Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

January Maatham Kanavugal Pookkum
January Maatham Kanavugal Pookkum
January Maatham Kanavugal Pookkum
Ebook187 pages2 hours

January Maatham Kanavugal Pookkum

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கனவுகள் பூக்கும் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் சூர்யா, மிருணாளினியை கண்டான். கண்டவுடன் அவன் மனதில் காதல் பூத்துவிட்டது. அவளைத் தொடர்ந்து காதல் செய்து சொந்தமாக்கிக் கொண்டான். வருடந்தோறும் பிறக்கும் புத்தாண்டின் முதல் மழைத்துளியில் நம் வாழ்விலும் கனவுகள் பூக்கலாம்... காத்திருப்போம்...

Languageதமிழ்
Release dateAug 5, 2023
ISBN6580133810082
January Maatham Kanavugal Pookkum

Read more from Muthulakshmi Raghavan

Related to January Maatham Kanavugal Pookkum

Related ebooks

Reviews for January Maatham Kanavugal Pookkum

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    January Maatham Kanavugal Pookkum - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜனவரி மாதம் கனவுகள் பூக்கும்

    January Maatham Kanavugal Pookkum

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    புதுவருடத்தின் குதூகலம் எங்கும் நிறைந்திருந்தது...

    விஷ் யு ஹேப்பி நியு இயர்...

    வானை முட்டிய கூச்சல்... மெரினா கடற்கரையில் கடுகு போட இடமில்லாத கூட்டம்... ஆங்காங்கே மேடை போட்டு மக்களுக்கு அறிமுகமான சின்னச் சின்ன பிரபலங்களுடன் புத்தாண்டின் சிறப்பு நிகழ்ச்சிகள்...

    வா மிருணா... கொஞ்சம் மக்கள் நடுவே சுற்றி விட்டு வரலாம்...

    சுற்றுவதிலேயே இரு விக்ரம்... நாம் ஏரோடிராமுக்குப் போயாகனும்... அது உன் நினைவில இருக்கா... இல்லையா...?

    ஹேய்... புதுவருசம் பிறந்திருக்கு... இந்த செகண்ட்ஸை நாம் கொண்டாட வேண்டாமா...? ஜஸ்ட் ஃபீயூ மினிட்ஸ்... அதனால என்ன ஆகப் போகுது...? பிளைட் வர இன்னும் டூ ஹவர்ஸ் இருக்கு...

    விக்ரம் சொல்வதும் சரியென்று பட்டது... மிருணாளினிக்கும் பார்ட்டி, குதூகலமான மனநிலையில் பங்கெடுத்துக் கொள்ள ஆசைதான்... பார்ட்டி பஃப் என்று போய் பழக்கமில்லாதவள்... வீட்டுக்குள்ளேயே அத்தனை குதூகலத்தையும் கொண்டுவரத் தெரிந்தவள்...

    ‘இந்நேரம் வீட்டில் இருந்திருந்தா... தோட்டத்தில் மத்தாப்பூ கொளுத்திக் கொண்டாடியிருக்கலாம்... மாலினி விடற வெடியில ஏரியாவே தூள் பறக்கும்... போர்டிகோவில அகல் விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.’

    இப்படித்தான் அவள் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டையும் எதிர் கொள்வாள்... தமிழ்ப் புத்தாண்டில் கோவில்...! தெய்வ தரிசனம்...!

    விக்ரமும் அவளும் காரை விட்டு இறங்கி... கடற்கரையில் கூடியிருந்த கூட்டத்துக்குள் நடந்தார்கள்... ஜனவரியின் நுண்குளிர் மிருணாளியின் மென் உடலைத் துளைத்தது... லேசாக நடுக்கம் கொடுத்த அந்தக் குளிர்கூட நன்றாகத்தான் இருந்தது... முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் என்னவோ காலம் காலமாகப் பழகியவர்களைப் போல...

    ஹேப்பி நியு இயர்... என்று குதித்தார்கள்...

