Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuyilosai Kettayo!
Kuyilosai Kettayo!
Kuyilosai Kettayo!
Ebook183 pages1 hour

Kuyilosai Kettayo!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் அண்ணன் மகனை கவனித்து கொள்வதற்கு, கோயம்பத்தூரில் இருந்து சென்னை வருகிறாள் சஹானா. அதே நேரம் தங்கையின் மேல் உள்ள பாசத்தால் குழந்தையை சொந்தம் கொண்டாடுகிறான் வருண். இருவருக்கும் இடையே நடக்கும் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140906606
Kuyilosai Kettayo!

Read more from Lakshmi Sudha

Related to Kuyilosai Kettayo!

Related ebooks

Reviews for Kuyilosai Kettayo!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuyilosai Kettayo! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    குயிலோசை கேட்டாயோ!

    Kuyilosai Kettayo!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    முன்னுரை

    வாங்க பேசலாம்!

    எல்லோரும் நலமா? வழக்கம் போல் இந்த வருடப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவிகள் பெற்று உள்ளனர்.

    இது ரொம்ப சந்தோஷமான விஷயம். நிறையப் பெண்கள் எல்லாத் துறையிலும் ஆண்களுக்குச் சமமாகக் கால் பதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    ஆனால், இன்னமும் ஒரு பெண் தனியாக, சுதந்திரமாக, எல்லா இடங்களுக்கும் செல்ல முடியுமா?

    'இல்லை' என்று எல்லோருக்கும் தெரியும். இன்னும் பெண்ணை ஒரு 'போகப் பொருளாக'ப் பார்க்கும் மனப் பாங்கு, ஆண்களிடையே உள்ளது.

    ஏதாவது குற்றம் நடந்தால், அதற்குக் காரணம் பெண்தான். அவள் உடை, அவள் உயரம், அவள் சிரித்தது... என ஏதேதோ காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன.

    ஆசிட் வீச்சு, ரேகிங், பாலியல் வன்முறை எனப் பெண்களைக் கொடுமைப் படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.

    இதை எல்லாம் தாண்டிச் சமூகத்தில், வீட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பதித்துக் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள்.

    உங்களைக் கவர்ந்த பெண்கள் இருப்பார்களே! மதர் தெரஸா, கல்பனா சாவ்லாவாகக் கூட இருக்கலாம். உங்கள் அம்மாவாக இருக்கலாம்... உங்கள் அக்காவாக இருக்கலாம்... உங்கள் தோழியாக இருக்கலாம். உங்கள் ‘ரோல் மாடல்' அவர்கள்தானே!

    அவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்தலாமே!

    'ரோல் மாடல்' என்ற தலைப்போடு அவர்களைப் பற்றிய சிறு குறிப்போடு என் மின் அஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். விருப்பம் இருந்தால் புகைப்படமும் அனுப்பலாம்.

    அடுத்த 'வாங்க பேசலாம்’ பகுதியில் உங்கள் மனம் கவர்ந்த ரோல் மாடல் பெண்மணியைப் பற்றிய உங்கள் குறிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

    என் நாவலைப் பற்றிய விமர்சனங்களைத் தொடர்ந்து அனுப்பி வரும் எல்லாருக்கும் நன்றி.

    அன்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    அத்தியாயம் 1

    மாலை

    நேரம்....

    தென்றல்

    தழுவுகிறது

    என்

    மேனியை!

    ……………….

    மலர்களின்

    அணிவகுப்பை

    என்

    கண்கள்

    ஆராதனை

    செய்கின்றன!

    மலர்களுக்கு

    இடையே

    அழகிய

    போகன்வில்லா

    புன்னகையுடன்

    என்னை

    நீ

    வரவேற்கிறாய்!

    ஒரு அழகான

    மாலைப் பொழுது!

    அந்தமான் தீவில், வருண் அந்தப் பழமையான குகையை ஆச்சரியத்துடன் பார்வையிட்டபடி இருந்தான்.

    பாறைகள் எல்லாம் சிதைந்து போய் இருந்தன. பாறைகளின் மேல் முட்களும், செடி கொடிகளும் தாராளமாகப் படர்ந்து இருந்தன.

    'இந்தக் குகை எப்படி டூரிஸ்ட் கண்களில் படாமல் இவ்வளவு நாட்கள் இருந்து இருக்கிறது...? ஆச்சரியமாக இருக்கிறதே!

