Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bommai Siragugal
Bommai Siragugal
Bommai Siragugal
Ebook173 pages1 hour

Bommai Siragugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனதருமை வாசக கண்மணிகளுக்கு வணக்கம்! வாழ்த்துகள், மீண்டும் ஒரு இனிய தருணத்தில் உங்களுடன் பேசுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மறுபடியும் நன்றியினை இங்கு பதிவு செய்கிறேன்.

கடந்த ஆண்டில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு, ‘மனசெல்லாம் மாயா’ வெளியாகி உங்கள் மனதில் இடம் பிடித்தது. இந்த ஆண்டின் புதுவரவாக ‘பொம்மைச் சிறகுகள்’ சிறுகதைத் தொகுப்பு உங்கள் கரங்களில் தவழ்கிறது.

எழுதுவது ஒரு வரம் என்றால், அதை ஒரு புத்தகமாக பார்ப்பது இன்னும் ஒரு வரம். மலடி ஒரு தாயாவது போல சிறப்பான வரம். அதை இரண்டாம் முறை அடைய வைத்தது இறைவனின் பெருங்கருணை. பல்வேறு பணிச் சுமைகளுக்கு மத்தியில் இந்தக் கதைகளை படித்து, மிக அருமையான அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் திரைப்பட வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை வெளியிட்டு என்னை ஊக்குவித்த பத்திரிகைகளுக்கும் அதன் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

எனது இரண்டாவது புத்தகத்திலும், உங்களின் அன்புரை இடம் பெற வேண்டும் என்றதும், தோழமையுடன் தன்னுரை பதித்த இனிய நண்பர் பத்திரிகையாளர், எழுத்தாளர் சபீதா ஜோசப் அவர்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன், ஜே.செல்லம் ஜெரினா

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580135405694
Bommai Siragugal

Read more from J. Chellam Zarina

Related to Bommai Siragugal

Related ebooks

Reviews for Bommai Siragugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bommai Siragugal - J. Chellam Zarina

    http://www.pustaka.co.in

    பொம்மைச் சிறகுகள்

    Bommai Siragugal

    Author:

    ஜெ.செல்லம் ஜெரினா

    J.Chellam Zarina

    For more books

    http://www.pustaka.co.in/home/authors/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    என்னுரை

    தாயுமானவன்!

    தொட்டுவிடும் தூரம்தான்!

    கொடுப்பினை

    படிப்பினை

    வேர்கள்

    கல்யாணமாம் கல்யாணம்...!

    எனக்கு எங்க அம்மா வேணும்!

    பறக்கத் தெரியாத மாடப்புறா...!

    பொம்மைச் சிறகுகள்!

    புதியதோர் சாந்தி!

    பாவப்பட்ட ஜீவன்கள்...

    வாழ்க்கைக் கோலம்!

    அப்பா கொடுத்த தண்டனை!

    காலம் மாற்றும் தீர்ப்புகள்!

    தாயம்மா...!

    சில உரிமைகளும் கடமைகளும்!

    மனசு மயங்கும்

    உண்மை எப்போதும் சுடும்!

    ஒப்பீடு

    காரணம்

    கண்டிஷன்!

    வெட்கம்

    நேரம்

    ஏக்கம்

    மாப்பிள்ளை மனசு...!

    ஆதரவு

    தாய் பாசம்

    கலைந்தது!

    பரிகாரம்...!

    குழந்தையின் தாலாட்டு...!

    இந்த வரன் வேண்டாம்!

    வாழ்த்துரை

    ஒரு சிறுகதை என்ன செய்ய வேண்டும் என்று அவரவரின் மன முதிர்ச்சி மற்றும் ரசனைகள் சார்ந்து ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

    என்னைக் கேட்டால்... அடிப்படையான தகுதியாக நான் பார்ப்பது... முதலில் அது படிக்கவைக்க வேண்டும்.

