Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nila Soru
Nila Soru
Nila Soru
Ebook324 pages3 hours

Nila Soru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்தினி தாய் தந்தையற்றவள். நந்தினி, பார்த்திபன் என்ற இளைஞனை காதலித்தாள். ரூபா நந்தினியின் உறவுக்காரப் பெண். அவள் நந்தினியின் காதலை பிரிக்க ஏன் நினைத்தாள்? பார்த்திபன் நந்தினி திருமணம் நடந்ததா? படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580133810072
Nila Soru

Read more from Muthulakshmi Raghavan

Related to Nila Soru

Related ebooks

Reviews for Nila Soru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nila Soru - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிலாச் சோறு

    Nila Soru

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    உன் மனதில் நானென்று...

    ஒரு வார்த்தை நீ கூறு...

    என்றென்றும் எந்தனுக்கு...

    அதுதானே நிலாச்சோறு...!

    நண்பகலின் வெயிலில் கல்லூரிச் செடிகளின் இலைகளும் பூக்களும் வாடிக் கொண்டிருக்க... விரிவுரையாளரின் இடை விடாத விரிவுரையில் சுவாதி வாடிக் கொண்டிருந்தாள்... அவளும்தான் பாவம் என்ன செய்வாள்...?

    ‘உண்டி சுருங்குதல்...

    பெண்டிர்க்கு அழகு...’

    என்று அவளைப் பெற்ற சித்ரலேகா தினமும் எடுத்துரைத்து பிரயத்தனம் செய்கிறாள்... எங்கே...? அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காக காற்றோடு கலந்து காணாமல் போகிறதே தவிர சித்ரலேகாவின் காதுகளில் ஏறிய பாடாக இல்லை...

    இருக்கிறது ஒற்றை மக... அவளுக்கு கை சுருக்கி சமைச்சுப் போட என்னால ஆகாது... என்று தீவிரமாக மறுத்து விடுவாள்... போதாக்குறைக்கு

    என்னங்க... என்று ரங்கநாதனுக்கு அபயக் குரலை அனுப்பி வைக்க... சுவாதியைப் பெற்ற தந்தையான ரங்கநாதன் மனைவியின் அபயக்குரலுக்கு அடுத்த கணமே ஆதரவுக் குரலைக் கொடுத்து விடுவார்...

    நல்லாச் சாப்பிடனும் சுவாதிக் கண்ணு...

    ஏன்ப்பா... அப்பதான் பலசாலியா ஆவேனா...?

    சுவாதி என்னவோ சிரிக்காமல்தான் கேட்பாள்... புஷ்டியாக வளர்ந்து டென்ஸ்போர்ட்ஸின் ரெஸ்ட்லிங்கில் கலந்து கொள்ளப் போகிறாளா என்ற அவளின் கோபத்தை புரிந்து கொள்ளாத அந்த அப்பாவித் தந்தை...

    ஆமம்மா... ஆமாம்... என்று சந்தோசமாக தலையாட்டுவார்...

    வேறு வழியின்றி லேகா படைக்கும் உணவு வகைகளை அவளது மிரட்டலுக்கு அஞ்சிச் சாப்பிட்டுப் பழகியதில் சுவாதிக்கு உணவின் மீதான ஈர்ப்பு

    இயல்பாக அதிகரித்து விட்டது... கல்லூரிக்கு மிகப் பெரிய டிபன் கேரியரில் மதிய உணவைக் கொண்டு வரும் மாணவியாக அவள் மட்டுமே இருந்தாள்... அப்படிக் கொண்டு வரும் மதிய உணவை செம வெட்டு வெட்டினால் அவளுக்கு நண்பகலின் வகுப்பறையில் தூக்கம் வந்து தொலைக்காதா...?

    அவளின் நியாயங்களை விரிவுரையாளரிடம் அவளால் சொல்ல முடியுமா...? சொன்னாலும் அவள் கேட்டு விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பாளா...? வாங்குகின்ற சம்பளத்திற்கு வேலை செய்ய அவள் அடாது சுவாதி தூங்கினாலும் விடாது விரிவுரையை ஆற்றிக் கொண்டேயிருந்தாள்...

