Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enthan Thanjam Neeye... - Part 2
Enthan Thanjam Neeye... - Part 2
Enthan Thanjam Neeye... - Part 2
Ebook409 pages4 hours

Enthan Thanjam Neeye... - Part 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பிறந்தது முதல் அத்தை மகனைக் கணவனாக எண்ணி வாழ்ந்துவரும் நாயகி. அவளைத் துளியும் விரும்பாத, அவளை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திவிட்டு உதறித் தள்ளும் அத்தை மகன். அவனது சுயரூபம் தெரியாமல் அவன்மேல் உயிரையே வைக்கும் நாயகி, உண்மை அறிந்தால் என்ன ஆவாள்?

நாயகியை ஏமாற்றும் அத்தைமகன் வாழ்க்கை சிறந்ததா? திருந்தி வருவானா? இவள் ஏற்பாளா? நாயகனின் நிலை என்னவாகும்? பாகம் 2-ல் படித்து தெரிந்துகொள்ளுங்கள்

...
Languageதமிழ்
Release dateMay 13, 2023
ISBN6580109209856
Enthan Thanjam Neeye... - Part 2

Read more from Infaa Alocious

Related authors

Related to Enthan Thanjam Neeye... - Part 2

Related ebooks

Reviews for Enthan Thanjam Neeye... - Part 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enthan Thanjam Neeye... - Part 2 - Infaa Alocious

    pustaka_logo-blue_3x

    https://www.pustaka.co.in

    எந்தன் தஞ்சம் நீயே... - பகுதி 2

    Enthan Thanjam Neeye... - Part 2

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பகுதி – 26

    பகுதி – 27

    பகுதி - 28

    பகுதி - 29

    பகுதி – 30

    பகுதி – 31

    பகுதி – 32

    பகுதி – 33

    பகுதி – 34

    பகுதி – 35

    பகுதி – 36

    பகுதி – 37

    பகுதி – 38

    பகுதி – 39

    பகுதி – 40

    பகுதி – 41

    பகுதி – 42

    பகுதி – 43

    பகுதி – 44

    பகுதி – 45

    பகுதி – 46

    பகுதி – 47

    பகுதி – 48

    பகுதி – 49

    பகுதி - 50

    பகுதி – 26

    மண்ணாங்கட்டி வயலில் வேலையாக இருக்க, அந்தப்பக்கம் போன அவனது பங்காளிக்களில் ஒருவன், "மாப்ள, நீயென்னவோ சேகரு பயதான் உன் பொண்ணுக்கு புருஷன்னு சொல்லிக்கிட்டு திரியற,

    அவன் என்னன்னா ஒரு பொண்ணோட வந்து இறங்கி இருக்கான்? போகும் போக்கில் சொல்லிச் செல்ல, சற்று திடுக்கிட்டாலும், தன்னை மீட்டுக் கொண்டார்.

    அன்று அரசாங்க விடுமுறை என்பதால் கலையரசு அவரோடு இருக்க, பொசகெட்ட பய, வயசானாலும் கோணல் புத்தி போதா பாரேன். அந்த புள்ள அவன் கூட்டாளியா இருக்கும். இந்த காலத்துல அதெல்லாம் பெருசா? கேட்டவருக்கு கால்கள் அங்கே இருக்க மறுத்தது.

    மாப்ள, இங்கன எனக்கு வேல முடிஞ்சது, நான் வீட்டுக்குப் போறேன் சொன்னவர், வேகமாக கை கால்களை வாய்க்காலில் கழுவிக் கொள்ள, அந்த வாய்க்காலில் கால் பதித்தவாறு வரப்பில் அமர்ந்துவிட்டான்.

    ‘ஆத்தா... மகமாயி... அந்த புள்ளைக்கு இதை தாங்கிக்கற சக்தியைக் குடு’ உள்ளுக்குள் அதை மட்டுமே வேண்டிக் கொண்டான்.

    ஆயிரம் வேலைகள் இருந்தாலும், எதையும் அவனுக்குச் செய்யப் பிடிக்கவில்லை.

    மண்ணாங்கட்டி வீட்டுக்குச் செல்கையில், மயிலாயி அவரை எதிர்கொண்டார். ஊருக்குள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் அவருக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா என்ன?

    என்ன மயிலு, வாசல்லேயே நிக்க? உள்ளுக்குள் அதிரும் இதயத்தை அவரிடம் காட்டாமல் சாதாரணமாகவே கேட்டார்.

    உம்மால் எப்படி, இப்படி இருக்க முடியுது? எனக்கு மனசு உள்ளுக்குள்ள பதறுது அவர் சொல்ல, வேகமாக வீட்டுக்குள் பார்த்தார்.

