Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marakkumo Nenjam
Marakkumo Nenjam
Marakkumo Nenjam
Ebook199 pages1 hour

Marakkumo Nenjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கற்பனை என்பது நிஜத்தின் நிழல். எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த நிஜத்தின் சாயல் எங்கோ ஓர் இடத்தில் தென்படும். சுய அனுபவம் அல்லது எப்போதோ படித்த பத்திரிகைச் செய்தியும் கற்பனைக்கு வித்தாவதுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடந்ததாகச் சொல்லப்பட்ட சம்பவத்தின் சுருக்கம் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தது. 'சாந்திபால்சர்மா' என்ற மருந்து வியாபாரி அவருடைய அலுவலகத்தில் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்தது யார் என்பது மர்மமாகவே இருந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஒரு குழந்தை இதைப் பற்றிப் பேசத் துவங்கியது. தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு வந்து சாந்திபால் சர்மாவின் மனைவியை அடையாளம் காட்டியதுடன், தான்தான் சாந்திபால் என்றும், தான் சுடப்பட்ட இடம், நேரம் ஆகியவற்றை சரியாகச் சொன்னது, தன் தம்பிதான் தன்னைச் சுட்டுக் கொன்றான் என்கிற உண்மையை வெளிப்படுத்தியது.

குற்றவாளி பிடிபட்டுத் தண்டிக்கப்பட்டதும், குழந்தை பழைய நினைவுகளை மறந்துவிட்டது! ‘Truth is Stranger than Fiction' என்றுதான் எனக்குத் தோன்றியது அதைப் படித்தபொழுது, அவ்வளவுதான். என் கதாநாயகன் காற்றாய் வரக் காரணம் கிடைத்து விட்டது.

இந்தக் கதையைப் படித்த பிறகு 'இப்படியும் நடக்குமா?' என்கிற கேள்வி எழுமானால் அதற்கான பதில் இங்கே உள்ளது. இந்தப் புதினத்தை வெளியிட முன்வந்துள்ள ஆனந்தாயீ எண்டர்பிரைசுக்கு என் நன்றி.

இங்ஙனம்,
லக்ஷ்மி ரமணன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580125804548
Marakkumo Nenjam

Read more from Lakshmi Ramanan

Related to Marakkumo Nenjam

Related ebooks

Reviews for Marakkumo Nenjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marakkumo Nenjam - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    மறக்குமோ நெஞ்சம்...

    Marakkumo Nenjam…

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    என்னுரை

    கற்பனை என்பது நிஜத்தின் நிழல். எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த நிஜத்தின் சாயல் எங்கோ ஓர் இடத்தில் தென்படும். சுய அனுபவம் அல்லது எப்போதோ படித்த பத்திரிகைச் செய்தியும் கற்பனைக்கு வித்தாவதுண்டு. பல ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடந்ததாகச் சொல்லப்பட்ட சம்பவத்தின் சுருக்கம் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தது. 'சாந்திபால்சர்மா' என்ற மருந்து வியாபாரி அவருடைய அலுவலகத்தில் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்தது யார் என்பது மர்மமாகவே இருந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஒரு குழந்தை இதைப் பற்றிப் பேசத் துவங்கியது. தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு வந்து சாந்திபால் சர்மாவின் மனைவியை அடையாளம் காட்டியதுடன், தான்தான் சாந்திபால் என்றும், தான் சுடப்பட்ட இடம், நேரம் ஆகியவற்றை சரியாகச் சொன்னது, தன் தம்பிதான் தன்னைச் சுட்டுக் கொன்றான் என்கிற உண்மையை வெளிப்படுத்தியது.

    குற்றவாளி பிடிபட்டுத் தண்டிக்கப்பட்டதும், குழந்தை பழைய நினைவுகளை மறந்துவிட்டது! ‘Truth is Stranger than Fiction' என்றுதான் எனக்குத் தோன்றியது அதைப் படித்தபொழுது, அவ்வளவுதான். என் கதாநாயகன் காற்றாய் வரக் காரணம் கிடைத்து விட்டது.

    இந்தக் கதையைப் படித்த பிறகு 'இப்படியும் நடக்குமா?' என்கிற கேள்வி எழுமானால் அதற்கான பதில் இங்கே உள்ளது. இந்தப் புதினத்தை வெளியிட முன்வந்துள்ள ஆனந்தாயீ எண்டர்பிரைசுக்கு என் நன்றி.

