Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aatril Oru Kaal Setril Oru Kaal
Aatril Oru Kaal Setril Oru Kaal
Aatril Oru Kaal Setril Oru Kaal
Ebook326 pages2 hours

Aatril Oru Kaal Setril Oru Kaal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனதினால் ஆட்டிப்படைக்கப்படுபவன்தான் மனிதன். அதை நிலையில்லாதது. புரிந்து கொள்ள முடியாதது என்றெல்லாம் சொல்வார்கள். அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் பற்றி அவருடைய மகன் கூறியதாக ஒரு துணுக்கு உண்டு. 'ஒரு கல்யாணத்துக்குப் போனால், தாமே மணமகனாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார். இறந்தவர் வீட்டுக்குத் துக்கம் கேட்கப் போனால், தாமே அந்தப் பிணமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்.' மனவக்கிரத்துக்கு இது ஒரு 'சாம்பிள்.'

ஒருவருடைய மனதில் உருவாகும் எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையையே நடத்திச் செல்கிறது. வாழ்வது என்பது வேறு; வாழ்க்கை நடத்துவது வேறு. வாழ்வது தனிப்பட்ட ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டது. ஆனால் பலரைச் சார்ந்தும் அவர்களுடன் சேர்ந்தும்தான் வாழ்க்கை நடத்த முடியும். எத்தனை கோடி மக்கள் உள்ளனரோ அத்தனை கோடி 'கேரக்டர்'களும் உண்டு. அசாதாரணமான ஒரு 'கேரக்டரை' தேர்ந்தெடுத்து அவனுடைய மன ஓட்டங்களால் ஏற்படும் பாதிப்பை நிலைக்களனாகக் கொண்டு இந்த நவீனத்தை உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.

நந்து - நவீனத்தின் நாயகன். அவனேதான் வில்லனும். நல்லவன், புத்திசாலி, உயரவேண்டுமென்ற உத்வேகம் உள்ளவன். ஆனால் தன்முனைப்பும் நிலையில்லாத மனமும் கொண்டவன். அந்த மனம் அவனைக் குரங்காக ஆட்டிப் படைக்கிறது. அவனைச் சார்ந்துள்ளவர்கள் மனதைப் புண்படுத்துகிறது. தாய், தந்தையரையும் தாலிகட்டிக் கொண்டவளையும் தவிக்கச் செய்கிறது.

படிப்பவர்களை மஞ்சுவிடம் பரிவும் நந்துவிடம் ஆத்திரமும் ஏற்படக்கூடிய விதத்தில் கதையோடு இணைத்துச் செல்கிறார்.

அத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு, ஆறு வருடங்கள் தவிக்கவிட்டு, திடீரென்று ஒரு நாள் வந்து நிற்கும்போது பெற்றவர்களே அவனைப் புறக்கணிக்க வேண்டுமென்ற முடிவை எடுக்கும்போது, அதிகமாகப் பாதிக்கப்பட்டவளான மஞ்சு எடுத்த முடிவினால் அவள் தெய்வமாக உயர்ந்து விடுகிறாள். அவளது முடிவினால் ஏற்படக்கூடிய விளைவுகள் இன்னொரு கதைக்கு ஆரம்பமாக இருக்கலாம். ஆனால் கதையோட்டத்துடன் ஒன்றிப் போனவர்கள், பாத்திரங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், மஞ்சு பழிவாங்க வேண்டுமென்றுதான் விரும்பியிருப்பார்கள். அது நியாயமில்லை என்றும் கூறமுடியாது.

ஆனால், மஞ்சு பாரம்பரியப் பண்பாடு மிக்க இந்த மண்ணில் பிறந்தவள் அல்லவா? எனவே பாரதப் பெண்ணாக உயர்ந்து நிற்கிறாள்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580101804466
Aatril Oru Kaal Setril Oru Kaal

Read more from Sivasankari

Related to Aatril Oru Kaal Setril Oru Kaal

Related ebooks

Reviews for Aatril Oru Kaal Setril Oru Kaal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aatril Oru Kaal Setril Oru Kaal - Sivasankari

    http://www.pustaka.co.in

    ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

    Aatril Oru Kaal Setril Oru Kaal

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    பதிப்புரை

    மனதினால் ஆட்டிப்படைக்கப்படுபவன்தான் மனிதன். அதை நிலையில்லாதது. புரிந்து கொள்ள முடியாதது என்றெல்லாம் சொல்வார்கள். அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் பற்றி அவருடைய மகன் கூறியதாக ஒரு துணுக்கு உண்டு. 'ஒரு கல்யாணத்துக்குப் போனால், தாமே மணமகனாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார். இறந்தவர் வீட்டுக்குத் துக்கம் கேட்கப் போனால், தாமே அந்தப் பிணமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்.' மனவக்கிரத்துக்கு இது ஒரு 'சாம்பிள்.'