    அறைக்குள் இருந்து வெளியே வந்த கண்ணம்மா, "அப்பா, மாமா வந்துட்டாவ, அதுவும் ஒரு பொண்ண கூட்டியாந்திருக்காவன்னு சொன்னதுல இருந்து அம்மா இப்படித்தான் பேசிகிட்டே இருக்காவ.

    வெளிநாட்டுல இருக்கவுக, ஊருக்கு வர்றப்போ ஒண்ணா வாறது சகஜம் தான? நம்ம ஊர சுத்திப்பாக்க கூட வந்திருக்கலாம் அவள் அத்தனை நம்பிக்கையாக உரைக்க, அவருக்கும் கொஞ்சம் தைரியம் பிறந்தது.

    புள்ளைக்கு இருக்க தைரியம் உனக்கு இல்லையே... விலகு சொன்னவர் வீட்டுக்குள் நுழைந்தார்.

    அப்படி தைரியம் இருக்கவர்தான் இருக்க வேலையெல்லாம் விட்டுப்போட்டு ஓடி வந்தீரோ? மயிலாயி பட்டென கேட்க, அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

    "என்ன பேசுத நீயி? மாப்பிள்ள வந்திருக்கான்... அவனப் பாக்காம எப்படி இருக்க? குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற விதத்தில் அவர் சொல்லிச் செல்ல, உள்ளுக்குள் மயிலாயிக்கு கலவரம் தான்.

    இங்கே இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, அதே நேரம், ராக்காயியும், கன்னிகாவும் சேகரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    ‘பாயல்’ சேகரின் அறைக்குள் இருக்க, அதைப் பார்க்கவே ராக்காயிக்கு திக்கென இருந்தது.

    வேகமாக கணவனிடம் சென்றவர், என்னங்க, அவன் அந்த பொண்ண அவன் ரூமுக்குள்ளார கூட்டி போயிருக்காங்க பட்டாபியிடம் புலம்ப, காதைக் குடைந்துகொண்டே கதை கேட்டார்.

    அதுக்கென்ன இப்போ? பட்டாபி அசால்ட்டாக கேட்க,

    அதுக்கு என்னவா? என்னன்னு கேளுங்க போங்க... கணவனைத் தூண்டினார்.

    இங்க பார்... எதுன்னாலும் அவனே சொல்லுவான்... சும்மா தொணத்தொணங்காத... சொல்லிவிட்டு, தான் விட்ட காதுகுடையும் வேலையைத் துவங்க, ராக்காயியால் முடியவில்லை.

    உடனே கன்னிகாவுக்கு அழைக்க, அலைபேசியை எடுத்தவுடன், அம்மா, நான் அங்கனதான் வாறேன்... எனக்கும் விஷயம் தெரியும் எனச் சொல்லாமல் சொன்னவள், அவளது மகளையும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்.

    சேகருக்கு வெளியே என்ன நடக்கும் என்ற அனுமானங்கள் இருக்க, அதைப்பற்றியெல்லாம் அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    பாயல், இவங்க கொஞ்சம் சத்தம் போடுவாங்க, நீ பயந்துக்காத... எப்படியும் நம்ம கல்யாணத்தை முடிச்சுட்டுதான் இங்கே இருந்து போறோம் அவன் அவளுக்கு சொல்லிக் கொண்டிருக்க, அவள் அதைக்குறித்த அக்கறை இன்றியே இருந்தாள்.

    சேகர்... முதல்ல என்னைய அனுப்பி விடு... வந்து என் முகத்தை காட்டிட்டேன். உங்க வீட்டு ஆட்கள் கிட்டே, என்னை இன்ட்ரோ பண்ணி வை, நான் இப்படியே கிளம்பறேன் சேகர் திட்டமிட்டே காய்களை நகர்த்த, அதற்கு அவளும் துணை இருந்தாள்.

    அவனுக்குமே மண்ணாங்கட்டியும், கண்ணம்மாவும் வருவதற்கு முன்பு அவளை அனுப்பிவிட வேண்டும் என்ற முடிவில்தான் இருந்தான்.

    ‘பாயலை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பதில் சொல்ல முடியாது’ என்ற பயமெல்லாம் அவனுக்கு இல்லை.

    எங்கே பாயலிடம் அவர்கள் பாய்ந்துவிடுவார்களோ என்ற பயம்தான் அதற்குக் காரணம்.

    சரி, நீ ப்ரெஷ் ஆகிட்டியா? வெளியே போகலாமா? அவன் கேட்க, குளித்து உடை மாற்றி இருந்தவள், அவனோடு வெளியே வந்தாள்.

