Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Roja Malare Rajakumari...
Roja Malare Rajakumari...
Roja Malare Rajakumari...
Ebook259 pages2 hours

Roja Malare Rajakumari...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

ராஜ வம்ச ராஜகுமாரி அவள்..!!

விவசாயி மகன் அவன்...!!

இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம்!! அவர்களது காதல் படகு கரை சேருமா...??படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134205584
Roja Malare Rajakumari...

Read more from Viji Prabu

Related to Roja Malare Rajakumari...

Related ebooks

Reviews for Roja Malare Rajakumari...

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Roja Malare Rajakumari... - Viji Prabu

    http://www.pustaka.co.in

    ரோஜா மலரே... ராஜகுமாரி...

    Roja Malare… Rajakumari…

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    "எண்ணிய எண்ணம் ஈடேற...

    என் அப்பன் உன் துணை வேண்டும்...

    பண்ணிய செயல்கள் நலமாக...

    பலராமன் உன் அருள் வேண்டும்...

    கண்ணென காத்து... கருணைகள் புரிந்து...

    கலக்கங்கள் தீர்த்து எனை வாழ்விடபாய்...

    உன் அருளாலே உன்னதம் கண்டு

    உன் மகள் நான் வாழ்வேனே...."

    கரம் குவித்து... கண்மூடி... தன் மானசீக தந்தையான பெருமாளின் முன்பாக நின்று கொண்டிருந்த பவதாரிணி...

    அறைக்கதவு அனுமதிப்பாக தட்டப்படுவதை அறிந்து... அவசரமாக பெருமாளிடம் மனதிற்குள் மன்னிப்புக் கேட்டபடியே ஓடிச் சென்று கதவினை திறந்தவள்... கதவுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மேகாவை பார்த்து செல்லக் கோபத்துடன் முறைக்க... அவளது முறைப்பினை லட்சியம் செய்யாத வளாக அவளைக் கடந்து அறைக்குள் நுழைந்தாள் மேகா...

    இந்த டைமில்... நான் ப்ரே பண்ணிக் கொண்டிருப்பேன் என்று தெரியாதா மேகா...

    உனக்கும் இந்த டைமில் நான் வருவேன் என்று தெரியாதா ராணி பவதாரிணி தேவி அவர்களே...

    ஏய் என்னை அப்படி கூப்பிடக்கூடாதென்று உன்னிடம் சொல்லியிருக்கிறேனா இல்லையா...?

    நானும்தான் நீ என்னை திட்டக்கூடாதென்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... நீ மட்டும் அதை கேட்கிறாயா என்ன...?

    உன்னை...

    வார்த்தைக்கு வார்த்தை பதிலளித்தவாறு அறையை ஒழுங்குபடுத்த தொடங்கிய மேகாவின் மீது கோபம் கொண்டவளாக... கையில் கிடைத்த சிறிய தலையணையை கேமாவை குறிவைத்து பவதாரிணி எறிய... அவள் வீசிய தலையணையை அலட்சியமாக கையில் பிடித்து... மீண்டும் அதனை அதன் இடத்தில் வைத்துவிட்டு... தன் வேலையை தொடர தொடங்கினாள் மேகா...

    இப்ப நீ எதற்காக இந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாய் மேகா...? ஜஸ்ட் ஒரு ஃபைவ் மின்ட்ஸ்ஸீ வெயிட் பண்ணுடி... நான் ப்ரேயரை முடித்துவிட்டு வந்து எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறேன்...

    வேண்டாம் ராணி... நீங்க உங்க வேலையை கண்ட்டினியூ பண்ணுங்க... நான் என் டியூட்டியை பார்த்துக் கொள்கிறேன்... இப்படி என் மீது உன் அக்கறை சர்க்கரையை காட்டி... காலங்கார்த்தாலயே என்னை உன் அம்மாவிடம் மாட்டிவைத்து விடாதே தேவி... அப்புறம் மகாராணியாரின் திட்டுக்களை கேட்பதற்கு எனக்கு இரண்டு காதுகள் போதாது...

    ஏய்... நான் அப்படி செய்வேனாடி... ரூமை குளோஸ் பண்ணிட்டுதான் கீளின் பண்ணவே ஆரம்பிப்பேன் கேமா... யூ டோண்ட் வொர்ரி...

