Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puriyatha Arthangal
Puriyatha Arthangal
Puriyatha Arthangal
Ebook236 pages2 hours

Puriyatha Arthangal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

குடும்பங்களில் காணும் போலித்தனங்களையும், சமூக அமைப்பில் காணும் பாசாங்குகளையும் கிழித்துக் காட்டுக்கிறது இப்புதினம். காரண காரியத்தின் சுழற்சி இம்மி பிசகாமல் விஞ்ஞான கதியில்தான் இயங்குகிறது. இந்தப் பேருண்மை மனித வாழ்க்கைக்கும் தன்மையாகப் பொருந்துகிறது. இதைப் புரிந்து கொண்ட கதைநாயகி மாலதிக்கு புன்னகைதான் வருகிறது இறுதியில். புரிந்த விஷயம் எது.. அதில் புரியாத அர்த்தம் எது.. அவரவர் வாழ்க்கை அவரவர் பார்வையின்படி!
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580125406044
Puriyatha Arthangal

Read more from Vaasanthi

Related to Puriyatha Arthangal

Related ebooks

Reviews for Puriyatha Arthangal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puriyatha Arthangal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    புரியாத அர்த்தங்கள்

    Puriyatha Arthangal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    ஜன்னல் வழியே ஊதா நிற போகன்வில்லா தெரிந்தது. ஊதாவுக்கிடையில் நளினியின் நீல நிற ஸ்கூல் பஸ் தெரிந்தது. அது, முனை திரும்புகிறவரை பார்த்துவிட்டு மாலதி குளிக்கச் சென்றாள்.

    குளிர்ந்த நீரை மொண்டு மொண்டு விட்டுக்கொள்கையில் அப்பாவின் ஞாபகம் வந்தது; இரண்டு மாதங்களாகத் தினமும் இந்த நேரத்துக்கு வருகிறது. வந்து, இரவு படுக்கும் வரை ஒரு மெல்லிய புகைமூட்டமாய் நெஞ்சை ஆக்கிர மிக்கிறது. அவளுள் ஏற்பட்டுப்போன சூன்யத்தை நினைவு படுத்துகிற மாதிரி...

    ‘நா குழந்தையை பஸ் ஸ்டாப்புக்கு அழைச்சுண்டு போறேன் மாலு, நீ உன் வேலையைப் பாரு!’

    இரண்டு மாதங்களுக்கு முன் வரை அப்பா தினமும் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்.

    அவள் அவசரமாகத் தன்னை சமாளித்துக்கொண்டு நீரை மொண்டு மொண்டு விட்டுக்கொண்டாள். இப்பொழுதெல்லாம் கண்ணில் நீரே வருவதில்லை நல்ல வேளையாய்; அப்பாவின் டிரெயினிங்கோ, எதிர்ப்பட்ட அதிர்ச்சிகளைத் தாங்கித் தாங்கி மனசு ஷாக் அப்ஸார்பராகப் போய்விட்ட காரணத்தாலோ...

    கந்தனென்ற பெயரானிடங் காதல் கொண்டேன் தோழி...

    அத்தையின் குரல் கணீரென்று ஒலித்தது. பெங்களூர் ரமணியம்மாள் சாயலில் ஒரு உற்சாகம் கொப்புளித்தது.

    கூப்பிட்டவுடன் கிராமத்திலிருந்து வந்த அத்தையும், அதிக நாள் இங்கு இருப்பாள் என்று நிச்சயமில்லை. டில்லி குளிரு எனக்குத் தாங்குமாடி என்று இப்பொழுதிருந்தே பலக்க சந்தேகப்படுகிறாள். கோவில், குளம், பஜனை என்று பழக்கப்பட்ட அத்தைக்கு, அருளில்லாத இந்த நகரத்தில் எப்படி ஒட்டும்? அத்தையும் கிளம்பிப்போய்விட்டால் என்ன செய்யப்போகிறோம்?