    அந்த நேரம் கன்னிகாவும் உள்ளே வர, அவளைப் பார்த்தவன், "ஹப்பா, நீயும் வந்துட்டியா? உனக்கு வேற தனியா சொல்லணுமோன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

    ஒரு நிமிஷம் இரு... அப்பா... அப்பா... இங்கன வாங்க... தாயும், கன்னிகாவும் பாயலை இமைக்க மறந்து பார்த்திருக்க, தந்தையை அவன் அழைத்துக் கொண்டிருந்தான்.

    வடநாட்டுக்கே உரிய கலரில், அத்தனை மென்மையாக இருந்த பாயலை அவர்கள் அதிசயமாக பார்க்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

    அத்தனை வெள்ளையாக அவர்கள் யாரையும் இதுவரைக்கும் நேரில் சந்தித்ததே இல்லை. சிளிமாவில் பார்த்திருப்பதோடு சரி... பாயல் இந்தியாவில் இருக்கும்போதே நல்ல நிறம், இதில் வெளிநாட்டு ஏசி வாசம் அவளை இன்னும் வெள்ளையாகக் காட்டியது.

    என்னய்யா... கூப்ட்ட... பட்டாபி சாதாரணமாக வர, பெண்கள் இருவரும்தான் ‘என்ன வரப் போகிறதோ?’ என்பதுபோல் பார்த்திருந்தார்கள்.

    எல்லாரும் கேட்டுக்கோங்க, இது பாயல்... நான் கட்டிக்கிடப் போற பொண்ணு, உங்க வீட்டு மருமக, உன் அண்ணி... அனைவரிடமும் சொல்ல, பெண்களில் யாருக்கு பெரிய அதிர்ச்சி என்றே சொல்லத் தெரியவில்லை.

    அப்படியாப்பா... பொண்ணு நல்லாத்தான் இருக்கா... நல்லா இருங்க சொன்ன பட்டாபி ஒதுங்கிக் கொள்ள, ராக்காயி ருத்ரகாளியாக அவரை முறைத்தாள்.

    டேய்... ராக்காயி பெரும் குரலெடுத்து அழைக்க,

    பாயல், கார் வந்துடுச்சு நீ கிளம்பு, நான் சாயங்காலம் கால் பண்றேன் அவளது பெட்டிகள் மூன்றையும் தள்ளிச் சென்று கார் டிக்கியில் வைக்க, ராக்காயி பொத்தென தரையில் அமர்ந்துவிட்டார்.

    பாயலோ, எதையும் கண்டுகொள்ளாமல், ஓகே பாய்... பிறகு பாக்கலாம் அவளது பிள்ளைத் தமிழில் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள்.

    பாயலை அனுப்பிவிட்டு அவன் உள்ளே வர, சேகரா... என்ன காரியம்டா பண்ணி வச்சிருக்க? அப்போ கண்ணம்மாவுக்கு என்னடா பதில் சொல்லப் போற? ராக்காயி தன் அதிர்வில் இருந்து மீளாமல் இருக்க, கன்னிகாதான் கத்தினாள்.

    ஏன் அவளுக்கு என்ன? நான் என்ன அவளுக்கு பிள்ள குடுத்தா ஏமாத்தினேன்? அவன் அசால்ட்டாக உரைக்க, அதைக் கேட்டவாறே வீட்டுக்குள் வந்தார்கள் மண்ணாங்கட்டியும், மயிலாயியும்.

    டேய்... நாக்குல நரம்பில்லாம பேசாதடா? கன்னிகாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.

    நாக்குல எலும்புதான் கிடையாது... நரம்பெல்லாம் இருக்கு சொன்னவன் வந்தவர்களைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, அலைபேசியை பார்க்கத் துவங்கினான்.

    மாமா, ஐத்த... உள்ளார வாங்க... கன்னிகா அழைக்க,

    அண்ணே... தலையில இடியைப் போட்டாம்ண்ணே... என்னையாலையே தாங்கிக்கிட முடியலையே... ஐயோ... ராக்காயி தலையில் அடித்துக்கொண்டு அழ, அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டே நிலை குலைந்து போன மண்ணாங்கட்டிக்கு பேச வாய் வரவில்லை.

    ‘நல்ல வேளை, என் பொண்ணை கூட்டி வரலை’ அந்த நேரத்தில் அதுதான் பெருத்த ஆறுதலாக இருந்தது.

    அவர்களோடு கிளம்பி வர முயன்ற கண்ணம்மாவை, மயிலாயி தான் தடுத்தார்.

    நீ எங்கன வாற? வீட்டில இரு... தாய் பெரும் கோபத்தில் சொல்ல, அவள் தகப்பனின் முகம் பார்த்தாள்.

    இரு தாயி... சம்பந்தம் பேசப் போறப்ப நீ எதுக்கு? பொறவு போவலாம்? மயிலாயி மகளை முதல் முறையாக அங்கே செல்லக் கூடாது எனத் தடுக்க, வாழ்நாளிலேயே முதல் முறையாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தந்தையை அவள் கண்டாள்.

