Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sariyaa? Sariyaa?
Sariyaa? Sariyaa?
Sariyaa? Sariyaa?
Ebook127 pages1 hour

Sariyaa? Sariyaa?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூர்ணிமா என்ற பெண்ணுக்கும் டாக்டராக பணிபுரியும் ஹரிஹரன் என்பவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான ஒரே வாரத்தில் ஹரிஹரன் வெளிநாடு செல்கிறான்.

இதற்கிடையில் பூர்ணிமா - ஆனந்த் காதல் மலர்கிறது. பூர்ணிமா – ஹரிஹரன் விவாகரத்து நடைபெறுமா? அல்லது பூர்ணிமா ஆனந்த் காதல் நிறைவேறுமா? வாங்க எது சரி என்பதை வாசித்து அறியலாம்.

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580125407765
Sariyaa? Sariyaa?

Read more from Vaasanthi

Related to Sariyaa? Sariyaa?

Related ebooks

Reviews for Sariyaa? Sariyaa?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sariyaa? Sariyaa? - Vaasanthi

    http://www.pustaka.co.in

    சரியா? சரியா?

    Sariyaa? Sariyaa?

    Author :

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அந்தப் பெண்களுக்கு ஆறிலிருந்து எட்டு வயதுக்குள்தான் இருக்கும். ஐந்து பேர்கள் மொத்தம். அவற்றில் இரண்டு பொடிசுகள் கவுனில் இருந்தன. மற்ற மூன்றும் பாவாடை சட்டை. எல்லோருடைய கவனமும் வெகு தீவிரமாக நிலத்தில் சற்று எட்டப் பதிந்திருந்தது.

    கட்டாந்தரையில் கரித்துண்டினால் வரையப்பட்ட பெரிய பாண்டிக் கட்டங்களில் பார்வை பதிந்திருந்தது. கட்டத்துக்கு முதுகுப்புறம் காட்டிப் பாவாடை அணிந்த ஒரு பெண் கையிலிருந்த ஓட்டுச் சில்லைப் பாங்காக வீசினாள்... பிறகு ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய ஆணைக்குக் கட்டுப்பட்ட மாதிரி அடக்கமாகக் கட்டத்துக்குள் அது அமர்ந்திருந்தது. அவள் தனது கைகளை ஆர்வத்துடன் கொட்டி மற்றப் பொடிசுகளைப் பார்த்து, ʻஎப்படி?’ என்று வீராங்கனையைப் போல் சிரித்தாள்.

    சரி, சரி. அதோட ஆட்டம் முடிஞ்சுதா? இனிமேத்தான் தெரியும் உன் சாமர்த்தியம்? என்றது இன்னொரு பாவாடை.

    அதையும் பார்த்துடுவம்டி! என்று ஆட்டக்காரி சவால் விட்டாள். தனது இடது பாதத்தைத் தூக்கி வலது காலால் நொண்டி நொண்டி முன்னேறி, சில்லை எடுத்துப் படக்கென்று லாகவத்துடன் திரும்பித் தலையில் வைத்துக் கண்களை மூடிக் கொண்டாள். இரண்டு கால்களையும் அகற்றிக் கட்டங்களில் ஜாக்கிரதையாக வைத்து, சரியா? என்றபடி முன்னேற, சுற்றியிருந்த கும்பல், ʻசரி... சரி...’ என்று குரல் கொடுத்தது.

    வாசலில் ஈசிசேரில் அமர்ந்திருந்த பூர்ணிமா அந்தப் பொடிசுகளின் ஆட்டத்தில் ஒன்றிப் போன ஆர்வத்துடன் பார்த்தாள்:

    சரியா?

    கண் மூடிய முகம் வானை நோக்கி இருந்தது. மெல்லிய கோதுமை நிறக் கழுத்தில் இளம் நரம்புகள் புடைத்திருந்தன.

    இல்லே, இல்லே, தப்பு! கோட்டை மிதிக்கிறே!

    வானை நோக்கிய முகம் சட்டென்று கீழ்நோக்கிக் கண் திறந்தது.

    பூர்ணிமாவுக்குத் தானே கோட்டின் மேல் நிற்பது போல் இருந்தது.

    ʻசட்! கடைசி கட்டத்திலே மிதிச்சுத் தொலைச்சேன்!’

    அடுத்தவள் எழுந்தாள். பாவாடைக் கொசுவத்தின் டெஸ்டெட் ஜரிகை இளம் வெய்யிலில் பளபளக்க, ʻசரியா... சரியா...?’ என்று நகர ஆரம்பித்ததும், பூர்ணிமா எழுந்தாள். ʻநமக்கு வேண்டாம் இந்த டென்ஷன்,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    சமையலறைக்குச் சென்று காஸில் தேநீருக்கு நீர் வைத்து ஜன்னல் வழியே பார்த்தபோது மீண்டும் அந்தப் பாண்டியாட்டம் கண்ணில் பட்டது. இப்பொழுது ஒரு கவுன் நின்றிருந்தது. கட்டங்களில் பட்டுப் போன்ற குரலில் சரியா? சரியா?

    கொதிக்கும் நீரில் டீத்தூளைப் போட்டு; ʻஇந்த வாண்டுதான் ஜெயிக்குமோ?’ என்கிற குழந்தைத்தனமான ஆர்வத்துடன் அவள் நின்றாள். கடைசியில் யாரும் கோட்டை மிதிக்காமல் கட்டத்தைத் தாண்ட முடியவில்லை. சமயம் அறிந்து அவரவர் அம்மாக்கள் குரல் கொடுக்க எல்லோரும் சிட்டாய்ப் பறந்து போனார்கள்.