    ஒருவருடைய மனதில் உருவாகும் எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையையே நடத்திச் செல்கிறது. வாழ்வது என்பது வேறு; வாழ்க்கை நடத்துவது வேறு. வாழ்வது தனிப்பட்ட ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டது. ஆனால் பலரைச் சார்ந்தும் அவர்களுடன் சேர்ந்தும்தான் வாழ்க்கை நடத்த முடியும்.

    எத்தனை கோடி மக்கள் உள்ளனரோ அத்தனை கோடி 'கேரக்டர்'களும் உண்டு. அசாதாரணமான ஒரு 'கேரக்டரை' தேர்ந்தெடுத்து அவனுடைய மன ஓட்டங்களால் ஏற்படும் பாதிப்பை நிலைக்களனாகக் கொண்டு இந்த நவீனத்தை உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.

    நந்து - நவீனத்தின் நாயகன். அவனேதான் வில்லனும். நல்லவன், புத்திசாலி, உயரவேண்டுமென்ற உத்வேகம் உள்ளவன். ஆனால் தன்முனைப்பும் நிலையில்லாத மனமும் கொண்டவன். அந்த மனம் அவனைக் குரங்காக ஆட்டிப் படைக்கிறது. அவனைச் சார்ந்துள்ளவர்கள் மனதைப் புண்படுத்துகிறது. தாய், தந்தையரையும் தாலிகட்டிக் கொண்டவளையும் தவிக்கச் செய்கிறது.

    படிப்பவர்களை மஞ்சுவிடம் பரிவும் நந்துவிடம் ஆத்திரமும் ஏற்படக்கூடிய விதத்தில் கதையோடு இணைத்துச் செல்கிறார்.

    அத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு, ஆறு வருடங்கள் தவிக்கவிட்டு, திடீரென்று ஒரு நாள் வந்து நிற்கும்போது பெற்றவர்களே அவனைப் புறக்கணிக்க வேண்டுமென்ற முடிவை எடுக்கும்போது, அதிகமாகப் பாதிக்கப்பட்டவளான மஞ்சு எடுத்த முடிவினால் அவள் தெய்வமாக உயர்ந்து விடுகிறாள்.

    அவளது முடிவினால் ஏற்படக்கூடிய விளைவுகள் இன்னொரு கதைக்கு ஆரம்பமாக இருக்கலாம். ஆனால் கதையோட்டத்துடன் ஒன்றிப் போனவர்கள், பாத்திரங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், மஞ்சு பழிவாங்க வேண்டுமென்றுதான் விரும்பியிருப்பார்கள். அது நியாயமில்லை என்றும் கூறமுடியாது.

    ஆனால், மஞ்சு பாரம்பரியப் பண்பாடு மிக்க இந்த மண்ணில் பிறந்தவள் அல்லவா? எனவே பாரதப் பெண்ணாக உயர்ந்து நிற்கிறாள்.

    இந்த அற்புதமான நவீனத்தை உருவாக்கியுள்ள திருமதி சிவசங்கரி ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இந்த நூலை வாசகர்களுக்கு அளிப்பதில் பெருமைப்படுகிறோம்.

    1

    குளிர்...

    எமக் குளிர்...

    எலும்பில் ஓட்டை போட்டுப் புல்லாங்குழல் வாசிக்கும் குளிர்…

    ஜீப்பின் குலுக்கலில் சாய்ந்து விடாமல் இருக்க வேண்டி அழுந்தப் பிடித்துக் கொண்டிருந்த கம்பியின் ஜில்லிப்பு உள்ளங்கையில் தணலாய் சுட்டு எரித்தது.

    ஆனாலும் அத்தனையையும் மீறிக்கொண்டு மனசு குதிப்பது புரிந்தது.

    குஷிதான்...

    பின்னே?

    லேசில் வருமா இப்படி ஒரு வாய்ப்பு!