    சினேகிதியின் கிண்டல் மொழிகளைக்கூட தாளமுடியாதவளாக முகம் மாறிய தோழியை கண்டு அவளருகில் வந்து நட்புடன் அவளை அழைத்துக் கொண்டாள் மேகா.

    உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா பவா... நான் சும்மா விளையாட்டுக்கு அப்படி பேசினேன்... இதற்கெல்லாம் நீ...

    நீ என்னை சீரியசாகக்கூட திட்டலாம் மேகா... உனக்கு அந்த உரிமை இருக்கிறது...

    உன்னை திட்டுவதற்கு என்ன இருக்கிறது தேவி... நீதான் எனக்கு அந்த வாய்பையே குடுத்ததில்லையே...

    ம்ம்...! இதுவும் நல்ல ஐடியாவாகத்தான் இருக்கிறது மேகா...! செல்லு... சொல்லு... நான் என்ன செய்தால்... எப்படி நடந்து கொண்டால் உனக்கு கோபம் வரும்...

    எனக்கு உன் மீது எப்போதுமே கோபமே வராது தேவி... அவ்வளவு ஏன்... எங்க பரம்பரைக்கே கோபம் என்றால் என்னவென்றே தெரியாதே...!...?

    மேகா தன் போக்கில் இயல்பாக கூறியபடி தன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்க... அவளது வார்த்தைகளைக் கேட்டு விக்கித்து நின்றுவிட்ட பவதாரினியின் முகத்தில் வேதனை படர தொடங்கியது.

    ‘இவள் இயல்பாக கூறினாலும் இவளது வார்த்தைகளில் எத்தனை உண்மை இருக்கிறது...!’

    ‘இது பாவம் அல்லவா...! பரம்பரை பரம்பரையாக இவர்களது திறமைகளை மதிக்காது... இவர்களது உணர்வுகளை எங்களது காலடியில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் என்னை போன்றவர்களிடம் இருந்து இவர்களுக்கு விமோச்சனமே கிடையாதா...!’

    ‘இவர்களுக்கான விமோச்சனம் என்பது... இவர்களுக்குள் எழக்கூடிய விடுதலையுணர்வில்தான் இருக்கிறது... ஆனால் இவர்கள் தான் அப்படி ஒரு எண்ணத்தையே மறந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே...!’

    பவதாரிணி... ராஜா சின்மயா நந்தனின் செல்லமகள்... ராஜார்கள் காலம் மறைந்து... அவர்களது சாம்ராஜ்யங்கள் அழிக்கப்பட்டு... ஒருங்கிணைந்த சுதந்திர நாடாக மாறி... ஆண்டுகள் பல கழிந்து விட்ட நிலையிலும் கூட...

    தங்களது முன்னோர்களின் வீரதீர பிரதாபங் களினாலும்... பரம்பரை பரம்பரையாக தங்களது மண்ணில் வாழும் மக்களை தங்களது உயிராக... உடமையாக எண்ணி பாதுகாத்து வரும் குணத்தினாலும்... அனைத்திற்கும் மேலாக... தங்களுக்காக தங்களுடைய முன்னோர்கள் சேர்த்து வைத்துவிட்டு சென்றிருந்த எண்ணிலடங்காத செல்வங்களையும்... சொத்துக்களையும் தங்களது திறமையினால் கடுகளவும் குறையவிடாது... அதனை மேலும் பல மடங்காக பெருக்கியிருக்கும் புத்தி சாதுர்யத்தினாலும்...

    பரம்பரை புகழ் மங்காது... பழைய செல்வாக்குடன் வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் மிகச் சில ராஜ வம்சத்தினரில்... குறிப்பிட்டு சொல்லும்படியாக வாழ்ந்து கொண்டிருப்பவள் ராஜா சின்மயா நந்தன்...

    காலங்காலமாக அவர்கள் கோலோச்சிவந்த கோட்டையூர்... இன்று ஓரளவிற்கு பெரிய நகரமாக இருந்த நிலையில்... அவர்கள் வாழ்ந்து வந்த கோட்டையின் ஒரு சிறிய பாகத்தினை அருங்காட்சியமாக மாற்றி... தங்களது குலப் பெருமையை உலகறியும் படி செய்துவிட்டு... எஞ்சியிருந்த பெரும் பாகத்தில்... தான்... தன் குடும்பம்... தன் மக்கள் செல்வங்கள்... தங்களது பரம்பரை சேவகர்கள்... என் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருந்த சின்மயா நந்தனுக்கு...

