Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ula Vara Oru Ulagam
Ula Vara Oru Ulagam
Ula Vara Oru Ulagam
Ebook212 pages1 hour

Ula Vara Oru Ulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஃப்ரெஞ்ச் நாட்டில் நடந்த உலக எழுத்தாளர் கலந்துகொள்வதற்காக அந் நாட்டின் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் சார்பில் சென்று வந்தார் திருமதி வாஸந்தி அவர்கள்.

அப்படியே அந்நாட்டிற்குப் போகும் வழியி லுள்ள சில ஐரோப்பிய நாடுகளுக்கும் போய் வந்தார். ரோம், வியென்னா, ஜெனீவா, ஹாலண்டு, லண்டன், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்தார்.

அந்தப் பயண அனுபவத்தை 'கல்கி' இதழில் 22 வாரம் தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான், 'உலாவர ஓர் உலகம்' என்ற புத்தகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580125407772
Ula Vara Oru Ulagam

Read more from Vaasanthi

Related to Ula Vara Oru Ulagam

Related ebooks

Related categories

Reviews for Ula Vara Oru Ulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ula Vara Oru Ulagam - Vaasanthi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உலாவர ஓர் உலகம்

    Ula Vara Oru Ulagam

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ரோமாபுரி வீதிகளில்

    2. இதோ என் காதலன்!

    3. வியப்பூட்டும் வியென்னா

    4. ஒரு மனிதனுக்கு இரண்டு மரங்கள்

    5. பாரீஸை நோக்கி

    6. பாரீஸ் விஜயம்

    7. பாரீஸ் கலைக் கோயில்கள்

    8. சித்திரமே தொழிலாச்சு! சுதந்திரமே உயிர்மூச்சு!

    9. பாரீஸில் பாரதியின் புதுமைப் பெண்

    10. உலக எழுத்தாளர் மாநாட்டிலே.

    11. எழுத்தாளர்கள் போஜனப் பிரியர்களா?

    12. கண்ணீர் வரவழைத்த காந்தி திரைப்படம்

    13. ஜனநாயகத்தின் தாயகம்

    14. வேற்று மொழி வளர்த்த நட்புறவு

    15. உலக மகா கவியின் ஜனன பூமி

    16. எதிர்பாராத ஏமாற்றங்கள்

    17. சிகாகோவில் சங்க இலக்கியம்

    18. அமெரிக்காவில் இந்தியர்கள்

    19. மெல்ல மடியும் வேர்கள்

    20. மெய்ஞானமும் விஞ்ஞானமும்

    21. நவீன நகரம்

    22. இலக்கிய குபேரனின் சாம்ராஜ்யம்

    1. ரோமாபுரி வீதிகளில்

    பார்தோன் ஸினோரா! கம்ப்ளித்! நோ ரூம்!

    நான் திகைப்புடன் என்னைச் சுற்றிப்பார்த்து நின்றேன். என் அருகில் நின்றிருந்த பஞ்சாபி எழுத்தாளர் திரு குல்ஜார்ஸிங் ஸந்து தம் கவலையை மறைத்தபடி டோன்ட்வர்ரி என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

    நான் நின்றது ரோம் நகரத்துத் தெருக்களில், அருகருகே வீதிகள். சுத்தமான, புராதன அடுக்கு மாடிக் கட்டிடங்கள். ஒவ்வொரு கட்டிடத்தின் தலைவாயிலிலும் ‘பென்ஸியானே’ என்ற நியான் வார்த்தைகள் கண்சிமிட்டி அழைத்தன. சுறுசுறுப்பான அழகிய ஆண்களும் பெண்களும் உற்சாக உல்லாச நடையுடன், ஒருவருக்கொருவர் இறுக அணைத்த படி என்னுடைய கவலை புரியாமல் என்னுடைய உடையை ரசித்து. ‘ஹாய் ஸெனோரா’ என்று புன்னகைத்தபடி விரைந்தார்கள். ‘பென்ஸியானே’ என்கிற நியான் வெளிச்சத்துக்கடியில் சுவரோடு பொருத்தப்பட்ட கால்குலேட்டர் மாதிரி டெலிபோன். ஒரு பட்டனை அமுக்கித் தெருவிலிருந்தபடியே அறை காலியிருக்கிறதா என்று விசாரிக்கலாம். ஐம்பது அறுபது பட்டனை அமுக்கியிருப்போம். பல தெருக்களைக் கடந்திருப்போம். எல்லா இடத்திலும் தெருவிலேயே தகவல் நோ! பார்தோன் (இல்லை. மன்னியுங்கள்!)

    ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் அழைப்பில் அதன் சிறப்பு விருந்தாளியாய் இந்திய டெலிகேட்டுகளாக நானும் திரு குல்ஜர்ஸிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரீஸை நோக்கிப் சென்று கொண்டிருந்தோம். வழியில் சில ஐரோப்பிய நாடுகளைப் பார்க்கும் ஆசையுடன் நாங்கள் போட்ட பிளானில் எங்கள் முதல் பிரவேசம் ரோம். பதினெட்டாம் தேதி கிளம்புவதாக இருந்தது. ரோமில் ஒரு ஹாட்டலில் அறை ‘புக்’ செய்யப்பட்டிருந்தது. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டதால் பயணம் 21ம் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டதில் அறை போய்விட்டது.

    ***

    ஹோட்டல்களைத் தவிர ‘பென்ஸியோனே’க்கள் அறைகளை வாடகைக்கு விடும் வீடுகள் (ஒரு நாளைக்கு ரூ. 120லிருந்து ரூ. 200 வரை வாடகை) ஏராளமாக ரோமில் இருக்கின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் டூரிஸ்ட் மாதங்களாம். அதிகக் குளிருமில்லாமல் அதிக வெப்பமுமில்லாத காலங்கள் ரோம் நிரம்பி வழிந்தது. நாங்கள் அறைக்காக அலைந்ததில் எங்கள் முட்டாள்தனம் நிதர்சனமாயிற்று.

    இரண்டு மணி நேர அலைச்சலுக்குப் பிறகு தெய்வாதீனமாக ஒரு சர்தார்ஜியைச் சந்தித்தோம். ரோமில் ஏதோ பி.ஸி.எஸ் செய்கிறாராம். தான் தங்கியிருக்கும் பென்ஸியோனேயில் அறைகள் இரண்டு இருப்பதாகத் தெரிவித்தபோது எனக்குள் ஏற்பட்ட நிம்மதியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஐந்தாவது மாடியில் இருந்தன அறைகள் பழைய காலத்து லிஃப்டில் செல்வதே வினோதமான அனுபவம். இரண்டுபேர்களே சமயத்துக்குச் செல்லலாம். பத்து லீராக்கள் (சுமார் ஆறு நயா பைசா) போட்டால்தான் லிஃப்ட் இயங்கும். கட்டைகுட்டையாக இருந்தாள் வீட்டுக்காரி. அவளுடைய புருஷன் எதிலும் பட்டுக் கொள்ளாமல் ஆப்பிள் தின்றபடி டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய குழந்தைகள் தங்களுடைய சண்டையில் தீவிரமாக இருந்தன.

    வீட்டுக்காரி கறாராகப் பேசினாள். ஒரு நாளைக்கு 30.00 லீராக்கள் (ரூ. 200) என்றாள். விருந்தாளி என்று யாரையும் அறையில் அழைத்துக்கொள்ளக்கூடாது என்றாள். கையையும் கண்ணையும் அசைத்து அவள் பேசியது இத்தாலியனில் ஆனாலும் சுமாராகப் புரிந்து கொள்ள முடிந்தது.

    அறையும், பாத்ரூமும் மிக சுத்தமாக இருந்தன. எனக்கு அப்பொழுது இருந்த சோர்வில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் சென்றாற்போல இருந்தது.

