Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karaiyai Thedum Alaigal...
Karaiyai Thedum Alaigal...
Karaiyai Thedum Alaigal...
Ebook137 pages1 hour

Karaiyai Thedum Alaigal...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'கரையைத் தேடும் அலைகள்’ கதை முழுவதும் அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்களைச் சுற்றி அமைத்திருப்பதற்கு, இதை ஒரு வித்தியாசமான புதினமாகப் படைக்க வேண்டும் என்கிற என் ஆர்வம்தான் காரணம்.

- லக்ஷ்மி ரமணன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125804359
Karaiyai Thedum Alaigal...

Read more from Lakshmi Ramanan

Related to Karaiyai Thedum Alaigal...

Related ebooks

Reviews for Karaiyai Thedum Alaigal...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karaiyai Thedum Alaigal... - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    கரையைத் தேடும் அலைகள்...

    Karaiyai Thedum Alaigal…

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    என்னுரை

    'கரையைத் தேடும் அலைகள்’ கதை முழுவதும் அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்களைச் சுற்றி அமைத்திருப்பதற்கு, இதை ஒரு வித்தியாசமான புதினமாகப் படைக்க வேண்டும் என்கிற என் ஆர்வம்தான் காரணம்.

    லக்ஷ்மி ரமணன்

    1

    தொலைதூரப் பயணத்தினால் சோர்வும், அலுப்பும் அடைந்த பயணிகள், விமானம் எப்போது தரையில் இறங்கும்... எப்போது தங்கள் சொந்த பந்தங்களைப் பார்க்கலாம் என்கிற தவிப்பில் இருந்தார்கள். விமானத்தில் நிறைய இந்தியர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் பிருந்தா, சரபேசன் தம்பதிகளைப் போலவே சென்னையிலிருந்து பிரயாணத்தைத் தொடங்கியவர்கள். அவர்களில் அநேகம் பேர் ஐம்பது வயதைக் கடந்தவர்கள். எல்லோருமே அமெரிக்காவிலிருந்த தங்கள் வாரிசுகளையும் பெயரன் பேத்திகளையும் பார்த்துவிட்டு, அவர்களுடன் சில மாதங்கள் தங்கி பிறகு இந்தியா திரும்பும் எண்ணத்துடன் வந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை சரபேசன் ஊகித்தார்.

    பயணிகளின் கவனத்திற்கு என்ற விமானப் பணிப் பெண்ணின் அறிவிப்பு அனைவரையும் நிமிர்ந்து உட்கார வைத்தது.

    நம் விமானம் தற்போது டெட்ராயிட் (Detroit) விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் அரைமணி நேரத்தில் நாம் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும். நீங்கள் பிரயாணம் செய்ய எங்கள் விமானத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு கேப்டன் ஸ்டீவ் ஆன்டர்ஸன் மற்றும் கேப்டன் கூப்பர் சார்பிலும் இந்த விமானத்தில் ‘க்ரூ'விலுள்ள பணியாளர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். டெட்ராயிட்டிலிருந்து தொடர்ந்து பயணிக்கவிருக்கிறவர்களுக்குப் பிரயாணம், செளகரியமுள்ளதாகவும், இனிமையானதாகவும் அமைய வாழ்த்துக்கள்

    அறிவிப்பு இன்னும் தொடர்ந்தாலும் அதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

    விமானத்திலிருந்து இறங்குவதில் பயணிகளிடையே அப்படி ஒரு பரபரப்பு... பிருந்தா உற்சாகத்துடன் ஜன்னல் வழியாகப் பார்வையை கீழே செலுத்தினாள்.

    அங்கே...

    கொலுப் பொம்மைகளைப் போல் சின்னச் சின்னதாய்த் தெரிந்த பன்மாடிக் கட்டிடங்கள், நடு நடுவில் பசுமைத் திட்டுகளாய் நின்ற மரங்கள், பளிச் என்று வளைவு சுளிவுகளுடன் வரைந்த வெள்ளிக்கோடாக சலசலத்த டெட்ராயிட் நதி... எல்லாவற்றையுமே பார்க்க முடிந்தது.

    குனிந்து தன் உடமைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த சரபேசனிடம் சார்! சீட் பெல்ட் போட்டுக்கிட்டு நேராக உட்காருங்க என்று ஏர்ஹோஸ்டஸ் சிந்தியா எச்சரித்தாள்.

    அவர் அவசரமாக நிமிர்ந்து உட்கார்ந்து சீட் பெல்டை இணைத்துக் கொண்டவராய் பிருந்தாவைப் பார்த்தார்.

    அவளிடமிருந்த உற்சாகமும், குதூகலமும் இயல்பானதோ?

    மகன் விக்னேஷையும் மருமகள் வினிதாவையும் சந்திக்கப் போகிற சந்தோஷம்.

    அவர்கள் மகள் அர்ச்சனாவும் மாப்பிள்ளை அரவிந்தும் இலினாய் மாநிலத்திலிருந்த சிகாகோவில் வசித்தார்கள். அரவிந்த் அங்கே தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தான். அர்ச்சனாவும் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றினாள்.