    சரிப்பா... நான் இங்கனையே இருக்கேன்... அவரிடம் சொன்னவள், அமைதியாக நின்றுகொண்டாள்.

    அவர்கள் செல்லவே, வேகமாக தம்பியை அழைத்தவள், ரமேசு... அப்பா, அம்மாவுக்குத் தெரியாம அவக பின்னாடியே போய் என்னன்னு கேட்டு வாடா... அக்காவுக்காக பிளீஸ்... இப்படிக் கெஞ்சிய அவளை முறைப்பாக பார்த்தான்.

    ரமேஷ் இப்பொழுது பத்தாம் வகுப்பில் இருந்தான்... அவனுக்கும் அனைத்தையும் தெளிவாகவே புரியும் வயது.

    அவரு ஒரு பொண்ணோட வந்துருக்காருன்னு சொல்றாவ, நீ எப்படி இம்புட்டு தைரியமா இருக்க? அவளிடமே கேட்டுவிட்டான்.

    டேய் மாமனைப் பத்தி எனக்கு தெரியாதா? அவள் கேட்க,

    உனக்கு ஒரு மண்ணும் தெரியாது... ஆனாலும் நீ கேட்டுட்ட... போய் பாக்கறேன் சொன்னவன்... அவர்கள் பின்னாலேயே வந்திருந்தான்.

    அவனுக்குமே சேகர் அப்படி பேசியது பெரும் அதிர்வைக் கொடுத்தது. ‘எப்படி பேசறான் பார்...’ உள்ளுக்குள் எழுந்த கோபத்தை அடக்கினான்.

    தகப்பனின் முன்னால், அவரது தங்கையின் குடும்பத்து ஆட்களிடம் எதிர்த்து பார்க்க கூட முடியாது என்கையில், எங்கே அவன் கோபப்பட?

    இரும்மா... நான் பேசறேன்... தங்கையை சமாதானம் செய்த மண்ணாங்கட்டி, சேகரை நெருங்கினார்.

    "இங்க பாருங்க மாமா... எனக்கு கண்ணம்மாவ கட்டிக்கிர துளி கூட விருப்பம் இல்ல. எனக்கு பாயலைத்தான் புடிச்சிருக்கு. இந்த மூணு வருஷமா நான் அவளோட ஒண்ணா ஒரே வீட்டுலதான் இருக்கேன்.

    இப்போ அவக வீட்டுல கல்யாணத்துக்கு அவசரப்படுத்தவேதான் வந்தோம். நாளைக்கே அவக வீட்டுல இருந்து பேச வாறாவ... என்ன ஆனாலும் எங்க கண்ணாலம் நடக்கும் அவன் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற விதத்திலேயே பேச, நொறுங்கிப் போனார்.

    மாப்ள... என்னய்யா இது? பரிதாபமாக கேட்டார். மகளின் ஆசை முகம் நெஞ்சுக்குள் மின்னி மறைய, இதயத்தில் பேரிடி.

    மாமா, நான் இத்தன சொல்லுதேன்... நீங்க என்ன இன்னும் மாப்பிள, நோப்ளன்னுகிட்டு இருக்கிய? ஒருவித அலட்சியத்தை முகத்தில் காட்ட, இந்த சேகர் அவர்களுக்கு முற்றிலும் புதியவன்.

    என்னடா சொன்ன? நீ கண்ணம்மா கழுத்தில இப்போவே தாலி கட்டுற. இல்ல... என்னை நீ உசுரோடவே பாக்க முடியாது ராக்காயி அத்தனை ஆங்காரமாக எழுந்தார்.

    இந்த பாரும்மா... இன்னும் ஒரு பத்து வருஷம் நீ உசுரோட இருப்பியா? அதுக்காக என் சந்தோஷத்தை, வாழ்க்கையை கெடுத்துக்க சொல்றியா? என்னால முடியாது தாயையும் அடித்து வீழ்த்தினான்.

    டேய்... உன் நாக்குல கொள்ளிக்கட்டையை வச்சு தேய்க்க... என்ன பேச்சுல பேசுத? அம்மா... நீங்க ஒன்னும் நினைக்காதிய? தாயை தாங்கிக் கொண்டாள்.

    "இங்க பாருக்கா... வந்தியா, தங்குனியா? தின்னியா? போனியான்னு போய்கிட்டே இருக்கணும். என் விஷயத்தில் நாட்டாம பண்ணணும்னு நினைக்காத.

    நீ மட்டும் என்ன கஷ்டம் வந்தாலும், உனக்கு பிடிச்சவளோட வாழோணும், நான் மட்டும் எனக்குப் பிடிக்காத அந்த கறுப்பியோட வாழணுமா? இது என்ன நியாயம்? சேகர் ஏற்கனவே கொஞ்சம் சுயநலவாதிதான் என்றாலும், இப்பொழுது ஆளே முழுதாக மாறிப் போயிருந்தான்.

