Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velli Nilavey...
Velli Nilavey...
Velli Nilavey...
Ebook185 pages2 hours

Velli Nilavey...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிலிட்டரிக்குச் சென்ற காதல் கணவன் இறந்துவிட, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நாயகியின் கணவன் திடுமென திரும்பி வந்து நின்றால்? அதுவும் அவனும், அவன் சார்ந்த உறவுகளும் அவனை ஏற்கச் சொன்னால் அவள் என்ன செய்வாள்? விடை அறிய படியுங்கள் வெள்ளி நிலவே.

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580109210150
Velli Nilavey...

Read more from Infaa Alocious

Related authors

Related to Velli Nilavey...

Related ebooks

Reviews for Velli Nilavey...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velli Nilavey... - Infaa Alocious

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெள்ளி நிலவே...

    Velli Nilavey...

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நிலவு – 1

    நிலவு – 2

    நிலவு – 3

    நிலவு – 4

    நிலவு – 5

    நிலவு – 6

    நிலவு – 7

    நிலவு – 8

    நிலவு - 9

    நிலவு – 10

    நிலவு – 11

    நிலவு – 12

    நிலவு – 13

    நிலவு – 14

    நிலவு – 15

    நிலவு – 16

    நிலவு – 17

    நிலவு – 18

    நிலவு – 1

    முழு பௌர்ணமி நாள்... அண்ணாமலையாரை தரிசிக்க பக்தர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு கிரிவலம் போகும் தினம். அனைவரது மனங்களிலும், அண்ணாமலையாரைக் காண ஒரு வேண்டுதலும், பக்தியும், பரவசமுமாக இருக்க, அந்த கூட்டத்துக்குள் ஒருத்தியாக நடந்து கொண்டிருந்தாள் அவள்...

    ‘வள்ளி...’

    கண்களில் ஒருவித வலியும், மனதுக்குள் பெரும் பாரமும், இதழ்களின் அண்ணாமலையாரின் நாமமுமாக நடந்து கொண்டிருந்தவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான் முருகன்.

    டேய் முருகா, இன்னும் எத்தனை வருஷம்டா இப்படியே அவ பின்னாடியே சுத்திகிட்டு இருக்கப் போற? எனக்கென்னவோ இது ஆவற காரியம் மாதிரி தெரியலை முருகனின்ன் நண்பன் நாகராஜ் சற்று கோபமும், சலிப்புமாக நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

    நாகா... எல்லாம் நல்லபடியா நடக்கும்... நீ வேண்ணா பாரு... நான் தேடி வர்ற இந்த அண்ணாமலையார் என்னை கைவிட மாட்டார் அவன் நம்பிக்கையாகச் சொல்ல, நாகராஜ் நம்பிக்கையின்றி அவனைப் பார்த்தான்.

    நீ இப்படி சொல்ற, வள்ளி என்ன நினைக்கறாளோ யாருக்குத் தெரியும்? இப்படிச் சொன்னவனை ஒரு பெருமூச்சோடு ஏறிட்டான்.

    எனக்கு என்னவோ இந்த முறை அவ என்னை கட்டிக்க சம்மதிப்பான்னு தோணுதுடா அவன் உறுதியாகச் சொல்ல, நாகராஜுக்கு என்னவோ அது நடக்கும் என்றே தோன்றவில்லை.

    நான் ஒண்ணு சொல்லவா? அவன் கேட்க,

    எப்படியும் நீ ஏடாகூடமாத்தான் எதையாவது சொல்லப் போற, அதை ஏன் கேட்டுகிட்டு? சும்மா சொல்லு... சொன்னவன் தன் கழுத்தில் இருந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டான்.

    எனக்கு ஒரு சந்தேகம்டா... அவன் இழுக்க,

    இப்போதான் எதையோ சொல்லப் போறேன்ன? இப்போ என்னவோ சந்தேகம்னு சொல்ற? ஏதோ ஒண்ணு, சீக்கிரமே சொல்லு அவனை அவசரப்படுத்தியவன், தன் தாயும், வள்ளியும் தன் கண் பார்வையில் இருந்து மறைந்துவிடாதவாறு பார்த்துக் கொண்டான்.

