Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhoomikku Vandha Nilavu
Bhoomikku Vandha Nilavu
Bhoomikku Vandha Nilavu
Ebook245 pages2 hours

Bhoomikku Vandha Nilavu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

பரம்பரை கோடிஸ்வரரின் பெண் அவள். நவநாகரீக யுவதி, வெளிநாட்டில் வசிக்கும் பரம்பரை பணக்காரன் ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள், கிராமத்தில் இருக்கும் தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வருகிறாள்... அவர்களோ எளிமையான மத்திய வர்க்க குடும்பம். சந்தர்ப்ப வசத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் இவளுக்கு திருமணம் ஆகிறது. அந்நிலையை அவள் எப்படி எதிர்கொண்டாள்...

A rich, modern girl, engaged with a rich man living abroad. She visited her relation house of middle class in a Village. Suddenly, a situation made her to marry an young man in that family, The story around how she face the upcoming consequences.

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133805520
Bhoomikku Vandha Nilavu

Read more from Muthulakshmi Raghavan

Related to Bhoomikku Vandha Nilavu

Related ebooks

Reviews for Bhoomikku Vandha Nilavu

Rating: 4 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhoomikku Vandha Nilavu - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    பூமிக்கு வந்த நிலவு...

    Bhoomikku Vandha Nilavu…

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    'சோ...' வென்ற சப்தத்துடன் மோட்டாரிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.. அது நிரம்பி வழிந்த அகன்ற சிமிண்ட் தொட்டி ஒருவர் நீச்சலடித்துக் குளிக்கும் அளவிற்கு ஆழமானதாகவும்.. அகல நீளமாகவும் அமைந்திருந்தது.. தண்ணீர் ஓடிய வாய்க்காலின் ஓரமாக இருந்த வரப்பில் புல் அடர்ந்து வளர்ந்து கால்களுக்கு இதமான மெத்தை போல புல்பாதை விரித்திருந்தது.. ஓடிவந்த வாய்க்கால் நீரை வயலுக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தான் தசரதன்...

    என்னப்பா தசரதா.. வயலுக்கு தண்ணி பாய்ச்சரயா...?

    கையில் மண்வெட்டியுடன் நிமிர்ந்து பார்த்த தசரதனுக்கு வரப்பில் நின்று பல் தேய்க்கிறேன் பேர்வழியென்று வேப்பங்குச்சியை மென்று துப்பிக் கொண்டிருந்த சரவணனைப் பார்க்கும் போது பற்றிக் கொண்டு வந்தது...

    சரவணன் பத்தாம் வகுப்பை முடித்து விட்டு பக்கத்து டவுனில் ஜெராக்ஸ் கடையொன்றை வைத்திருந்தான்.. அவனுடைய தகப்பனார் வயலில் வேலை செய்து சம்பாதிப்பதை இவன் தொழில் நடத்துகிறேன் பேர்வழியென்று கரைப்பாய் கரைத்துக் கொண்டிருந்தான்.. யாராவது அவனிடம் அதைப் பற்றிக் கேட்டால்.. படித்து விட்டு பட்டிக்காட்டில் மண்ணைக் கொத்த முடியுமா என்று கேள்வி கேட்பான்...

    அப்பேற்பட்ட பெரிய படிப்பைப் படித்த தொழிலதிபனுக்கு விவசாயத்தை நேசிக்கும் தசரதனிடம் எப்போதுமே ஒரு காட்டம் இருக்கும்..

    'இவன் இவனோட அப்பனைப் போல கலப்பையை பிடிக்கிறதாலதானே என்னை இந்த ஊர்க்கார பயலுக கேள்வி கேட்கிறானுக...'

    அதனால் தசரதனைப் பார்க்கும் போதெல்லாம்.. பத்தாம் வகுப்பு.. படித்த சரவணனே தொழிலதிபனாக இருக்கும்போது.. பட்டப்படிப்பைப் படித்த தசரதன் மண்ணைக்கொத்தக் கூடாது என்று எடுத்துச் சொல்ல முயன்று தோல்வியைத் தழுவுவான்...

    ஆனாலும்.. அடாது தசரதன் விரட்டியடித்தாலும் விடாது அவனைக் கரைக்க முயல்வதில் சரவணனுக்கு நிகர் சரவணனேதான்.. அந்த வகையில் அவன் ஒரு கஜினி முகம்மது..!

