Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mouname Kavithaiyai!
Mouname Kavithaiyai!
Mouname Kavithaiyai!
Ebook235 pages1 hour

Mouname Kavithaiyai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580106005485
Mouname Kavithaiyai!

Read more from Jaisakthi

Related to Mouname Kavithaiyai!

Related ebooks

Reviews for Mouname Kavithaiyai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mouname Kavithaiyai! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    மௌனமே கவிதையாய்!

    Mouname Kavithaiyai!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    நல்லா கையை பிடிச்சுக்கடா. என் கையை பிடிச்சுக்கிட்டீன்னா ஈஸியா முன்னேறிடுவே! என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

    பயமா இருக்குடா! என்றான் சுந்தர்.

    என்னத்துக்கு பயம்? நான் தான் பிடிச்சுகிட்டிருக்கேன் இல்லே? என்றான் அர்ஜுன்.

    சுற்றிலும் மற்ற நண்பர்கள்! ரவி, பிரேம், பாலாஜி என்று ஏழெட்டுப் பேர் சுந்தரை சுற்றி நின்று கொண்டு கேலி செய்து கொண்டிருந்தார்கள்

    அர்ஜுன் அவர்களிடம் திரும்பி முறைத்தான். அவனே தண்ணியில கண்டம் இருக்கு. எங்க வீட்ல நீச்சல் கத்துக்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. அப்படின்னு சொத்தைக் காரணமெல்லாம் சொல்லிகிட்டு நீச்சல் கத்துக்க மாட்டேன்னு அடம் பிடிச்சுகிட்டிருக்கான். ஏதோ கொஞ்சம் நீச்சல் பழக்கிக் கொடுத்துட்டோம்னா கொஞ்சம் இண்ட்ரஸ்ட் வரும்னு நான் டிரை பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடா புரிஞ்சுக்காம! என்றான் கோபமாக.

    அவர்கள் எல்லோரும் ஒன்றாகக் குனிந்து கும்பிட்டார்கள் ஐயா சாமி! எங்களை மன்னிச்சிடு! என்றார்கள் கோரஸாக.

    அர்ஜுனுக்கு சிரிப்பு வந்தது. அட போங்கடா! என்றான்.

    மறுபடியும் அர்ஜுன் சுந்தருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தான். தன் இருகைகளிலும் அவனை முழுதாகத் தாங்கிக் கொண்டு தண்ணீரில் மிதக்கிற நிலையில் கையைக் காலை அடிக்கச் சொன்னான். அவன் ஒரு முறை கையைக் காலை அடித்து முடித்த உடனேயே ரவி, பிரேம், பாலாஜி, கிரிஸ்டோஃபர், தட்ஷிணாமூர்த்தி என்று மற்ற நண்பர்கள் எல்லோரும் ராகமாக 'ஓஹ்ஹோ!' பாடினார்கள்.

    சுந்தர் சிணுங்கியபடி சட்டென்று இறங்கி நின்று கொண்டான். டேய் அர்ஜுன்! இவனுங்க இப்படி கலாட்டா பண்ணினா நான் எப்படிடா பழகறது? என்றான்.

    அப்படித் தாண்டா பண்ணுவாங்க. நீ அதைக் கேர் பண்ணிக்கக் கூடாது. கொஞ்ச நேரத்திலே அவங்களுக்கு வாய் வலிச்சுப் போய் விட்டுடுவானுங்க! என்றான் அர்ஜுன்.

    அதற்கும் அவர்கள் எல்லாரும் ஓஹோ என்று குரல் கொடுத்தார்கள். அர்ஜுனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏண்டா கடுப்பேத்தறீங்க? என்றான்.

    கடுப்பேத்தாம இருக்கணும்னா ஒரு கண்டிஷன்! என்றார்கள்.

    சொல்லித் தொலைங்கடா! என்றான்.

    திரும்பிப் போகும் பொழுது ரெஸிடன்ஸிக்குக் கூட்டிட்டுப் போய் சூப்பரா ஒரு ட்ரீட் கொடுக்கணும்! என்றார்கள்.

