Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayam Varai Nanaigirathey!
Idhayam Varai Nanaigirathey!
Idhayam Varai Nanaigirathey!
Ebook171 pages50 minutes

Idhayam Varai Nanaigirathey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமீபத்தில் நூலகத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது சாலையில் ஒரு இளம் பெண் 'டாஸ்மாக்' கடையில் இருந்து, ஒரு 'பாட்டிலை' வாங்கிக் கவரில் வைத்து, டூ-வீலரில் பத்திரப்படுத்தி வைப்பதைப் பார்த்தேன்.

என் மனதில் ஒரு நெருடல். அந்தப் பெண்ணைப் பார்த்தால், படித்த பெண் போல்தான் தோன்றியது. அவளின் இந்தப் போக்கை என்னவென்று சொல்வது?

ஆணுக்குப் பெண் என்பவள் சமம்.... இறைவனின் அர்த்தநாரிஸ்வரர் கோலம் அதைத்தான் உணர்த்துகிறது.

‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை' என்று முண்டாசுக் கவிஞன் பாரதியும் பாடி இருக்கிறான். அதற்காக, ஆண்கள் செய்யும் கெட்ட விஷயங்களைப் பெண்களும் செய்ய வேண்டுமா என்ன?

பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் சமத்துவம் ஆகாது.

துரதிர்ஷ்டவசமாக இப்பொழுதுள்ள பெரும்பாலான படங்களில் இளைஞர்கள், சனி, ஞாயிறு ஆனால் பீர் குடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டுக் குப்புறப்படுத்துத் தூங்குவது போன்ற காட்சிகள் உள்ளன. இது ஒரு கலாசார சீர்கேடு.

குடியின் போதையில் குடும்பத்தை மறந்து, புத்தி பேதலித்து, உடல் சீர்கேடு அடைந்த 'குடி'மகன்களின் எண்ணிக்கை, நம் தமிழகத்தில் பெருகிவிட்டது.

இதனை விட்டு வெளிவர முயற்சி எடுக்க வேண்டும். தனி மனிதன் முயற்சி மட்டும் போதாது. குடும்பத்தின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம். முயற்சித்தால், முடியாதது இல்லை.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140906602
Idhayam Varai Nanaigirathey!

Read more from Lakshmi Sudha

Related to Idhayam Varai Nanaigirathey!

Related ebooks

Reviews for Idhayam Varai Nanaigirathey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayam Varai Nanaigirathey! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    இதயம் வரை நனைகிறதே!

    Idhayam Varai Nanaigirathey!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை
    வாங்க பேசலாம்!

    மீண்டும் 'வாங்க பேசலாம்' பகுதியின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சமீபத்தில் நூலகத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது சாலையில் ஒரு இளம் பெண் 'டாஸ்மாக்' கடையில் இருந்து, ஒரு 'பாட்டிலை' வாங்கிக் கவரில் வைத்து, டூ-வீலரில் பத்திரப்படுத்தி வைப்பதைப் பார்த்தேன்.

    என் மனதில் ஒரு நெருடல். அந்தப் பெண்ணைப் பார்த்தால், படித்த பெண் போல்தான் தோன்றியது. அவளின் இந்தப் போக்கை என்னவென்று சொல்வது?

    ஆணுக்குப் பெண் என்பவள் சமம்.... இறைவனின் அர்த்தநாரிஸ்வரர் கோலம் அதைத்தான் உணர்த்துகிறது.

    ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை' என்று முண்டாசுக் கவிஞன் பாரதியும் பாடி இருக்கிறான். அதற்காக, ஆண்கள் செய்யும் கெட்ட விஷயங்களைப் பெண்களும் செய்ய வேண்டுமா என்ன? பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் சமத்துவம் ஆகாது.

    துரதிர்ஷ்டவசமாக இப்பொழுதுள்ள பெரும்பாலான படங்களில் இளைஞர்கள், சனி, ஞாயிறு ஆனால் பீர் குடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டுக் குப்புறப்படுத்துத் தூங்குவது போன்ற காட்சிகள் உள்ளன. இது ஒரு கலாசார சீர்கேடு.

    குடியின் போதையில் குடும்பத்தை மறந்து, புத்தி பேதலித்து, உடல் சீர்கேடு அடைந்த 'குடி'மகன்களின் எண்ணிக்கை, நம் தமிழகத்தில் பெருகிவிட்டது.

    இதனை விட்டு வெளிவர முயற்சி எடுக்க வேண்டும். தனி மனிதன் முயற்சி மட்டும் போதாது. குடும்பத்தின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம். முயற்சித்தால், முடியாதது இல்லை.

    என் நாவல்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் வாசகப் பெருமக்களுக்கு மிக்க நன்றி.

    கருத்துகளைத் தொடர்ந்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் வாசகர்களுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

    நட்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    அத்தியாயம் 1

    என்னிடம்

    என்ன

    உள்ளது!

    ஒவ்வொன்றாக

    நீ

    என்னிடம்

    இருந்து

    பறித்து

    விட்டாய்!

