Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unakkaga Kaathirukkum Idhayam!
Unakkaga Kaathirukkum Idhayam!
Unakkaga Kaathirukkum Idhayam!
Ebook116 pages44 minutes

Unakkaga Kaathirukkum Idhayam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் என்பதை மிகவும் அழகானது. காதல் என்ற ஒரு சொல் மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே உயிரற்ற பொருளாகத்தான் இருந்திருக்கும். காதல் என்பது உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல அதையும் தாண்டி ஒரு உயிரோட்டமுள்ள உணர்வுபூர்வமான விஷயம்.

காதலை தவறாக பார்க்கிற கண்ணுக்கும், நெஞ்சுக்கும் அதன் உள்ளார்ந்த அழகும் அர்த்தமும் புலப்படுவதில்லை. உடல் கடந்து உள்ளத்திற்குள் புகுந்து காதலைக் கொண்டாடுவோரின் வாழ்வில் இறுதி மூச்சுவரை இன்பத்திற்குப் பஞ்சமில்லை. காதல் என்பது கண்களின் தேடல் அல்ல; உள்ளத்தின் தேடல், உயிரின் தேடல். இப்படி உலகத்தையே இயங்க வைத்துக் கொண்டிருக்கும் காதலை மையமாக வைத்து எழுதப்பட்டது தான் இந்த நாவல்.

தெளிந்த நீரோடையாக செல்லும் வாழ்க்கை பாதையில் திடீரென்று ஒரு சுழற்சி வந்து திசைமாறி செல்கிற சூழல் உருவாகி விடுகிறது. இருவரின் வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிடுகிறது. வாழ்க்கையில் அவர்கள் ஜெயித்தார்களா இல்லையா அதைப்பற்றி தெரிந்து கொள்ள முழு நாவலையும் படியுங்கள் என் அன்பு உள்ளங்களே...!!!

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580129510285
Unakkaga Kaathirukkum Idhayam!

Read more from Daisy Maran

Related to Unakkaga Kaathirukkum Idhayam!

Related ebooks

Reviews for Unakkaga Kaathirukkum Idhayam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unakkaga Kaathirukkum Idhayam! - Daisy Maran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உனக்காக காத்திருக்கும் இதயம்!

    Unakkaga Kaathirukkum Idhayam!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/daisy-maran

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 1

    அவலாஞ்சி...!

    ஊட்டியிலிருந்து இருபத்தெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல் பாவானிக்கு செல்லும் வழியில் இருந்தது இந்த அவலாஞ்சி. அவலாஞ்சியின் அழகை வார்த்தைகளால் சொல்லி முடித்துவிட முடியாது. அவ்வளவு அழகோஅழகு!. அதுமட்டுமல்ல போகும் வழியில்தான் எமரால்டு வனம் இருந்தது.

    அந்த பனிப்படர்ந்த மலையின் உச்சியில் நின்றப்படி நீண்டு வளைந்து நீர்கோடு போல் ஓடும் நதியையும், பசுமையின் குவியலாய் தோற்றமளிக்கும் பள்ளத்தாக்கையும் வெறித்துக் கொண்டிருந்தாள் மௌனிகா. உடல் ஜெர்க்கினுக்குள் அடங்கிக்கிடந்தது.

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடந்த அழகான பசுமையோ! அதை தழுவி செல்லும் குளிர்காற்றோ! அடிக்கடி முகத்தை மோதி மயிர்க்கால்களை சிலிர்க்க வைக்கும் பனிபடர்ந்த மேகங்களோ! இவை எதுவுமே அவள் கருத்தைக் கவர்வதாக இல்லை. மாறாக மன அழுத்தத்தைதான் அதிகப்படுத்தியது.

    கவலைதோய்ந்த முகமும் சோகம் அப்பிக்கிடந்த கண்களும் அவள் மன வேதனையை வெளிப்படையாகவே கோடிட்டுக்காட்டியது. நிம்மதியைத் தேடி இங்கு வந்தால் அது எட்டா கனியாய் போனது ஒருபக்கம் என்றாலும் அதைவிட அதிகமான வேதனையையும் துன்பத்தையும் உண்டாக்கியது வந்த இடம்.