    தலையை லேசாக அண்ணாந்தால், துளி மேகம் இல்லாமல் நட்சத்திரங்களை மத்தாப்பூவாகச் சொரியும் கருநீலவானம்; அடர்ந்த காடுகளூடே பள்ளத்தாக்கில் ஜீப் செங்குத்தாய் செல்வதில், தோளிலும் முகத்திலும் தடவிக் கொடுத்த குங்கிலிய மரத்தோகைகள்...

    நம்பமுடியாத அமைதி…

    அதைக் கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ அமானுஷ்யமாய் குரல் கொடுக்கும் பறவை...

    ஓ!

    இயற்கையை நிர்வாணமாக உணரும்போது எத்தனை அற்புதமாக இருக்கிறது!

    முகமூடி அணியாத இயற்கை...

    இயற்கை என்னும் இளையகன்னி...

    வாய்வரை முணுமுணுப்பாக வந்துவிட்ட பாடலை நந்தகுமார் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

    மூச்சை வேகமாக விட்டாலேயே ஸோஹன்லால் முறைப்பான்; பாடினால் சும்மா இருப்பானா?

    காட்டெருமையை அடிப்பதற்காகக் கொண்டு வந்திருக்கும் டபிள்பேரல் துப்பாக்கியினால், கோபத்தில் தலையில் ஒன்று போட்டாலும் போட்டு விடுவான்!

    வேட்டைக்குச் செல்வதற்காக விசேஷமாய் தயாரிக்கப்பட்டிருந்த ஜீப் அது... முன்னால் ஓட்டுநர், பக்கத்தில் இன்னும் இருவர் உட்கார இடம். பின்பக்கம் சீட் எதுவும் கிடையாது. அரசியல்வாதி பயணிக்கும் ஜீப்பைப் போல, நின்றவாறு பிடித்துக்கொள்ள மூன்று பக்கங்களிலும் அழுத்தமான கம்பி... முன்பக்கத்தைப் பார்த்த கம்பிமேல் வரிசையாய் பொருத்தப்பட்ட மஞ்சள் விளக்குகள், எப்பேர்ப்பட்ட மூடுபனியையும் ஊடுருவும் வெளிச்சம் தரக்கூடிய பல்புகளுடன்.

    ஓட்டுநர் பக்கத்தில் குட்டியப்பன்; ஸோஹன்லாலின் வேலைக்காரன். அவருக்கும் அருகில் கதவுப் பக்கமாய் காட்டிலாகா அதிகாரி.

    பின்னால் ஸோஹன்லால், அவன் மனைவி புஷ்பா, நந்தகுமார், இன்னும் இரண்டு உள்ளூர் ஆட்கள், சுட்ட பிறகு மிருகங்களை ஜீப்பில் தூக்கிப்போட உதவியாய்...

    இரட்டைக்குழல் துப்பாக்கியைப் பக்கத்தில் குத்திட்டு நிற்க வைத்துவிட்டு, கையில் விளக்குடன் ஸோஹன்லால் வழிகாட்டிக் கொண்டிருந்ததை, சில நிமிஷங்களுக்கு நந்தகுமார் ஊன்றிப் பார்த்தான்.

    அதிபிரகாசம் தரக்கூடிய மூன்று லட்சம் காண்டில் சக்தி கொண்ட விளக்கு அது... இந்த மாதிரி வேட்டைக்கு எடுத்து வருவதற்காகவே தயாரிக்கப்பட்டது.

    புறப்படுவதற்கு முன்னால், ஸ்காட்சை இரு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றிக் குடித்த சமயத்தில், நந்தகுமாரை அருகில் உட்கார வைத்துக் கொண்டு உற்சாகத்துடன் ஸோஹன்லால் விளக்கினது நினைவுக்கு வந்தது.

