Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santham Thantha Sontham
Santham Thantha Sontham
Santham Thantha Sontham
Ebook237 pages3 hours

Santham Thantha Sontham

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

பல்லவர்காலத்தில் நடந்ததாக புனையப்பட்ட வரலாற்று புதினம் இது.. நரசிம்ம பல்லவன் காதலிக்கும் சிவகாமி எனும் நாட்டிய பேரழகியை சாளுக்கிய நாட்டின் புலிகேசி மன்னன் கவர்ந்து சென்று விடுகிறான்.. சாளுக்கிய நாட்டுடன் போர் தொடுத்து சிவகாமியை மீட்கிறான் நரசிம்ம பல்லவன். அந்த மீட்சியில் சிவகாமி மகிழ்ச்சி அடைந்தாளா..?

The story based on historical events of Pallava's period. Narasimma Pallavan's lover 'Sivakami' a dancer was hooked by king of Chalukiya Pulikesi. So the Pallava declared was on Pulikesi and safe back her lover. After this incident, there is a question that really 'Sivakami'was happy..?

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133805527
Santham Thantha Sontham

Read more from Muthulakshmi Raghavan

Related to Santham Thantha Sontham

Related ebooks

Related categories

Reviews for Santham Thantha Sontham

Rating: 4 out of 5 stars
4/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santham Thantha Sontham - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    சந்தம் தந்த சொந்தம்...

    Santham Thantha Sontham…

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    நான் செதுக்கும் சிற்பத்தில்...

    உன் உருவம் எப்படி வந்தது...?

    மாட மாளிகைகளும்... கூட கோபுரங்களுமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது மாமல்லபுரம்... நீண்ட நெடும் வீதிகள் பல்லவர்களின் செல்வச் செழுமையை பறைசாற்றின... வீதிகளில் இருந்த அங்காடிகளில் குவிந்திருந்த ஜனத்திரளின் இரைச்சல் கடலோரப் பாறைகளின் மீது ஓங்கி அடித்துக் கொண்டிருந்த அலைகளின் இரைச்சலை விட அதிகமானதாக இருந்தது... அங்காடிகள் தோறும் ஏற்றுமதி... இறக்குமதிப் பொருள்கள் குவிந்து கிடந்தன... துறைமுகத்தில் வந்து நின்ற 'நாவாய்' களிலிருந்து இறக்கப்பட்ட பொருள்கள் துறைமுகத்தில் நிரம்பிக் கிடந்தன... இவைகளைக் கண்டு களித்தபடி தனது புரவியில் சென்று கொண்டிருந்தான் நரசிம்மன்...

    மாலை மயங்கி இருள் சூழ்ந்த அந்நேரத்தில் கடலலைகளின் இரைச்சல் ஓங்காரமிட்டது... அந்த ஓங்காரத்தினால் அவனை அச்சப்படுத்த இயலவில்லை... எண்ணற்ற போர்க்களங்களைக் கண்ட அந்த மாவீரன் எதற்கும் அஞ்சாதவன் என்பதை உணர்ந்த கடலலை மௌனமாக தனது தோல்வியை ஒப்புக் கொண்டு கடலுக்குள் பின்வாங்கியது...

    கடற்கரையை ஒட்டிய மரத்தடியில் புரவியிலிருந்து குதித்து இறங்கிய நரசிம்மன், புரவியை மரத்தில் கட்டிவிட்டு கடலோரக் குன்றுக்கு கடற்கரை மணலில் கால்கள் புதைய நடந்தான்...

    குன்று என்று சொல்வதை விடச் சிற்பங்களின் தொகுப்பு என்று சொல்வதே சாலச் சிறந்தது என்று சொல்லாமல் சொல்வதைப் போல... சிற்பங்களால் எழுந்திருந்த குன்றின் சுவர் அவனது கலாரசிக மனதை காந்தமென பற்றி இழுத்தது... சுவரின் மீது குடைந்து வடிக்கப் பட்டிருந்த சிற்பங்களின் நுணுக்கத்தில் அவன் மனம் லயித்தது... அப்போது... கடலோரமாக...

    ஜல்... ஜல்... என்ற சதங்கையின் சப்தம் கேட்டது...

