Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sontham Eppothum Thodar Kathaithan...
Sontham Eppothum Thodar Kathaithan...
Sontham Eppothum Thodar Kathaithan...
Ebook300 pages2 hours

Sontham Eppothum Thodar Kathaithan...

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்...

பாசமுடன் பேணி வளர்த்த பெற்றோரின் சந்தேகத்தை போக்குவதற்காக அவர்களுக்கு பிடித்த நாயகனை மணம் முடித்துக் கொள்கிறாள் நாயகி.கணவனுக்கும் குடும்பத்தினருக்கும் அவள் தன் அன்பின் புனிதத்தை நிரூபித்து வாழ்வை வெல்வதே கதை.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580134207142
Sontham Eppothum Thodar Kathaithan...

Read more from Viji Prabu

Related to Sontham Eppothum Thodar Kathaithan...

Related ebooks

Reviews for Sontham Eppothum Thodar Kathaithan...

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sontham Eppothum Thodar Kathaithan... - Viji Prabu

    https://www.pustaka.co.in

    சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்…

    Sontham Eppothum Thodar Kathaithan...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    1

    "நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா...

    நின்னைச் சரணடைந்தேன்..."

    குளித்து முடித்து ஈரத் துண்டினால் முடியைச் சுற்றி கொண்டையிட்ட விழிமூடி அமர்ந்த நிலையில்... பூஜையறையில் பேத்தி பாடிய பாடலைக் கேட்டு வியிப்புடன் தலையசைத்து ரசித்துக் கொண்டிருந்தார் சக்திவேல்.

    மாமா…

    அவரது ரசனையை தடை செய்வதைப் போல அழைத்த குரலின் ஓசையினால் அவசரமாகக் கண்விழித்த சக்திவேல்... எதிரில் நின்றிருந்த மருமகள் மோகனாவை கண்டவுடன்... அமைதியாக இருக்கும்படி வாய் மீது விரல் வைத்துக் காட்ட... அவரது இயல்பு புரிந்தவளாக பெருமையுடன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் அவள்.

    சக்திவேலின் கண்டிப்பினால்... வீட்டில் இருந்த வேலையாட்கள் முதலாக அனைவரும் அமைதி காத்துவிட, அந்த பேரமைதியின் ஊடாக தேனிசையாக ஒலித்துக் கொண்டிருந்தது வான்மதியின் பாடல்.

    வான்மதி...! பெரியவர் சக்திவேலின் ஒற்றை பேத்தி அவள். அவரது ஒரே மகனான காசிநாதனுக்கும் மோகனாவுக்கும் பிறந்திருந்த ஒரே வாரிசு வான்மதி.

    அந்த வீட்டின் சந்தோசத்திற்கும் பெருமைக்கும் அடித்தளம் அவள் மட்டும்தான் என்பதனால்... அந்த வீட்டின் செல்லப் பெண் வான்மதி.

    சக்திவேலின் காலத்தில் தொடங்கப்பட்டு பின் அவரது மகனான காசிநாதனால் தொடரப்பட்டுக் கொண்டிருந்த அவர்களது தொழிலான ஜவுளி விற்பனையானது வான்மதி பிறந்த பிறகுதான்... பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தது...

    தற்போது மதுரையின் பரபரப்பான ஜன சந்தடி மிகுந்த கடைவீதி தெருவில்... மிகப் பெரிய ஜவுளி மாளிகைக்கு சொந்தக்காரராக உருமாறியிருந்தார் காசிநாதன்.

    அதுமட்டும் அல்லாமல்... அவரது சொந்த முயற்சியால் உருவாக்கியிருந்த பஞ்சு மற்றும் நெசவு மில்லும் மிக நன்றாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்ததில்... சக்திவேலிற்குள் பெருமிதம் கலந்த கர்வம் தலைதூக்கியிருந்தது.

    இவையனைத்திற்கும் தன் பேத்தியான வான்மதியின் ராசிதான் காரணம் என்று மனதார நம்பினார் அவர்.

    தாத்தா...