    விக்ரம்... அப்பாம்மாவுக்கு மட்டும் நான் ஏர் போர்ட்டுக்கு போகிற வழியில பீச்சில குதிச்சிருக்கேன்னு தெரிந்ததுன்னு வைய்யி... என்னை உண்டு இல்லைன்னு ஆக்கி விடுவாங்க...

    நீ மட்டும் தனியாகவா வந்திருக்கிற...? கூட நானும் இருக்கேனில்ல...?

    உனக்கென்னடா... நீ ஆண்பிள்ளை... தாத்தா பாட்டியைக் கூப்பிடுவதற்காக என்னுடன் வந்து சிக்கியிருக்கிற... இல்லைன்னா நீ வீட்டில அடங்கியிருக்கிற ஆளா...?

    தெரியுதில்ல... எப்பேற்பட்ட ஹெல்ப்பைப் பண்ணிக்கிட்டு இருக்கிறேன்...? நியு இயர் பிறக்கிறப்ப... பார்ட்டியில டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்காம தாத்தா பாட்டியைக் கூப்பிடப் போய்கிட்டு இருக்கறதே பெரிய விசயம்... இதுக்கே எனக்கு நீ பூ மழை தூவி பாராட்டனும் பேபி...

    பேபின்னு சொன்ன...

    மிருணாளினி ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தாள்... அதை விக்ரம் பார்த்தானோ இல்லையோ... விக்ரமின் பின்னால் நின்று கொண்டிருந்த நெடியோன் ஒருவன் தெள்ளத் தெளிவாகப் பார்த்தான்...

    கண்களில் மின்னலுடன் அவன் புருவங்களை உயர்த்த அவசரமாக விரலை மடக்கிய மிருணாளினி அவனுக்குப் புறமுதுகு காட்டித் திரும்பி நின்று கொண்டாள்... படபடப்பாக இருந்தது. அந்த நிலையிலும் அவனிடமிருந்த தனித்ததொரு வசீகரத்தை ரசித்தது அவள் மனம்...

    ‘என்னமா லுக் விடறான்... கண்ணில பல்பை எரிய விடறான்... உதட்டைச் சுழித்து விசமமா சைட் அடிக்கிறதைப் போல பார்த்து வைக்கிறான்... கெத்து வேற...’

    ஒருநொடிப் பொழுதில் முன்பின் பார்த்திராத ஓர் ஆணைப் பற்றிய இத்தனை விவரங்களையும் சேகரிப்பதுதான் கன்னிப் பருவம்... பாராதது போல் பார்த்து... சிரிக்காததைப் போல் சிரித்து... பேசாததைப் போலப் பேசி... பித்தாக்கி விடுவதுதான் பெண் மனம்... அவனை அவளுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கடைசிவரை கணிக்கவே முடியாது... ஓரவிழிப் பார்வைகளையும்... உதட்டோரச் சிரிப்புகளையும் நம்பி அருகில் போனால்...

    என்ன வேணும் அண்ணா...? என்று மிழற்றி மயக்கம் போட வைப்பார்கள்...

    மிருணாளினி மனம் படபடக்க குறுகுறுப்புடன் அவனை ஒர்முறை திரும்பிப் பார்க்கலாமா என்று யோசித்தாள்... இன்னமும் அவன் அந்த இடத்திலேயே நின்றிருப்பானா...?

    ‘நின்றிருக்க வேண்டுமே...’ நிமிர்ந்தவளின் முன்னால் ரோமங்கள் அடர்ந்த வலிமையான ஓர் கரம் நீண்டது...

    ஹேப்பி நியு இயர்...

    ஹேப்பி நியு இயர்... அனிச்சையாகச் சொல்லியபடி கை கொடுக்காமல் பார்த்தவள் பேஸ்தடித்தாள்...

    ‘இவன் எப்போ இங்கே வந்தான்...?’