    தூங்கி வழிந்த சுவாதி... பக்கத்திலிருந்த நந்தினியின் தோள் மீது வாகாக சாய்ந்து கொள்ள... நந்தினி...

    ஸ்ஸ்ஸ்... என்றாள்...

    அதற்கும் சுவாதி அசையாமல் தூக்கத்தைத் தொடர... நந்தினி சங்கடத்துடன்

    ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... என்றாள்...

    அவள் எழுப்பிய அந்த சப்தம் தாலாட்டைப் போல இருந்ததோ... என்னவோ சுவாதி சுகமாக தூங்க ஆரம்பித்து விட்டாள்...

    பொறுக்க முடியாதவளாய் அவளது காதோரம் இதழ் குவித்த நந்தினி...

    ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... என்று எழுப்பி விட முயன்றாள்...

    தொடர்ந்து அவள் எழுப்பிய ‘ஸ்ஸ்ஸ்’ களுக்கு பலன் இருந்தது... கண்விழித்த சுவாதி... இமைகளைக் கசக்கி விட்டபடி நந்தினியைப் பார்த்து...

    இஸ்ஸீ... இஸ்ஸீன்னு சப்தம் கேட்டுச்சே... உனக்கு கேட்கலையாடி...? என்று கேட்டாள்...

    இமைக்காமல் அவளைப் பார்த்தாள் நந்தினி...

    என்னடி...? புரியாமல் விழித்தாள் சுவாதி...

    அந்த இஸ்ஸை எழுப்பினவளே நான்தான்... நீ என்கிட்டயே சந்தேகம் கேட்கறியா...?

    நீயேண்டி அதை எழுப்பின...?

    வேறவழி...? உன்ன தூக்கத்தில இருந்து எழுப்பனும்னா நான் ‘ஸ்ஸ்ஸ்’ ங்கிற சத்தத்தைத்தானே எழுப்ப வேண்டியிருக்கு...?

    ம்ஹாவ்... சுவாதி நீளமாக கொட்டாவி விட...

    மகளே... தூங்கித் தூங்கி என் தோளில் சாய்ஞ்சேன்னு வைய்யி... நான் பிரண்ட்ன்னு கூடப் பார்க்க மாட்டேன்... என்று எச்சரித்தாள் நந்தினி...

    பார்க்காம என்னடி செய்வ...?

    உன்னைப் பொலி போட்டிருவேன்...

    யாரு...? நீ...? என்னைப் பொலி போடற...? ஜோக்கடிக்காம வேற வேலையிருந்தாப் பாருடி... நான் பேச வேண்டிய டயலாக்கை இவ பேசறா... அதை நானும் கேட்கறேன்... என்ன கொடுமை ரதி இது...?

    அடுத்த பெஞ்சில் இருந்த ரதி திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்... அந்தப் புன்னகையை விரிவுரையாளர் கவனிக்காமல் இருக்க வேண்டுமே என்று நந்தினி கவலைப் பட்டாள்... அவளுடைய கவலையைப் பற்றிக் கவலைப் படாமல் புத்தகங்களின்மீது சாய்ந்த சுவாதி தூங்கிப் போனாள்...

    ‘எப்படித்தான் இப்படி இருக்கிறாளோ...’

    நந்தினிக்கு எப்போதும் சுவாதியின் மீது வரும் ஆச்சரியம் இப்போதும் வந்தது... சுவாதி விட்டுச் சிறகடிப்பவள்... எதைப் பற்றிய கவலையும் அவளுக்கு இருந்ததில்லை... யாரையும் தனது சுட்டித்தனத்தால் வசியப் படுத்தி விடுவாள்... இத்தனைக்கும் சுவாதியின் குடும்பம் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்ததுதான்... அவளுடைய அப்பா ரங்கநாதன் அரசு அலுவலகத்தில் பணி புரிபவர்...

