Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugil Maraitha Nilavu...
Mugil Maraitha Nilavu...
Mugil Maraitha Nilavu...
Ebook229 pages2 hours

Mugil Maraitha Nilavu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராதிகாவிற்கும் மோனிகாவிற்கும் அண்ணன் நவநீதன். இவர்களின் பெற்றோர் கார் விபத்தில் இறந்துவிடவே, குடும்ப பொறுப்புகள் அனைத்தும் ராதிகா சுமப்பதற்கான காரணம் என்ன? சிரிப்பதற்கு கூட மறந்து அவள் ஏன் எந்திரமாக மாறிப் போனால்? எந்திரமாக இருந்தவளின் மனதைக் களைத்தவனும், கண்டிப்பாக இருந்தவளை கனிவாக மாற்றியவனுமான அரவிந்தன், யார் இவன்? இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateAug 22, 2023
ISBN6580133810093
Mugil Maraitha Nilavu...

Read more from Muthulakshmi Raghavan

Related to Mugil Maraitha Nilavu...

Related ebooks

Reviews for Mugil Maraitha Nilavu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugil Maraitha Nilavu... - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முகில் மறைத்த நிலவு...

    Mugil Maraitha Nilavu...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    1

    "கண்ணன் வந்தான் – அங்கே

    கண்ணன் வந்தான் – ஏழைக்

    கண்ணீரைக் கண்டதும்

    கண்ணன் வந்தான்..."

    தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த பாடலைக் கேட்கும் போதே ராதிகாவின் கண்களில் நீர் வடிந்தது...

    ஐயே... என்னக்கா இது... சின்னப் பிள்ளையாட்டம் அழுதுக்கிட்டு நிற்கிறே... மோனிகா அவளது முகத்தைப் பார்த்து விட்டுக் கேலி செய்தாள்...

    ச்சு... சும்மாயிரு...

    தங்கையை அதட்டினாலும் ராதிகாவின் கண்ணீர் நிற்கவில்லை.

    ஏன்க்கா... டிவியிலும் சரி... எப்.எம்மிலும் சரி... இந்தப் பாட்டைக் கேட்டு விட்டா நீ அழ ஆரம்பித்து விடுகிறயே... ஏன்...?

    ச்ச்... யாருமே இல்லையென்று நாம் நிற்கும்போது நானிருக்கிறேன் உனக்காகன்னு அந்தக் கமலக் கண்ணன் நமக்கு கரம் கொடுக்க ஓடி வருகிறானே... அதை மனதில் நினைத்தால் அழுகை வராதா...

    ஏன்க்கா... அவரே ஏழையின் கண்ணீரைக் கண்டு தான் ஓடி வருகிறாராம்... நீயென்ன ஏழையா...?

    பின்னே... நான் ஏழையில்லையா...?

    உனக்குப் பணமில்லையா... சொத்தில்லையா... நீ எப்படி ஏழை ஆவாய்...?

    பணம்... சொத்து நிறைய இருந்தால் மட்டும் அவன் பணக்காரன் ஆகிவிடுவானா...? சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்... சொல்லி அழ ஆள் வேண்டும்... வெயிலான வாழ்க்கையிலே ஆறுதல் கொடுக்க இதமான தோழமை நிழல் வேண்டும்... அது இல்லாத யாருமே ஏழைதான்... அந்த வகையில் நானும் ஏழை தான்... எனக்கென்று ஓடி வர கண்ணன் இருக்கிறான் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் நெகிழாதா...?

    இதைச் சொல்லும் போது ராதிகாவின் குரல் தேம் பியது... மோனிகா திகைத்துப் பார்க்கையில்... கண நேரத்திற்குள் முகத்தினில் கடுமையைக் கொண்டு வந்தாள் ராதிகா...

    அது சரி... நான் என்ன செய்கிறேன்னு பார்ப்பது தான் உன் வேலையா...? ஸ்கூலுக்கு கிளம்பும் நினைப்பே இல்லையா...?

    இதோக்கா...

    மோனிகா விட்டால் போதும் என்று அங்கேயிருந்து ஓடி விட்டாள்... தொலைக்காட்சியில் வேறு பாடல் ஒலிக்க ஆரம்பித்தது... ராதிகா... தன் ஈரக் கூந்தலின் முனியில் முடிச்சிட்டபடி வேலையாளை அழைத்தாள்...

