Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vinadi Nera Vibareethangal...!
Vinadi Nera Vibareethangal...!
Vinadi Nera Vibareethangal...!
Ebook131 pages47 minutes

Vinadi Nera Vibareethangal...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பதின்ம வயது பாலகர்கள் பாதை மாறக் காரணம் அதீத செல்லம் கொடுக்கும் பெற்றோர்களா? இல்லை அவர்களை விட்டில் பூச்சிகளாய் மாற்றித் தன்னுள்ளே ஈர்க்கும் மாய ஒளியெனும் இணைய வெளியா? தெரிந்து கொள்ளப் "படியுங்கள் வினாடி நேர விபரீதங்கள் "

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580135410646
Vinadi Nera Vibareethangal...!

Read more from J. Chellam Zarina

Related to Vinadi Nera Vibareethangal...!

Related ebooks

Related categories

Reviews for Vinadi Nera Vibareethangal...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vinadi Nera Vibareethangal...! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வினாடி நேர விபரீதங்கள்…!

    Vinadi Nera Vibareethangal...!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    பொருளடக்கம்

    வினாடி...1

    வினாடி...2

    வினாடி...3

    வினாடி...4

    வினாடி...5

    வினாடி...6

    வினாடி...7

    வினாடி...8

    வினாடி...9

    வினாடி...10

    வினாடி...11

    வினாடி...12

    வினாடி...13

    வினாடி...14

    பஞ்சமுகி அறிமுகம்

    எழுத்தாளர் G.A. பிரபா அவர்களின் ஊக்குவிப்பால் மாலா மாதவன், விஜி சம்பத், செல்லம் ஜரீனா, மதுரா மற்றும் சாய்ரேணு என்ற ஐந்து பெண்கள் இணைந்து பஞ்சமுகி என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள்.

    மாலா மாதவன்:

    சென்னையைச் சேர்ந்த MCA பட்டதாரி. தமிழில் கவிதைகள், கதைகள் எனப் பயணிக்கிறார். இவரது கதை கவிதைகள் கல்கி, குமுதம் சிநேகிதி, ராணி போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. வெண்பா எழுதுவதில் விருப்பம் அதிகம்.

    விஜி சம்பத்:

    சேலத்தில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி. தினமணி கதிர், தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். இவரது சிறுகதைகள் அனைத்து முன்னணி வார,மாத இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. தினத்தந்தியில் சில கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. ஆன்மீகப் பாடல் எழுதுவதில் வல்லவர்.

    செல்லம் ஜரீனா:

    சென்னையைச் சேர்ந்தவர். பல முன்னணி பத்திரிக்கைகளில் இவரது கதை வந்துள்ளது. இவருடைய சிறுகதைகள் சில ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு புத்தகமாகவும் வந்துள்ளன. வரலாற்று நாவல் படைப்பதில் சிறந்தவர்.

    மதுரா:

    தேன்மொழி ராஜகோபால் என்ற இவர் படித்தது ஆங்கில இலக்கியம்.மரபு நவீனக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பிரபல இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் மின்னிதழ்களிலும் படைப்புகள் வெளியாகி உள்ளன

    சாய் ரேணு:

    தென்காசியில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி. ஆன்மீகத் துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை குங்குமம் ஆன்மீகம், அம்மன் தரிசனம் போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. துப்பறியும் நாவல் எழுதுவதில் திறம் மிக்கவர்.

    வினாடி...1

    அம்மா! என்னம்மா உன் ப்ரச்னை நான்தான் பார்த்தி வீட்டுலே குருப் ஸ்டடி இருக்குன்னு சொல்லிட்டு வந்தேனே

    கோபிக்கு பார்த்துக் கொண்டிருந்த வீடியோவை பார்க்க விடாமல் செய்த கோபம். அம்மாவின் அலைபேசி அழைப்பு எரிச்சலையூட்டியது.