    சாமி கும்பிட்டு முடித்து, நெற்றியில் சின்ன குங்குமம் தீற்றலுடன் நீண்ட கூந்தலை துண்டினால் துடைத்தவாறு சக்திவேலின் எதிரே வந்தமர்ந்த வான்மதியின் அழைப்பைக் கேட்டு...

    தன் சிந்தனையின் பிடியில் இருந்து விடுபட்டவராக பேத்தியைப் பார்த்து பெருமையுடன் புன்னகைத்தார் சக்திவேல்.

    சாமி கும்பிட்டு முடிச்சுட்டியா கண்ணு... காலங்கார்த்தால உன்னோட பாட்டைக் கேட்ட பிறகு அந்த சாமிக்குக் கூட புத்துணர்ச்சி கிடைச்சிருக்கும்... அம்புட்டு அருமையா பாடுறடா...

    தாத்தா...! ம்ஹும்... சாமியை வம்பிழுக்கிற வேலை வேண்டாம் தாத்தா... உங்களுக்கு மட்டும்தான் உங்க பேத்தி ஸ்பெசலானவ... சாமிக்கு இல்ல... புரிஞ்சுதா? ஸோ பெரிய இடத்தோட மோதாம இருந்துக்கிறது ஸேஃப்டி.

    அடப் போடா... நான் என்ன பொய்யா சொல்றேன்... பொய் சொல்றவங்கதான் சாமிக்குப் பயப்படணும்…

    ஆனாலும்... நீ கொஞ்சம் ஓவராத்தான் போற சக்திவேலு... கொஞ்சம் அடக்கி வாசி... தெனாவெட்டு அதிகமாகிக்கிட்டே வருது…

    உண்மையாகவே தெனாவெட்டாகப் பேசிக் கொண்டிருந்த சக்திவேலை... இடுப்பில் கை வைத்து பொய் கோபத்துடன் கண்களை உருட்டியவாறு வான்மதி மிரட்டல் குரலில் எச்சரிக்க...

    அதனைக் கேட்டு சத்தமாக சிரித்தவாறு... தன் அருகில் கிடந்த துண்டினைஎடுத்து செல்லமாக வான்மதியை நோக்கி விசிறி அடித்தார் சக்திவேல்.

    நொடியில் அந்த துண்டின் வீச்சில் இருந்து தப்பித்து விலகி நின்று… அவரை நோக்கி பழிப்புக் காட்டி சிரித்தாள் வான்மதி.

    என்னடி பழக்கம் இது? தாத்தாகிட்டே இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா.. உனக்கு வரவர வாய் நீளமாகிக்கிட்டே போகுது வான்மதி...

    இல்லையேம்மா... எனக்கொண்ணும் அப்படி தெரியலையே... இங்க பாருங்க... என் வாய் எப்பவும் இருக்கிற சைசுலதான் இப்பவும் இருக்கு...! உங்களுக்குத்தான் கண்ணு சரியா தெரியலை போல... அதுசரி... உங்களுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல.

    என்னடி சொன்னே? என்ன சொன்ன...? அப்ப என்ன கிழவின்னு சொல்ல வர்றியா...?

    சொல்ல வர்றியா இல்ல... ஆல்ரெடி அப்படித்தான் சொன்னேன்... அது சரி காதும் போச்சா... இனிமேல் சைகை பாஷையிலதான் பேசணுமா... அடக் கடவுளே…!

    கண்டிக்கிறேன் பேர்வழி என்று வாலண்டியரா வந்து மாட்டிக் கொண்ட மோகனாவைப் பார்த்து வெகு கவலையுடன் கன்னத்தில் கை வைத்து கேட்ட வான்மதியை கண்டு... முன்னிலும் அதிகமாகச் சத்தமிட்டு சிரிக்கத் தொடங்கினார் சக்திவேல்.

    நல்லா இருக்கு மாமா... நீங்க குடுக்கிற செல்லத்தாலதான் இவ இந்த ஆட்டம் ஆடுறா... உங்களுக்காக பரிஞ்சுக்கிட்டு வந்தேன் பாருங்க...! என்னைச் சொல்லணும்.

