Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uzhavan Magal..!
Uzhavan Magal..!
Uzhavan Magal..!
Ebook212 pages2 hours

Uzhavan Magal..!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கொங்குமண்டல வட்டார மொழியில் சொல்லப்பட்டிருக்கும் கதை இது. விவசாயத்தில் புரட்சி செய்த பெண் ஒருத்தியின் கதை. விவசாயத்தை தனி ஒரு பெண்ணாக செய்து சாதித்தார் உழவன்மகள் ஒருத்தியின் கதை. மூன்று காலகட்டமாக கதை சொல்லப்படுகிறது. கொங்கு வட்டார திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்து செல்லும் கதை இது.
Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133806419
Uzhavan Magal..!

Read more from Muthulakshmi Raghavan

Related to Uzhavan Magal..!

Related ebooks

Reviews for Uzhavan Magal..!

Rating: 4.875 out of 5 stars
5/5

8 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uzhavan Magal..! - Muthulakshmi Raghavan

    https://www.pustaka.co.in

    உழவன் மகள்

    Uzhavan Magal

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    நீரும் இவளே...! நெருப்பும் இவளே...!

    நிலமகள் தந்த செல்வமும் இவளே...!

    துள்ளி ஓடியது ஆறு...! பருவக்குமரியின் கும்மாளத்தையும் கொண்டாட்டத்தையும் தன்னகத்தே கொண்டு சுழித்தோடிய ஆறில் கால் பதித்த நாச்சம்மை அதன் ஸ்பரிசத்தில் முகம் சிலிர்த்தாள்...

    செத்தச் சிவந்த மேனி...! மைதா மாவைக் குழைத்துப் பூசியதைப் போன்ற நிறம்... வட்ட வடிவமான முகத்தில் வண்டுக் கண்கள்... தீர்க்கமான நாசியில் ஒளிர்ந்த

    வைர மூக்குத்தி... அடர்த்தியான இமைகள் குடை போன்ற வடிவமைப்புடன் பார்ப்பவர்களின் கண்களை சுண்டியிழுத்தன... அவை படபடக்கும் போது ஆடவர்களின் இதயங்களும் சேர்ந்து படபடத்தன... பவள வாய் இதழ்களென்றால் அவளுக்குத்தான் பொருந்தும்... வெற்றிலை போடாமலே சிவந்த இதழ்களைச் சுழித்து அவள் ஓர் பார்வை பார்த்தால் எந்த ஊர் ராஜாவாக இருந்தாலும் அவள் முன்னால் மண்டியிட்டு தனது மொத்த ராஜ்யத்தையும் அவள் பெயருக்கே சாசனம் எழுதிக் கொடுத்து விடுவான்...

    அப்பேற்பட்டப் பேரழகியான நாச்சம்மை ஆற்று நீரைக் கிழித்துப் பாய்ந்து லாவகமாக நீந்தி அக்கரையைத் தொட்டுத் திரும்பினாள்... அவளுடன் போட்டி போட்ட மற்ற தோழிகள் வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவித் திரும்பிய போது இவள் மஞ்சள் அரைத்துப் பூசிக் குளித்து முடித்திருந்தாள்...

    இவ தண்ணீயில குடியிருக்க வேண்டியோவடி...

    அலுத்துக் கொண்ட தோழிகள் அவசரம் அவசரமாக குளித்து முடித்து நாச்சமையுடன் கரையேறினார்கள்...

    ஏண்டி நாச்சம்மை... உன்ற வீட்டில தானாவதிக் காரர்கூட பேச்சு வார்த்த நடக்குதாமே...? என்றாள் மேகலை....

    அதைப் பத்தி எனக்கென்ன தெரியும்...? என்ற நாச்சம்மையின் முகம் அந்திவானமானது...

    அம்மணி சொல்றதக் கேட்டுகோங்கடி... அம்மணி வீட்டுக்கு தானாவதிக்காரர் வந்தாச்சு... அம்மணிக்கு அதுபத்தி ஒன்னும் தெரியாதாம்... நாம நம்போனுமாம்... கோமளத்தின் இழுவைக்கு...

    அதானே... என்று ராகம் போட்டார்கள் தோழிகள்.

    சும்மா இருங்ககோடி... நாச்சம்மைக்கு வெட்கம் தாங்கவில்லை...

    இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டம் அது... வயதுக்கு வந்த பெண்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிக் காவல் காக்கும் மக்கள் நிறைந்த தேவகிரியில் ஊர் மணியக்காரரின் மகளான நாச்சமைக்கு ஆற்றுக்கு குளிக்க வரவும், கோவிலுக்கு சாமி கும்பிட சென்று வரவும் மட்டுமே அனுமதி கிடைத்திருந்தது...

    பருவம் எய்தியவுடன் பெண்களை மணம் செய்து கொடுத்து விடுவார்கள்... பெண்களின் அதி உன்னதமான குறிக்கோள் தக்க மணமகன் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்... திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஆண்மகன்களுக்கு மட்டும் என்று நேர்ந்து விடப் பட்டிருந்தன.

    நாச்சம்மைக்கு உழவைப் பற்றிய ஆழ்ந்த அறிவு உண்டு... அவளுடைய தந்தையும் ஊர் மணியக்காரருமான தேவாம்சம் பெரும்கொண்ட விவசாயி... கணக்கு வழக்கில்லாத நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர்... பணம் நிறைந்த உழவர்.

    அந்த உழவனின் மகளான நாச்சம்மைக்கு உழவைப் பற்றிய அத்தனை விவரங்களும் அத்துபடி...

    சிறுவயதில் நஞ்சையிலேயே காலம் கழித்தவளை பருவம் எய்தியதும் வீட்டுக் காவலில் வைத்து விட்டார்கள்.

    நாச்சம்மைக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்திருந்தார் தேவாம்சம்... அவருடைய உறவினர் வட்டாரங்களில் அவளுக்கு இணையான சொத்து சுகம் உள்ள மணமகனைத் தேடுவது ஒன்றும் சுலபமான காரியம் இல்லையே...

    பொதுவாக முறைமைக்காரர்களுக்கு இடையில்தான் திருமண சம்பந்தங்கள் நடைபெறும்... அத்தைமகன், மாமன் மகள் என்று பிறந்தவுடன் நிச்சயிக்கப்படும் திருமணங்கள்தான் அதிகம்.

    நாச்சம்மையின் முறைமைக்காரர்கள் திருமண வயதை தாண்டிய நடுத்தர வயதினராக இருந்தார்கள்...

    வேறு வழியில்லாமல் தேவாம்சம் வெளியே மாப்பிள்ளை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

    பணக்காரரோ... ஏழையோ... பெண் வீட்டிற்குப் போய் பெண் பார்க்க அனுமதிப்பதில்லை... இன்ன இடத்தில் பெண் இருக்கிறது என்று தெரிந்தால் கடலை, நெல் என்று தானியம் வாங்கச் செல்லும் வியாபாரிகளுடன் சென்று அவர்கள் வியாபாரம் பேசும்போது இவர்கள் பெண்ணைப் பார்த்து விட்டு வந்து விடுவார்கள்...

    தானாவதிக்காரர் வாரதுக்கு முன்னால நெல் வாங்கோனும்னு ஒருத்தரு குதிரையில வந்திருந்தாராமே... குறும்புடன் கண் சிமிட்டினாள் பொன்னி...

    'அது எப்படி இவளுக்குத் தெரியும்...?'

    திக்கென்ற ஆனது நாச்சம்மைக்கு... அவளது தோழி கேட்டது உண்மைதான்... அவளைப் பெண் பார்க்க வந்திருந்தவன் நெல் வாங்க வந்த வியாபாரியைப் போல குதிரையில்தான் வந்திருந்தான்.

    அவன் வந்தபோது நாச்சம்மை கூடத்தில் நின்று கணக்குப் பிள்ளையிடம் நெல் மூட்டைகளின் இருப்பைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள்... தேவாம்சமும் பூங்கோதையும் பக்கத்து ஊரில் நடந்த சொந்தக்காரர்களின் விசேசத்தில் கலந்து கொள்ள கூட்டு வண்டியில் போயிருந்தார்கள்...

    மொத்தமா இருக்கிற மூட்டையெத்தனைன்னு சொல்லுங்கோன்னா... நீங்க இன்னைக்குத் தூக்குன மூட்டை இத்தனைன்னு கணக்குச் சொன்னா எப்புடிங்கோ...?