    இத்தனைநாளும் இவளுடைய மனச்சோர்வுக்கு வேதனைக்கும் மூலகாரணமாய் இருந்த அவனை இனி சந்திக்கவே போவதில்லை என்றிருந்தவளின் நிம்மதி அவனை சந்தித்த பிறகு மொத்தமாக பறிபோனது. தற்செயலாக அவனை சந்திக்க நேர்ந்ததுதான் சோகத்திலேயே பெரிய சோகமாக முடிந்தது.

    நீ...என் உயிர், உனக்காக என் உயிரையும் கொடுப்பேன். நீ இல்லாத இந்த உலகத்தில் எனக்கு வாழ்க்கையும் இல்லை நிம்மதியும் இல்லை. இப்படியெல்லாம் டயலாக் பேசி அவளை கவர்ந்தவன்தான் இப்போது எதிரியாகவும், விரோதியாகவும் தெரிகிறான். மீண்டும் அவனை சந்திக்கக்கூடாது என்று அனைத்து கடவுளையும் வேண்டிக்கொண்டுதான் இங்கு வந்திருந்தாள். ஆனால் எந்த கடவுளும் அவள் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை.

    இங்கு வந்த சில நாட்களிலேயே அவனை அதாவது இவளுடைய மொத்த சந்தோஷத்தையும் பறித்துக்கொண்டவனை சந்திக்க வைத்து கொஞ்சம் நஞ்சமிருந்த நிம்மதியையும் அடியோடு துடைத்துப்போட்ட அத்தனை கடவுளையும் சபித்து தள்ளினாள். இந்த ஊருக்கு வந்தால் கண்டிப்பாக அவனை சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்தில்தான் இத்தனை நாளும் ஊட்டியையே மறந்திருந்தாள். ஆனால் பெற்றோர்கள் தீவிர மாப்பிள்ளை வேட்டையில் இறங்கிவிடவே, இனியும் அங்கிருந்தால் இவளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் துன்பம் நேரிடும் சூழ்நிலை உருவானது.

    மகளின் மன நிலையை உணர்ந்த பெற்றோர்கள் ஊட்டியில் இருக்கும் தன் மகன் மணிமாறன் வீட்டில் இவளை அழைத்துவந்து விட்டுவிட்டு சென்றார். மௌனிக்காவுக்கும் இடமாற்றம் தேவைப்பட்டது. ஆனால் அது ஊட்டியாக இருக்கக்கூடாது என்பதுதான் அவளுடைய வேண்டுதலாக இருந்தது. ஆனால் அவளுடைய வேண்டுதல் நிறைவேற வில்லை. அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வந்த பிறகு மௌனிகா வெளியில் எங்கும் செல்லாமல் வீடே கதி என்று முடங்கி கிடந்தாள். ஆனால் எத்தனை நாளைக்குதான் வீட்டுக்குள்ளே கிடப்பாய்? வா...ஷாப்பிங் போயிட்டு வரலாம். என்று அண்ணன் அழைக்கவே, மறுக்க முடியாமல் போனபோதுதான் அவனை பார்க்கும் சூழ்நிலையும் உருவானது.

    மௌனீ...மௌனீ...

    பின்பக்கமிருந்து இவள் பெயர் சொல்லி யாரோ அழைக்கும் குரல் கேட்டவுடன் தான் இயல்புநிலைக்குத் திரும்பினாள் மௌனிகா. அழைத்தது யாரென்று பார்த்தால் இவளை அழைத்தது இவளுடைய அண்ணி சாந்தி.

