Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounamenum Siraiyil...!
Mounamenum Siraiyil...!
Mounamenum Siraiyil...!
Ebook155 pages56 minutes

Mounamenum Siraiyil...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்று பெண் குழந்தைகளை தன்னந்தனியே வளர்த்தெடுத்த ஒரு இளம் தாயின் கதை. பாசம், காதல், இவற்றோடு மனிதனின் மனவிகாரமும், சுயநலமும் கலந்து துரத்த அவளின் நிலைமை என்ன? இளமை பொங்கும் காதல் ததும்பும் குடும்ப நாவல்.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580135409106
Mounamenum Siraiyil...!

Read more from J. Chellam Zarina

Related to Mounamenum Siraiyil...!

Related ebooks

Reviews for Mounamenum Siraiyil...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounamenum Siraiyil...! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மௌனமெனும் சிறையில்…!

    Mounamenum Siraiyil...!

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மௌனம் 1

    மௌனம் 2

    மௌனம் 3

    மௌனம் 4

    மௌனம் 5

    மௌனம் 6

    மௌனம் 7

    மௌனம் 8

    மௌனம் 9

    மௌனம் 10

    மௌனம் 11

    மௌனம் 12

    மௌனம் 13

    மௌனம் 14

    மௌனம் 15

    மௌனம் 16

    மௌனம் 17

    மௌனம் 18

    மௌனம்19

    மௌனம் 20

    மௌனம் 21

    மௌனம் 22

    மௌனம் 23

    மௌனம் 1

    அக்கா... அக்கா... என்னோட ஸ்கூல் வரைக்கும் வாயேன்! ப்ளீஸ்... இன்னிக்கு மட்டும் சைலு கொஞ்சினாள்.

    என்னடா இது? அக்கா அக்கான்னு தங்கச்சிக்குருவி கூப்பிட்டு பாச மழையிலே நனைக்குது... ஏய்! இந்து இங்க வாடின்னுதானே கூவும்

    அக்கா! என் செல்ல அக்கா இல்லை... ப்ளீஸ்...! மூணு நாளா என்னை ஒரு கெழவி ஃபாலோ பண்ணி டார்ச்சர் பண்ணுது.

    கிழவியா? ஃபாலோயிங்கா? உன்னையா? உன் அழகு என்ன? ஸ்டைல் என்ன? ரேஞ்ச் என்ன? ஒரு கிழவியா... போயும் போயும்... என்ன கொடுமைடா இது? குறும்புடன் கண்ணடித்துச் சிரித்தாள் இந்து.

    அக்கா! உன் சுந்தராம்பா காலத்து ஸ்டைலை கொஞ்சம் ஸ்டாப் பண்றீயா? இப்போ... என்னோட வருவியா மாட்டியா? காலை தரையில் உதைத்துக்கொண்டு சிணுங்கினாள் சின்னவள்.

    ஆமாம் உனக்கு பணத்தைக்கொட்டி கராத்தே கத்துக் கொடுத்தது எதுக்காக? இப்படி கிழவியை பார்த்து பம்மறதுக்கா?

    அய்யோ அக்கா... பயமில்லேக்கா... என்னமோ உள்ளுக்குள்ளே மெல்ட்டாகுது... நீ வாயேன் இந்து யோசனையோடு எழுந்தாள்

    அ... அதோ... அங்க பாரு அந்தத் தட்டுக்கடைகிட்ட பச்சைசேலை கட்டிக்கிட்டு சைலு காட்டிய திசையில் கண்களை ஓட்டினாள். ஐம்பதோ. அறுபதோ... வயசிருக்குமா? அவர் இவர்களைக் கண்டதுமே மலர்ச்சியோடு நெருங்கினார். ரொம்பவே பரிச்சயமான முகம்... தெரிந்த முகம்... ஏதேதோ நினைவுகள் மனஇடுக்கில் உராய்ந்து அலசிப்பார்த்தது மனசு.

    கன்னத்துச் சுருக்கம் பூரித்து விரிய, நீ... நீ... இ... இந்துதானே. இந்திரஜா. குரல் குழைந்து வந்தது... சகோதரிகளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

    தமக்கை பேசுமுன்பே தங்கை ஒரு துள்ளலுடன், அட! ஆமாம்! உங்களுக்கெப்படி தெரியும். என் பேர் தெரியுமா? நான்தான் சைலு... சைலஜா! என்று வாயை விட்டவள் தன் தோளில் ஆழப்பதிந்த அக்காவின் நகக் கிள்ளலில்... ஸ் என்றபடி வாயை மூடிக்கொண்டாள்.

    இந்து... இந்தும்மா! என்னைத் தெரியலை? சாம்பவி அத்தைடீ! இந்து துப்பட்டாவினால் முகத்தையும் உணர்வுகளையும்கூட அழுத்தமாய் துடைத்துக்கொண்டு ஏறிட்டாள்.

