Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theera... Nilatheera...!
Theera... Nilatheera...!
Theera... Nilatheera...!
Ebook82 pages28 minutes

Theera... Nilatheera...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தீரன் சின்னமலை. தேசத்திற்காக போராடிய வீரன். சிறு பாளையக்காரன் "மைசூர்புலி" திப்புசுல்தானுடன் கை கோர்க்கிறான். குள்ளநரிக்கூட்டம் கும்பெனிக்காரர்களை முறியடிக்க செய்கிற சாகசங்கள் அளவற்றவை. தாய்நாட்டுப்பாசம் முன்னே வர பெண்மீது வைத்த நேசம் பின்னே போக... காதலைத் தள்ளி வைக்கும் மாவீரனின் மனங்கவர்ந்தவள் இந்த மண்ணுக்கும் மனதில் வரித்தவனுக்காகவும் புரிந்த சாகசங்களே தீரா... நில தீரா"வின் கதை!

வரலாற்று உண்மையோடு என்கற்பனையும் கலந்து கட்டிய கதம்பச்சரம். இதோ உங்கள் முன்னே மணக்க மணக்க... மண் வாசனை மணக்க... நட்பின் வன்மை மணக்க உயிர்ப்பூவின் வாசனை மணக்க.. தீரனின் வீரவேள்வியாக மணக்க... விரிகிறது. தீரா...நில தீரா!

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580135410990
Theera... Nilatheera...!

Read more from J. Chellam Zarina

Related to Theera... Nilatheera...!

Related ebooks

Related categories

Reviews for Theera... Nilatheera...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theera... Nilatheera...! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தீரா... நிலதீரா...!

    (குறுநாவல்)

    Theera... Nilatheera...!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    பொருளடக்கம்

    1.ஓலை பறந்தது

    2.வில்வ வனநாதர் ஆலயத்தில்...!

    3.கொங்கு படை

    4.மைசூர்ப்புலியின் மரணம்!

    5.திருமணக் கோலம்.

    6.கர்னல்பெய்லி தந்த விருந்து

    7.நிலமங்கையைக் காணோம்!

    8.நிலமங்கையின் வீரம்

    1.ஓலை பறந்தது

    காண்பதையெல்லாம் பொன்னிறமாய் மாற்றியே த் தீருவேன் என்று சங்கற்பம் எடுத்துக் கொண்டது போல் மேற்றிசைச் சூரியன் பொலிந்து கொண்டிருந்தான். நல்ல ஜாதி காளைமாடுகள் பூட்டிய அந்த வண்டிகள் முன்னும் பின்னுமாய் திரைபோட்டுக் கட்டப்பட்டிருந்தது. சற்றே உயரமாய் கூடுபோலெழும்பி மறைப்புடன் உள்ளேயிருப்பது வெளியே தெரியாத வகையில் ஓலையினாலும் வண்ண வண்ண வஸ்திரங்களினாலும் மூடப்பட்டிருந்தது.

    இன்னொரு வண்டியும் இதே போன்ற நேர்த்தியுடன் தொடர்ந்து வர முன்னும் பின்னுமாய் ஆறு வீரர்கள் குதிரைகளில் அந்த வண்டிகளின் ஓட்டத்திற்கேற்ப சென்றனர்.

    ஆஜாத்! இப்படி அன்னநடை போட்டால் சிவன்மலைக்குப் போய் சேர்ந்தாற்போல் தான். சங்ககிரியிலேயே இருக்கிறோம் நாம்.

    அரே மீரு! மே க்யா கரூங்? நீதானே நன்றாக உணவருந்திவிட்டு புரண்டு கொண்டிருந்தாய்.

    சரி சரி! வீண் பேச்சு வேண்டாம். ஜல்தி! ஜல்தி

    இன்னொருவன் அவசரப் படுத்தினான்...

    அதன்பின்பு வேகமெடுத்தது அந்தக் கூட்டம்.

    அதே சமயம்.

    அந்தப் பாதையில் வண்டி மாடுகளுக்கு நான்கடி முன்பாக ‘சரசர’ வென ஏழெட்டு ஈட்டிகள் மணலில் குத்திக்கொண்டு நிமிர்ந்து நின்று பாதையை மறைத்த வேலியாய் வானைப் பார்த்தன.

