Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unmeethu Nyabagam...
Unmeethu Nyabagam...
Unmeethu Nyabagam...
Ebook330 pages3 hours

Unmeethu Nyabagam...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாபகங்களுக்கான சக்தி அதிகமானது... யாழினி கதிரவனின் ஞாபகமாகவே இருந்தாள்... அவனும் யாழினியின் ஞாபகமாகவே இருந்தான்... அந்த ஞாபகங்களே அவர்களை சேர்த்து வைத்ததா? இல்லை பிரித்து வைத்ததா? தெரிந்து கொள்ள வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateSep 23, 2023
ISBN6580133810119
Unmeethu Nyabagam...

Read more from Muthulakshmi Raghavan

Related to Unmeethu Nyabagam...

Related ebooks

Reviews for Unmeethu Nyabagam...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unmeethu Nyabagam... - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உன்மீது ஞாபகம்...

    Unmeethu Nyabagam...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    சென்னை விமான நிலையத்தின் முன்னால் கார் நின்றது... இறங்கிய யாழினி அந்த வாடகைக் காருக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு தோளில் ஹேண்ட் பேகை மாட்டிக் கொண்டாள்... விமான நிலையத்தைப் பார்த்தாள்... அதற்கு முன்னால் அவள் விமானப் பயணங்களை மேற்கொண்டதில்லை... அன்று சூழ்நிலையின் நிமித்தம் தனித்த விமானப் பயணத்தை மேற்கொள்கிறாள்...

    ‘நல்லவேளை... நாடுவிட்டு நாடு போகலை...’

    சொற்பநிம்மதி மனதுக்குள் விரவியது...

    இதோ இருக்கிற கோவாம்மா...

    அஞ்சனாவிடம் அப்படித்தான் சொன்னாள்... மனதுக்குள் மகத்தான தைரியம் மலையளவுக்கு இருப்பதைப் போல பாவனை காட்டினாள்... அவளின் கண் சமிஞ்ஞையில் அவளுடைய தம்பி யதுநந்தனும் பின் பாட்டுப் பாடினான்...

    ஆமாமாம்... கோவா இந்தாதானே இருக்க... கூப்புடுற தூரத்தில இருக்கிற ஊருக்குப் போயிட்டு வரப் போகுது... இதுக்குப் போய் எதுக்கும்மா அக்காவுக்கு பயம் காட்டறிங்க...?

    என்னவோ வாசலில் வந்து நின்றிருக்கும் ‘கோவா’ வை... ‘வா... வா...’ வென்று கூப்பிடும் பாவனையில் அவன் கையசைத்த போது மறந்தும்... தொலைந்தும் போயிருந்த சிரிப்பு யாழினிக்கு வரத்தான் செய்தது...

    அத்தி பூத்ததைப் போல இப்படிப்பட்ட சிரிக்கும் தருணங்களை அவளுக்கு வழங்கிக் கொண்டிருப்பது யது நந்தன்தான்...

    அவன் பிருந்தாவனத்தின் நந்தகுமாரன்... சிரிக்காத சிடுமூஞ்சியைக் கூடச் சிரிக்க வைப்பதில் வல்லவன்... ஓர்முறை யாருக்கோ போன் பண்ணி பேசினான்... யதார்த்தமாக யாழினியும் கவனித்து வைத்தாள்...

