Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paattu Kalanthidavey Part 3
Paattu Kalanthidavey Part 3
Paattu Kalanthidavey Part 3
Ebook319 pages2 hours

Paattu Kalanthidavey Part 3

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352854271
Paattu Kalanthidavey Part 3

Read more from Jaisakthi

Related to Paattu Kalanthidavey Part 3

Related ebooks

Reviews for Paattu Kalanthidavey Part 3

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paattu Kalanthidavey Part 3 - Jaisakthi

    http://www.pustaka.co.in

    பாட்டுக் கலந்திடவே...!

    பாகம் 3

    Paattu Kalanthidavey…!

    Part 3

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    பாட்டுக் கலந்திடவே...!

    பாகம் -3

    1

    மகிழ்ச்சி அங்கே தாண்டவமாடியது!

    எல்லோரும் கலகலவென்று சிரித்தார்கள். முகுந்தன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான். நரேந் திரனும் வண்டார்குழலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முகுந்தன் நரேந்திரனுக்கு ஃபோன் செய்து ‘குழலியின் அப்பா வேற மாதிரி பேசறார்!’ என்றவுடன் நரேந்திரனுக்கும், குழலிக்கும் கொஞ்சம் அச்சமாகத்தான் போய்விட்டது.

    அதற்குப் பிறகு அவளோடு தொடர்ந்து அதே பாணியில் பேசுவதற்கு, ஒரு ரொமான்ஸ் மூடுக்கு நரேந்திரனுக்கு வழி இல்லாமல் போனது. ‘சரி, பேசாம நாம நேரா நம்ம பங்களாவுக்குப் போகலாம். அங்கே முகுந்தன் மச்சான்கிட்டே பேசிட்டு அப்புறம் முடிவெடுக்கலாம்!’ என்றான் நரேந்திரன். அப்படியே அவர்களுடைய பங்களாவிற்குப் போனார்கள்.

    தன்னுடைய அறைக்கு அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவனுக்கு விருப்பமாக இருந்தாலும். அதற்கு இன்னும் காலம் வர வில்லை என்பது போல அவன் பெரிய மனிதர்களை சந்திக்கும் அந்த அறைக்கு அழைத்துப் போனான். அவளை எதிரே சோஃபாவிலே அமர்த்தி விட்டு சற்று நேரம் பொதுப்படையாக அவளிடம் பேசினான்.

    பிறகு வேலண்ணனை அழைத்தான். வேலண்ணன், முகுந்தன் மச்சான் எங்கே?’ என்றான். தெரியலை தம்பி! முகுந்தன் மச்சான் மொதல்ல கிளம்பிப் போனாரு. அப்புறம் கொஞ்ச நேரத்துல நம்ம மேகலா அம்மாவைப் புறப்பட்டு வரச் சொன்னாரு. மேகலா அம்மாவும் ஏதோ தட்டிலே பழம், பூவெல்லாம் வாங்கிட்டுப் போனாங்க!" என்றார்.

    நரேந்திரனுக்கு இப்போது குழப்பமாகப் போய் விட்டது. குழலியைப் பார்த்தான். என்ன குழலி? உங்க அப்பா வேற மாதிரி பேசறார்னாரு மச்சான். ஆனா இப்போ மேகலா பூ பழமெல்லாம் வாங்கிட்டு போயிருக்காம்! என்றான். அவளுக்கும் குழப்பமாக இருந்தது.

    அந்த நேரத்தில் மறுபடியும் முகுந்தனிடம் இருந்து ஃபோன் வந்தது. மச்சான் எங்கே இருக்கீங்க? என்று கேட்டான்.

    ஏன், நம்ம வீட்ல தான்

    குழலி? என்றான்.

    குழலியும் இங்கேதான்! என்றான்.

    ஓஹோ! சரி ரெண்டு பேரும் கிளம்பி நேரா குழலி வீட்டுக்கு வாங்க! என்றார்.

    மச்சான்......! என்று இழுத்தான் நரேந்திரன்.

    அட! நீ புறப்பட்டு வாப்பா! நான் ஒரு மாதிரி டாக்கிள் பண்ணி வச்சிருக்கேன் நீ கிளம்பி வா! என்றான்.