    பிடிக்காதவளா...? மண்ணாங்கட்டி நெஞ்சில் விழுந்த இடியோடு மெல்லமாக முனக, அது அவனது காதிலும் விழுந்தது.

    ஆமா... பின்ன... அவ ஆளும், கலரும், முகரையும்... அவன் சொல்லிக் கொண்டே போக,

    யோவ்... உன்னையப்பத்தி மட்டும் பேசுய்யா... தேவையில்லாமல் எதுக்கு என்ற அக்காளை இழுக்க? ரமேஷ் எகிறிக்கொண்டு முன்னால் வந்தான்.

    எனக்கென்ன உன்ற அக்காளப் பத்தி பேசணும்னு ஆசையா? பேசாதியன்னுதான் நானும் சொல்லுதேன். என் கல்யாணம் என் இஷ்டப்படிதான் நடக்கும். இஷ்டம்னா இருங்க, இல்லையா கிளம்பி போய்கிட்டே இருங்க

    இதை எப்போய்யா சொல்ற? நல்ல வக்கணையா வாங்குறது எல்லாம் வாங்கிப் போட்டு... கோமணம் வரைக்கும் உருவிட்டு இப்படிப் பேச உனக்கு நாக்கு கூசல? சேகரை கட்டுப்படுத்த முடியாமல், மண்ணாங்கட்டி தோய்ந்து போனார்.

    எனக்கு என்னத்தல செஞ்சிய? எல்லாம் அவரோட தங்கச்சிக்கு அவர் பண்ணார்... எனக்கு என்ன செஞ்சார்...? அந்த பத்து லட்சம் தான? ஒரு நிமிஷம் இரு... சொன்னவன் வேகமாக அறைக்குச் சென்று, ஒரு ‘செக்’கை கொண்டு வந்து அவன் கையில் திணித்தான்.

    இதுல பன்னண்டு லட்சம் எழுதி இருக்கேன்... எடுத்துக்க... என் கணக்கு முடிஞ்சது அடுத்து? தெனாவெட்டாகவே நின்றான்.

    ச்சீ... நீயெல்லாம் மனுஷனா? பணத்துக்கு கணக்கு சொல்லிட்ட... அந்த மனுஷன் வச்ச பாசத்துக்கு... நம்பிக்கைக்கு? உங்களை எல்லாம் இத்தனை வருஷம் தூக்கி சுமந்ததுக்கு? ரமேஷ் உயிர் துடிக்க கேட்டான்.

    அவனது தந்தைக்கு அவர்கள் மீது இருக்கும் பாசம் கண்டு வளர்ந்தவன் ஆயிற்றே. அவர்கள் வீட்டுக்கு ஒன்று செய்தால், அதே அளவு தங்கைக்கும் செய்பவர் ஆயிற்றே.

    எலேய்... என்னால... பேச்செல்லாம் ஒரு தினுசா போகுது? தூக்கி சுமந்தாரா? அப்படித்தான் உங்ககிட்டே எல்லாம் சொல்லி வச்சிருக்காரா? பட்டாபி ஒரு முடிவோடு பேசத் துவங்க, அனைவரின் அடிவயிற்றிலும் பெரும் கலவரம்.

    ரமேசு... பேசாத... அந்த பணத்தை திருப்பிக் கொடு... என்ற பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கிடாத? மண்ணாங்கட்டி பரிதாபமாக உரைக்க, அவனுக்கு கண்கள் கலங்கிப் போனது.

    ஓ... பத்து லட்சத்த கொடுத்து, என்னைய வாங்கிடலாம்னு கணக்குப் போட்டியளோ? அவன் கேட்டு முடிக்கையில், ரமேஷ், அவன் சட்டையை கொத்தாக பற்றி இருந்தான்.

    என்னய்யா சொன்ன? பத்தாம்வகுப்பு படித்தாலும், உழைப்புக்கு அஞ்சாத தேகம், சேகரை கொத்தாக அள்ளி இருந்தான்.

    டேய்... என்னைய விடுடா... அவளத்தான் பிடிக்கல, பிடிக்கலன்னு அவ பொறந்ததில் இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேனே... உங்க யார் காதிலும் அது விழவே இல்லையா? அந்த கறுப்பிக்கு நான் கேக்குதா? அவன் கொஞ்சம் கூட தொய்வின்றி சொல்ல, அனைவருக்கும் முழுத் தோல்வியே.