    ஹலோ... பாபு இருக்காருங்களா...? நீங்கதான் பாபுவா...? நானா...? பேங்க் ஆபிசர் பேசறேனுங்க... என்னது...? உங்ககிட்ட நான் ஏன் பேசறேனா...? உங்ககிட்ட மட்டுமா பேசறேன்... ஊருக்கே போன் போட்டு அவங்களைக் கடனாயாக்கிடனும்கிற மகத்தான நல்ல எண்ணத்தோட கிரெடிட் கார்டை அவங்க தலையில கட்டிக்கிட்டு இருக்கேன்... என்னது... கிரெடிட் கார்டு உங்களுக்கு வேணாமா...? அது எங்களுக்கும் தெரியுங்க... கார்டுன்னா உங்களுக்கு அலர்ஜிங்கிறதால டைரக்டா லோனே சேங்சன் பண்ணியிருக்கோம்... பணம்தான்... காசு... பணம்... துட்டு... மணி மணிதான்... கட்டுக்கட்டா அடுக்கி வைச்சிருக்கோம்தான்... எப்ப மஞ்சப்பையை எடுத்துக்கிட்டு வந்து அள்ளிக்கிட்டு போகப் போறிங்க...? என்னது...? அதில ஜாதக நோட்டு இருக்கா...? எப்ப பார்த்தாலும் அதைக் கக்கத்திலே இடுக்கிக்கிட்டே அலைவீங்களே... ஜாதக நோட்டை வைச்சுக்கிட்டா அந்தச் சுத்து சுத்தினீங்க...? என்னது...? முக்குக்கு முக்கு ஜோஸியம் பார்ப்பீங்களா... அட... அந்த ஜோஸியத்தோட பலன்தாங்க இது...

    மூச்சுவிடாமல் பேசிவிட்டு போனில் சிம் கார்டை மாற்றி விட்டான்...

    யாருடா அது...? என்ற கேள்விக்கு...

    என் பிரண்டோட அப்பாதான்க்கா... என்று குளுமையாக பதிலை சொன்னான்...

    அடப்பாவி... பிரண்டோட அப்பாவையா இந்த ஓட்டு... ஓட்டியிருக்க...

    கேர்ள் பிரண்டோட அப்பாக்கா...

    டேய்ய்ய்...

    நீயும் அந்த ஆளைப் போல சவுண்டு விட்டா எப்படி...? கூடப் படிக்கிற பொண்ணுகிட்ட பாடத்தைப் பத்திப் பேசினாக்கூடத் தப்பா...? அந்தாளு ஓவரா சவுண்டு விட்டாரு... அதான்... ஒரு கலாய்ப்பு கலாய்க்கலாமேன்னு கலாய்ச்சு வைச்சிருக்கேன்... ஏதோ... என்னால முடிஞ்சது...

    இதனால என்ன ஆகப் போகுது...?

    ஒரு ஆணியையும் பிடுங்க முடியாதுன்னு எனக்கும் தெரியும்... அட்லீஸ்ட்... கர்ணனுக்கு கவசக்குண்டலம் போல அந்தாளுக்கு இருக்கிற மஞ்சப்பையைத் தொடறப்ப எல்லாம் இந்த போன் காலோட நினப்பு அந்த ஆளுக்கு வருமா... இல்லியா...? எனக்கு அது போதும்... மவனே... போனைப் பிடுங்கியா சவுண்டு விடற... வயதுப் பொண்ணுகிட்ட போனில பேச அது ஒரு சாக்குன்னா சொன்னா... இந்த யது நந்தன் வயதுப் பொண்ணு கிட்ட மட்டும் பேச மாட்டான்ய்யா... அவளோட அப்பாகிட்டயும் பேசுவான்...

    அவர் உன்னைத் திட்டினாரா...?

    ஆமாங்கிறேன்... அந்தப் பொண்ணுகிட்ட போனில பேசினா... ஊட இந்த ஆளோட குரல் வருது... என்னடா... இந்தப் பொண்ணோட குரலு ஆம்பளைக் குரலா மாறிப் போயிருச்சான்னு ஒரு செகண்ட் ஆடிப் போயிட்டேன் தெரியுமா...? குரலா அது...? அப்படியே தகர டப்பாவில தாரைக் காய்ச்சி ஊத்தி வைச்சதைப் போல இருக்கு உவ்வே...

    விளக்கெண்ணை குடித்ததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு அன்றும் யாழினியை சிரிக்க வைத்தான் அவளுடைய அன்புச் சகோதரன்...

    பெண்ணைப் பெத்த அப்பாவுக்கு பயம் இருக்காதாடா...?

    உன்னைப் பெத்த நம்ம அப்பாவுக்கு அந்த பயம் இருந்ததா...?

    ஊசிமுனை போல துளைத்த அந்தக் கேள்வியில் அருகில் அஞ்சனா இருக்கிறாளா என்று திரும்பிப் பார்த்தாள் யாழினி...

    நல்ல வேளையாக அவள் அந்த இடத்தில் இல்லை...

