Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aakasa Veedugal
Aakasa Veedugal
Aakasa Veedugal
Ebook358 pages2 hours

Aakasa Veedugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'ஆகாச வீடுகள்' நாவலைப் படித்து முடித்தவுடன், அண்மைக் காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த நாவல் ஒன்றைப் படித்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. 'தினமணி கதிரில்' இது வெளிவந்தபோது எனக்குப் படிப்பதற்கு ஓய்வு கிடைக்கவில்லை. மேலும் இப்போது வெளிவரும் பல தொடர்கதைகள் வாழ்க்கையோடு சிறிதும் தொடர்பற்றவையாகவும் நுனிப்புல் மேய்பவையாகவும் இருக்கின்றன. 'பத்திரிகைகளில் இன்று தொடர் கதைகளாக வருபவற்றில் சிறந்த தரமான படைப்புக்களும் இருக்கின்றன' என்பதற்கு இந்த 'ஆகாச வீடுகள்' ஓர் எடுத்துக்காட்டு.

நகரவாசியாக இன்று விளங்கும் பெண்மணி ஒருவர் கிராம வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ள கதை இது. கிராமத்தின் ஒரு பகுதியான அக்ரஹாரத்தின் கதை. அக்ர ஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார்.

"பச்சை வயல்களும், பட்சிகளும், நதியும் இருக்கிற இடத்திலே வாழற மனசிலே கல்மிஷமே இருக்க முடியாது. பட்டணத்து ஜனங்களுக்கு மனிதத் தன்மையே போய்விட்டது. ஆன்மாவே இல்லாத வெறும் கூடுகள் மாதிரி போய்விட்டது. இயற்கைக்கு நடுவில் இருப்பவர்களுக்குத்தான் மனசிருக்கும்... அன்பிருக்கும்... காருண்யம் இருக்கும்... உன்னைக் கிராமத்திலே நிலபுலன்களைப் பார்த்துக்கற ஒரு பையனுக்குத்தான் கொடுக்கப்போறேன்” என்ற லலிதாவின் அப்பா, அப்படியே கான்வெண்டில் நகரத்தில் படித்த தம் பெண்ணை ஒரு கிராமவாசியான சபேசனுக்குக் கொடுக்கிறார்.

சபேசன் பி.ஏ. படித்தவன். நில புலன்கள் உள்ளவன். கொஞ்சம்கூட டாம்பீகம் இல்லாதவன். குடி, சீட்டாட்டம், பிற பெண்களோடு பழக்கம் இல்லாதவன். ஆனால்?

ஆனால்?- இந்த 'ஆனால்?' தான் ஆகாச வீடுகளின் அடித்தளம்.

இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறது?

அந்த ஒவ்வொரு வீட்டின் ஒவ்வொரு பயங்கரக் கதையையும் இதில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் திருமதி வாஸந்தி. சபேசன்-லலிதா குடும்பத்தின் கதைபோல் இது தோன்றினாலும், வேறுசில குடும்பங்களின் கதைகளும் ஊடும் பாவும்போல் வெகு இயற்கையாக இதில் பின்னிப் பிணைந்துள்ளன. இந்த நாவலில் நான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது இதில் உள்ள பாத்திரப் படைப்புத்திறன். துண்டு துண்டாக, தனித்தனியாக, அவரவருக்கே உரிய பண்புகளோடும் பண்புக் குறைவுகளோடும் அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சபேசன்-லலிதா தம்பதியரின் ஒரே மகன் ராஜு. ஓரளவு மனவளர்ச்சியற்ற பையன்தான் அவன். ஆனால் என்ன அற்புதமான படைப்பு அது! தாய்மை உள்ளத்திலிருந்து பிறந்த அந்தக் குழந்தை நம்மால் எளிதில் மறக்க முடியாதவனாக மாறிவிடுகிறான். அவனுக்காக நாம் பதைக்கிறோம்; துடிதுடிக்கிறோம்; கண் கலங்குகிறோம்; கடைசியில் நீண்ட பெருமூச்சு விடுகிறோம்.

புதிதாக அந்தக் கிராமத்தில் வந்து தங்கி, அங்கே ஒரு மருத்துவமனை தொடங்க விரும்பும் இளைஞன் ஹரிஹரன் வாயிலாகவும், அந்தக் கிராமத்திலேயே ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தத் துணிந்த மீனுவின் வாயிலாகவும் நாம் இரு நம்பிக்கை நட்சத்திரங்களின் ஒளியைத் தரிசிக்கிறோம். எதிர்காலத்தில் நம்பிக்கையோடுதான் நாவல் நிறைவு பெறுகிறது.