    என்

    தூக்கத்தை,

    என் சோம்பலை,

    என்

    நேரத்தை,

    என்

    மனதை

    மொத்தத்தில்

    என்னை!

    சென்னையில் தரமணியில் உள்ள அந்த பிரமாண்ட தொழிற்நுட்ப பூங்காவினையே பிரமிப்புடன் பார்த்தபடியே பஸ்ஸில் இருந்து இறங்கினான் கேசவன் எனும் கேசவ ராகவன்.

    'கும்பகோணத்தின் வடக்கு மாட வீதிக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்?’

    'இது கண்ணாடியில் செய்யப்பட்ட கட்டடமா என்ன? வெயிலில் எப்படித் தகதகவென மின்னுகிறது இந்தக் கட்டடம்?' என்று ஆச்சரியத்துடனேயே கட்டடத்தை நோக்கி நடந்தான்.

    ஸார், அந்தப் பக்கம் போய் விசிட்டர் பாஸ் போட்டுட்டு வாங்க! என்று அவனை நோக்கி செக்யூரிட்டி கை காட்டினார்.

    தேங்க்ஸ் ஸார்! என்றபடியே அவர் கை காட்டிய இடத்தை நோக்கி நடந்தான் கேசவன்.

    அங்கே ஒரு பெரிய வரிசையில் ஆண்களும் பெண்களும் நின்று கொண்டு இருந்தனர். ‘பெருமானே! இவர்கள் எல்லோரும் நான் போகிற அதே கம்பெனிக்குத் தான் நேர்முகத் தேர்விற்கு வந்து இருக்கிறார்களோ?'

    அவன் மனதில் பதட்டம் பரவியது.

    'சே... சே... அப்படி இருக்காது. இங்கே, நிறையக் கம்பெனிகள் உள்ளன. அதில் ஏதேனும் ஒன்றுக்கு அவர்கள் வந்து இருக்கலாம். நான் என் நம்பிக்கையைத் தளர விட மாட்டேன்!' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

    கவுன்ட்டர் அருகே செல்லச் செல்ல அவன் நெற்றியில் வியர்வைப் பூக்கள் அதிகரித்தன.

    ஸார், எந்தக் கம்பெனிக்கு இண்டர்வியூ? என்றார் கவுன்ட்டர் உள்ளே இருந்த ஒருவர்.

    குட் மார்னிங் ஸார். செக்ரோ கம்பெனிக்குத்தான் இண்டர்வியூவிற்கு வந்து இருக்கேன்.

    ‘இவன்லாம் அதுக்கு தான் வந்திருக்கானோ?' செக்யூரிட்டி, அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

    சரியான 'தயிர் சாதம் போல இவன்!' என மனதுக்குள் அவனை எடை போட்டவர், வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

    இந்தாங்க ஸார், உங்க விசிட்டர் பாஸ், நெக்ஸ்ட்... நெக்ஸ்ட் இண்டர்வியூ முடிந்த பின்பு இதை இங்கே கொடுத்திட்டுப் போகணும். ஜல்தி, ஜல்தி! என்று அவனை விரட்டினார்.

    ‘அட ராமா! இதென்ன திருப்பதி பெருமான் தரிசனம் மாதிரி இருக்கே!' என்று மனதிற்குள் நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பினான்.

    போகும் வழியில் தெரிந்த குரோட்டன்ஸையும், வண்ண வண்ண மலர்களையும் பார்த்தபடி நடந்தான் அவன். வரவேற்பறையில் இருந்த ஏஸி, வெயிலுக்கு இதமாக இருந்தது.

    ரிசப்ஷனில் அமர்ந்து இருந்த பெண்ணைப் பார்த்தான் அவன். ‘அடப்பாவமே! துணிப்பஞ்சம் போல.... முண்டா பனியனை, அதுவும் கை இல்லாத ஒன்றை அணிந்து இருக்கிறாளே!' என்று நினைத்தவன், தயங்கிய படியே அவளை நோக்கிச் சென்றான்.

    யெஸ், வாட் டூ யூ வாண்ட்?

    குட்மார்னிங் மேடம்.

    குட்மார்னிங், என்ன வேண்டும் உங்களுக்கு?

    குட்மார்னிங் மேடம்! என்றான் அவன் மீண்டும்.

    'சே! சரியான சாவு கிராக்கி!' என்று மனதிற்குள் அவனைத் திட்டியவள், வெளியே புன்னகைத்தாள்.

    இண்டர்வியூவுக்குத்தானே வந்து இருக்கீங்க?

    யெஸ் மேடம்.

    எந்தக் கம்பெனி ஸார்?

    செக்ரோ மேடம்.

    ஓ.கே... நான்காவது தளம் போகணும். லிப்ட் அந்த ஸைடு இருக்கு.

    சரி மேடம்! என்றபடியே அவள் கைகாட்டிய திக்கை நோக்கி நடந்தான் அவன்.

    அங்கு நடந்து சென்று கொண்டு இருந்த ஆண்களையும் பெண்களையும் பார்த்தபடியே சென்றான் அவன்.