    உனக்கென்ன கண்ணில கோளாறா..? தசரதன் இடக்காக கேட்டான்...

    ஏம்ப்பா அப்படிக் கேட்கிற..? பத்து மைலுக்கு அப்பால பாவாடை தாவணி போட்டுக்கிட்டு வர்ற மயிலப் பார்த்துப்புடறவன்ப்பா இந்த சரவணன்..! என்னைப் பார்த்தா கண்ணில கோளாறான்னு கேட்கிற..?

    ஆமாம்ப்பா.. ஆமாம்..

    இப்பச் சொல்லு.. இங்கன நின்னுக்கிட்டே உங்க வீட்டுக்கு.. பக்கத்து வீட்டு மொட்டை மாடியில துணி காயப்போட்டுக்கிட்டு இருக்கிற வசுந்தரா என்ன கலர்ல தாவணி போட்டுக்கிட்டு இருக்கிறாங்கறதைச் சொல்லவா..?

    பல்லை உடைப்பேன்...

    அது என்ன கழுதைக்கு..? நானென்ன உன் வீட்டு மொட்டை மாடியையா பாக்கப் போறதா சொன்னேன்..?

    சொல்லிருவியோ...

    சொல்ல மாட்டேன்னுதானேப்பா நானும் சொல்றேன்..

    ஏன்.. சொல்லித்தான் பாரேன்...

    அதையேன்ப்பா சொல்லப் போறேன்..? நீ உன் பக்கத்து வீட்டைப் பார்த்ததாய் சொன்னாலே பல்லை உடைக்கிற ஆளு.. உன் வீட்டைப் பார்த்துப்புட்டு.. சுக்கு நூறாய் நொறுங்கிக் கிடக்க எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...?

    அது..! அந்த பயம் இருக்கட்டும்.. உனக்கு உன் பக்கத்திலே வர்ற கிழவியைக் கண்ணுக்குத் தெரியாது.. பத்து மைலுக்கு அந்தப் பக்கமிருக்கிற குமரியைத் தெரியுதோ...

    இதெல்லாம் ஒரு குத்தமாப்பா..?

    பின்னே..? குத்தமில்லையா...?

    இல்லவே இல்லைப்பா.. இது வயசுக் கோளாறு...

    அடியேய்.. காலங்கார்த்தாலே கடுப்பைக் கிளப்பின இந்த மம்பட்டியை வைச்சே ஒரு போடு போட்டிருவேன்..

    தசரதன் மண்வெட்டியைத் தூக்கிக் காட்டவும் சரவணன் அரண்டு போனவனாக எதற்கும் இருக்கட்டு மென்று இரண்டடி பின்னால் தள்ளி நின்று கொண்டான்..

    ஆனாலும் உனக்கு.. இம்புட்டுக் கோவம் ஆகாதுப்பா...

    எல்லாம் ஆகும்.. நீயென்ன வேலைக்கழுதைக்கு கையில மம்பட்டியோட தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கிறவன்கிட்ட வந்து தண்ணியா பாய்ச்சறேன்னு கேக்கிற...? பாத்தா எப்படித் தெரியுது..?

    தண்ணி பாய்ச்சிரதைப் போலத்தான் தெரியுது...

    அப்புறம் என்ன கழுதைக்கு அப்படிக் கேட்ட..?

    எல்லாம் ஒரு பேச்சுக்கு கேட்கிறதுதான்ப்பா...

    உன் பேச்சையெல்லாம் உன்னைப் போல அப்பன் சம்பாதிச்ச சொத்தை அழிச்சுக்கிட்டு இருக்கிறவன் கிட்டப் போய் சொல்லு.. எனக்கு ஆயிரத்தஞ்சு வேலைவெட்டி இருக்கு...

    அட..! கோவப்படாதேப்பா.. பத்தாவது படிச்ச நானே கலப்பையைத் தொடறதில்ல.. நீயோ பட்டப் படிப்பை படிச்சவன்..

    அதுக்கு..?

    நீயெல்லாம் கலப்பையை கையில் பிடிக்கலாமாப்பா..?

    வேணும்னா உன் குரல்வளையைப் பிடிக்கவா..?