    நான் கேட்டேனா... எனக்காக என் பேத்திக்கிட்ட வந்து நியாயம் கேளு மோகனான்னு... நானா உன்னக் கூப்பிட்டேன்... நீயா வந்து மாட்டிக்கிட்டா நான் என்ன செய்ய முடியும் மருமகளே...? உன் விதி... அனுபவின்னு சொல்லி வேடிக்கைதான் பார்க்க முடியும்.

    வெல் செட் தாத்தா! எனக்கும் எங்க தாத்தாவுக்கும் இடையில ஆயிரம் இருக்கும்... இதுக்கு ஊடால யார் வந்தாலும்... அது யாராக இருந்தாலும் சரி... ஒரு கை பார்த்துடணுங்கிறது எங்க சங்கத்தோட விதிமுறை... இது புரியாம... ஆடு தானா வந்து வெட்டிக்கோ வெட்டிக்கோன்னு தலையை நீட்டி காட்டினா... வெட்டி பிரியாணி போடத்தான செய்வோம்...? என்ன தாத்தா நான் சொல்றது...

    நியாயமான வார்த்தைடா கண்ணு...

    நல்ல தாத்தா... நல்ல பேத்தி! எக்கேடோ கெட்டுப் போங்க... எனக்கென்ன வந்தது... நான் போய் ஆகுற வேலையைப் பார்க்கிறேன்.

    இது... இது கரெக்ட்! இந்த மாதிரி நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்திருந்தா... எனக்கு இவ்வளவு எனர்ஜி வேஸ்ட் ஆகியிருக்காதில்ல...

    எனர்ஜி வேஸ்ட்டா... அப்பிடி என்னத்த வெட்டி முறிச்ச எனர்ஜி வேஸ்ட் ஆகுறதுக்கு...

    ம்ம்... இவ்வளவு நேரமா உங்களை கலாய்ச்சதே எட்டு ஏக்கர் நிலத்து மரத்த வெட்டி முறிச்சதுக்கு சமம்தான்... போங்க... போய் ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு கொண்டுவாங்க... அப்பத்தான் ஸ்கூல்ல போய் பசங்ககிட்ட கத்துறதுக்கு ஸ்ட்ரெண்த் கிடைக்கும்...

    நல்லாத்தாண்டி இருக்க! ஏர் கட்டுறவன் இளிச்ச வாயனா இருந்தா மாடு அவனை மச்சான்னு கூப்பிடுங்கிறது சரியாத்தான் இருக்கு... உனக்கு நான் அம்மாவா... இல்ல எனக்கு நீ அம்மாவான்னு சந்தேகமா இருக்குடி...

    முதல்ல காபிய கொண்டு வாங்க... குடிச்சுட்டு தெம்பா உங்க சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன்...

    சக்திவேலின் அருகில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு வான்மதி கெத்தாகக் கூற... தன்னைத் தானே நொந்து கொள்பவளாக தலையில் லேசாக அடித்துக் கொண்டு... அங்கிருந்து திரும்பிச் செல்லத் தொடங்கினாள் மோகனா.

    நிஜமாவே நீ வேலைக்குப் போகப் போறியா கண்ணு…? இந்த தாத்தா பேச்ச கேட்கவே மாட்டியா...?

    செல்லும் அன்னையை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்த வான்மதியிடம், சக்திவேல் கவலையாகக் கேட்க... கண்டிப்புடன் அவரை திரும்பிப் பார்த்தாள் வான்மதி.

    ஆல்ரெடி நாம இதைப்பத்தி நிறையவே பேசியாச்சு தாத்தா... ப்ளீஸ்... மறுபடியும் ஆரம்பிக்காதீங்க... அப்பா காதில் விழப் போகுது...

    அதுக்கில்லடா... நாமளே ஐம்பது பேருக்கு சம்பளம் கொடுத்துக்கிட்டு இருக்கும்போது... நீ வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு சொல்லு...