    செண்பகம்... வாசலில் கோலம் போட்டுட்டயா...?

    ஆச்சும்மா...

    ராமையா எங்கே... வரச் சொல்லு...

    அம்மா... என்று தோளில் கிடந்த துண்டை எடுத்து கக்கத்தில் இறுக்கியபடி... இருபத்தி ஒரு வயது ராதிகா விடம் ஓடி வந்தார்... ஐம்பது வயதான ராமையா...

    வாடகைப் பணம் வசூலிக்கப் போனீங்களே... என்ன ஆச்சு...?

    நேற்றே கொண்டு வந்து கொடுத்திட்டேன்ம்மா...

    யாரிடம் கொடுத்தீங்க...

    நம்ம சின்னய்யாவிடம் தான்...

    ‘அண்ணன் வாடகைப் பணத்தை வாங்கியிருக் கிறானா...? என்னிடம் சொல்லவே இல்லையே...’ என்று எண்ணமிட்ட ராதிகா...

    ஏன் ராமையா... அண்ணனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்... அது என்னிடம் சொல்ல மறந்து விடும்... நீங்க ஏன் அண்ணனை தொந்தரவு செய்கிறீங்க... நான் எங்கே போனேன்...? இங்கே தானே இருக்கிறேன்... என்னிடம் வந்து கொடுப்பதற்கு என்ன...? என்று கண்டிப்பான தொனியில் வினவினாள்...

    அதன் உள் அர்த்தத்தை உணராதவர் இல்லை ராமையா... அவர் நன்கு அறிவார்...

    அந்தக் குடும்பத்தின் தலைமகனும்... இருபத்தி ஒரு வயது ராதிகாவிற்கும்... பதினைந்து வயதான மோனிகா விற்கும்... அண்ணனுமான நவநீதன் ஒரு செலவாளி... உல்லாசமாய் ஊர் சுற்றுவதை விரும்புகிறவன்...

    தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர் பதவியில் இருப்பவனுக்கு... செலவளிப்பதற்கு அவனது சம்பளத் தொகை மட்டும் போதாது... இப்படி குடும்ப வருமானங்களில் அடிக்கடி கை வைத்து விடுவான்... அது கண்டிப்பான ராதிகாவிற்குப் பிடிக்காது...

    அந்தக் குடும்பத்திற்கு என்று சில சொத்துக்கள் இருந்தன... அவற்றில் ஒன்றான டிபார்ட்மெண்டல் ஸ்டோரை ராதிகா நிர்வகித்து வந்தாள்... அபார்ட்மென்ட் டைப்பில் கட்டப்பட்ட மூன்று மாடி வீடுகளும் பெரிய கடை வீதியில் உள்ள சில கடைகளும்... வாடகைக்கு விடப் பட்டிருந்தன... அது போக... ஒரு பால் பண்ணை ஒன்றும் இருந்தது... பக்கத்து கிராமத்தில் தென்னந்தோப்பு... மாந்தோப்பு... புளியந்தோப்பு... வயல்... முதலியன இருந்தன... தோப்புக் களையும்... நிலங்களையும் குத்தகைக்கு விட்டிருந்தார்கள்.

    பால் பண்ணையை மேற்பார்வை பார்த்து வந்த ராமையாவிற்கு... மாதா மாதம் வாடகைப் பணம் வசூலிக்கும் பொறுப்பும்... வருடா வருடம் குத்தகைப் பணம் வசூலிக்கும் கடமையும் சேர்ந்து இருந்தன...

    வளர்ந்து வரும் நகரமான ஒட்டன் சத்திரத்தில்... பெயர் பெற்று வாழ்ந்து வந்த... கருணாகரன்... மல்லிகா தம்பதியினர் ஒரு கார் விபத்தில் காலமான போது... அவர்களது மூத்த மகன் நவநீதனுக்கு வயது இருபத்தி இரண்டு... அவனுக்கு அடுத்த ராதிகாவின் வயது பதினெட்டு... கடைக்குட்டி மோனிகாவின் வயது பனிரெண்டு...

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாகரன்... தன் கடைசி நிமிடங் களில் வக்கீலை அழைத்து உயில் எழுதச் சொல்லி விட்டார்...