    இங்ஙனம்,

    லக்ஷ்மி ரமணன்

    *****

    1

    அன்று ப்ளஸ் டூ வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன. நித்யா அதில் சிறப்பாகத் தேர்வு எண்கள் வாங்கித் தேறி இருந்தாள். அதற்கு நன்றி சொல்லும் வகையில் பக்கத்துத் தெருவிலேயே இருந்த பிள்ளையார் கோயிலுக்குச் சென்று ஒரு சதிர்க்காய்ப் போட்டு ஐங்கரனைத் தரிசித்துவிட்டு வரவேண்டும் என்று கிளம்பிய நித்யா, பிராகாரத்தை வலம் வந்தபோது கோயிலை அடுத்தாற்போலிருந்த திருமண மண்டபத்திலிருந்து நாதஸ்வர இசை காற்றில் கலந்து வந்தது. உடனே தன் சினேகிதி செளந்தர்யா கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வந்தது.

    ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கப் போகிறே நித்யா? இல்லை 'டும் டும்’ தானா?

    மேலே படிக்க ஆசைதான். ஆனால், அது முடியுமான்னு சந்தேகமாக இருக்கு. அம்மாவைத்தான் தொந்தரவு செய்யணும். டொனேஷன், அது தவிர ஃபீஸ், புஸ்தகம் அது இதுன்னு எக்கச்சக்கமாய் இழுக்கும்போல இருக்கு. மேலும் அம்மாவால் இப்ப முதல் மாதிரி வேலை செய்ய முடியல்லே. இத்தனை நாள் உழைச்சாச்சு. இனி மேலாச்சும் அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்னு நான் ஏதாவது வேலையில் சேர்ந்துடலாம்னு பார்க்கிறேன்.

    நான் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் ஏதாச்சும் பண்ணிட்டு சுயமாக ஏதாவது பண்ணணும்னு நினைக்கிறேன். அதுக்கு அகமதாபாத் போனாலும் போவேன் என்றாள் சௌந்தர்யா.

    நீ எங்கே போனாலும் என்னை மறந்துடாதேடீ. நித்யாவின் கண்களில் அப்போதே பிரிவை நினைத்துக் கண்ணீர் துளிர்த்தது.

    சேச்சே... மறப்பேனா? நீ என் டியரஸ்ட் ஃப்ரெண்ட் ஆச்சே. செளந்தர்யாவுக்கு என்ன தோன்றியதோ தன் உயிர் சிநேகிதியை அன்புடன் அணைத்துக் கொண்டாள்.

    தன்னுடைய இலட்சியத்தைத் துரத்திப் பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட அவள் உடனே கிளம்பிப் போய்விட்டாள். நித்யா தன் சிநேகிதியின் வெற்றிக்காகவும் வேண்டிக் கொண்டு, கோயிலுக்கு வெளியே வந்தபோது...

    தூரத்தில் அவள் மாமா பராங்குசம் கையில் சின்னப் பையுடன் நடந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

    அட... இவர் எப்படி இங்கே... அதுவும் திடீர்னு? என்று ஆச்சரியப்பட்டவாறு அவள் மகிழ்ச்சியுடன்.

    வாங்க மாமா... என்று வழியில் நின்று வரவேற்றாள்.

    நித்யா... நீயா?

    ஆமாம் மாமா. நான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டேன். அதுக்கு பிள்ளையாருக்கு நன்றி சொல்ல வந்தேன்.

    குட். வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷம்.

    தேங்க்ஸ்... நீங்க வரப்போவது அம்மாவுக்குத் தெரியுமா?

    தெரியாது. இங்கே பக்கத்து ஊரில் ஒரு கல்யாணம் நேத்து இருந்துச்சு. வந்தது வந்தோம், இங்கேயும் வந்து உன்னையும் மரகதத்தையும் பார்த்துட்டுப் போகலாம்னு தோணிச்சு.

    மாமா பராங்குசத்துக்குத் தன் சகோதரியின் மீதும், அவள் மகளான தன்மீதும் அபரிமிதமான பாசம் உண்டு என்பது நித்யாவுக்குத் தெரியும்.