    டாக்கிள் பண்ணி வச்சிருக்கேன்! என்று சொன்னவுடனேயே நரேந்திரனுக்கு ஒரு புறம் நம்பிக்கை தோன்றியது.

    குழலியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். அவர்கள் வீட்டிற்குப் போய் இறங்கினார்கள். குழலி இறங்கி முன்னாலே போனாள். நரேந்திரன் இறங்கி கார்க்கதவை ஏற்றி விட்டு லாக் செய்து விட்டுப் பின்னாலே போனான்.

    உள்ளே போனால் மேகலா முகுந்தன் இரண்டு பேரும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். சர்ரென்று ஒரு கார் வந்து நிற்க முகுந்தனுடைய தாயாரும் தந்தையும் வேறு இறங்கி வந்தார்கள்.

    ‘வாங்க! வாங்க!’ என்று தியாகராஜனும் சுந்தர வல்லியும் எழுந்து நரேந்திரனை வரவேற்றார்கள்.

    நரேந்திரன் வணக்கம் சொல்லி விட்டு சுற்றும் முற்றும் பார்க்க அவனுக்கும் ஒரு சேரைப் போட்டார்கள். வந்த இரண்டு பெரியவர்களுக்கும் அவசரமாக இரண்டு சேரைக் கொண்டு வந்து போட்டார்கள். முகுந் தனிடத்தில் போய் அருகில் அமர்ந்து கொண்டான் நரேந்திரன்.

    என்ன மச்சான்! என்றான் மெல்லிய குரலில்.

    இல்லை... நம்ம சைட்ல இருந்து பேசறதுக்கு இரண்டு பெரியவங்க வேணுமில்லே! அதுதான் அம்மா வையும், அப்பாவையும் வரச் சொல்லியிருக்கேன்! என்றான் முகுந்தன்.

    அப்படின்னா? என்றான் நரேந்திரன்.

    ஒரு மாதிரி முடிச்சாச்சுப்பா. பேசியாச்சுப்பா. விடு! என்றான்.

    ஒத்துக்கிட்டாங்களா? என்றான் நரேந்திரன்.

    பின்னே ஒத்துக்கலேன்னா விட்ருவோமா? நாம பேசி சரிபண்ணிடுவோமில்லே? என்றான்.

    நரேந்திரன் முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டாமல் அழுத்தமாக அமர்ந்து கொள்ள பெரும்பாடு பட்டு விட்டான். இருந்தாலும் ஒருவாறு அழுத்தமாக அமர்ந்து கொண்டான்.

    முகுந்தனுடைய தந்தை பேச்சைத் தொடங்கினார். முகுந்தன் எல்லா விவரமும் சொன்னானுங்க. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பையன் ரொம்ப அருமையான பையன். புள்ளையோட வாழ்க்கைக்கு நாங்க உறுதி கொடுக்கிறோம். நீங்க எந்த விதமான சந்தேகமும் பட வேண்டியதில்லை! என்றார் ராமசாமி.

    தியாகராஜன் ஒரு வித கூச்சத்தில் இருந்தார். தலையை ஆட்டிக் கொண்டார்.

    பார்த்திபன் எங்கோ போய் விட்டு அவசரமாக வந்து பைக்கை நிறுத்தினான். பரபரவென்று பக்கவாட்டு வழியாக உள்ளே போனான். அவன் உள்ளே போவதைப் பார்த்தவுடன் சுந்தரவல்லியும் எழுந்து போனாள். சிறிய சிறிய தட்டுகளில் ஸ்வீட் காரம் வைத்து எடுத்துக் கொண்டு வந்தார் சுந்தரவல்லி.

    பார்த்திபன் குழலியிடம் போய் குழலி! நல்ல டிரஸ்ஸா மாத்திட்டு வா! என்றான். என்னண்ணா? என்றாள் அவள் குழப்பமாக.

    பெரியவங்களெல்லாம் கல்யாணம் பேசறாங்க புள்ளே! என்றான்.