ஆனால் படித்து முடித்த பின்பும் நம்மிடம் நல்லுணர்ச்சிகளையும், நற்சிந்தனைகளையும் தூண்டிவிடும் நாவல் இது. புற அழகில் மூழ்கியுள்ள கிராமத்துத் தெருவின் அகத்தோற்றத்தை நமக்கு எடுத்துக் காட்டும் முயற்சி. இதில் இவர் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.

திருமதி வாஸந்தி இனிய எளிய மொழிநடையில் எழுதுகிறார். பாத்திரப் படைப்புக்களை அவர்கள் சொற்கள் வாயிலாகவும் செயல்கள் வாயிலாகவும் பளிச்சென்று துலக்கிக் காட்டுகிறார். கதைப் பின்னலில் செயற்கைத் தன்மையில்லை. எல்லாம் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளே. வெளிப்படையாக அவர் எங்கும் ஓங்கிய குரல் எழுப்பவில்லையென்றாலும், இந்தக் கதையின் வாயிலாக அவர் வாயில்லாப் பூச்சிகளான கிராமத்துப் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் போராடும் துடிப்புக் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறார்.

மீண்டும் சொல்கிறேன்: நான் அண்மைக்காலத்தில் படித்த நாவல்களில் எனக்கு மன நிறைவைத் தந்த உயிர்த் துடிப்புள்ள நாவல் இது. ஆசிரியை திருமதி வாஸந்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

அன்புள்ள, அகிலன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125404076
Aakasa Veedugal

Read more from Vaasanthi

Related to Aakasa Veedugal

Related ebooks

Reviews for Aakasa Veedugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aakasa Veedugal - Vaasanthi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    ஆகாச வீடுகள்

    Aakasa Veedugal

    Author :

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    முன்னுரை

    ‘ஆகாச வீடுகள்’ நாவலைப் படித்து முடித்தவுடன், அண்மைக் காலத்தில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த நாவல் ஒன்றைப் படித்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. ‘தினமணி கதிரில்’ இது வெளிவந்தபோது எனக்குப் படிப்பதற்கு ஓய்வு கிடைக்கவில்லை. மேலும் இப்போது வெளிவரும் பல தொடர்கதைகள் வாழ்க்கையோடு சிறிதும் தொடர்பற்றவையாகவும் நுனிப்புல் மேய்பவையாகவும் இருக்கின்றன. ‘பத்திரிகைகளில் இன்று தொடர் கதைகளாக வருபவற்றில் சிறந்த தரமான படைப்புக்களும் இருக்கின்றன’ என்பதற்கு இந்த ‘ஆகாச வீடுகள்’ ஓர் எடுத்துக்காட்டு.

    நகரவாசியாக இன்று விளங்கும் பெண்மணி ஒருவர் கிராம வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ள கதை இது. கிராமத்தின் ஒரு பகுதியான அக்ரஹாரத்தின் கதை. அக்ரஹாரத்தில் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக்கொண்டு, அந்தக் குடும்பத்தோடு பழகும் வேறு சில குடும்பங்களின் நிலையையும் வெகு நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறார்.

    பச்சை வயல்களும், பட்சிகளும், நதியும் இருக்கிற இடத்திலே வாழற மனசிலே கல்மிஷமே இருக்க முடியாது. பட்டணத்து ஜனங்களுக்கு மனிதத் தன்மையே போய்விட்டது. ஆன்மாவே இல்லாத வெறும் கூடுகள் மாதிரி போய்விட்டது. இயற்கைக்கு நடுவில் இருப்பவர்களுக்குத்தான் மனசிருக்கும்… அன்பிருக்கும்… காருண்யம் இருக்கும்… உன்னைக் கிராமத்திலே நிலபுலன்களைப் பார்த்துக்கற ஒரு பையனுக்குத்தான் கொடுக்கப்போறேன் என்ற லலிதாவின் அப்பா, அப்படியே கான்வென்டில் நகரத்தில் படித்த தம் பெண்ணை ஒரு கிராமவாசியான சபேசனுக்குக் கொடுக்கிறார்.

    சபேசன் பி.ஏ. படித்தவன். நில புலன்கள் உள்ளவன். கொஞ்சம்கூட டாம்பீகம் இல்லாதவன். குடி, சீட்டாட்டம், பிற பெண்களோடு பழக்கம் இல்லாதவன். ஆனால்?

    ஆனால்? இந்த ‘ஆனால்?’ தான் ஆகாச வீடுகளின் அடித்தளம்.

    இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறது?