    இல்லைங்க அம்மணி... நீங்க தூக்கின மூட்டைகளாத்தான் கேட்டிங்களோன்னு நினைச்சுப் புட்டேனுங்ககோ...

    நீங்களா எதையும் நினைக்காதீங்கோ...

    இடுப்பில் கை வைத்து பேசிக் கொண்டிருந்த நாச்சம்மை குதிரையின் குளம்படி சப்தத்தில் திரும்பிப் பார்த்தாள்...

    அவள் நின்றிருந்த நடுக்கூடம் நிலா முற்றம் போல இருந்தது... அங்கிருந்து கூடம்... அதையடுத்து முன் நடை... அதையும் தாண்டி நீண்ட வராண்டா... அதற்கும் முன்னால் நடுவில் பெரிதாக பாதை விட்டு இரண்டு பக்கமும் கட்டப் பட்டிருந்த அகலமான திண்ணைகள்... வரிசை கட்டியிருந்த அத்தனை நுழை வாயில்களும் ஒரே நேர்கோட்டில் இருந்ததில் வாசலில் வந்து நின்ற குதிரையையும் அதன் மீது ஆரோகணித்திருந்த ஆறடி உயர கம்பீர ஆண்மகனை அவளும், மஞ்சளழகியாக ஜொலித்தவளை அவனும் தொலைவிலிருந்து மிகத் தெளிவாகப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

    நாச்சம்மையை முதலில் தாக்கியது தீட்சண்யம் மிக்க அவனது பார்வைதான்...

    'எப்படிப்பட்ட பார்வை...!'

    இப்போது நினைத்தாலும் அவள் சிலிர்த்துப் போகிறாள்...

    நாச்சம்மையின் பார்வையில் திகைத்த கணக்குப் பிள்ளை...

    யாரும்மணி...? என்று விசாரித்தபடி தானும் திரும்பிப் பார்த்தார்.

    குதிரையையும் அதன்மீது வீற்றிருந்தவனையும் பார்த்தவருக்கு யோசனையாக இருந்தது... நாச்சம்மையை மறந்து விட்டு வாசல் நோக்கி விரைந்தார்.

    நாச்சம்மை ஒவ்வொரு நுழைவாயில்களிலும் மறைந்து, மறைந்து புள்ளி மானைப்போல ஓடி... வாசல் திண்ணையை ஒட்டிய நடை வராண்டாவிலிருந்த ஜன்னலை ஒட்டி நின்று எட்டிப் பார்த்தாள்... அங்கிருந்து குதிரைக்காரனைத் தெளிவாக பார்க்க முடிந்தது.

    அவனது பார்வை அவளைத் தேடித் துழாவியதில் அவளுக்குள் தீப்பிடித்ததைப் போன்ற இன்ப உணர்வு உண்டானது.

    'யார் இவன்...?' அறிய அவள்மனம் குறுகுறுத்தது.

    பார்வையில் துழாவியவன் அவளிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விட்டான்... அது எப்படி அவள் ஜன்னலோர மாகத்தான் இருப்பாள் என்று அவன் கச்சிதமாக அவதானித்தான் என்று இன்று வரைப் புரியவில்லை நாச்சம்மைக்கு...

    மழைச்சாரலில் குளிர் நிரப்பிய பார்வையை அவளுக்குள் விதைத்து நிரப்பிய அந்தத் துணிச்சல்காரனின் தைரியத்தில் ஈர்க்கப் பட்டாள் நாச்சம்மை...

    அதற்குள் வாசலில் இருந்த குதிரையை அணுகி விட்ட கணக்குப்பிள்ளை அண்ணாந்து பார்த்து...

    யாருங்கோ நீங்கோ...? இது தேவகிரி மணியக்காரர் வூடுங்கோ... இங்கே தேவையில்லாம வரக் கூடாதுங்கோ... என்று அதட்ட முடியாத கோராமையோடு பணிவாகச் சொன்னார்...

    அவரும்தான் பாவம் என்ன செய்வார்...? தேவகிரி மணியக்காரரின் கணக்குப்பிள்ளை என்ற ஹோதாவோடு குதிரைக்காரனை அதட்ட வேண்டுமென்றுதான் வாய் திறந்தார்... வாயைத் திறந்தால் வரும் வார்த்தைகள் பணிவோடு வெளிப்பட்டுத் தொலைக்கின்றனவே...