    ம்... என் பாக்கெட்டை பதம் பார்க்கறதுன்னா உங்களுக்குத் திருநெல்வேலி அல்வா சாப்பிட்ட மாதிரி ஏண்டா? என்றான்.

    ஆமாடா... இருக்கறதிலேயே பசையான ஆளு நீதான். நாங்கெல்லாம் பாரு, நான் அப்பர் மிடில் கிளாஸ், இவன் மிடில் கிளாஸ், இவன் லோயர் மிடில் கிளாஸ் என்று ராகம் போட்டான் பாலாஜி.

    சரி, சரி, போதும். ராகம் பாடாதே கொஞ்ச நேரத்துக்கு, அதாவது ஒரு ஆஃபநவருக்கு அக்கட்டாலே போய் உட்காருங்க. புரிஞ்சுதா? என்றான்.

    ஏண்டா அக்கட்டாலன்னா என்னடா? என்றான் தெட்சிணாமூர்த்தி. அவன் இப்பொழுதுதான் இவர்கள் வட்டத்திலே வந்திருந்தான் வேறு ஊர்க்காரன்.

    அக்கட்டாலே... வித்தியாசமா இருக்குடா! என்றான் தெட்சிணாமூர்த்தி.

    ஏன்? உங்க மதுரை பாஷை மட்டும் வித்தியாசமா இல்லையா? இல்லை ரப்பராட்டம்...! என்றான்.

    வேண்டாம். நான் கோயமுத்தூர் பாஷையை ஒண்ணும் சொல்ல மாட்டேன். நீ மதுரை பாஷையை ஒண்ணும் சொல்லக் கூடாது! என்றான் அவன்.

    அதானேடா? ரெண்டுமே கேட்கறதுக்கு இனிமையாத் தானே இருக்கு? இதுக்கு எதுக்குடா சண்டை போடறீங்க? என்றான் அருள்ஜோதி.

    வந்துட்டாண்டா மீடியேட்டர்! என்றான் தெட்சிணா மூர்த்தி

    அதெல்லாம் இருக்கட்டும். முதல்லே நீங்க அந்தப் பக்கம் போங்க என்றான். அவர்கள் எல்லோரும் அந்தப் பக்கம் போய் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

    கோபிக்கு அருகிலே இருந்த அந்த சிறிய நீர் வீழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். அதிலே வேண்டுமட்டும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இங்க தாண்டா சின்னத்தம்பி படம் எடுத்தாங்க! என்று அந்தப் பகுதியைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

    ஒரு குழுவினர் அவர்களே மீன் பிடித்து வறுத்து சாப்பிட்டார்கள். அர்ஜுன் நீச்சலிலே மூழ்கிவிட்டான். அதாவது வந்ததிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தண்ணீரிலே நீந்தினார்கள்.

    சுந்தருக்கு நீச்சல் தெரியாது. அவனுக்கு ஏதோ தண்ணீரில் கண்டம் இருப்பதாக அவர்கள் வீட்டிலே பயமுறுத்தி வைத்திருந்தார்கள். அதனால் அவன் ஓரமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    பார்க்கப் பாவமாக இருந்தது. அதனால் தான் அர்ஜுன் அவன் அருகிலே போய் நீச்சல் கத்துக்கறியாடா? என்று கேட்டான்.

    நோ... நோ! என்றான்...

    இங்கே ஒண்ணும் பயப்பட வேண்டாண்டா. பார்த்தியில்லே? ரொம்ப ஆழமெல்லாம் ஒண்ணும் இல்லை. அப்படியே ஏதும்னா நாங்க இத்தனை பேர் இருக்கோம். உன்னைக் காப்பாத்திடுவோம்! என்றான் அர்ஜுன்.

    சரிடா! என்று அவனும் இறங்கி வந்தான். கொஞ்சமாக ஒரு நாலடி ஆழம் இருக்கிற பகுதிக்கு வந்து நின்று கொண்டு அவனை குப்புறப் படுக்கச் சொல்லி அவனுக்குக் கீழே இரண்டு கைகளைக் கொடுத்து அவனைக் கையைக் காலை அடிக்கச் சொன்னான் அர்ஜுன்.

