Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

America Payana Diary
America Payana Diary
America Payana Diary
Ebook179 pages1 hour

America Payana Diary

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

9/11 என்பது இப்போது அமெரிக்க மக்களின் நனவோடையில் அழிக்கமுடியாத குறியீடாகி விட்டது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்கா வந்திருக்கும் எனக்கும் அதன் தாக்கத்திலிருந்து தப்பமுடியாது என்று தோன்றுகிறது.

...என்று வாசந்தி ஆரம்பித்து அவருக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களை மிக சுவரஸ்யமாக சொல்கிறார். படிக்கப் படிக்க நாமும் அவருடன் பயணிப்பது போல் இருக்கிறது. நீங்களும் அனுபவிக்கலாம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580125407771
America Payana Diary

Read more from Vaasanthi

Related to America Payana Diary

Related ebooks

Related categories

Reviews for America Payana Diary

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    America Payana Diary - Vaasanthi

    https://www.pustaka.co.in

    அமெரிக்கப் பயண டயரி

    America Payana Diary

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சென்னையிலிருந்து பீனிக்ஸ் வரை

    2. உலகத் தமிழர்

    3. கள்ளிக்காட்டு இதிகாசம்!

    4. போனில் பேசுவது இந்தியப் பெண்களுக்கு ஒரு வடிகால்

    5. குடியேறிகளின் கலாச்சாரம்

    6. வானவில்லுக்கு ஏழே நிறங்கள், அமெரிக்க வானுக்கு ஏழாயிரம்

    7. ஸிலிக்கன் வாலீயிலே

    8. பொன் விளைந்த பூமியின் பிரமிப்பூட்டும் சாகசம்

    9. புதிய சவால்களும் பழைய சரித்திரமும்

    10. நியூயார்க், நல்ல நியூயார்க்!

    11. சுதந்திர மண்ணின் மரண பயம்

    12. உலக வல்லரசின் வளம் கொழிக்கும் எழில்மிகு வாஷிங்டன்

    13. இங்கு உலகத்தின் தலைவிதி மாற்றப்படுகிறது

    14. டிஸ்னியின் மாய உலகத்தில்

    1

    சென்னையிலிருந்து பீனிக்ஸ் வரை

    9/11 என்பது இப்போது அமெரிக்க மக்களின் நனவோடையில் அழிக்கமுடியாத குறியீடாகி விட்டது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்கா வந்திருக்கும் எனக்கும் அதன் தாக்கத்திலிருந்து தப்பமுடியாது என்று தோன்றுகிறது. தங்கள் நிழலைக்கண்டே அமெரிக்கர்கள் பயப்படுகிறார்கள். சென்னையிலிருந்து லாஸ் ஆன்ஜெலீஸ் வந்திறங்கியபோது வெளிநாட்டுப் பயணிகளிடம் கெடுபிடி காண்பிக்காதது விநோதமென்றால் உள்நாட்டுப் பயணத்தில் அதைக் கறாராகக் காண்பிப்பது அதைவிட விநோதம். லாஸ் ஆன்ஜெலீஸிலிருந்து நான் செல்லவேண்டிய பீனிக்ஸுக்கு விமானமேறுவதற்குள் போதுமடா சாமி என்று ஆகிவிட்டது. சோதனை மையத்தில் நின்றிருந்த காவலர்கள் என்கிற வர்கம். கையில் உரை அணிந்திருந்திருந்தார்கள். நமது சாமானும் நாமும் தீண்டத்தகாத வஸ்துக்களைப் போல. மேடையில் பல கூடைகள் - நம் உடம்பிலும் கையிலும் இருப்பதைப் போல. வாயே திறக்காமல் அணிந்திருக்கும் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்துவிட வேண்டும். (தாலியெல்லாம் கழற்ற முடியாது என்று ஒரு அப்பாவி தமிழ் பெண் சொல்லப்போக அவரை சந்தேகத்துக்குரியவராக நினைத்து கேள்விமேல் கேள்வி கேட்டு நோகடித்ததில் அந்தப்பெண் கதிகலங்கிப் போனதாகக் கேள்வி.) கைப்பையில் இருப்பதை எல்லாம் தலைகீழாய் கொட்டிவிட்டு வெளிநாட்டில் நமது ஆதாரங்களான பாஸ்போர்ட் இத்யாதிகளையும் சமர்பித்துவிட்டு பாதாதி கேசம் வரை நம்மை ஒரு பிரம்மாண்ட கருப்பர் ஆராய இடமளித்துவிட்டு மூவ் ஆன் மூவ் ஆன் என்று அவர்கள் துரிதப்படுத்த அவசரமாக கொட்டிக்கவிழ்த்த நகையையெல்லாம் எடுத்து அணிந்து (காரைக்குடி ஆச்சிகள் வந்தால் என்ன செய்வார்கள்?) விமானத்தில் ஏறி அமர்ந்தால் நம்மூர் விமானத்தில் கிடைக்கும் உபசரிப்பு இங்கு கிடைக்காது. ரொம்ப நேரம் கழித்து கொறிக்கக் கொஞ்சம் வேர்க்கடலை கிடைக்கும் ஒரு க்ளாஸ் கோக்குடன். எனக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த இரண்டு ஏர் ஹோஸ்டெஸ்ஸுகள் ஓயாமல் பேசினார்கள். கையுடன் எடுத்து வந்திருந்த பெரிய ஹாம்பர்கர்களைச் சாப்பிட்டார்கள். வீட்டிற்குச் செல்லும்வரை பசியைப் பொறுத்துக்கொள் என்றான் என் மகன்.