    இதான் 'கேம்’முக்குப் போறது முதல் ட்ரிப்னு சொன்னீங்க... இல்ல நந்து? சரி, நா சொல்றத விவரமா கேட்டுக்கங்க. காட்டுக்குள்ள ஜீப் நுழையற வரைக்கும் வண்டில இருக்கறவங்க பேசலாம்; அதுக்கப்பறம் கூடாது... பேச்சு சத்தம் கேட்டுச்சுன்னா அனிமல்ஸ் ஓடிடும்... என் கையில் இந்த விளக்கை வெச்சுகிட்டு டிரைவருக்கு வழி காட்டுவேன். பின்னால நின்னுகிட்டு வண்டி பானெட் மேல அடிச்சு ஆட்டினா, 'போ'னு அர்த்தம்; பக்கவாட்டுல முன்னும் பின்னும் காட்டினா ரிவர்ஸ்ல போவான். நட்ட நடு ரோடுல செங்குத்தா விளக்கை அடிச்சா 'நிறுத்து’னு அர்த்தம். டிரைவர் என்கூட அடிக்கடி வேட்டைக்கு வந்து பழக்கப்பட்டவன். அவனுக்கு இதெல்லாம் அத்துப்படி... மெதுவாய் ஜீப் போயிகிட்டிருக்கறப்போ, காட்டுலே நா விளக்கை அடிச்சு மிருகம் எதனாச்சும் தெரியுதானு தேடுவேன். ஸ்பாட் பண்ணியாச்சின்னா, ஜீப்பை நிறுத்த சிக்னல் குடுத்திட்டு, ரைஃபிள்ல குறிபாத்து அடிப்பேன்...

    நந்தகுமார் கண்ணகல அவன் கூறியதை ஜீரணிக்க முயன்றான்.

    இஷ்டத்துக்கு வேட்டையாடறது நம்ப நாட்டுல சட்டப்படி குத்தம்தானே, ஸோஹன்?

    ஸோஹன்லால் துடையைத் தட்டி உரக்கச் சிரித்தான்.

    குத்தம்தான். 'போச்சிங்' - அதாவது அனுமதியில்லாத எடத்துல வேட்டையாடறது, ரொம்பப் பெரிய குத்தம்... பிடிச்சாங்கன்னா, விசாரிக்க! கிசாரிக்க எடம் தராம குண்டர்கள் தடுப்புச் சட்டத்துல உள்ளார தள்ளிடுவாங்க! ஜாமீன், அது, இதுனுகூட வாயத் திறக்க முடியாது...

    நந்தகுமாரின் கவலை அவன் முகத்தில் வெளிப்படையாய் தென்பட்டிருக்க வேண்டும். குனிந்து அவன் தோளைப் பற்றின ஸோஹன்லால், கண்ணைச் சிமிட்டி புன்னகைத்தான்.

    தண்டனையை நினைச்சு வீணா கவலைப்படாதீங்க, நந்து… அதான் காட்டிலாக்கா அதிகாரியே நம்மகூட வராரே! அப்புறம் ஈ காக்கா நம்ம மேல கையை வைக்க முடியுமா, என்ன? ஒருதரம் இப்படித்தான் வேட்டைக்கு வந்திருந்தப்ப, பைஸன்-காட்டெருமையை அடிச்சிட்டேன். ஹாலண்ட் அண்ட் ஹாலண்ட் டபிள்பேரல் கன்! கேள்விப்பட்டிருப்பீங்களே! விலை என்ன தெரியுமா? எழுபத்தையாயிரம்! இதோ... இதே துப்பாக்கிதான்... குட்டியானை மாதிரி இருந்தது. ஒத்தை குண்டுல சாஞ்சிடுச்சு... மலை மாதிரி கிடந்ததோட நாலு கால்களையும் தனித்தனியா வெட்டி, ஜீப்ல ஏத்தி, தலை, குடல் சமாசாரங்களை அங்கேயே குழி தோண்டி புதைச்சிட்டுக் கிளம்பறதுக்குள்ள, ரோந்து சுத்தர ஃபாரஸ்டர் ஒருத்தர் வந்துட்டார். எதிர்ல 'ஆ'னு கிடக்கற காட்டெருமையோட முண்டம், டார்ச் விளக்கும் அரிவாளுமா நாங்க, பக்கத்துலேயே ரேன்ஜர்! என்ன பண்ணுவான் அந்த ஃபாரஸ்டர்? எதிர்ல நின்ன ஆபீஸருக்கு சல்யூட் வெச்சிட்டு கம்முனு நகர்ந்துட்டான். வேற வழி? அன்னிக்கு அடிச்ச காட்டெருமைக் கறி, கிட்டதட்ட ஆயிரம் கிலோ இருக்கும்... அடுத்த நாலு நாளும் ஊர் பூரா, அத்தனை காட்டிலாக்கா ஆளுங்க வீட்டுலேயும் காட்டெருமைக் கறிதான்...

