Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aruvi Saaraliley!
Aruvi Saaraliley!
Aruvi Saaraliley!
Ebook139 pages1 hour

Aruvi Saaraliley!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

இளம் வயதில் தன் தொழிலில் சிறந்து விளங்கும் ரகுநந்தன். தன் சிறு வயதில் நடந்த தன் தாயின் கொலையின் அதிர்ச்சியிலிருந்து மீளாதிருந்தான். சொத்திற்காக நடந்த அந்த கொலையை செய்த தன் பெரியாப்பாவையும், அந்த ஊரையும் அறவே வெறுத்திருந்தான். இந்த நிலையில் அவன் சந்திக்கும் சந்தனா என்பவள் யார்? தன் தாயைக் கொன்ற பெரியாப்பாவின் நிலை என்ன? அவனது ஊரிலிருந்த அவனது உறவினர்களின் மனநிலை என்ன? சிறுவயதில், அடிமனதில் ஏற்பட்ட அவனது காயங்கள், மறைந்தனவா? என்பதை சாரலில் நனைந்து உணரலாம்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580106007563
Aruvi Saaraliley!

Read more from Jaisakthi

Related to Aruvi Saaraliley!

Related ebooks

Reviews for Aruvi Saaraliley!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aruvi Saaraliley! - Jaisakthi

    https://www.pustaka.co.in

    அருவிச் சாரலிலே!

    Aruvi Saaraliley!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 1

    நல்ல நேரம் பார்த்துட்டீங்களா விஸ்வநாதன் சார்? பார்த்திருப்பீங்களே? என்று சிரித்துக்கொண்டே வந்து தன்னுடைய சுழல் நாற்காலியில் அமர்ந்தான் ரகுநந்தன்.

    விஸ்வநாதன் அழுத்தமாகப் புன்னகைத்துக் கொண்டார். சரி, எவ்வளவு பேர் இருக்காங்க லிஸ்ட்லே? என்று கேட்டான்.

    இருபது பேர் இருக்காங்க தம்பி! என்றார் விஸ்வநாதன்.

    வடிகட்டிட்டீங்களா...?

    இந்தத் தடவை நான் உட்காரலே. நெக்ஸ்ட் லெவல் மேனஜர்ஸ் ரெண்டுபேரை உட்கார்ந்து பார்க்கச் சொன்னேன்! என்றார்.

    ஓ.கே! ஓ.கே! அவங்களும் டிரெயின் ஆகணுமில்லே? தட்ஸ் நாட் எ ப்ராப்ளம். ஆனா ஓரளவுக்கு நம்ம நார்ம்ஸ் எல்லாம் சொல்லி டிரெயினிங் கொடுத்திருக்கீங்க தானே?

    ம்... ஒரு நாலஞ்சு இண்டர்வியூவா நான் அவங்க கூடத்தான் உட்கார்ந்து சார்ட் அவுட் பண்ணினேன். அவங்களுக்கு ஓரளவுக்குத் தெரியும்! என்றார்.

    ஓ! நல்லதாப் போச்சு. இண்டர்வியூ ஆரம்பிச்சுடலாமா? என்றான்.

    விஸ்வநாதனை பக்கவாட்டிலே ஒரு சேரிலே அமரச்சொன்னான். அப்படியே அவரும் அமர்ந்து கொண்டார்.

    அழைப்பு மணி அடித்தவுடன் உதவியாளர் ஓடி வந்தார்.

    ஒவ்வொருத்தரா அனுப்புங்க! என்றான்.

    வந்திருக்கிறவர்களுடைய விவரங்கள் அடங்கியஃபைலை திறந்து வைத்துக் கொண்டான்.

    வந்தவர்களிடம் அவன் பல்வேறு கேள்விகளைக் கேட்டான்.

    ஏற்கெனவே அவன்பேரிலே இரண்டு மூன்று நிறுவனங்கள் இருந்தன. இப்பொழுது புதிதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க உத்தேசித்திருந்தான்.

    அந்த நிறுவனத்திற்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீஸர் அதாவது நிர்வாக அதிகாரியாக யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

    விஸ்வநாதன் அமைதியாக அமர்ந்து கொண்டார். தேவையான பொழுது மட்டும் தலையிட்டார். அவரைப் பார்த்து அவன் ஏதாவது கேள்விகள் கேட்டால் அமைதியாக பதில் சொன்னார்.

