Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Nenjam Un Thanjam...
En Nenjam Un Thanjam...
En Nenjam Un Thanjam...
Ebook187 pages1 hour

En Nenjam Un Thanjam...

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த ஒரு பெண்ணின் கதை..

தஞ்சமென போன இடத்தில் அவளிடம் தன் நெஞ்சத்தை காணிக்கையாக கொடுத்தவனின் அன்பை அவள் ஏற்றுக் கொண்டாளா..இல்லையா...?

Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580134205579
En Nenjam Un Thanjam...

Read more from Viji Prabu

Related authors

Related to En Nenjam Un Thanjam...

Related ebooks

Reviews for En Nenjam Un Thanjam...

Rating: 2.5 out of 5 stars
2.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Nenjam Un Thanjam... - Viji Prabu

    http://www.pustaka.co.in

    என் நெஞ்சம் உன் தஞ்சம்…

    En Nenjam Un Thanjam...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    1

    "வலம்புரிச் சங்கே வலம்புரிச் சங்கே....

    மாதவன் கரம் செல்வாய்....

    நிலையை நீ சொல்வாய்....

    அவன் செம்பழத் திருவாய் மொழியாய்...

    உன் ஒலியும் வருகின்றதே...

    உன் நாதமழை என் வேதனையில்

    சிறு ஆறுதல் தருகின்றதே...."

    பெருமாளின் சந்நிதியில் கண்மூடிக் கரம் குவித்து நின்றிருந்த மித்ராவின் செவிகளில் அவளது மன வேதனையைப் பிரதிபலிப்பது போல் கேட்டது கோவிலின் ஸ்பீக்கரில் வழிந்த பாடல். அவளையறியாமல் கன்னங்களில் கண்ணீர் வழிய கண்மூடி ஏழு மலையானை மனம் உருகச் சேவித்துக் கொண்டிருந்த மித்ராவின் முன கற்பூரத் தட்டை நீட்டிய கேசவன் ஐயர் அவளது வேண்டுதலைக் குறுக்கிடாமல் அமைதியாக நின்றிருந்தார்.

    மெதுவாகக் கண்திறந்த மித்ரா ஐயர் தனக்காகக் கற்பூரத் தட்டினை நீட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்து மிக வேகமாகத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு ஐயரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தாள். அவள் நீட்டிய கையில் விபூதிப் பிரசாதத்தைக் கொடுத்த கேசவன் கற்பூரத் தட்டை சாமியின் பாதங்களுக்குக் கீழே வைத்துவிட்டு அவர் பாதத்தில் இருந்த ஜாதி மல்லிகைச் சரத்தை எடுத்துக் கொண்டு வந்து மித்ராவிடம் நீட்டினார். பயபக்தியுடன் அந்தப்பூவை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக்கொண்ட மித்ரா அதை பத்திரமாகக் கைகளில் வைத்துக் கொண்டாள்.

    மித்ராவின் செயல்களை எல்லாம் அன்பும் கருணையும் கொண்ட கண்களால் பார்த்துக் கொண்டு இருந்த கேசவன் அவளைப் பார்த்து ஆறுதலாகப் புன்னகைத்தார்.

    பூவைத் தலையில் வெச்சுக்கம்மா குழந்தே... கூறியவரைப் பார்த்துப் புன்னகைத்தபடியே மலர்ச்சரத்தை தலையில் சூடிக்கொண்டாள் மித்ரா.

    பெருமாள் உனக்கு எப்பவும் துணையிருப்பார் மித்ரா... நீ எதை எண்ணியும் கவலையும், பயமும் கொள்ளாமல் உன் கடமையைச் செய் மித்ரா. அதைத் தான் அந்த ஏழுமலையானும் நம்மகிட்ட எதிர்பார்க்கிறார். அமைதியுடன் கூறினார் கேசவ ஐயர்.

    நானும் இதுவரை அப்படித்தான் சாமி நடந்துக்கிட்டு இருக்கேன். ஆனா... வார்த்தைகளை முடிக்க இயலாமல் நிறுத்திக் கொண்ட மித்ரா கண்களைச் சிமிட்டி கண்ணீரை மறைத்தாள்.

    வேண்டாம்மா. கண்ணீர் விடாதே. அதுவும் உனக்கு அம்மாவும், அப்பாவுமா இருக்கற இந்த ஏழுமலையான் முன்னால நீ கண்ணீர் விட்டா அதை அவர்கூடத் தாங்கமாட்டார்.

    அப்படி எனக்குத் தாயுமானவரா இருக்கிறவர் எதுக்காக சாமி என்னை இப்படிச் சோதிக்கணும்...? வேதனையுடன் வெளிவந்தது மித்ராவின் குரல்.

    இதை எதுக்காகம்மா சோதனைன்னு நினைக்கிற உன் வாழ்க்கை ஒளிமயமா மாறுகிறதுக்கா உன் தெய்வம் காட்டுற வழியா நினைச்சுக்கம்மா....