    இல்லடா... நீ வள்ளி உன்னை கட்டிக்கணும்னு வேண்டிகிட்டு வர்ற. வள்ளியோ அவ செத்துப் போன புருஷன் சரவணன் நினைப்பு தனக்கு மறந்துடக் கூடாதுன்னு வேண்டிகிட்டு இருப்பா. இப்போ இந்த அண்ணாமலையார், யார் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்? இப்படிக் கேட்டவனை கொலைவெறியில் முறைத்தான்.

    இதைச் சொல்லத்தான் என்கூட வர்றியா? நான் மிதிக்க முன்னாடி இங்கே இருந்து போயிரு முருகன் கோபமாகச் சொல்ல, நாகராஜ் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

    நீயே யோசிச்சுப் பாருடா... எத்தனை வருஷம்? நீ அவகிட்டே பேசி ஒரு முடிவெடுக்க வேண்டிய நேரம்டா... அவன் அக்கறையாகச் சொல்ல, அது முருகனுக்கும் புரிந்தது.

    எனக்கும் தெரியுதுடா... ஆனா என்ன செய்யட்டும்? அவளை கட்டாயப்படுத்தச் சொல்றியா? இப்படிக் கேட்டவனை அழுத்தமாகப் பார்த்தான்.

    சில விஷயத்தில் ஓவர் பொறுமையும் உடம்புக்கு ஆகாதுடா... பாத்துக்க. பிறகு நான் சொல்லலைன்னு வேண்டாம்... அவன் சொல்லிவிட்டு நடையை எட்டிப் போட, முருகனுக்குள் பெருத்த யோசனை.

    ‘இவன் சொல்றதும் சரிதானே... இந்தா, அந்தான்னு மூணு வருஷம் ஓடிப் போச்சே’ எண்ணியவனுக்கு என்ன செய்வது எனப் புரியாத குழப்பம்.

    தன் பார்வையை முன்னால் செலுத்த, வள்ளியும், அவனது தாய் மரகதமும் எதையோ பேசிக்கொண்டு செல்வது அவனுக்குத் தெரிந்தது.

    ‘அம்மாகிட்டே பேசிப் பாக்கச் சொன்னோமே, அம்மா செய்யுமா?’ எண்ணியவனுக்கு அப்பொழுதும் தயக்கம் தான்.

    என்னடா, ஏதோ பெருசா யோசிக்கற? அத்தனை நேரமாக அமைதியாக இருந்த நாகராஜ் கேட்டான்.

    இல்ல, அம்மாகிட்டே பேசிப் பாக்கச் சொல்லலாமான்னு யோசிக்கறேன் இப்படிச் சொன்னவனை மறுப்பாகப் பார்த்தான்.

    உங்க அம்மாவா? என்னடா சொல்ற? சற்று அதிர்வாகவே கேட்டான்.

    நான் அம்மாகிட்டே சொல்லிட்டேன் டா... அவன் சொல்ல, நாகராஜுக்கு தன் காதையே நம்ப முடியவில்லை.

    என்னது சொல்லிட்டியா? என்னன்னு? கண்களை அகல விரித்து பதறினான்.

    நான் வள்ளியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு சொன்னன் அவன் சாதாரணமாகச் சொல்ல, நாகராஜுக்கு ஆச்சரியம்.

    அதுக்கு உங்க அம்மா எதுவும் சொல்லலையா? எங்க வீட்ல மட்டும் நான் இப்படி சொல்லி இருக்கணும், எனக்கு விளக்கமாறு பிய்யப் பிய்யப் அடி கிடைச்சிருக்கும்" சொன்னவன் எச்சில் கூட்டி விழுங்கினான்.

    என்னைக்கா இருந்தாலும் அவங்களுக்கு தெரியப்போற விஷயம் தான? அவன் சாதாரணமாகச் சொல்ல,

    அது என்னைக்கோன்னு நினைச்சு தைரியமா இருக்கலாம். இது... உங்க அம்மா உனக்கு சோத்துல விஷத்தை வச்சுப்புடாமடா... பாத்துக்க அவன் எச்சரிக்கையாகச் சொல்ல, முருகன் இமைகளை மூடி அண்ணாமையாரிடம் தஞ்சம் புகுந்தான்.

