நான் தரட்டா...

    இருக்கு இருக்கு ஓகே நா அவங்க அம்மா நம்பருக்கு ட்ரை பண்ணி பாக்குறேன்‌... என்றவன் வெகுநேரமாக சங்கரின் அம்மா நம்பருக்கு ட்ரை பண்ணி விட்டு,

    என்னன்னு தெரியல அங்க நம்பரும் சுவிட்ச் ஆப்னு வருது... ஏதோ சம்திங் ராங்‌‌... என்று நினைக்கிறேன். சரி ஓகே நான் கொஞ்ச நேரம் படுத்து ஒரு குட்டித்தூக்கம் போட்டுட்டு வரேன்... அப்புறம் இன்னொரு விஷயம் உங்க மாமனாருக்கு எப்பவும் போல.... ஏதாவது செஞ்சி வச்சிருப்பியே!, அதையெல்லாம் எடுத்து டேபிள் மேல ரெடியா வச்சுடு.... போகும்போது எடுத்துட்டு போறதுக்கு ஈசியா இருக்கும். அப்புறம் நான் மறந்துட்டு போயிட்டேன்னு என்ன குறை சொல்லக்கூடாது...

    அதெல்லாம் அப்பவே... எடுத்துட்டுப் போய் காரில் வச்சிட்டேன். நீ மறந்துட்டு போறீயோ இல்லையோ? நான் மறந்துடுவேன் அதுக்காக தான் இந்த முன்னேற்பாடு... எப்படி என்னுடைய ஐடியா??

    பார்ரா.... மாமனார் மேல அம்மாவுக்கு எவ்வளவு பாசத்தை பாரு...

    பின்ன பாசம் இருக்காதா என்ன?? உங்க அப்பா என்ன பொண்ணு பாக்க வந்தபோ... ʻஉனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ இதுதான் எங்க வீட்டு மருமக இவளத்தான் நீ கட்டிக்கணும்ʼ அப்படின்னு உங்க அப்பாவை மிரட்டியில்லே என் கழுத்தில் தாலி கட்ட வச்சாரு... அவரை எப்படி என்னால மறக்க முடியும்...?

    சரி... சரி... இப்படியே நீ பேசிக்கிட்டே இருந்தேன்னா நான் எப்படி தூங்குறது... எனக்கு தூக்கம் வருது பாய்...

    அடப்பாவி.... என் வாயைக் கிளறிட்டு நா... தொண தொணன்னு பேசுறேன்னு சொல்றீயா... இரு இரு... எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கெடைக்காமலா போயிடும்... அப்ப வச்சிக்கிறேன்?

    என்று புலம்பின அம்மாவுக்கு,

    ஹா ஹா ஹா ஹா என்ற சிரிப்பை பதிலாக கொடுத்து விட்டு தன் அறையை நோக்கி சென்றான் ஆனந்தகீதன்.

    மாலை ஐந்து மணிக்கு கிளம்புறேன் என்றவனை அவசர அவசரமாக எழுப்பி நாலு மணிக்கே கிளம்பிடு.. நாலரை மணிக்கு மேல ராகுகாலம் ஆரம்பிச்சிடும் என்று நாலு மணிக்குள் அவசரப்படுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தார்கள் அவனுடைய பெற்றோர்கள்.

    மயிலாப்பூரில் இருந்து கிளம்பியவன் அடையார் பிரிட்ஜ்ஜை கடக்கும் போது அவனுடைய செல் அழைத்தது. வலது கை ஸ்டியரிங்கில் இருக்க இடது கையால் செல்லை எடுத்து ஆன் பண்ணி ஹலோ என்றான்.

    டேய் ஆனந்து நான் சங்கர் பேசுறேன் டா எங்க... டா இருக்க...?

    சொல்லு டா மச்சி வீட்டுக்கு வர்றேன்னு சொன்னே... ஆளக்காணும். போனும் சுவிட்ச் ஆப்ல இருக்கு எங்க இருந்து பேசுற இது யார் நம்பர்...?

    இது ஹாஸ்பிடல்ல ஒருத்தர்கிட்டே இருந்து வாங்கி பேசுறேன் போன்ல சார்ஜ் இல்லாம போயிடுச்சு...

    ஹாஸ்பிட்டலா... யாருக்கு என்னாச்சு டா...? பதட்டத்துடன் கேட்டாள்.

    அப்பாவுக்கு சுகர் ஓவரா ஆயிடிச்சுடா... பிட்ஸ் வந்து கீழே விழுந்துட்டார். என்ன பண்றதுன்னு புரியாம உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துட்டோம் ʻஐ சி யூʼ ல வச்சிருக்காங்க கொஞ்சம் பயமாத்தான் இருக்குடா... சங்கரின் குரல் பயத்தோடு வெளிவந்தது.

    ஒன்னும் பயப்படாத சங்கர்... நான் உடனே வர்ரேன்... எந்த ஆஸ்பிட்டல்...? காரை ஓரம் கட்டியபடி கேட்டான் ஆனந்தகீதன்.