    நந்தினி அப்படியல்ல... அவளுடைய குடும்பம் பணக்கார பாரம்பர்யத்தைக் கொண்டது... திருப்பூரில் அவர்களுக்கு ஒன்றுக்கு மூன்று மில்கள் இருந்தன... குன்னூரில் எஸ்டேட்... ஊட்டியில் ஹோட்டல் என்று அவர்களுக்கு பலவழிகளில் பணமழை பொழிந்து கொண்டிருந்தது...

    அப்படிப்பட்ட கோடிஸ்வரக் குடும்பத்தில் பிறந்த நந்தினி பேச யோசிப்பாள்... ஒர் அடியெடுத்து வைப்பதாக இருந்தாலும் ஒன்றுக்கு பத்து முறை யோசித்து விட்டுத்தான் அடியெடுத்து வைப்பாள்...

    மென்மையின் மறு வடிவம் நந்தினி...

    அவளுக்கு அதிர்ந்து பேச வராது... எதிர்த்துப் பேசத் தெரியாது... ஓர் அழகோவியம் போல மெலிதான புன்னகையுடன் இருப்பவளுக்கு... வாயைவிட... கண்கள் தான் அதிகமான கதைகளைப் பேசும்...

    உனக்கு நந்தினின்னு பெயர் வைச்சிருக்கக் கூடாதுடி...

    ஏன் சுவாதி...?

    பேசா மடந்தைன்னு பெயர் வைத்திருக்கனும்... இப்படியாடி பேசக் கூலி கேட்ப...?

    அதற்கும் நந்தினியிடமிருந்து புன்னகைதான் பதிலாக கிடைக்கும்... அவளது இயல்பே அப்படித்தான்... கொட்டுகிற அருவியாக இல்லாமல் அமைதியான நதியைப் போன்றவள் அவள்...

    அப்படிப்பட்ட நந்தினியுடன் ஆர்ப்பரிக்கும் அருவியைப் போன்ற குண இயல்புடைய சுவாதி சிநேகித மானதுதான் விந்தையிலும் விந்தை...

    நந்தினிக்கும்... சுவாதிக்கும் எந்தப் பொருத்தமும் இல்லாமல் ஏழாம் பொருத்தம் மட்டுமே பொருந்தியிருக்க. இருவரும் எப்படிப் பிரிக்க முடியாத தோழிகளாக நகமும் சதையுமாக ஆனார்கள் என்று அவர்களை அறிந்தவர்கள் அனைவரும் அது நாள்வரை ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்...

    அவங்ககிட்ட எல்லாமே ஏழாம் பொருத்தம் தாண்டி... என்பாள் அனுபமா...

    எதைவைச்சுடி அப்படிச் சொல்ற...?

    இந்த சுவாதியையே எடுத்துக்கயேன்... அவங்கப்பா கவர்ண்மென்ட் எம்ப்ளாயி... லோன் போட்டு ஒரு வீட்டைக் கட்டியிருக்கார்... அதே லோனைப் போட்டு ஒரு காரை வாங்கியிருக்கார்... அதுக்கே இந்த சுவாதி என்னவோ வானத்தில இருந்து குதிச்சதைப் போல இந்த அலட்டு அலட்டிக்கிறா... இவளுக்கு மட்டும் நந்தினிகிட்ட கொட்டிக் கிடக்கிறதைப் போல பணமிருந்ததுன்னு வைய்யி... இவளைக் கையில பிடிக்க முடியும்ன்னா நினைக்கிற...?

    அனுபமாவின் அந்தக் கேள்விக்கு முடியவே முடியாது என்ற ஒரு மனதான தீர்ப்பைத்தான் அங்கிருந்த தோழிகள் அறிவித்தார்கள்...