    அப்பாவி அமெரிக்கர்

    அமெரிக்காவில் மனிதரிலிருந்து ஜடப்பொருள் வரை எதுவுமே சின்ன சைஸ் கிடையாது. பீனிக்ஸ் விமான நிலையம் பிரம்மாண்டம். ஜீவராசிகளும் டிட்டோ. அகலமான புன்னகை. தெரிந்தவர் தெரியாதவர் எல்லாருக்கும் ‘ஹாவ் எ குட் டே!’ வாழ்த்து. கெடுபிடிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்னும் பாவனை. 9/11-க்குப்பிறகுதான் இந்த அவஸ்தை என்று மன்னிப்பு இழையோடும் பேச்சு.

    பீனிக்ஸில் வாஸந்தி

    எல்லாரையும் நம்பித்தான் மோசம் போனோம் என்கிற ஒரு பதைப்பு அமெரிக்கர்களை ஆட்டிப் படைக்கிறது. மற்றவர்களை அவர்கள் நம்பினார்கள் என்பதைவிட அமெரிக்காவின் புஜ பல பராக்கிரமத்தை அவர்கள் அதிகம் நம்பினார்கள் என்பதில் சந்தேகமில்லை. சராசரி அமெரிக்க பிரஜையின் ஞான சூன்யம் அதிர்ச்சி தருவது. அத்தனை நவீன வசதிகள் கொண்ட வாழ்வின் சுபிட்சத்தில். யாரைப் பற்றியும் அறிந்து கொள்ளவோ, கவலைப்படவோ அவசியமில்லை என்கிற இறுமாப்பு ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. 2001-ம் ஆண்டு 9/11 அன்று இரட்டை கோபுரம் தாக்கப்பட்டபோது, அமெரிக்கர்களை அது உலுக்கிய உலுக்கல் அமெரிக்க விமான நிலையத்தில் பிளாஸ்டிக் கூடைகளில் விழும் பொருள்களில் இன்னமும் எதிரொலிக்கிறது.