    லேசாகக் கஞ்சி போடப்பட்ட கைத்தறிப் புடவையைக் கட்டிக்கொண்டு, கண்ணாடியின் முன் நின்றபோது, குளித்து விட்டுவந்திருந்த உடம்பு தகதகத்தது. கன்னங்களில் இளம் சிவப்பு மினுமினுத்தது. திருத்தமான புருவங்களுக்கிடையே அவள் ஒரு சின்னச் சாந்துப் பொட்டை இட்டுக் கொண்டாள்.

    ‘தன்னந்தனியானவற்கு துணையாவான் தோழி

    தன்னை யற மறந்தாரையும் தான் மறவான் தோழி’

    அவள் மெல்லிய புன்னகையுடன் சமையலறைக்கு விரைந்தாள்.

    சமையல் மேடையில் ஒரு கையால் தாளம் போட்டுக்கொண்டு, இன்னொரு கையால் அடுப்பில் எதையோ கிளறிக்கொண்டிருந்த அத்தையைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

    இப்போதைக்கு நீங்க என்னை மறக்காம இருந்தா போதும் அத்தே!

    அத்தை, பாட்டை நிறுத்தி, அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

    சமையல் ரெடி, வா!

    அருகிலிருந்த மேஜைமேல் எல்லாவற்றையும் சுறுசுறுப்புடன் வைத்தபடியே,

    நல்ல தெல்லாந் தன்னிடத்தே கொண்டவன்டி தோழி என்று பாடினாள்.

    இந்தப் பாட்டு தான் எனக்கு மருந்து தெரியுமோ? என்றாள்.

    ஸைக்கோத்தெரப்பிம்பா இங்கிலீஷ்லே!

    அது என்னவோ எனக்குத் தெரியாது. அது மாத்திரம் இல்லேன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சுப் போயிருக்கும்!

    நா இப்ப வேலைக்குப் போற மாதிரி!

    அத்தை பதில் ஏதும் சொல்லாமல், சற்று நேரம் யோசனையுடன் பரிமாறினாள்.

    நீ வேலைக்குப் போறது அத்தனை சுலபமா எனக்குத் தோணல்லே!

    மாலதி சிரித்தாள்.

    வேலை-செஞ்சாத்தான் சம்பளம் கிடைக்கும் அத்தே!

    நீ வேலைக்குப் போறதே அனாவசியம் என்று தனது வழக்கமான பல்லவியை அத்தை ஆரம்பித்தபோது, மாலதி கைப்பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.

    எனக்கு இங்கே இருக்கிறது கஷ்டம் என்கிறதுக்காக நா சொல்லல்லே மாலு!

    எனக்குப் புரியறது அத்தே, ஆனா தஞ்சாவூர்லே உக்காந்துண்டு என்னாலே வெட்டிப் போது போக்க முடியாது. நல்ல ஆளாத் தேடிண்டிருக்கேன். குளிர்காலம் ஆரம்பிக்கறதுக்குள்ளே உங்களை அனுப்பிச்சுடறேன்.

    எந்த ஆளை இந்தக் காலத்திலே நம்ப முடியும் மாலு?

    யாரையாவது நம்பறதைத் தவிர எனக்கு வேற வழியில்லே!

    அவள் கிடுகிடுவென்று படி இறங்கி பஸ் ஸ்டாப்புக்கு விரைந்தாள்.

    ஆபீஸில், தெரிந்தவர்களிடமெல்லாம், ‘வேலைக்கு ஆள் வேண்டும்’ என்று செல்லியாகிவிட்டது. இதுவரை யாரும் கிடைத்தபாடில்லை. குளிர்காலம் ஆரம்பிப்பதற்குள், யாராவது கிடைத்தால், அத்தையை, நிம்மதியாக, தஞ்சாவூருக்கு அனுப்பிவிடலாம்.

    ஆபீஸ் செல்பவர்களுக்கான ஸ்பெஷல் பஸ்ஸில் எல்லோருமே அவரவர் யோசனைகளுடன் மௌனமாக அமர்ந்திருந்தார்கள், தங்கள் பாரத்தை தாங்களேதான் சுமக்கவேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டாற்போல.

