Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sollamaley... Sangeetha
Sollamaley... Sangeetha
Sollamaley... Sangeetha
Ebook161 pages54 minutes

Sollamaley... Sangeetha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண் என்பவள் தன் இளம் கன்னிப் பருவத்திலே தன் உள்ளத்தில் இனிய கனவுகளை வளர்த்துக் கொள்வது இயற்கை. இனிய கனவுகளை வளர்க்கும் பெண் அதில் மயக்கம் கொள்ளாமல் இருப்பது அரிது. இப்புதினத்தில் வரும் கதாநாயகி சங்கீதா விசித்திரமானவள். மற்ற பெண்களுக்கு அப்பாற்பட்டவள். தன் சகோதரன் மனைவி, எந்த ராஜகுமாரன் இவளை மாலையிட வரப்போகிறான் என்று எள்ளி நகையாடியபோதும், அவள் நிலை குலைந்து விடவில்லை. அவளின் கனவு நிறைவேறியதா?

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580132608259
Sollamaley... Sangeetha

Read more from Kamala Sadagopan

Related to Sollamaley... Sangeetha

Related ebooks

Reviews for Sollamaley... Sangeetha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sollamaley... Sangeetha - Kamala Sadagopan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சொல்லாமலே... சங்கீதா

    Sollamaley... Sangeetha

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    முன்னுரை

    பெண் என்பவள் தன் இளம் கன்னிப் பருவத்திலே தன் உள்ளத்தில் இனிய கனவுகளை வளர்த்துக் கொள்வது இயற்கை. இனிய கனவுகளை வளர்க்கும் பெண் அதில் மயக்கம் கொள்ளாமல் இருப்பது அரிது.

    தன் எதிர்காலத்தில், தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றி எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் ஒவ்வொரு பெண்ணும் காத்திருப்பாள்.

    கனாக் கண்டேன் தோழி என்று தன் கனவைப் பாடலாகவே இசைத்த ஆண்டாளும், உஷா பரிணயம் என்னும் புராணத்தில், உஷா தன் கனவில் ஸ்ரீகிருஷ்ணனின் மகன் பிரத்யும்னனைக் கண்டு அவனையே கணவனாக அடைந்ததும், புராண கால உதாரணங்களாகக் கூறலாம்.

    இப்புதினத்தில் வரும் கதாநாயகி சங்கீதா விசித்திரமானவள். மற்ற பெண்களுக்கு அப்பாற்பட்டவள். தன் சகோதரன் மனைவி, எந்த ராஜகுமாரன் இவளை மாலையிட வரப்போகிறான் என்று எள்ளி நகையாடியபோதும், அவள் நிலை குலைந்து விடவில்லை.

    வாசலில் பிச்சைக்காரனே வந்து நின்றாலும், அவனை ராஜகுமாரனாக நினைத்துவிட்டால் போகிறது என்று கூறினவள்.

    ஆனால் அவளுக்கு ஒரு கனவு இருந்தது. அவளது கனவு முழுவதும் கணிப்பொறியைச் சுற்றியே வந்தது.

    அதில் மேலும் மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என்று ஏங்கினாள்.

    தெய்வத்திற்கு யாருக்கு எப்பொழுது, எப்படி கொடுக்க வேண்டுமென்று தெரியுமே...

    ஒரு அத்தமன சமயத்திலே, பயங்கரமான படுகுழியின் ஒரத்தயே அவளை அறியாமலே அவள் நிற்கும் சமயத்திலே, அவள் வாழ்க்கையில் ஒரு உதயம் ஏற்பட்டது. அவளது வாழ்க்கையில் ஒரு உன்னதமான திருப்பம் ஏற்பட்டது.

    அது எப்படி நடந்தது என்பதுதான் இந்தக் கதை.

    கமலா சடகோபன்

    36/6, தாமோதரபுரம் பிரதான வீதி

    அடையார், சென்னை -20

    1

    அடி அல்லி ராணி, அல்லி ராணி!

    மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த சங்கீதா எரிச்சலுடன் எழுந்தாள்.

    …விசாலம், பெயரில் இருக்கும் விசாலம் உன் மனசில் இல்லையே என்று முணுமுணுத்துக் கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.

    என்ன மன்னி?

    தோசைக்கு ஊறப் போட்டிருக்கேன்... கல்லுரலை சுத்தம் பண்ணு. கையோடு அரைச்சுக் கொடுத்துடு... மத்தியானம் டிபனுக்கு வேணும்.

    அங்கேயே ஒருபுறமாக உட்கார்ந்து வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்த தன் அண்ணன் கைலாசத்தைப் பார்த்தாள்.

    மன்னி. இன்னிக்கு லீவுதானே? தீபாவை அரைக்கச் சொல்லுங்களேன்... ஸ்டடி ஹாலிடேஸ்... பரிட்சையும் நெருங்கறது.