    தன் சாகசத்தை விவரித்தவன், இன்னும் ஒரு பெக் 'விஸ்கி' ஊற்றினான். ரசித்துக் குடித்தான். பின் ஏதோ நினைத்துக் கொண்டு 'பச்' என்று எரிச்சலுடன் சூள் கொட்டினான்.

    நம்ப நாட்டுலதான் இந்த வேண்டாத சட்டம், தில்லு முல்லு எல்லாம். ஆஃப்ரிக்காலே, கீன்யா, தான்ஸானியா நாட்டுல உலகத்துலேயே உசத்தியான வேட்டைக்காடுகள் அந்தந்த கவர்மெண்டே அருமையா நடத்துது. போன வருஷம் என் கஸின் அங்க போய்வந்துட்டு, இன்னமும் கதைகதையா சொல்லிட்டிருக்கான். அங்கெல்லாம் எந்த மிருகத்த அடிக்கணுமோ அதுக்கு இத்தனை டாலர்னு கட்டிட்டா, ஷிகார் கூட வந்து சலாம் வெச்சு நம்பளை அழைச்சிட்டுப் போவான். என் கஸின் திமிரா யானையை அடிக்கணும்னு பணம் கட்டிட்டுக் கிளம்பிட்டான்... கூடவே ஷிகார். நாள் பூரா சுத்தினப்பறம் வகையா ஒரு தனி யானை மாட்டிகிச்சாம்... இவங்களைப் பாத்து ஆவேசமா சார்ஜ் பண்ணிகிட்டு வர்றப்போ, என் கஸினுக்கு கையும் ஓடலியாம். காலும் ஓடலியாம். சரி, இன்னிக்குத் தொலைஞ்சோம்னு தீர்மானம் பண்ணிகிட்டு நிக்கறானாம்! சுமார் இருவது அடி இருக்கறப்போ ஷிகார் 475 மேக்னம் ரைஃபிளால யானையோட நெத்திப் பொட்டுல ஒத்தை குண்டு அடிக்க, நம்பமாட்டீங்க, யானை அத்தனை வேகத்துலேயும் ஒரு அடி பின்னால போயிட்டு தொப்புனு பஞ்சு மூட்டை மாதிரி விழுந்திச்சாம்… ஷாட்டுனா அது ஷாட்! நாம்பளும் அடிக்கறோமே... தத்திகணக்கா! நா விசாரிச்சு வெச்சிட்டேம்பா... ஒரு ஆளுக்கு 15000 டாலர்தானாம்… கட்டிட்டுப் போயிட்டம்னா ரெண்டு வாரத்துக்கு இடம், சாப்பாடு, போக்குவரத்து எல்லாம் அவன் பாத்துப்பான். வர்ற சீஸனுக்கு நானும் புஷ்பாவும் தான்ஸானியா போகப் போறோம். நீங்களும் சேர்ந்துக்கறீங்களா?

    கையிலிருந்த விஸ்கி கிளாஸை மேஜை மேல் வைத்து விட்டு, மனசுக்குள் குட்டியாய் கணக்குப் போட்டுப் பார்த்தான். பதினைந்தாயிரம் இண்டு பதிமூன்று; கிட்டதட்ட லட்சத்து அறுபதாயிரம்! அடேங்கப்பா! ஸோஹன்லாலுக்கு வேண்டுமானால் இந்த மாதிரி பணம் கிள்ளுக்கீரையாக இருக்கலாம்; ஆனால் எனக்கு?

    ம்ஹூம்... இந்த மாதிரி 'ராஜ விளையாட்டெல்லாம்' நமக்குக் கட்டுப்படியாகாது. பதிலுக்காகக் காத்திருக்கும் நண்பனை ஏறிட்டு, சமாளிக்கும் விதத்தில் சிரித்தான். பின், அதுக்கென்ன... வந்தா போச்சு... என்று அசட்டுச் சிரிப்புடன் கூறி, பேச்சை மாற்றினான்.

    சுத்தியும் காடா இருக்கறப்ப இப்படி லைட் அடிச்சு மிருகங்களை ஸ்பாட் பண்றது கஷ்டம்தானே, ஸோஹன்?

    ஸோஹன்லால் தலையைப் பின்னுக்குத் தள்ளி, அலட்சியமாய் சிரித்தான்.