    மெல்லப் பேசு யது... தம்பியை கடிந்து கொண்டாள்.

    அம்மா காதில விழுந்து வைக்கப் போகுது... இப்பத் தான் அந்த நினைப்புல இருந்து வெளியே வந்துக்கிட்டு இருக்காங்க... இப்பப் போயி இதையெல்லாம் பேசனுமா...?

    பொதுவாக அவன் அவர்களின் தந்தையை ஏக வசனத்தில் அவன்... இவனென்றுதான் பேசிவைப்பான்... ஒருநாள் அந்த வார்த்தை அஞ்சனாவின் காதுகளில் விழுந்ததில் அவள் ஒர்நாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் உபவாசத்தில் இருந்தாள்...

    அந்த மனுசன் தப்பான ஆளா இருக்கலாம்டா... ஆனா நான் உங்களை நல்ல முறையிலதானே வளர்த்திருக்கேன்...?

    அம்மா...

    எப்படிடா நீ அப்படிப் பேசலாம்... அஞ்சனா பிள்ளைகளை வளர்த்து வைச்சிருக்கிற லட்சணம் இதுதானான்னு ஊர் பேசறதுக்கா...?

    அதற்குப் பின்னால் மறந்தும் யதுநந்தன் அவர்களைப் பெற்ற ஓடுகாலி தந்தையான பட்டாபியை ஏக வசனத்தில் பேசுவதில்லை... விதியே என்று மரியாதையுடன் தான் பேசியிருக்கிறான்...

    விடுடா... அதைப்பத்தி பேசி ஆகப் போகிறது என்ன...?

    எதுவுமில்லைதான்... ஆனாக்கா... அப்பான்னு ஒருத்தர் நம்மகூட இருந்திருந்தா உன்னைப் பார்த்து அந்தக் கேள்வி வந்திருக்குமா...?

    யதுநந்தனின் கோபத்தில் கண்களை மூடிக் கொண்டாள் யாழினி... தணல் வீசும் அந்தத் தருணம் அவள் மனதில் சுழன்றது...

    என்னன்னு நான் இந்த சொசைட்டிக்குச் சொல்ல...? என் மகன் மேரேஜ் பண்ணிக்கப் போகிற பொண்ணைப் பெற்ற அப்பா... பக்கத்து வீட்டுப் பெண்ணோட வீட்டை விட்டு ஓடிப் போயிட்டவர்ன்னு சொல்லவா...?

    சாதனாவின் இகழ்ச்சி விரவிய எகத்தாளமான குரல் அவள் காதுகளில் ஒலித்தது... எங்கே போனாலும் துரத்தி வரும் அந்தக் குரலை செவிமடுக்க முடியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டு துடித்துப் போனாள் யாழினி...

    இது... இது... இதைத்தானே அந்த ஆளு செஞ்சு வைச்சிருக்காரு...? அக்கா அந்தாளு பாழாக்கினது அம்மாவோட வாழ்க்கையை மட்டும் இல்லைக்கா... அவர் பெத்த பொண்ணு வாழ்க்கையையும் கேள்விக் குறியாக் கிட்டில்ல போயிருக்காரு...

    சிரிக்கும் யதுநந்தனின் முகத்திற்குப் பின்னால் சீறும் சிங்கமான யதுநந்தன் ஒளிந்திருந்தான்... அவனை நோக்கி வரும் வார்த்தை அம்புகளை தவிடு பொடியாக்கி வெற்றி நடை போடும் தீரம் அவனிடம் இருந்தது... ஆனால்... வளர்ந்திருந்த பிள்ளைகளையும்... கனிவான மனைவியையும் விட்டுவிட்டு... செவ்வாய் தோச ஜாதகத்தால் திருமணம் தள்ளிப் போய் கொண்டிருந்த பக்கத்து வீட்டு முதிர் கன்னியை இழுத்துக் கொண்டு ஓடிப் போன அந்த மனச்சாட்சி இல்லாத தந்தையினால் யாழினி படும் பாட்டைப் பார்க்கும் சக்தி மட்டும அவனிடம் இல்லை...