    'யார் அது...?'

    நரசிம்மனின் ரசனைக்கு இடையூறு நேர்ந்ததில் அவனுக்குள் எரிச்சல் ஏற்படவில்லை... மாறாக அந்த சலங்கை ஒலியின் மூலத்தை அறிந்து கொள்ள அவன் விழைந்தான்...

    அவன் பார்வை கூர்மையாக... இருளைத் துளைத்து... கடலலைகளின் வெண்மை நிற எழுச்சியின் பிண்ணனியில் ஏதேனும் கடல்மோகினி தென்படுகிறாளா என்று துழாவியது...

    அலைகடலின் ஆவேச சப்தம் சலங்கையொலியை அமிழ்த்த முயன்று ஓங்காரமிட்டது... நரசிம்ம பல்லவனின் செவிகள் கூர்மையாகின... அவன் செவிகளைத் தீட்டிக் கொண்டு சலங்கையின் ஒலி வந்த இடத்தை நோக்கி நடந்தான்...

    அவன் நெருங்க... நெருங்க... சலங்கையின் ஒலி...

    ஜல்... ஜல்... என்ற சப்தத்துடன் பின் வாங்கியது...

    யார்...? நரசிம்மன் அதட்டினான்...

    இருளின் போர்வையில் அவனுக்குப் பதில் கிடைக்க வில்லை... நூதனமான அந்த அனுபவம் அவனுக்குள் ஆச்சரிய அலைகளை செழுத்தின... அலையோரமாக நின்ற பல்லவனின் பாதங்களை ஓங்கி அறைந்து தன் இருப்பை உணர்த்தி மீண்ட அலைகளால் அவன் தேடும் கடல் மோகினியை அவன் கண்களுக்கு காட்ட இயலவில்லை...

    இந்த இரவு வேளையில் இங்கிருப்பது யார்...? நரசிம்மன் குரலெழுப்பினான்...

    இப்போது சலங்கை ஒலி நின்று அவன் கேள்வியை செவி மடுப்பதைப் போல மௌனமாக இருந்தது... அலை கடலின் ஓரமாக ஒரு வெண்மைநிற ஒளி தோன்றி... அருகிலிருந்த மரக்கலத்தின் பின்னால் மறைவதைப் போல இருந்தது...

    நரசிம்மன் வேக நடையுடன் சடுதியில் அவ்விடத்தை அணுகினான்... ஓடத்தின் பின்னால் மறைந்திருந்த உருவத்தின் கை பற்றி அருகினில் இழுத்தான்.

    அவன் பற்றியிருந்த கரம்... வெண்ணையின் குழைவோடு இருந்தது... போதாக்குறைக்கு... அந்தக் கரத்தில் வளையல்கள் உருண்டன...

    வளைகரத்தின் மென்மையில் நரசிம்மனின் இறுகியபிடி தளர்ந்தாலும்... அவன் முற்றிலுமாக அந்தக் கரத்தை விட்டு விடவில்லை... அவன் உணர்ந்த வெண்மையின் குழைவு... அந்த தளிர் கரத்தை விடுவிக்க அனுமதிக்கவில்லை...

    யார் நீ...?

    முகம் சரியாகத் தெரியாத நிலவின் ஒளியில் மோகினி போல் நின்ற அந்த வடிவத்திடம் அவன் கேட்டான்... பதில் வரவில்லை... இந்த இருள் சூழ்ந்த வேளையில் இங்கே என்ன செய்கிறாய் பெண்ணே...? தனிமையில் ஒரு பெண்... ஆளரவமற்ற கடற்கரை ஓரமாக நடமாடுவது உகந்ததல்ல என்று உனக்குத் தெரியாதா...? இல்லை... உன் பெற்றோர் அதை உனக்குச் சொல்லி வளர்க்கவில்லையா...?

    அவனது கோர்வையான கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது... அந்த வெண்ணிற ஒளி போன்ற பெண் வடிவம் வாய்திறந்தது...

    என் பெற்றோர் என்னை நன்முறையிலேயே வளர்த்திருக்கிறார்கள்... இளவரசே...! மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியின் ஆளுகைக்கு உட்பட்ட கடலோர கிராமத்தில் தங்களின் மகளுக்கு யாதொரு ஆபத்தும் நேராது என்ற நம்பிக்கையையும் அவர்களே எனக்கு அளித்தார்கள் அரசே...!