    என்னால அப்படி நினைக்க முடியல சாமி. பாதுகாப்பாக கூட்டுக்குள்ள இருக்கற பறவைக் குஞ்சை வலுக்கட்டாயமா கூட்டை விட்டுத் துரத்துற மாதிரி இருக்கு...

    அப்படி வெளியேற்றினால்தான் அந்தப் பறவைக்கு பறக்கத் தேவையான சக்தி வரும் மித்ரா. இல்லேன்னா கூட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் முடமாகிவிடும்.

    சாமி....!?

    நடப்பது எல்லாம் நன்மைக்குத்தான்னு நினைச்சுப் பழகு மித்ரா. அதுதான் எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கிற சக்தியை நமக்குக் கொடுக்கும். ‘என் சமூகம் உனக்கு முன்பாகச் சொல்லும்னு’ சர்ச் காம்பவுண்ட்ல எழுதி இருப்பாங்க. அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு நம்பிக்கை வரும். அதை எப்பவும் அந்த ஆண்டவன் அருளிய வாக்கா மனசுல பதிய வெச்சுக்க. எல்லாமே நன்மையாகவே நடக்கும்.

    சரிங்க சாமி... மெதுவாகத் தலையாட்டிய மித்ராவைப் பார்க்கும் போது மனதைப் பிசைவதைப் போல் இருந்தது கேசவ ஐயருக்கு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலை அசைத்து மித்ராவிற்கு விடை கொடுத்தார் அவர்.

    கோவிலை விட்டு வெளிவந்த மித்ரா மெதுவாக நடந்து ‘ஸ்ரீவாரி ஆசிரமம்’ என்ற பெயர்ப்பலகை தாங்கிய ஆசிரமத்திற்குள் நுழைந்தாள். உள்ளே நுழைந்த மித்ராவின் பார்வை ஏக்கத்துடன் அந்த ஆசிரமத்தைச் சுற்றிச் சுழன்றது... கான்க்ரீட் தளத்துடன் இரண்டு பெரிய அறைகளைக் கொண்ட தலைமை அலுவலகமும், மற்றும் பத்து சிறிய குடில்களும் கொண்ட மிகச் சிறிய ஆசிரமம் அது.

    மீரா என்ற கருணை உள்ளம் கொண்ட பெண் மணியால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த ஆசிரமம் இன்று அவரைப் போன்று கருணை உள்ளம் கொண்ட ஆறு பெரிய தனவந்தர்கள் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது.

    பெற்றேர்களால் கைவிடப்பட்ட அனாதைப் பெண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டு, தற்சமயம் நாற்பது பெண்குழந்தைகளைத் தன் பொறுப்பில் வைத்து வளர்த்துப் பாதுகாத்து வந்தது அந்த ஆசிரமம். ஒரு குறிப்பிட்ட வயது வரை கல்வியும், தங்க உறை விடமும் தந்து பாதுகாப்புடன் வளர்க்கும் ஆசிரம நிர்வாகிகள் அதற்குமேல் அவரவர் கல்வித்தகுதி மற்றும் திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து ஆசிரமத்தில் இருந்து அனுப்பி விடுவார்கள்.

    அதற்குப் பின் அந்த ஆசிரமம் அந்தப் பெண்களுக்கு உரிய ஆலோசனைகளை மட்டுமே அளிக்குமே தவிர அவர்கள் அங்கே தங்குவதற்கு அனுமதி தராது. எனவே அங்கு வளரும் பெண்கள் அனைவருக்கும் கல்வி தவிர, மற்ற கைத்தொழில்களும், மற்றும் தற்காப்புக் கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டு, அங்கு இருந்து வெளியேறிய பிறகும் தங்கள் வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் நடத்துவதற்கு உரிய பயிற்சியும் கொடுக்கப்பட்டு இருந்தது.

    ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே மேலாளர் அறைக்குள் நுழைந்த மித்ரா அங்கு இருந்த மீரா அம்மாளைப் பார்த்துக் கரம் குவித்து வணங்கினாள். அவளைப் பார்த்துப் பெயரளவிற்குப் புன்னகைத்த மீரா அம்மாளின் முகமும் வேதனையைக் காட்டியது.

    வாம்மா மித்ரா... உட்காரு... தனக்கு எதிரே இருந்த நாற்காலியைக் கைகாட்டினார் மீரா.

    தயக்கத்துடன் அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்த மித்ரா சங்கடத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

    கோவிலுக்குப் போயிருந்தியா...? அன்புடன் கேட்ட மீராவிற்கு ஆமென்று தலையசைத்தாள் மித்ரா.