    அதாவது ஆங்கிலத்தில் சொன்னால், ‘ரீடபிளிட்டி.’ முதல் நான்கு வாக்கியங்களிலேயே ஒன்றுமே புரியாமல் நடுமண்டையைச் சொறியவைக்கும் எந்தப் படைப்புமே வெகுஜன வாசகனுக்கு அலர்ஜிதான். (அது வேற லெவல் படைப்புகள்! அதற்கு வேற லெவல் வாசகர்கள்!)

    ஒரு படைப்பின் உள்தன்மையில் வெளிப்படும் பன்முகத் தன்மையுடன் இழைந்தோடும் சமூக பிம்பத்தின் நிதர்சனச் சித்தாந்தச் சிதறல்களும், முப்பரிமாண கோட்பாடுகளுடன் கூடிய சர்ரியலிசத் தன்மையின் எதார்த்தப் புரிதல்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும் எதார்த்த தளத்தில் நின்று...

    போன பாரா படித்து முடித்ததும் உங்களில் யாரெல்லாம் மீண்டும் படித்தீர்களோ... அவர்களே வெகுஜன வாசகர்கள். அவர்களுக்கு சாதத்தைப் பிசைந்து ஸ்பூனில் வைத்து வாயில் ஊட்டிவிடும் அளவிற்கு எளிமையாக எழுதும் எழுத்தாளர்களில் ஒருவர்தான் செல்லம் ஜெரினா.

    இந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கும் எல்லாக் கதைகளிலும் நடமாடும் பாத்திரங்கள் எல்லாமே வாழ்வில் நீங்களும், நானும், எவரும் சந்திக்கும் சாதாரண எளிய மனிதர்கள்.

    அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அவர்களின் சிந்தனைகளும், பேசும் வசனங்களும் கூட நமக்கு அடுத்த வீட்டின் ஜன்னலுக்குள் எட்டிப்பார்க்கும் பிரமையை ஏற்படுத்துகின்றன.

    ஆனால் பிரச்சினைகளுக்கு சொல்லப்படுகிற அத்தனைக் கதைகளின் தீர்வுகளிலும் மனிதமும், அன்பும் நீயா? நானா? என்று போட்டிப் போடுகின்றன. படைப்பாளியின் மென்மையான மனதையும் சிந்தனைப் பக்குவத்தையும் பிரதிபலிக்கின்றன.

    அதற்காக நீதிக்கதைகள் போல இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் என்கிற மேடையில் நின்று மைக்கில் பேசும் பிரச்சாரத்தன்மையும் இல்லாமல் கதை நேர்த்தியுடன் நல்ல எண்ணங்கள் கதைகளுக்குள் பதுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன.

    அவற்றைச் சரியாக அடையாளம் கண்டு தம் ரசனையையும், சிந்தனையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு வாசகனுடையதே...

    செல்லம் ஜெரினா அடுத்தடுத்தும் நிறையவும் நிறைவாகவும் எழுதிவர... எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    *****

    சில அனுபவங்கள், சில சேதிகள், சில காட்சிகள், சில வார்த்தைகள், சில மனிதர்கள், சில சம்பவங்கள் ஒரு எழுத்தாளரிடம் உண்டாக்கும் பாதிப்புகளை எழுத்துக்களில் வெளிக்கொணர்ந்து, தான் கண்டு, கேட்டு, பார்த்து அனுபவித்த சுஹானுபவத்தை, வேதனையை, தன் வாசகரிடம் பகிர்ந்துகொண்டு, தன் பரவசத்தை, தன் தவிப்பை வாசகரை உணரச் செய்வதும், அன்றாட வாழ்க்கையை சகஜத்தன்மை யதார்த்தத்தோடு பிரதிபலித்து வாசகரை ஒரு விதஸ்வானுபாவத்தோடு தன்னிடம் ஒன்றாகச் செய்வதுமே ஒரு நல்ல சிறுகதையை தனித்து நிற்கச் செய்யும் என்பது என் அபிப்ராயம்.

    ஒரு நல்ல சிறுகதை எப்படி பிறந்து, என்ன செய்ய வேண்டும் என்பதை அழகாக சொல்கிறார் எழுத்தரசி சிவசங்கரி அவர்கள்.