    என்ன கஷ்டம்? லைட் வெளிச்சத்துல மிருகத்தோட கண்ணு பளபளனு மின்னும்; அத வெச்சே புரிஞ்சிக்கலாம். விளக்கை அடிச்சதும் அது எந்த மிருகமானாலும் அப்படியே செயலிழந்து நின்னுடும். வேற எங்கயும் பாக்கத் தெரியாம, விளக்கையே உன்னிச்சு பாக்கறதால, நமக்கு வேலை சுளுவாயிடும். அப்படி ஸ்பாட் பண்ணிட்டப்பறம் புஷ்பா கிட்ட விளக்கைக் குடுத்துடுவேன். அவ விளக்கு காட்ட, நா சுட்டுடுவேன். ஈஸி!

    நந்தகுமார் பிரமித்து உட்கார்ந்திருக்க, ஸோஹன்லால் தொடர்ந்தான். கண்ணு நீலமா பளபளத்துச்சுன்னா, பெண் மான்; சிவப்பா ஜொலிச்சுதுன்னா, ஆண் மான்னுகூட புரிஞ்சுகிட்டு, தேவையானத அடிப்பமே...

    மீண்டும் தலையைச் சாய்த்து அவன் அட்டகாசமாய் சிரிக்க, இப்போது புஷ்பாவும் அவனுடன் சேர்ந்து கொண்டாள்.

    புஷ்பா...

    எத்தனையோ ஊர்களில் எத்தனையோ பெண்களை நந்தகுமார் பார்த்திருக்கிறான்தான்... படித்தவர்கள், நாகரிகமானவர்கள், அழகானவர்கள், துருதுருப்பானவர்கள் என்று விதவிதமாய்…

    ஆனாலும், வேலை, வேலை என்று புதுசு புதுசாய் தொழிலைக் கற்றுக் கொள்வதில் புத்தி பூராவும் லயித்திருந்ததாலோ என்னவோ, பெண்களை இதுநாள்வரை அலாதியான ஈடுபாட்டுடன் கவனிக்க நினைத்திராத நந்தகுமாரை, புஷ்பாவிடம் காணப்பட்ட தனித்தன்மை இரண்டாம்தரம் பார்க்கத் தூண்டியது நிஜம்.

    ஐந்தடி ஐந்தரை அங்குலம் உயரம். இரண்டு கைகளில் பிடித்துவிடக்கூடிய இடுப்பு. பிடிக்கமுடியாத மார்பு. வெட்டிவிடப்பட்டுக் காற்றில் எகிறிக் குதித்த குட்டைத் தலைமுடி, அதிக மேக்கப் இல்லாத வழவழ முகம். கச்சிதமான ஷேப்பில், காப்பர் நிற நெயில் பாலிஷுடன் பளபளத்த கை, கால் நகங்கள்.

    முதல் நாள் பார்த்தபோதே, நந்தகுமாரைத் தன் கவர்ச்சியான தோற்றத்தாலும் வித்தியாசமான பேச்சு, சிந்தனை, நடத்தையாலும் புஷ்பா பாதித்துவிட்டாள்.

    பெண் விடுதலை, பெண்களுக்குச் சுதந்திரம், எல்லாத்துலேயும் உரிமைன்னு சும்மா வாய் கிழிய பேசினா மட்டும் பெண்கள் நிலை உயர்ந்திடுமா? இல்ல... முதல்ல பெண்களை மதிக்க, அவங்களுக்கு மரியாதை குடுக்க இந்தச் சமுதாயம் கத்துக்கணும். அந்த மரியாதை கிட்டறவரைக்கும் பெண்கள் சத்தியமா எந்த விதத்துலேயும் முன்னேற முடியாது! அலி மஸ்ரூரின்ற பிரபலமான ஆப்பிரிக்க எழுத்தாளர், 'பெண்கள மனைவியா மகளா காதலிக்கவும், தாயா தங்கையா பாதுகாக்கவும் கத்துகிட்ட நாங்க, அவளை ஒரு மனுஷியா மதிக்கத் தவறிட்டோம்'னு சொல்றது நம்ம நாட்டுக்கும் பொருந்தும்னு நினைக்கறேன். ஒரு பக்கம் 'சக்தி சொரூபம்'னு தலைமேல் வைச்சுக் கூத்தாட வேண்டியது, இன்னொரு பக்கம் அவளை வெறும் போகப் பொருளா, தேவை இருக்கறப்போ உபயோகப்படுத்தற ஜடப்பொருளா, அடிமையா நடத்தி, அடி உதைனு அதலபாதாளத்துல தள்ள வேண்டியது.. ச்சே.. ரெண்டுமே தப்புப்பா! வொய் காண்ட் வீ ஸ்ட்ரைக் எ ஹெல்தி பாலன்ஸ்? ம்?