    அந்தக் கிராமத்து அக்ரஹாரத்திலுள்ள சில குடும்பங்களின் சோகக் கதைகளை மிக உருக்கமாக இதில் வெளியிடுகிறார் ஆசிரியை. கசப்பான உண்மைகளை இவர் எந்த இடத்திலும் பூசி மெழுகவில்லை. அதே சமயம் கசப்பான உண்மைகள் என்பதற்காக இவர் அவற்றைப் ‘பச்சையாகச் சொல்கிறேன்’ என்று விரசமாக்கவும் இல்லை! ‘கிராமங்கள் இவ்வளவு மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றனவே’ என்ற ஆசிரியையின் பெருமூச்சு இந்த நாவல் எங்கும் இழையோடுவதைத்தான் நான் காணுகின்றேன்.

    இந்த ஊர் ரொம்ப அழகாயிருக்கு. இங்கே இருக்கிறவா எப்படிப் பொழுதைக் கழிக்கிறா? என்று, வீட்டு வேலைக்காரி லக்ஷ்மியைக் கேட்கிறாள் பட்டணத்திலிருந்து வந்துள்ள பெண் மீனு.

    ஊர் நல்லாத்தான் இருக்கு. ஜனங்க ரொம்ப மோசம் மீனு. பொழுதைக் கழிக்கத் தெரியாம நாசமாப் போயாச்சு ஊரு. சீட்டாட்டம், சூதாட்டம், குடி, பொம்பளை - இந்தத் தெருவையே எடுத்துக்க, ஒவ்வொரு வீட்டிலேயும் ஒரு பயங்கரக் கதை இருக்கும் என்கிறாள் லக்ஷ்மி.

    அந்த ஒவ்வொரு வீட்டின் ஒவ்வொரு பயங்கரக் கதையையும் இதில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் திருமதி வாஸந்தி. சபேசன்-லலிதா குடும்பத்தின் கதைபோல் இது தோன்றினாலும், வேறுசில குடும்பங்களின் கதைகளும் ஊடும் பாவும்போல் வெகு இயற்கையாக இதில் பின்னிப் பிணைந்துள்ளன.

    இந்த நாவலில் நான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது இதில் உள்ள பாத்திரப் படைப்புத்திறன். துண்டு துண்டாக, தனித்தனியாக, அவரவருக்கே உரிய பண்புகளோடும் பண்புக் குறைவுகளோடும் அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    குடும்பத் தலைவி லலிதாவை ஓர் உன்னதமான லட்சியப் படைப்பென்றே சொல்ல வேண்டும். லலிதாவைப்போல் கூட இந்தக் காலத்தில் பெண்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகம் நமக்கு வரும். அவள் தன் கணவனின் கொடுமைகளுக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கலாகாதா என்றுகூட நமக்குத் தோன்றும். லட்சியப் பாத்திரங்கள் நாவலில் இருக்கக் கூடாதென்பதில்லை. எத்தனையோ லலிதாக்கள் நம்மையறியாமல் இன்னும் எங்கெங்கோ இருக்கத்தான் செய்வார்கள்.

    அவள் கணவன் சபேசன்:

    ‘கடுகடுவென்றிருக்கும் அந்த முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் என்றைக்காவது இவர் முகத்தில் பிரசன்னம் தோன்றாதா ஈச்வரா?’ என்று நினைத்துக் கொண்டாள் லலிதா.

    சபேசனின் பேச்சுக்களும் செயல்களும் எவ்வளவு கொடுமையானவை என்பதை நாம் அவன் வரும் ஒவ்வொரு கட்டத்திலும் காண முடிகிறது.

    சென்னையிலிருந்து அந்தக் கிராமத்துக்கு வந்துள்ள பெண் மீனு. சபேசனின் சகோதரி மகள். அந்தப் பெண் தான் ஆசிரியையின் கருத்துக்களைத் துணிந்து வெளியிடுவதற்கு ஆசிரியையால் உருவாக்கப்பெற்ற பாத்திரமோ என்று நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. பாரதி படைத்த புதுமைப் பெண்ணின் சாயலைக் கொண்டிருக்கிறாள் மீனு. சபேசனோடு துணிந்து மோதக்கூடிய ஒரே பாத்திரம் இவள் தான்.