    அவளின் வினயமான அறிவு நுட்பம் கொண்ட பதில் நரசிம்மனின் இதழ்களில் புன்னகையை வரவழைத்தது... நிலவின் மங்கிய ஒளியில் ஓவியம் போல நின்ற பெண்ணின் முக வடிவை முழுதாக பார்த்து விட அவன் விரும்பினான்... அவளை அணுகினான்... அவன் நெருங்கிய வேளையில் அவள் பின் வாங்கினாள்... அமர்ந்திருந்த அவளின் சலங்கை ஒலி ஒலித்தது...

    ஜல்... ஜல்...

    நரசிம்மனின் செவிகளை அந்த சலங்கை ஒலியின் நாதம் நனைத்தது... நரசிம்மனுக்குள் பரவிய இதமான மெல்லிய உணர்வு அவனுக்குள் குளிர் சேர்ந்த ஓர் நூலிலை போன்ற அனுபவத்தை உணர்த்தியது...

    நரசிம்மனை அந்த சலங்கையின் நாதம் ஏதோ செய்தது... அந்த இரவுப் பொழுதும்... அலைகடலின் ஓரமும்... மங்கிய நிலவொளியும்... அதில் தெரிந்த அலை போன்ற வடிவமுடைய பெண்ணழகும்... அவளது கரம் உணர்த்திய வெண்மையின் குழைவும் அவனை எங்கோ அழைத்துச் சென்றன...

    அவன் கலைப்பிரியன்... ஆடலிலும்... பாடலிலும் மனதை இழப்பவன்... அவற்றில் லயிப்பவன்... அவை யிரண்டிலும் வல்லவன்... சிற்பக்கலையை நேசிப்பவன்...

    நரசிம்மன் பாடினால் கேட்பவர்கள் மயங்கிப் போய்... அவன் எதைக் கேட்டாலும் சாசனம் பண்ணிக் கொடுத்து விடச் சித்மாகி விடுவார்கள்...

    அவன் ஆடினால் அந்த நடராஜன் நேரில் வந்து அவனுக்கு கேட்ட வரத்தை அளித்து விடுவார்...

    அப்படிப்பட்ட கலைஞனும்... ஆடல்கலை வல்லுனனும்... மிகச் சிறந்த பாடகனுமான நரசிம்மன் கலாரசிகனாக இருந்ததில் வியப்பேதும் இல்லை... போர்வாளை விட அவன் கலைகளையே அதிகம் நேசித்தான்...

    அந்த நரசிம்மன்... இருள் சூழ்ந்த இரவில்... அலைகடலின் பின்னணியில்... நிலவின் ஒளியில்... மாய மோகினியைப் போன்ற கடல் மோகினியின் வடிவில்...

    'ஜல்... ஜல்...' என்ற சலங்கையின் நாதத்தில் மயங்காமல் இருப்பானா...?

    அது அலைகடல் பெண்ணே...! அவள் இளநகையுடன் சொன்னான்...

    அவன் நெருங்குவதில் அந்தப் பெண் வடிவம் பின் வாங்கினால் கடலுக்குள்தான் செல்ல வேண்டியிருக்கும் என்பதை அவனது வார்த்தைகள் அவளுக்கு உணர்த்த முற்பட்டன...

    அறிவேன் அரசே...! மோகினி வடிவம் பதில் சொல்லியபடியே அலை கடலுக்குள் பின்வாங்கியது...

    நில் பெண்ணே...!

    ஏன் அரசே...?

    நான் அரசனில்லை... இளவரசன்தான்... சக்கரவர்த்தி மகேந்திர பல்லவர்தான் இந்த நாட்டுக்கு அரசர்...! இதை நீ அறிய மாட்டாயா...?

    அறிவேன் அரசே...! தாங்கள் இந்த நாட்டின் சக்கரவர்த்தியாக இல்லாமல் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்றவராக இருக்கலாம்... ஆனால்... கலைகளுக்கு தாங்கள் அல்லவோ பேரரசர்...!