    மரகதத்துக்குத் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணம் நடத்தி னவத்ததே அவர்தான். நல்ல இடம் என்று ராமேசனைத் தேர்ந்தெடுத்து அவளைத் திருமணம் கொடுத்த பிறகும் அவன் ஜடாமுடி சித்தனார். சிந்தூர சாமியார், மயில் வேட்டி மன்னார்சாமி என்று பெயரே கேள்விப்படாத சாமியார்கள் பின்னால் அலைந்து கொண்டிருந்த விதம் அவரைக் கவலைக்குள்ளாக்கியது. ராமேசனைப் பற்றி விசாரிக்காமல் தான் எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என்று அவர் வருத்தப்பட ஆரம்பித்த நேரத்தில் அது நடந்தது.

    நித்யா இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் ராமேசன் திடீரென்று காணாமல் போனான். அவன் எங்கு, எதற்கு, ஏன் போனான் என்பது யாருக்குமே தெரியவில்லை. தேடலில் அவர் முழுமூச்சுடன் இறங்கியும் பலன் இல்லை.

    நித்யாவுடன் சென்னைக்குத் தன்னுடன் வந்து விடும்படி பராங்குசம் தன் சகோதரியை வற்புறுத்தினார். அண்ணன் குடும்பமே பெரிசு. அதிலும் அண்ணி அமிர்தவல்லியின் குணத்தை நன்கு அறிந்திருந்த மரகதம் அதற்கு உடன்படவில்லை.

    தனக்குத் தெரிந்த சமையல் கலையைப் பயன்படுத்தி அக்கம் பக்கத்திலேயே நான்கு வீடுகளில் வேலை தேடிக் கொண்ட அவள், நித்யாவை எப்பாடுபட்டாவது படிக்க வைத்துவிடுவது என்று தீர்மானித்தாள்.

    இதற்கு மத்தியில் ராமேசனின் தாய் வந்து மரகதத்துடன் சண்டை போட்டாள். தன் மகன் வீட்டை விட்டு அப்படி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் போனதன் காரணம் மரகதத்தின் தகாத நடவடிக்கைகள்தான் என்று ஏசினார். வாய் இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் பேசி மற்றவர்கள் மனதைக் குத்திக் கிழிப்பவர்களை என்ன செய்ய முடியும்?

    'என்னை எதுவுமே பாதித்துவிடாது’ என்கிற மாதிரி அமைதியாக வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுத் தன்னை இந்த அளவுக்குப் படிக்க வைத்த தாயை நித்யா மனம் நிறைந்த நன்றியோடுதான் பார்த்தாள்.

    என்ன நித்யா யோசனை? மேலே என்ன செய்யப் போறே?

    பார்ட் டைம் வேலை ஏதாச்சும் கிடைச்சால் செய்துக்கிட்டே டிப்ளமா கோர்ஸ் ஏதாவது படிக்கலாம்னு இருக்கேன். அம்மாவுக்கு தள்ளாமை ஜாஸ்தியாயிட்டதாலே இப்ப எல்லாம் முன்னைப் போல் வேலை செய்ய முடிகிறதில்லே. என்னுடைய பிளான்படி நடந்தால் அம்மாவை வீட்டிலிருந்து ரெஸ்ட் எடுக்கச் சொல்லலாம்னு இருக்கேன்.

    அம்மா மேல் இத்தனை பாசம் வெச்சிருக்கே. சந்தோஷம். மரகதம் பாக்கியசாலி. அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே எதிர் போர்ஷன் அமுதா பரபரப்புடன் ஓடிவந்தாள்.

    நித்யா! நீ இங்கேயா இருக்கே? வீட்டுலே போய் தேடினேன். பூட்டிக் கிடந்துச்சு. வக்கீல் வீட்டுலே சமையலை முடிச்சுட்டு நடந்து வந்துக்கிட்டிருந்த உன் அம்மாவை லாரிக்காரன் இடிச்சுக் கீழே தள்ளிட்டான். உடனே மயக்கமாகிட்ட அவங்களை 'கெட் வெல்' மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம். நம்ம தெருக்கோடியிலே இருக்கிற மோகனரங்கம் போன் பண்ணினான். வா சீக்கிரம், போகலாம்.

