Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Palaar
Palaar
Palaar
Ebook56 pages30 minutes

Palaar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பளார்" என ஒரு பெண் ஒரு மனிதனை அறைகிறாள்! ஏன் அவள் அறைகிறாள் என்ற கேள்வியை தொடர்ந்து உருவான விறுவிறுப்பான நாவல் இது! வழக்கம் போல சென்டிமென்ட், பரபரப்பு, விறுவிறுப்பு எல்லாம் கலந்த வேகமான நாவல்.

Languageதமிழ்
Release dateOct 26, 2021
ISBN6580137407571
Palaar

Read more from Shruthi Prakash

Related to Palaar

Related ebooks

Reviews for Palaar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Palaar - Shruthi Prakash

    https://www.pustaka.co.in

    பளார்

    Palaar

    Author:

    ஸ்ருதி பிரகாஷ்

    Shruthi Prakash

    For more books

    https://www.pustaka.co.in/home/author/shruthi-prakash

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்..01

    அத்தியாயம்..02.

    அத்தியாயம்..03

    அத்தியாயம்..04

    அத்தியாயம்..05.

    அத்தியாயம்..06.

    அத்தியாயம்..07

    அத்தியாயம்..08.

    அத்தியாயம்..09.

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம்.13

    அத்தியாயம்.14.

    அத்தியாயம்.15.

    அத்தியாயம்..01

    உன்னை விட அதிக சம்பளம்! பணக்கார பொண்ணு! பங்களா, கார்னு வாழறவ! அப்பா க்ரிமினல் லாயர்! எனக்கு இந்த வரன் வேண்டாம்னு தோணுது விக்கி! யோசனை பண்ணி செய். நமக்கு, குடும்பத்துக்கு அடங்கின பொண்ணா இருக்கணும். நீயென்னம்மா சொல்ற?

    அவனுக்கு புடிச்சிருக்கே! வாழப்போறவன் அவன்தானே? நான் என்னடி சொல்றது வசு?

    என்ன புடிச்சிருக்கு? இவன் அவளை லவ் பண்றானா? டென்னிஸ் மேட்ச்ல பார்த்திருக்கான். இவனும் ஒரு சக ப்ளேயர்ங்கற முறைல பேசி பழகியிருக்கான்! என்னப்பா நீங்க எதுவும் பேசாம இருந்தா எப்படி?

    அப்பா தசரதன் மெதுவாக சிரித்தார்.

    இதப்பாரு வசு! உன் தம்பி விக்னேஷ், பச்சக்குழந்தை இல்லை. படிச்சவன்! நல்ல உத்யோகத்துல இருக்கான். வயசும் இருபத்தி எட்டு. அந்தப்பொண்ணு பல்லவி கிட்ட பழகி, அவ சம்மதத்தையும் கேட்டாச்சு. அவளுக்கும் இவனை புடிச்சிருக்கு. அவங்க வீட்டுக்கும் இவனை கூட்டிட்டு போய் அவ அறிமுகப்படுத்தியாச்சு. அவங்க குடும்ப விவரம் எல்லாம் நமக்கு வந்தாச்சு. இதுக்கு மேல என்ன செய்ய சொல்ற?

    இவன் அங்கே போயிருக்கான். அவ இங்கே வந்தாளா?

    அதான், அவ சொல்லியிருக்காளேடீ, முறையா பெரியவங்க வந்து பெண் பார்த்த பிறகு, நான் அங்கே வர்றேன்னு! இதுதான் எனக்கு புடிச்சது! அவ பெரியவங்களை மதிக்கறா! சம்பிரதாயத்துக்கு மரியாதை குடுக்கறா. அழகா சொல்லியிருக்கா. அதனால அவளை போய் பார்க்கலாம்

    அவ பெங்களூர்ல வேலை பாக்கறா. நாம அங்கே போகணுமா?

    தேவைனா போகத்தான் வேணும்

    உள்ளூர்ல சென்னைல பொண்ணே இல்லையா?

    ஏண்டீ, அவனுக்கு புடிச்சவ எங்கே இருக்காளோ, அங்கேதானே அவளை போய் பாக்கணும்! என்னங்க! நீங்க அந்த லாயர் கிட்ட பேசி உடனடியா புறப்படற வழியை பாக்கலாம். இவ ஏதாவது சொல்லிட்டே இருப்பா

    அம்மா ருக்மணி சொல்ல,

    எல்லா வீடுகள்ளேயும் மகனை விட மகளுக்குத்தான் மரியாதை அதிகமா இருக்கும். இங்கே தலைகீழ்!

    "என்னிக்காவது ஒரு நாள் வந்து போற மகளா இருந்தா, மதிப்பு அதிகமா இருக்கும்..நீ எப்பவும் இங்கேதானே

    Enjoying the preview?
    Page 1 of 1