Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyum Naanum Veralla...!
Neeyum Naanum Veralla...!
Neeyum Naanum Veralla...!
Ebook112 pages1 hour

Neeyum Naanum Veralla...!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

நீயும் நானும் வேறல்ல...!

இதுவரை எந்த பத்திரிகையிலும் வெளிவராத என் புத்தம்புதிய நாவல் இது.

கணவன் மனைவி இடையேயிருக்க வேண்டிய பரஸ்பர அன்பும் ஆழ்ந்த நம்பிக்கையுமே திருமண வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை என்பதை என் பாணியில் கூறியுள்ளேன். வாசித்துப் பாருங்களேன். உங்களுக்குமே கண்டிப்பாக பிடிக்கும்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580135408193
Neeyum Naanum Veralla...!

Read more from J. Chellam Zarina

Related to Neeyum Naanum Veralla...!

Related ebooks

Reviews for Neeyum Naanum Veralla...!

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyum Naanum Veralla...! - J. Chellam Zarina

    https://www.pustaka.co.in

    நீயும் நானும் வேறல்ல...!

    Neeyum Naanum Veralla...!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 1

    அம்மா! நான் வேற எதுக்கும்மா? நீங்க கல்யாணம் முழுக்க இருந்துட்டு கிளம்பும் போது போன் செய்யுங்க. நான் வந்து பிக்அப் பண்ணிக்கிறேன்

    இல்லை ஈஷ்வர்! நமக்கு நெருங்கிய சொந்தம். நியாயமா அப்பாவோடு குடும்பமா வந்திருக்கனும். அப்பா ஊர்லே மாட்டிக் கிட்டார். பெரியவன் பெரியண்ணியோடு இன்னொரு கல்யாணத்துக்கும் சின்னவன் மாமனார் வீட்டு விசேசத்துக்கும் போயாச்சு

    அப்போ பலியாடு நாந்தானாம்மா

    அப்படியில்லைப்பா. அம்மாவுக்குத் துணைன்னு நினைச்சுக்கோ.

    அம்மாமாமா... நீங்க இருக்கீங்களே! ஆனால் பத்து நிமிசந்தான் இருப்பேன். கிளம்பிடுவேன். சரியா

    இதுவரை மகன் மலையிறங்கியதே போனஸ் என்பதே போலத் தலையாட்டினார் பாகிரதி வேகமாய்.

    திருமண மண்டபம் வாசலில் நிறுத்தியவன்

    உள்ளே போங்கம்மா. நான் நம்ம இடத்தில் பார்க்கிங் பண்ணிட்டு வாரேன்.

    பரவாயில்லை! நான் இங்கியே நிக்கேன்

    அம்மா! ராஜேஷ்வர் பேச்சு மாற மாட்டான். உள்ளே வரேன். போங்க

    திருமண மகாலின் பக்கவாட்டை நோக்கி கார் நகர வாட்ச் மேன் ஓடி வந்து கேட் கதவைத் திறந்தார். அது மகாலின் சொந்தக்காரர்கள் மட்டுமே வண்டி நிறுத்தும் பிரத்யேகமான இடம்.இந்த ஆனந்தம் கல்யாண மண்டபம் இவர்களுடையது தான். அங்கிருந்தே மண்டபம் உள்ளேயும் போகலாம்.

    காரை நிறுத்திவிட்டு மொபைலை எடுத்துக் கொண்டு பிரதான வாசலுக்கே போனான். நீலநிற ஜீன்சும் சந்தன நிற கார்கோ ஷர்ட்டும் அவனுடைய தாமிர நிறத்துக்கு எடுப்பாயிருந்தது. பெண்ணினுடையதைப் போல பெரிய விசாலமான விழிகள் கூர் நாசி. அடர் மீசை நல்ல உயரம் உயரத்திற்கேற்ற உடல்கட்டு. நடக்கும் போது அலையலையாய் கேசம் அடங்காமல் குதித்தது.

    வாயிலில் நின்று கண்களை சுழலவிட அம்மா மேடைக்கருகே இரண்டாம் வரிசையில் அமர்ந்திருப்பது தெரிந்ததுமே அவரை நோக்கி நகர்ந்தான்.

    அம்மாவிடம் யாரோ பேசிக் கொண்டிருக்க அருகில் போனதுமே

    அடடே! ஈஸ்வர் தம்பி வந்திருக்கே! வாங்க வாங்க தம்பி! தங்கச்சி நீயும் தம்பியும் சாப்பிட்டுத்தான் போவனும்.

    இருக்கட்டும்ண்ணே! நீங்களும் மதினியும் கல்யாண வேலையைப் பாருங்க. நான் இருந்து சாப்பிட்டுத்தான் போவேன். அவரு ஊருலே ஒரு பிரச்னையிலே மாட்டிக் கிட்டார். வந்ததுமே புள்ளைகளைப் பார்க்க ஒருநாள் வாரோம். வந்து விருந்துக்கு அழைக்கிறோம்.