    காலியாகிப் போன அந்த இடத்தையும், கரித்துண்டினால் வரையப்பட்டப் பாண்டிக் கட்டத்தையும் பூர்ணிமா சற்று நேரம் வெறித்துப் பார்த்துவிட்டுத் தேநீரைக் கலந்து எடுத்துக் கொண்டு மீண்டும் வாசலை நோக்கிய அந்தச் சின்னத் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டாள்.

    தெரு கிட்டத்தட்ட வெறிச்சோடிக் கிடந்தது. சற்று நேரத்தில் இருண்டுவிடும். இப்பொழுதே சாம்பல் நிறப் படுதா சரசரவென்று விரிய ஆரம்பித்திருந்தது. தொலைவில் இந்த மேட்டுக்குக் கீழ் சரிந்து இறங்கிய மலைத் தொடரில் வெய்யில் திட்டு இன்னும் இள மஞ்சளாய் தெரிந்தது. இந்த மஞ்சள் சற்று நேரத்தில் கறுத்துவிடும். என்கிற அவசரத்தில் வானத்தில் பட்சிகள் கூடு நோக்கிப் பறந்தன - வெள்ளையாய், பச்சையாய், கறுப்பாய்.

    பூர்ணிமா உட்கார்ந்த நிலையில் அண்ணாந்து பார்த்தாள்.

    மாலை நேரங்களில் இந்தக் காட்சிகளைத் தவிர வேறு அவளுக்குப் பொழுதுபோக்கில்லை. மழையில்லாத நாட்களில், பக்கத்து வீட்டு நீரஜாவுடன் நடந்துவிட்டு வரலாம். மழை இல்லாமல் போனாலும், நீரஜாவின் கணவன் கிருஷ்ணமூர்த்தி விடுமுறைக்கு வந்துவிட்டானானால் நீரஜாவின் கால்கள் தரையில் இருக்காது. ஆகாசத்தில் இருக்கும். தனியாகப் பெண்கள் இங்கு நடப்பதும் கஷ்டம். மழை வருவதும் இருட்டுவதும் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று வயிற்றெரிச்சல் கொட்டும்.

    இன்று சனிக்கிழமை. நேற்றே கிருஷ்ணமூர்த்தி வந்துவிட்டான். நாளை மாலை வரை இருப்பான். அவன். மதுரையில் இருப்பது எத்தனை சௌகர்யம்!

    பூர்ணிமாவுக்குக் கிட்டத்தட்டக் கண்களில் நீர் நிறைந்தது. தான் பலவீனப்பட்டுப் போகக் கூடாது என்று எத்தனை கட்டுப்படுத்திக் கொண்டாலும் இந்தக் கண்கள் வெட்கமில்லாமல் நீர் சொரிந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் இந்தக் கிருஷ்ணமூர்த்தி வரும்போதெல்லாம் ஒரே சுவர். இரண்டு போர்ஷனுக்கும் தடுப்பாக இருந்த காரணத்தால் நீரஜாவும் அவனும் அடிக்கும் லூட்டி காதில் துல்லியமாக விழும் போதெல்லாம் கண்களில் நீர் தேங்கும். தலையணையில் முகத்தைப் புதைத்து அழத் தோன்றும்.

    நீரஜாவுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை.

    ஏண்டி பூர்ணிமா, செலவானா ஆயிட்டுப் போகுதுன்னு நீதான் ஒரு முறை போயிட்டு வாயேன்? என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.

    அங்கெல்லாம் போயிட்டு வர்றது அவ்வளவு சுளுவில்லை, என்று அவள் விளக்கும் போது மட்டும் புரிந்து கொண்டு பரிதாபப்படுவாள். பிறகு மறுபடி அதே புலம்பல். இல்லேன்னா அந்த ஆளை இங்கே வரச் சொல்றது! புருஷனும் பெண்டாட்டியும் சேர்ந்து இருக்க முடியாதுங்கிற பட்சத்திலே உங்க வீட்டிலே அரக்கப் பரக்கக் கல்யாணமே செய்திருக்க வேண்டாம்...

    இங்கு இந்த ஊரில் அக்கம் பக்கத்துப் பெண்களும் கல்லூரியில் மெஸ்ஸில் படிக்கும் சக மாணவிகளும் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ மாணவிகள் இங்கு டாக்டர் பட்டப் படிப்புப் படிப்பதற்காக வந்தவர்கள் தனியாக இருப்பவர்கள். அநேகம் பேருக்குக் கல்யாணமாகவில்லை. எந்த நிர்ப்பந்தத்தாலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இல்லை அவளைப்போல. அவள் இங்கு படிக்க வந்ததே ஒரு நிர்ப்பந்தம்.

    உன் புருஷன் வெளிநாட்டிலே. இருக்காரா? ரொம்ப நல்லதாப் போச்சு. உன்னாலேதான் நேரத்துக்குத் தீஸிஸ் எழுதி முடிக்க முடியும். கல்யாணமானவர்களெல்லாம் இங்கே படுகிற அவஸ்தையைப் பார். வாரா வாரம் புருஷன்கள் வந்துவிடுகிறார்கள். படிப்பிலே கவனத்தைத் திருப்பறது, எம்பாடு உம்பாடு என்று ஆயிடுது, என்றாள் மிஸஸ் லோகநாதன் எடுத்த எடுப்பில்.

    தெருக்கோடியில் நீரஜாவின் சிரிப்பொலி கேட்டது. மங்களான

    Enjoying the preview?
    Page 1 of 1