    ஏம்ப்பா.. இது உனக்கே நாயமாய் இருக்கா..?

    எது..?

    பேனா பிடிக்கிற கை.. கலப்பையைப் பிடிக்கலாமான்னு கேட்டா.. நீ குரல்வளையைப் பிடிக்க வர்றியே... இது எந்த ஊரு நியாயம்ப்பா..?

    எனக்கு இதுதாண்டா நியாயம்...

    அட.. சினிமாப் பட டைட்டிலைப் போலச் சொல்றியே..

    தினமும் நீ அதைத்தானே செய்யறே.. எதுக்கு விட்ட விடிகாலையில இப்படி மொட்ட ரம்பத்தைப் போடற..?

    உனக்கு விசயத்தைச் சொல்லலாம்ன்னு தான்..

    என்ன கழுதையைச் சொல்ல போகிற..?

    அட.. நீ கழுதையை விடுப்பா...

    ஏன்..? நீ அதை கட்டி மேய்க்கப் போறியா..?

    அந்தக் கழுதை எனக்கெதுக்குப்பா...?

    நீதானே அந்தக் கழுதையை விடச் சொன்ன..?

    தசரதன் விடாமல் கிடுக்கிப்பிடி போட்டதில் அந்தச் சரவணன் நொந்தே போனான்...

    ஏம்ப்பா.. இப்படி முன்னாலேயும் போகவிடாம.. பின்னாலேயும் வரவிடாம பேசினா.. ஒரு மனுசன் எப்படிப்பா உன்கூடப் பேச்சு வார்த்தை நடத்துவான்...?

    உன்னைக் கூப்பிட்டேனா..? சொல்லு.. என்கூட பேச்சு வார்த்தை நடத்துன்னு வெத்தலை பாக்கு வைச்சு உனக்கு நான் அழைப்பு வைச்சேனா..?

    ம்ஹீம்.. யாருக்குத்தான் நீ வெத்தலை பாக்கு வைச்சு அழைப்பு வைச்சே..? எல்லாம் தானாய் உன்னைத் தேடி வருதே.. நீ மச்சக்கார பய புள்ளப்பா...

    சரவணன் விட்ட அனல் பெருமூச்சில்.. பயிர் கூட வாடி விடும் போலத் தோன்ற..

    ஏய்ய்.. தள்ளி நில்லுப்பா.. பச்சைப் பயிறு வயலிலே வந்து அனல் பெருமூச்சா விடற..? இதுக்கே உன் பல்லைத் தட்டிக் கையில் கொடுக்கனும்... என்று அதட்டினான் தசரதன்...

    நீ அதிலேயே குறியாய் இரு.. என்னடா மாமன் மகன்.. நம்ம சேக்காளியாச்சேன்னு நினைக்கறியா..?

    சேக்காளியா..? யாரு..? நீயா..? நீயெல்லாம் எனக்கு சிநேகிதம்ன்னு நான் சொன்னேனா..?

    நான் சொல்றேனேப்பா...

    நீயா சொல்லிக்கிட்டா அதுக்கு நான் பிணையா..?

    போப்பா.. உனக்கு எல்லாமே பகடிதான்...

    அடப்பாவி..! எதைப் பேசினாலும் உனக்கு உறைக்காதா..? பகடின்னு தட்டி விட்டுட்டுப் போயிக்கிட்டே இருப்பியா..?

    அதை விடுப்பா.. இப்ப விசயத்துக்கு வா...

    நானா உன்கிட்ட விசயம் சொல்றேன்னு வந்தேன்..?

    நான்தான் வந்தேன்ப்பா.. நான்தான் வந்துட்டேன்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..? ஒரு மனுசன்.. கண்ணால பார்த்ததை சொல்லலாம்ன்னு வந்தா அது ஒரு குத்தமாப்பா..?

    நீ கண்ணால காண்கிறதையெல்லாம் சொல்லி ரம்பம் போட நான்தான் கிடைச்சேனா..?

    தசரதன் மண் வெட்டியை வாய்க்கால் நீரில் கழுவி விட்டு.. வரப்பில் ஏறி.. மோட்டார் ரூமை நோக்கி நடந்தான்.. வாயில் அரைபட்டு சக்கையாகி விட்ட வேப்பங்குச்சியை தூக்கியெறிந்த சரவணன் அவனைப்பின் தொடர்ந்தான்.. அவனைத் திரும்பிப் பார்த்த தசரதன் புருவங்களை உயர்த்தினான்...