    தாத்தா... நான் வேலைக்குப் போகிறது சம்பாத்தியத்துக்காக இல்லை தாத்தா... டீச்சர் வேலைங்கிறது... எனக்கு பிடிச்ச வேலை. என்னோட ஆம்பிசன் இது... சின்ன வயசுல நான் கண்ட கனவு இதுன்றது உங்களுக்கும் தெரியும்தான தாத்தா...

    தெரியும்தான்... டீச்சர் தொழில் தன் பேத்தியின் கனவு என்பதை சக்திவேலும் மிக நன்றாகவே அறிந்தவர்தான்.

    மிகச் சிறு வயதில்... அவள் வயதையொத்த குழந்தைகள் பொம்மைகள், ரிமோட் கார்கள் என்று தேடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்க...

    கையில் இருக்கும் சின்னஞ்சிறிய குச்சியை பிரம்பாக எண்ணிக் கொண்டு வீட்டின் சுவரினை கரும்பலகையாக உருவகப்படுத்தி தான் ஒரு டீச்சராக உருமாறி... இல்லாத குழந்தைகளுக்குக் கற்பனையாகப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பேத்தியின் அறிவினைக் கண்டு பெருமையில் பூரித்துப் போனவர்தான்...

    என்றாலும்... தன் செல்லப் பேத்தி வீடு என்ற கூடு தாண்டி சிறகு விரித்து பறக்கப் போவதை எண்ணிய பயம் மனதினை பற்றிக்கொள்ள... பேத்தியின் கனவிற்கும் தன் மனப் போராட்டத்திற்கும் இடையில் தடுமாறிப் போனவராக அமர்ந்திருந்த சக்திவேலுக்குள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்கிற குழப்பம் எழுந்தது.

    ப்ளீஸ் தாத்தா... என்னைப் புரிஞ்சுக்கோங்க... ஐ லைக் திஸ் ஜாப்... இப்ப இவ்வளவு யோசிக்கிற நீங்க... பிளஸ்டூ ல் நான் நல்ல மார்க் எடுத்த போது எதுக்காக எனக்கு சப்போர்ட் பண்ணுனீங்க... அப்பா மெடிக்கல் படிக்க சொன்னப்ப கூட... அவ்வளவு பெரிய ஆப்பர்சுனிட்டிய எனக்காக ஒரே வார்த்தையில வேண்டாம்னு சொன்னீங்கள்ல... இப்ப உங்களுக்கு என்னாச்சு தாத்தா…?

    தெரியல கண்ணு... எனக்கொண்ணுமே புரியல... ஆனா இந்த வேலைக்குப் போனா… உனக்கு...

    வேலைக்குப் போனா என்ன தாத்தா...? எனக்குத்தான் மதுரைப் பக்கத்து ஊரிலேயே போஸ்ட்டிங் கிடைச்சிருக்கு... எப்பவும் போல வீட்டில் இருந்தே போயிட்டு வரப் போறேன்... வழக்கம் போல அப்பாவே என்னை ஸ்கூலில் டிராப் பண்ணிட்டு... திரும்பவும் பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டார்... ஸோ நோ பிராப்ளம் தாத்தா...

    சரிடா கண்ணு... போயிட்டு வா... நீ இவ்வளவு சொல்லும்போது மறுத்து சொல்ல மனசு வரலை... பார்த்து பக்குவமா நடந்துக்கணும்டா.

    தாத்தா... தாத்தா... மை ஸ்வீட் தாத்தா... இந்த அட்வைசெல்லாம் இப்ப எனக்கு தேவையே இல்ல. இது எல்லாத்தையும் பத்திரமா வெச்சிருந்து... நாளப் பின்ன நான் என் மாமியார் வீட்டுக்கு போகும்போது சொல்லுங்க... கேட்டுக்கறேன்... ஓகேவா.?

    விளையாட்டுக் குறும்புடன் கூறிவிட்டு… விட்டால் போதும் என்பதைப் போல் தன்னறைக்கு விரைந்துவிட்ட பேத்தியை, அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு துணுக்குற்ற மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சக்திவேல்.

    என்றும் இல்லாத வகையில் வான்மதி விளையாட்டாகக் கூறினாலும் சம்பந்தமே இல்லாமல் அவள் எதற்காக தன் திருமண பேச்சினை பேசிவிட்டு போக வேண்டும் என்கிற வினா மனதினுள் மெல்ல எழுந்து… பின்...