    மீனு! உனக்குப் பதினைஞ்சு வயசா இல்லை, ஐம்பத்தொண்ணான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு என்கிறாள் லலிதா. உண்மைதான். வயதுக்கு மீறிய அவள் பேச்சைக் கேட்கும்போது நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

    சபேசன்-லலிதா தம்பதியரின் ஒரே மகன் ராஜு. ஓரளவு மனவளர்ச்சியற்ற பையன்தான் அவன். ஆனால் என்ன அற்புதமான படைப்பு அது! தாய்மை உள்ளத்திலிருந்து பிறந்த அந்தக் குழந்தை நம்மால் எளிதில் மறக்க முடியாதவனாக மாறிவிடுகிறான். அவனுக்காக நாம் பதைக்கிறோம்; துடிதுடிக்கிறோம்; கண் கலங்குகிறோம்; கடைசியில் நீண்ட பெருமூச்சு விடுகிறோம்.

    பாலு வாத்தியாரின் மனைவி, அவரையும் தன் பிள்ளை கிருஷ்ணனையும் விட்டு வேறு சாதிக்காரனோடு ஓடிப்போகிறாள். அவள் ஏன் ஓடிப்போனாள்?

    அந்த ஓடிப்போன ருக்மிணியே பேசுகிறாள்; பாதி நாள் சோத்துக்கு வழியில்லே. உலையிலே வைக்க ஒரு மணி அரிசி கிடையாது. வர்ற சம்பளத்திலே ‘மனுஷனுக்குக் குடியும், சூதாட்டமும். நானும் குழந்தைகளும் பட்டினியோட இருக்கறச்சே ஒருத்தர் வந்து ஒன்றும் கேக்கலே. பள்ளிக்கூடத்திலே வாத்தியாரா இருக்கேளே, நீங்க இப்படி நடக்கறது நியாயமா’ன்னு இவரை ஒருத்தர் ஒண்ணு கேக்கலே… இங்கேயே இருந்தேன்னா இந்த அக்ரஹாரம் உட்காத்தி வெச்சு எனக்குச் சாப்பாடு போடுமா?

    ருக்மணி ஓடிப்போனவள் என்றால், இதே நிலையிலுள்ள அந்தத் தெருவின் மற்றொரு குடும்பத்துப் பெண் சரோஜா தூக்குக் கயிற்றில் தொங்குகிறாள்.

    இவ்வாறு அந்த அழகான கிராமத்தின் அக்ரஹாரத்தில் நாம் குடியும், கூத்தியும், சீட்டாட்டமுமாக உள்ள ஆண்களையும், இந்தக் கெட்ட பழக்கங்கள் எதுவுமே இல்லாத ஆனால் குரூரமே சுபாவமாகக் கொண்ட சபேசனையும், வேதனையால் வெந்து தணியும் பெண்களையும், ஓடிப்போகும் சிறுவர்களையும் காணுகின்றோம். ஓடிப்போவதும், தற்கொலை செய்துகொள்ளுவதும் அந்தக் கிராமத்துப் பெண்களும் குழந்தைகளும் தாங்கள் அந்த வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளச் செய்யும் முயற்சிகள்.

    இதற்கு விடிவே கிடையாதா?

    புதிதாக அந்தக் கிராமத்தில் வந்து தங்கி, அங்கே ஒரு மருத்துவமனை தொடங்க விரும்பும் இளைஞன் ஹரிஹரன் வாயிலாகவும், அந்தக் கிராமத்திலேயே ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தத் துணிந்த மீனுவின் வாயிலாகவும் நாம் இரு நம்பிக்கை நட்சத்திரங்களின் ஒளியைத் தரிசிக்கிறோம்.

    எதிர்காலத்தில் நம்பிக்கையோடுதான் நாவல் நிறைவு பெறுகிறது.

    ஆனால் படித்து முடித்த பின்பும் நம்மிடம் நல்லுணர்ச்சிகளையும், நற்சிந்தனைகளையும் தூண்டிவிடும் நாவல் இது. புற அழகில் மூழ்கியுள்ள கிராமத்துத் தெருவின் அகத்தோற்றத்தை நமக்கு எடுத்துக் காட்டும் முயற்சி. இதில் இவர் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.

    திருமதி வாஸந்தி இனிய எளிய மொழிநடையில் எழுதுகிறார். பாத்திரப் படைப்புக்களை அவர்கள் சொற்கள் வாயிலாகவும், செயல்கள் வாயிலாகவும் பளிச்சென்று துலக்கிக் காட்டுகிறார். கதைப் பின்னலில் செயற்கைத் தன்மையில்லை. எல்லாம் இயல்பாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளே. வெளிப்படையாக அவர் எங்கும் ஓங்கிய குரல் எழுப்பவில்லையென்றாலும், இந்தக் கதையின் வாயிலாக அவர் வாயில்லாப் பூச்சிகளான கிராமத்துப் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் போராடும் துடிப்புக் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறார்.

