Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkaga Kaathirukkirean
Unakkaga Kaathirukkirean
Unakkaga Kaathirukkirean
Ebook217 pages1 hour

Unakkaga Kaathirukkirean

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

அனாதை இல்லத்தில் வளர்ந்த மஹிமா தன்னை பாதுகாக்க, அஜய்-இன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுகிறாள். அந்த இடத்தில் அவளுக்கு நடக்கும் நிகழ்வுகள் அவளின் வாழ்க்கையை மாற்றி விடுகின்றன. அவ்வாறு எற்படும் மாற்றங்களில் முக்கிய பங்கு வகிப்பவன் சஷான், யார் அவன்? அவனால் மஹிமாவிற்கு என்ன நடந்தது? இறுதியில் அவளின் நிலை என்ன? வாசித்து தெரிந்து கொள்வோம் மஹிமாவைப் பற்றி…

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580140906945
Unakkaga Kaathirukkirean

Read more from Lakshmi Sudha

Related to Unakkaga Kaathirukkirean

Related ebooks

Reviews for Unakkaga Kaathirukkirean

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkaga Kaathirukkirean - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    உனக்காகக் காத்திருக்கிறேன்

    Unakkaga Kaathirukkirean

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    முன்னுரை

    வாங்க... பேசலாம்.

    ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று அடையார் கஸ்தூரிபாய் நகர் சாலையில் பயணம் செய்யும் பொழுது கண்ணில்பட்டது, ராஜஸ்தான் கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஒன்று.

    கலைப் பொருட்கள் நிறையப் பெண்களுக்குப் பிடிக்கும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. கடையினுள் நுழைந்தேன்.

    அடடா! எவ்வளவு அழகான பைகள். ஏராளமான வண்ணங்களில். கண்ணாடி பதிக்கப்பட்டதால் தகதகவென மின்னின அவை. பென்ஸ்டேண்ட், சணல் பைகள் என்று விதவிதமான சுவர் அலங்காரக் கலைப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    அவ்வளவு நுட்பமாக... நுண்கலைகளில் தேர்ச்சி பெறுவது எவ்வளவு கடினம்? எவ்வளவு உழைப்பு அதன் பின்னால்!

    எத்தனை நாட்கள் எவ்வளவு பேர் உழைத்திருப்பார்கள்?

    முகம் தெரியாத கலைஞர்களுக்கு நான் நன்றி செலுத்தினேன். ஒவ்வொரு அழகான பொருளுக்கும் பின்புலமாக கடுமையான உழைப்பு இருக்கிறது.

    இந்நேரத்தில் இணையதளம் மூலம் எனக்குப் பரிச்சயமான கார்த்திகா சரணைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    ‘உங்கள் கதைக் களம் அருமை’ என்று மின்னஞ்சல் மூலம் என்னை முதலில் தொடர்பு கொண்டவர் அவர்.

    என்னுடைய நாவலில் வரும் எல்லா Narration and Characters உடன் ஒன்றிப் போய்விடும் வாசகி கார்த்திகா.

    ‘மார்கழி மாத நிலா’வில் வரும் Story telling heroine, narrate செய்த மகாபாரதம், இராமாயணம் அவருக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. அவருடைய குழந்தைகளுக்கு நிறையச் சின்னச் சின்ன நீதிக்கதைகளை அவர் சொல்லுவாராம். அதனால் அந்த நாவலின் இதிகாசக் கதைகளை என்னால் link செய்ய முடிந்தது என்று மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.

    The way Karthika sequens and writes neatly in the email was amazing.

    ‘நீங்கள் ஒரு ஆங்கில நாவல் எழுத முயற்சிபண்ணலாம் கார்த்திகா!’ என்றேன். ‘அச்சோ... Reach எல்லாம் இருக்க வேண்டும், அதற்கு!’ என்று உடனே பதில் வந்தது, அவரிடம் இருந்து.

    சின்னச் சின்ன விஷயங்களைக் கூட என்னிடம் பகிர்ந்துகொள்வார். ‘இன்டீரியர் டிசைன் பற்றி கோர்ஸ் ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்’ என்றார், ஒரு மின்னஞ்சல் மூலம்.