    எங்களுக்கு அபயம் அளித்த சர்தார்ஜியுடன் நான்கு இந்தியர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிரிப்பையே மறந்து போனாற்போல் நின்றிருந்தனர். ரோம் நகரத்தைப் பார்க்க வந்தார்களாம். வந்த உடனேயே பாஸ்போர்ட்டையும், ப்ளேன் டிக்கெட்டையும் பணத்தையும் தொலைத்து விட்டார்களாம். நான்கு பேர்களும் பிற நாடுகளில் நல்ல வேலையில் இருப்பவர்கள். இங்கு சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் பரதேசிகளைப்போல் நிற்கிறோம் என்றபோது பரிதாபமாக இருந்தது. நீங்கள் சர்வ ஜாக்ரதையாக இருக்க வேண்டும் என்று எங்களை எச்சரித்தார்கள் பாரிஸில் யூனிவர்ஸிடி ப்ரொஃபஸராக இருக்கும் அலி சொன்னது ஆச்சரியத்தை அளித்தது. ரோமிலிருந்து பாரிஸ்க்குத் திரும்பிச் செல்ல விமானத்துக்குக் காத்திருந்தாராம். ஒரு இத்தாலியன் சிநேகமாகப் பேச்சுக் கொடுத்துக் காப்பி சாப்பிடலாம் என்று கூப்பிட்டானாம். காப்பி சாப்பிட்ட பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லையாம். ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு கண் விழித்த போது, பாஸ்போர்ட் பணம் எல்லாம் களவு போயிருந்தன!

    ரோமுக்கு நமது எதிரிகள் கூட வரக்கூடாது என்று அலுத்துக்கொண்டார்கள். இங்கு வேலையில்லாத் திண்டாட்டம் ரொம்ப அதிகம். அதனால்தான் இத்தனை பயங்கரத் திருட்டு என்றார்கள்.

    எனக்குக் ஏகக் கவலையாய்ப் போயிற்று. பலத்த ஏற்பாடுகளுடன், இந்திய டெலிகேட் என்கிற பெருமையுடன் பாரிஸ்ஸை நோக்கிச் செல்கையில் முதல் படியிலேயே எல்லாவற்றையும் தொலைத்துப் ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ என்கிற கதையாகிவிடப் போகிறதே என்று பயமாகிப் போய்விட்டது.

    பாரீஸ்ஸுக்குப் போவதற்கு முன் ரோமைப் பார்த்தே ஆகவேண்டும் என்று எத்தனை வெறியுடன் வந்தேன்! பர்னினியின் சிற்பங்களையும் மைக்கலேஞ்சலோவின் சித்திரங்களையும் பார்க்கவேண்டும் என்று எத்தனை ஆர்வத்துடன் வந்தேன்!

    அறைக்காக அலைந்ததில் ஏற்கெனவே கால்கள் சோர்ந்து போயிருந்தன. இரவு எட்டு மணிக்குமேல் ஆகி விட்டது. ரோமுக்கும் புது தில்லிக்கும் மூன்றரை மணி நேரம் வித்தியாசமானதால் அப்போது இரவு பதினொன்றரை (இந்தியக் கணக்குப்படி) என்கிற பிரக்ஞையில் கண்கள் செருகிக்கொண்டு வந்தன. எதையாவது சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் போதும் என்றிருந்தது.

    இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன் நாங்கள் போட்ட திட்டத்தின்படி அன்றிரவு ரோமின் மிகப் பிரபலமான தீவோலி தோட்டத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அந்த நான்கு தொங்கிய முகங்களைப் பார்த்த பிறகு என்னுடைய உற்சாகமெல்லாம் வடிந்து போயிற்று. நாளைப் பாடு நாராயணன் செயல் என்கிற முடிவுடன், கீழே தெருவில் அங்கங்கே இருக்கும் கடைகளிலிருந்து குல்ஸார்ஸிங் வாங்கிக்கொண்டு வந்த வேகவைத்த கொண்டைக் கடலையும் (டின்னில் அடைக்கப்பட்டது) ஒரு சீஸ் ஸாண்ட்விச்சையும் சாப்பிட்டுப் படுத்தேன்.