    விஸ்வரூபமாக மனமெங்கிலும் வியாபித்து நிறையத் தொடங்க... சக்திவேலின் மனதினை இனம் புரியாத பயம் ஆட்டுவிக்கத் தொடங்கியது.

    அந்த பயத்துடனேயே அமர்ந்திருந்தவர்...

    வாணிம்மா... கிளம்பிட்டியாடா.?

    இதோப்பா... வந்துட்டேன்... போலாமா?

    மதியத்துக்கு வெஜிடபிள் பிரியாணி பண்ணி வெச்சிருக்கேன்... மிச்சம் வைக்காம சாப்பிட்டு விடணும்...

    ஓகேம்மா... மோகனாவோட பேச்சே கட்டளை... உன் கட்டளையே சரணம்... கவலையவிடு...

    போடி போக்கிரி... நல்லபடியா போயிட்டு வா...

    டன் ம்மா... தாத்தா போயிட்டு வர்றேன்... இந்த நிமிசத்துல இருந்து மோகனா உங்க பொறுப்பு... ஈவ்னிங் வந்த பிறகு உங்ககிட்ட இருந்து இந்தப் பொறுப்பை நான் ஹேண்ட் ஓவர் பண்ணிக்கிறேன்... பை... தாத்தா... பை சொன்னேன்... கேட்கலையா... தாத்தா...

    தான் விரும்பிய தொழிலை பார்க்கப் போகும் குதூகலத்துடன் அன்னை தந்தையிடத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு கிளம்பிய வான்மதி செல்வதற்கு முன்பாக... சக்திவேலின் பாதங்களைத் தொட்டு வணங்கியவள் அதனை உணராதவராக அவளையே வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த தாத்தாவினை உரத்த குரலில் அழைத்தாள்.

    அவளது அழைப்பினால் தன் உணர்வு திரும்பியவராக பேத்தியைப் பார்த்து சக்திவேல் ஆசீர்வாதமாக கரம் உயர்த்திக் காட்ட... அவருக்காக காற்றில் ஒரு முத்தத்தினை பறக்க விட்டபடியே ஓடிச்சென்று தனக்காக காத்திருந்த தந்தையின் காரில் ஏறி அமர்ந்து விட்டாள் வான்மதி.

    2

    நீட்டிப் பறிக்கும் உயரத்துடன்... சரிபாதி இலையும் சரிபாதி காயும் பழமுமாக... காய்த்துப் பழுத்துக் கிடந்த எலுமிச்சை மரத்தில் இருந்து பறித்த இளம் மஞ்சள் வண்ணக் காய்களை பக்குவமாக கூடைகளில் சேகரித்துக் கொண்டிருந்த சண்முகம்,

    தனக்குப் பின்புறமிருந்து கேட்ட காலடியோசையைக் கொண்டே வருவது யாரென்பதை யூகித்து விட்டவராக... தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.

    தோட்டத்துக்குப் போகும் போது கூப்பிடுங்கன்னு சொல்லிட்டுத்தான போனேன். நான் வர்றதுக்குள்ள இப்படி தனியா கிளம்பி வந்து கஷ்டப்படணுமாப்பா... ஏன்தான் இப்படி பண்றீங்களோ... தள்ளுங்க... நீங்க கூடையை மட்டும் பிடிச்சா போதும்... காய்களை நான் பறிச்சுப் போடறேன்…

    சண்முகம் திரும்பும் முன்பாக... அவரைக் கடிந்து கொண்டவாறே அவர் தோள்தொட்டு அவரை சற்று நகர்த்தி நிற்க வைத்துவிட்டு... எலுமிச்சங் காய்களை தானே பறிக்கத் தொடங்கிய மகன் சித்தார்த்தனை பெருமையுடன் பார்த்தார் சண்முகம்.