    பின்னே? முகுந்தன் அண்ணா...! என்று அவள் இழுத்தாள்.

    அவரு கிடக்கறாரு! அவரு ஏதோ தமாஷ் பண்ணி யிருக்காரு போல இருக்கு. அது என்ன நடந்துச்சுன்னு தெரியலை. அப்புறம் பார்த்துக்கலாம். நீ முதல்ல ரெடியாகி வா! என்றான் பார்த்திபன்.

    குழலி கனவில் இருப்பது போல அவசர அவசரமாகத் தேடி ரொம்பவும் கிராண்டாவும் இல்லாமல் ரொம்ப சாதாரணமாகவும் இல்லாமல் ஒரு பிரிண்டட் சில்க் புடவையை கட்டிக் கொண்டாள். அதற்கேற்ற அழகான ஒரு ப்ளவுஸை அணிந்து கொண்டு முகம் திருத்தி லேசான அலங்காரம் செய்து கொண்டு வந்தாள்.

    அதற்குள்ளாக சுந்தரவல்லி காஃபி போட்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்து வந்தாள். வா! நீயே கொண்டு போய்க் கொடு! என்றாள்.

    அவள் எல்லோருக்கும் கொடுத்து நரேந்திரனுக்கும் கொடுத்தாள். அவன் என்னம்மா! கதையே மாறிப் போச்சு! என்று முணுமுணுத்தான். அவள் ஒன்றும் பதில் பேசவில்லை. அவள் ஒருவாறு தலையசைத்து விட்டு உள்ளே போக முற்பட்டாள்.

    என்னம்மா நீ? புதுசாவா வந்திருக்கோம் வா! வா! நீயும் உட்காரு! என்று அவளுக்கும் சேரைப் போடச் சொன்னான் முகுந்தன்.

    தியாகராஜன் மெதுவாக நீங்க ஏதாவது எதிர் பார்ப்புன்னு இருந்தா சொல்லிட்டீங்கன்னா? என்று இழுத்தார்.

    நரேந்திரன் சட்டென்று குனிந்து முகுந்தனிடம் ஏதோ முணுமுணுக்க, முகுந்தன் குனிந்து ராமசாமியிடம் ஏதோ சொன்னான். அதற்குப் பிறகு அவர் எங்க புள்ளைங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லைன்னு சொல்றாங்க. பொண்ணைக் கொடுத்தா போதுமாம். பொண்ணைக் கொடுக்கற அளவுக்கு நம்பிக்கை வச்சா போதுமாம். மத்தபடி பொண்ணுக்கு என்ன வேணுமோ நாங்க செஞ்சுப்போம்! என்றார் ராமசாமி.

    தியாகராஜன் முகமும் மலர்ந்தது. சுந்தரவல்லியின் முகமும் மலர்ந்தது. பார்த்திபனுக்கு எக்கச்சக்கமான சந்தோஷம். இருந்தாலும் தியாகராஜன் மெல்லக் கனைத்துக் கொண்டு சொன்னார்.

    அதெல்லாம் சொல்றதுக்கு நல்லாயிருக்கும். பெத்த வங்க சம்பாதிச்சு வைக்கறது குழந்தைகளுக்குத்தானே? நானும் என்னால முடிஞ்சது செஞ்சு வச்சிருக்கிறேன். சின்னதா அவளுக்குன்னு ஒரு வீடு கட்டிட்டு இருக்கோம். கல்யாண செலவு நாங்க பண்ணிடுவோம்! என்றார்.

    முகுந்தன் புன்னகைத்தான். நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களை நான் என்னன்னு கூப்பிடணும்? குழலி எனக்கு சிஸ்டர் முறையாகும் அப்ப சித்தப்பா. சித்தப்பான்னு கூப்பிடட்டுமா? என்றான்.

    கூப்பிடுப்பா! என்றார் தியாகராஜன். சித்தப்பா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. எங்க வீட்டுக் கல்யாணம்னா நிறைய கூட்டம் வரும். அவ்வளவு பேருக்கும் நீங்க செலவு செய்ய முடியாது. உங்களால என்ன முடியுமோ அதைக் கொடுத்துருங்க. நாங்க மேற்கொண்டு பார்த்துக்கறோம். இதையே நாங்க வாங்கக் கூடாது. ஆனா நாங்க இப்ப வேண்டாம்னு சொன்னா உங்க மனசு சங்கடப்படும். அதுக்காகத்தான்! என்றான்.