    என்னுடைய அதிர்ஷ்டம் இந்தக் குகை பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. இப்பொழுது என்ன செய்யலாம்? குகையினுள் செல்லலாமா?'

    ஒரு ஆள் ஊர்ந்து செல்லும்படியாக இருந்த நுழைவாயில் அவனை, 'வா... வா...' என்று அழைப்பது போன்ற பிரமை அவனுக்கு ஏற்பட்டது.

    'குகையினுள் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கலாம். அது மட்டும் இல்லை.... ஏதேனும் விஷ ஜந்துக்கள் இருக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. என்ன செய்யலாம்...?' என்று யோசித்தபடியே நின்று கொண்டு இருந்தான் அவன்.

    யோசனையில் மூழ்கி இருந்தவனைக் கலைத்தது, சைப்பேசியின் பாடல் சத்தம்.

    'சே... சே! இது வேற...!' என்று, யார் என்று பார்க்காமலே கட் செய்தான் அவன்.

    சில நொடிகளில் குறுஞ்செய்தி மொபைலின் பாக்ஸிற்கு வர, உள்ளுணர்வு ஏதோ சொல்ல, கைப்பேசியின் குறுஞ்செய்தியைப் படித்தான் அவன்.

    அந்தக் குளிரிலும் அவன் நெற்றியில் வியர்வைப் பூக்கள். மீண்டும் செய்தியைப் படித்தான் அவன்.

    ‘ஸாரி... கெட்ட செய்தி. உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்...' என்ற செய்தி, அவன் கஸின் அஜய்யிடம் இருந்து வந்து இருந்தது.

    ‘அஜய் அநாவசியமாக என்னைத் தொடர்பு கொள்ள மாட்டான். சே! இது என்ன செய்தியாக இருக்கும்?' என்று அவன் மனம் படபடத்தது.

    அஜய்யை வேகமாகத் தொடர்பு கொண்டான் அவன்.

    ஏய் அஜய்... சொல்லு, என்ன மெஸேஜ் இது...? சொல்லுடா...

    வருண்... ஐயாம் ஸாரி... சொல்லும் பொழுதே அவன் குரல் நடுங்கியது.

    ஏய்... என்ன ஆச்சு?

    ம்... இது வினிதாவைப் பற்றி...

    தங்கையைப் பற்றி அஜய் சொன்னவுடன், அவன் இதயத் துடிப்பு அதிகரித்தது.

    ஏய்... வினிதாவுக்கு என்ன ஆச்சு?

    ம்... வினிதாவின் மாமனார் போன் செய்து இருந்தார். வினிதாவும், அவர் மகனும் கார் விபத்தில் இறந்து விட்டார்களாம். அதை அவர் போனில் சொன்னவுடனேயே பெரியப்பா மயங்கி விழுந்து விட்டார்கள்.

    காட்...! குழந்தைக்கு என்ன ஆச்சு, அஜய்...? அவன் கதறினான்.

    தெரியவில்லை வருண். ஆனால்... போன் கட்டாகி விட்டது.

    வருணால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

    'சே! ஏன் இந்த மாதிரி ஒரு சோதனை எனக்கு? வினிதா! உனக்கு ஏன் இந்த மாதிரி ஒரு நிலை வர வேண்டும்? காதல், கல்யாணம் எல்லாமே உன் வாழ்க்கையில் வேகமாக வந்தன.

    அதைப் போலவே மரணமும் வேகமாக வந்து விட்டதே! அது ஏன்?' வருண் துக்கத்தில் ஆழ்ந்தான்.

    இப்பொழுது.... இந்தியாவில் கோயம்புத்தூரில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வரும் சஹானா என்ன செய்கிறாள் என்று பார்க்கலாமா?

    விஷால், நான் இன்னிக்கு நைட்டே சென்னைக்குப் போகணும்.

    சஹானா... ஓ.கே. என்னால் வர முடியுமா என்று தெரியவில்லை. ஸாரி...

    இட் இஸ் ஓ.கே. விஷால். நவீனை நினைத்தால் தான் எனக்குச் சங்கடமாக இருக்கிறது. பாவம்... அவன் சின்னக் குழந்தை.

    சொல்லும் பொழுதே அவள் அழத் தொடங்கினாள்.

    ஏய்... சஹானா... அவனுக்கு நடந்த விபத்து பற்றி எதுவும் தெரியாது. அதனால் நீ அநாவசியமாகப் பயப்படத் தேவை இல்லை. அதோடு மட்டும் இல்லாமல், அவனுக்கு உன் அம்மா, அம்மாவாக இருந்து இனி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்.