    சங்கர் சொன்ன அந்த தனியார் மருத்துவமனையை இரண்டு நிமிடத்திற்கு முன்புதான் கடந்து வந்திருந்தான். அதனால் யூடேன் போட்டு சிக்னலில் காத்திருந்தப் பின் அந்த ஹாஸ்பிடலுக்கு அருகில் வந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.

    சங்கரின் அப்பாவை ஐசியூவில் வைத்திருந்ததால் இவனால் அவரை பார்க்க முடியவில்லை. எதிர்ப்பட்ட சங்கரை பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு சீப் டாக்டரை சந்தித்து விவரம் கேட்டு தெரிந்து கொண்டவன்,

    பயப்படுற மாதிரி எதுவும் இல்லடா... இன்னைக்கு நைட் ஃபுல்லா ʻஐசியூʼ லே இருந்துட்டு நாளைக்கு நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்களாம். அம்மா எங்கே அவங்கள பார்த்துக்கோ... நான் ஒரு முக்கியமான விஷயமாக ஊருக்கு போயிட்டு இருக்கேன்... இல்லன்னா உங்க கூட ஸ்டே பண்ணுவேன். போய்ட்டு வந்தவுடனே வந்து பார்க்கிறேன் பாத்துக்கோடா... நண்பனை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

    மச்சி... நாளைக்கே வந்துடுவியா...? என்று தயக்கத்தோடு கேட்டான் சங்கர்.

    நாளைக்கு நைட்டுக்குள்ள வந்துடுவேன். வந்தவுடனே நேரா ஹாஸ்பிடலுக்கு தான் வருவேன் சரியா... சென்னை வந்துட்டு உடனே கூப்பிடுறேன்...

    ஓகேடா... பாத்து பத்திரமா போயிட்டு வா... வாசல் வரை வந்து நண்பனை அனுப்பிவிட்டு திரும்பி சென்றான் சங்கர்.

    ஹாஸ்பிடலில் இருந்து வெளியில் வந்து மணியைப் பார்த்தவனுக்கு நெற்றி சுருங்கியது மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்நேரம் முட்டுக்காடு தாண்டி போய் இருக்கணும். ஆல்ரெடி இங்கேயே லேட்டாயிடுச்சு.

    சரியாக அந்த சமயம் பார்த்துதான் அவன் அப்பாவிடமிருந்து கால் வந்தது, பொய் சொல்வதை தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தான் ஆனந்த கீதன்.

    ஹலோ... ஆனந்த் எங்க போயிட்டு இருக்க இசிஆர் தாண்டியாச்சா...?

    இ... இல்லப்பா ஆன் த வே... நான் உங்களுக்கு அப்புறம் கால் பண்றேன்... பட்டென்று போனை கட் பண்ணினான். அதற்குமேல் பேசினால் எதையாவது உளறிக் கொட்டி விடுவோம் என்ற பயம்.

    போனை கட் பண்ணிவிட்டு அடையார் பிரிட்ஜ் ஏறி இறங்கி திருவான்மியூர் தாண்டி இசிஆர் ரோட்டை பிடித்து சீரான வேகத்தோடு காரை செலுத்தினான் ஆனந்தகீதன்.

    வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருந்த வாகனங்களின் நெருக்கடியால் கார் நகர்ந்துகொண்டிருந்தது.

    பொறுமை இழந்தவனாய் காரை மெல்ல நகர்த்திக் கொண்டிருந்தான்.

    அப்போ கிடைத்த கேப்பில் தாத்தாவைப் பற்றிய எண்ணம் மனதில் ஓடியது.

    சிறுவயதில் ஆனந்துக்கு தாத்தாவின் ஊருக்கு போவதென்றால் அறவே பிடிக்காது. காரணம் அடிப்படை வசதிகள் அற்ற அந்த ஊரும் அதன் சூழ்நிலைகளும் தான் இதனாலேயே பலமுறை ஊருக்கு போவதை தவிர்த்திருக்கிறான்‌. ஆனாலும் வருஷாவருஷம் கோவில் திருவிழா என்ற பெயரில் மொத்த குடும்பமும் கிளம்பி சென்று ஆடு கோழி என சாமிக்கு பலிகொடுத்து கறிச்சோறு சாப்பிட்டுவிட்டு வருவது வழக்கமாயிருந்தது.

    ஆனால் இப்பல்லாம் அப்படியல்ல... ஊரும் அதன் இயற்கை சூழ்நிலைகளும் அவன் மனதை ஆக்ரமிப்பு பண்ணி விட்டது என்றே சொல்லலாம்.

    போன வருடம் அத்தை வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு போனபோது ஆனந்தகீதந்தான் காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த பசுமையான வயல்வெளிகளை கடக்கும்போது தன்னை மீறிய புத்துணர்ச்சியோடு காரை ஓட்டினான். சிலு சிலுவென்று முகத்தில் மோதிய ஏறிக்கரை ஈரகாற்றும், காற்றோடு ஒட்டிக்கொண்டு வந்த தாழம்பூ வாசனையும் இதற்கிடையில்... விட்டு, விட்டு,

    Enjoying the preview?
    Page 1 of 1