    நீ எங்கேப்பா பின்னாடியே வர்ற..? உன் வீட்டுக்குப் போக மனசில்லையா..?

    என் வீட்டில என்ன டவுனில இருந்து அப்சரஸா வந்து இறங்கியிருக்கு..?

    அட..! உனக்கு அப்சரஸ் கூட வேணுமா..?

    எனக்கு வேணும்னா வந்து சேர்ந்திருமா..? அதுவே உன்னைச் சொல்லு.. நீ பாட்டுக்கு தேமேன்னு மம்பட்டியைத் தூக்கிக்கிட்டு வயலைப் பார்க்க வந்திட்ட.. அங்கே உன் வீட்டில உன்னைப் பார்க்க அப்சரஸ் வந்து இறங்கியிருக்கு.. சொல்லிக் கொண்டே சரவணன் சிமிண்ட் தொட்டியில் இறங்கினான்...

    யாருடா இவன்.. எதையும் விளங்கச் சொல்லித் தொலைக்க மாட்டான்.. ஆமா.. இப்ப எதுக்கு நீ தண்ணித்தொட்டியில இறங்கற..? தசரதன் அதட்டினான்..

    ஏம்ப்பா.. ஒரு மனுசன் குளிச்சாக் கூட அது உனக்கு குத்தமாப்பா...?

    இதைப்பாருடா.. நீ குளிக்கக் கூடச் செய்வியா..?

    ஆடு.. மாடே குளிக்குது.. நான் குளிக்க மாட்டேனா..

    அதுகளெல்லாம் சுத்தம் தெரிஞ்ச பிறவிக.. நீ அப்படியா..?

    நான் உன் வழிக்கு வர்றது தப்புத்தான் மச்சான்.. அதுக்காக ஒரு மனுசனை இந்த அளவுக்கு வாரித் தள்ளனுமா..?

    பின்னே என்னடா.. இத்தனை நேரமும் என்னை தண்ணி பாய்ச்ச விடாம ஓட்டைப் பானைக்குள்ள நண்டை விட்டதைப் போல லொட.. லொடன்னு பேசித் தள்ளினயே.. அந்த நேரத்திலே இந்தக் கருமத்தை செஞ்சு தொலைக்கிறதுக்கென்ன..?

    இப்ப.. என்ன வந்துச்சு...

    ம்ம்ம்.. மோட்டாரை நிப்பாட்டற நேரம் வந்துருச்சு..

    சொல்லியபடியே தசரதன் தானும் தண்ணீருக்குள் இறங்க.. இப்போது சரவணன் புருவங்களை உயர்த்தினான்..

    என்ன அப்பு.. புருவத்தை வில்லா வளைக்கிறவன்..? என் மோட்டார் தண்ணியில நீ குளிக்கலாம்.. நான் குளிக்கக் கூடாதா..?

    கேள்வி கேட்டபடி குளிக்க ஆரம்பித்தவனுக்கு என்ன பதிலைச் சொல்லுவது என்று சரவணன் மண்டையை உடைத்துக் கொண்டான்...

    2

    ஈரக்காற்று உடல் தழுவ.. விடியலின் புத்துணர்வை அனுபவித்து ரசித்தபடி வரப்பில் நடக்க ஆரம்பித்தான் தசரதன்... அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக வந்த சரவணன்..

    மெல்ல நடடா மச்சான்.. என்று கெஞ்சினான்...

    நான் உனக்கு மாமன் மகன்டா சரவணா...

    யாரு இல்லைன்னு சொன்னது..?

    பின்னே.. என்னவோ மாமன் மகளைப் பார்த்துக் கொஞ்சறதைப் போல.. மெல்ல நட.. மெல்ல நட.. மேனி என்னாகும்ன்னு சொல்லி வைக்கறியே...

    மாமன் மகளைப் பார்த்துச் சொல்ல ஆசைதான்..

    என்னது..?

    தசரதன் சிவந்த கண்களுடன் திரும்பிப் பார்க்க சரவணன் நடுங்கிப் போனவனாக பின் வாங்கினான்...