    "இதுவே நந்தினியை எடுத்துக்க... நிறைகுடம்... அவ வீட்டில நிற்கிற பத்துக்காரும் அப்போத்தான் இந்தியாவில இறக்குமதி ஆன கார்களா இருக்கும்... ஒரு வருசத்துக்கு மேல எந்தக் காரையும் அவ வீட்டில வைத்துக்க மாட்டாங்களாம்... தினத்துக்கு ஒரு காரில

    வந்து இறங்குறா... தினப்படி நகைகளா மெலிசான வைரங்களைத் தான் போட்டுக்கிறா... அவ டிரெஸ்ஸோட விலையில நாம ஒரு வருசத்துக்கு தேவையான துணிவகைகளை வாங்கிறலாம்... அவ்வளவு காஸ்ட்லி... பட்... அதைப்பத்தி அவ நினைச்சாவது பார்க்கிறாளா...? எவ்வளவு அமைதி...! எவ்வளவு ப்ரண்ட்லி...! நிறைகுடம் தளும்பாதுங்கிறதுக்கு இவதாண்டி உதாரணம்..."

    அதற்கும் ஒட்டு மொத்தமான ‘ஆமாம்’ என்ற தீர்ப்பையே அத்தனை தோழிகளும் அளித்தார்கள்...

    இப்பச் சொல்லுங்கடி... அலட்டியும்... அமைதியும் எங்காச்சும் இப்படி ஈருடல் ஓருயிரா இருக்க முடியுமா...?

    முடியாதுதான்...

    இதைத்தாண்டி நான் ஏழாம் பொருத்தம்ன்னு சொன்னேன்...

    அனுபமாவின் கூற்றைத்தான் நந்தினி... சுவாதியின் ஆழ்ந்த நட்டைப் பார்க்கிற அனைவரும் சொன்னார்கள்... சப்தமே எழும்பாமல் வாயசைவில் வார்தைகளை உச்சரிக்கும் நந்தினியும்... மெல்லப் பேசினாலே... ஏழுகடல் ஏழுமலையைத் தாண்டிக் கேட்டு விடும் குரல் வலிமை வாய்ந்த சுவாதியும்... பிய்த்தாலும் பிய்க்க முடியாத அளவில் கோந்தில்லாமலே ஒட்டிக் கொண்டதன் தாத்பர்யம் என்னவாக இருக்கக் கூடும் என்று தெரியாமல் அவரவரின் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டார்கள்...

    அவர்களுக்குத் தெரியாத ஒன்று இருக்கிறது... அது... ஆர்ப்பாட்டமான சுவாதிக்குள் நட்புக்காக உயிரையே கொடுக்கும் தன்மை இருக்கிறது என்பது... அதை நந்தினி கண்டு கொண்டிருந்தாள்... இருவரும் அறிமுகமான பள்ளிப் பருவத்தில்... ஒர் மழைநாளில்... சாலைக்கு எதிர் புறமாக நின்றிருந்த காரைப் பார்த்தபடி சாலையைக் கடக்க முற்பட்ட நந்தினி சீறி வந்த லாரியைக் கவனிக்காமல் விட்டு விட்டாள்...

    தோழியை வழியனுப்பி விட்டு பள்ளிப் பேருந்தில் ஏறிச் செல்வதற்காக கையாட்டியபடி நின்றிருந்த சுவாதி அந்த லாரியைக் கவனித்து விட்டாள்... கொட்டுகின்ற மழைத் துளிகள் திரைபோல கண் பார்வையை மறைக்க... சுவாதியின் வேகமான தள்ளலில் சாலையின் மறுபுறத்தில் பாதுகாப்பாக போய் விழுந்த நந்தினியின் கண்

    முன்னால் சுவாதியை தொட்டு விட்ட லாரியின் முகப்பு தெரிந்தது...

    சுவாதி... அலறியபடி அவள் மயங்கி விழுந்தாள்...

    விழித்த போது அவள் மருத்துவமனையின் பிரத்யேக அறையில் இருந்தாள்... பதறி எழுந்தவளைச் சுவாதியின் கரம் தடுத்தது...

    மக்கு...! என்மேல மோத எந்த லாரிக்குடி தைரிய மிருக்கு...? அதெல்லாம் உன்னைப் போல பயந்தாங் குளியைப் பார்த்தால்தான் ஓடிவந்து மோதும்... என்னைக் கண்டா... செல்லப் பிராணி போல செல்லம் கொஞ்சிக் கிட்டு நின்னுரும்...