    ‘எங்களை ஏன் யாரும் வெறுக்க வேண்டும்?’ என்று எல்லா சாமான்யர்களையும் திகைக்க வைத்த உலுக்கல் அல்லவா அது? அந்த உலுக்கலில் அமெரிக்க வாழ்வு தடம் புரண்டுதான் போய்விட்டது. 9/11 வெறுப்பின் அடையாளம் மட்டுமல்ல, உருவமற்ற எதிரியின் அடையாளம். அந்த எதிரியை எதிர்க்க அமெரிக்கர்கள் தியாகங்கள் பலவற்றுக்குத் தயாராக வேண்டும். பயங்கரவாதத்திலிருந்து உலகத்தைக் காப்பாற்ற அமெரிக்காவைத் தவிர வேறு யாரால் முடியும்? இப்படிப்பட்ட ஒரு குழப்பமான மனநிலையில்தான் ஈராக்குடன் போருக்குச் செல்ல வேண்டும் என்று அதிபர் புஷ் முரண்டு பிடித்தபோது ஒஸாமா பின்லாடனுக்கும் சதாம் ஹுசேனுக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் பேசாமல் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    புஷ்ஷுக்கு நேரம் சரியில்லை

    ஆனால் இப்பொழுது புஷ்ஷுக்குப் போதாத காலம். பேரழிவு ஆயுதம் சதாம் வைத்திருப்பதால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்று சொல்லி தேசத்தை போருக்கு இழுத்ததில் சிறிதும் உண்மையில்லை என்பதை அமெரிக்க உளவுத்துறை ஒப்புக்கொண்டதும், ஆயுதம் இருப்பதாக நினைத்தோம் ஆனால் ஒன்று கூட இல்லை என்று தெரிந்துவிட்டது என்று சொன்னதும் புஷ்ஷின் பிம்பம் புஸ்வாணமாகி விட்டது. நியூயார்க் வாஷிங்டன் தெருக்களில் ‘புஷ் நீ ஒரு புளுகன்’ ‘எங்கள் மகன்களைக் கொன்ற கொலைகாரன்’ என்று மக்கள் பொங்கி எழுந்து ஆக்ரோஷத்துடன் கோஷமிட்டதை தொலைக்காட்சியில் பார்த்தபோது அவர்களை நினைத்து எனக்குப் பாவமாக இருந்தது. நேரிடையாகத் தாக்கப்பட்டாலே இங்கு சுரணை ஏற்படும். ஈராக் போரில் 530 அமெரிக்க வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். 3000-த்து சொச்சம் பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். புஷ் அரண்டு விட்டார். அடுத்த அதிபர் தேர்தலுக்கு அமெரிக்கா தயாராகும் வேளையில் இது என்ன சோதனை? எதிர் கட்சிக்காரர்கள், ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மெல்ல அவல் கிடைத்ததில் வாரு வாரு என்று வாரிக் கொண்டிருக்கிறார்கள். வியட்னாம் போரில் தன்னைப் பெரிய வீரராக முன்னிறுத்திக் கொண்ட புஷ் உண்மையில் போர்க்களத்தில் பணிபுரியவே இல்லை என்று நம்ம ஊரில் தேர்தல் சமயத்தில் பழசைத் தேடி சேற்றை இறைப்பது போல் தோண்டியெடுக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம். சேற்றை வாரி இறைக்கும் கலையில் நம்ம ஊர் அரசியல்வாதிகளை யாரும், அமெரிக்க ஜாம்பவான்களாலும், மிஞ்ச முடியாது என்று இங்கு புரிகிறது. கடுமையான போட்டியிலும் இங்கு, அரசியல் ஏச்சு மொழி தரம் தாழவில்லை.

    புஷ்ஷின் சங்கடம்

    மக்களுக்கு நேரிடையாக விளக்கினால் அமெரிக்க அதிபர் மேல் ஏற்பட்டிருக்கும் களங்கம் சரியாகிவிடும் என்று புஷ்ஷுக்கு அவரது ஆலோசகர்கள் சொன்னார்கள். விரிவான வியூகம் வகுத்தார்கள். தேசிய தொலைக்காட்சியில் பிரபலமான நேர்காணல் நிகழ்ச்சியில் வித்தியாசமாக பங்கு கொள்ள வேண்டும் என்று.