    விடுடா... அந்தம்மாவுக்கு என்னை ஏதாவது சொல்லனும்... இது இல்லைன்னா வேற ஒன்னைக் கண்டு பிடிச்சிருப்பாங்க...

    வேற ஒன்னைச் சொல்லியிருந்தா உன் மனசு சுக்கு நூறாய் உடைஞ்சிருக்காதே அக்கா... இந்தக் கேள்வியை பேஸ் பண்ண முடியாமத்தான நீ கோழையைப் போல வேலையை விட்டுட்டு ஓடி வந்த...?

    என்மேலயும் தப்பிருக்குடா யது... நான் உச்சாணிக் கொம்பு மேல ஆசை வைக்கலாமா...? யாழினியின் கண்களில் நீர் திரண்டது...

    மாத்திச் சொல்றியேக்கா... அந்த உச்சாணிக் கொம்புதான் உன்மேல ஆசை வைச்சது... உனக்காக இறங்கி வந்தது... வெண்ணை திரண்டு வந்தபோது பானையை உடைக்க இந்தம்மா இந்த விசயத்தை கையில எடுத்துக் கிட்டாங்க. இப்படியொரு விசயத்தை அவங்க கையில கொடுத்தது யாரு...? லட்டு போல இப்படிப்பட்ட மேட்டர் கிடைச்சா... கோடிஸ்வரனைப் பெத்த அம்மா சும்மாயிருப் பாங்களா...? அதான்... அந்தம்மா நினைத்ததை சாதிச்சுட்டாங்க...

    ஆசைக்கும் ஒரு அளவிருக்கனும்டா... உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தா ஆகாதுதானே...?

    சிட்டுக்குருவியை தேடி வந்து சிறகை ஒடிச்சுப் போட்டது யாரு...? அந்தப் பருந்துதானே...? நீ கேட்டியா... ஏ பருந்தே... பருந்தே... உனக்கு இணையா... நான் வானத்தில பறக்கனும்னு நீ ஆசைப்பட்டியா...? அப்புறம் எப்படிக்கா இப்படி நடந்தது...?

    யது நந்தனின் நியாயமான கேள்வியில் வாயிருந்தும் பதில் சொல்ல முடியாமல் ஊமையாகிப் போனாள் யாழினி.

    அவன் சொல்வதும் உண்மைதானே... அவளா கதிரவனைத் தேடிப் போனாள்...? அவன்தான் அவளைத் தேடிவந்தான்... காதலைச் சொன்னான்...

    ஆனால்... அவளால் ஏன் அந்தக் காதலை மறுக்க முடியாமல் போனது...

    வரலாமா...? அவளுக்கு காதல் வரலாமா.? பத்து வயதில் அவளும்... ஏழுவயதில் யதுநந்தனும் இருக்கும் போது... பக்கத்து வீட்டில் முப்பத்திரண்டு வயதாகியும் திருமணம் ஆகாமல் செவ்வாய் தோச ஜாதகத்தில் வீட்டில் தேங்கி நின்று விட்ட மல்லிகாவை இழுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிப் போன பட்டாபிக்கு மகளாகப் பிறந்து விட்ட அவளுக்கு காதல் வரலாமா...?

    இடிந்து போன அந்த நிலையிலும் அஞ்சனா நிமிர்ந்து நின்றாளே... அவளைப் பெற்றவர்களும்... கூடப் பிறந்தவர்களும் கிராமத்தில் இருந்து படையாய் திரண்டு வந்து பக்கத்து வீட்டில் சண்டை போடப் போன போது தடுத்து நிறுத்தினாளே...

    ஓடினது அவங்க வீட்டுப் பெண்ணா இருக்கலாம்ண்ணா... ஆனா... இழுத்துக்கிட்டுப் போனது இந்த வீட்டு மனுசனாச்சே...

    அவங்களுக்குத் தெரியாம இது நடக்கலை அஞ்சனா... திட்டம் போட்டு காரியத்தை முடிச்சிருக்காங்க... உன் புருசன் நார்த் இண்டியா பக்கம் புரமோசனோட வந்த டிரான்ஸ்பரை கேட்டு வாங்கியிருக்காரு... அந்த ஊரில வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்து வைச்சது... பக்கத்து வீட்டுக் காரன்தான்... பொண்ணு ஓடிப் போகிறதுக்கு முன்னாலேயே அவ குடும்பம் நடத்த வீடு பாத்து வைச்ச அப்பன் உலகத்திலேயே இவனாத்தான் இருப்பான் த்தூ...