    சுவாதி கண் சிமிட்டியபடி சொல்லிய அந்த நொடியில் நந்தினி அவளின் நட்பிடம் அடைக்கலமானாள்...

    சுவாதி நந்தினியைப் போல கோடிஸ்வரி இல்லை தான்... ஆனால் அவளைப் பெற்றவர்களுக்கு ஒரே மகள்... ரங்கநாதன்... லேகா தம்பதியரின் உயிர்மூச்சே சுவாதிதான்...

    அப்படிப்பட்ட சுவாதி பெற்றவர்களைப் பற்றிக் கூட நினைத்துப் பார்க்காமல் நந்தினியைக் காப்பாற்ற லாரியின்முன் பாய்ந்தாளென்றால்... அவளின் அந்த அன்பையும்... பாசத்தையும்... பிரியத்தையும்... நந்தினி என்னவென்று சொல்லுவாள்...?

    நந்தினி சுவாதியின் ஆத்மார்த்தமான தோழியானாள்... யாருடனும் பேசிப்பழக தடை விதிக்கப் பட்டிருந்த அவள் வீட்டில்... அந்த நிகழ்விற்குப் பின்னால் சுவாதியுடன் பேசிப் பழகுவதற்கான தடையற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது...

    காலையில் சுவாதியின் வீட்டிற்குப் போய் அவளை அழைத்துக் கொள்வாள் நந்தினி... மாலையில் கல்லூரி விட்டதும்... சுவாதியின் வீட்டில் அவளை விட்டுவிட்டு... லேகா கொடுக்கும் காபி டிபன் வகையறாக்களை ருசித்து விட்டு... மாலை மயங்கும் வேளையில் தான் அவள் வீட்டுக்குச் செல்லக் காரில் ஏறுவாள்...

    அது என்னவோ... அவள் வீட்டில் கிடைக்கும் வகை வகையான அறுசுவை உணவுகளில் இல்லாத ருசி லேகாவின் கையால் பரிமாறப் படும் உணவு வகைகளில் கிடைக்கிறது என்பது அவளின் நினைவு...

    அதற்கான காரணத்தை அவளின் பேதை மனம் அறியவில்லை...

    அது... சுவாதியின் வீட்டில் பரிமாறப்படும் உணவு வகைகளில் ருசியோடு தாயன்பும் சேர்ந்திருக்கிறது என்பது... அதை உண்ணும் போது சேர்ந்து கொள்ளும் ரங்கநாதனின் பேச்சில்... தந்தையின் அன்பு அங்கு சூழ்ந்திருக்கிறது என்பது...

    நந்தினி தாய் தந்தையற்றவள்...

    ஒரு சாலை விபத்தில் காரில் சென்ற அவளின் தாய் தந்தையர் இருவரும் இணைந்து இறந்து போனபோது நந்தினிக்கு இரண்டு வயது... அவளுடைய தமையன் நந்தகுமாருக்கு பனிரெண்டு வயது...

    பத்து வயது இடைவெளியில் பிறந்த மகள் நந்தினி... அவளை வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என்று அவளுடைய தந்தை சடகோபன் கொண்டாடினாராம்... அதை அவளைப் பெற்ற தாயான யாமினி ஆமோதித்தாளாம்... அப்படிக் கொண்டாடிய பெற்றோர்கள் இரண்டு வயதிலேயே ஏன் அவளை அநாதையாக்கி விட்டு வானுலகம் சென்றார்கள் என்ற கேள்வியினை எத்தனையோ இரவுகளில் மௌனக் கண்ணீருடன் கடவுளிடம் கேட்டிருக்கிறாள் நந்தினி...

    பனிரெண்டு வயது நந்தகுமாரால் நந்தினிக்கு விளையாட்டுத் தோழனாக இருக்க முடியவில்லை... அதே சமயத்தில் அவனால் நந்தினியின் வாழ்வில் பெற்றவர்களின் மறைவினால் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பவும் இயலவில்லை...