    ‘ஆண்டவா, எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுப்பா’ மனமுருக வேண்டிக் கொண்டான்.

    ஆனாலும் வள்ளிக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்டா... நாகராஜ் வருத்தமாகச் சொல்ல, முருகனுக்கும் அதே நினைப்புதான் என்பதை அவனது முகமே எடுத்துக் காட்டியது.

    வீட்டை எதிர்த்து, வெளியே வந்து, வாழ்ந்து காட்டப் போறேன்னு சவால் விட்டு, இப்போ இப்படி வாழ்க்கையையே தொலைச்சுட்டு நிக்கறதைப் பாக்கவே கஷ்டமா இருக்குடா... நாகராஜ் சொல்லி முடிக்கையில், வள்ளியும், தாயும் ஒரு இடத்தில் அமர, தாங்களும் சற்று தூரத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

    அவன் வள்ளியைப் பார்க்கையில், அந்த பௌர்ணமி நிலவின் ஒளியில் வரி வடிவமாக அவளைக் காணவே, கண்களை இமைக்க கூட செய்யாமல் பார்த்திருந்தான்.

    பேரழகி எனச் சொல்லமுடியவில்லை என்றாலும், பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் ஒரு தோற்றம். நீளக் கூந்தல், ஐந்தடி உயரம், ஒடிசலான தேகம், கண்களில் ஒரு தீட்சண்யம்... அதுதான் அவனுக்கு அவளிடம் பிடித்தது.

    எதையும் ஆய்ந்து முடிவெடுக்கும் பாங்கு, அதில் உறுதியாக இருக்கும் அந்த தைரியம் என அனைத்தும் அவனுக்கு முன்பே பிடிக்கும். அந்த பிடித்தம் வேறாக இருந்தது.

    அந்த பிடித்தம்... அது என்று அவனது அண்ணன் சரவணன் இந்த உலகத்தில் இருந்து இல்லாமல் போனானோ, அப்பொழுது முதல் அவளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தனக்கு இருப்பதாக முடிவெடுத்துக் கொண்டான்.

    அந்த முடிவு நாள்பட, நாள்பட மெல்லிய அன்பாக, சிறு பாசமாக, பெரும் நேசமாக, காட்டாற்று காதலாக உருமாறி அவனை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.

    வள்ளிக்கு இப்போ என்ன வயசு இருக்கும்? நாகராஜ் கேட்க,

    அவ காலேஜ் கடைசி வருஷம் படிக்கறப்போ அண்ணா அவளை கல்யாணம் பண்ணான். அது முடிஞ்சு, அடுத்து ரெண்டு வருஷம் ஓடிப் போச்சே. இப்போ இருவத்தினாலு வயசு இருக்கும் சொன்னவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

    இந்த வயசிலேயே அவ வாழ்க்கை முடிஞ்சிருக்க வேண்டாம். உன் அண்ணா அவசரப்பட்டுட்டான்டா... அவன் மட்டும் அந்த பதினைஞ்சு நாள் லீவ்ல வராமல் இருந்திருந்தா, இது எதுவுமே நடந்து இருக்காது நாகராஜ் சொல்ல, முருகனின் எண்ணங்கள் அந்த நாளுக்கே சென்றது.

    முருகனின் சொந்த அண்ணன்தான் சரவணன். நானும் கல்லூரிக்குச் செல்கிறேன் என பேர் பண்ணிக் கொண்டு கல்லூரி சென்று வந்தவனுக்கு இறுதியில் அத்தனையும் அரியராக மட்டுமே அவன் படிப்பு முடிவுக்கு வந்தது.

    அவன் கல்லூரி முடித்த நேரம், அதே கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள் வள்ளி. சரவணனுக்கு வேலை வெட்டி எதுவுமில்லாமல், ஊரில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் வெட்டியாக அமர்ந்து பொழுதைக் கழிக்க, அங்கே பஸ் ஏற வந்த வள்ளியின்மேல் அவனது பார்வை பட்டது.