    எந்தச் சூழ்நிலையிலும் அலட்டிக்கொள்ளாமல் சமாளிக்கிற அவருடைய அந்தக் குணம் தான் ரகுநந்தனுக்கு அவரை நெருக்கமாக்கி இருந்தது.

    விஸ்வநாதன் அவனுடைய தாத்தா காலத்தில் இருந்து இந்த அலுவலகத்தில் பணி புரிகிறார். தாத்தாவுக்கு அவர் உதவியாளராக இருந்த பொழுது இளம் வயது. தாத்தா போயே நான்காண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்பொழுதில் இருந்து இவர்தான் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.

    பாட்டி படித்தவர் என்றாலும் அவர் முழு நேரமாக அலுவலகத்திற்கு வருவதில்லை. இருந்த இடத்தில் இருந்து விஸ்வநாதன் ஆலோசனையின் பேரில் நிர்வாகத்தை நடத்தினார். அதனால் விஸ்வநாதனுக்கு மட்டும் தான் அவரைத் தம்பி என்று அழைக்கும் உரிமை இருந்தது. அவரும் இங்கிதம் தெரிந்தவர்.

    மற்றவர்கள் முன்னிலையில் தம்பி என்று அழைக்கமாட்டார். ஆனால் சார் என்றும் அழைக்காமல் எப்படியோ ஒருவிதமாக பேசி விடுவார். அந்த வித்தையும் அவரிடத்திலே அவனுக்கு பிடித்தது.

    பத்துப் பேரை இண்டர்வியூ செய்து முடித்துவிட்டான். அவன் லாவகமாக அவர்களிடம் விஷயங்களை வாங்குகிற தன்மையை அவர் ரசித்துக் கொண்டிருந்தார்.

    வெளிப்பேச்சாக எல்லாம் தெரிந்தவர் போல காட்டிக் கொள்ளுகிறவர்களை அவன் லகுவாக மூக்கறுத்து விடுவதையும் பார்த்து உள்ளூரச் சிரித்துக் கொண்டார். ஆனால், அடக்கம் என்ற பெயரில் ரொம்பவும் பணிவு காட்டுகிறவர்களையும் அவன் முழுமையாக நம்ப மாட்டான் என்பது அவனுக்குத் தெரியும்.

    ரகுநந்தன் பார்த்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் உண்மையாகவே அவர்கள் ஒரு ரத்தினமாகத்தான் இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.

    பத்துப் பேரையும் இதுவரை அவன் களைப்பில்லாமல் இண்டர்வியூ செய்வதையும் அவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    பத்துப் பேரைப் பார்த்து முடித்தவுடனே ஒரு சிறிய இடைவேளை கொடுத்தான். அந்த நேரத்திலே அவனும் ஒரு கப் டீ அருந்தினான். அவருக்கும் டீ வழங்கப்பட்டது. காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டது.

    என்ன ஒரு மாதிரி பார்த்துகிட்டிருக்கீங்க? என்று கேட்டான்.

    இல்லைங்க தம்பி, டயர்ட் ஆகாம ஹேண்டில் பண்றீங்களே? ஒவ்வொருத்தரும் பதில் சொல்றதைப் பார்த்தா எனக்கே கடுப்பா இருக்குது. நீங்க ஆனா அலட்டிக்காம ஹேண்டில் பண்றீங்களே அதான் எனக்கு ஆச்சரியமா இருக்குது! என்றார் அவர்.

    எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்தது தான். தாத்தா சொல்லிக் கொடுத்ததுதான். எதைச் செஞ்சாலும் அதை ரசிச்சு செஞ்சோம்னு வைச்சுக்கோங்களேன் அலுப்பாத் தெரியாது. நம்ம நிறுவனத்துக்காக ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கறோம். அந்த ஆள் நல்ல ஆளா இருக்கணும் அப்படின்னு நாம பார்த்து தேர்ந்தெடுக்கறது நல்லதுதானே? என்றான்.