    ‘நானும் அப்படி நிச்சயித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

    ‘நா இருக்கேம்மா, நீ எதுக்குக் கவலைப்படறே?’ என்று சர்வ நிச்சயமாய்ச் சொன்ன அப்பாவே பொசுக் சென்று முன்னறிவிப்பில்லாமல் ஏமாற்றி விட்டார்...

    ஆபீஸ் கட்டடத்தை அடைந்ததுமே பழைய யோசனைகள் எல்லாம் மெல்ல விலகின, இது வேறு உலகம் என்கிற பிரக்ஞையில்.

    ஹலோ மாலதி! என்று பெரிய புன்னகை செய்தாள் டைப்பிஸ்ட் ரேகா மல்ஹோத்ரா. தோள் வரை விரிந்திருந்த கூந்தல் மருதாணி சிவப்பில் பளபளத்தது.

    ஹல்லோ மிஸஸ் மல்ஹோத்ரா நேற்று ஏன் நீங்கள் ஆபீஸுக்கு வரவில்லை?

    என் பிள்ளைக்கு ஜூரம். இன்றும் இருக்கிறது. என் கணவர் லீவெடுத்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் யாரும் துணைக்கில்லாமல் நாங்கள் மாற்றி மாற்றி ட்யூட்டி பார்க்கிறோம்!

    என் அத்தை ஊருக்குப் போய்விட்டால், நான் ஒருத்தியேதான் ட்யூட்டி பார்க்கவேண்டும் மிஸஸ் மல்ஹோத்ரா!

    துணையைத் தேடிக்கொள் என்றால் நீதான் பேசாமலிருக்கிறாய்!

    மாலதி பதிலே சொல்லாமல் தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்.

    இவர்கள் எல்லாம் எத்தனை சுலபமாக விடைகள் தருகிறார்கள்! பிரச்னை அவர்களைப் பாதிப்பதாக இருந்தால் இத்தளை சரளமாகத் தீர்த்துவிடுவார்களா?

    மேஜையின் மேல் புதிதாக லைப்ரரிக்கு வந்திருந்த புத்தகங்கள் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்தன. தன் யோசனைகளைப் பலவந்தமாக அப்புறப்படுத்திவிட்டு, அன்றைக்கு எடுக்கவேண்டிய குறிப்புகளுக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கையில், லைப்ரரியில் அங்கங்கே உட்கார்ந்திருந்த ஆண்களின் பார்வை தன்மேல் பதிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். அன்றாடம் நிகழும் இந்த நிகழ்ச்சிக்குப் பழக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரத்துப் போன அலட்சியத்துடன் அவள், வந்திருந்த புத்தகங்களைப் பிரித்தாள்.

    அந்த்வான் ஸெயின்த் எக்ஜுபரியின் ‘குட்டி இளவரச’னின் ஆங்கில மொழிபெயர்ப்பு இருந்தது. ஆசிரியரே வரைந்திருந்த சித்திரத்தில் அவள் லயித்திருக்கையில்,

    குட் மார்னிங்! என்று குரல் கேட்டது.

    எதிரில் ப்ரொஃபஸர் சர்மா நின்றிருந்தார், வசீகரமான சிரிப்புடன். அவளுள் ஒரு சின்ன மகிழ்ச்சி ரேகை பரவிற்று.

    குட் மார்னிங்! என்று அவள் புன்னகைத்து மெல்லிய குரலில் சொன்னபோது, யூ ஆர் ப்யூட்டி ஃபுல்! என்றார் சர்மா மிருதுவாக.

    அவளுக்கு மட்டும் காது கேட்கிறாற்போல் வருடிய வார்த்தைகள் கன்னங்களில் செம்மையேற்றின.