    ‘இதுதான் சென்னை போல. எவ்வளவு பரபரப்பாக இருக்கிறது இந்த இடம். ஆண்களும் பெண்களும் சரிசமமாக நடத்தப்படுவார்கள் போல இங்கே.

    இந்த மாதிரி ஒரு இடத்தில் வேலை செய்ய, ரொம்பக் கொடுப்பினை வேண்டும். ம்ம்... ராமா, எப்படியாவது எனக்கு இந்த வேலையைக் கிடைக்கும்படி செய்யப்பா!' என்று நினைத்தபடியே நடந்தான்.

    லிஃப்ட்டில் ஏறியவன், நான்காவது தளத்திற்கான பட்டனை அழுத்தினான். லிஃப்ட் நான்காவது தளத்தில் நின்றவுடன் வேகமாக இறங்கினான் அவன்.

    ‘இந்த இடத்தில் ஸ்ரீராம் இருந்து இருந்தால், நன்றாக இருக்கும்... பதட்டம் இல்லாமல் இருக்கும்!' என்று நினைத்தபடியே நடந்தான் அவன்.

    ஸ்ரீராம் என்று அவன் நினைத்தது, பகவான் ராமச்சந்திர பிரபுவை இல்லை. அவன் கஸின் ஸ்ரீராமைத் தான் அவன் இப்பொழுது நினைத்தான் வாசகர்களே!

    ஸ்ரீராம், மீனாட்சி எல்லோருக்குமே, சென்னையில் செட்டில் ஆக வேண்டும் என்பதுதானே கனவு.

    மீனாட்சி, கேசவ், ஸ்ரீராம் யார் என்று கெஸ் செய்து இருப்பீர்களே! மூவரும் கஸின்ஸ்... மூவரும் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள்.

    மூவருக்கும் சென்னையில் வந்து செட்டில் ஆக வேண்டும் என்பதே லட்சியம். மீனாட்சி பிஸியோதெரபிஸ்ட் படித்து முடித்து விட்டாள். ஹாஸ்பிடலில் வேலை பார்க்க வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறாள்.

    ஆனால் மீனாட்சியின் அம்மா, அவள் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று துடிப்பாக இருக்கிறார். இருவரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

    ஸ்ரீராம் ரொம்பத் துடிப்பானவன். கேசவ ராகவனுக்கு ஆப்போஸிட் அவன். அவன் அப்பா சாரதி ஆர்மியில் இருந்து ரிட்டையர் ஆனவர்.

    அவன் அம்மா, மாதவி. இவனுக்கு ஆறு வயது ஆகும் பொழுது இருவருக்கும் விவாகரத்து ஆனது.

    அதனால் பெற்றோர் பாசம் இல்லாமல் வளர்ந்தவன் ஸ்ரீராம். அந்த சம்பவத்தால் அவன் வாழ்க்கையில் சந்தித்த அவமானங்கள் ஏராளம்.

    அது மட்டும் இல்லை...அவன் அம்மா இன்னொரு திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    அதனால் அவன், எல்லா விஷயத்தையும் கேஷுவலாகவே அணுகுவான். அதனால் அவனுக்குக் கூட பெரிய கொள்கை ஒன்றே ஒன்று உள்ளது. கார் ரேஸில் சேம்பியன் பட்டம் பெற வேண்டும் என்பதே அது.

    கேசவ், ஸ்ரீராம், மீனாட்சி. மூவரைச் சுற்றி என்னென்ன நடக்கப்போகிறது என்பதே இந்தக் கதை. சரி, முதலில் கேசவ்வின் இண்டர்வியூ எப்படிப் போகிறது என்பதைப் பார்க்கலாமே.

    குட்மார்னிங் ஸார்.

    நாமம் நெற்றி முழுவதும் படர்ந்து இருக்க, பவ்யமாகத் தன் முன்னே நின்று கொண்டு இருந்த இளைஞரைப் பார்த்தார் பிரகாஷ்.

    உட்காருங்க...

    பரவாயில்லை ஸார். பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்.

    'இவன் என்ன தில்லு முல்லு ரஜினி போல டயலாக் பேசறான்!' என்று மனதிற்குள் நினைத்தபடியே அவனிடம் பேசினார்.

    நல்ல பழக்கம்தான். ஆனால் இண்டர்வியூவுக்கு என்று ஒரு வரைமுறை உண்டு. அதை மாற்ற முடியாது. அதனால் உட்காருங்க.

    சரி ஸார்... நீங்க சொல்றதை, நான் செய்யறேன்! என்றபடியே உட்கார்ந்தான் அவன்.

    சரி, உங்க அப்பாவுக்கு என்ன வேலை? அதைப் பற்றி நீங்க எதுவும் உங்க பயோடேட்டாவில் போடலியே!

    ஸார், எங்க அப்பாவுக்கு, நிலம் இருக்கு ஊரில், அதில்தான் விவசாயம் செய்யறார்.

    "ஓ... ஓ.கே... நீங்க ஏன் உங்க அப்பாவோட வேலையைப் பகிர்ந்து கொள்ளாமல், கம்ப்யூட்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1