    ‘அப்படி என்ன இருக்கு அந்தப் புத்தகத்தில்? இப்படி சிரிக்கிற...!’ என்று தன் கணவர் குறிப்பிட்டதை ஒரு மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    நார்த் ஈஸ்ட்டைப் பற்றி என் நாவலில் நான் எழுதுவதை மிகவும் ரசிப்பார். அந்தக் கலாச்சாரம், உணவுப் பழக்கங்கள் எல்லாமே இதனால் தெரிய வருகிறது என்று இன்னொரு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.

    Thanks for l your comments Karthika and for so many readers who read my novels.

    நட்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    1

    நான்

    காத்துக்

    கொண்டு

    இருக்கிறேன்

    .....

    உனக்காக

    இங்கே

    பூங்காவில்

    .....

    பூக்கள்

    எல்லாம்

    உன்மேல்

    பொறாமைப்பட்டு

    இங்கே

    வராமல்

    இருக்க

    .....

    ஏதேனும்

    சதி

    செய்து விட்டதா

    பெண்ணே!

    தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளன.

    பயணிகள் கவனத்திற்கு! பிளாட்பார்ம் இரண்டிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கிளம்பும் என்ற அறிவிப்பு இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி ஒலித்துக்கொண்டிருந்தது.

    லேப் டாப்பைச் சுமந்தபடி வேக வேகமாக பிளாட் ஃபார்ம் நோக்கி நடந்தான் அஜய்.

    ‘இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு. எப்படியும் ட்ரெயினைப் பிடித்து விடலாம்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

    எக்ஸ்கியூஸ் மீ! என்று ஒரு பெண் குரல் கேட்க திரும்பிப் பார்த்தான்.

    இது உங்கள் மொபைல் தானே! என்று ஒரு கைபேசியை அவனிடம் நீட்டினாள், ஒரு இளம் பெண்.

    ஆமாம். காட்! தேங்க்ஸ்... இது எப்படி உங்ககிட்ட? என்றான் குழம்பியபடியே.

    ம்... உங்க பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்தது! என்றாள் ஆங்கிலத்தில்.

    சே! எப்படி? இது விழுந்ததுகூடத் தெரியாமல் நான் இருந்திருக்கிறேன். ரொம்பத் தேங்கஸ் மேடம்! என்றபடியே கைபேசியை சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினான்.

    இட்ஸ் ஓ.கே. என்றபடியே வேக வேகமாக அவனைக் கடந்து சென்றாள் அவள்.

    அவள் விரைந்து நடந்து போவதையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

    ‘சே! அவளிடம் சரியாக தேங்க்ஸ் கூட சொல்லவில்லையே?’ இந்த மொபைல் ரொம்ப விலை உயர்ந்தது. நாற்பதாயிரம் ரூபாய்.

    பணம் கூட பெரிது இல்லை. மொபைலில் உள்ள ‘கான்பிடென்ஷியல் இன்ஃபர்மேஷன் யார் கையிலாவது சிக்கினால் என்ன ஆகும்?’

    நினைத்துப் பார்க்கவே அவனுக்குப் பயமாக இருந்தது.

    சே! அந்தப் பெண்ணின் பெயரைக் கூடக் கேட்கவில்லையே? சரியான மடையன் நான்! என்று தன்னையே திட்டியபடி... தன் கம்பார்ட்மெண்ட்டை நோக்கி நடந்தான் அஜய்.

    ஏ.ஸி. கம்பார்ட்மெண்ட் காலியாக இருந்தது. ட்ரெயின் இன்னும் ஐந்து நிமிடங்களில் கிளம்பிவிடும். இன்னும் யாரையும் இந்தக் கோச்சில் காணவில்லையே? ஒருவேளை ட்ரெயின் பயணம் என்றால் மக்களுக்குப் பயமாகிவிட்டதா? அதுவும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் என்பதால் இன்னும் பயம் அதிகமாகிவிட்டதா?

    சமீப காலமாக, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாவது குறித்து... பேப்பரில் படித்த ஆர்டிகிள் அவன் நினைவுக்கு வந்தது.

    லேப் டாப்பை உயிர்ப்பித்தான். அலுவலகத்தில் இருந்து வந்திருந்த இமெயில்களைப் படிக்கத் தொடங்கினான்.

    முக்கியமான இமெயில்களுக்கு மட்டும் பதில் போடுவது என்று முடிவு செய்தவன், அவற்றை மட்டும் தனியாக ஒரு ஃபோல்டரில் மூவ் செய்தான்.