    நித்திய நந்தன் என்ற ஒரு மகனும்... கார்த்திகாயினி தேவி... பவதாரிணி தேவி என்கிற இருமகள்களும் இருக்க...

    மூத்தவளான கார்த்திகாயினி தேவியை... தன்னைப் போன்றதொரு பெரும் ராஜகுடும்பத்தின் ஒரே வாரிசான மது மோகனுக்கு மணம் முடித்து வைத்திருந்தார் அவர்...

    அனைவருக்கும் பெரியவனான நித்திய மோகனுக்கும்... அதே போன்றதொரு ராஜகுடும்பத்து பெண்மகளை மணமகளாக்கும் முடிவுடன் சின்மயா நந்தனும் அவரது மனைவியான விலாசினி தேவியும் மிக தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருக்க... தற்போது தான் கல்லூரிப் படிப்பினை முடிக்கும் தறுவாயில் இருக்கும் இளையவளான பவதாரிணிக்கான மணமகனை தேடும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது...

    ராஜ குடும்பத்தினருக்கான பரம்பரை மரியாதையும்... கௌரவமும்... சற்றும் குறையாத வகையில் அதே தோரணையுடன்... அதே பழைய கட்டுக் கோப்பான வாழ்க்கை முறையை சின்மயாநந்தன் கடைபிடித்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு... அந்த குடும்பத்திற்கு விசுவாசமான சேவகர்களையும் ஒரு காரணமாக சொன்னானும் மிகையாகாது...

    பரம்பரையாக ராஜகுடும்பத்தின் விசுவாசிகளாக வாழ்ந்துவந்து கொண்டிருக்கும் அவர்கள் அனைவருமே... தங்களது அடுத்த தலைமுறையினருக்கும் வாழையடி வாழையாக அதே விசுவாசத்தையும்... பணிவையும் கற்றுக் கொடுத்து வளர்த்திருந்த காரணத்தினாலேயே... அந்த ராஜகுடும்பத்தினரின் வாரிசுகளாளும் அதே ராஜ ராஜ தோரணையுடன் வாழ முடிந்திருந்தது...

    காலத்தின் மாற்றத்திற்கேற்றாற் போல... தத்தமது ஊழியர்களின் வாரிசுகளின் கல்வி செலவு அனைத்தையுமே தாமே மனம் உவந்து முன்வந்து ஏற்றுக்கொண்டிருந்த சின்மயாநந்தன் அவர்களை அவர்கள் விரும்பிய துறையிலேயே கல்வி பயில அனுமதித்திருக்க...

    அந்த பெருந்தன்மைக்கான நன்றியாக முன்னிலும் அதிகமாக விசுவாசமாக உழைத்துக் கொடுத்தவர்களின் உழைப்பினால் சின்மயா நந்தனின் செல்வ நிலை பன்மடங்காக உயர்ந்திருந்தது...

    டாக்டர்... இன்ஜினியர்... கணிணியியில்... புள்ளியியல் என்று படித்தவர்களால்லாம்... அவரவர்களுக்கு தகுதியான இடங்களில் சின்மயா நந்தனின் பேக்டரிகளிலும்... மில்களிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்க... அந்த தொழில் நிறுவனங்களை மற்ற பட்ட படிப்பு படித்த இளைஞர்களும்... இளைஞிகளும் மேற்பார்வையிட்டு வழிநடத்திக் கொண்டிருந்தனர்.

    தங்களது முதலாளியின் நிறுவனம்... தங்களுடையது என்பதைப்போல அனைவரும் காலநேரம் கணக்குப் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்க... அவர்களது உழைப்பின் பயனாக கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதியை தன் வாரிசுகளுக்காக சேமித்து வைத்தாலும் கூட... தானே அவர்கள் அனைவருக்குமான ஆபத்பாந்தவன் என்கிற எண்ணத்துடன்... தன்னிடம் பணிபுரியும் பரம்பரை ஊழியர்களையும் நல்ல ஊதியத்துடன் மிக நல்ல முறையிலேயே வாழவைத்துக் கொண்டிருந்தார் சின்மயா நந்தன்.