    மீண்டும் சொல்கிறேன்: நான் அண்மைக்காலத்தில் படித்த நாவல்களில் எனக்கு மன நிறைவைத் தந்த உயிர்த் துடிப்புள்ள நாவல் இது. ஆசிரியை திருமதி வாஸந்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    சாந்தோம்,

    மயிலாப்பூர்

    சென்னை - 4

    அன்புள்ள,

    அகிலன்.

    1

    ஈரமண் தரையில் புள்ளிகள் பளிச் பளிச்சென்று விழுந்தன. புள்ளிகளைச்சுற்றி மேலும் கீழும் பக்கவாட்டிலும் பரபரவென்று ஓடிய கோடுகளில் தாமரை இதழ்கள் விரிந்தன. கொடிகள் வளைந்தன; கிளிகள் உட்கார்ந்தன.

    எத்தனை பெரிய ஆர்ட்டிஸ்ட் மன்னி நீங்க?

    கோலத்துக்குச் சற்றுத் தள்ளி இருந்த திண்ணையில் உட்கார்ந்திருந்த மீனுவின் கால்கள் உற்சாகத்துடன் ஆடிக்கொண்டிருந்தன. சிவந்த மெல்லிய பாதங்களில் நேற்று இரவு இட்டுக்கொண்ட மருதோன்றி இரத்தமாய் ஜொலித்தது. நலங்கிட்ட பாதங்களின் மேல் மெல்லிய வெள்ளிக்கொலுசு. அந்தப் பாதத்தின் ஒவ்வொரு விரலையும் தனித்தனியாய் எடுத்துக் கொஞ்ச வேண்டும் போலிருந்தது லலிதாவுக்கு.

    ‘ஓ, இவள் என்னவோ சொன்னாளே?’

    என்ன மீனு?

    எத்தனை அழகாகக் கோலம் போடறேள், மன்னி! ரொம்பப் பெரிய ஆர்ட்டிஸ்ட் நீங்க.

    லலிதா சிரித்தாள். எந்தப் பதிலும் சொல்லாமல் கிளிகளின் இறக்கைகளைச் சரி செய்துவிட்டு, நிமிர்ந்தாள்.

    எப்படி மன்னி நீங்க இப்படி இருக்கேள்?

    எப்படி?

    சதா சிரிச்சுண்டு, சதா வேலை செஞ்சுண்டு… எப்பவும் பரபரத்துண்டு…

    லலிதா மறுபடியும் சிரித்தாள்.

    செல்லமாக மீனுவின் கன்னத்தில் தட்டினாள்.

    நல்ல பெண் நீ. வீடுன்னா வேலை இருக்காதா? அதை நான் செய்யல்லேன்னா யார் செய்வா?

    இந்த மாதிரி சிரிச்சுண்டே செய்றவாளைப் பார்த்ததில்லே!

    காலங்காத்தாலே என்ன அரட்டை அங்கே வாசல்லே! காப்பீ கீப்பீ ஏதானும் உண்டா இன்னிக்கு?

    சட்டென்று கோலமாவுக் கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு லலிதா உள்ளே விரைந்தாள்.

    பளிச் பளிச்சென்று சபேசன் வெற்று மார்பில் விபூதிப் பட்டைகளை இடும் வேகத்தில் கோபம் தெரிந்தது.

    ‘ஓ, இவர் அதுக்குள்ளே குளிச்சு வந்தாச்சா’ என்கிற திகைப்புடன் இத்தனை நேரம் கோலம் போட்டது தப்பு தான் என்கிற குற்ற உணர்வுடன் லலிதா சமையற்கட்டுக்குள் விரைந்துகொண்டே சொன்னாள்.

    இதோ ஒரே நிமிஷம். கொண்டு வரேன்.

    எதெது எப்ப செய்யணும்கிற விவஸ்தையே இல்லே இந்த வீட்டிலே!

    லலிதா பதிலே சொல்லாமல் காப்பியைக் கலந்து கொண்டு வந்து ஊஞ்சல் மேல் வைத்தாள்.

    சபேசன் தனக்கு இன்னும் கோபம் ஆறவில்லை என்பதை காண்பிப்பதற்காக டக்கென்று காலித் தம்ளர் டபராவை ஊஞ்சலில் திருப்பி வைத்தார்.

    மீனு உள்ளே எட்டிப் பார்த்தாள். மாமா காப்பி குடித்துவிட்டார் என்ற நிச்சயத்துடன் உள்ளே வந்தாள்.