    அவன் கண்டிப்பான அண்ணனாக இருந்தான்... தங்கையிடம் பாசமிருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதமறியாதவன்... அவனைச் சொல்லியும் குற்றமில்லை... அவனையும் நந்தினியையும் வளர்த்த அவர்களின் தாத்தா சங்கரலிங்கம் சொல்லிக் கொடுத்திருந்த யுக்தி அது...

    அதிகம் பேசாதே... பேச்சு உன்னை காட்டிக் கொடுத்து விடும்... உன்னிடம் பேச மற்றவர்கள் பயப்பட வேண்டும்... யோசிக்க வேண்டும்... நீ சொல்வதை மட்டும் தான் அவர்கள் செய்ய வேண்டும்... தலைமைப் பொறுப்பில் இருக்கிறவன் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது...

    பனிரெண்டு வயதிலிருந்தே நந்தகுமார் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான பயிற்சிகளைப் பெற ஆரம்பித் தான்...

    திருப்பூரில் ஒன்னுக்கு மூணு மில்லிருக்கு... ஊட்டி ஹோட்டல்... குன்னூர் எஸ்டேட்டுன்னு அத்தனைக்கும்... நீயும்... நந்தினியும் தான் முதலாளிக... உன் தங்கச்சி சின்னக் குழந்தை... அவளையும் பார்த்து... உன்சொத்துக்களையும் காபந்து பண்ணனும்னா நீ இப்படித்தான் இருந்தாகனும் நந்து...

    நந்தகுமார் தாத்தாவின் சொல்படியே இருந்தான்... வளர்ந்தான்... இருபது வயது வரை சங்கரலிங்கத்திடம் தொழிலைக் கவனிப்பதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டான்... இருபத்தி இரண்டாம் வயதில் அத்தனை சொத்துகளுக்குமான பொறுப்பை எடுத்துக் கொண்டான்...

    பெற்றோர்களின் இழப்பைத் தாங்கிக் கொண்டு எழுந்து நிற்க அவனுக்கு சங்கரலிங்கம் உறுதுணையாக இருந்தார்... மகனின் சொத்துக்களை சிதறிவிடாமல் காத்து அதை பேரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பில் அவரும்... தகப்பனின் சொத்துக்களை காபந்து பண்ண வேண்டிய பொறுப்பில் நந்தகுமாரும் இருந்ததில் தனிமைப் பட்டுப் போனவள் நந்தினிதான்...

    குழந்தையாக இருந்தவளைத் தூக்கிக் கொஞ்ச அந்த வீட்டில் ஆளில்லை... சங்கரலிங்கத்தின் மனைவி கோமளம் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக பேரனை விட பேத்தியின் மீது அதிக கவனத்தை செழுத்தியிருப்பாள்...

    அப்படியில்லாமல் அவள் நந்தகுமார் பிறப்பதற்கு முன்பாகவே இதயநோயில் இறந்து விட்டிருந்தாள்... தனியாக நின்ற சங்கரலிங்கத்திடம் பேரன்... பேத்தியைக் காக்க வேண்டிய பொறுப்பு வந்தால் அவர் பாவம் என்ன செய்வார்...?

    அவரால் என்ன முடியுமோ... அதைத்தானே செய்வார்...?

    சங்கரலிங்கமும் அதைத்தான் செய்தார்... நந்தினியைக் கவனித்துக் கொள்ள ஆயாவை நியமித்தார்... சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஆயா கடமைக்கு வேலையைச் செய்தாள்... நந்தினிக்கான தாய்ப்பாசத்தைப் பற்றி அவள் யோசிக்கக் கூட இல்லை...

    விவரம் அறியாத குழந்தைப் பருவத்திலேயே தாய்... தந்தையை இழந்து விட்டதால் நல்லவேளையாக நந்தினிக்கு தாய்பாசமும்... தந்தையின் பாசமும் எப்படி-யிருக்குமென்று தெரியாமல் போனது... அதனால் அவள் இயல்பாக சங்கரலிங்கத்தின் கண்காணிப்பிற்கும்... நந்தகுமாரின் கண்டிப்பிற்கும் பழகி விட்டாள்...