    அந்தப் பெண்ணின் தழைந்த குரலின் நெகிழ்வில் அவன் பெருத்த வியப்பை அடைந்தான். அந்தக் குரலின் நெகிழ்வு சொல்வதென்ன...? அவனை அவள் அறிவாளா...?

    நீ... நீ...

    சொல்லுங்கள் அரசே...!

    நீ கடல்மோகினியில்லையா...?

    அவனது கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல் கலகலவென்று நகைத்தாள்... வெள்ளிக் காசுகளை சிதற விட்டதைப் போன்ற அவளது சிரிப்பொலியுடன் சலங்கையின் சப்தமும் சேர்ந்து கொள்ள...

    ஆம் அரசே...! நான் கடல் மோகினிதான்... என்று சொல்லியபடி கடலோரமாக அவள் ஓடி விட்டாள்...

    2

    செதுக்கி வைத்தது சிற்பமா...?

    இல்லை உனது உருவமா...?

    நான் கடல் மோகினிதான் என்று அறிவித்து விட்டு சோழிகளை அள்ளி வீசியதைப் போலச் சிரித்தபடி ஓடிய அந்த மாய மோகினியின் பின்னால் ஓட விழைந்தது மாமல்லனான நரசிம்மனின் மனம்... அவனும் ஓட முனைந்தான்...

    இளவரசே...! தாங்களா...? என்ற குரல் அவனைத் தடுத்து நிறுத்தி பூவுலகுக்கு கொண்டு வந்தது...

    திரும்பிப் பார்த்தான்... அங்கே சிற்பி ஆயனர் கரம் குவித்தபடி நின்று கொண்டிருந்தார்...

    தாங்கள் எனக்குக் கரம் குவிப்பதா...? தவறு பெருமானே...!

    நரசிம்மன் கடல் அலைகளின் ஸ்பரிசத்தைத் துறந்து கடலை விட்டு வெளியே வந்தான்... ஆயனர் குவித்த கரங்களை விலக்கவில்லை... மறுப்பாக தலையை அசைத்தவர்...

    இந்தக் கரங்கள் தங்களுக்கும்... சக்கரவர்த்திப் பெருமானுக்கும் மட்டும்தானே குவிந்து வணக்கம் சொல்லும் அரசே...? தங்கள் இருவரையன்றி வேறு யாருக்கு இந்தக் கரங்கள் குவியும்...? என்று கரகரத்த குரலில் நெகிழ்வுடன் சொன்னார்...

    அதற்குள் கடற்கரை மணலில் ஏறிவிட்ட நரசிம்ம பல்லவன் சிற்பியின் கரங்களைப் பற்றிக் கொண்டான்...

    இந்தக் கரங்கள்... உயிரற்ற பாறையை உயிருள்ள தாக்கும் சிற்பங்களைச் செதுக்கும் சிற்பியுடையவை ஆயனர் பெருமானே...! படைப்பவர் வணங்ககக் கூடாது...

    அந்தப் படைப்புக்கு வழி வகுத்துக் கொடுத்தது தாங்கள் அல்லவா... வாளைக் கூர்மையாக்கி யுத்தகளம் புகுந்து குருதிப் புனலில் நீராடுவது மட்டுமே ஷத்திரிய தர்மம் என்ற நியதியைக் கொண்டிருக்கும் போது... போருடன் ஆயகலைகள் அறுபத்தி நான்கையும் அறிந்து வைத்திருக்கும் தங்களைப் போன்ற கலைஞன் இந்த பூவுலகில் உண்டோ...?

    போர்க்களம் புகுபவனுக்கு கலைகளின் மீது விருப்பம் இருக்கக் கூடாது என்று யார் நியதி வகுத்தது ஆயனரே...! வாளேந்தும் கரங்கள்... யாழ் மீட்டக்கூடாது என்று என் தந்தையான மகேந்திர பல்லவச் சக்கரவர்த்தி சட்டம் இயற்றியிருக்கிறாரா என்ன...?

    நரசிம்மனின் கேள்விக்கு மறுமொழி கூற முடியாமல் தழைந்து நின்றார் ஆயனர்... குவிந்த அவரது கரங்களை விலக்கி விட்டு அவருடன் இணையாக நடக்க முயன்றான் நரசிம்மன்...