    தியாகராஜன் அரை மனதோடு அதற்கு ஒத்துக் கொண்டார். சரி, நீங்க இப்படிச் சொல்லும்போது நான் என்ன பண்ண முடியும். சொன்ன மாதிரி உங்க அளவுக்கு வர்ற கூட்டத்தை எங்களால சமாளிக்க முடியாதுதான் என்றார் தனக்குத் தானே பேசுவது போல. அதற்குப் பிறகு திருமணத் தேதி என்றைக்கு நிச்சயதார்த்தம் என்றைக்கு என்றெல்லாம் பேசினார்கள்.

    குழலி ‘நான் உள்ளே இருக்கேன்!’ என்று எழுந்து போனாள். முகுந்தன் உடனே குழலி கிட்டே ரெண்டு வார்த்தை பேசறதுன்னா பேசிட்டு வாப்பா! என்றான். பிறகு திரும்பி ஏங்க சித்தப்பா?! என்றான்.

    தியாகராஜனும் தலையசைக்க நரேந்திரன் எழுந்து போனான். அவளுடைய அறையிலே செயினை எடுத்து வாயிலே வைத்தபடி ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் குழலி.

    நரேந்திரன் வருவதை உணர்ந்தவள் போல திரும்பிப் பார்த்தாள். அவனும் அவளை ஆவலுடன் பார்க்க ஓடி வந்து அவன் மார்பிலே சாய்ந்து கொண்டாள். உலகம் மறந்தவர்களாக இரண்டு பேரும் மகிழ்ச்சியாக நின்றார்கள்.

    ஆனாலும் இந்த முகுந்தன் அண்ணா...! என்றாள் குழலி

    ஆமா, நானும் நம்பிட்டேன். விளையாட்டுக் காட்டிட்டாரு என்றவன் மகிழ்ச்சியாகச் சிரித்தான். ஓ.கே. நம்ம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கங்கராஜுலேட் பண்ணிக்கலாம். இங்க வச்சு எதுவும் இப்போதைக்கு பேச முடியாது. ஜஸ்ட் ஆஸ் எ டோக்கன் ஆஃப் ஹாப்பினஸ்! என்று லேசாக அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சரி பெரியவங்க முன்னால இருக்கையிலே நான் இங்கே ரொம்ப நேரம் இருக்கக் கூடாது. நைட் பேசறேன்! என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

    கிளம்பும் போது முகுந்தனும் மேகலாவும் கொஞ்ச நேரம் குழலியை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க. ஒரு ஒன் அவர் எங்களோட பேசிட்டிருந்துட்டு வந்தரட்டும்! என்றார்கள்.

    இல்லை... பேச்சு வார்த்தை ஆரம்பிச்சுடுச்சு! என்றார்.

    அதனால என்ன? இன்னும் யாருக்கும் வெளியில தெரியாதில்லே. நிச்சயம் ஆகலையே? சும்மா வழக்கம் போல எங்க வீட்டுக்கு வரட்டும்! என்று அழைத்துக் கொண்டு வந்தார்கள். அப்படி வந்தவர்கள்தான் நரேந்திரனையும் குழலியையும் ஒரு இருக்கையில் அமர்த்தி வைத்து விட்டு முகுந்தனும் மேகலாவும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள்.

    நரேந்திரனும் உண்மையான கோபத்துடன் மச்சானைப் பார்த்து ஏன் மச்சான் இப்படியெல்லாம் கலாட்டா பண்றீங்க?! என்றான். முகுந்தன் சிரித்தான்.

    நரேன், எதுவுமே சீக்கிரம் கிடைச்சரக் கூடாது. உடனே கைக்கு கிடைச்சதுன்னா அதோட மதிப்புத் தெரியாது. கிடைக்குமா? கிடைக்காதா? அப்படிங்கற ஒரு சஸ்பென்ஸ் வெச்சுக் கொடுத்தாத்தான் அது இனிக்கும்ப்பா! என்றார்.

