Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Diyavukku Sandhegam
Diyavukku Sandhegam
Diyavukku Sandhegam
Ebook117 pages39 minutes

Diyavukku Sandhegam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு பண்டிகையையும் மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள். இவை சங்கப்பலகை எனும் குழுமம் நடத்திய போட்டிகளுக்காக எழுதப்பட்ட சிறப்புச் சிறுகதைகள். இவற்றில் "சுதந்திரா", "உயிர்த்தேன்... உயிர்த்தேன்!", "தியாவுக்கு சந்தேகம்" ஆகியவை பரிசை வென்றவை. இத்தொகுப்பை புஸ்தகா.காம் அழகுற வழங்க முன்வந்தமைக்கு மனமார்ந்த நன்றி. வாசகத் தோழமைகளின் தொடர் ஆதரவுக்கும் நன்றி.

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580135409508
Diyavukku Sandhegam

Read more from J. Chellam Zarina

Related to Diyavukku Sandhegam

Related ebooks

Reviews for Diyavukku Sandhegam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Diyavukku Sandhegam - J. Chellam Zarina

    http://www.pustaka.co.in

    தியாவுக்கு சந்தேகம்

    (பண்டிகைச் சிறுகதைகள்)

    Diyavukku Sandhegam

    (Pandigai Sirukathaigal)

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion there of may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சுதந்திரா...!

    2. வருஷம் ஒரு கொலை...!

    3. கருவறைக் கடன்...!

    4. பிச்சை புகினும்...!

    5. வலசை போகும் பறவைகள்...!

    6. உயிர்த்தேன்...! உயிர்த்தேன்...!

    7. சித்திர மொட்டுக்களே தீபங்களாய்...!

    8. தியாவுக்கு சந்தேகம்...!

    9. ஹாப்பி ந்யூ இயர்...!

    10. பண்டிகைச்சீர்...!

    1. சுதந்திரா...!

    1947

    ஆகஸ்ட் மாதம்

    பதினைந்தாம் தேதி

    நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த நேரம். இந்திய தேசமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. குழந்தைகள்கூட உறங்கவில்லை. வீடெங்கும் மாவிலைத் தோரணம். வாசல்தோறும் மாக்கோலம். வாழைமரங்களும் முகப்பில் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது மேலூரு. மதுரையருகே சற்றே உள்ளடங்கிய கிராமம். எல்லோர் முகத்திலுமே விகசிப்பு.

    வயதானவர்களுக்கோ பெருமை... அடிமையா பொறந்தாலும் சுதந்திர மண்ணில்தான் புதைக்கப்படுவேன் என்று கூன்போட்ட முதுகை நிமிர்த்தி நடக்க இளவட்டங்களோ நெஞ்சு நிமிர்த்தி கர்வங்காட்டினர். கன்னியரோ எண்ணை வைத்து அழுந்த சீவி பின்னலிட்டு அடியில் குஞ்சலம் வைத்து பூ வைத்துக் கொண்டு குங்குமப் பொட்டு குலுங்க கண்டாங்கிச் சீலையும் தாவணிக்கட்டுமாய் நடை பயின்றனர். குழந்தைகளுக்கோ குதூகலம் ஆரஞ்சு மிட்டாயும், கமர்கட்டும், தேன்மிட்டாயும், சீரக அரிசி மிட்டாயுமாய் கை பிசுபிசுத்தது. காசு செட்டியார் வீட்டுத் திண்ணையில் ஆச்சி தலைமையில் சூடாக கருப்பட்டியிட்ட கடுங்காபி விநியோகம் நடந்தது.

    ராமசாமி படையாச்சி வாழைக்கொல்லையினின்றும் வாழைத்தார் கொண்டுவந்து வைத்துக்கொண்டு நீட்டியவர்க்கெல்லாம் தந்தபடி இருந்தார். கோவிந்தசாமி நாய்க்கர் வெற்றிலைவைத்து தாம்பூலம் தந்தார்.

    பஞ்சாயத்து ஆபிசு வண்ணைக்காகித தோரணமும் பூச்சரமுமாய் பொலிந்தது. ஆபிசின் வலதுபக்கமாய் உயர்ந்த கொடிக்கம்பம் நிமிர்வுடன் நின்றது கொடி ஏற்றுவதற்குத் தோதாய்.

    சிலகுழந்தைகள் அதன் கீழே நின்று,

    "தாயின் மணிக்கொடி பாரிர்!

    அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரிர்"

    என்று பாடலிசைத்துக் கொண்டிருந்தனர். சில குழந்தைகள் பாரதமாதா போல் வேடமிட்டுக்கொண்டு கையில் மூவர்ணக்கொடியோடு வலம் வந்தனர்.

    சில இளைஞர்கள் அந்த வேளையிலும் சிலம்பம் சுற்றினர். சிலர் சுற்றி நின்று கைத்தட்டினர்.

    ஓரிடத்தில் வீரக்கட்ட பொம்மு கூத்து நடந்து கொண்டிருந்தது.

    இதெல்லாம் ஒருபுறமிருக்க நிறைசூலித் தாய்மார்கள் என் குழந்தை சுதந்திர இந்தியாவில் தான் ஜன்மிக்கவேண்டும் இன்னும் சிலமணி நேரங்களுக்கு எனக்கு வலி வந்துவிடக்கூடாதென வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தனர். பவளாயியும் கூட.