    மறுநாள் விடியற்காலை எழுந்து டிரெயினைப் பிடித்து நேப்பிள்ஸைப் பார்க்கப்போவது என்று தீர்மானித்தோம்.

    என்னுடைய ஸிஸ்டம் இன்னும் ரோமின் நேரத்துக்கு அட்ஜஸ்ட் ஆகியிராததால் வெகு சீக்கிரம் விழிப்பு ஏற்பட்டு விட்டது. அறையின் ஜன்னல் வழியே கீழே பார்த்தபோது ரோம் நகரம் தூங்கிக்கொண்டிருந்தது. தெருவை இருபுறமும் வரிசையாக அடைத்தபடி மௌனமான சிறிய கார்கள் பொம்மைகளாய்த் தெரிந்தன. லேசாகக் குளிரிற்று. சூடான வெந்நீரில் குளித்தவுடன் முந்தைய நாள் அலைந்த அனுபவமும் தொங்கிய முகங்களின் ஞாபகமும் மெல்ல மறந்து போயின.

    நாங்கள் ஐந்து மணிக்கு, நடக்கும் தொலைவிலேயே இருந்த ஸ்டேஷனுக்குச் சென்றபோது கூட்டமே இல்லாமல் ரயில் நிலையம் கிட்டத்தட்டக் காலியாக இருந்தது. நிலையத்தின் சுத்தமும், ஒழுங்குமுறையும் எனக்கு நம்பமுடியாத ஆச்சரியத்தை அளித்தன. முந்தைய இரவு நான் அங்கு நிறைய (சப்தமில்லாத - இதுவும் ஆச்சரியமான விஷயம்!) ஜனங்களைப் பார்த்திருந்தேன். அதற்கடையாளமாக ஒரு குப்பை கூளம் தரையில் இருக்க வேண்டுமே! இருபுறமும் நிறையக் கடைகள், க்யூரியோக்கள், ஸிகரெட் விற்கும் ‘டபாச்சி’கள் (இங்கு ஸ்டாம்புகள், பஸ் டிக்கெட்டுகளும் கிடைக்கும்) வெளி நாட்டு எக்ஸ்சேஞ்ச் கிடைக்கும் பாங்குகள் என்று ஏகக்கலகலப்பு இருந்தும் அத்தனை கலகலப்பிலும் ஒரு ஒழுங்கு முறையும் சுறுசுறுப்பும் இருந்ததைக் கவனித்து இருந்தேன்.

    நான் டில்லியைவிட்டுக் கிளம்பிய தினம் காலை ஐந்தரை மணிக்கு டில்லி விமான நிலையம் ஒரு சந்தைக்கடை மாதிரி இருந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

    ரோம் ஸ்டேஷனில் கண்ணாடிபோல் பளபளத்த தரையின் மேல் நடப்பதே ஓர் அனுபவம். பாஷை தெரியாதவர்களுக்குக்கூடச் சட்டென்று புரியும்படியாகப் போகவேண்டிய இடத்தின் பெயரும் கிளம்பும் நேரமும் டிஜிட்டில் முறையில் பளிச்சென்று தெரிந்தன. டிரெயின் தயாராக இருந்தது. ரயில் வண்டி மிக சுத்தமாக உயர்ரக தனித்தனி ஸோபா சேர்களுடன் இருந்தது. ஜன்னலுக்கு அழகிய திரைகள் கூட்டமே இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் டாண் என்று கிளம்பிவிட்டது.

    எழுந்தவுடன் காப்பி குடித்துப் பழகிப்போன உடம்பு சூடாக ஏதாவது கிடைக்குமா என்று பறந்தது. ரோமிலிருந்து நேப்பில்ஸ் இரண்டுமணி நேர பயணம். இடையில் ஏழெட்டு ஸ்டேஷன்கள் வருகின்றன. ஒன்றில் கூட டீ. காப்பி கடைகள் கிடையாது! வியாபாரிகளின் சத்தம் இல்லை. அந்தச் சத்தமில்லாத சத்தத்தைப் பார்த்து வியப்பில் என் நாக்கின் சபலத்தை ஓர் அவமான உணர்வுடன் அடக்கிக்கொண்டேன்.