    நல்ல சஸ்பென்ஸ்ல வச்சீங்க மச்சான்! பழையபடி மேகலா அக்கா பிரச்சினையை எடுத்துட்டாரோ அப்படின்னு கொஞ்ச நேரம் ஆடிப் போயிட்டேன் நான்

    எடுத்தாருப்பா எடுக்காமயெல்லாம் ஒண்ணும் இல்லை. எடுத்தாரு. ஆனா அதுக்கு நான் ஒரு போடு போட்டேன்! என்றான்.

    நரேந்திரன் மறுபடியும் விழித்துப் பார்த்தான். சொல்லப் போனா நான் போடு போடலை. உங்க அக்கா பெரிய போடு போட்டா. அதை அப்படியே போய் அங்க ரிலே பண்ணினேன். மனுஷன் ஆடிப் போயிட்டாரு! என்றான்.

    அப்படி என்ன சொன்னா அக்கா? என்று நரேந்திரன் சகோதரியைப் பார்த்தான்.

    குழலி இந்தப் பேச்சு வார்த்தைகளில் அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்ளாமல் ஆனால் மகிழ்ச்சியோடு மேகலாவின் அருகிலே அமர்ந்திருந்தாள்.

    உங்க மாமனாரு ரெண்டு பாய்ண்ட்ல மடங்கினாரு! என்றான் முகுந்தன்.

    அதுதான் என்ன பாய்ண்ட்ன்னு கேட்கறேன் இல்லே! என்றான் நரேந்திரன்.

    சும்மா சொல்லிடுவோமா? இன்னைக்கு ஒரு ட்ரீட் கொடுக்கறேன்னு சொல்லு! என்றார்.

    மச்சான். தயவு செய்து காப்பாத்துங்க! என்று நரேந்திரன் கெஞ்சவும் எல்லோரும் சிரித்தார்கள்.

    குழலிக்கு அவன் இப்படியெல்லாம் பேசுவானா என்பது போல ஆச்சரியமாக இருந்தது. நீ வேற என்னத்தைப் பாக்கறே? உன்னை வச்சுகிட்டு வேற கெஞ்ச வேண்டியதிருக்கு! என்று அவன் முணுமுணுக்க. அவள் ‘களுக்’கென்று சிரித்தாள்.

    அதுக்குள்ள என்னப்பா பரிமாற்றம்! என்றான் முகுந்தன்.

    அது எங்களுக்குள்ளே. நீங்க இப்ப சொல்றீங்களா இல்லையா? என்றான் நரேந்திரன்.

    சொல்றேம்ப்பா சொல்றேன்! ரொம்பத் தவிக்கறே! என்று சிரித்தான்.

    புரிஞ்சாச் சரி! என்று அவன் முணுமுணுக்க முகுந்தன் முகத்தில் புன்னகையைத் தேக்கிய படி சொல்ல ஆரம்பித்தான் நரேந்திரன். அந்தச் செய்தியைக் கேட்டு உண்மையாக மகிழ்ந்து போனான்.

    2

    முகுந்தன் பேச ஆரம்பித்தான் இந்தப் பிரச்சினை ஆரம்பிச்ச உடனே... பிரச்சினைன்னு சொல்லக் கூடாது. கதை....! கதைன்னுதான் சொல்லணும். எப்போ அந்தப் படத்தை....., குழலியோட படத்தை ஸ்ரீலேகா கொண்டு வந்து காண்பிச்சாளோ அப்பவே எனக்கு விஷயம் பிடிபட்டுடுச்சு. அப்ப இருந்தே நான் மேகலாகிட்ட ஆழம் பார்த்துகிட்டுத்தான் இருந்தேன். ஆனா மேகலா ஒரே யூ டெர்ன் அடிச்சுட்டாப்பா! என்றான் முகுந்தன்.

    இன்னும் சஸ்பென்ஸ் வைக்கறீங்களே?! என்று நரேந்திரன் பரபரத்தான்.