    அன்புத் தோழி செல்லம் ஜெரினாவின் சிறுகதைகளும் ஏறக்குறைய இப்படித் தான் கருவும் உருவும் பெறுகின்றன. நான் கண்ணால் கண்ட காட்சிகளும், பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளும் தான் என்னை சிறுகதை எழுத தூண்டுகின்றன என்பது அவரது வாக்குமூலம்.

    ஏதோ காகிதத்தை நிரப்புகிறேன் என்று எழுதி தள்ளாமல் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை தன் எழுத்தில் வடிக்கிறார்.

    நான் இவரை கண்டுகொண்டது, ‘கோகுலம் கதிர்’ இல் பொறுப்பாசிரியராக இருந்தபோது தான், ஜெரினாவின் எழுத்து எனக்கு அறிமுகம். அவர் எழுதிய ஒரு சிறிய கட்டுரை எனக்கு எந்த வேலையும் வைக்கவில்லை. அப்படியே பிரசுரிக்க அனுப்ப ஏற்றதாக இருந்தது.

    உங்கள் எழுத்தில் ஒரு தெளிவு இருக்கிறது. சொல்லும் கருத்தில் ஒரு விஷய கனம் இருக்கிறது. நிறைய எழுதுங்கள். நிறைய படியுங்கள் என்று அலைபேசியில் சொன்னேன். அன்று முதல் அவரின் மதிப்பிற்குரியவனாகி விட்டேன் என்று நினைக்கிறேன்.

    அதன்பின் அவர் என்ன எழுதினாலும் எதை எழுதுவதாக இருந்தாலும் என்னிடம் அலைபேசியில் விவரிப்பார். இந்தக் கதை இப்படி முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கதையை யாருக்கு அனுப்பலாம் என்பது உள்பட என்னிடம் கலந்து பேசுவார். ஒரு நல்ல எழுத்தாளர் உருவாகிறார் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

    ‘தினமலர் வாரமலர்’ பொறுப்பாசிரியர் அந்துமணி அவர்கள் பெரும் படிப்பாளி. அவர் அவ்வளவு எளிதில் யாருக்கும் எழுத வாய்ப்பளிக்க மாட்டார். நன்றாக எழுதக் கூடியவர்கள். புதுமையாக சிந்திக்கக் கூடியவர்கள் என்பதை அறிந்த பிறகே எழுதுவதற்கு நல்ல வாய்ப்பளிப்பார்.

    செல்லம் ஜெரினாவின் சிறுகதைகள் அடிக்கடி தினமலர் வாரமலரில் இடம் பெறுவதற்கு காரணம். அந்தக் கதைக்கான கருவும் உருவும் மக்கள் மனதைத் தொடக்கூடியதாக இருப்பதால் தான் என்று நினைக்கிறேன்.

    திருமதி செல்லம் ஜெரினாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி பொம்மைச் சிறகுகள். இதில் ஒரு பக்கக் கதைகள் நிறைய இருக்கின்றன. அருமையான கதைகள்.

    சமீபத்தில் கலைமகள் நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றிருக்கும் செல்லம் ஜெரினாவை பாராட்டுகிறேன். அவரது எழுத்து பயணம் சிகரங்களில் சிறகடிக்க வாழ்த்துகிறேன்.

    சபீதா ஜோசப்

    *****

    என்னுரை

    எனதருமை வாசக கண்மணிகளுக்கு வணக்கம்! வாழ்த்துகள், மீண்டும் ஒரு இனிய தருணத்தில் உங்களுடன் பேசுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மறுபடியும் நன்றியினை இங்கு பதிவு செய்கிறேன்.

    கடந்த ஆண்டில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு, ‘மனசெல்லாம் மாயா’ வெளியாகி உங்கள் மனதில் இடம் பிடித்தது. இந்த ஆண்டின் புதுவரவாக ‘பொம்மைச் சிறகுகள்’ சிறுகதைத் தொகுப்பு உங்கள் கரங்களில் தவழ்கிறது.