    வடக்கத்திக்காரர்களுக்குப் பெண்களின் அழகைப் பாராட்டுவதில் எந்தவித மனக்கூச்சமும் கிடையாது என்ற அனுபவ உணர்வில் அவள் சிரித்தபடி,

    தாங்க்யூ, உட்காருங்கள் என்றாள். உட்கார்ந்து இரண்டு முழு விநாடிகள் சர்மா அவளை மேலும் கீழுமாகப் பார்த்தார். பார்வையில் அப்பட்டமான ஆர்வம் தெரிந்தது.

    எப்படியிருக்கிறீர்கள்? பதினைந்து நாளாக நான் லைப்ரரி பக்கம் வரமுடியவில்லை. யூனிவர்ஸிடி திறந்துவிட்டதால், இன்றைக்கு உங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன். புதிய பிரச்னை ஏதும் இல்லையே, இருந்தால், சொல்லுங்கள். என்னால் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.

    அவள் சிரித்தாள்.

    ஒரு ப்ரொஃபஸர் தீர்க்கக் கூடிய பிரச்னை இல்லை அது. வீட்டோடு இருக்கும்படியாக ஆள் தேடுகிறேன்; கிடைக்கவில்லை. என் பெண் ஸ்கூலிலிருந்து மத்தியானம் ஒண்ணரை மணிக்கு வருவாள். அப்பொழுது யாராவது வீட்டில் இருக்கவேண்டும். சாப்பாடு போடவேண்டும். என் அப்பா நான்கு வருஷமாக என்னுடன் இருந்தார்-இப்பொழுது அத்தை இருக்கிறாள். ஆனால் அவள் குளிர்காலம் ஆரம்பித்ததும் கிளம்பிப் போய்விடுவாள். நம்பகமான ஆள் யாராவது தெரியுமா உங்களுக்கு?

    சர்மா உல்லாசமாகச் சிரித்தார்.

    ஆளும் தேளும் தெரியாது. ஆனால் சமாளிக்கும் வழி சொல்லத் தெரியும். அத்தையை அனுப்பிவிட்டு என் வீட்டிற்கு வந்து விடுங்கள். நான் பிக்கல் பிடுங்கல் இல்லாத தனி ஆள்-வீடு பெரிது. சமையல்காரன் இருக்கிறான்.

    இவரது வேடிக்கைப் பேச்சை எந்த அளவுக்கு ரசிக்கலாம் என்று புரியாத திகைப்புடன் அவள் அவரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தாள்.

    ப்ரொஃபஸர்களுக்கு யதார்த்தமாக எந்த யோசனையும் சொல்லத் தெரியாது போலிருக்கு!

    சர்மா பதில் ஏதும் சொல்லாமல், மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை யோசனையுடன் உருட்டினார். தோளைக் குலுக்கி, அது லைப்ரரி என்கிற உணர்வில், மிக மெல்லிய குரலில் தொடர்ந்தார்.

    வொய் நாட்? நான் சொல்லும் விஷயத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளும் தினுசில் இருக்கிறது. வாஸ்தவத்தில், உங்களுடன் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று இன்று வந்தேன். காண்டீனில் டீ சாப்பிட்டபடி பேசலாம் வாருங்கள்.

    இந்த மனிதருக்கு என்னுடன் பேச என்ன இருக்கிறது என்கிற தயக்கத்துடன்.

    நான் இன்னும் வேலையே ஆரம்பிக்கவில்லையே என்றாள்.

    அரை மணியில் வந்து விடலாம், வாருங்கள்.

    அவள் சரி என்று கிளம்பினாள். ஆறுமாதப் பழக்கத்தில், இவர் பெரிய படிப்பாளி, கௌரவமான மனிதர் என்கிற கணிப்பும் அது ஏற்படுத்தியிருந்த மதிப்பும் அவரிடம் ஒரு விகல்பமில்லாத சினேக பாவத்தை ஏற்படுத்தியிருந்தன.

    தேநீர்க் கோப்பையைக் கையில் ஏந்தியபடி, அவர் மிருதுவாகப் பேசினார்.