    கோபி கண்ணா! கோச்சுக்காதேடா. மாமா வந்திருக்கிறாங்க. நீ கேட்டிருந்தியாமே! புது மாடல் மொபைல். அதை வாங்கிட்டு வந்திருக்கிறாங்க

    ஹேய்! புது மாடல் போனா? இரு! இரு! இப்பவே வரேன்

    டேய் ! வெயிட் பண்ணுங்கடா! எங்கமாமா நான் கேட்ட புது மாடல் மொபைல் வாங்கி வந்திருக்காராம். அதை வாங்கிகிட்டு படிக்கணும்னுட்டு வரேன். அதுல இன்னும் படமெல்லாம் க்ளியரா சூப்பரா இருக்கும்டா

    கோபி ஓடினான்.

    கோபி,பார்த்தாவுடன் இன்னும் இருவர் சேர்ந்து ஒரு கேங்.

    பாடம் படிக்கிறேன் பேர்வழியென்று ஓரிடத்தில் சேர்ந்து கொண்டு வீட்யூப்பில் (wetube)வரும் அத்தனை அக்கப்போர்களையும் பார்ப்பதும்,ரசிப்பதும் அதைக்குறித்தே கருத்து பரிமாறிக் கொள்வதுமே பெரும் பொழுது போக்கு.

    எல்லோருமே ப்ளஸ் ஒன். ஒரே வகுப்பு ஒரே பெஞ்ச் தோழர்கள். இதில் கண்ணன் மட்டுமே அரசு பள்ளி மாணவன். அனைவரின் முகத்திலும் கொஞ்சம் குழந்தைத்தனமும் பெரியமனுஷத்தனமும் கலந்திருக்க லேசாய் மீசை கூட அரும்பியிருந்தது சிலருக்கு. அதில் பெருமை கலந்த வெட்கம் கூட.

    எப்போதுமே ஒரு கை உதட்டின் மேலேயே உறவாடிக் கொண்டிருந்தது சிலருக்கு.ஆனால் இந்தப்பருவம் கொஞ்சம் டெலிகேட்டான பருவம்தான். ஹார்மோன் செய்யும் தாறுமாறு விளையாட்டு. எல்லாவற்றையுமே அறிந்து கொண்டுவிட ஆசைப்படும் வயது.

    செய்யாதே என்றால் செய்வேன் என்று துள்ளும் துடுக்கான துடிப்பு.

    செய்துமுடி என்றால் முடியாது ஏன் செய்யணும் என்று எதிர்க்கேள்வி எகிறிக் கொண்டு வரும்.

    கோபி கேங் இப்படி வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் கூட்டம் தான். விரல் நுனியில் உலகமே கையில் வந்திருப்பதை விபரீதம் புரியாமலே ரசித்தது.

    கோபியின் மாமா அக்கா மகனின் ஆசைக்காக இன்னொரு நவீன அணுகுண்டை கொண்டு வந்து தந்தார்.

    கையடக்கமாய் இன்னும் துல்லியமாய் இன்னும் நவீனத்துவத்துடன் கையில் மின்னியது அது.

    தேங்க் யூ மாமா!

    கோபி! நல்லா படிக்கணும். அம்மா சொன்னா உனக்கு பாடமெல்லாம் மொபைல்லேயே வருது. பழசு கஷ்டமாருக்குன்னு சொன்னியாம். அதான் மாமா வாங்கிட்டு வந்திட்டேன். அடுத்தவாரம் உன் பிறந்தநாள் வருதுல்ல. அதுக்குதான் இந்த பரிசு. அன்னிக்கு மாமா ஆபிஸ் விஷயமா டில்லி போறேன். அதான் இப்பவே வந்திட்டேன்.

    மாமாவின் பேச்சு ஏதும் காதில் ஏறவில்லை. கண்கள் மின்னின.

    அழகாய் அம்சமாயிருந்ததை பார்த்துக் கொண்டேயிருந்தவன் அம்மாவிடம் சொல்லிவிட்டு பார்த்தி வீட்டுக்கு ஓடினான்.

    மகனைப் பார்த்தவள் தன் சகோதரனிடம்.