    இங்கேயிருந்து கிரீன் சிக்னல் போகாமலா இதையெல்லாம் அவங்க செஞ்சாங்க...? தப்பு இங்கேயிருந்து ஆரம்பிச்சிருக்குண்ணா...

    விவரம் தெரியாம பேசறியே தங்கச்சி... தூண்டிலைப் போட்டா மீன் சிக்கத்தானே செய்யும்...? இந்த வயசுக்கு மேலே எந்த மாப்பிள்ளை அவளுக்கு கிடைப்பான்...? அதான்... ஆபிசர் உத்தியோகம் பார்க்கிறவனாப் பார்த்து பொண்ணப் பழக விட்டு... அவன் குடும்பத்தைக் கெடுத்து... ஊரை விட்டு ஓட வைச்சிருக்கான் இந்த பக்கத்து வீட்டுக்காரன்... இவன சும்மா விடக் கூடாதும்மா...

    தூண்டில் போட்டா இந்த மனுசன் ஏன்னா சிக்கினாரு...? சபலப் புத்தி படைச்ச ஆம்பளைக்கு பெண்டாட்டியா ஆகிற கொடுமையான விதியிருந்தா இதையெல்லாம் சகிச்சுத்தான் ஆகணும்... இதில அவங்க கூட சண்டைக்குப் போய் ஆகப் போகிறது என்ன...? விடுங்க...

    அவள் விட்டுவிடச் சொன்னாலும் அவளுடைய பிறந்தவீடு அவ்வளவு எளிதாக அந்தத் துரோகிகளை விடுவதாக இல்லை... ஓடிப் போன பெண்ணைப் பெற்ற பக்கத்து வீட்டுக்காரன்... வெட்கம்... மானம்... ரோசமில்லாமல் சமரசம் பேசிக் கொண்டு வந்தான்...

    இப்ப என்ன ஆகிப் போச்சு...? அங்கேயொரு குடும்பம்... இங்கேயொரு குடும்பம்ன்னு இருந்துட்டுப் போகட்டுமே... அவங்க எங்க வீட்டுக்கு வந்து போகிறப்ப என் மருமகன் தாராளமா இவங்க குடும்பத்துக்கும் வந்துட்டுப் போகலாம்... நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்... அவரோட சம்பளத்தில இந்தப் பிள்ளைக படிப்புக்கு கொடுத்து உதவட்டும்... என்மக தங்கமானவ... குணவதி... கருணை மனசுக்காரி... படிக்கிற பிள்ளைகளுக்கு செய்கிற உதவியில புண்ணியம் கிடைக்கும்ன்னு தெரிஞ்சு வைச்சிருக்கிறவ... மறுப்புச் சொல்ல மாட்டா... அப்புறம்... இவங்க சாப்பாட்டுக்கும்... இருக்கிற இடத்துக்கும் பிரச்னையில்ல... இந்தப் பொண்ணும் வேலை பார்க்குது... இந்த வீட்டில பாதியளவுக்கு என் மருமகன் பணம் போட்டிருந்தாலும் இந்தப் பொண்ணு பெயரிலதான் இந்த வீட்டை வாங்கிப் போட்டிருக்காரு... நான்கூடச் சொன்னேன்... வீட்டை உங்க பேருக்கு மாத்தி எழுதி வாங்கிருங்க மாப்பிள்ளைன்னு... அவருதான் கிராமத்தில இருந்து வெட்டருவாளும்... வேலுக்கம்புமா வந்து இறங்கிருவாங்க... வேணாம் மாமா... இமைக்கு இமை தெரியாம ஊரை விட்டு ஒடிப் போயிடறதுதான் நல்லது இல்லைன்னா உசிருக்கு உத்திரவாதம் இருக்காதுன்னு பயந்தாரு... பாவம்... அந்த அப்பாவி மனுசன் பயந்ததைப் போலதானே இப்ப நடந்துக்கிட்டு இருக்கு...?