    அப்பொழுதுதான் அவன் நண்பர்கள் எல்லாம் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு ஒரு அரை மணி நேரம் சுந்தருக்குக் கற்றுக் கொடுத்தான்.

    அவ்வளவுதான். அவனுக்கே ஆர்வம் வந்து விட்டது. கொஞ்சம் முயற்சி செய்தான். கோயமுத்தூர் போன உடனே உன்னை நீச்சல் கிளாஸ்ல சேர்த்து விட்டுடறேன்டா. உங்க வீட்டுக்கு சொல்ல வேண்டாம். வேற ஏதோன்னு சொல்லு. ஒன் வீக் டென் டேஸ்ல நீ ரெடியாயிடுவே! என்று அவனை உற்சாகப்படுத்தினான் அர்ஜுன்.

    மறுபடியும் இந்த நண்பர்கள் எல்லாம் வந்து சுற்றி நின்று கொண்டு ஓஹோ! என்று ராகம் போட்டார்கள். அடப் பாவிங்களா! வந்துட்டீங்களா? என்றான் அர்ஜுன்.

    ஆமா, எவ்வளவு நேரம் ஹாட் பாக்ஸ்லே பிரியாணி சூடாவே உட்கார்ந்துட்டு இருக்கும். இழுக்குதுடா! என்றார்கள்.

    சரிடா, வந்து தொலைங்கடா! என்று அவர்கள் அந்த மணற்பாங்கான தரையிலே கொஞ்சம் சுத்தமான இடமாக பார்த்து அமர்ந்தார்கள்.

    அர்ஜுன் டிரைவருக்கு குரல் கொடுக்க பெரிய ஹாட் பேக்கிலே ஒரு பிரியாணி வகையும் ஒரு சின்ன ஹாட் பாக்கிலே இன்னொரு பிரியாணி வகையும் வந்தது.

    அர்ஜுன் மாமிசம் உண்பதில்லை. அதனாலே நண்பர்களுக்கு எல்லாம் ஒரு கடையிலே ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு வந்திருந்தான். அவனுக்குத் தெரிந்த நல்ல சமையல்காரர். தனியாக சுத்தமாக செய்து கொடுக்கச் சொல்லி கொண்டு வந்திருந்தான்.

    உங்களுக்கெல்லாம் சிக்கன் பிரியாணி, மட்டன் வறுவல் அதெல்லாம் இருக்கு. நம்மளைத் தொந்தரவு பண்ணாதீங்க. நான் வெஜிடபிள் புலாவும் காளான் கிரேவியும் கொண்டு வந்திருக்கிறேன்! என்றான்.

    அவர்கள் எல்லாரும் ஆமா, இந்த மாதிரிப் புல்லுப் பூண்டைத் தின்னுட்டு எப்படிடா இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கறே? என்றார்கள்.

    வாட் புல்லுப் பூண்டா! என்றான் அவன்.

    ஆமா, இந்தக் காய்கறி கிழங்கு, அப்புறம் இந்த இலை, தழை, இந்த முட்டைக் கோஸ் இதெல்லாம் தான் நீ சாப்பிடறே! என்றான் தெட்சிணாமூர்த்தி.

    மிஸ்டர் தட்சிணாமூர்த்தி, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? உலகமெல்லாம் ஆராய்ச்சி பண்ணி சைவம் தான் நல்லது அப்படின்னு அமெரிக்காக்காரனே நிறைய பேர் சைவத்துக்கு மாறிக்கிட்டு இருக்காங்க! என்று ஆரம்பித்தான்.

    உடனே ரவியும், பிரேமும் டேய், இந்தப் பக்கம் வந்துடு! என்று தெட்சிணா மூர்த்தியை இழுத்தார்கள்.

    ஏண்டா? என்றான்.

    கொஞ்ச நேரத்திலே பிரெயின் வாஷ் பண்ணிடுவாண்டா. அவன் கொண்டு வந்திருக்கிற பிரியாணியே கொஞ்சமாத் தான் இருக்கு. அதிலே வேற உனக்கு பங்கு கொடுப்பானாக்கும்! என்று இழுத்துக் கொண்டு போனார்கள்.