    அதாவது அவரது வழக்கமான கர்வப் பேச்சு கூடாது. பவ்யமாக தழைந்து வினயத்துடன் பேச வேண்டும். உண்மையாகக் கவலைப்படுபவர் போல. புஷ்ஷுக்கு சாத்தியமா அது? நல்ல கூத்து. அந்த நேர்க்காணலை நான் பார்த்தபோது நான் நினைத்திருந்ததைவிட புஷ் ஒரு பெரிய முட்டாள், பாசாங்குக்காரர் என்று புரிந்தது. அவரது சாயம் அதிகமாக வெளுத்துப்போனது. சதாம் ஒரு பைத்தியக்காரன், அவன் ஆபத்தானவன் என்று திரும்பத் திரும்ப வெறிபிடித்தவர் போல் சொன்னபோது அமெரிக்க பராக்கிரமம் நொறுங்கிப் போனது. இவரது அடிப்படை வாதத்துக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கும் அதிக வித்தியாசமில்லை என்று மக்கள் உணர்வார்களா என்று நான் யோசித்தேன். எப்படியானாலும் தேர்தலைப் பொறுத்தவரை புஷ்ஷுக்கு வாய்ப்பு கோவிந்தா என்று எனக்குத் தோன்றுகிறது. எதிர்கட்சிக்காரர்களின் ஒவ்வொரு விமரிசனத்துக்கும், சாடலுக்கும் விளக்கம் கொடுக்கக் கடமை பட்டதாக வெள்ளை மாளிகை நினைத்து பிரம்மாண்ட ஆவணங்களைத் தயாரிக்கிறது. (ஜெயலலிதாவும் கருணாநிதியும் பதிலுக்கு பதில் உடனுக்குடன் கொடுப்பது போல.) ஒரு வேடிக்கை. அவற்றை வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு மேல் வெளியிடும். சனி ஞாயிறு விடுமுறை. மக்களுக்கு தினசரி படிக்கவோ தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கவோகூட நேரம் இருக்காது. விடுமுறையை அமெரிக்கர்கள் வீட்டில் அநேகமாகக் கழிப்பது இல்லை. திங்கள் வருவதற்குள் விஷயம் மறந்து போகும். புஷ்ஷிற்கு அடுத்த வியூகம் வகுக்கப்படுகிறது. இனி அடக்கி வாசிக்கப் போவதில்லையாம். ஆக்ரோஷத் தாக்குதல்தான் என்று வெள்ளை மாளிகை சொல்கிறது. புஷ் அதன் கைப் பாவையாய் தெரிகிறார்.

    கடைத் தெருவில் கண்ட தேவதை

    புஷ்ஷைப் பற்றின நினைவில்லாதவைபோல பீனிக்ஸின் கடை தெருக்கள் மகா அமைதியாக இருக்கின்றன. இந்தியாவில் ஒரு சாலை விபத்தில் சமீபத்தில் காலில் அடிபட்டதிலிருந்து எந்த சாலையையும் கடப்பது எனக்கு சிம்ம சொப்பனமாகிப் போனது. பீனிக்ஸ் சாலைகளில் பிரம்மாண்ட வானங்களைப் பார்த்து (பீனிக்ஸ் வாசிகளுக்கு கார்களின் அளவு கௌரவத்தின் சின்னமாம்) சாலை பயம் இங்கேயும் என்னைத் துரத்துகிறது. ஆனால் பீனிக்ஸ் வாசிகள் மிகப் பொறுமையாக நான் செல்வதற்குக் காத்திருந்து வழிவிடுகிறார்கள். சாலையை யார் கடந்தாலும் வண்டியை நிறுத்தி வழி விட வேண்டியது அவர்களது கடமையாம். பாதசாரிகளுக்கு வழி விடாமல் போனால் அவர்கள் கைதாகலாம். ஜெயில் வாசம், அபராதத் தொகை செலுத்துதல் என்பதோடு, அவர்களது டிரைவிங் லைசென்சே ரத்தாகிவிடும். கார் ஓட்ட முடியாது என்றால் மிகப் பெரிய இழப்பு. நம்மூரில்

    Enjoying the preview?
    Page 1 of 1