    உங்கப்பாவோட கூடப் பிறந்த அக்காடீ! உங்க அத்தை... சின்ன வயசுலே நீ என் மடியைவிட்டு இறங்கவே மாட்டே! உங்கம்மா, தாத்தா, அஞ்சு எல்லோரும் சுகம்தானே? என்றபடியே நெருங்கி வர, மூத்தவள் தங்கையையும் இழுத்தபடி பின்வாங்கினாள்.

    எங்கத்தையா நீங்க? எங்கப்பா நல்லாயிருக்காரா? உங்க வீட்டுக்கு வருவாரா? எங்க இருக்காருன்னு தெரியுமா? என்று அடுக்கிக்கொண்டே போன சைலுவை... ஏ சைலு! பெல் அடிச்சுடுவாங்க! நீ ஸ்கூலுக்கு கிளம்பு என்று விரட்டினாள்.

    முதியவளிடம் திரும்பி இங்க பாருங்க எங்களுக்கு அத்தைன்னெல்லாம் யாருமில்லே. சாம்பவிங்கிற பேருகூட கேட்டதில்லை. ஸ்கூல் படிக்கிற சின்னப் பொண்ணை இப்படி பின்தொடர்வதும் சரியில்லை. அப்புறம் என் நடவடிக்கை வேறமாதிரி இருக்கும் சொல்லிட்டேன்... சைலு... உன்னை கிளம்பச்சொல்லி நேரமாச்சு! என்று முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு விரட்டினாள்.

    சைலு திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நகர்ந்தாள்.

    அவள் கண்பார்வையிலிருந்து நகரும் மட்டும் அமைதி காத்த இந்து இப்போ எதுக்கு புதிசா குட்டையை கொழப்புறீங்க? என்றாள் கடுகடுத்த குரலில்.

    இல்லடா! என்னாலே எதுவும் தொல்லை வராது... அந்தக் கடன்காரன் விசுவம் மூலமா வேணது அனுபவிச்சுட்டீங்க. நானும் அவன் பேச்சைக்கேட்டு அந்த நாளிலே ஆடியிருக்கேன்... அதுக்கெல்லாம் இப்போ என் புள்ளை மருமவளுங்களாலே அனுபவிச்சுட்டு இருக்கேன். சாவறதுக்குள்ளே உங்களையெல்லாம் பாக்கணும்னு தோணுச்சு. உங்கம்மா தாத்தாகிட்டேயெல்லாம் மன்னிப்பு கேக்கணும். சைலு அப்படியே அவங்கப்பன் ஜாடை. விசுவத்தை பார்க்கிறார் போலவேயிருக்கு. முதியவளின் இடுங்கிய விழிகளிலிருந்து கண்ணீர் வடிந்தது.

    இங்கே பாருங்க! எங்களுக்கு எந்த உறவும் வேணாம். சைலு வளர்ந்திட்டாளே தவிர பச்சைக்குழந்தைதான் இன்னும். தயவுபண்ணி விலகியே இருங்க அதான் எல்லோருக்கும் நல்லது.

    உண்மைதான். மனசுதான் கேட்கமாட்டேங்குது. நீ உன் போன் நம்பரை தரமாட்டேன்னு தெரியும். ஆனா என் நம்பரை வச்சுக்கோ இந்து. கல்யாணம் நிச்சயமானா சொல்லு, நான் ஒரு மூலையில் நின்னு வாழ்த்திட்டு ஒருவாய் சோறு உண்ணுட்டு போயிடுறேன் கண்ணு.

    இந்துவுக்கு மனக்கஷ்டமாகத்தானிருந்தது. ஆனாலும் என்ன செய்வது? மௌனமாயிருந்தாள்.

    மாமா செத்துப்போயிட்டார் இந்து. எனக்கு மூணு பசங்க இல்லியா... அவர் போனப்பொறவு என்னை பாடாப் படுத்துறாங்கம்மா. ஒவ்வொருத்தன் வீட்டிலும் நாலுமாசம்னு ஓடிட்டேயிருக்கேன்... நாளைக்கு நான் மூணாவது பையன் வீட்டுக்கு போவோணும். இங்கே இருக்கமாட்டேன் அவன் எண்ணூர்ல இருக்கான். நீ நிம்மதியா இரு. என்று கைகளைப்பிடித்து. கன்னம் வழித்தவளிடம். கடிய மனசு வரவில்லை...