    அர்ஜுன் சிரித்துக் கொண்டான்.

    மெது மெதுவாகத்தான் இவர்களை மாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். அவர்களுடைய தந்தை ஈஸ்வர மூர்த்தியும் சரி, தாய் கிருபாகரியும் சரி புலால் உணவு உண்பதில்லை. அதனால் இளம் வயதிலே இருந்து அவர்கள் வீட்டில் புலால் வாசம் கூட அடிப்பதில்லை. சைவர்கள் தான். ஆனால் வெளி உலகப் பழக்கத்திற்குப் பிறகு கல்லூரிக்கு வந்ததற்குப் பிறகு நண்பர்கள் எல்லோரும் அருகிலே அமர்ந்து சாப்பிட்டால் கூட அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மனப்பான்மைக்கு வந்திருந்தான்.

    முடிந்த வரை சில நண்பர்களிடம் சொல்லி மாற்றி இருக்கிறான். சில பேரை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்போம் என்று பொறுமையாக இருந்து மாற்றியதுண்டு. அப்படித்தான் இந்த நண்பர்களையும் மாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

    ‘ஒரு கட்டுக் கட்டி விட்டு!' என்பார்கள் இல்லையா. அது மாதிரி ஒரு வட்டம் முடித்து விட்டு வந்து சேர்ந்தார்கள் நண்பர்கள்.

    மறுபடியும் சுந்தர் அர்ஜுன், இன்னொரு முறை ஸ்விம் பண்ணலாமா? என்றான்.

    சலீம் என்ற ஒரு நண்பன் டேய்! பிரியாணியைத் தீர்க்க டிரை பண்ணுங்கடா! நான் தம் கட்டிச் செஞ்ச பிரியாணி நான் கொண்டு வந்திருக்கிறேன். அதை மத்தியானம் சாப்பிட்டுக்கலாம்! என்றான்.

    ஆமாடா! உங்க ஆளுங்க செய்யற பிரியாணி சூப்பரா இருக்குமில்லே? ஏண்டா இப்ப வரைக்கும் சொல்லலை! என்றான் பிரேம்.

    ம்க்கும்...! சொன்னா விட்டு வைப்பீங்க? முதல்லே இது காலியாகட்டும். அது வீட்லே செஞ்சது. அதனாலே கொஞ்ச நேரம் தாங்கும்! என்றான் அவன்.

    மற்றவர்கள் எல்லாம் உற்சாகமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    நண்பேண்டா! என்று கிறிஸ்டோஃர் அவனைத் தழுவிக் கொண்டான்.

    போதும், போதும்! என்று அவன் மெதுவாக நழுவினான். திரும்பவும் சுந்தரும், அர்ஜுனும் நீச்சல் பயிற்சியிலே இறங்கினார்கள். இப்பொழுது சுந்தர் அவர்களோடு சேர்ந்து தண்ணீரில் ஆட்டம் போட்டான். நன்றாக ஆட்டம் போட்டார்கள். அந்த அருவிக்குப் போய் தண்ணீர் மேல விழும் வரையிலே அமர்ந்து கொண்டு காச் மூச்சென்று கத்தினார்கள்.

    பிரேம், ரவி, பாலாஜி மூவரையும் திடீரென்று காணவில்லை. எங்கே போனார்கள் என்று பார்த்தால் அந்தப் பக்கமாக சில பெண்கள் கூடி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அங்கே போய் இவர்கள் நோட்டம் விட்டார்கள்.

    கிறிஸ்டோஃபர்...! என்று குரல் கொடுத்தான் அர்ஜுன்.

    ஐயோ! இவனோட! என்று முணுமுணுத்துக் கொண்டு இந்தப் பக்கம் வந்தார்கள்.

    டேய்! நான் புறப்பட்டப்பவே சொன்னேன் இல்லே? என்ஜாய் பண்ணுங்க. இதுவே ஜாஸ்தி. தண்ணி கூட போடறியா போடு. மத்தபடி பொண்ணுங்ககிட்டே எதுவும் வச்சுக்கக் கூடாதுன்னு நான் சொல்லித் தானே கூட்டிட்டு வந்தேன் இல்லே? என்றான்.

