Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagey Aabathu
Azhagey Aabathu
Azhagey Aabathu
Ebook50 pages19 minutes

Azhagey Aabathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் தகப்பனின் கொடுமையால் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட சுஜிதா. சுஜிதாவின் வேண்டுகோளிற்கிணங்க, தன் ராட்சஷ கணவனிடமிருந்து, இரண்டாவது மகள் மிசிதாவையாவது காப்பாற்ற நினைக்கும் தாய். தன் மகள் மிசிதாவை இலங்கையிலிருந்து, குவைத்திற்கு பணிப்பெண்ணாக அனுப்புகிறாள்? குவைத்தில் சில உண்மைகள் மிசிதாவிற்கு தெரிய வருகிறது. அது என்ன உண்மை? இதில் வாசு என்பவன் யார்? சுஜிதாவை காப்பற்ற நினைத்த வாசு குற்றவாளியாகக் காரணம் என்ன? அழகும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமா? சமூக சேவகன் சுரேஷ் உதவியுடன் வாசு தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவானா? இந்நிலையில் மிசிதா தன் அக்காவின் ஆசையை நிறைவேற்றுவாளா? வாசுவை குற்றவாளி என்று நினைக்கும் மிசிதா, இறுதியில் வாசுவுக்கு சேவனம் செய்யும் டாக்டர் மிசிதாவாக காத்திருப்பாளா? நாமும் சில சுவாரஸ்யங்களுடன்...

Languageதமிழ்
Release dateJan 10, 2022
ISBN6580132407648
Azhagey Aabathu

Read more from Nc. Mohandoss

Related to Azhagey Aabathu

Related ebooks

Reviews for Azhagey Aabathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagey Aabathu - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    அழகே ஆபத்து

    Azhagey Aabathu

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    ஹால் விசாலமாயிருந்தது. பழுப்பேறின பெஞ்சுகளில் ஏஸியையும் மீறி புழுக்கத்துடன் பெண்கள் நிறைந்திருந்தனர். சீருடையில் நர்ஸ்களும் பணிப்பெண்களும் எதற்கோ நடந்துக் கொண்டிருந்தனர்.

    தலைமட்டும், சிலர் தலையுடன் உடல் முழுக்க பர்தாவால் மூடினவர்கள் ஒருபக்கம்; மறுபக்கம் எங்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது என்கிற மாதிரி முடைப்பாய் வனப்பாய் பனியன் – ஜீன்ஸ் சகிதம் பிலிபைனிகள்!

    வேறு பக்கம் மொந்தையாய் கவுனும் குட்டை பாவாடையுமாய் சிங்களம்! கேரளம் மற்றும் கர்நாடகம் – சுடிதாரில்!

    பன்னாட்டு பெண்கள், விதவித பாஷைகளின் சலசலப்பு என்றாலும் கூட அவர்கள் அத்தனை பேர்களின் கண்களிலும் வெறுமை தெரிந்தது. மிரட்சி குடிகொண்டிருந்தது.

    அக்கூட்டத்தில் மிசிதா. பதற்றமும் பரிதவிப்புமாய் அமர்ந்திருந்தாள். தலை கிளிப்பில் முடி அடங்க மறுத்து, அலையடிக்க, தெறிக்கிற சிகப்புமாய் தோல் பையை மடியில் அமர்த்தி பிடித்திருந்தாள். அதனுள் பாஸ்போர்ட், விசா மற்றும் புகைப்படங்கள்! அவள் மினி ஸ்கர்டில்!

    அவளை அழைத்து வந்து இங்கே வெயிட் பண்ணு என்று இருத்திவிட்டுப் போன வாசுவைக் காணவில்லை!

    எதுவும் விளங்காமல், எதற்காக - இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற நோக்கமும் புரியாமல், வாசு எங்காவது தென்படுகிறானா… என மிசிதாவின் கண்கள் தேடின.

    காலை ஆறு மணி முதல் காத்திருப்பு. அவளுக்கு பசித்தது.

    வாசு - அவள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த அரபி வீட்டின் டிரைவர். இலங்கை தமிழான மிசிதாவுக்கு அவனும் தமிழ் என்பது ஆசுவாசம் தந்திருந்தது.

    இங்கே தமிழ் – மலையாளம், சிங்களம் – ஹிந்தி, உருது அல்ல பிரச்சனை. உள்ளூர்காரர்கள் தவிர மற்ற எல்லாருமே இரண்டாம் பட்சம்தான்!

    அரபு நாட்டில் சம்பாத்யம் – பணம் தவிர - வேறு எந்த எதிர்பார்ப்பும் கூடாது என அறிந்திருந்தாலும்கூட, எங்கும் எல்லா இடங்களிலும் இத்தனை அலட்சியப்படுத்தப்படும் என

    Enjoying the preview?
    Page 1 of 1