Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Solla Vaaraayo
Kaadhal Solla Vaaraayo
Kaadhal Solla Vaaraayo
Ebook195 pages1 hour

Kaadhal Solla Vaaraayo

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹீரோ ஹரிஹரன் கிராமத்துப் பையன்.மிகவும் கட்டுப்பெட்டியான குடும்பத்தின் வாரிசு. கூட்டுக்குடும்பம்.குடும்பத்தலைவியாய்ஒரு பாட்டி.அவர் சொல்லே அங்கே வேத வாக்கு. ஹீரோயின் லயா நேரெதிர். கோடீஸ்வர குடும்பத்தின் ஒரே வாரிசு.வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அதை அடைய எல்லா முயற்சியையும் செய்து ஜெயிக்கும் அவள் அப்பா.அவரே அவளுக்கு ரோல் மாடல்.நினைத்ததை அடையவேண்டும் என்பது அவள் குணம். ஹரியைப் பார்த்ததும் பிடித்துப்போகிறது லயாவுக்கு.அவனை மணந்தே தீரவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறாள். இதற்கிடையில் ஹரி கூறிய பொய் அவர்களுக்கிடையில் பிளவை உண்டுபண்ண... ஹரி பற்றி அவனுக்கே தெரியாத ரகசியம் என்ற பல தடைகளைத் தாண்டி இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580156308636
Kaadhal Solla Vaaraayo

Related to Kaadhal Solla Vaaraayo

Related ebooks

Reviews for Kaadhal Solla Vaaraayo

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Solla Vaaraayo - Madhura

    http://www.pustaka.co.in

    காதல் சொல்ல வாராயோ

    Kaadhal Solla Vaaraayo

    Author:

    மதுரா

    Madhura

    For more books

    https://www.pustaka.co.in/home/author/madhura

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தங்கமலர்களின் அறிமுகம்.

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    தங்கமலர்களின் அறிமுகம்.

    சங்கப் பலகையில் ரிலே தொடர் ஆரம்பித்தபோது உருவான ஐவர் குழு. இதுவரை மூன்று தொடர்களை வித்தியாசமான கதை அம்சத்துடன், சிறப்பான கருத்துகளுடன், அற்புதமாக எழுதியுள்ளார்கள். அதைவிட மகிழ்ச்சியான விஷயம், இவர்கள் நடுவில் நிலவும், அற்புதமான ஒற்றுமை. அன்னியோன்யம்.

    எந்த வித ஈகோவும் இல்லாமல் சிறப்பாக கதையைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு வாட்சாப் குழு ஆரம்பித்து, அருமையாக கதையை ஆலோசித்து, எழுதினார்கள்.

    ரிலே தொடரின் வெற்றிக்கு அடிவாரமாக இருப்பது இந்த ஐவரின் ஒற்றுமையும், கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு எழுதியதுதான்.

    இது இக்கூட்டணியின் நான்காவது நாவல்.

    அவர்களுக்கு என் அன்பான நன்றிகளும், வாழ்த்துகளும். இது மேலும் மேலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை.

    சங்கப் பலகையை ஜொலிக்க வைக்கும் அவர்களின் திறமைகளைப் பற்றி இதோ அவர்களின் வார்த்தைகளில்.

    ***

    மதுரா

    புனைப்பெயர் :.மதுரா

    இயற்பெயர் - தேன்மொழி ராஜகோபால்..

    படித்தது - ஆங்கில இலக்கியம்..

    மரபு நவீனக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

    கோகுலம், மங்கையர்மலர், தினமலர், ஆனந்த விகடன், இனிய உதயம் போன்ற பிரபல இதழ்களிலும் பதாகை  காணிநிலம் உள்ளிட்ட சிற்றிதழ்களிலும் தகவு, நகர்வு, கதவு, செந்தூரம் ,மகாகவி, கலகம், சொல்வனம் உள்ளிட்ட இலக்கிய இதழ்களிலும் மின்னிதழ்களிலும் படைப்புகள் வெளியாகி உள்ளன...

    வெளியான நூல்கள்

    சிதறும் முத்துகள் என்ற தன்முனைக் கவிதைகள் தொகுப்பு

    பிராயசித்தம்என்ற சிறுகதைத்தொகுப்பு

    தழல்பூக்கள் குறுநாவல்

    முதல் கவிதைத் தொகுப்பு சொல் எனும் வெண்புறா

    நவீன கவிதைகள்

    இருமொழி நூல்.மொழியாக்கம்

    ***

    செல்லம் ஜெரினா.