    பச்சைப் பசேல் என்ற வயல்புறங்களைத் தாண்டிக் கொண்டு டிரெயின் வெகு வேகமாகச் சென்றது. நேப்பில்ஸ் நகரத்தைப் பற்றிய விவரங்களை அருகிலிருந்த ஒரு வயதான (75 வயது) அமெரிக்கப் பயணியிடம் கேட்டுக்கொண்டிருந்த போது இரண்டு அழகிய இத்தாலியப் பெண்கள் அருகில் வந்து ஸிகரெட்? என்றார்கள். நாங்கள் புகை பிடிப்பதில்லை என்றேன். கொச்சையான ஆங்கிலத்தில் எந்தத் தேசத்திலிருந்து வருகிறீர்கள்? என்றாள் ஓர் அழகி. என்ன பாஷை பேசுகிறீர்கள்? என்றதும் குல்ஜார் ஸிங்குக்குத் தலைகால் புரியவில்லை. இரண்டு பெண்களையும் ஒரு ஒதுக்குப்புறமாக அழைத்துச்சென்று உற்சாகமாய் பேச ஆரம்பித்துவிட்டார். குல்ஜார் பாஸ்போர்ட்டையும் ப்ளேன் டிக்கெட்டுகளையும் அர்த்தமில்லாத ஏகக் காகிதச் சீட்டுகளுடன் புஷ் ஷர்ட் பாக்கெட்டில் திணித்துக்கொண்டிருப்பார். ஒரு எட்டணா விஷயத்துக்கும் ஒவ்வொரு பாக்கெட்டையும் குடைந்து எடுப்பார். பாஸ்போர்ட்டும் டிக்கெட்டும்கூடக் கூட வெளியில் வரும்போது எனக்கு பக் பக்கென்றிருக்கும். இப்போது அந்தப் பெண்களுடன் அதீதமான ஆர்வத்துடன் அவர் பேசுவதைப் பார்த்து நான் கவலையுடன் என்னுடைய பையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டேன்

    நேப்பில்ஸ் நகரத்தை அடைந்தோம். சுபாவமான உற்சாகம் மீண்டும் விழித்துக் கொள்ள, சின்னக் கவலைகளை மறந்து நான் ஆர்வத்துடன் ரயிலை விட்டு இறங்கினேன்.

    2. இதோ என் காதலன்!

    ஒருவனது ஆயுட்காலம் முடியுமுன் பார்த்தே ஆக வேண்டிய இடம் என்ற கருத்தில் நேப்பில்ஸைப் பார்த்து விட்டுச் செத்துப்போ என்று ஆங்கிலத்தில் வசனம் சொல்வார்கள்.

    நேப்பில்ஸைப் பார்ப்பதற்கு முன்பே எனக்கு நா வறண்டு கண்கள் செருகிக்கொண்டு வந்துவிட்டது. காபி குடிக்காமல் நம் ஊர் ஸ்டேஷன்கள் இரைச்சலோ அசிங்கமோ, நினைத்த நேரத்தில் காப்பி வழங்கும் மனிதாபிமானமிக்கவை என்று அந்த க்ஷணம் எனக்குப் பாசம் ஏற்பட்டது.

    வண்டியை விட்டு இறங்கியதும் சப்தமில்லாமல் விரைந்து நடக்கும் இத்தாலியர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கஃபேக்கு விரைந்தோம். சில இத்தாலியர்களுக்குச் சுமாராக ஆங்கிலம் புரிகிறது. சற்று அபிநயித்து காஃபி வித் மில்க் என்றால் ஓ, காப்புச்சீனோ? என்று புன்னகைத்து நிமிஷமாய்ச் சுடச் சுட ஆவியில் சூடாக்கப் பட்ட காப்பியைக் கொடுக்கிறார்கள். நல்ல கொட்டை வறுத்த காப்பி. அதோடு ஒரு பன்னோ, ஸாண்ட்விச்சோ சாப்பிட்டால் காலை ஆகாரம் முடிந்தது. சின்னக் கடைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1