    மூக்கணாங்கயிறை இழுத்துப் பிடித்தான் வண்டிக்காரன்.ஆறு புரவி வீரர்களும் முன்னே வந்து திடீரென முளைத்த அந்த ஈட்டிச்சுவரைக் கண்டு திகைத்தனர்.

    குதிரை லகானை இழுத்துப் பிடித்தபடி சுற்றி முற்றி பார்வையை ஓட்டினான் மீரு என்பவன்.

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை

    அறுவரின் புரவிகளும் தாறுமாறாய் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்தன. அதன் மேலே பயணித்த மனிதர்களோ குழம்பினர்

    அப்போது

    பக்கங்களிலிருந்த மரங்களின் பின்னின்றும் புரவிகளின் கனைப்போசையும் சருகுகள் மிதிபடும் ஒலியும் கேட்க இருபுறமும் பார்வையையோட்டினர் அறுவரும்.

    செம்பழுப்பு புரவி மீதொன்றில் அமர்ந்திருந்தவன் இளம் பிராயத்தினனாய் இருந்தாலும் விழிகளில் தீக்ஷண்யம் சுடர் விட்டது.

    தலைக்குழல்கள் தோள்வரை சுருள்சுருளாய் புரண்டது. நெற்றியைத் தொட்டாற்போல் சுருள் குழலை ஒரு சிவப்புத் துகிலால் பாகையைப் போல் கட்டியிருந்தான்.இடையில் தொங்கிய நீளவாள் அவன் வீரத்தை கட்டியம் கூறியது. கையில் குத்தீட்டி ஒன்றும் கதிரொளியில் பளபளத்தது.

    இடுப்பையொட்டி நாலைந்து குறுவாட்களும் செருகப்பட்டு எந்நேரமும் அவன் அவற்றையும் பயன்படுத்தத் தயங்க மாட்டான் என்று சாட்சி கூறின,

    அவனுடனேயே மேலும் மூவர் வர

    ஆஜாத்தும் மீரும் மென்னகை பூத்தனர்.

    தாங்கள் அறுவர். வண்டியோட்டிகளையும் சேர்த்துக் கொண்டால் எண்மர். இவனோ சிறுவன். இவன் நம்மை எதிர்ப்பதாவது...?

    என்ற எண்ணம் தந்த செருக்கில்

    சிறுவனே! தவறு ...தவறு செய்கிறாய். இந்த வண்டி எங்கே போகிறது என்று தெரியுமா

    தெரியும்

    தெரிந்துமா இப்படி செய்கிறாய்? விளையாட்டுப்பிள்ளை என்பது சரியே

    ஹாங்...யார் விளையாட்டுப்பிள்ளை என்று பார்த்து விடுவோமே! வாளை எடுங்கள்

    ஆஜாத்தும் மீருவும் நகைத்தனர்.

    தம்பி! இது விளையாட்டு விஷயமில்லை. விளையாட நேரமுமில்லை. நாங்கள் செல்ல வேண்டும்

    மீரு நயம்பட பேசலுற்றான்.

    தம்பீ! இது மைசூர் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டும். நீ இப்...

    இது எங்கள் மக்களின் வரிப்பணம் வீரரே அதுவும் தெரியும். இது மைசூர் அரசாங்கம் வழியே பறங்கியரை அடையப் போகிற விஷயமும் தெரியும்.உங்களுக்கு உயிர்மேல் ஆசையிருப்பின் உடனடியாக இதை விட்டுவிட்டு உங்கள் வழியே சென்று விடுங்கள். பிறகு ....உங்கள் விருப்பம்

    மீருவின் பொறுமை பறந்து விட்டது

    என்னடா...சிறுவன் என்று பார்த்தால் மிக அதிகமாகப் பேசுகிறாய்? நாங்கள் ஓடுகிறோமா? நீயா என்று பார்த்து விடுவோம்.

    அவன் முடிக்குமுன்னே ஆஸாத்தும் மற்றவர்களும் பாய வந்தவனுடைய நண்பர்களும் வாளெடுக்க அந்த இடம் சிறு துவந்தயுத்தத்திற்கு இடம் தந்து ‘டணால் டணால்’ என்று வாட்களோடு வாட்கள் மோதும் ஒலியை எதிரொலித்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1