    அவள் தன் புருஷனை எரிப்பது போல் பார்த்தாள்.

    கைலாசம் தன் தங்கை சங்கீதாவை முறைத்தான். இதோபார் சங்கீதா, தோசைக்கு அரைக்க எத்தனை நேரம் ஆகப்போகிறது. அரைச்சுட்டுப் படியேன்... பாவம் மன்னி. காலையிலேருந்து ஒத்தை ஆளா உழைக்கிறா இல்லே.

    மறுபடியும் தன் வேலையில் கவனம் செலுத்தினான். 'மன்னி ஒத்தை ஆளா வேலை செய்யறாளா? நீ வெங்காயம் நறுக்கறே... நான் தோசைக்கு அரைச்சுக் கொடுக்கறேன்... இப்ப அவ என்ன செய்யப் போறா... அடுப்பு எதிரில் நின்னுண்டு வேலை செய்யறா மாதிரி ஒரு பாவ்லா பண்ணுவா... எனக்குத் தெரியாதா?' மனதிற்குள் நினைத்தாள்.

    என்ன முழிச்சிண்டு நிற்கிறே?

    உன் செல்லப் பொண்ணு தீபா என்ன செய்யறா...?

    அதைப் பத்தி உனக்கென்னடி கழுதை.. அவளைப் பெத்தவ நான் பொங்கிக் கொட்டறேனடி போதாதா? உங்கம்மாதான் யார் வீட்டிலேயோ பொங்கிக் கொட்டறா... நீ சோத்தைக் கொட்டிக்கிறது இங்கேதான். நினைவு வைச்சுக்கோடி அதுக்காக கையை காலை ஏதாவது நீ அசைச்சாதான் வேளைக்கு உனக்குக் கிடைக்கும்...

    நான் செய்ய மாட்டேனு சொல்லல்லே. பரிட்சை முடியற வரையிலும் கொஞ்சம் என்னை ஃப்ரீயா விடக் கூடாதா?

    கைலாசம் பேசினான்: நீ இப்போ பேசிட்டு நிற்கிற நேரம் அரைச்சு முடிச்சிருக்கலாம். தீபா தன் ஃபரெண்ட்ஸோட மார்னிங் ஷோ சினிமாவுக்குப் போயிருக்கா!

    ரொம்ப அவசியம்"- முணுமுணுக்கும் குரலில் கூறி, புத்தகத்தை அங்கேயே ஒரு புறம் வைத்துவிட்டு கல்லுரலை தண்ணீரைக் கொட்டி அலம்ப ஆரம்பித்தாள்.

    என்ன முணுமுணுக்கறே. குடும்ப கஷ்டம் தெரிந்து சல்லிக் காசு கூட என்னிடம் வாங்காமே, ஃப்ரெண்ட்ஸ் செலவுலே சினிமா போயிருக்கா..

    அவதான் அரைக்க உட்கார்ந்துட்டாளே... இன்னும் என் எதையாவது அவ மனசு நோகப் பேசறே...

    அவ்வளவு ரோஷம் உங்க தங்கைக்கு இருந்தா அம்மா பொங்கி கொட்டற வீட்டுக்குப் போய் தானும் கொட்டிக்கட்டும்.

    நீ பேசறது நியாயமே இல்லேடி. விசாலம்... அவர்கள்தான் சங்கீதாவின் காலேஜ் பீஸை கட்டுகிறார்கள். அவளுக்கு காலேஜுக்குப் போக புடவைகள்கூட அவர்கள்தான் வாங்கித் தருகிறார்கள்... அண்ணன் என்கிற முறையிலே எனக்குனு சில கடமைகள் இல்லியா? நான் சாப்பிடற அரை வயித்துக் கஞ்சியை அவளுக்குப் போடறோம்...

    ஏன்? உங்கம்மாதான் ஆச்சு... தன் சம்பளத்திலே கணிசமா ஒரு தொகையை மாசாமாசம் இவ சாப்பாட்டுக்காக கொடுத்தால்தான் என்ன?

    சங்கீதாவுக்கு கண்களில் நீர் திரண்டது. தன் தள்ளாமையோடு அம்மா இந்த வயசிலும் சமையல் வேலைக்குப் போகிறாள். அடுத்த வருஷம் அவளுக்கு ஐம்பத்தெட்டு முடிகிறது.

    அப்பா போனதும் அவருடைய வேலையை அண்ணாவுக்குக் கொடுத்துட்டார்கள். வேலை தேடி அலையாமல் அவனுக்கு சுலபமாக வேலை கிடைச்சது... உடனே கல்யாணமும் ஆயிடுத்து... இந்த விசாலம் வந்தவுடன் அம்மா சமையல் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா. அவளுக்கு ஏன் இந்த தலைவிதி...?