    அதன் காரணமாகவே... அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாரிசுகளுக்கும்கூட அங்கிருந்து விலகி சென்று சுதந்திரமாக வாழும் எண்ணம் தோன்றாமலே போய்விட... சின்மயா நந்தனின் வாரிசுகளுக்கும்கூட... பரம்பரை பரம்பரையாக கிடைத்துவந்த மதிப்பும்... ராஜ மரியாதையும் அப்படி நீடித்து நிலைத்து நின்றிருந்தது...

    அந்த ராஜகுடும்பத்தின் வாரிசான பவதாரிணி... தன் உயிர்த் தோழியாக நினைத்திருக்கும் மேகாவும் கூட... அந்த சேவகர் பரம்பரையில் வந்தவள்தான் என்பதினாலேயே... அவளிடமும் ராஜ பக்தியும் மரியாதையும் நிலை கொண்டிருக்க...

    அந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல அது மோகவின் கடமை என்கிற எண்ணத்துடன் இருக்க முடியாதவளாக... தன்னுடைய தோழியின் நிலையைக் கண்டு வேதனை கொண்டவளாக... அவளது மனநிலையை மாற்ற முயற்சித்து கொண்டிருந்தாள் பவதாரிணி...

    ஆனால் அவளது அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருக்க... தன்னுள் ஊறிப் போயிருக்கும் பரம்பரை பணிவு மாறாதவளாக பவதாரிணிக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தாள் மேகா...

    கேமா நான் சொல்வதை கேட்கப் போகிறயா இல்லையா...

    தனக்குள் எண்ணமிட்டவாறு நின்றுவிட்ட பவதாரிணி... தன்னை சுதாரித்துக் கொண்டவளாக இதுகோபத்துடன் கூற... அவளது வார்த்தைகளை அப்படியே மதிப்பவளாக அசையாமல் நின்று விட்டாள் மேகா...

    நீ என்ன சொன்னாலும் அதை அப்படியே கேப்பேன் என்பது உனக்கு தெரியாதா தேவி...? சொல்லு...

    மேகா தன் மென்மை மாறாதவளாக வினவ... அவளது அன்பு உணர்ந்து... அந்த அன்பில் கரைந்தவளாக... அதற்கு கட்டுப்பட்டவளாக ஓடோடிச் சென்று தோழியை கட்டியணைத்துக் கொண்டாள் பவதாரிணி...

    முதலில்... நீ என்னை இப்படி தேவி என்று கூப்பிடாமல்... என் பெயரை சொல்லி கூப்பிட வேண்டும்... ஓகே... வா...

    அது என்னால் முடியாது தேவி... என் சிறுவயது முதலாக உன்னை இப்படி அழைத்தே பழக்கப்பட்டு விட்டேன்.... இப்போது புதிதாக வேறு பெயரில் அழைத்தால்... நீ என்னிடம் இருந்து அன்னியப்பட்டு விட்டதைப் போல இருக்கும்... அதனால...

    சரி விடு... உனக்கு பிடிக்கிறமாதியே கூப்பிட்டுக் கொள்... ஆனால் இனிமேல் நீ என் ரூமிலோ.... இல்லை வெளியிலோ... எங்கேயும் எப்போதும் எனக்கான எந்த வேலையையும் செய்யக் கூடாது... எனக்காக இதையாவது செய்வாயா மேகா...?

    உனக்காக என் உயிரைக்கூட சந்தோசமாக கொடுத்துவிடுவேன் தேவி... ஆனால் நீ சொல்வதைப் போல என்னால் இருக்க முடியாதே...? உன்னுடைய தேவைகளை கவனிக்காவிட்டால்... பிறகு எனக்கு இங்கே எந்த வேலையும் இருக்காது... என்னுடைய இடத்தில் இருந்து உன்னை பார்த்துக் கொள்ள வேறு ஆள் வந்துவிடுவார்கள் தேவி... அதன் பிறகு நான்...? என்னால் உன்னை பிரித்து ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது தேவி...

    மேகா கண்கலங்க கூற... அதனை கேட்டு நெகிழ்ந்தவளாக... அமைதியாக அவளைவிட்டு விலகி நின்று விட்டாள் பவதாரிணி...

    ஓகே... நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... உனக்கு என்ன தோன்றுகிறதோ... அதன்படி செய்... சரியா...?

    சரி தேவி... நீ போய் உன் பிரேயரை கண்டினியூ பண்ணு... நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம என் வேலையை பாக்கிறேன்... சரியா...?