    உயிலின்படி... சொத்துக்கள் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு... டிபார்ட்மென்டல் ஸ்டோர் ராதிகாவிற்கும்... பால் பண்ணை மோனிகாவிற்கும்... கிராமத்து தோப்பு... வயல்கள்... நவநீதனுக்கும் என்று எழுதப்பட்டிருந்தது... அடுக்கு மாடி வீடுகள் மூன்றும்... மூன்று பிள்ளைகளுக்கும் ஒவ்வொன்றாய் கொடுக்கப்பட்டிருந்தன... கடைகளும் மூன்று பகுதிகளாய் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தன. குடியிருக்கும் பரம்பரையான பெரிய வீட்டை மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்த கருணாகரன்... கடைசி வினாடியில்... சில கட்டளைகளை உயிலில் பிறப்பித்து இருந்தார்...

    பிறப்பெடுத்ததே... தகப்பனின் சம்பாத்தியத்தை செலவளிப்பதற்காகத்தான் என்ற கொள்கையை வைத்தி ருந்த நவநீதனின் குணத்தை நன்கு அறிந்திருந்த கருணா கரன்... அவனுக்குத் திருமணமாகி மனைவி வரும் வரைக்கும்... சொத்துக்கள் அனைத்தையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பை ராதிகாவிற்கு கொடுத்திருந்தார். நவநீதனின் மனைவி, ராதிகா தேர்ந்தெடுக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்மென்று அடுத்த கட்டளையைப் பிறப்பித்து இருந்தார்... பரம்பரை வீட்டை மகன் பெயருக்கு எழுதி இருந்தாலும்... அதை விற்கவோ... அடமானம் வைக்கவோ... மகனுக்கு உரிமை கிடையாது என்றும்... அந்த வீடு மகனுக்குப் பின்னால் அவனுடைய சந்ததிகளுக்குப் போய் சேர வேண்டும் என்றும் எழுதியிருந்தார்... மேலும்... ராதிகாவும்... மோனிகாவும்... அவர்களுடைய வாழ்நாள் வரைக்கும்... அந்த வீட்டில் தங்கியிருக்கும் உரிமையையும் அளித்து இருந்தார்...

    எதையும் யோசித்துச் செயல்படும் கருணாகரன்... தன் இறுதி வினாடிகளில் குடும்பப் பொறுப்பை... ராதிகாவின் தோள்களில் ஏற்றிவிட்டுச் சென்றுவிட்டார்...

    தகப்பனாரிடமும்... மற்றவர்களிடமும் பொறுப்பான பெண் என்று பெயர் எடுத்திருந்த ராதிகா... தன் பதினெட்டு வயதில்... கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது... குடும்பப் பொறுப்பை ஏற்றாள்...

    வீட்டு நிர்வாகத்தையும்... தொழில் நிர்வாகத்தையும் கவனித்து... கல்லூரிக்கும் போய் வந்தவளுக்கு... தன் தமையனை சமாளிப்பது தான் பெரும் பிரச்சனையாக இருந்தது...

    இதோ பார் அண்ணா... நீ பொறுப்பாக தொழிலைப் பார்த்து... என்னையும்... மோனிகாவையும் காப்பாற்ற வேண்டிய கடமையில் இருப்பவன்... அந்தக் கடமையைத் தான் அப்பாவின் உயிலைக் காரணம் காட்டி... தட்டிக் கழித்து விட்டாய்... உன் செலவுகளைக் குறைத்துக் கொண்டு... ஊர்... ஊராய் சுற்றுவதை கொஞ்சம் நிறுத்தக் கூடாதா...? என்று தன்மையாக எடுத்துச் சொல்லிப் பார்த்தாள்.

    ஆனால் நவநீதன் அவளது வேண்டுகோளை காதில் போட்டுக் கொள்ள மறுத்தான்...

    விளைவு...? ராதிகா தன் கண்டிப்பை அதிகப்படுத்தி னாள்... நவநீதன்... தன் செலவுகளுக்குப் பணம் கேட்டு ராதிகாவை அணுகிய போது கோபத்துடன் பணம் தர மறுத்தாள்...