    அவர் மறுபடியும் புன்னகைத்துக் கொண்டார். இன்டர்வியூவைத் தொடர்ந்தார்கள். இப்பொழுது பத்தொன்பதாவது ஆள் வெளியே போனவுடனே சரி, நெக்ஸ்ட் லாஸ்ட் கேண்டிடேட் இல்லே? வரச் சொல்லுங்க! என்றான்.

    அடுத்ததாக உள்ளே வந்தது ஒரு பெண்! அழகான தோற்றம். பொருத்தமாகக் கைத்தறிப்புடவை அணிந்திருந்தாள். அது மட மடவென்று விறைத்துக் கொண்டு நிற்க அதுவே அவளுக்கு அழகாகத் தோன்றியது.

    உள்ளே வந்து வணக்கம் தெரிவித்தாள் அந்தப் பெண். ரகுநந்தன் கூட தன்னை மறந்து ஒரு நிமிடம் அவளைப் பார்த்துவிட்டு சுதாரித்துக் கொண்டான். ‘ப்ளீஸ்!’ என்று இருக்கையைக் காட்டினான்.

    அவள் பதவிசாக அமர்ந்து கொண்டாள்.

    மிஸ்! என்று அவன் இழுக்க.

    சந்தனா! என்றாள்.

    ஓ! நைஸ் நேம்! என்றான்.

    அவள் அமைதியாகப் புன்னகைத்தாள்.

    அவன் ஃபைலைப் புரட்டினான். அவளிடம் சில கேள்விகளைக் கேட்டான். அவள் நன்றாகவே பதில் சொன்னாள்.

    அவனும் திரும்பி உடனிருந்த விசுவநாதனைப் பார்த்தான். தான் தேர்ந்தெடுக்கப் போகிற ஆள் என்றால் இண்டர்வியூ முடிவுக்குப் பிறகு அவர்கள் பின்புலத்தைப் பற்றி கொஞ்சம் விசாரிப்பான்.

    அதற்கேற்ப இன்றும் சந்தோஷம்! நல்லாத்தான் பதில் சொன்னீங்க! என்றவன் சில சிக்கலான சூழ்நிலைகளைக் கொடுத்து இந்தச் சூழ்நிலையிலே நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க? என்று கேட்டு அவளிடத்திலே பதில் வாங்கினான்.

    அவள் திறமையாகவே பதில் சொன்னாள். அதெல்லாம் திருப்திகரமாகவே இருந்தது.

    பிறகு மெதுவாக அவளிடத்திலே பேசினான். அப்பா என்ன பண்றாங்க? என்றான்.

    அப்பா விவசாயம் பார்க்கறாங்க! என்றாள்.

    அம்மா?

    ஹவுஸ் வைஃப்

    நீங்க ஒருத்தர்தானா? என்றான்.

    ஒரு சகோதரி இருக்கா! என்றாள்.

    அவங்க என்ன பண்றாங்க? என்றான்.

    அவ படிச்சுகிட்டிருக்கா! என்றாள்.

    அப்படியா...?

    நீங்க எங்கே இருந்து படிச்சீங்க? என்றான்.

    நான் ஹாஸ்ட்டல்லே தங்கிப் படிச்சேன்! என்றாள்.

    ம்...! என்று கேட்டுக் கொண்டான்...

    விவசாயம்னா கிராமமாத்தான் இருக்கணும். எந்த ஊரு? என்றான்.

    அவள் அந்த ஊர்ப் பெயரைச் சொன்னாள்.

    சொல்லி முடித்த மறுகணம் ரகுநந்தனின் முகம் ஒருவிதமாக மாறியது.

    எந்த ஊருன்னு சொன்னீங்க? என்றான் அடிக்குரலில். அவள் இயல்பாக தன்னுடைய ஊர்ப் பெயரைச் சொன்னாள்.

    ஃபைலை சட்டென்று மூடி வைத்தான்.

    விஸ்வநாதனைக் கோபமாக பார்த்தான்.

    பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து ப்ளீஸ்! கெட் அவுட்! என்றான்.

    அந்தப் பெண் திகைத்துப் போய் அவன் முகத்தைப் பார்த்தாள்.

    தயவு செய்து வெளியே போயிடுங்க! என்றான்.

    "சார், ஊர் பேர்

    Enjoying the preview?
    Page 1 of 1