    மாலதி, இரண்டு மாதங்களாக, உங்கள் அப்பா இறந்ததும் அதை நீங்கள் தாங்கிக்கொண்ட புத்திசாலித்தனத்தை பார்த்ததிலிருந்து, ஒரு தீர்மானமான எண்ணம் எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய எண்ணத்தைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன் உங்களைப் பற்றி ஒரு விஷயம் தெரிய வேண்டும். நீங்கள் தைரியமாக இருக்கப் பழகிக்கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. ஒன்று மட்டும் புரியவில்லை. உங்களுக்கு சின்ன வயசு. அழகும் படிப்பும் இருக்கிறது. விதவை என்றால் சந்நியாசினியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    அவள், தன் சங்கடத்தை மறைக்க சிரித்தாள்.

    சந்நியாசினியா? எனக்கு வீடு இருக்கிறது. பெண் இருக்கிறாள். கவலைகளும், ஆசைகளும், எதிர்பார்ப்புகளும்... நிறையவே இருக்கின்றன!

    ஓ! கமான் என்று அவர் சினேகிதமாக அவள் கையைப் பற்றினார்.

    அவை கடமையுணர்வினால் வருவது. உங்களுக்கென்று இச்சைகள் கிடையாதா?

    அவள் மெல்ல, கையை விடுவித்துக்கொண்டாள்.

    இச்சைகள் இல்லாமல் என்ன? அத்துடன் எனக்கு விவேகமும், உண்டு மிஸ்டர் சர்மா!

    ஆ, கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள். அதற்குப் பெயர் விவேகம் இல்லை; கோழைத்தனம்!

    அவர் முகத்தைப் பார்க்கத் தெம்பில்லாமல் அவள் மௌனமாகத் தேநீரைப் பருகினாள். திடீரென்று ஒரு சோர்வு, மனத்தை அழுத்திற்று.

    அவர் மீண்டும் தொடர்ந்த போது, குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது.

    உங்களைப் பார்த்த நிமிஷத்திலிருந்து உங்கள் அழகும் அறிவும் என்னைக் கவர்ந்திருக்கிறது. உங்கள் சோகக் கதையைக் கேட்டு அனுதாபம் சுரந்திருக்கிறது. ஆனால் இரண்டு மாதங்களாக என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஓர் ஒட்டுதல் எனக்கு எந்தப் பெண்ணிடமும் ஏற்பட்டதில்லை மாலதி!

    இவர் கல்யாணமாகாதவர் என்று அவளுக்குத் திடீரென்று ஞாபகம் வந்தது.

    உங்களுடைய தோழமை எனக்கு வேணும் மாலதி!

    அவளுக்கு மார்பு வேகமாக அடித்துக்கொண்டது. இதுவரை அவளிடம் யாரும் இப்படி உணர்ச்சிகளைக் கொட்டினதில்லை...

    எனக்கு ஐந்து வயதில் ஒரு பெண் இருக்கிறாள் மிஸ்டர் சர்மா!

    ஐ டோண்ட் மைண்ட்!

    பட் ஐ மைண்ட்! என்று அவள் புன்னகைத்தாள். அதனாலேயே மறுமணத்தில் எனக்கு விருப்பமில்லை.

    அவளுடைய கையை அவர் மென்மையாக அழுத்தினார்.

    கரெக்ட்! எனக்குத் திருமணத்திலேயே நம்பிக்கையில்லை!

    அவள் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள்.

    நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை மாலதி!

    2

    தீப்பொறிகளாய் அதன் சாராம்சம் உள்ளே இறங்க, சுருசுருவென்று ஒரு ஜ்வாலை கிளம்பியது. அவருடைய கையை விடுவித்து விட்டு அவள் சரேலென்று எழுந்தாள்.

    என்ன இது, எழுந்துவிட்டீர்கள்? என்று சர்மா ஆச்சரியப்பட்டார்.

    அவளுக்குப் பதில் சொல்ல சற்று நேரம் பிடித்தது.

    அந்த விசால நெற்றியையும், அறிவுத் தீட்சண்யம் மிக்க

    Enjoying the preview?
    Page 1 of 1