    நாளைக்குத் தன் பெண் கல்யாணத்துக்குத் தன்னால் ஆனது கொஞ்சமாவது சேர்த்து வைச்சுக்கணும்னு ஒரு நப்பாசை...

    அண்ணன் பெண் தீபாவுக்கு பதினேழு வயசாகிறது... இவளைவிட ஐந்து வயசு சின்னவ... அவளை அடக்கி வீட்டோடு இருக்கச் செய்ய ரெண்டு பேருக்கும் கையால் ஆகவில்லை. இவளையே வாட்டி வதைக்கிறார்கள்.

    விசாலம்... பாவம்டி அம்மா.. அவளே கஷ்டப்படறா... நாளைக்கே கல்யாணம்னு ஒண்ணு இவளுக்கு நேர்ந்தால் செலவழிக்க வேண்டாமா? நாம் சாப்பிடற சாதத்தோடு அவளுக்கும் போடப் போறோம். விசாலம் உரக்க சிரித்தாள். அவள் நையாண்டிக் குரலில் பேசினாள்.

    அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இப்படி ஒரு கனவா? உங்க தங்கைக்கு உலகத்தாரைப் போலே கல்யாணம் நடக்கப் போறதா என்ன? அவளுக்கு இந்த ஜென்மத்திலே நிச்சயம் கல்யாணம், கார்த்தி எதுவும் நடக்கப் போறதில்லே... அவ கன்யாகுமரியாதான் நிக்கப் போறா..."

    ஷட்அப்- என்று கைலாசம் உரத்த குரலில் கத்தினான்.

    சங்கீதா விசாலத்திடம் கெஞ்சும் குரலில் கூறினாள்.

    மன்னி. நீ எதை வேண்டுமானாலும் சொல்லு. உனக்கு உரிமை இருக்கு. ஆனா என்னை இங்கேயே உட்கார்ந்து மாவு அரைக்கச் சொல்லிட்டு ஏன் என் காது கேட்க இப்படி பேசறே? நான் எழுந்து போகவா? உட்கார்ந்து அரைக்கவா?

    விசாலம் இந்தமாதிரி பேசுவது புதிதில்லை. ஆனால் அம்மாவின் மனம் புண்படும் என்ற கவலையில் எதையுமே தன் தாய் தங்கத்திடம் சொல்லிக் கொள்ளமாட்டாள்.

    ஆனால் அம்மா என்றாவது ஒருநாள் சங்கீதாவைப் பார்க்கும் ஆவலில் இங்கே வருவதுண்டு.

    அவள் காது கேட்க இந்த மகராசி பேசினால் அம்மாவால் தாங்கவே முடியாது.

    சரிசரி, அதையும் அரைச்சுட்டு, சாக்கடையிலே இருக்கிற அந்த நாலு பாத்திரத்தையும் தேய்த்து எடுத்து வை. அவள் வெளியேறினாள்.

    சங்கீதா திரும்பிப் பார்த்தாள். சாக்கடைக்கு மேல் மலைபோல பாத்திரங்கள் குவிந்திருந்தன. இவை நாலு பாத்திரங்களா?

    சுவரோரமாக வைத்திருந்த அந்த புத்தகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள். வேண்டுமென்றே இவள் செய்கிற கொடுமை இது என உணர்ந்தாள்.

    வெங்காயம் நறுக்கிய தன் அண்ணனைப் பார்த்தாள். மனதிற்குள் நினைத்தாள். அண்ணா, உண்மையாகவே உன் பொண்டாட்டியை அடக்கி ஆளும் துணிவு உனக்கு இல்லையா? இல்லே... அம்மாவும், நானும் உன்னையே நம்பி இருக்கிறோம் என்ற காரணமே உனக்குப் பலகீனமாகப் போய்விட்டதா?

    அண்ணா!

    நீ வேறே எதையாவது புலம்ப ஆரம்பிச்சுடாதே... அவ சுபாவம் தெரிஞ்ச விஷயம்தானே.

    இல்லே அண்ணா, ஒரு விஷயத்தை உனக்கு நினைவுபடுத்த நினைக்கிறேன்.

    என்ன விஷயம்?

    அம்மா வேலை செய்யற வக்கில் குடும்பம் ரொம்ப நல்லவர்கள். இந்த வீடு அவர்களுடைய பிதிரார்ஜித வீடு நமக்கு வாடகை இல்லாமல் விட்டிருக்கிறார்கள்.

    ஆமாம், அதற்கென்ன இப்போ?

    "அதுகூட அம்மா முகத்துக்காகத்தானே...? நீ வாடகைனு கொடுத்தால்

    Enjoying the preview?
    Page 1 of 1