    அதற்கு மேல் என்ன பேசுவது என்று தயங்கியதைப் போல் அமர்ந்திருந்த மீரா, தன் கண்ணாடியைக் கழற்றி கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

    2

    மீரா அம்மாள் அந்த ஆசிரமத்தைத் தொடங்கியதும், அங்கு வந்து சேர்ந்த முதல் குழந்தை மித்ரா. எனவே மீரா அம்மாள் மித்ராவைத் தன் சொந்தப் பெண்ணாக எண்ணியே அவளை வளர்த்து வந்தார். மற்ற எல்லாப் பெண்களும் டிகிரி முடித்தவுடன் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பின்னரும் மித்ராவைத் தன்னுடனே வைத்து ஆளாக்கினார் மீரா. இன்று அவர் மித்ராவிற்கு மட்டும் தனிச்சலுகை காட்டுவதாக உணர்ந்த மற்ற நிர்வாகிகள் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து அவர் மித்ராவை மற்ற பெண்களைப் போலவே ஆசிரமத்தை விட்டு வெளியே அனுப்பும் முடிவிற்கு வந்து விட்டிருந்தார்.

    எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த மித்ராவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே தானும் அமைதியாக அமர்ந்திருந்தாள் மீரா. அவளையே பார்த்துக் கொண்டிருந்த மீரா ஒரு பெருமூச்சுடன் தன் மேஜை இழுப்பறையைத் திறந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து நீட்டினார். எதுவும் புரியாமல் மீரா நீட்டிய பெட்டியை வாங்கிக் கொண்ட மித்ரா, அதைத் திறந்து பார்த்தவுடன் அதிர்ந்து அமர்ந்து விட்டாள்.

    விலை உயர்ந்த கற்கள் பதித்த சிறிய டாலருடன் கூடிய செயினும், அதற்கேற்றாற்போல ஒரு ஜோடி கம்மலும், இரண்டு வளையல்களும் அந்தப் பெட்டியில் இருந்து மித்ராவைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டு இருந்தன. மித்ரா திகைப்புடன் நிமிர்ந்தாள்.

    என்ன மித்ரா...? பெட்டிக்குள் வெடிகுண்டு எதையும் பார்த்துட்டியா...? இப்படிப் பயந்து போய் முழிக்கிற...? கேலியாகக் கேட்டார் மீரா.

    வெடிகுண்டு இருந்தாக் கூட எனக்கு இவ்வளவு அதிர்ச்சியா இருக்காது மேடம். ஆனா இவ்வளவு விலை கூடிய... பேசிய மித்ராவைக் கையமர்த்தினார் மீரா.

    என்னைப் பொறுத்தவரை உன்னை விட, உன் அன்பை விட விலையுயர்ந்த ஒன்று இந்த உலகத்தில் இல்லை மித்ரா...

    அது உங்களோட அன்பைக் குறிக்குது மேடம், ஆனா இது எல்லாம்....

    இதுவும் அதேபோல் உன்மேல நான் வெச்சிருக்கிற அன்பைத்தான் குறிக்குது மித்ரா. நான் வெறும் வாய் வார்த்தைக்காக உன்னை என் பொண்ணுன்னு சொல்லல. என் மனதார உன்னை என் பொண்ணாத்தான் நினைக்கிறேன். அதனால உனக்கு இதையெல்லாம் செய்ய வேண்டியது என்னோட கடமை... மீராவின் வார்த்தைகளைக் கேட்ட மித்ரா அழுதுவிட்டாள்.

    எனக்கு உங்களோட அன்பு மட்டும் போதும் மேடம். மற்றபடி இந்த நகையெல்லாம் வேண்டாம்...

    ம்ஹூம்....? அப்ப இந்தச் செக்...? இதற்கு நீ என்ன சொல்லப் போற...? ம்...? புருவம் உயர்த்திக் கேட்ட மீராவின் கைகளில் இருந்த செக்கை மித்ரா அப்போது தான் கவனித்தாள்.

    இல்ல மேடம். இது வேண்டாம் மேடம், எனக்கு உண்மையிலேயே உங்களோட அன்பு மட்டும் போதும். மேடம் அதற்கு மேல் இதையெல்லாம் நான் ஒத்துக் கிட்டா நான் உங்க மேல வெச்சிருக்கிற அன்பு பொய்யாகிவிடும் மேடம். ப்ளீஸ் மேடம்... வார்த்தைக்கொரு மேடம் போட்டுக் கெஞ்சிய மித்ராவைக் கண் இமைக்காமல் பார்த்தார் மீரா.

    இப்ப எதுக்காக நீ இவ்வளவு பயப்படுற மித்ரா...? எனக்குப் புரியுது. என் பசங்களை நினைச்சுத்தான் நீ இப்படிப் பயப்படுற... வேதனையுடன் கூறினாள் மீரா.

    மேடம்... அப்படியெல்லாம் இல்லை மேடம் மெல்லிய குரலில் கலக்கத்துடன் கூறினாள் மித்ரா.

    "மித்ரா. நீ இல்லைன்னு சொன்னாலும் உன்னோட கண்கள் நீ சொல்றது பொய்யின்னு எனக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1