    ட்ரெயின் லேசான அசைவுடன் நகரத்தொடங்கியது.

    ஸோ... இந்தக் கோச்சில் நான் மட்டும் தான் போல! என்று நினைத்தபடியே லேப் டாப்பில் மீண்டும் மூழ்கினான்.

    ஏ.ஸி. கோச்சில் பயத்துடன் உட்கார்ந்து இருந்தாள் மஹிமா.

    நடந்ததெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா என்று அவள் மனம் ஏங்கியது.

    எதிர்காலமே கேள்விக்குறி போல் தோன்றியது அவளுக்கு. ஏன் வாழ்க்கையில் சிலருக்கு மட்டும் இவ்வளவு துன்பம்?

    தெளிந்த நீரோடை போல் குழப்பம் இல்லாத, துன்பம் இல்லாத, பிரச்சனை இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்காதா?

    இதைத்தான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்று சொல்வார்களா? நான் நிறையப் பாவங்கள் செய்துவிட்டேன் போல!

    அதனால்தான் இந்த மாதிரி அல்லல்பட வேண்டியிருக்கிறதா? இதற்கு விடிவு காலம் இல்லையா?

    கண்களை மூடி சோர்ந்து போய் உட்கார்ந்தாள் மஹிமா.

    டேய்... ஏ.ஸி. நல்லா சில்லுன்னு இருக்குடா! என்று ஒரு ஆண் குரல் கேட்டது.

    கண்களைத் திறந்தாள் மஹிமா.

    ம்... ஆமாம்டா. ஏ.ஸி. மட்டும் இல்லை... என்றபடியே அருகில் இருந்த இன்னொருவன் அவளைப் பார்வையால் விழுங்கினான்.

    அவன் பார்வை அவளுள் சீற்றத்தை ஏற்படுத்தியது.

    சே! பெண்களை, ஆண்கள் இன்னும் எத்தனை காலத்திற்குப் போகப் பொருளாகப் பார்ப்பார்கள்?

    காலங்காலமாக இதே நிலைதானா பெண்களுக்கு? இதில் மாற்றமே இல்லையா? அவள் மனம் கொதித்தது.

    மேடம்! நீங்க சென்னைக்குத் தான் போறீங்களா? என்றான் அவளைப் பார்த்து பல்லைக் காட்டியபடி இன்னொருவன்.

    ம்... என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மஹிமா.

    ஏனோ அந்த மூவரின் பார்வையும், பேச்சும் அவளுக்குத் துளிக்கூட பிடிக்கவில்லை. ஏதோ சரியில்லை என்று அவள் உள்ளுணர்வு எச்சரித்தது.

    கோக் குடிங்க. தெம்பு வரும் பேச... என்றபடியே ஒரு பாட்டிலை அவளிடம் நீட்டினான் ஒருவன்.

    பாட்டிலைத் திறந்தவுடன் வெளிப்பட்ட வித்தியாசமான வாடை அவள் வயிற்றைப் புரட்டியது.

    இவர்கள் ஆபத்தானவர்கள் என்று அவளுக்குப் புரிந்தது.

    முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தவள்... சட்டென லேசாக அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் புரிந்தாள்.

    இப்ப வேண்டாம் எனக்கு. கொஞ்ச நேரம் ஆகட்டும். நான் ரெஸ்ட் ரூம் வரை சென்றுவிட்டு வருகிறேன்.

    அதற்குப் பின்பு கோக் குடிக்கிறேன். எனக்கு எடுத்து வைங்க. நீங்களே காலி செய்திடாதீங்க! என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

    அந்தக் கம்பார்ட்மெண்ட்டில் இருந்து வேக வேகமாக நடந்தாள் மஹிமா.

    சே! சரியான ரவுடிங்க. அவங்களும் அவங்க பேச்சும்!

    நல்ல காலம் எப்படியோ அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாதபடி தப்பி வந்துவிட்டேன்.

    ட்ரெயினில் நடந்த கற்பழிப்பு பற்றி பேப்பரில் படித்தது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

    இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் என் நிலைமை?

    நினைக்கும் பொழுதே அவள் உடல் நடுங்கியது. இப்பொழுது என்ன செய்வது?