    மாப்ள, அப்படில்லாம் சொல்லாதைய்யா... மண்ணாங்கட்டி அவனிடம் கெஞ்ச,

    அவனே நெஞ்சில ஈரமில்லாம பேசிகிட்டு கிடக்கான்... அவன்கிட்டே கெஞ்சிகிட்டு இருக்கீங்க? ரமேஷ் தந்தையிடம் கத்தினான்.

    உன்ற அக்காள யோசிச்சுப் பாத்தியால? அவர் கேட்க, ரமேஷின் கண்கள் கலங்கிப் போனது.

    அப்பா... அவன் கண்ணீர் குரலில் அவரை அழைக்க, அவருமே அழுதார்.

    உன்ற ஆத்தா அப்போவே சொன்னா... நான்தான் கேக்கல... இப்போ என் பொண்ணோட வாழ்க்கை... அவர் தகர்ந்து போய் அமர, அவனது பார்வை தாயிடம் சென்றது.

    மயிலாயியோ... வெறித்த பார்வையாக சேகாரையே பார்த்திருக்க, தாயிடம் ஓடினான்.

    ம்மோவ்... ம்மோவ்... ஏதாவது பேசுங்க... அவரைப் பிடித்து உலுக்கினான்.

    மண்ணாங்கட்டி மகனின் பதட்டமான குரலில் கலைந்தவர், வேகமாக எழுந்து மனைவியிடம் ஓடினார்.

    மயிலு... மயிலு... ஏதாவது பேசுத்தா... அவர் கன்னம் தட்டினார்.

    இமைகளைக் கொட்டி, கணவனை வெறிக்கப் பார்த்தவர், ராக்காயியையும் ஒரு பார்வை பார்த்தார்.

    "என் பொண்ண இப்படி நம்பவச்சு கழுத்தறுத்ததுக்கு... நான் அந்த நரகத்திலேயே கிடந்தது செத்திருப்பேனே. என்னைய கட்டி கூட்டி வந்து, என் பொண்ணு தினம் தினம் சாகறத பாக்க வச்சுட்டியளே.

    "நான் உம்மகிட்டே என்ன கேட்டேன்... என் பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு அமைச்சு கொடுங்கன்னு மட்டும்தான கேட்டேன்.

    இப்ப கூட உமக்கும், உம்மட தங்கச்சிக்கும் நடுவுல நான் வர மாட்டேன். ஆனா என் பொண்ணுக்கு ஒரு நியாயத்த கேட்டு சொல்லும் அவரது சட்டையைப் பிடித்து உலுக்கினார்.

    அதைப் பார்த்த ராக்காயி, எழுந்து மயிலாயியிடம் ஓடினார். மதினி... நான் என்ற மவன் கிட்டே பேசுதேன்... அவன் கண்ணம்மாவ கட்டுவான் மயிலாயி உடைந்த குரலில் பேச, ராக்காயியால் தாங்க முடியவில்லை.

    ம்மா... அந்த பேச்சே கிடையாது... எனக்கு பாயல்தான் வேணும். அவளைத்தான் நான் கட்டுவேன் அவன் இறங்க மறுக்க, அங்கே யாரிடம் என்ன பேச முடியும்?

    மண்ணாங்கட்டியால் கொஞ்சம் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் போக, பட்டாபியிடம் எழுந்து சென்றார்.

    மாப்ள, நான் இதுவரைக்கும் உம்மகிட்டே எதுவுமே கேட்டதில்லை... மொதோ முறையா கேக்கேன்... உம்ம மவன்கிட்டே பேசும். உம்ம கால்ல வேணாலும் விழறேன்... மண்ணாங்கட்டி பட்டாபியின் காலில் விழப் போக,

    அண்ணே... அப்பா... மாமா... என அனைவரின் குரலும் ஒருங்கே கேட்டது.

    அப்பா... என்னப்பா இது? ரமேஷ் அவரை வந்து தடுக்க...

    உன்ற அக்காவோட வாழ்க்கைடா... ஏதாவது செய்து தன் மகளை இங்கே வாழ வைத்துவிடும் எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.

    ஏம்ப்பா... இப்படி புடிக்கலன்னு சொல்றவன்கிட்டே கட்டாயப்படுத்தி தள்ளி விடற அளவுக்கா என்ற அக்கா போய்ட்டா? அவரிடம் கேட்க,

    அவ தாங்க மாட்டா ராசா... அவர்களாலேயே முடியவில்லையே. பிறந்ததுமுதல் ஆசைப்பட்ட அவளது நிலை என்னவாக இருக்கும் என அவர்களுக்குத் தெரியாதா?

    "இங்க பாரும் மச்சான்... அன்னைக்கு கன்னிக்கு அவ்வளவு பேசுனீரு... அவ ஆசைப்பட்ட வாழ்க்க... அமைச்சுக் கொடுக்கோணும்னு.