    முத்துப்பேச்சியின் மருமகள். அவளுக்கு நிறைமாதம். மருத்துவச்சி சொல்லிவிட்டாள் வயிறு வடிந்து இறங்கி விட்டதென்று... ஜனனம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாமென. பவளாயி அய்யனாருக்கு நேர்ந்து கொண்டாள்... வயிற்றிலிருந்த சிசுவிடம் பேரம் பேசினாள். எங்கண்ணு... இன்னும் செத்த நேரந்தேன்... சொதந்திரம் கிடைச்சிடும். சொதந்திரம் கிடைச்சதுமே இந்த மண்ணுலே ஒம் பாதம் படனும் எஞ்சாமி. ஆத்தா பேச்சை கேப்பியல்லோ...

    முத்துப்பேச்சியும் சிரித்துக் கொண்டாள். அவளுக்குமே உள்ளூர எண்ணம் தான். அவளின் காரைவீட்டு முன்னே கோலம் போட்டிருந்தது.

    கூடத்திலும் சாணி மெழுகி கோலமிட்டு பாரதமாதா படமொன்றை முக்காலியில் சாத்தினாற் போல வைத்திருந்தாள் தீபதூபமெல்லாம் வேறு... அந்த சின்ன வீடு களையுடனிருந்தது. சுவரோரமாயிருந்த கயிற்றுக் கட்டிலில் தருமன் படுத்திருந்தான். வெள்ளைக்காரன் எட்டி உதைத்ததிலிலிருந்து நெஞ்சாங்கூட்டில் மரணவேதனை. தும்மினாலும் இருமினாலும் வலி உயிர் போய் உயிர் வந்தது. சிலசமயம் மூச்சுக்கூடத் திணறியதுதான். நாட்டு மருத்துவரும் ஏதேதோ சூர்ணம் பொடியெல்லாம் தந்தாலும்வலி இருக்கயிருக்கக் கூடியதே தவிர மட்டுப்படவில்லை. தருமனுக்கு தன்னுடைய நாட்கள் எண்ணப்படுவதாகவே தோன்றியது.

    அவனுக்கிருந்தது இரண்டே ஆசைதான் ஒன்று சுதந்திரக்காற்றை நுரையீரலில் ஒருமுறையேனும் நிரப்பிக் கொள்ள வேண்டும். மகனோ மகளோ கண்ணால் பார்த்து விட வேண்டும். உடம்பு மிகவுமே க்ஷீணித்திருந்தது.

    இவன் அய்யனும் மனைவி பவளாயியின் அய்யனும் சேக்காளிகள்தான். இருவருமே பனையேறிகள். ஆனாலும் காந்திஜியெனும் காந்தம் இழுக்க போராளிகளாகி விட்டனர் பவளாயியின் ஆத்தா வைசூரியில் இறந்து இரண்டு வருடமாயிருந்தது. முத்துப்பேச்சி தான் பவளாயிக்குத் துணை. தன் மகன் தருமனுக்கு என்று மருமகளாய் பேசி வைத்திருந்தாள்.

    திருப்பூரில் குமரன் கொடி பிடித்தபோது அடுத்த வரிசையிலிருந்த தருமனின் அய்யனின் நெஞ்சில் குண்டு பாய்ந்து அங்கேயே உயிர் பிரிந்து போக பவளாயியின் அய்யன் காலில் அடிவாங்கி விழுந்து கிடந்து கடைசியில் முழங்காலுக்கு கீழே எடுக்க வேண்டியதாயிற்று. வீட்டிலிருந்தபடியே ஓலை முடைவதும் கூடை முடைவதுமாயிருந்தாலும் ரகசியக் கூட்டத்துக்கு இங்கிருந்து தகவல் போகும். நேதாஜியின் இந்திய தேசிய காங்கிரஸ் வானொலி தன் ரகசியசேவையை வழங்கிய வண்ணமிருந்தது அது. கைது செய்யப்படாதிருந்த தேசிய எழுச்சி வீரர்களை உற்சாகமூட்டும் விதமாய் இயங்கியது. நேதாஜியின் செயல்பாடுகள் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

    காந்திஜிக்கு இணையான பக்தியும் மரியாதையும் நேதாஜிக்கும் இருந்தது. முத்துப்பேச்சி இட்லிகடை போட்டிருந்தாள். வேகவைத்த இட்லிக்குள் பனையோலைத்துண்டு பயணமாகும். மிகமிக அவசரமெனில் வீட்டு வாசலை நிறைக்கும் கோலம் சேதி சொல்லும்.

    ஆம்!

    பூவுங்கொப்புமாய் பூந்தோட்டம் வாசலில் விழுந்தால் சந்திப்பு பூந்தோட்டத்தில் என்றும், கம்பிக்கோலத்தை வாசலில் அடைத்துப்போட்டால் காளிகோயிலில் சந்திப்பு எனவும் புள்ளிக்கோலமாய் இறைத்து வைத்து அல்லியும் தாமரையும்

    Enjoying the preview?
    Page 1 of 1