    மாமா, வாசல்லே வந்து பாருங்கோ. மன்னி எத்தனை நன்னா கோலம் போட்டிருக்கா தெரியுமோ?

    ஆமாமாம் அதுக்கெல்லாம் குறைச்சலில்லே இந்த ஆத்திலே. சாஸ்திரத்துக்கு இரண்டு இழை இழுப்பா. மணிக்கணக்கா வாசல்லே நின்னுண்டு அரை டப்பா கோலப் பொடியை வீணாக்கிண்டு, இதெல்லாம் வீடு உருப்படற் காரியம் இல்லே!

    சபேசன் கொடியிலிருந்த ஒரு சட்டையை உருவி அவசரமாய்ப் போட்டுக்கொண்டு நைந்துபோன செருப்புக்குள் கால்களைத் திணித்துக்கொண்டு சரக்சரக்கென்று கருணையேயில்லாமல் வாசல் மணல் தரையில் விரிந்திருந்த கிளிகள் மேல், மலர்கள்மேல் கனமாகப் பாதங்கள் அழுந்த வெளியில் செல்வதை மீனு விக்கித்துப் போனவளாய்ப் பார்த்தாள். கிளிகளும் தாமரைகளும் அமுங்கிக் கலங்கிப் போயின. விழியில் நீர்கோத்து நின்ற மாதிரி.

    மீனு!

    அவள் அவசரமாக உள்ளே திரும்பினாள்.

    என்ன மன்னி?

    காப்பி குடிக்கல்லியா?

    வரேன்.

    காப்பியை மௌனமாகக் குடித்துவிட்டு மீனு மெள்ளக் கேட்டாள்.

    இந்த மாமா தினமும் இந்த மாதிரிதான் நடந்துப்பாரா?

    லலிதா முகத்தில் எந்தவிதச் சலனமுமில்லாமல்,

    எப்படி நடந்துக்கறார்? என்றாள்.

    எப்பப் பார்த்தாலும் சிடுசிடுத்துண்டு கோச்சுண்டு…!

    லலிதா சிரித்தாள்.

    ஒவ்வொருத்தர் சுபாவம் ஓரொரு மாதிரி இருக்கும். நான் சிரிச்சாலும் ஆச்சரியப்படறே. அவர் கோச்சுண்டாலும் ஆச்சரியப்படறியே?

    மீனுவின் முகத்தில் யோசனைக் கோடுகள் தெரிந்தன. அதைக் கவனிக்காத மாதிரி லலிதா கொடியடுப்பில் பருப்பை வைத்துவிட்டு வெண்டைக்காயை நறுக்க உட்கார்ந்தாள்.

    நான் நறுக்கட்டுமா மன்னி?

    நறுக்கேன்! கையை வெட்டிக்காமெ நறுக்கத் தெரியுமா?

    ஓ!

    ராஜுவை எழுப்பணும் என்று தனக்குள் முணு முணுத்துக்கொண்டு லலிதா உள் அறைக்குச் சென்றாள்.

    ராஜு அயர்ந்த நித்திரையில் இருந்தான். தூக்கத்திலும் முகத்தில் ஒரு பயமும் கையாலாகாத்தனமும் தெரிந்தன. அந்த முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனசில் ஏற்படும் சஞ்சலம் இப்பவும் ஏற்பட்டது. பிரவாகமாய் ஏதோ ஒன்று கிளம்பி நெஞ்சையடைத்துக் கொண்டு கண்களைப் பனிக்கச் செய்தது.

    ராஜு!

    அவன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து பேந்தப் பேந்த விழித்தான்.

    எழுந்திருடா கண்ணா. மணியாயிடுத்து.

    இன்னும் தூக்கம் வரதே?

    கண்ணிலே தண்ணியைக் கொட்டிண்டு மூஞ்சியாலம்பிக்கோ, தூக்கம் போயிடும்.

    அவன் எழுந்தான்.

    அப்பா இருக்காராம்மா? என்றான் மெள்ள.

    இல்லே. வயலுக்குப் போயிட்டார்.

    சட்டென்று அவனுடைய பார்வையும், தசைகளும் இளகின மாதிரி அவளுக்குப் பிரமையேற்பட்டது. மனசை ஒரு சோகம் அழுத்திற்று. எதற்கும் கலங்காத இந்த மனசு இவனைப் பார்க்கும்போது மட்டும் ஏன் கலங்குகிறது என்று அவள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.