    வெறி வெறியாய் கிளப்பி விடும் அந்தப் பேச்சில் வெகுண்டு போன அஞ்சனாவின் அண்ணன்...

    என்னமோ சொன்ன...? தப்பு இந்த வீட்டில்தான் இருக்குண்ணேன்னு... இப்பத் தெரியுதா... அது எந்த இடத்தில இருந்து ஆரம்பிச்சிருக்குன்னு...? என்று தங்கையைப் பார்த்து உறுமினார்...

    அண்ணா...

    இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கனும்மா... மிதிக்கிற மிதியில வியாக்கினம் பேசற இந்த வாயி கிழியனும்... வெட்கம் கெட்டுக் காட்டற இந்தப் பல்லெல்லாம் உடையனும்... தைரியமா நம்ம வீட்டு வாசல் படியை மிதிச்சிருக்கிற இவன் காலு முறியனும்... நாக்கூசாம கையை ஆட்டி ஆட்டி பொட்டை நியாயம் பேசற இவன் கையிரெண்டும் துண்டு துண்டாகனும்...

    கசாப்புக்கடைக் காரனைப் போல பக்கத்து வீட்டுக்காரனை குறிபார்த்தபடி அஞ்சனாவின் அண்ணன் பேசியதில் அவன் அரண்டு போனான்...

    ஏங்க... நைஸா பேசி அவகிட்ட விடுதலைப் பத்திரத்தில கையெழுத்து வாங்கிட்டு வந்திருங்க... அமைதி... பொறுமைன்னு எருமை மாட்டுமேல மழை பெஞ்சதைப் போல எதைச் செய்தாலும் தாங்கிக்கிட்டுப் போகிற ஜென்மம் அது... நீங்க பேப்பரை நீட்டினீங்கன்னா... அப்பனையும் அண்ணக்காரன்களையும் அடக்கிட்டு அதுவே நீங்க நீட்டின பேப்பரில காட்டின இடத்தில கையெழுத்துப் போட்டுக் கொடுத்துரும்... எதுக்கும் வீட்டுப் பத்திரத்தையும் ரெடி பண்ணிட்டுப் போங்க... நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே நம்ம பொண்ணோட வீடும் இருக்குன்னு மகிழ்ந்து போயிரலாம்...

    பக்கத்து வீட்டுக்காரனின் மனைவி ஓதி அனுப்பியிருந்தாள்... அநியாயத்திற்கும் நல்லவளாக இருந்து வைக்கும் அஞ்சனாவிடம் நின்று பேச பயம் தேவையில்லையென்ற திமிரும் தெனாவெட்டும் சேர்ந்து தான் பக்கத்து வீட்டுக்காரனை அங்கே கொண்டு வந்து நிறுத்தி... அப்படிப்பட்ட வார்த்தைகளை நாவு கூசாமல் தயக்கமின்றி... தங்கு தடையில்லாமல் சரளமாக பேச வைத்துக் கொண்டிருந்தன... பாவம்... அவனுக்குத் தெரியாது... அஞ்சனாதான் அநியாயத்துக்கும் நல்லவள்... அவளுடைய அண்ணமார்கள்... கெட்டவர்களுக்கு கெட்டவர்கள்...

    அவர்கள் செய்ய நினைத்து வார்த்தைகளில் சொன்னதை செய்து காண்பித்து விட்டுத்தான் வேறு வேலை பார்த்தார்கள்... அஞ்சனா தடுத்ததில் அத்தோடு ஒழியட்டும் என்று அவர்கள் விட்டு வைத்திருப்பார்கள்... பக்கத்து வீட்டுக்காரனின் கையிலிருந்த நழுவிய பத்திர பேப்பர்களைப் பார்த்து விட்டு அஞ்சனாவின் சின்ன அண்ணன் ரௌத்ரம் கொண்டார்...

    அண்ணா... இந்த நாதாரி நாயி... நம்ம தங்கச்சிகிட்ட விடுதலைப்பத்திரத்திலயும்... வீட்டுப் பத்திரத்திலயும் கையெழுத்து வாங்க வந்திருக்காண்ணா...