    உணர்ச்சிவசப்பட்டுப் புஷ்பா பேசி நிறுத்த, எதிரில் அமர்ந்திருந்த நண்பர்களை முந்திக்கொண்டு பெருமையுடன் ஸோஹன்லால் கையைத் தட்டி 'ப்ரேவோ' என்று பாராட்டினான்.

    அதெல்லாம் அந்தக் காலம், புஷ்பா. நீங்க சொல்ற மாதிரி இப்ப பெண்கள் அடிமையும் இல்ல. அடிபடவும் இல்ல... வீட்டுக்கு வீடு சம்பாதிக்கற பெண்கள் அதிகமாயிட்டாங்க... நாம சம்பாதிக்கறோம்கற திமிர்ல கன்னா பின்னான்னு நடந்துக்கறவங்கதான் அதி…

    பேசிய நண்பனை முடிக்க விடாமல் புஷ்பா வேகமாய் குறுக்கிட்டாள். ஸாரி, சுந்தர். ஏதோ இங்க அங்க தென்படற எவளையாவது பாத்துட்டு ஒட்டுமொத்தமா சாடாதீங்க... படிப்பும் சம்பாத்தியமும் ஒரு பெண்ணுக்குத் தன்னம்பிக்கையைக் குடுக்கும்தான் - நா மறுக்கல... ஆனா அதுமட்டும் போதாது... என் சிநேகிதி எம்.காம். படிச்சிட்டு அக்கௌண்டன்டா ஐயாயிரம் ரூபா சம்பாதிக்கறா... புருஷன், இரண்டு குழந்தைங்க... இன்னிக்கும் புருஷன் குடிச்சிட்டு வந்து கண்டபடி கத்தறான், சிகரெட்டால அவளைச் சுடறான்... 'மரியாதை இல்லாத தாம்பத்தியம் எதுக்கு, உதறிட்டு வெளிய வா'னு சொன்னா, பயப்படறா... இந்தச் சமுதாயம் கேலி பண்ணுமேனு நடுங்கறா... இப்ப என்ன சொல்றீங்க? ஆக, பெண்கள் முன்னேறணும்னா முதல்ல அவங்கள சின்ன வயசுலேந்தே 'டீ கண்டிஷன்' செஞ்சு, தனக்குத்தானே மரியாதை குடுத்துக்கவும், அனாவசியச் சட்டதிட்டங்களைக் கண்டு பயப்படாம இருக்கவும் பழக்கணும். அப்பத்தான் நிமிர்ந்து நின்னு தவறுகளைப் புரிஞ்சிக்கவும் அவசியம் இருந்தா தட்டிக் கேக்கவும் அவளால முடியும்! நிலைமை இப்படி இருக்கறப்போ, நீங்க என்னடான்னா...

    அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஸோஹன்லால் எழுந்தான். வெல்டன் டார்லிங்… பாயிண்ட் பாயிண்டா பிச்சிட்டே… என்று பாராட்டிவிட்டு, ஹேய் பேரர்... என் பெண்டாட்டிக்கு ஒரு கிளாஸ் 'ஷெர்ரி' கொண்டாப்பா! என்று சிப்பந்தியிடம் உத்தரவிட்டான்.

    ஜிம்கானா கிளப்பின் புல்வெளியில், முந்தின மாசம் நண்பன் ஒருவனால் ஸோஹன்லால், புஷ்பா தம்பதி அறிமுகப்படுத்திவைக்கப்பட்ட அந்த நிமிஷத்தில், அவர்களது பேச்சு, சிரிப்பு, நடத்தையால் ஈர்க்கப்பட்ட நந்தகுமார், 'இருந்தால் இப்படிப்பட்ட கணவன் மனைவியாக அல்லவா இருக்க வேண்டும்' என்கிற முடிவுக்கு வந்துவிட்டான்.