    குதிரையில் அமர்ந்திருந்தவனின் ஆகிருதி அப்படிப் பட்டதாக இருந்தது... செக்கச் செவேலென்ற நிறமும், ஆறடி உயரமும், காந்தம் போன்ற பார்வையுமாக ஓர் அரசனுக்குரிய அத்தனை அங்க அடையாளங்களுடன் அவன் வீற்றிருந்தான்... அவனது பார்வையும், பாவனைகளும் ஓர் அரசனைப் போலவே இருந்தது... அவனை அதட்ட முடியாமல் கணக்குப்பிள்ளையின் நாவு வாயின் மேல்ப்பகுதியில் ஒட்டிக் கொண்டது.

    தேவையோடதான் வந்திருக்கேனுங்கோ...

    அவனது பார்வை ஜன்னலின் மீது படிந்தது... ஊடுறிவிய அந்தப் பார்வையில் நாச்சம்மை ஜன்னல் கதவின் பின்னால் ஒளிந்தாள்... அவளது சிவந்த மேனி நடுங்கியது... அவனது துளைக்கும் பார்வையில் சிக்கி அலைபாய்ந்தது அவள் மனது.

    தேவையோடுதான் வந்திருக்கிறானா...? அவனது தேவை எது...? அவளா...?

    சுவரில் சாய்ந்தவளின் முகம் குங்குமுமமாக மாறியிருந்தது... மூச்சுத் திணறியவள் இழுத்து மூச்சுக்களை விட்டுத் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டாள்...

    தேவையோடதான் வந்திருக்கீங்களா...? புரியலைங் கோ... கணக்குப்பிள்ளை விழித்தார்...

    அவன் குதிரையிலிருந்து குதித்து இறங்கினான்... வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தவன் குதிரை மீது அமர்வதற்குத் தோதாக வேட்டியை தார் பாய்ச்சு அமைப்பில் வரிந்து கட்டியிருந்தான்... துண்டை முண்டாசாக்கித் தலையில் கட்டியிருந்தான்... அந்தத் தோற்றத்தில் அவனைப் பார்க்கும் போது ஏனோ திருவிழாக் காலங்களில் ஆடப்படும் கூத்தில் சொல்லப்படும் ராஜா தேசிங்கைப் போலவே இருந்தது நாச்சம்மைக்கு...

    அவனை ஏற இறங்கப் பார்த்த கணக்குப் பிள்ளைக்கும் அப்படித்தான் தோன்றியதோ என்னவோ... அவனை அதட்டிக் கேட்கவும் முடியாமல்... யாரென்று தெரியாமல் உபசரிக்கவும் முடியாமல் தடுமாறி நின்றார்...

    அவருடைய தடுமாற்றத்தை அவன் கண்டு கொள்ளவே இல்லை... வெகு சுவாதீனமாக தார் பாய்ச்சிக் கட்டியிருந்த வேட்டியை சீராக்கி விட்டுத் தலையில் முண்டாசாகக் கட்டியிருந்த பட்டுத் துண்டை அவிழ்த்துத் தோளில் இருபக்கமும் படியும்படிப் போட்டு நின்றான்.

    பட்டு வேட்டி சட்டையும், ஜரிகை அங்கஸ்வதிரமுமாக மாப்பிள்ளைத் தோரணையில் நின்றவனைப் பார்த்த கணக்குப்பிள்ளைக்குக் கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை...

    "ஐயா யாருன்னு உங்க வாயாலே சொல்லிப்புட்டாத் தேவலைங்கோ... வூட்டுல மணியக்கார ஐயாவும், அம்மாவும் இல்லைங்கோ... சொந்தக்காரங்க விசேசத்துக்குப்

    பக்கத்து ஊருக்கு வண்டியைக் கட்டிக்கிட்டுப் போயிருக்காங்கோ..."

    இருக்கட்டும்...

    அதில் தனக்கு யாதொரு ஆட்சேபணையும் இல்லையென்பதைப் போல மிதப்பாக சொல்லி விட்டு திண்ணையில் கால்மேல் கால் போட்டு அரச தோரணையுடன் அமர்ந்து கொண்டான் அவன்.

    கணக்குப் பிள்ளை செய்வதறியாது கைகளைப் பிசைந்தார்... அவரது திக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1