    அவ்வளவுதான் அடக்க வந்த அஞ்சனாவை பெற்றவர்களின் பக்கமாக தள்ளிவிட்டு பக்கத்து வீட்டுக் காரனை துவைத்து உலர்த்தி விட்டார்கள் அஞ்சனாவின் அன்புச் சகோதரர்கள்...

    குற்றுயிரும்... குலையுயிருமாக வந்த புருசனை வீட்டுக்குள் பதுக்கி வைத்து கதவை அடைத்துக் கொண்டாள் அவன் வீட்டுக்காரி...

    போலிஸீக்கும் போக முடியாது... அவங்க கம்ப்ளெயிண்ட் கொடுத்தா நம்ம மாப்பிள்ளயும் சேர்ந்து மாட்டுவாரு... அவரோட வேலை போயிடும்... அவரை நம்பி வாழப் போயிருக்கிற நம்ம பெண்னோட வாழ்க்கையையும் நாம பார்க்கனும்...

    வேதாளம் நியாயம் பேசியது... இந்த உலகத்தில் இது போன்றவர்கள்தான் தேவாரத்தை ஓதிக் கொண்டிருக் கிறார்கள் என்று கொதித்தார் அஞ்சனாவின் பெரிய அண்ணன்...

    எவ்வளவு தைரியம் பாரேன்... திட்டம் போட்டுக் குடியைக் கெடுத்ததுமில்லாம... விடுதலைப் பத்திரத்தில கையெழுத்து வாங்க வேற வந்திருக்கான்... இவனையெல்லாம் கொன்று புதைக்கனும்மா... மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க துப்பில்லாம போனா எங்கேயாவது கிணத்தில விழுந்து சாகனும்... அத விட்டுட்டு அடுத்தவங்க குடியைக் கெடுத்து அதில பொழப்பு நடத்தனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு காய் நகர்த்தக் கூடாது... இவனெல்லாம் நல்லாவாம்மா இருப்பான்...? நாசமாத்தான் போவான்...

    வயிறு எரிந்து சாபம் விட்டார் அஞ்சனாவின் சின்ன அண்ணன்... அஞ்சனா வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டை விலைக்கு வாங்கி குடி போனாள்...

    இவனுகளுக்காக நாம ஏம்மா இந்த வீட்டை வித்துட்டு வேற வீட்டை வாங்கனும்...? அஞ்சனாவின் அண்ணன் கோபப்பட்டார்...

    வேண்டாம்ண்ணா... இங்கேயிருந்தா அந்த மனுசனைப் பத்தின பேச்சு என் காதில விழுந்துக்கிட்டே இருக்கும்... நினைப்பு என்மனசில வந்துக்கிட்டே இருக்கும்... இந்த வீடே எனக்கு வேண்டாம்...

    ஆனாம்மா... நீ தூரமாப் போனா ஒடிப் போன நாய்களுக்கு தோதாப் போயிருமில்ல...? அஞ்சனாவின் அண்ணன் சரியாகத்தான் கேட்டார்...

    அவர்களுக்கு தோதாகத்தான் போனது... புதிதாகக் கட்டிக் கொண்ட ஜோடியோடு வெட்கம் கெட்ட மாமனார் (?) வீட்டிற்கு அஞ்சனாவின் கணவன் வந்து போக ஆரம்பித்தான்...

    2

    பளிங்கு போன்ற விமான நிலையத்தின் பளபளப்பையும் அதனுள் சென்று வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தையும் பார்த்தபோது... அந்தச் சூழலுக்குள் தான் ஒட்டாமல் இருப்பதைப் போல உணர்ந்தாள் யாழினி...

    நுனி நாக்கு ஆங்கிலமும்... ஜீன்ஸீம்... கையில்லாத சட்டையுமாக விரித்துப் போட்ட கூந்தலுடன் அவளைக் கடந்து போன யுவதிகளின் மத்தியில் சல்வாரும்... பின்னலுமாக தான் தனித்து நிற்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது...

    யுவர் அட்டென்சன் ப்ளீஸ்...

    Enjoying the preview?
    Page 1 of 1