Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeye Enthan Nila Saaraladi!
Neeye Enthan Nila Saaraladi!
Neeye Enthan Nila Saaraladi!
Ebook121 pages1 hour

Neeye Enthan Nila Saaraladi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிலவைத் தேடும் வானமாக அவன்!மேகத்துள் நுழைந்த நிலவாய் அவள்!நிலவின் சாரலில் அவன் நனைய நினைக்கையிலே

நிலவுதான் கையில் சேருமோ?

அவன் கனவும்தான் கைகூடுமோ?

நீயே எந்தன் நிலாச்சாரலடி...! பதில் கூறும்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580135406782
Neeye Enthan Nila Saaraladi!

Read more from J. Chellam Zarina

Related to Neeye Enthan Nila Saaraladi!

Related ebooks

Reviews for Neeye Enthan Nila Saaraladi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeye Enthan Nila Saaraladi! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீயே எந்தன் நிலாச்சாரலடி!

    Neeye Enthan Nila Saaraladi!

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சாரல் 1

    சாரல் 2

    சாரல் 3

    சாரல் 4

    சாரல் 5

    சாரல் 6

    சாரல் 7

    சாரல் 8

    சாரல் 9

    சாரல் 10

    சாரல் 11

    சாரல் 12

    சாரல் 13

    சாரல் 14

    சாரல் 1

    ஒரு கையால் கேட்டைத் தள்ளி காலை ஊன்றி நகர்த்தியபடியே உள்ளே வந்தவள் ஸ்கூட்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு பையை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிள் மீது வைத்தாள்.

    ஆண்ட்டி! நீங்க சொன்னபடி எல்லாமும் வாங்கி வந்திட்டேன்!

    ஹேய்! நித்து, வந்தாச்சா? இரு காபி தரேன். சூடா டிபன் கூட இருக்கு?

    இல்லே ஆண்ட்டி! ப்ரெஷ் ஆகிட்டு வரேன்! வினய் எங்கே ஆண்ட்டி?

    வினய் மணிகூட இருக்கான் மா! நீ ப்ரெஷ் ஆகிட்டு சீக்கிரம் வா.

    என்ன ஆண்ட்டி? விசேஷம் பஜ்ஜி வாசனையும் நெய் வாசனையும் அள்ளுது?

    என் அண்ணன் பையன் ஆதி வந்திருக்கான் நித்து. இங்கேதான் அந்த ரோஸ் கார்டனை வாங்கியிருக்கானாம். அதை ரெனோவேட் பண்ண வந்திருக்கான்.

    நித்திலா மேலே தன் போர்ஷனுக்கு வந்தவள் அலுப்புத் தீர குளித்தாள். வழக்கம்போல நைட்டியை எடுத்தவள் அதை வைத்து விட்டு பழுப்பு நிற பாட்டியாலாவையும் கறுப்பு டாப்பையும் அணிந்து கொண்டாள். பழுப்பு நிற நீட்ட துப்பட்டாவை தோளில் நழுவவிட்டபடி கீழே வந்தாள்.

    வினய்யை பார்த்துட்டு வந்திடுறேனே!

    மேகாவும் கூடப் போயிருக்கா! டிபன் சாப்பிட்டுட்டு போ! ஆறிப்போயிடும் சுடச்சுட காபியும் பொன்னிற வில்லைகளாய் பஜ்ஜியையும் தட்டில் வைத்து நீட்டினாள். கூடவே நெய்வழிய கேசரி ஆரஞ்சு நிறத்தில் மினுக்கியது.

    ம்! சூப்பர் ஆண்ட்டி! ச்சான்சேயில்லை!

    அங்கேயே சமையல்கட்டு திட்டின் மீது வகையாய் அமர்ந்து கொண்டாள். சம்பூர்ணா முகம் மகிழ்ந்தது.

    இந்தா சட்டினி வச்சுக்கோ!

    ஆண்ட்டி நைட் டின்னர் மெனு சொல்லுங்க. நானும் ஹெல்ப் பண்றேன். தனியே இழுத்து விட்டுக்க வேண்டாம்.

    ப்ச் நித்து! நீ வேற... ஆதிக்கு வத்தக்குழம்பும் கூட்டும் பருப்புத் தொகையலும் தான் வேணுமாம். பாரின்லேயே இத்தனை வருஷமிருந்ததனால் நாக்கே செத்துப்போச்சாம்.

    சம்பூர்ணா சொன்ன விதத்தில் சிரிப்புப் பீறிட்டது நித்திலாவுக்கு.

    இருக்கட்டும்! இங்கே தானே இருக்கப்போறான். ஜமாய்ச்சுடறேன் பார்!

    சரி ஆண்டி... தொகையலுக்கு தேவையானதை எடுத்து வையுங்க ரசம் நான் வச்சுடறேன். எண்ணையிலேயே ரொம்ப நேரமா நிற்கிறிங்க... நகருங்க. நான் பார்த்துக்கிடுறேன்.

    கையைக் கழுவிக்கொண்டுத் திரும்பியவள் யார் மீதோ மோதுவதற்கு இருந்து சமாளித்துத் தடுமாறி பாலன்ஸ் தப்ப ஒரு வலிமையான கரம் ஒன்று அவளின் இடையை அழுத்தமாகப் பிடித்தது.

    மிக அருகாமையில்...