    சீர்மிகு சீர்காழியில் பிறந்து சிங்காரச் சென்னையில் வளர்ந்து கவின் மிகு கோவையில் வாழ்க்கைப்பட்டு சுந்தரத் தெலுங்கு பேசும் ஆந்திரத் தலைநகரில் வெள்ளிவிழாக் காலம் வாழ்ந்து மீண்டும் பேக் டூ பெவிலியன் தமிழகம். 2008 ல் தினமலர் வாரமலரின் சிறுகதைப்போட்டியில் என் முதல் கதையே பரிசு பெற அப்போது துவங்கியது எழுத்தின் ஓட்டம். பல போட்டிகளில் வென்றாலும் கலைமகளில் அமரர் ராஜரத்னம் குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றது மைல்கல் எனலாம். என் எழுத்துக்குக் கிடைத்த அங்கிகாரம் என்பேன். பரவலாக எல்லா வார மாத இதழ்களிலும் சிறுகதைகளாகவே எழுதி சதமடித்த சமயம் ... சங்கப்பலகை முகநூல் குழுமம் நாவல் போட்டி வைக்க அதிலும் பரிசு பெற்றேன்.சிறந்த மேடையாக அமைந்தது அது. புதிய முயற்சியாக ஐவர் குழுவின் படைப்பாக ரிலேத் தொடர் வந்தது. புது அனுபவமாய் கனிந்தது. மாய ஊஞ்சலைத் தொடர்ந்து என்னுயிர் நீதானே! புதிய மெருகோடு வெளியானது. என் நாவல்கள் புஸ்தகா.காமில் இ- புக்ஸ் ஆகவும் வந்துள்ளன.

    என்னுடைய சிறுகதைகள் சில ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகமாகவும் வந்துள்ளன.

    ***

    விஜி சம்பத் முதுகலைப் பட்டதாரி.

    சேலத்தில் வசிக்கும் இவருக்கு எழுத்தார்வம் அதிகம். பல சிறுகதைகள், குறுந்தொடர், தமிழ் வார மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. தினமணி கதிர்,தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். தினத்தந்தியில் சில கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. அன்பின் வழியது உயிர்நிலை என்ற முழுநாவல் அமேசான் வெளியீடாக வந்துள்ளது. ஆறுபடை வீடு முருகன் மேல் எழுதிய ஆறு பாடல்கள் குறுந்தகடாக வெளி வந்துள்ளது. பாபாவைப் பற்றி எழுதிய கவிதைகள் நூறைத் தாண்டி இன்னும் ஒரு வாட்சாப் இலக்கியக் குழுவில் வந்து கொண்டிருக்கிறது.

    இவருடைய சிறுகதைகள், நாவல்கள் தொகுப்பாக புஸ்தகா.காமில் ஈ புத்தகமாக வெளி வந்துள்ளது. இருநூறு பேர் கொண்ட ஒரு பிரபல வாட்சாப் குழுவின் அட்மினாக உள்ள இவரின் சொற்கள் அனைவரையும் வழி நடத்திச் சென்றுள்ளது.

    புதிய புதிய கருத்துக்களுடன் பல சிறுகதைகள் எழுதி பரிசுகள் பெற்றுள்ள இவர், தெய்வீகப் பாடல்கள் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். அவைகள் குறுந்தகடுகளாகவும் வந்துள்ளன.

    ***

    சாய்ரேணு

    தமிழ் பிறந்த பொதிகையின் மடியில் தவழும் தென்காசி என் ஊர். பள்ளிப் படிப்பெல்லாம் தென்காசியில்தான். இளைய வயதிலேயே தமிழில் ஈடுபாடு வந்தது. மாதவன் கருணையால் மன்னுபுகழ் மகாபாரதம் ஏழுவயதிலிருந்து தோன்றாத் துணையானது. கவிதைகள் எழுதக்  கைவந்தது. அவைகளில் சில பத்திரிகைகளில் வந்துள்ளன. என் தாய் தந்தையர் கவிதைகளெழுதவும் மேடைப் பேச்சுகளிலும் மிகுந்த ஊக்கமளித்தார்கள். பள்ளிப் பருவத்தில் நிறைய பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.