    மீனு தலையைக் குனிந்துகொண்டு ரொம்ப சிரத்தையாக வெண்டைக்காயை நறுக்கிக் கொண்டிருந்தாள். இந்தப் பெண்ணுக்குப் பார்வையும் புத்தியும் எவ்வளவு தீர்க்கமானது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது. பட்டணத்திலிருந்து விடுமுறையைக் கழிக்க வந்திருக்கும் இவள் ஒரு மாதத்தில் காண்பதெல்லாம் எந்த அளவுக்குக் கிரகித்துக்கொண்டு சஞ்சலப்படப் போகிறாளோ என்று கவலையேற்பட்டது.

    ஏன் மன்னி, ப்ரஷர் குக்கர் வாங்கிக்கக் கூடாதோ?

    அதெல்லாம் விறகடுப்பிலே சரிப்பட்டு வராது மீனு!

    இந்த ஊரிலே கெரஸின் கிடைக்கிறதில்லே?

    கிடைக்கிறதே?

    பின்னே ஏன் இப்படி விறகைக் கட்டிண்டு பிராணனை விடறேள்?

    லலிதா பெரிதாகச் சிரித்தாள்!

    எங்கே? என்னைச் சரியாப் பாரு, இதைவிடக் கெட்டியான உசிரை நீ பார்த்திருக்கியோ?

    மீனு ஒரு விநாடி ஒரு லேசான புன்னகையுடன் அவளைப் பார்த்துவிட்டு காயைத் தொடர்ந்து நறுக்க ஆரம்பித்தாள். இவளுடைய வயசுக்கு இவளுக்கு அறிவு அதிகம்தான் என்று நினைத்தபடி லலிதா ராஜுவுக்குக் காப்பியைக் கலந்து வைத்தாள்.

    எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிருக்கு மன்னி?

    லலிதாவுக்கு மறுபடி சிரிப்பு வந்தது.

    சரியாப் போச்சு போ. இப்ப எதைக் கண்டு ஆச்சரியம்?

    காஸ் அடுப்பு, குழாய் ஜலம், ஃபிரிஜ்ஜுனு எத்தனையோ சௌகர்யம் இருக்கு மெட்ராஸிலே. இருந்தாலும் அம்மா எதுக்காவது முணுமுணுத்துண்டேயிருப்பா. காஸ் சில சமயம் தீர்ந்து போச்சுன்னா சட்டுனு கிடைக்காது. அப்போ கெரஸின் அடுப்பிலே சமைக்க வேண்டிவரும். இதிலே எத்தனை நேரமாறதுன்னு அம்மா அலுத்துக்கிற அலுப்பைப் பார்க்கறச்சே இந்த காஸ் எப்படாப்பா வரப்போறதுன்னு எங்களுக்கெல்லாம் ஆயிடும்.

    லலிதா தனக்குள் சிரித்துக் கொண்டாள். மீனுவின் அம்மா பாலாவின் நினைவு வந்தது. நிதானமே இல்லாத பாலா, ஆத்திரமும் கோபமும் படபடப்பும் கொண்ட பாலா, திடீர் சிரிப்பும் திடீர் ஆங்காரமும் காட்டும் பாலா, அண்ணனுக்கு ஏற்ற தங்கை. அவளைக் கல்யாணம் செய்து கொடுக்கும்வரை அவள் குணத்தைக் கண்டு ஆச்சரியமாக இருக்கும். இந்த மாதிரி ஒரு பெண் ஒருத்தனோடு பொருந்தி எப்படிக் குடித்தனம் செய்யப் போகிறாள் என்று கவலையேற்படும். அந்தக் கவலைக்கெல்லாம் ஏதும் அர்த்தமில்லாமல் போய் விட்டது. நல்ல வேளையாய் பாலாவுக்கு நேர் எதிரிடையாய்க் கணவன் சாமிநாதன் இருக்கிறார். வாயே திறக்காமல், அதிர்ந்தே பேசாமல், எந்தக் கேள்வியையும் கேட்காமல், செலவைப் பற்றிக் கணக்குக் கேட்காமல் எப்படிப்பட்ட பாலன்ஸ் அது!

    அவளுக்குச் சிரிப்பு வந்தது. சட்டென்று மனசின் மூலையில் ஒரு சின்னக் கீறல் ஏற்பட்டது.

    அதிர்ந்தே பேசாத, அதட்டாத, செலவைப்பற்றி காசைப் பற்றிப் பேசாத ஒரு மனிதனாய் சபேசன் இருந்திருந்தால் இந்த வீடு எப்படி இருந்திருக்கும்?