    ஆண்மை ததும்பும் அந்தமுகம்... மூச்சின் வெப்பம் கூட உணர முடிகிற அண்மையில்... நித்திலா தவித்துப்போனாள்.

    ம்மா!

    அவனுடைய மறுகையிலிருந்த வினய் கைதட்டிச் சிரித்தான். சுதாரிக்க முனைகையில்,

    ஆர் யூ ஓக்கே?

    அந்தக்குரலில் குழைவும் கம்பீரமும் இரண்டறக் கலந்து அவளின் உயிர்வரைத் தீண்டிச் சென்றது.

    யா! தேங்க் யூ!

    நித்து! விழுந்திருந்தா என்னாகிறது? பார்த்துடாம்மா! இந்த படுவாவைப் பார்த்தியா சிரிக்கான்?

    ம்மா! ம்மா! என்று அவளிடம் தாவமுயன்றவனை லேசாய் இறுக்கியபடியே விழிகள் முழுமையாய் அவளை ஆராய்ந்தன.

    அத்தை! இவன் மேலெல்லாம் மண்ணு! நான் இவனை குளிக்க வச்சு கூட்டி வரேன். டிரஸ்மட்டும் எடுத்து என் ரூமில் வையுங்க!

    அச்சோ! எதுக்கு சிரமம்? அவன் படுத்துவான். கொடுங்க நான் பார்த்துகிடுவேன்!

    அவளைக் கூர்ந்தாற்போல் பார்த்தவன்.

    வேண்டாம்! எப்படியும் நானும் குளிக்கத்தானே போறேன். நானே குளிக்க வச்சிடுறேன். நீங்க ப்ரெஷ்அப் ஆகிட்டீங்க!

    இல்லே வேண்டாம் வினுவைக் கொடுங்க.

    சம்பூர்ணா இடையில் வந்தாள்.

    விடு நித்து! ஆதி குளிக்க வச்சிடுவான். மேகா! வினய் டிரஸ்ஸை எடுத்து ஆதி ரூமிலே வை! படவா சமர்த்தாக் குளிப்பே தானே!

    சமுத்து! சமுத்து! வினு சமுத்து!

    புதியவனின் கன்னத்தில் முத்தமிட்டான் குழந்தை. காலையில் வந்திறங்கியவனிடம் மாலைக்குள்ளாகவே இத்தனை பிடிப்பா... யோசனையுடன் பார்த்தவளின் முகம் சிவக்க முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஆதியின் பார்வை மின்னல் வேகமாய் அவளிடம் பாய்ந்தது. குளித்து வந்திருப்பாள் போலும். சந்தன சோப்பின் வாசம் மிச்சமிருந்தது. பவுடர் பூச்சுக்கூட இல்லை மாசுமருவற்ற முகம் கண்களில் மைப்பூச்சும் இல்லை. இமைப்பீலிகள் வளைவாய் குடைபிடித்து அசாத்திய கருமைகாட்டி நிற்க விசாலமான விழிகளில் நிலாச்சாரலடித்தது. ஈர மினுமினுப்போடு இதழ்கள் மினுங்க தொங்கட்டான் கழுத்தை உரசிக் கொண்டிருந்தது திரும்பி நின்ற கோணத்தில் விளக்கொளி பட்டு ஓவியம்போலத் திகழ்ந்தவளை மனசுக்குள் பதித்துக் கொண்டான்.

    அத்தை இவங்க...

    ஸாரிடா ஆதி. இவதான் நித்திலவல்லி. உங்கமாமாவோட நண்பரின் மகள். இங்கேதான் வங்கியிலே வேலை. அதான் மாடியிலேயே ரூம் ஒன்னை ஒழித்துக்குடுத்துட்டார். வினய்யும் இவளும் மட்டும்தான் அம்மா அப்பா ஊருல இருக்காங்க... நித்துமா, இவன் நந்தன் ஆதித்யா. எங்க பெரியண்ணா பையன். நாலஞ்சு வருஷமா பாரின்ல குப்பைக்கொட்டிட்டு இன்னிக்குத்தான் அத்தையை பார்க்க வந்திருக்கான்... பாசக்குடை பிடிக்க வந்திருக்கான்னு நினைக்காதே இங்கே இவர் ரிசார்ட்டு ஆரம்பிக்கப்போறா...ர். அதனாலே அத்தை வீட்டுக்கு ராக்கெட்ல வந்திறங்கியிருக்கார்.

    ஆதித்யா அத்தை... ப்ளீஸ்! அத்தை. என்று கட்டிப்பிடித்துக்கொண்டுவிட நித்திலா இதழ்பிரியாமல் சிரித்தாள்.

    டேய்! விடுடா மேலெல்லாம் ஒரே மண்ணு! எம்மேலே ஈஷாதே! போய்க்குளி என்று முதுகைப்பிடித்து தள்ளினாள் சம்பூர்ணா.

    இங்கேதான் இனி இருப்பானா? மனதுள் சிறு கலவரம் மூண்டது. மாடியில் இரண்டு பக்கமும் விசாலமான படுக்கையறைகள் குளியறை வசதியோடு படிக்கட்டு முடிகிற இடத்திலேயே ஹால் மாதிரி அமைப்பு. ஹாலிலிருந்து சிறு நடைவழிபோல மத்தியில் அது முடியுமிடத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1