    மாமன் மகன்னுதானே சொன்னேன்..? உன் தங்கச்சின்னு சொன்னேனாடா மச்சான்..? இப்படி கொலைவெறிப் பார்வையைப் பார்க்கறியே...

    அது.. அந்த பயம் இருக்கட்டும்...

    அது எப்பவும் இருக்கும் மச்சான்...

    அதைக் குறையாம பார்த்துக்க.. அதுதான் உனக்கு நல்லது..

    தசரதன் எரிச்சலுடன் வாய்க்குள் முணுமுணுத்தபடி நடையில் வேகம் கூட்ட.. சரவணன் அவனுடைய ஆறடி உயரத்தையும்.. அகன்ற மார்பினையும்.. பொறாமையுடன் அளவிட்டான்...

    'ஆளைப்பாரு.. அப்படியே வாட்ட சாட்டமா ஆணழகன் அர்ச்சுனனைப் போல இருந்து வைக்கிறான்.. ஊரில இருக்கிற இவனோட முறைப் பொண்ணுகளெல்லாம் இவனைப் பார்த்து சொக்கிப் போறாளுக... அவளுக மட்டும் இவனைப் பாக்கலாமாம்.. நான் மட்டும் இவனோட தங்கச்சியைப் பார்க்கக் கூடாதாம்...'

    சரவணன் மனதுக்குள் புலம்ப.. தசரதன் திரும்பி புருவங்களை உயர்த்தினான்...

    என்னடா மச்சான்..?

    சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை.. தசரதன் ஊடுறுவும் பார்வையொன்றை வீசி வைக்க சரவணனுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.. எதற்காக அந்த அனல் வீசும் பார்வை அவனை நோக்கிப் பாய்கிறது என்று அறியாதவனாக அவன் மனதிற்குள் அழுது புலம்புவதாக நினைத்துக் கொண்டு சத்தமாக பாடிப் புலம்பினான்..

    "என்ன தவறு செய்தேன்..? – அதுதான்

    எனக்கும் புரியவில்லை...

    வந்து பிறந்து விட்டேன் – ஆனால்

    இவன் மனது தெரியவில்லை..."

    என்னடா மச்சான்.. மனசுக்குள்ள நடிகர் திலகத்தோட மறு அவதாரம்ங்கிற நினைப்பா..?

    இல்லடா மச்சான்..

    அப்புறம் எதுக்கு இந்த பாட்டு..?

    எதுக்குடா இந்தப் பார்வை..?

    என்னை என்னோட முறைப் பொண்ணுக சைட் அடிச்சா.. நீ எந்தங்கச்சிகளை சைட் அடிக்க கிளம்பிருவியா..?

    உனக்கு ஒரே தங்கச்சிதானடா..?

    சித்தப்பா மகளுக.. பெரியப்பா மகளுகளை என்னன்னு சொல்லுவ..? அத்தை மக.. மாமன் மகன்னா சொல்லுவ..?

    ஏண்டா மச்சான்.. இது உனக்கே நியாயமா இருக்காடா மச்சான்.. உங்க அப்பாவுக்கு ஊரு பூராவும் பங்காளிக...

    அதுக்கு..?

    உன் படைபலம் ஜாஸ்திடா மச்சான்.. ஊருக்குள்ளே இருக்கிற பருவப் பொண்ணுகள்ள முக்கால் வாசிப் பொண்ணுக உனக்கு அக்கா.. தங்கச்சி முறையாகனும்..

    அந்த முக்கால்வாசிப் பக்கம் திரும்பாதேண்ணேன்..

    அடப்பாவி மச்சான்.. மீதி கால்வாசி எனக்கு அக்கா.. தங்கச்சி முறையாகனுமேடா...

    அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..? இதெல்லாம் ஆண்டவன் போடற கணக்குடா மச்சான்..

    அப்படிங்கறே..?

    ஆமாங்கிறேன்...

    அப்ப.. என்னை கணக்குப் போட நீ விட மாட்ட..?

    அருவாளைத் தூக்குவேன்.. பரவாயில்லையா..?

    "அது எதுக்கு தேவையில்லாம..

    Enjoying the preview?
    Page 1 of 1