    பொறியியல் துறையில் பட்டம் பெற்றேன், ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. உபநிடதம், புராணம், இதிகாசங்கள், திருமுறை, திவ்வியப் பிரபந்தம், திருத்தலப் பயணங்கள் இவற்றில் ஆர்வம் அதிகம். பண்டைய கால  ஆய்வுகள், இலக்கியங்கள் பற்றிக் கற்பதில் மிகுந்த ஆவல்.

    நான் ஆன்மீகம் மற்றும் துப்பறியும் கதைகள் என்ற இரு துறைகளிலும் எழுதுகிறேன். இவ்விரண்டுமே சத்தியத்தை அறியும் முயற்சிகளன்றோ!

    நான் சத்தியத்தை உபாசிக்கிறேன். சத்தியமே இறைவன் என்று நம்புகிறேன். எல்லோருக்குள்ளும் அந்த இறைசத்தியம் சந்நிதி கொண்டிருக்கிறது.

    என் மை - உண்மை என்று முழங்கும் எழுத்தாளராக இருக்கவே விரும்புகிறேன். ஆன்மீகமும் க்ரைம் கதைகளும் மாயாஜாலக் கதைகளும் என் எழுத்தில் முரண்பாடின்றிச் சங்கமிக்கக் காரணம் கண்ணியமான கதைகள் மூலம் அறிவுசால் கருத்துகளையும், தர்ம நெறிகளையும் பிரகாசப்படுத்த வேண்டும் என்ற என் கொள்கையாலேயே என்பது என் உறுதியான நம்பிக்கை.

    எழுத்து ஒரு தவம். அதை இணையத்திலோ, அச்சிலோ பார்ப்பது வரம். சங்கப்பலகை எனக்கு ஆத்மதரிசனம் செய்வித்தது. எழுத்துதான் உன் ஆத்மா என்று புரிய வைத்தது. ஆத்மத்யானம் பழக ஒரு ஆசிரமமும் மான்தோலாசனமும் அளித்தது.

    ***

    மாலா மாதவன்

    தமிழ் எழுத்துப் பாதையில் கவிதையும், கதையுமாய் இணைந்து எழுதும் புதுமுகப் படைப்பாளர். கவிதையும், கவிதையோடு இழைந்த கதையும் இவரது பாணி.

    கணினித் துறையில் உயர்படிப்பு படித்தவர் கதைக்களத்தோடும் கைகுலுக்குகிறார். இவரது முதல் கதை விருட்ச விதைகள். பெயரைப் போலவே விதைகள் வளர்ந்து விருட்சமாகக் காத்து நிற்கின்றன. இவரது இத்தனை பெருமைக்கும் காரணமாய் தன் குடும்பத்தையும், உறவுகளையும், நட்புகளையும் முன்னிறுத்துகிறார்.

    1

    அரிதாரத்தின் பின்னால் எத்தனை அழுகை முகங்கள் உண்டென்று உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும்! அரைவயிற்றுப் பசிக்காக அரிதாரம் பூசிக் கொள்ளும் பெண்களைப் பற்றி!

    - விபாவரியின் கானல் நீரிலிருந்து.

    மேலப்பனையூர் சிவன்கோவில் விடிகாலை வெளிச்சத்தில் தங்கமென மின்ன, பிரகாரத்தில் சடசடக்கும் வௌவால்கள் அதன் பழமையைப் பறைசாற்றின.

    கோவிலில் இன்றும் ஆறுகால பூஜை தவறாது உண்டு. அர்ச்சகர் விசுவத்தைப் பார்த்தாலே தெரியும். கோவிலோடு அவர் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் என்று.

    என்ன குருக்களே! இன்னிக்கு விடிகாலை பூஜைக்கு வேண்டிய புஷ்பமெல்லாம் வந்தாச்சா? எண்ணெய் போன வாரம் அனுப்பி விட்டேனே. இருக்கா? இன்னும் வேணுமா? ஒரு சன்னதி விடாம எல்லாவற்றிலும் அம்சமா விளக்கு எரியணும் சொல்லிப்புட்டேன். எதா இருந்தாலும் ஆளனுப்புங்க. நான் இருக்கேன்!

    சொன்னவரின் கழுத்தில் கோல்டு பிரேமிட்டக் கண்ணாடி… கயிற்றுடன் தொங்க அதை எடுத்துமாட்டிக்கொண்ட கைகளில் கிடந்த வளையல்களின் பளபளப்பு நான் வைரமென்று சொன்னது.

