Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal... Kanavugaley...!
Kaadhal... Kanavugaley...!
Kaadhal... Kanavugaley...!
Ebook136 pages1 hour

Kaadhal... Kanavugaley...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது காதல் என்ற மெல்லிய இழையால் பின்னப்பட்ட நாவல். அதையும் தாண்டி ஒரு பெண்ணின் போராட்டத்தை மையப்படுத்தியும் எழுதப்பட்டுள்ளது.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று போற்றப்படும் காலகட்டங்களில் பெண்களின் பங்கு எல்லாத்துறைகளிலும் வியாபித்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும் இன்னும் சில துறைகளில் அதற்குரிய முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது தான் உண்மை. அப்படிப்பட்டதான ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு அதாவது கதாநாயகியின் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டதுதான் இந்த நாவல்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580129507984
Kaadhal... Kanavugaley...!

Read more from Daisy Maran

Related to Kaadhal... Kanavugaley...!

Related ebooks

Reviews for Kaadhal... Kanavugaley...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal... Kanavugaley...! - Daisy Maran

    https://www.pustaka.co.in

    காதல்... கனவுகளே...!

    Kaadhal… Kanavugaley...!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8

    அத்தியாயம்-9

    அத்தியாயம்-1௦

    அத்தியாயம்-11

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15

    அத்தியாயம்-1

    வண்ண விளக்குகளாலும், வாசனை மலர்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த பிரமாண்டமான விழா மேடை. அது ஒரு திரைப்பட விருது விழா என்பதால் ஆயிரத்துக்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் தங்கள் குழும்பத்தாரோடு வந்து அங்கே குழுமியிருந்தனர்.

    சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் 2020 ஆம் ஆண்டிற்கான விருதை பெறுபவர் பவித்ரா தேவேந்திரன் ‘காதல்... கனவுகளே!’ என்ற திரைப்படத்திற்காக வாங்க உள்ளார். அவரை விழா மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.!!

    என்று விழா தொகுப்பாளர் ஒலிப்பெருக்கியில் அறிவித்தவுடன் கரகோஷம் வானைப்பிளந்தது.

    புன்னகை படிந்த முகமும் எளிய தோற்றமுமாய் மேடையேறி வந்தாள் துணை நடிகை பவித்ரா. அவளை வரவேற்று புகழாரம் சூடினார்கள். பிறகு பிரபல தமிழ் நடிகரின் கையால் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை கைகளில் வாங்கியவள், தொகுப்பாளரின் காதில் எதையோ கிசு கிசுக்க,

    இந்த விருது பவித்ரா மேடத்துக்கு கிடைக்க முக்கிய காரணமான நடிகை புஷ்பா அவர்களை மேடைக்கு வருமாறு அழைகிறோம். என்று ஒலிப்பெருக்கியில் அறுவித்தார். மறுநிமிடமே சிறு வெட்கத்தோடு மேடையேறி வந்தாள் துணை நடிகை புஷ்பா.

    குட் ஈவினிங் எவரி படி... அனைவருக்கும் மாலை வணக்கம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி வணக்கம் சொல்லிவிட்டு, இந்த விருது எனக்கு கிடைத்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆனால் இந்த விருது அவ்வளவு எளிதாக எனக்கு கிடைத்துவிடவில்லை. இதற்கு பின்னால் பல வலிகளும், பல வேதனைகளும் இருக்கிறது. அதையெல்லாம் கடந்துதான் இந்த விருது எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இந்த மேடையில் நிற்பதற்கு முழு காரணமே இந்த புஷ்பா அக்காதான் இவங்க மட்டும் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கை சீர்குலைந்துப் போயிருக்கும். பெயர் முகவரி இன்றி தொலைந்துப் போயிருப்பேன். என்னை அரவணைத்து அடைக்கலம் கொடுத்து நடிப்பதற்கு ஊக்கம் கொடுத்தவர் இதோ நிற்கிறார்களே இந்த அக்காதான். அதனால் இந்த விருதை புஷ்பா அக்கா பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்...என்று பவித்ரா புஷ்பாவிடம் அந்த மெமெண்டோவை கொடுத்தபோது ஆனந்த கண்ணீரோடு பவித்ராவை கட்டித் தழுவிக்கொண்டாள் புஷ்பா.

    சில மணித்துளிகளுக்கு பிறகு...

    விழா அரங்கிலிருந்து வெளியில் வந்த பவித்ராவை மீடியாக்கள் சூழ்ந்துக்கொண்டது. புன்னகையோடு அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறினாள் பவித்ரா.

    "வணக்கம் இந்த விருது கிடைத்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அதே சமயத்தில் சில விஷயங்களை உங்கள் முன் வைக்க விருப்புகிறேன். நடிகைகள் என்றால் சுகங்களை அனுபவிக்கிறார்கள் என்ற தவறான எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நடிகைகளின் வாழ்க்கை சந்தோஷமாக இல்லை என்பது தான் உண்மை.

    பாதிக்கும் மேற்ப்பட்ட நடிகைகள் நெருக்கடியில் வாழ்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிவதில்லை. நடிகைகளின் எழுவது சதவீதம் பேர் முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள். ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி உழைக்கிறார்கள். படப்பிடிப்பில் ‘ஷாட் ரெடி!’ என்று அழைத்ததும் போய் நிற்க வேண்டும். மனதில் என்ன கஷ்டம் நஷ்டம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடிக்க வேண்டும். இப்போதைய நடிகைகள் பல மொழிகளில் நடிக்கிறார்கள் அவர்களுடைய வாழ்க்கை சென்னை,ஐதராபாத்,பெங்களூர்,மும்பை,என்று பயணத்திலேயே கழிகிறது. சொந்த பணிக்காக நேரம் ஒதுக்க முடியாது. குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது.