    சும்மா பரபரப்பாகாதே! உங்க அக்கா என்ன தெரியுமா சொன்னா? நான் தெரியாம மடத்தனமா குழலியைத் தப்பா சொல்லிட்டேன். குழலி இவ்வளவு நல்ல பொண்ணா இருப்பான்னு யாருக்குத் தெரியும்? என் பேச்சினாலே குழலி மாதிரி ஒரு நல்ல பொண்ணு நரேந்திரனுக்கு கிடைக்காமப் போறதா? கூடவே கூடாது. நான் வந்து குழலியோட அப்பா காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்கறேன். அது மட்டும் இல்லை. நீங்க உங்க பொண்ணுக்கு எதுவுமே பண்ண வேண்டாம். கட்டியிருக்கிற புடவையோட அனுப்பி வைங்க. அவளுக்குத் தலையில இருந்து கால் வரைக்கும் என்னோட நகையெல்லாம் பூட்டிப், பூட்டின்னா இரவலா இல்லை அவளுக்கே கொடுத்து நான் எங்க வீட்டுப் பொண்ணா ஏத்துப்பேன் அப்படின்னு கேட்பேன்னு சொன்னாப்பா! என்றான்.

    உண்மையாகவே நரேந்திரன் மகிழ்ந்து போனான். அக்காவை நெகிழ்ச்சியுடன் பார்த்தான். ஆமா, தம்பி மனுஷங்க பெரிசுன்னு நினைக்கிறாள்லே இவ. ஒண்ணும் இல்லை, அன்னைக்கு ராஜாவைக் காப்பாத்தத் தன் உசிரைப் பத்தி நினைக்காம பாய்ஞ்சாளே? அப்பக் கூட நான் இவளைப் புரிஞ்சுக்கலைன்னா நான் என்ன மனுஷி? அப்படி ஒரு பொண்ணு உனக்கு கிடைக்காமப் போச்சுன்னா அது எவ்வளவு பெரிய நஷ்டம்? அதான். நான் ஈகோவே பார்க்கலை. இப்படி நான் செய்வேன்னு உன் மச்சான் கிட்ட சொன்னேன்! என்றாள்.

    ‘அக்கா!’ என்று அவன் எழுந்து மேகலாவின் கையைப் பிடித்துக் கொண்டான். தாங்க்ஸ் அக்கா! என்றான். தழுவிக் கொண்டான் பின் அவள் கையைக் குலுக்கினான்

    பரவாயில்லை தம்பி! என்றவள் அவன் கையைக் குலுக்கும் வரை விட்டு விட்டு கையை விடுவித்துக் கொண்டு அமர குழலி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். அக்கா என்னக்கா? இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம்.....! என்று தழுதழுத்தாள்

    என்ன பெரிய வார்த்தை! நான் சும்மா உனக்கு நகையும் பணமும் தான் தரேன்னு சொன்னேன். ஆனா நீ குணத்தைக் கொடுத்திருக்கறே! எவ்வளவு பெரிய விஷயம் என் குடும்பத்துக்கு நடத்திக் காட்டியிருக்கே? முதல்ல எனக்குப் புரியலைம்மா. ஆனா ரெண்டு மூணு தடவை கவுன்சிலிங் கூட்டிட்டுப் போனியே அப்பத் தான் சில விஷயங்கள் புரிய ஆரம்பிச்சுது. அப்புறம்... அப்புறம்தான் எனக்கு உலமே புரிஞ்சது! என்றாள். மேகலாவும் நெகிழ்ந்து போனாள்.

    இதைச் சொன்னவுடனே குழலியோட அப்பா இன்னொரு யூ டர்ன் அடிச்சுட்டாரு! என்று சிரித்தான் முகுந்தன். முகுந்தன் இன்றைக்கு மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். ஒவ்வொரு வார்த்தைக்கும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.