    இப்போ என் மவன் ஆசப்படுதான்... அத நடத்திக் கொடுக்கறது தான முறை? பட்டாபி மனசாட்சியே இல்லாமல் வினவ, அவர் வாயடைத்துப் போனார்.

    என்னங்க... இப்படிப் பேசாதிய? ராக்காயி சொல்ல,

    "உன்ற மவளுக்கு ஒரு நியாயம், நம்பட மவனுக்கு ஒரு நியாயமா? அன்னைக்கு சொல்லியே... என் சம்மதம் இல்லன்னாலும் அவ கண்ணாலம் நடக்கும்னு...

    இன்னைக்கு நான் சொல்லுதேன்... நீங்க யார் இருந்தாலும், இல்லன்னாலும், இந்த ஊரையே கூட்டி நம்ம மவன் கண்ணாலத்தை நான் நடத்துவேன் அவர் சொல்ல, அனைவரின் முகங்களிலும் கவலை அப்பியது.

    அப்பா... கண்ணம்மா பாவம்ப்பா... இவன்மேல அந்த புள்ள உசுரையே வச்சிருக்கு கன்னிகா தந்தையிடம் கெஞ்சினாள்.

    ஆமா நீ யாரு? என்னைக்கு எனக்குப் பிடிக்காதவன நீ கட்டிகிட்டியோ, அன்னையோட நம்ம உறவு அத்துப் போச்சு... என் வீட்டை விட்டு வெளியே போ... அவர் கத்த, இரண்டடி பின் வாங்கினாள்.

    என்னையவா வெளிய போவச் சொன்னிய? கேட்டவள் அங்கிருந்து செல்ல முயல,

    "ஏய், நில்லுடி... யார் வீட்ட விட்டு, யார் வெளியே போறது? இது என் அண்ணன் எனக்காக கட்டிக் கொடுத்த வீடு... இது என் பேரில்தான் இருக்கு.

    டேய், நல்லா கேட்டுக்கடா... கண்ணம்மாவ நீ கட்டலன்னா, என் சொத்தில் சல்லிப் பைசா உனக்குத் தர மாட்டேன் ராக்காயி மகளை அழுத்தமாக பற்றிக் கொண்டார்.

    உங்க சொத்து... எது... இந்த ஓட்டை வீடும், அந்த கடையும் தான? எனக்கு வேண்டாம். நான் டவுன்ல பிளாட் வாங்கி இருக்கேன்... நான் அங்கன போய்க்கறேன் சேகர் சொல்லச் சொல்ல, அவன் நாக்கு அனைவரையும் வேட்டையாடியது.

    "அப்படிச் சொல்லுடா என் சிங்கக் குட்டி... என்ன எல்லாருக்கும் வலிக்குதா? அன்னைக்கு எனக்கும் இப்படித்தான் வலிச்சுது...

    "எல்லாம் கிளம்பி அவக அவக வேலையைப் பாருங்க, போங்க... மச்சான்... என் மவன் முடிவுதான் இங்கன நடக்கும். நீங்க... உம்மட மவளுக்கு நல்ல சம்பந்தமா பாரும்.

    நானே என் கைக்காசைப் போட்டு அவளுக்கு சீர் செஞ்சு வைக்கேன் சொன்னவர் சென்றுவிட, அதற்கு மேலே அவர்களுக்கு அங்கே என்ன இருக்கிறதாம்?

    சேகரும் அவனது அறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொள்ள, அண்ணே... ராக்காயி அண்ணனிடம் சென்றார்.

    எல்லாம் இதுக்குத்தானா... என்ற மவளுக்கு நான் என்ன சொல்லுவேன்? கல்யாணத்துக்கு தேதி குறிச்சுட்டு வருவேன்னு ஆசையா இருப்பாளே... அவகிட்டே, இந்த கண்ணாலம் நடக்காதுன்னு எப்படிச் சொல்லுவேன் அவர் அங்கேயே அமர்ந்து அழ, ரமேஷ்தான் கொஞ்சம் தெளிந்தான்.

    அப்பா... சொல்லித்தான்ப்பா ஆவணும்... வாங்க... அம்மா... மகனின் கடமையாக அவர்களைத் தாங்கிக் கொண்டான்.

    நாங்களும் வாறோம் ரமேசா... தூங்கிவிட்டிருந்த தன் மகளை கீழே படுக்க வைத்திருந்தவள், அவளை கைகளில் அள்ளிக் கொண்டாள்.

    அவர்கள் அனைவரும் ஒன்றாக வீட்டுக்குச் செல்ல, அதைப் பார்த்தே கண்ணம்மாவுக்கு புரிந்து போனது. அதுவும் இருண்டிருந்த அவர்களது முகங்கள் அனைத்தையும் சொல்லாமலே புரிய வைக்க, மறுப்பாக தலை அசைத்தாள்.