    அண்ணியின் குரலை தொடர்ந்து,

    அத்தை கீழே வாங்க...ரொம்ப ஹைட் போயிட்டீங்க! விழுந்திட போறீங்க... என்று தன் மொத்த சக்தியையும் திரட்டி கத்திக் கொண்டிருந்தாள் அண்ணன் மகள் வினி. வினியின் குரல்கேட்டு சில மரங்களில் பறவைகளின் சலசலப்பை உணரமுடிந்தது.

    இதோ வரேன்... நீ அங்கேயே இரு! என்று பதில் உரைத்தபடி மெல்ல மலையிலிருந்து தட்டுத்தடுமாறி கீழே இறங்கினாள் மௌனிகா. ஏறும்போது எளிமையாக இருந்த மலை இறங்கும்போது அவள் மனதைப்போல பாரமாய் இருந்தது.

    இதற்கு அப்புறமும் இங்கு இருந்தால் மூன்று பேரும் அவளைத் தேடிக் கொண்டு மேலேயே வந்து விடுவார்கள். என்று எண்ணியது அவளின் மனம். அதற்கு காரணம் அவள் மேல் உள்ள தீராத பாசத்தையும் தாண்டி சில நாட்களாய் மாறுபட்டிருந்த அவளின் மனநிலையும் ஒரு காரணம். எதன்மேலும் விருப்பமில்லாமல் எவரோடும் சரியாக பேசாமல் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததுதான் அதற்கு காரணம். எதனால் தங்கை இப்படி இருக்கிறாள் என்று தெரியாவிட்டாலும் அவள் மேல் எப்போதுமே ஒரு கண் இருக்கட்டும் என்று எச்சரித்துவிட்டு சென்றிருந்த அப்பா தர்மலிங்கத்துக்காக அவளை கவனத்துடனே வைத்திருந்தனர்.

    ஏற்பாடு பண்ணப்பட்ட திருமணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கட்டாயப்படுத்தினீர்கள் என்றால் தற்கொலை தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தவளை, ‘உன் மனசுக்கு ஒரு இடமாற்றம் தேவை, அதனால் நீ உன் அண்ணன் வீட்டில் கொஞ்ச நாட்கள் இரு’ என்று அழைத்து வந்து இங்கே விட்டு விட்டு சென்றார் அவளுடைய அப்பா. ஏன் இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்று கேட்ட அண்ணன் அண்ணியிடம் திருமணத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கை வரும்போது நானே சொல்கிறேன். என்ற பதிலோடு முடித்துக்கொண்டாள். அதன் பிறகு திருமணம் என்ற பேச்சையே எடுக்கவில்லை அண்ணன் அண்ணி இருவரும். தங்கைக்கு இடமாற்றம் மட்டுமல்ல மனமாற்றமும் தேவை என்று எண்ணியவன் இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு குடும்பத்தினரை இந்த அவலாஞ்சிக்கு அழைத்துவந்திருந்தான்.

    "மழை ஆரமிக்கிறது போகலாமா மௌனி...?

    சரிண்ணா...

    தங்கையை யோசனையோடு பார்த்தான். முன்பானால் மழை என்றாலே துள்ளிகுத்தித்துக்கொண்டு ‘ஆசையா இருக்கு கொஞ்சம் நனைந்துவிட்டுதான் வரேனே!?’ என்று பிடிவாதம் பிடிக்கும் அதே தங்கைதான் இப்போது குரலில் சுரத்தே இல்லாமல் சரி என்று பதிலளிக்கிறாள். தங்கியிருக்கும் அறைக்கு திரும்பும் வழியில் ‘எம்ரால்ட்’ ஏரியை பார்த்துவிட்டு போகலாமா சார் என்றான் இவர்களுடன் வந்த கைடு.

    வேண்டாண்ணா தலைவலிக்குது ரூமுக்கு போகலாம். என்றபடி வலதுகையால் தலையைப்பிடித்து நீவிவிட்டாள்.

    டாடி அந்த லேக்குக்கு போகலாம் டாடி... என்று சிணுங்கிய வினியை கண்களால் அடக்கியவன்,

    Enjoying the preview?
    Page 1 of 1