    இருபக்க மூக்கு குத்தி அதிலும் பேசரி மின்னிற்று. காதில் ப்ளூஜாகர் தோடு சுவற்றில் மின்னலாய்த் தெறித்தது.

    விசுவக் குருக்கள் அவசர அவசரமாய் அலங்காரத்தை ஆரம்பித்தார்.

    அம்மா! சற்றுப் பொறுங்கோ! இதோ இப்போ பூஜை ஆரம்பிச்சுடலாம். இத்தனை நாழி உங்களை எதிர்பார்த்துண்டு இருந்ததிலே…

    எதிர்பார்க்கவே வேண்டாம். நான் வந்து நின்னா மணி ஆறுன்னு அர்த்தம்! கோவில் மணியின் ஒலியை ஒத்த கம்பீரம் அவரின் பேச்சில்.

    அரசக்கனி! கொஞ்சம் இப்படி வந்து உட்காரம்மா. குருக்களை டென்ஷன் படுத்துறியே! போங்க குருக்களய்யா! போய் அலங்காரத்தைப் பாருங்க!

    இருக்கட்டும்! பரவாயில்லை! கூப்பிட்டது தன் கணவர் ஆவுடையப்பன் தானெனினும் செவி சாய்த்தார் இல்லை.

    ம்ம்… அலங்காரம் பண்ணிக்கிட்டே பதிலச் சொல்லுங்க குருக்களே! இன்னிக்கு என் பேரன் ஹரிஹரனுக்கு விசேஷ அர்ச்சனை பண்ணிடுங்க. அவனுக்கு முக்கியமான நாள் இன்னிக்கு!

    குழந்த பிறந்த நாள் தானேம்மா! பண்ணிடறேன்!

    குருக்களே! நான்… விசேஷ நாளுன்னேன். பிறந்த நாள்ன்னு சொன்னேனா! என்னதுக்கு இடக்கு மடக்குன்னு பேச்சு உங்களுக்கு. வேலையைப் பாருங்க!

    பட்டுப்புடவையால் மூக்கின் பேசரியைத் தேய்த்த படி பிரகாரத் தூணோரம் சாய்ந்து நின்று கொண்டார் அரசக்கனி.

    அரசக்கனி ஆவுடையப்பன் மேலப்பனையூரில் பெரும்புள்ளி. பணக்காரி. வயது எழுபதுக்கு மேலென்றாலும் இன்னும் கட்டுக்கோப்பாய் உடலை வைத்திருப்பவள். கணவர் ஆவுடையப்பன் அந்தக் காலத்திலிருந்து இன்று வரை பொட்டிப்பாம்பாய் தான் இருப்பார் அவள் முன். ஆனால் தொழிலைப் பெருக்குவதில் கில்லாடி.

    இன்னுமா ராஜலிங்கம் வரலை? ஒரு போன் அடிங்க வீட்டுக்கு. இந்த நளினி என்ன செய்யறா புருஷனை எழுப்பாம? எல்லாத்தையும் நான் கண்கொத்திப் பாம்பாக் கவனிச்சு நெறிப்படுத்தலன்னா இந்தக் குடும்பம் என்ன கோலத்துல கிடந்திருக்குமோ? கணவரிடம் சத்தம் போட்டார்.

    ராஜலிங்கமும் கனகலிங்கமும் அரசக்கனியின் மகன்கள். ராஜலிங்கம் - நளினி தம்பதியரின் புத்திரன் தான் ஹரிஹரன். கனகலிங்கத்துக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு என்றிருந்தான்.

    ராஜா வரலன்னு சொல்லிட்டான் அரசி! மேலுக்கு முடியலையாம்.

    யார் இந்தத் தகவல் சொன்னது? ராஜாவா இருக்க மாட்டானே… அவன் பொண்டாட்டி தானே! உற்றுப் பார்த்தார் கணவனை.

    ம்ம்! சொல்லாமலே தலை ஆடியது ஆவுடைக்கு.

    வர வர நம்ம வீட்டுல பொம்பளைங்க ராஜ்ஜியம் ஜாஸ்தியாத் தான் போச்சு! அரசக்கனி கடுமையாய்ச் சொல்ல…

    ‘அப்ப… நீ மட்டும் என்னவாம்…

    Enjoying the preview?
    Page 1 of 1