    அவளுடைய வாஞ்சை இவளையும் புரட்டிப்போடத்தான் செய்தது. பர்ஸிலிருந்த பணத்தை எடுத்து அத்தை கையில் திணித்தாள். ஸாரி அத்தை... என்றவள் விடை பெற்றுக்கொண்டு நகர்ந்த பின்னும்கூட இந்து குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

    ‘இந்த சந்திப்பு நல்லதற்கா? கெட்டதற்கா? இதுவரை வாழ்க்கை கரைக்கு அடங்கிய நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இனி??’

    இந்த சைலூ வேற! சும்மாவே அப்பா, அப்பா என்று ஆடுவாள். இப்போ சலங்கை கட்டிக்கிட்டல்லவா குதிப்பாள்? கடவுளே! என்று வீட்டுக்கு வந்து பொத்தென்று உட்கார்ந்தாள் இந்து.

    அம்மாடீ

    சொல்லுங்கப்பா! மகள் இந்துவின் முன்பாக வந்து உட்கார்ந்தார் அப்பா வாகீசன்.

    தரகர் வந்திருந்தார் மா. நாலஞ்சு போட்டோஸ் ஜாதகமெல்லாம் கொடுத்தார் அதுல ஒரு வரன் எனக்குப் பிடிச்சுருக்கு. ஜாதகப் பொருத்தமும் அம்சமாயிருக்கு. அவரும் நம்ம இந்து போலவே காலேஜ்ல பேராசிரியர்தானாம். ஒரு அண்ணன் கல்யாணமாகி பெண் குழந்தையிருக்காம்மா. ஒரு தங்கை படிக்கிறாளாம்... நீ என்னம்மா சொல்றே. வரச்சொல்லலாமா பேசியபடியே மகளின் முன்பாக அமர்ந்தார் வாகீசன்.

    எல்லாம் சரிதான் பா. இவங்க அப்பாவைப் பத்தி சொல்லிடுங்க. பின்னாலே மறைச்சிட்டோம்னு பேச்சு வந்திடக்கூடாது. எல்லாமே ஓபன் புக்காகவே இருக்கட்டும். விவரத்தைக் கொடுங்க நானும் விசாரிக்கிறேன். மத்தபடி உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓகே தான்ப்பா என்றாள் மகள்.

    அப்பாங்கிற உறவே தேவைப்படாத அளவுக்கு வளர்த்திட்டாலும், கல்யாணம்னு வரும்போது எப்பேர்ப்பட்ட அயோக்கியனாயிருந்தாலும் அப்பா என்கிற அறிமுகம் அவசியமாகுதே! கணவனை உதறிவிட்டவள் என்றாலே போதும், பார்க்கிற கோணமே மாறிவிடும். ஏன் எதுக்கு... இவ எப்படிபட்டவ என்று ஹேஸ்யங்கள் கொடிகட்டிப் பறக்கும்.. எல்லாமும் பிள்ளைகள் தலையில் விழும். தேவிகாராணி யோசனையில் விழுந்தாள். மூன்று பெண் குழந்தைகளுக்கும் சந்தோஷமான வாழ்க்கையை அமைச்சுக்கொடுக்கனும். ஹ்ம்ம்... எதிர் அலமாரியிலிருந்த பாபாவின் உருவச்சிலை மீது கண்கள் படிய மனத்தில் அவர் பாதங்களை இருத்தி கவலைகளை ஒப்படைத்தாள். விழிகளை மூடியபடியே அமர்ந்திருந்தவளை மொபைலின் ரீங்காரம் கலைத்தது.

    யெஸ்! தேவிகாராணி ஹியர்! அவள் தாய் என்ற ஸ்தானத்திலிருந்து மிகப்பெரிய ஸ்தாபனத்தின் முதன்மை அதிகாரியாக கூடுவிட்டு கூடுபாய்ந்தாள்...

    மௌனம் 2

    தாத்தா! உங்ககிட்டே தனியே ஒரு விஷயம் பேசணும்! இந்து தாத்தாவின் காதருகில் வந்து கிசுகிசுத்தாள்.

    என்னடா? மாப்பிள்ளையோட போட்டோ வேணுமா? கவலையே படாதே! இந்த யுவராணிக்கேற்ற யுவராஜாவைத்தான் பார்த்திருக்கேன் ஜோடிப்பொருத்தம் ஆஹஹா ப்ரமாதம் போ! என்று உற்சாகமாய் பேசியவரை இடைமறித்தாள்.

    அய்யோ, தாத்தா! விஷயம் அதில்லை என்றபடி சுற்றும் முற்றும் கண்களை ஓட்டியவள், நான் சாம்பவி அத்தையை பார்த்தேன்.

    என்னது தீயை மிதித்தாற் போல துள்ளிய வாகிசனை அமர்த்தியவள் உஷ் என்று உதட்டின் நடுவே விரலை வைத்தாள்.

    "ம்...

    Enjoying the preview?
    Page 1 of 1