    ராத்திரி பூரா பிரயாணம் பண்ணிட்டு வந்த புள்ள கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு நினைச்சு தான் உன்கிட்ட சொல்லாம கிளம்பி வந்தேன்... நீ என்னடான்னா பின்னாடியே வந்து நிக்குற…! நியாயமாப் பார்க்கப் போனா நான்தான் உன்ன கோபிச்சுக்கணும் சித்தார்த்து…

    யாரும் யாரையும் கோவிச்சுக்க வேண்டாம்ப்பா... இது நம்ம வேலை... எல்லோரும் உழைச்சாத்தான் அதுக்கான பலன் கிடைக்கும். இப்ப பாருங்க... காயெல்லாம் நல்லா பழுக்க ஆரம்பிச்சிடுச்சு... நீங்க ஒருத்தரா இத பறிச்சு ஒண்ணு சேர்க்கிறதுக்குள்ள... பழம் கெட்டுப் போக ஆரம்பிச்சிடும்... இதுவே... ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்த்தா... வேலையும் ஈஸியா முடிஞ்சிடும்... தேவையில்லாத நஷ்டத்தையும் அவாய்ட் பண்ணிடலாம்…

    அதெல்லாம் சரிதான் தம்பி... ஆனா உன் உடம்பையும் சரிவர கவனிச்சிக்கிடணும் இல்ல…? சுவர் நல்லா இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும் சித்தார்த்து...

    இந்த பழமொழியெல்லாம் ஓல்டு வெர்சன் ஆகி ரொம்ப நாளாச்சுப்பா... இது டிஜிட்டல் பேனர் வைக்கிற காலம்... பேனர் வைக்கிற கம்பிகளை நல்லா ஸ்ட்ராங்கா நட்டு வெச்சிட்டா போதும்... கலர் கலர் பெயிண்டிங்குகளை மாடல் மாடலா மாத்தி வைச்சுக்கிட்டே இருக்கலாம்...

    அதுவும் சரிதான்... காலம் மாறிக்கிட்டேதான் இருக்கு... நாமளும் அதுக்கேத்த மாதிரி மாறித்தான ஆகணும்...

    மாற்றம் ஒன்றே மாறாதது...

    தந்தையுடனான பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தது போல அழுத்தமாக கூறிய சித்தார்த்தன்... தன் வேலையில் முனைப்பாகிவிட...

    ஜெட் வேகத்தில் லாவகமாக காய்களைப் பறித்துப் போட தொடங்கிய மகனுக்கு உதவ தொடங்கிவிட்டார் சண்முகம்.

    காய்களை முழுவதுமாக பறித்து, தரவாரியாக நன்றாக பழுத்த பழங்கள் தனியாகவும்... இளம் பழங்கள் தனியாகவும் என அததற்கான கூடைகளில் அடுக்கி வைத்து... மேலே தரமான சாக்கு பைகளைக் கொண்டு மூடி தையலிட்டு முடித்து நிமிர்கையில்... சூரியன் தலைக்கு நேர் மேலாக வந்து விட்டிருக்க…

    மகனது நெற்றியில் வியர்த்து வடிந்த வேர்வை துளியைத் தன் மேல் துண்டினால் துடைத்துவிட்டார் சண்முகம்.

    சொன்னா கேக்குறியா தம்பி…? இப்ப இந்த காய்களை இன்னிக்கே பறிச்சு ஒண்ணு சேர்க்கணும்னு கட்டாயமா என்ன...? கொஞ்சம் பொறுமையா செஞ்சாத்தான் என்ன வந்துறபோகுது…? ஒரு ரெண்டு மூணு கிலோ நஷ்டம் ஆனாத்தான் ஆகிட்டுப் போகட்டுமேப்பா...? இப்படி உடம்பை வருத்தி வேலை பார்த்துத்தான் சம்பாரிக்கணுமா...

    ரெண்டு மூணு கிலோன்றது உங்களுக்கு ஈஸியா தெரியுதாப்பா? இந்தக் காய்களைக் கண்ணுல பார்க்கிறதுக்காக நாம உழைச்ச உழைப்பெல்லாம் உங்களுக்கு மறந்துப் போச்சா...

    "அப்படியில்ல தம்பி... காலையில இருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1