    முதலில் சாதாரணமாகத் துவங்கிய பார்வைகள், ஒரு கட்டத்தில் தேடல் பார்வையாக உருமாறி, அடுத்ததாக அவளுக்காகவே அந்த பேருந்தில் பயணித்து, இறங்கி, பின்னால் சுற்றி என ஒரு வருடம் கடந்திருந்தது.

    இருவரது வீடும் நடுத்தர வர்க்கம் என்றாலும், வள்ளியின் வீட்டினர் கொஞ்சம் அப்பர் மிடில்கிளாஸ் குடும்பம். அப்பா போஸ்ட் ஆபீசில் வேலை பார்க்க, தாய் தோட்டம் துரவுகளை பார்த்துக் கொண்டார்.

    வள்ளியை நன்கு படிக்க வைத்து, ஒரு கவர்மென்ட் ஆபீசருக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது வள்ளியின் அப்பா, தேவனின் எண்ணமாக இருந்தது.

    அதை அவன் காதலைச் சொன்ன அன்றே வள்ளி அவனிடம் சொல்லிவிட, காலேஜில் மொத்தமும் அரியர் வைத்திருப்பவனுக்கு எந்த கவர்மெண்ட் வேலை கிடைக்குமாம்?

    அப்பொழுதுதான் அங்கே மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும் கேம்ப் போட, வள்ளி சொல்லி, விளையாட்டாக சென்றவன், உடல் தகுதியில் தேர்வாகி, எழுத்து தேர்விலும் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நினைப்பில் பிடிவாதமாக படித்து, அப்பொழுதே செலெக்ட் ஆனான்.

    அவன் அப்படி மிலிட்டரிக்குத் தேர்வானதில் அவளுக்கு கொள்ளை சந்தோஷம். அடுத்த ஒரு வருடம், அவனது ட்ரெயினிங்கில் கடக்க, முதல் போஸ்டிங் அவனுக்கு பங்களாதேஷ் பார்டரில் கொடுக்கப் பட்டது.

    அங்கு செல்வதற்கு முன்னர், வள்ளியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், லீவ் கொடுக்க மாட்டோம் எனச் சொல்லியும், பிடிவாதமாக பதினைந்துநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வள்ளியைப் பார்த்துச் செல்ல வேண்டி வந்தான்.

    அவள் மிளிட்டரிக்குச் செல்கிறேன், செலெக்ட் ஆகிவிட்டேன் எனச் சொன்னபொழுது அவனது தாய் மரகதத்துக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

    என்னடா இது திடீர்ன்னு பட்டாளத்துக்குப் போறேன்னு வந்து நிக்கற? நம்ம நிலத்தை எல்லாம் பாத்தாலே போதுமே... எதுக்கு அங்கே போகணும்? உள்ளுக்குள் பெரும் சந்தோஷம் இருந்தாலும், அவனை விட்டுப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற நினைப்பில் கேட்டார்.

    போஸ்ட் மாஸ்டர் அவர் பொண்ணை கவர்மெண்ட் ஆபீசருக்குதான் கட்டிக் கொடுப்பாராம்... அதான்... ட்ரெயினிங் செல்லும் பொழுதே, தன் நினைப்பையும் தாயிடம் சொல்லிவிட்டுதான் அங்கிருந்து சென்றான்.

    கணவன் இறந்த பிறகு, இரண்டு மகன்களையும் கட்டுப்படுத்தி வளர்க்க மரகதத்துக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. சரவணனும், முருகனும் தவறான வழிக்குச் செல்லவில்லை என்றாலும், வாழ்க்கையை இப்படித்தான் கட்டமைக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமலே வளர்ந்து நின்றார்கள்.

    காலைமுதல், இரவுவரை விவசாயம், தோட்டம் என பாடுபட்டு, வருமானத்துக்கு வழிவகை செய்ய பாடுபட்ட மரகதத்துக்கு, மகன்களின் வாழ்க்கையை

    Enjoying the preview?
    Page 1 of 1