    சரிம்மா! இந்தா புள்ளே! தங்கச்சிய கூடவேயிருந்து கவனிக்கனுமே! அந்தப்புள்ளே மஞ்சரியை அனுப்பு. பொறுப்பா நடந்துக்கிடும்.

    பாகிரதி மறுப்பை பொருட்படுத்தாமலே மணமகள் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை சைகையில் அழைத்தார்.

    எதேச்சையாக மேடையைப்பார்த்த ராஜேஷ்வருக்கு மூச்சை அடைத்தது. கண்ணைக் கட்டியது.

    அரைமுட்டிப் போட்டிருந்த நிலையில் அந்தப்பெண் தலையை நிமிர்த்தி நின்றிருந்த யாரிடமோ எதுவோ சொல்ல இறகிமைகள் குடைபோல விரிந்திருக்க லேசான மையுண்ட விழிகளோ விரிந்து நோக்க காதிலிருந்த பச்சைக்கல் பதித்த ஜிமிக்கியோ கழுத்தில் உரசி விளையாட ராஜேஷ்வர் தன்னையறியாமலேயே அனிச்சையாக அந்தப் பெண்ணை யாருமேயறியாமல் படம் பிடித்தான். தெரியாத பெண்ணை அவள் அறியாத வகையில் போட்டோ எடுத்தது தப்பென்ற எண்ணமே எழவில்லை... பதிலாக இவள் என்னவள் என்ற எண்ணமே வேகமாய் எழுந்தது. கண்ணிமைக்காமல் பார்த்தான். அவள் இவனைப்பார்த்தாற் போலிருந்தது. ஜெர்க் காகி விட்டான்.

    அவளோ மேடையிலிருந்து இறங்கி இவர்களை நெருங்கி விட்டாள். பச்சை நிற பார்டர் வைத்த சந்தன நிறச்சேலையில் தங்கச் சரிகையில் பூக்கள் ஓடின.பச்சை நிற ப்ளவுசில் ஆரிவொர்க் ரிச்சாகத் தெரிந்தது. பச்சைக்கல் பதக்கம் வைத்த தங்கச் சங்கிலி. பச்சைக் கற்கள் பதித்த வளைகள். மெஹந்தியிட்டிருந்த விரல் நுனிகள் சிவந்திருந்தன.

    அம்மாடி மஞ்சரி! இவங்க நமக்கு நெருங்கின உறவு. அவங்களை கவனிச்சு தாம்பூலம் தருவது வரை உன்னோட பொறுப்புத்தான்.

    ஆகட்டும் அத்தை! நீங்க போங்க ஐயர் உங்களைக் கூப்பிட்டார்.

    ம்மா! வாங்க டிபன் சாப்பிடப் போலாம்.

    உடட்காரும்மா! கொஞ்ச நேரம் கழித்தே போலாம். உன் பேரு என்ன மஞ்சரி தானே! யார் வீட்டுப்பொண்ணு

    மஞ்சரி தான்ம்மா! வெள்ளியங்கிரியோட பொண்ணு. சடாட்சரம் தான் எங்க தாத்தா

    மைதிலிதானே உங்கம்மா... நானும் உங்கம்மாவும் ஸ்கூல் வரைக்கும் ஒன்னாப்படிச்சவங்க. சின்னதுலே உன்னைப்பார்த்தது. இப்போ என்னடா பண்றே படிச்சிட்டு இருக்கியா?

    மியுசிக் டீச்சரா இருக்கேன் மா

    மொபைலில் புதைந்திருந்தாலும் செவிகள் அவர்களின் உரையாடலை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

    அவனுடைய உயரத்திற்கு சிரமமேயின்றி வாகாய்த் தெரிந்தாள் மஞ்சரி. இடது பக்க ஜிமிக்கியைத் தொட்டு கழுத்தில் தெரிந்த அந்த மச்சம் அவன் கண்ணில் பட்டு படுத்தியது. அந்த மச்சம் அவனை உன்மத்தம் கொள்ள வைத்தது.

    இம்மாதிரியான உணர்வுகளை அவன் எந்தப் பெண்ணிடமுமே அடைந்ததில்லை. பார்த்த சில நொடிகளிலேயே அவன் பைத்தியமானான்.

    அம்மா அப்பா வரலையாடா?

    நானும் கல்யாணப் பொண்ணும் தோழிகள் மா. ராத்திரியே அவளுக்குத் துணையா வந்திட்டேன். அம்மாப்பா இப்போ வந்திடுவாங்க... அடடே! வந்திட்டாங்கம்மா!

    எழுந்து நின்று கையாட்டி அழைக்க அந்தத் தம்பதி கவனிக்கவில்லை

    ம்மா! ஒரு நிமிஷம்! அவங்களை அழைச்சிட்டு வரேன்

    Enjoying the preview?
    Page 1 of 1