    நான் சினிமாவுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் படப்பிடிப்புக்காக ஓய்வின்றி ஓடிக்கொண்டே தான் இருக்கிறேன்.

    அதுமட்டுமல்ல தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள வேண்டியுள்ளது. சாதாரண பெண்களை பார்க்கும் போது நம்மால் அவர்களைப்போல் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே? என்ற வருத்தம் ஏற்படுகிறது. நடிகைகள் நிறைய தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது. தொடர்ந்து நீடிக்க வாய்ப்புகளுக்காகவும் அலைய வேண்டியுள்ளது. டைரக்டர் சொல்வதை கேட்டு நடக்கவேண்டும். இதற்கிடையில் எவ்வளவு போட்டி பொறாமைகள் கிசுகிசுக்கள் என எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழவேண்டிய இக்கட்டான நிலைமை."

    கடைசியாக ஒரு கேள்வி உங்க வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாக ஒரு செய்தி வந்தது உண்மையா மேடம்...

    ஆமாம்... எனக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் மொத்தத்தையும் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன். அதை கொண்டுதான் அவர்கள் படம் எடுக்க போவதாய் சொல்லி இருக்கிறார்கள்.

    சூப்பர்... வாழ்த்துக்கள் மேடம்... என்று அந்த கூட்டம் கலைந்து சென்றது.

    "பவித்ராம்மா... வீட்டுக்கு வரீயா... ? கைகளை பற்றியப்படி கேட்ட புஷ்பாவிடம்,

    அக்கா... இன்னொரு நாளைக்கு வரேங்க... அவர் எனக்காக காத்துகிட்டு இருப்பார். இந்த அவார்டை அவர் கையில் கொடுக்கணும் என்று சொல்லிவிட்டு காரில் ஏறினாள் பவித்ரா.

    மேடம் போகலாமா... டிரைவர் கேட்டதற்கு, ம்ம்... ஆஸ்பிடல் போங்க... என்று பதில் சொன்னவளின் பார்வை அருகில் இருந்த டைரியின் மேல் படிந்தது. அதை கையில் எடுத்து மெல்ல புரட்டினாள். அவளின் எண்ணவோட்டம் பின்னோக்கி சென்றது.

    ***

    இரண்டு வருடங்களுக்கு முன்பு...

    சென்னை என்றதும் அதன் பிரிக்க முடியாத வாசனையாக கூவம் ஆறும் நினைவுக்கு வரும். துர்நாற்றம் வீசும் சாக்கடை. மூக்கைப் பிடித்துக்கொண்டுக் கடக்கப்பட வேண்டிய கழிவுக் கால்வாய், கறுப்பு ஆறு. இப்படியாக இருந்த சூழலில் கூவத்தின் கரையோரம் இரு நூற்றி ஐம்பது ஸ்கொயர் பீட் அளவில் அமைந்திருந்தது பவித்ராவின் ஆஸ்பரோ சீட் போட்ட வீடு.

    பவி... பவித்ரா கதவை திறம்மா... இன்னமுமா தூங்குற கதவைத் திற பவித்திரா...

    புஷ்பாவின் குரல் பவித்திராவை எழுப்பியதோ இல்லையோ!? அக்கம்பக்கத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிவிட்டது.

    ஆழ்ந்த தூக்கத்திலிருந்த பவித்திரா கிணற்றுக்குள்ளிருந்து யாரோ அழைப்பது போல் உணர்ந்தாள். மெல்ல கண்களை திறந்து சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு தன்னை தான் அழைக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு எழுந்து வந்து வாசற்கதவை திறந்தாள்.

    வெளியில் புஷ்பா முழு மேக்கப்பில் இருந்தாள்.

    "வாங்க... புஷ்பாக்கா... உள்ளே வாங்கக்கா... பரவாயில்லை செருப்பை அங்கேயே விட்டுட்டு வாங்க... இப்படி வந்து உட்காருங்க... இன்னைக்கி ஸூட்டிங் ஏதாவது இருக்கா என்ன? என்று கேட்கும் போதே பவித்ராவின் விழிகள் சுவற்றில் தொங்கிய காலண்டரை அலசியது.

    ஆமாம் பவித்ரா... இல்லேன்னா இவ்வளவு காலங்காத்தால வந்து உன்னை எழுப்புவேனா?

    புஷ்பா சொன்னதை கேட்டதும் பவித்திராவின் முகம் மலர்ந்தது.

    அக்கா... எங்கக்கா ஷூட்டிங்க்? நைட்டே சொல்லிருந்தா… இந்நேரத்துக்கு ரெடியாகி இருப்பேல்லே... ஓகே எத்தனை மணின்னு சொல்லுங்க ஒரு அஞ்சே நிமிஷத்துல மேலுக்கு ஊத்திகிட்டு வந்துடுறேன். ஷூட்டிங் ஃபுல்டேவா? ஆப் டேவா? அக்கா? அப்பாடா! இனி ரெண்டு நாளைக்கு சாப்பாட்டுக்கு கஷ்டமில்லை என்ற நிம்மதி அவள் கண்களில் நிலைத்தது.

    அரைநாள் தான் பவித்திரா... ஆனால் நடிக்கப்போவது நீ இல்லை... உன்னுடைய பொண்ணு

    அக்கா... என்னக்கா சொல்றே?அதிர்ந்த முகத்துடன் கேட்டாள் பவித்ரா.

    "பவித்திரா... இன்னைக்கு நடக்குற ஷூட்டிங்லே ஐஞ்சு வயசு பொம்புள புள்ளையை கடத்துற மாதிரி

    Enjoying the preview?
    Page 1 of 1