    எழுதுவது ஒரு வரம் என்றால், அதை ஒரு புத்தகமாக பார்ப்பது இன்னும் ஒரு வரம். மலடி ஒரு தாயாவது போல சிறப்பான வரம். அதை இரண்டாம் முறை அடைய வைத்தது இறைவனின் பெருங்கருணை. பல்வேறு பணிச் சுமைகளுக்கு மத்தியில் இந்தக் கதைகளை படித்து, மிக அருமையான அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் திரைப்பட வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை வெளியிட்டு என்னை ஊக்குவித்த பத்திரிகைகளுக்கும் அதன் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    எனது இரண்டாவது புத்தகத்திலும், உங்களின் அன்புரை இடம் பெற வேண்டும் என்றதும், தோழமையுடன் தன்னுரை பதித்த இனிய நண்பர் பத்திரிகையாளர், எழுத்தாளர் சபீதா ஜோசப் அவர்களுக்கும் நன்றி.

    என்றும் அன்புடன்,

    ஜே.செல்லம் ஜெரினா

    *****

    தாயுமானவன்!

    என்னங்க! இப்போ சாருவுக்கு என்னா முடிவு பண்ணியிருக்கீங்க? ரேணுகா குரலை உயர்த்தினாள்.

    இப்ப என்ன செய்யணுங்கிறே...?

    ஏதாவது ஆசிரமத்துல கொண்டு போய் விட்டிரலாமுங்க... என்றாள் மெதுவாக.

    ரேணுகாவைத் திடுக்கிட்டு ஏறிட்டான் அவன். ஏன்! என்னடி சொல்றே... அஞ்சு வயசு குழந்தைய ஆசிரமத்துல விடறதா...? அதிர்ச்சி அப்பட்டமாக அறைந்தது குரலில்... வேற என்ன பண்றது? கார்த்தி வளர்ந்துவிட்டான். தன் வேலையைத் தானே செஞ்சுக்கிற அளவுக்குத் தயாராயிட்டான். ஆனால் சாருவுக்கு இப்போ ஒரு ஆள் தேவை. ரெண்டுங்கெட்டான் வயசு. கார்த்திக்காகத்தான் நாம ஜானகியை வரவழைச்சோம்... இப்போ சாருவை நாம் ஊருக்கும் அனுப்ப முடியாது. சாரு, ஜானகி பெத்த பிள்ளையும் இல்லை, சரி... அப்படியே சாருவை நாமளே வளர்க்கிறதாவே வச்சிக்கிடலாம். சாருவோட... கல்யாணம் யோசிச்சுப் பாருங்க... நான் சொல்றதுல இருக்கிற விபரீதமும் புரியும்... நியாயமும் புரியும்! எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் சாரு நமக்குச் சுமைதாங்க...!

    சந்திரன் யோசனையில் ஆழ்ந்தான். மகன் கார்த்திகேயனுக்கு 2 வயது இருக்குமா...? இரண்டரை இருக்குமா... ரேணுவுக்கு எப்பொழுதோ எழுதிப்போட்ட அரசு வேலைக்கு உத்தரவு வந்துவிட... வேலையை விடவும் மனசு இல்லாமல், குழந்தையை யாரிடம் விடுவது என்ற குழப்பத்திலும்... அல்லாடிய நேரம், ரேணுவின் மாமா, ஊரிலிருந்து ஜானகியை அனுப்பி வைத்தார். கணவனை இழந்தவள்... குழந்தை குட்டி இல்லை... வீட்டோடு இருப்பாள், நம்பகமானவள் என்று அவளை இவர்களிடம் அனுப்பி வைத்தார். ஆனால், வந்து சேர்ந்த ஜானகியின் கையில் மூன்று மாத சிசு இருந்தது. சந்திரனும், ரேணுவும் குழம்பிவிட்டனர்.

    அப்புறம் தான் விவரம் சொன்னாள் ஜானகி... நடு இரவில் இயற்கை உபாதைக்காக எழுந்துபோய் வந்தவள் இருக்கையில் குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது... ஜானகிக்கு... தன் இருக்கைதானா என்று சந்தேகமாயிருந்தது. அவளுடைய இருக்கைதான். ஒரு வேளை குழந்தையின் தாய் பாத்ரூம்

    Enjoying the preview?
    Page 1 of 1