    படிப்பே கதின்னு கிடக்கான். எப்போ பாரு அஸைன்மெண்டு, டெஸ்ட்டுன்னு ஸ்கூலில் உயிரை வாங்கறாங்க. அடுத்தவருட பாடத்தையும் இப்பவே முடிக்கணுமாம். புள்ளைக்கு நேரமேயில்லை. இப்படியிருந்தா மூளை சூடாயிடாது. சரி ரெண்டு பேரும் சாப்பிட வாங்க

    என்று கணவனையும் சகோதரனையும் அழைத்தாள்.

    இந்த ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வந்திட்டாலே போதும். ஃப்ரீ சீட்டு கிடைச்சிடும். அதுக்குத்தான் இத்தனை பாடு.

    பேசியபடியே சாப்பிட்டு முடிக்க கோபியின் அன்னை மகனுக்காக விழித்திருந்தாள். ஒவ்வொரு தாயாருக்குமே பெற்ற பிள்ளைகள் மீது அலாதி நம்பிக்கைதான். என் வளர்ப்பு வீண் போகாது என்ற கர்வம் பெற்றெடுத்தக் குழந்தைகளாலேயே உடைக்கப்படும்போது அந்த வேதனையை என்னென்று சொல்வது.?

    நால்வரும் ஆசையோடு புது போனை வாங்கித் தொட்டுப் பார்த்தனர். நால்வருமாய் செல்ஃபி எடுத்து முகப்பில் வைத்தனர்.

    மேலும் சில தளங்களை தரவிறக்கிக் கொண்டனர்.

    பார்த்தாவின் அம்மா நோயாளி. ஒரு பெண்மணி சமையல் செய்து வைத்து விட்டுப் போய்விடுவார் பார்த்தாவின் அம்மாவுக்கு மாத்திரை போட்டுக் கொள்ள வேண்டியிருப்பதால் நேரமே உண்டு விட்டு மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்து விடுவார்.

    பார்த்தாவின் அப்பாவுக்கு சிறிய அளவில் ஜவுளிக்கடை உண்டு. அவர் கடையடைத்து விட்டு வரத் தாமதமாகும். அதனால்தான் சிறுவர்களுக்கு பார்த்தா வீடு வசதியாகிப் போனது. பார்த்தாவின் அறையிலோ மொட்டைமாடியிலோ இவர்களின் ராஜ்யம்தான். குழந்தை படிப்பதாக அம்மா நினைத்து நிம்மதியாக உறங்கி விட, மகனோ நண்பர்களுடன் கூத்தடித்துவிட்டு அப்பா வரும் நேரத்துக்கு சமர்த்தனாக அறையில் படித்துக் கொண்டிருப்பான். அப்பாவுக்கு உருகி விடும்.

    சாப்பிட்டியா ராசா! போதும்டாப்பா படிச்சது. தூங்குடாம்மா என்று தலையை வருடிவிட்டு செல்வார் அப்பாவி அப்பா.

    டீனேஜ் பிள்ளைகள் மட்டுமல்ல சின்னஞ்சிறுசுகளுமே ஆண்பெண் பேதமின்றி இந்த இருட்டுக்குள் வீழ்ந்து கிடக்கிறது.

    புதைகுழியென்று தெரியாமலே குழந்தைகள் விழுவதற்கும் பெற்றோர்களே காரணியாகி விடுகிறார்களே!

    கேட்டதுமே எல்லாமும் கிடைத்து விடுவதால் எல்லாமே அலட்சியம் தான்.

    வாங்கித் தந்ததோடு கடமை முடிந்ததாக நினைக்கும் பெற்றோரின் கண்காணிப்பில்லா பொறுப்பற்றதனத்தை என்ன சொல்வது.?

    யாரை சொல்வது? என்னத்தை சொல்வது.?

    பார்த்தா எதையெதையோ ஒற்றை விரலால் தள்ளிக் கொண்டே பார்த்திருக்க ஓரிடத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1