    அதன்பின், அடுத்தடுத்து சில சந்திப்புகள்... கிளப்பில், ஒரு விருந்தில், ஒரு முறை ஸோஹன்லால் வீட்டில்...

    ஒவ்வொரு முறையும் பாதிப்பு ஆழமாக, 'முதுமலை பக்கத்துல வேட்டைக்குப் போறோம்... வரீங்களா?' என்று இரண்டு நாட்கள் முன் கிளப்பில் ஸோஹன்லால் கேட்டதற்காகவே காத்திருந்த தினுசில், நந்தகுமார் கிளம்பி விட்டான்.

    கோயமுத்தூர் வரை விமானப் பயணம்.

    விமானக்கூடத்தில் சென்னையிலிருந்து வேலையாள், ஜீப்புடன் டிரைவர் வந்து காத்திருந்தான். ஸோஹன்லாலும் புஷ்பாவும் மாறிமாறி ஊட்டிவரை ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தபோது, நந்தகுமாரின் மதிப்பில் புஷ்பா ஜிவ்வென்று உயர்ந்து போனாள்.

    புஷ்பா எம்.ஏ. படித்திருக்கிறாள். கார் ரேஸில் கலந்து கொண்டு இரண்டாவது ஸ்தானத்தைத் தட்டி வந்திருக்கிறாள். இமாலயக் காடுகளில் ட்ரெக்கிங் செய்திருக்கிறாள். இன்னும் இன்னும்...

    ஒரு மாசப் பழக்கத்தில் அரை மணி, ஒரு மணி என்று பார்க்கும்போது பாதி பேச்சு, புதுசாய் வெளியான சினிமா, கையிலிருந்த ட்ரிங்க், அடுத்தவர் பற்றின வம்பில் சென்று விட்டதில், வெளிவராத விவகாரங்கள் இப்போது ஒரு நாள் நெருக்கத்தில் தெரியவர, நந்தகுமார் அசந்துதான் போனான்.

    என்ன கெட்டிக்காரத்தனம்!

    என்ன நாகரிகம்!

    என்ன துணிச்சல்!

    என்ன தெளிவான சிந்தனை!

    பாரதி கண்ட புதுமைப்பெண் என்று யார்யாரையோ குறிப்பிடுகிறார்களே, அவர்கள் புஷ்பா மாதிரியான பெண்களைக் காணாத மடையர்களாகத்தான் இருக்க வேண்டும்.

    புதுமைப்பெண் என்றால், இவளல்லவோ புரட்சிகரமான புதுமைப்பெண்!

    எனக்கு வருபவள் இந்த புஷ்பா மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? எதற்கும் அஞ்சாதவளாய், துசுக்கென்றால் கண்கள் கலங்காதவளாய், வேட்டைக்கு வரக்கூடத் தயங்காதவளாய், பத்துப் பேர் நடுவில் புத்திசாலித்தனமாய் பேசக்கூடியவளாய்… அப்புறம்...

    சின்னக் குலுக்கலுடன் ஜீப் நிற்க, நந்தகுமார் அவசரமாய் என்ன என்று கேட்கும் பாவனையில் தலையைத் திருப்பினான்.

    2

    எங்கோ உட்கார்ந்திருந்த ஆண் தவளை 'கொட கொடோ கொட்' என்று கர்ண கடூரமாய் ஜோடியை அழைத்தது.

    கண்காணாமல் மறைந்திருந்த பறவை ஒன்று 'டுட்டு... ஊ' என்று குரல் கொடுத்து அடங்கியது.

    ராக்கோழிகளின் உச்சஸ்தாயி கத்தல்...

    எந்த ஓசையாலும் கவரப்படாத நந்தகுமார், எட்டி நண்பன் என்ன செய்கிறான் என்று கவனித்தான்.

    நட்டநடு ரோட்டில் நிற்கச் சொல்லும் விதமாய் விளக்கைச் செங்குத்தாய்க் காட்டின ஸோஹன்லால், வேகமாய் விளக்கைப் புஷ்பாவிடம் கொடுத்துவிட்டு, இரட்டைக்குழல் துப்பாக்கியை எடுத்து அதில் எல்.ஜி. தோட்டாவைப் போட்டான். சில நொடிகளுக்குள் துப்பாக்கியைத் தயார் செய்தவன், வலது பக்கமாய் புஷ்பா விளக்கடித்துக் காட்டிய

    Enjoying the preview?
    Page 1 of 1