    விக்னேஷைவிட அர்ச்சனா கொஞ்சம் மூத்தவள். திருமணமானதும் கணவன் அரவிந்துடன் சிகாகோ கிளம்பிப் போனவள் தான். அர்ச்சனாவின் தலைப் பிரசவத்தின்போது உதவியாக இருக்க பிருந்தாவால் அமெரிக்காவர இயலவில்லை. சரபேசன் அப்போது மும்பையில் சுங்க இலாக்காவில் உயர்பதவியில் இருந்தார். மாதத்தில் பாதி நாட்கள் ஊரிலேயே இருக்கமாட்டார். மற்ற நாட்களில் காலையில் அலுவலகம் சென்றால் இரவுதான் திரும்புவார். அவரது வயதான நோய்வாய்ப்பட்ட தாயைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிருந்தாவுக்கு இருந்தது. அதனால் அவள் கேட்டுக் கொண்டதன் பேரில் அரவிந்தின் தாய் அமெரிக்காவுக்கு வந்து அர்ச்சனாவுடன் இருந்து நிகில் நல்லபடியாகப் பிறந்த மூன்று மாதங்களாகும் வரை உடன் இருந்து கவனித்துக் கொண்டாள். தன் ஒரு கடமையை நிறைவேற்ற, இன்னொன்றைவிட வேண்டி வந்ததே என்று பிருந்தாவின் மனதில் உறுத்தலாக இருந்தது.

    தன் பெற்றோர்களுக்குப் பேரன் நிகிலைக் காண்பிக்க வேண்டும் என்று அர்ச்சனா அரவிந்துடன் மும்பைக்கு அழைத்து வந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. சரபேசன் ஓய்வு பெற்று சென்னை வந்து செட்டிலாகி, கடந்த ஆண்டு அவர் தாய் இறைவனடி சேர்ந்ததும்தான் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அவர்களால் யோசிக்கவே முடிந்தது.

    பிருந்தாவும் சரபேசனும் அமெரிக்காவுக்கு வருவது அதுதான் முதல் முறை. கேஸ்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் அவர்கள் மகன் விக்னேஷ் எம். எஸ் படிப்பை முடித்த பிறகு வேலை அனுபவத்திற்காக நியூஜெர்ஸியில் வேலை பார்த்தான். பிறகு மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கச் சேர்ந்து மத்தியில் இந்தியா வந்து வினிதாவை மணந்து அழைத்துப் போனான். இரண்டாண்டு படிப்பு முடிந்து பட்டமளிப்பு விழா விரைவில் நடக்கவிருந்தது.

    அதே சமயத்தில் அர்ச்சனா இரண்டாவது முறையாகத் தாயாகப் போகிற செய்தியும் வந்தது. விழாவிலும் கலந்து கொண்டு பிறகு சிக்காகோ போய் மகள் அர்ச்சனாவுக்கும் உதவியாக இருந்துவிட்டுப் போகும் எண்ணத்தில்தான் அவர்கள் கிளம்பி வந்திருந்தார்கள்.

    கிளம்புவது என்று தீர்மானித்ததும் அடேங்கப்பா... ஏற்கனவே அமெரிக்கா வந்துவிட்டுத் தாயகம் திரும்பிய நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் கூடை கூடையாக அறிவுரைகள்! முக்கியமாய் அமெரிக்காவின் சீதோஷ்ண நிலை பற்றிய விமரிசனங்கள் அவர்களை ரொம்பவுமே பயமுறுத்தின.

    ‘அங்கு கோடையிலும் மழை பெய்யத் துவங்கினால் குளிர் தூக்கலாகி தாங்க முடியாமல் போய்விடும்' என்று அனுபவப் பட்டவர்கள் சொன்னதன் பேரில் கம்பளிப் போர்வை, ஸ்வெட்டர், கையுறைகள், குரங்குக் குல்லாய் என்று குளிருடன் யுத்தம் செய்யப் போகிறவர்களைப்போல் அத்தனை தற்காப்பு உபகரணங்களையும் எடுத்து வந்திருந்தார்கள்!

    உன்னுடைய சாமான்கள் எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டியா? என்று சரபேசன் ஐந்தாவது முறையாகப் பிருந்தாவைக் கேட்டதும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது வயதாகிவிட்டதன் லட்சணமோ?

    எதுக்கு சிரிக்கிறே?

    இந்தக் கேள்வியை இன்னும் எத்தனை தடவை கேட்கப் போறீங்க? படிக்க எடுத்து வந்த ரெண்டு புத்தகங்களையும் பைக்குள்ளே அப்பவே எடுத்து வெச்சிட்டேன் என்றாள்.

    குட்

    சரபேசனுக்கு உள்ளூரக் கொஞ்சம் விசாரம் இருந்தது. அமெரிக்காவில் நம்மூர் மாதிரி நினைத்தால் கிளம்பிப் போய் வீட்டுத் தேவைகளையோ, பத்திரிகைகளையோ வாங்கி வர முடியாது. முதலில் ஊரும், சூழ்நிலையும், குளிரும் பழக வேண்டும். எதுவும் செய்யாமல் வீட்டில் உட்கார்ந்து அவருக்கு எப்படிப் பொழுது போகும்?

    தொலைக்காட்சித் தொடர்கள் அவரை என்றுமே ஈர்த்ததில்லை புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு. ஆனால்... அதையும் நாள் முழுக்கச் செய்ய முடியுமா? பிருந்தாவுக்குக் கவலை இல்லை.

    சமையல், வீட்டுப் பொறுப்பு, குழந்தையைப் பார்த்துக் கொள்வது என்று நாள் முழுக்க எதையாவது செய்து கொண்டிருப்பாள். அவருடன் உட்கார்ந்து பேசக்கூட அவளுக்கு நேரமில்லாமல் போகலாம். அவர் வந்தே இருக்க வேண்டாமோ? பிருந்தா வந்ததிலாவது ஒரு குறிக்கோள் இருக்கிறது. அவர் வந்து என்ன சாதிக்கப் போகிறார்?

    "என்னப்பா அப்படிக் கேட்டுட்டீங்க? என் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் உடன் இருந்து ஆசீர்வாதம் பண்ணினால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். மேலும் நீங்க வேலையில் இருந்த வரையில் நேரத்தைப் பார்க்காமல் ஓடியாச்சு. இப்போ ஓய்வாக இருங்க. வாக் போங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1