    நரேந்திரன் மறுபடியும் அவன் முகத்தைப் பார்க்க இங்க தான் எங்க பொண்ணு ஜெயிச்சா. எந்தப் பொண்ணு வாய்னால இதெல்லாம் வளைச்சுப்போட வருதுன்னு வந்ததோ. அதே பொண்ணு தன் நகையைக் கொடுத்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்றாங்களே! இங்கேதான் என் பொண்ணு ஜெயிச்சான்னு அவருக்கு ஒரே கர்வம்ப்பா! என்றான் முகுந்தன்.

    நரேந்திரன் பெருமையாகக் குழலியைப் பார்த்தான். குழலியின் முகமும் நெகிழ்ந்து கிடந்தது. அப்புறம் என்ன? இதுக்கு மேல தள்ளிப் போடறதுக்கு என்ன இருக்கு? என்றான்.

    அப்புறம் இன்னொரு பாய்ண்ட்? என்று கேட்டான் நரேந்திரன்.

    முகுந்தன் இப்போது குழலியைப் பார்த்து சிரித்தான். என்னண்ணா சிரிச்சுகிட்டே இருக்கீங்க? என்றாள் குழலி.

    அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்ம்மா. இப்ப தானே சிரிக்க முடியும்?! என்று மேலும் சிரித்தான். சொல்லிட்டு சிரிங்க மச்சான்! என்று நரேந்திரன் கடுப்பானான்.

    ஐயய்யோ! பய கடுப்பாகறான், இனிமேலும் நாம இழுத்தோம்னா நல்லா இருக்காது. சொல்லிடுவோம்! என்றவன் தொடர்ந்தான்.

    இல்லைப்பா குழலியோட அப்பா சொன்னாரு! நரேந்திரனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ அப்படின்ன உடனே எம் பொண்ணு துடிச்சா பாருங்க. அந்த துடிப்புக்கு அப்புறம் நான் எப்படி மறுத்துச் சொல்ல முடியும். இந்தப் பொண்ணை வேற இடத்துக்குக் கொடுக்க முடியாது. பொருந்தாது அது மனசு இப்படி இருக்கறப்போ அவளோட சந்தோஷம்தானே எங்களுக்கு முக்கியம். நாங்க எதுக்காக இத்தனை பாடு படறோம். அவளும் எங்க நிலைமை புரிஞ்சுட்டு பெரிய இடம் வேண்டாம்னு மனசுகிட்ட போராடிப் பார்த்திருக்கா ஆனா மனசு அப்படி நாம சொல்றதை கேட்குங்களா? அவ மனசு கேட்கலை. எனக்கு இப்ப என் குழந்தை சந்தோஷமா இருந்தாப் போதும். மத்ததெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இப்ப நீங்க வந்து பொண்ணு கேட்கலைன்னா நானே என்ன பண்றதுன்னு யோசிச்சிருப்பேன் அப்படின்னு ஒரு போடு போட்டாரு!

    குழலிக்கும் மனதிலே மகிழ்ச்சி தோன்றியது. எங்கப்பாவா? அப்படியா சொன்னாரு?! என்றாள். ஆமாம்மா! உங்க அப்பாதான்!" என்றான் முகுந்தன்.

    அப்படி அங்கே ஒரேயடியாக மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

    என்னப்பா நரேன்? மறுபடியும் குழலியை கூட்டிட்டு எங்காவது போகணும்னு தோணுதா? என்றான் முகுந்தன்.

    நரேந்திரன் ஒரு விதமாக சிரித்து விட்டுத் தோணுது தான். ஆனா காலையில போய் கேட்டவுடனே உடனே ஆனுப்பிச்சாரு. அதுவே பெரிய விஷயம். இப்ப மறுபடியும் போய்க் கேட்டா நல்லாயிருக்காது. ஒரு நாள் விட்ருவோம். நாளைக்கு ட்ரீட்னு ஏதாவது ஏற்பாடு பண்ணிருவோம்! என்றான் நரேந்திரன்.

    சரிப்பா, ரொம்ப சந்தோஷம், நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டிருங்க! என்று விட்டுப் போனார்கள்.

    நரேந்திரன் குழலியின் மீது இப்பொழுது மிகுந்த உரிமையோடு தனது நேசப்

    Enjoying the preview?
    Page 1 of 1