    வாசலில் போட்ட கோலம் மாலைவரை அழியாமல் இருக்கும்; சின்னச் சின்னக் கனவுகள் பூக்க ஆரம்பித்திருக்கும். பதினைந்து வயசுப் பெண்ணின் மனசு அதிர்ந்து இப்படித்தான் மாமா எப்பவும் இருப்பாரா என்று கேட்காமல் இருந்திருக்கும். காலையில் கண் விழிக்கும்போதே எட்டு வயசுக் கண்கள் பயத்தோடு அப்பா இருக்காரா என்று கேட்காமல் இருக்கும்…

    அவள் சட்டென்று சுயநினைவுக்கு வந்தாள். இவை என்ன உபயோகமற்ற சிந்தனைகள்?

    ராஜு இன்னும் காப்பி குடிக்க வரவில்லை என்று ஞாபகத்துக்கு வந்தது. அவள் அவசரமாகக் கொல்லைக் கிணற்றடிக்குச் சென்றாள்.

    கிணற்றை ஒட்டினாற்போல் இருந்த தோய்க்கிற கல்லின்மேல் உட்கார்ந்தபடி ராஜு எதிரில் இருந்த தென்னை மரத்தின் மேலும் கீழும் ஓடிக்கொண்டிருந்த ஒரு அணிலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    ராஜு!

    அவனுடைய உடல் தூக்கிவாரிப் போட்டுத் திரும்பிற்று.

    ஓ! நாம் இவ்வளவு பலக்கக் கூப்பிட்டிருக்கக் கூடாது என்கிற உணர்வு அவளுள் ஒரு விசனத்தை ஏற்படுத்திற்று.

    பல் தேய்ச்சு காப்பி குடிக்க வா என்றாள் அவள் மிருதுவாக.

    வரேன் என்று அவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

    அவள் சில விநாடிகள் அந்த முதுகைப் பார்த்தபடி நின்றாள். இந்தப் பிள்ளை வேறே எங்கேயாவது பிறந்திருக்க வேண்டும். அல்லது அப்பாவுக்கு ஜோடியாக முரட்டுத்தனத்தோடு பிறந்திருக்க வேண்டும். இப்படி இரண்டும் கெட்டானாய்ப் பிறந்து, பூ மாதிரி ஒரு மனசாய்.

    இந்த பிஞ்சு எப்படி வளரப்போகிறது?

    ‘என்னுடைய பிராரப்த கர்மம்!’

    விவரம் தெரிந்த நாளிலிருந்து இதே வார்த்தையை தந்தையின் நாவிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் இது எந்தமாதிரி மனுஷனாய் உருவாகப் போகிறது?

    …சீக்கிரம் பல் தேய்ச்சுட்டு வாடா ராஜு!

    அவன் எழுந்திருப்பதை கவனித்துவிட்டு அவள் உள்ளே வந்தாள்.

    யாரோ ஆண்பிள்ளை நடையில் நிற்பது தெரிந்தது.

    அவள் மெல்லிய குரலில்,

    யாரது? என்றாள்.

    நான்தான் என்றபடி முனிசிபல் ஸ்கூல் வாத்தியார் பாலு தன் பையன் கிருஷ்ணனைத் தோளில் சுமந்தபடி உள்ளே வந்தார்.

    என்ன, கிருஷ்ணனுக்கு உடம்பு சரியில்லையா?

    ஆமாம். ராத்திரியிலேருந்து ரொம்ப ஜுரம். நான் டவுன்லேருந்து டாக்டரை அழைச்சுண்டு வரேன். அது வரைக்கும் இவனை இங்கே படுக்க வெச்சுட்டுப் போகட்டுமா?

    ஓ. தாராளமா போங்கோ. நான் பார்த்துக்கறேன்.

    லலிதா விரைந்து கூடத்திலிருந்த பெஞ்சின் மேல் ஜமுக்காளத்தை விரித்துத் தலையணையை வைத்தாள்.

    கிருஷ்ணனை பெஞ்சில் கிடத்திவிட்டுப் பாலு தயங்கி நின்றார்.

    உங்களுக்குக் கஷ்டம் ஒண்ணுமில்லையே?

    நிச்சயமா இல்லே. நீங்க போயிட்டு வாங்கோ.

    இன்னும் ஏதேனும் பேச்சுக் கொடுத்தால் அவர் கண்ணில் ஜலம் வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது.

    ரொம்ப தாங்க்ஸ். உங்களுக்கு என்று சொல்லிவிட்டு அவர் போகையில் அவளுக்குப் பாவமாக இருந்தது.

    யார் மன்னி இவர்?

    "இந்த ஊர் ஸ்கூல்லே

    Enjoying the preview?
    Page 1 of 1