    ஆயனர் அவ்விதம் நடக்கவில்லை... அவர் நரசிம்மனுடன் இணையாக நடப்பதைத் தவிர்த்து... இரண்டடி பின் தங்கியே நடை பயின்றார்... அதை ஓரவிழிப் பார்வையில் கண்டுணர்ந்த நரசிம்மன் தனக்குள் நகைத்துக் கொண்டான்...

    'மன்னர்கள் மாற முயன்றாலும்... மக்கள் அதற்கு அவ்வளவு எளிதில் உடன்பட்டு விடவதில்லை...'

    கடலோரப் பாறையில் அமர்ந்தவனுக்கு எதிரே நின்ற ஆயனரைப் பார்த்து புருவங்களை சுருக்கினான் நரசிம்மன்...

    கால்கள் கடுக்க நிற்க வேண்டும் என்ற வேண்டுதல் எதுவும் வைத்திருக்கிரீர்களா சிற்பி பெருமானே...?

    அல்ல இளவரசே...!

    பின் எதற்காக நிற்கிறீர்கள்...? அமருங்கள்...

    கம்பீரமாக தன் எதிரே இருந்த பாறையைக் காட்டினான் நரசிம்ம பல்லவன்... தயக்கத்துடன் சற்றுத் தள்ளி இருந்த அளவில் குறைந்த சிறு பாறையில் உட்கார்ந்தார் ஆயனர்...

    சிற்ப வேலை எந்த அளவில் இருக்கிறது ஆயனரே...?

    ஒரு குறைவுமில்லாமல் விரைந்து நடந்து கொண்டிருக்கிறது அரசர் பெருமானே...

    தங்களுக்கான உளிகள் கூர்மையுடன்... தாங்கள் கேட்கும் வடிவமைப்பில் தரப்பட்டனவா...?

    ஆம் அரசே...! தங்களின் கட்டளைப்படி... தமது சேவகர்கள் அனுதினமும் என்னை அணுகி... எனது தேவைகளை கேட்டறிந்து அதன்படி எனக்கான உளிகளைத் தயாரித்து அளிக்கிறார்கள் அரசே...! தங்களுக்கு எந்தன் வந்தனம்...

    இது எனது கடமையல்லவா...? வந்தனம் எதற்காக ஆயனரே...! தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் குறைவின்றி கிடைக்கிறதா சிற்பியாரே...?

    "தங்களின் ஆணையும்... சக்கரவர்த்தியின் ஆதரவும் எங்களுக்கு இருக்கும்போது வாழ்க்கையின் வசதிகளில் எந்தக் குறையும் ஏற்படாது இளவரசே...! அத்துடன்

    எனது வாழ்க்கை நான் வடிக்கும் சிற்பங்களில் அல்லவா அடங்கியிருக்கிறது...? அதை அள்ள அள்ளக் குறையாமல் எமது கைகளுக்கு வழங்கியுள்ளீர்களே அரசே...! அதைவிடப் பெரிதென்று இந்த உலகில் ஏதேனும் இருக்கக் கூடுமோ...?"

    ஆஹா... ஆஹா...! உத்தமமான வாசகங்களை மொழிந்தீர்கள் சிற்பியாரே... இந்த உலகம் கலைகளால் பிணைக்கப் பட்டதல்லவா...?

    ஆயனரின் வார்த்தைகளை ஏற்கும் விதமாய் தலையை ஒப்புதலாக அசைத்தான் நரசிம்ம பல்லவன்... அந்த உரையாடல் ஆட்சி பீடத்தில் ஏறப் போகும் ஓர் இளவரசனுக்கும்... அவன் நிழலில் வாழும் ஓர் குடிமகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலாக இல்லாமல்... ஆய கலைகளில் ஈடுபாடுடைய ஓர் கலைஞனுக்கும்... அவன் ஆராதிக்கும் ஓர் சிற்பக் கலைஞனுக்கும் இடையில் நடக்கும் தோழமை கொண்ட சம்பாஷணையாக அமைந்திருந்தது...

    நரசிம்ம பல்லவனின் பார்வை...

    Enjoying the preview?
    Page 1 of 1