    பவதாரிணி கூறியதைப் போலவே... ஒரு புறமாக தலைசாய்த்து... விளையாட்டுக் குறும்புடன் கேட்ட மேகாவைக் கண்ட பவதாரிணிக்குள் மென்மை படர... தோழிக்கு சம்மதமாக தலையசைத்தவாறே... அருகில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்ட பவதாரிணியின் பார்வை மேகாவின் மீது நிலைத்துவிட... அவளது பார்வையை கண்டும் காணாதவளாக ஒருவித குறுஞ்சிருப்புடன் அறையை சுத்தம் செய்ய தொடங்கினாள் மேகா...

    நீ ஏன் இப்படி இருக்கிறாய் மேகா...? என்னைவிட எந்த விதத்திலும் நீ குறைந்தவள் இல்லை மேகா...

    உன்னை விட நான் அதிர்ஷ்டசாலிதான் தேவி... நான் அதை மறுக்கவில்லையே...! அதனால்தான் உன்னைப் போன்ற தொரு... தோ... அதாவது... உன்னை மாதிரியான ஒரு தேவிக்கு நான் பிரெண்டாக இருக்க முடிகிறது...

    உன்னுடைய மௌனத்தை கூட புரிந்து கொள்ள முடிகிற என்னால் நீ சொல்ல வந்து நிறுத்திய வார்த்தைக்கான பொருளை புரிந்து கொள்ள முடியாதா மேகா...? உன்னால் என்னை ஒரு தோழியென்று இயல்பாக சொல்லக்கூட முடியவில்லை... அப்படித்தானே...? நான் உன் தோழி இல்லையா மேகா...? என்னிக்குமே என்னை ஒரு எஜமானியாக மட்டுமே பார்ப்பாயா...? நான் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிமையான... இயல்பான அன்பு என்றுமே எனக்கு கிடைக்காதா மேகா...

    தேவி...!!!

    பவதாரிணியின் வார்த்தைகளுக்கு பதிலளிக்க முடியாதவளாக மேகா அமைதியுடன் நின்றுவிட... அவளது அந்த அமைதியான வேதனையுடன் பார்த்தவாறு எழுந்து சென்று... தனக்கான படுக்கையறையினுள் பவதாரிணி சென்று மறைந்துவிட... அவளது வேதனையை தன்னுள் வாங்கிக் கொண்டவளாக சில நொடிகள் அமைதியாக நின்றுவிட்டாள் மேகா...

    மேகாவின் பாட்டியானவள்... பவதாரிணியின் பாட்டிக்கு சேவகியாக... ஒரு பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்திருக்க... தற்போது பவதாரிணியின் தாயாரான விலாசினி தேவிக்கு நம்பிக்கைக்குரிய சேவகியாக பணிபுரிந்து கொண்டிருக்கும் மேகாவின் தாயான சுந்தர வடிவு... தன் மகளான மேகாவை... அவளது சிறிய வயதிலேயே... பவதாரிணியின் தோழியாக... அதாவது... பவதாரிணிக்கான சேவகியாக பணிக்கமர்த்தி... தன்னுடைய மேற்பார்வை யாலேயே மேகாவை பவதரிணியின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக உருவாக்கியிருந்தாள்...

    தன்னை பெற்றெடுத்த அன்னை தந்தையா ராலேயே... ஒரு கைச்சிறந்த ராஜ குடும்ப விசுவாசியாக வளர்க்கப்பட்டிருந்த மேகா... தன் வயதிற்கேற்றாற்போல படித்து முடித்து... திறமைசாலியாக மாறியிருந்தாலும்கூட... அவளது இயல்பிலேயே ஊன்றிப் போயிருந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபட முடியாதவளாக ஒரு நெடிய பெருமூச்சுடன் தன்னுடைய வேலைகளை தொடர தொடங்கினாள் அவள்...

    வெண் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட அந்த அறையின் சுவரானது... கலை நயத்துடன் வேலைப்பாடு செய்யப்பட்ட பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு... ஒரு சிறு தூசியையும் தன் மீது படிய அனுமதிக்காத வளவளப்புடன் பளபளப்பாக மின்னிக் கொண்டிருக்க... அதன் மெருகினை மேலும் அழகூட்டுவதைப்போல... அழுத்தமாக ஒவ்வொரு பாகமாக துடைத்து விட தொங்கியவள்... ஒருவழியாக அதனை சுத்தம் செய்து

    Enjoying the preview?
    Page 1 of 1