    ஆமாடா! இவன் பெரிய மனசு பண்ணிக் கூட்டிட்டு வந்து நமக்குத் தண்ணி போடற அளவு சலுகை பண்ணிட்டான்! என்றான் கிறிஸ்டோஃபர்.

    ஐய்யோ! இப்ப ஞாபகப்படுத்திட்டியேடா! என்ற பிரேம் மற்றவர்களை இழுத்துக் கொண்டு ஓடிப் போனான். ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். வட்டமாக அமர்ந்து நடுவிலே மது வகைகளையும் பரப்பினார்கள். ஆற்றங் கரையிலேயே ஒரு வண்டியிலே புதிதாக வறுத்து வைத்த மீன்களை விற்றார்கள். சைட் டிஷ்ஷாக வாங்கிக் கொண்டு அமர்ந்தார்கள்.

    அர்ஜுன் இதிலே கலந்து கொள்ளவில்லை. தண்ணீருக்கு மேலே இருந்த ஒரு பாறையிலே போய் சாய்ந்து கொண்டான். மீண்டும் நீச்சலிலே மூழ்கினான்.

    இவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக இருந்தார்கள். அர்ஜுன் அளவாகத்தான் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தான். அதனால் போதும்டா! இதுக்கு மேல போனா அவன் கடுப்பாயிருவான்! என்று எழுந்தார்கள்.

    அர்ஜுனை நோக்கி வந்தார்கள்.

    அந்த நேரத்திலே தான் அது நடந்தது. அர்ஜுனுக்கு செல்ஃபோனிலே ஒரு கால் வந்தது என்று டிரைவர் செல்ஃபோனைக் கொண்டு வந்து கொடுத்தார்.

    நான் தான் பிஸியா இருக்கேன்னு சொல்லுன்னு சொன்னேனே! என்றான் இவன்.

    இல்லைங்க சார்! வீட்லே இருந்து அம்மா பேசணுங்கறாங்க! என்றான்.

    அர்ஜுன் இயல்பாக அதை வாங்கிக் காதிலே வைத்தான். ஆனால் அந்தக் கணத்தில் அவனுடைய முகம் வெளிறிப் போனது. 'ஐயோ' என்றான் குரலெடுத்து.

    அவன் குரல் கேட்டு நண்பர்கள் ஓடி வந்தார்கள்.

    2

    காரை டிரைவர் வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தார். அதை விட வேகமாக அர்ஜுன் நினைப்பில் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

    அவனுடைய தந்தை ஈஸ்வர மூர்த்திக்கு உடல் நலம் சரியில்லை. நெஞ்சு வலிக்கிறது என்று அவன் தாய் ஃபோன் செய்தாள்.

    உடனடியாக ஃபோனிலேயே சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்லி அவரை பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகுமாறு ஏற்பாடு செய்து விட்டான் அர்ஜுன்.

    ஃபோனில் இருந்தபடியே அடிக்கடி கேட்டுக் கேட்டுக் கண்காணித்துக் கொண்டும் இருந்தான். அவர்களுடைய குடும்ப நண்பரான டாக்டர். சாம்பசிவத்திற்கு ஃபோன் செய்து இவர்களுக்கு உடனடியாக கவனிப்பு கொடுக்கிற மாதிரி ஏற்பாடு செய்திருந்தான் அவன்.

    அதற்குப் பிறகு தான் கொஞ்சம் தெளிவானான்.

    ஃபோன் வந்தவுடனேயே கிறிஸ்டோஃபரையும், பாலாஜியையும் அழைத்து ரவியின் கையில் ஒரு பத்தாயிரம் ரூபாய்க் கட்டைத் திணித்து விஷயத்தைச் சொல்லி நீங்க எப்படியாவது வந்துடுங்கடா! நான் காரை எடுத்துட்டுப் போறேன்! என்றான்.

    விஷயத்தைக் கேள்விப்பட்டவுடனே அவர்கள் "நாங்கள் வந்து சேர்ந்துக்கறோம். நீ எதுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1