    அம்மா! என்று அனற்றி அழுதவாறு நித்யாவும் பராங்குசமும் அமுதாவுடன் ஓட்டமும் நடையுமாக மருத்துவமனையை அடைவதற்குள் மரகதத்தின் முடிவு வந்துவிட்டது.

    தங்கையைப் பார்க்க வந்த இடத்தில் அவளுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலையில் பராங்குசம் மாட்டிக் கொண்டதை விதி என்றுதான் சொல்ல வேண்டும்.

    நித்யாவைத் தனித்துவிட மனமின்றி அவளையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்பின பராங்குசத்தைக் கண்டதும் அவர் மனைவி அமிர்தவல்லி எரிமலையானாள்.

    மரகதம் போய்ச் சேர்ந்துட்டான்னு போனில் சொன்னீங்க சரி, இவளை எதுக்கு அழைச்சுக்கிட்டு வந்தீங்க? நாம் என்ன இங்கே அநாதை இல்லமா நடத்திக்கிட்டிருக்கோம்.

    'சவுக்கடியா இல்லை மேலே வந்து விழுந்த சொல்லம்புகளா?' அப்போதுதான் தாயைப் பலி கொடுத்து விட்டுச் சோகத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நித்யாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

    "மகளே இளமகளே

    நானழுதேன் உன்னை எண்ணி!

    கண்ணுக்குள் கிணறு வெட்டி

    அத்தனையும் உப்புத்தண்ணி"

    என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை அவள் நினைவுக்கு வந்தது.

    தன் சொந்த சகோதரியின் மரணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டும், இம்மியும் இரக்கமின்றிச் சுடுவார்த்தைகளைக் கொட்டிய அமிர்தத்தைக் கண்டதும் பராங்குசம் வேதனை அடைந்தார். தனக்குள் எழுந்த கோபத்தை அவர் கட்டுப்படுத்திக் கொண்டதன் காரணம் நித்யாவுக்கு அந்த வீட்டில் இருக்க இடம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

    அது அவருடைய வீடும்தான். 'விஸ்வா கன்ஸ்டரக்ஷன்ஸ்'ல் நிதி ஆலோசகராகப் பணியாற்றிய அவருக்கு, குடும்பத்தலைவர் என்கிற முறையில் வீட்டில் எந்தவித மரியாதையும் இல்லை என்பதை உணர்ந்திருந்தார். அவர் எந்தவிதப் பதிலும் சொல்லாததைக் கண்டு அமிர்தத்தின் கோபம் அதிகமாகியது.

    அதென்ன வாயடைச்சு நிக்கறீங்க? கலியாணத்துக்குப் போனவர் நேராகத் திரும்பி வரவேண்டியதுதானே. அதில்லாமல் எங்கேயோ போய் கருமாதியையும் பண்ணிட்டு வந்து நிக்கறீங்க.

    அமிர்தவல்லி அதட்டலாக எழுந்த தன் குரலைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவராய், என்னவோ மரகதத்தைப் பார்க்கணும்னு தோணிச்சு. அதுவும் நல்லதுக்குத்தான். இல்லாட்டி சின்னப் பொண்ணு நித்யா, தவிச்சுப் போயிருப்பா, தகப்பன் போன இடம் தெரியல்லே. இப்போ தாயையும் பறிகொடுத்தாச்சு. பேசும் போதே பராங்குசத்துக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. சகோதரியைப் பார்க்கப் போன இடத்தில் அவள் சடலத்துக்குத் தீயிட்டு காரியம் செய்ய வேண்டி வந்தது என்ன கொடுமை...

    அவருக்குள் எழுந்த துயரம் இன்னும் அடங்கவில்லை.

    அதுக்காக...?

    தொடர்ந்து அவள் கொட்டின வார்த்தைகளை அள்ள முடிந்திருந்தால் ஒரு டாங்கர் லாரியே நிரம்பி வழிந்திருக்கும்.

    அவர் மனைவிக்கு 'அமிர்தவல்லி’ என்று யார் தான் புத்தி கெட்டுப் போய் பெயர் சூட்டினார்களோ பேசினாலே வார்த்தைகள் விஷமாய்த் தெறித்து வெளியே வந்து விழுந்தன.

    "இப்போ இவளை என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1