    அவளது ஒற்றை விரல் எச்சரிக்கையை ரசித்துப் பார்த்த நெடியோன் அவள் முன்னால் கை நீட்டியபடி நின்றிருந்தான்... மிருணாளி அறிமுகமற்றவர்களுக்குக் கை கொடுக்க மாட்டாள்... அவனை வெகு அருகில் கண்ட பிரமிப்பில் தன்னை மறந்து கை நீட்டி விட்டாள்... மிருதுவான அவளது கையை இறுக்கிப் பிடித்து அவன் குலுக்கிய போது உணர்ந்த ஸ்பரிசம்... ஜனவரி மாதக் குளிருக்கு இதமான வெம்மையூட்டியதைப் போல கணகணப்பாக இருந்ததில் பதறிப்போய் கையை உறுவிக் கொண்டாள்...

    ஐ ஆம் சூர்யா... மே ஜ நோ யுவர் நேம்...?

    அறிமுகமில்லாதவனிடம் பெயர் சொல்வதா...? அரண்டு போனாள் மிருணாளினி... அவசரமாக நகரப் போனாள்...

    பெயர் கேட்டேனே... சொல்ல மாட்டிங்களா...?

    அந்த சூர்யா எனச் சொல்லிக் கொண்ட நெடியோனும் அவளுடன் நடந்ததில் மார்கழிக் குளிரிலும் மிருணாளிக்கு வியர்த்துத் தொலைத்தது...

    ‘இந்த விக்ரம் தடியன் எங்கே போனான்...?’

    அவள் அச்சத்துடன் விக்ரமைத் தேடினாள்... கூட்டத்தில் அவளது கண்கள் துழாவுவதைக் கண்ட நெடியோன் சூர்யா...

    யாரைத் தேடறிங்க...? உங்களுடன் நின்றிருந்தவரையா...? என்று கேட்டான்...

    ‘உன்னிடம் நான் பேச விரும்பலை...’ வெட்டும் பார்வையொன்றை வீசி விட்டுத் தன் தேடுதலைத் தொடர்ந்தாள் மிருணாளினி...

    என்னுடன் பேச மாட்டிங்களா...? நானென்ன உங்க எனிமியா...? அவன் விடாக் கண்டனாகப் பேச்சுக் கொடுத்தான்...

    ‘இது என்ன ரோதனையாக இருக்கு...’ அவள் பல்லைக் கடித்தபடி அவனை முறைத்தாள்...

    ஹேப்பி நியு இயர் சொன்னவன் உங்க எனிமியாக இருக்க முடியாது மிஸ்... அவன் இழுத்தான்...

    ‘மிஸ்...!’ என்று அவன் இழுத்தது அவளது பெயரை அறிவதற்காக... அதை அறியாதவளா மிருணாளினி...?

    ‘நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு... எப்படியெப்படி வேண்டும்னாலும் டிரை பண்ணிக்க... நான் என் பெயரைச் சொல்ல மாட்டேன்...’ பிடிவாதமாக மௌனம் காத்தாள் மிருணாளினி...

    அவளது பிடிவாதத்தை புரிந்து கொண்ட இளநகை அவன் இதழ்களில்...

    ‘நல்லாத்தான் இருக்கான்...’ கன்னி மனம் அவன் அழகை ரசித்தது...

    மிஸ்தானா...? அவன் வேண்டுமென்றே வம்பிழுத்தான்...

    இல்லை... மிஸஸ்... அவள் உடனடியாக பதில் கொடுத்தாள்.

    மிஸஸ்...? யாருடைய மிஸஸ்...?

    என் ஹஸ்பெண்டின் மிஸஸ்...

    அவளது புத்திசாலித்தனமான பதிலை மெச்சும் புன்னகையை அவன் சிந்த... அவள் விக்ரமைத் தேடக் கிளம்பினாள்...

    ஹலோ... உங்க ஹஸ்பெண்டின் மிஸஸ்... நீங்க தேடும் ஆள் அங்கே இருக்கிறார்...