    டி.டி.ஆரிடம் சொல்லி வேறு கம்பார்ட்மெண்ட்டில் இடம் இருக்குமா என்று கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே நடந்தாள்.

    வாஷ்பேசினில் முகம் கழுவிவிட்டுத் திரும்பினான் அஜய்.

    முகம் முழுக்கப் பதட்டம் தெரிந்த அந்த இளம் பெண் மேல் மோதியிருப்பான். ஆனால் சமாளித்துக் கொண்டான்.

    ஓ... மேடம்! நீங்களும் இந்த ட்ரெயின்தானா? ஸாரி... நான் உங்களிடம் சரியாக தேங்க்ஸ் கூட சொல்லவில்லை, என் மொபைலை எடுத்துக் கொடுத்ததற்கு!

    தேங்க்ஸ் எ லாட். உங்க பேர் என்ன? நீங்களும் சென்னைக்குத் தான் போறீங்களா?

    எனி ப்ராப்ளம்? நீங்க பதட்டமாத் தெரியறீங்க... என்றான் அவள் முகத்தை ஆராய்ந்தபடியே அஜய்.

    ம்... ஆமாம். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?

    ம்... கேளுங்க மேடம்!

    எனக்கு டி.டி.ஆரைப் பார்க்கணும். அவரைத் தேடிக்கொண்டு தான் வந்தேன்.

    ம்... அடுத்த ஸ்டேஷனில் அவரை எதிர்பார்க்கலாம் எனிதிங்க் சீரியஸ்?

    அவள் தயங்கினாள்.

    நீங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா? சென்னைக்குப் போறீங்களா?

    ம்... நான் பச்சைத் தமிழன் தான் மேடம்! என்று ஆங்கிலத்தைவிட்டுத் தமிழுக்குத் தாவினான் அஜய்.

    அவள் முகத்தில் லேசாகப் பயக்களை நீங்கியது.

    சொல்லுங்க மேடம்! என்று அவளை ஊக்கப்படுத்தினான் அஜய்.

    நான் பயணம் செய்யற கம்பார்ட்மெண்ட் சரியில்லை. மூன்று ஆண்கள். ரவுடிங்க மாதிரி இருக்காங்க...

    அவங்க மது அருந்தியிருக்காங்கன்னு நினைக்கிறேன். அவங்க பேசின பேச்சும் பார்க்கிற பார்வையும் எனக்குப் பிடிக்கலை...

    என்னால அந்தக் கோச்சில் ட்ராவல் செய்ய முடியாது! என்றாள், மெல்லிய குரலில் மஹிமா.

    சே... மிருகங்கள். இவங்களுக்கெல்லாம் அவங்க ரவுடியிஸத்தைக் காட்ட ட்ரெயின் தான் கிடைச்சுது போல!

    நீங்க கவலைப்படாதீங்க மேடம்! உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நீங்கள் என் கம்பார்ட் மெண்டில் பயணம் செய்யலாம். கொஞ்ச நேரத்திற்குத்தான்.

    அதற்குள் நான் டி.டி.ஆரிடம் பேசி லேடீஸ் இருக்கும் இடமாக உங்களுக்கு அலாட் செய்யச் சொல்லிக் கேட்கிறேன்.

    அவள் சரி என்பது போல் தலையசைத்தாள்.

    அப்ப வாங்க மேடம்! உங்க திங்க்ஸ் ஏதாவது உங்க கம்பார்ட்மெண்டில் இருக்கா? நான் வேண்டுமானால் போய் எடுத்துக்கொண்டு வருகிறேன்…

    இல்லை... லக்கேஜ் எதுவும் இல்லை. இந்த ஹாண்ட் பேக் மட்டும்தான்.

    அப்ப வாங்க போகலாம், மேடம்!

    அவள் தயங்கினாள்.

    அவனுக்குப் புரிந்தது, அவள் ஏன் தயங்குகிறாள் என்று.

    மேடம்! நான் நல்ல பிள்ளை என்று என் அம்மா எப்பவும் சர்டிபிகேட் கொடுப்பார்கள்.

    அம்மாவின் ஃபோட்டோ பாருங்க! என்றபடியே கைபேசியை எடுத்து அம்மாவின் படத்தைக் காட்டினான்

    Enjoying the preview?
    Page 1 of 1