    இல்ல... நீங்க யாரும் எதுவும் சொல்ல வேணாம்... நானே மாமன்கிட்டே பேசுதேன் சொன்னவள், வெறிபிடித்த நிலையில் ஓடினாள்.

    அவளைத் தடுத்துப் பிடித்த ரமேஷ்... இங்கன பார்... அவளது கரத்தில், சேகர் கொடுத்த ‘செக்’கைக் கொடுக்க, அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

    அவனைத் தள்ளிவிட்டு, ஓடியவள், இரண்டே நிமிடங்களில் சேகரின் அறையின் முன்னால் நின்றாள்.

    அவள் செல்கையிலேயே, வழியில் கலையரசு நின்றிருக்க, அவனைப் பார்த்துவிட்டேதான் சென்றாள். கலையரசுவும் சென்றவன், சேகர் வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டான்.

    மாமா... மாமா... அவனது அறைக்கதவைத் தட்ட,

    "ஏய்... என்னடி...? அதான் உன் அப்பன், ஆத்தா கிட்டேயே எல்லாம் சொல்லி அனுப்பியாச்சே இன்னும் என்ன?

    ஓ... அவக சொன்னதை நீ நம்பலையோ? நக்கலாக கேட்டவன்,

    உனக்கு தனியா சொல்லணுமா? உன்னைய எனக்குப் பிடிக்கல, நான் பாயலைத்தான் கண்ணாலம் கட்டிக்கப் போறேன்... போதுமா? போ... அவன் அசட்டையாக சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல முயன்றான்.

    மாமா... விளாடாதீங்க மாமா... அவன் எப்பொழுதுமே அப்படித்தான் பேசுவான் என்பதால், அதை புறந்தள்ள முயன்றாள்.

    ஆனால் முதல் முறையாக, அவளது மனது சிறு அபாயத்தை உணர்ந்தது. அது... அந்த பெயர்... ‘பாயல்...’ ‘இதை எங்கேயோ கேட்டிருக்கேனே?’ எண்ணியவள் அதை விடுத்து, அவன் பின்னால் சென்றாள்.

    ஏய்... என் ரூமை விட்டு வெளியே போடி... அவன் சொல்கையில், அங்கிருந்த மேஜைமேல் இருந்த அவனது அலைபேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

    அதில் சேகரும், பாயலும் அத்தனை இறுக்கமாக கட்டிக்கொண்டு நிற்க, கண்கள் நிலைக்குத்தியது.

    அவள் அசையாமல் நிற்கவே, அவளைக் கைபிடித்து இழுத்து, வெளியே தள்ளியவன், தானும் வெளியே வந்தான்.

    எலேய்... அந்த புள்ளைய... ராக்காயி முன்னால் வர, கண்ணம்மா பார்த்த பார்வையில் உடைந்து போனார்.

    யாரும் போவாதிய... அவ வாழ்க்கை... அவ பேசட்டும் கலையரசு குரல் கொடுக்க, அனைவரும் அங்கே பார்வையாளர்கள் மட்டுமே.

    என்னைய ஏன் மாமா உங்களுக்குப் பிடிக்கல? முதல் முறையாக அதைக் கேட்டாள்.

    ஏன் பிடிக்கலையா? உன்ற மூஞ்சிய நீ கண்ணாடியில பாத்திருக்கியா? என் பாயலோட கலருக்கும், அழகுக்கும், படிப்புக்கும் கிட்டயாச்சும் நீ வருவியா என்ன? கேக்கறா பார்... அத்தனை எரிச்சல் அவன் முகத்தில் மண்டிக் கிடந்தது.

    கலரு... அழகா... என்ன மாமா பேசுதிய? மாமா, சும்மா தான சொல்லுதிய? ஏனோ அவளது மனம் ஏற்க மறுத்தது.

    ஆமாடி... அவ அழகுதான்... உன் மூஞ்சியைப் பாத்தாலே எரிச்சலா வருது. உன் மூஞ்சியும், முகரையும்... ச்சீ... பே... கிட்ட நிக்காதே அவன் அருவருப்பை முகத்தில் காட்ட, உடைந்து போனாள்.

    இந்த அழகெல்லாம் சும்மா மாமா... வயசு போனா போய்டும்... அவள் சொல்ல,

    "அப்ப கூட அவ கலர் குறையாது. அழுக்கு கலர்ல... இல்ல, இல்ல... அப்படி கூட சொல்ல முடியாது. காக்கா கலர்ல இருந்துகிட்டு எனக்கு பாடம் எடுக்குதியா?

    போடி கறுப்பி... அவ அழகுக்கு நீ கால் தூசிக்கு வருவியா? அவன் கேட்க, உடைந்துபோன மனம், சிதறி உதிரும் வலியை அனுபவித்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1