    நெடியோன் சுட்டிக் காட்டிய திசையில் விக்ரம் யாரோ ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் ஆடிக் கொண்டிருந்தான்... மிருணாளினி...

    விக்ரம்... என்று கோபமாகக் குரல் கொடுத்ததில்... நடனத்தை அம்போ எனக் கைவிட்டு விட்டு மிருணாளினியிடம் வந்து சேர்ந்தான்...

    அவன் கைவிட்ட வெள்ளைக்காரப் பெண்ணையும் நடனத்தையும் வேறு ஒருவன் கைப்பற்றித் தொடர ஆரம்பித்ததில் விக்ரம் மிருணாளினியிடம்...

    வட போச்சே... என்றான் சோகமாக...

    உன்னைக் கடலில் தள்ளனும்... கள்ளா...! என்னை இங்கே தனியா நிக்க விட்டுட்டு வெள்ளைக்காரிகூட டான்ஸ் ஆடப் போயிட்டியே... உன்னை நம்பி உன் பின்னால் வந்தேன் பார்... என்னைச் சொல்லனும்... துரோகி... மிருணாளினி அவனைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தாள்...

    நெடியோனின் முகம் இறுகியது... அவன் விக்ரமை விரோதமாகப் பார்த்தான்... அவனிடம் மிருணாளினி காட்டிய நெருக்கத்தை நெடியோன் விரும்பவில்லை... ஒரு கட்டத்தில்...

    நீ இங்கேயே பீச்சில் கும்மாளம் போட்டுக்கிட்டு இரு... நான் போறேன்... என்று மிருணாளினி நடக்க ஆரம்பித்து விட்டாள்...

    ஹேய்...! மிருணா...! மை டியர் மிருணாளினி... ஸ்வீட் ஹார்ட்... கோபம் வேண்டாம் கண்மணியே...

    விக்ரம் மிருணாளினியின் கையைப் பிடித்து நிறுத்தினான்... மிருணாளினி கையை உதறவில்லை என்பதை நெடியோன் கவனித்தான்...

    ‘இந்த விக்ரம் தடியன் இவன் முன்னாலே பெயரைச் சொல்லிட்டானே... அறிவு கெட்டவன்...’

    வந்த கோபத்தில் மிருணாளினி விக்ரமின் முதுகில் மொத்து மொத்து என மொத்தினாள்... அவளது பஞ்சு போன்ற கரங்களில் விழும் அடி எப்படி வலிக்கும்...? விக்ரம் அதை சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டதில் நெடியோனின் விழிகளில் பொறாமை வந்தது...

    யார் இவர்...? மிருணாளினியிடம் விசாரித்தான்...

    யார் இவர்...? விக்ரம் நெடியோனைப் பார்த்தபடி மிருணாளினியிடம் கேட்டான்...

    யாருக்குத் தெரியும்...? விக்ரமுக்குப் பதில் கொடுத்து விட்டு...

    இவர்தான் என் ஹஸ்பெண்ட்... என்று நெடியோனுக்குப் பதில் கொடுத்தாள் மிருணாளினி...

    ஹஸ்பெண்ட்...? விக்ரம் மிருணாளினியைப் பார்த்த பார்வையில்... ‘ஹேய்... என்ன இது...?’ என்ற கேள்வி இருந்தது...

    அதை நெடியோன் உணர்ந்து கொண்டு விடக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வுடன் அவன் கையைக் கிள்ளி...

    ஸ்... ஆ... என்று அலறவைத்து விட்டு வேகமாக நடந்து விட்டாள் மிருணாளினி...

    ராட்சசி... நெடியோனிடம் சொல்லிவிட்டு...

    மிருணா... ஸ்டாப்... நானும் வர்றேன்... என்று குரல் கொடுத்தபடி அவள் பின்னால் ஓடினான் விக்ரம்...

    கைகளை முன்னால் கட்டி... கால்களை விரித்து நின்று அவர்களைப் பார்த்த சூர்யாவின் முகத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1