    சங்கரலிங்கத்திற்கும்... நந்தகுமாருக்கும் அவளிடம் பேச நேரம் இருக்காது... இருவரும் கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டவர்களைப் போல நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டேயிருப்பார்கள்... மூவரும் சேர்ந்து பேசும் நேரமாக உணவருந்தும் நேரம் மட்டுமே இருந்தது... அப்போதும் அவர்கள் இருவரும் தொழிலைப் பற்றியும் வியாபாரத்தைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்க... நந்தினி மெல்ல... மெல்ல... பேச்சை மறந்து... பேசாமடந்தையாக ஆகிப் போனாள்...

    என்னம்மா... சாப்பிட்டயா...?

    இரண்டு பேரும் வெவ்வேறு தொனியில் இந்தக் கேள்வியை மட்டும்தான் நந்தினியிடம் கேட்பார்கள்... கூடுதலாக...

    ஸ்கூலுக்கு கிளம்பிட்டியா...? என்பார்கள்...

    அது... மாறி... காலேஜீக்கு கிளம்பிட்டியா...? என்பதில் வந்து நின்ற பின்பும் அவர்களின் கேள்விகள் மட்டும் மாறவேயில்லை...

    இதற்கு இடையில் நந்தினிக்கு பதினைந்து வயதாக இருந்த போது அவளுடைய அண்ணனுக்குத் திருமண மாகி... அண்ணியாக ரூபா வந்து சேர்ந்தாள்... அவள் வந்த பின்பு நந்தினிக்கும்... நந்தகுமாருக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச பேச்சு வார்த்தையும் அற்றுப் போய் விட்டது... உணவுண்ணும் நேரத்தில் அவனருகே ரூபாவும் இருந்ததில் நந்தினி தனியாக உணவருந்தப் பழகிக் கொண்டாள்...

    2

    உன் இமையோர நினைவுகளில்...

    எழுதிவைத்த கவிதைகளில்...

    என் நினைவும் இருந்து விட்டால்...

    எனக்கு அது நிலாச்சோறு...!

    ரூபாவுக்கு நந்தினியுடன் பேசப் பிடிக்காது... மென்மையின் வடிவமான நந்தினியின் அழகு... அவர்களின் உறவு வட்டாரத்தில் பிரசித்தி பெற்றது... அதில் ரூபாவுக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லை...

    ஹேய்... உன் நாத்தனார் கொள்ளை அழகுடி... இந்த வயதிலேயே இப்படியிருக்கிறாளே... இன்னும் ஆறு வருசம் போனா... இந்த திருப்பூருக்கே இவதாண்டி அழகு ராணி...

    திருமணத்திற்கு வந்திருந்த ரூபாவின் தோழி-யொருத்தி இப்படிப்பட்ட விமரிசனத்தை செய்து வைத்ததில்... அவளின் நட்பே வேண்டாமென்று தள்ளி வைத்து விட்டாள் ரூபா... அந்த அளவுக்கு அவள் மனதில் நந்தினியின் மீதான பொறாமை மலையளவு இருந்தது...

    நந்தினியின் அழகைத்தவிர அவளை ரூபா வெறுப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது... அதை ரூபாவின் ஆழ்மனம் மட்டுமே அறியும்...

    ‘ம்ஹீம்... இவ என் ஹஸ்பெண்ட் கூடப் பிறக்காம இருந்திருந்தா இத்தனை சொத்துக்கும் நான் மட்டும் தான் சொந்தக்காரி...’

    இந்த நினைவுடன் இருந்தவள் நந்தினியை சிநேகிதிக்கும் பார்வையைப் பார்க்காமல்... பங்காளியைப் பார்ப்பதைப் போன்ற பாசப் பார்வையைத்தான் பார்த்து வைப்பாள்...

    அவள் மனதில் எரியும் நெருப்பை

    Enjoying the preview?
    Page 1 of 1