    அவன் அப்படிச் சொன்னது, அவள் கோபத்தைத் தூண்டியது.

    லுக் விஷால்... நவீனுக்கு இனிமேல் நான்தான் அம்மாவாக இருந்து எல்லாவற்றையும் கவனிக்கப் போகிறேன். இதை நான் உன்னிடம் நேற்றே சொல்லிவிட்டேன்.

    பட்.... இது சரி வராது. நீ இங்கே கோயம்புத்தூரில் வேலை பார்க்கிறாய்.... ஞாபகம் இருக்கிறது தானே? நீ எப்படி ஒரு வயது கூட ஆகாத குழந்தையைப் பார்த்துக் கொள்வாய்?

    நான் சென்னைக்குப் போகப் போகிறேன்.

    ஏய்... இது முட்டாள்தனமான முடிவு. நீ இந்தக் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறாய். இதை விட்டு விட்டுச் சென்னைக்குப் போகப் போகிறாயா? இப்பொழுது ஐ.டி. இருக்கும் நிலைமையில், புதிதாக வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று உனக்கே தெரியும்தானே! தெரிந்தே குழியில் விழப் போகிறாயா?

    அவள் அமைதியாக இருந்தாள். அண்ணனின் குழந்தை அநாதையாக வளர்வதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    நடந்தது ஒரு கோரமான கார் விபத்து. விபத்தில் அவள் அண்ணன் வசந்த், அண்ணி வினிதா அந்த இடத்திலேயே இறந்து விட்டனர்.

    நவீன் மட்டும் பிழைத்து இருக்கிறான். கடவுளுக்குத் துளி இரக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான் நவீனை மட்டும் தப்ப வைத்து இருக்கிறானோ?

    ஐந்து மாதக் குழந்தை, தாய், தந்தை அரவணைப்பின்றி இந்த உலகில் வாழ்வது எவ்வளவு கடினம்!

    ஏன் சஹானா அமைதியாக இருக்கிறாய்?

    விஷாலுக்கு இதெல்லாம் புரியாது. இந்த மாதிரி உணர்ச்சிகள் எல்லாம் அவனுக்குப் புரியாது.

    ம்... விஷால்... என்னால் நவீனை விட்டு விட முடியாது. அவனுக்குப் பெற்றோர் இல்லை. இருவரையும் ஒரு விபத்தில் அவன் பறி கொடுத்து இருக்கிறான். அதனால் நான் சென்னைக்குப் போவதுதான் சரி.

    பட்... நீ ஏன் உன் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாய்?

    ம்... ஏன் என்றால், எனக்கு அது பிடித்து இருக்கிறது.

    ஓ.கே. நீ என்ன சொல்கிறாய்? கடைசியாக உன் முடிவு என்ன?

    ம். குட்பை, விஷால். நான் சென்னைக்குப் போவது தான் நல்லது.

    அவன் முகத்தில் கோபம் தெரிந்தது.

    சஹானா... நான்...

    அவன் குரல் காற்றில் கரைந்து போனது. சஹானா, அவனைத் தாண்டிச் சென்று கொண்டு இருந்தாள்.

    'என்ன செய்வது?' என்று புரியாமல் திகைத்துச் சிலை போல் நின்று கொண்டு இருந்தான், விஷால்.

    அடுத்த நாள் காலை சென்னையில் இருந்தாள், சஹானா. நவீனைப் பார்க்கும் பொழுது, அவள் மனதில் துக்கம் பொங்கியது.

    நவீன் உரத்த குரலில் அழுது கொண்டு இருந்தான். 'அவன் அழுகையை முதலில் நிறுத்த வேண்டும்...' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே...

    அவனைத் தூக்கி வைத்து இருந்த ஆயாவிடம் இருந்து அவனை வாங்கினாள்.

    பசியாடா நவீன் கண்ணா? என்ன வேணும் பாப்பாவிற்கு...? என்று கொஞ்சியபடியே அவனைத் தூக்கிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள்.

    இவன் பாட்டில் பால் குடிக்க மாட்டேங்கிறான். பசிதான் போல. வினிதா மேடம் இவனுக்குப் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கலை. அம்மா ஞாபகம் வந்திடுச்சு போல... என்றாள் ஆயா.

    "ஓ... அப்படியா? இப்போ

    Enjoying the preview?
    Page 1 of 1