    முதலில் உனக்கென்று ஒரு அடையாளத்தை தேடிக் கொள் அண்ணா... உனக்கு மாதா மாதம் பத்தாயிரம் தருகிறேன்... உன் கைச் செலவிற்கு அந்தப் பணம் போதும்... மேலே கேட்காதே... கருணாகரன் போனார்... அவரது சொத்து... சுகமும் அவருடன் பின்னாலேயே போய் விட்டதுங்கிற பெயர் வர நான் விட மாட்டேன்... புரிந்ததா...?

    நவநீதனுக்கு புரிந்தது... ஆனால் அவனது கைச் செலவுகளை எப்படி சுருக்குவது என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.

    தங்கைகளின் மீது பாசம் அதிகம் கொண்டவன்... ராதிகாவின் கோபத்திற்கு பயப்படுவான்... அவளது கட்டளைக்கு கட்டுப்படுவான்... மோனிகாவை குழந்தை போல் பார்த்துக் கொள்வான்... ஆனால் உல்லாசமாய் ஊர் சுற்றுவதை நிறுத்த மாட்டான்...

    அவனைக் கட்டுக்குள் கொண்டு வர யோசித்து செயல்பட்ட ராதிகா அவனை அதட்டி வேலைகளுக்கான எழுத்து தேர்வுகளை எழுத வைத்தாள்...

    நவநீதன் படிப்பில் கெட்டிக்காரன்... வங்கித் தேர்வில் வெற்றி பெற்று... சொந்த ஊரிலேயே வங்கி மேலாளர் ஆனான்...

    முதல் கடமையைச் செய்து விட்ட நிறைவு ராதிகா விற்குள் எழுந்தது... அவளும் தன் பட்டப் படிப்பை முடித்து விட்டு... முழு நேரமும்... தொழிலைக் கவனிப்பதில் ஈடுபட்டாள்...

    மோனிகா பத்தாம் வகுப்பிற்கு வந்து விட்டாள்... அவளுக்கு தாயாய்... தந்தையாய்... தோழியாய் இருந்தது ராதிகாதான்...

    நவநீதனின் சம்பளப் பணத்தை மறந்தும் ராதிகா கேட்டதில்லை... அதே சமயம்... மாதா மாதம் அவனுக்கு கொடுத்து வந்த பத்தாயிரத்தை நிறுத்தினாள்... இது போன்று சில சமயம் நவநீதன் வாடகைப் பணத்தில் கை வைப்பதை அறியும் போது கோபப்படுவாள்... ஆனால் வேலையாட்களிடம் அவனை விட்டுக் கொடுத்துப் பேச மாட்டாள்... அதே சமயம் அவர்கள்... அடுத்து வாடகைப் பணத்தையோ... மற்ற பணத்தையோ நவநீதனிடம் கொடுத்து விடக்கூடாது என்று மறைமுகமாய் கட்டளை பிறப்பித்து எச்சரிக்கை செய்வாள்...

    ராமையாவும்... ராதிகாவின் கட்டளையை புரிந்து கொண்டார்.

    இனிமேல் இது போல் நடக்காதுங்க அம்மா... என்று மரியாதையுடன் கூறினார்...

    சரி... போங்க... என்று அவரை அனுப்பிவிட்டு... தோட்டத்தில் பூப்பறிக்க... பூக்கூடையை எடுத்துக் கொண்டு சென்றாள் ராதிகா...

    தோட்டத்துச் செடிகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே பூக்களைப் பறித்தவள்... அதை பராமரிப்பது சம்பந்தமாக... சில வேலைகளை தோட்டக்கார முனி யனிடம் கூறி விட்டு... வீட்டுக்குள் வந்தாள்...

    மோனிகா பள்ளிக்குச் செல்லத் தயாராகி வந்திருந்தாள்... ராதிகா அவளைக் கவனிக்காதவள் போல் பூஜையறைக்குச் செல்ல... மோனிகா... தமக்கையை பின் தொடர்ந்தாள்.

    ராதிகா... தெய்வச் சிலைகளுக்கும்... படங்களுக்கும்... தாய்... தந்தையரின் புகைப்படத்திற்கும் மலர்களை சூட்டி விட்டு... விளக்கேற்றி வணங்க ஆரம்பிக்க... மோனிகாவும் கண்மூடி... வணங்கி நின்றாள்...

    கற்பூர ஆரத்தியை தொட்டுக் கும்பிட்டுக்க... என்று ராதிகா கூற... தீபாதரனைத் தட்டைத் தொட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1